Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruppuga Therai…
Thiruppuga Therai…
Thiruppuga Therai…
Ebook84 pages31 minutes

Thiruppuga Therai…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிக சிறந்த தமிழாசிரியாரக 36 ஆண்டுகள் பணி புரிந்த இவர், பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். இவரின் எண்னிலடங்கா ஈடுபாடுகள் - எழுத்தாளர், நாடக இயக்குநர். பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், ஒப்பனையாளர், இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், ஊர்க்காவல்படைப்பிரிவு தளபதி என நீண்ட பட்டியல் கொண்டது. இவர், 72 சிறு, குறு நாடகங்கள், 450 இசைப்பாடல்கள், 7 தலைப்புகளில் வில்லுப்பாட்டு, பொதுஅறிவு, இலக்கிய நாடகங்கள் என பல படைப்புகளைப் படைத்துள்ளார். தமிழக நல்லாசிரியர் விருது, பல்துறைக் கலைஞர் விருது, ஆசிரிய மாமணி விருது, நாடகக் கலைமணி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116701965
Thiruppuga Therai…

Read more from Pulavar Pon. Karuppiah

Related to Thiruppuga Therai…

Related ebooks

Related categories

Reviews for Thiruppuga Therai…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruppuga Therai… - Pulavar Pon. Karuppiah

    http://www.pustaka.co.in

    திருப்புக தேரை…

    Thiruppuga Therai…

    Author:

    பொன். கருப்பையா

    Pon. Karuppiah

    For more books
    http://www.pustaka.co.in/home/author/pon-karuppiah

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திருப்புக தேரை

    தாய் மறம்

    பழி தவிர்த்த பாவலர்

    சிலம்பின் சிலிர்ப்பு

    தொடரும் தோழமை

    திருப்புக தேரை…

    சங்க இலக்கியக் குறுநாடகங்கள்,

    புலவர் பொன். கருப்பையா

    அணிந்துரை

    முனைவர் க. இரவீந்திரன்

    பேராசிரியர் மற்றும் தலைவர்

    நாடகத்துறை

    கூத்துக்களரிப் பொறுப்பாளர் தமிழ்ப்பல்கலைக்கழகம்

    தஞ்சாவூர்- 613 010

    இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கூறுகளுள், இயலும் இசையும் இயைந்து, இயக்கம் பெறும் வடிவமாகத் தமிழ்நாடகம் விளங்குகிறது எனலாம். தொன்மைத் தமிழ் இலக்கிய வடிவங்கள் பொதுவாக நாடகக்கூறுகள் மலிந்தவையாகவே உள்ளன. குறிப்பாக, சங்ககால இலக்கிய வடிவங்கள் நாடகக்கூறுகள் மிகக்கொண்டுள்ள இலக்கியங்களாகவும், நாடகம் பற்றிய குறிப்புகள் பலவற்றைக்கொண்ட இலக்கியங்களாகவும் விளங்கி நிற்பதைக் காணமுடிகிறது. இத்தகு சிறப்புமிக்க தொன்மை இலக்கிய வடிவங்களைச் சுவைபட தமிழின் அழகு மிளிர நாடக வடிமாக்கித் தந்துள்ளார் நாடக ஆசிரியர் புலவர் பொன். கருப்பையா அவர்கள்.

    தொன்மை இலக்கிய வடிவங்களைத் தமிழ்நாடக வடிவமாக்கி மேடைவடிவில் காட்சிப்படுத்துவதென்பது காலத்துக்கேற்ப அரிய பணியாகும். ஆனால் மிகக்கடினமான செயல்பாடாகவும் அமைய வல்லது. நாடகமாக்கலில் மிகுந்த தேர்ச்சி பெற்றோரும், மொழிப்புலமை மிகக் கொண்டோரும், உள்ளர்ந்த தமிழுணர்வு கொண்டோரும் மட்டுமே இப்பணியினைச் செய்ய இயலும். இவ்வகையில் புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய இரு பெரும் களங்களிலிருந்து, நாடகத்துக்கான கருத்துகளைக் கண்டெடுத்து நாடகமாக்கியுள்ள ஆசிரியரின் நற்பணி பாராட்டுதற்குரியது.

    ‘திருப்புக தேரை’ ‘தாய்மறம்’ ‘பழிதவிர்த்த பாவலர்' 'தொடரும் தோழமை’ ஆகிய நாடகங்கள் புறநானூற்றுப்பாடல்களை மையமாகக் கொண்டது. சிலம்பின் சிலிர்ப்பு’ நாடகம், சிலப்பதிகார நாடகக் காப்பியத்தை மையப்படுத்தி, அமைக்கப்பெற்றுள்ளநாடகமாகும். ஐந்து நாடகங்களும் தமிழின் வளமான பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதோடு, இன்றைய சமுதாயத்துக்குத் தேவையான செய்திகளையும் வெளிப்படுத்தியமைகின்றன. வயிற்றுக்காகப் பரிசில் பெறுபவர் மட்டுமல்ல வளமான இல்வாழ்வுக்கு மன்னனையே, நெறிப்படுத்துவதையே, பரிசாக்கிக்கொள்ளும் புலவர் பாங்கினை உணரத்தகுமாறு 'திருப்புக தேரை’ என்னும் நாடகம் வழி ஆசிரியர் அறியத்தருவது தொன்மைத் தமிழ்ப்புலவர் பெருமக்களின் நிறைந்த நெஞ்சை நினைவூட்டுகிறது. வள்ளல் பேகனைப் புலவர் அரிசில்கிழார் நெறிப்படுத்தி நிற்பது நிறைவான காட்சியாகும். தன் மகன் போர்க்களத்திலே 'விழுப்புண் ஏற்றான்' என அறியத்துடிக்கும் வீரத்தாயின் கதையை, புறநானூற்றின் உட்புகுந்து, நாடகமாக்கிய விதத்தை 'தாய் மறம்’ நாடகம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. பழிதவிர்த்த பாவலர் நாடகமும் புலவர் புகழ் பேசும் நாடகமே பேராசை கொண்ட இளங்குமணனை, புலவர் சாத்தனார் திருத்தி நல்வழிப்படுத்துவதை நயமாகச் சித்தரிக்கும் நாடகம். ‘சிலம்பின் சிலிர்ப்பு நாடகம், கொலையுண்ட கோவலன் மனைவி கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் தனது ஒற்றைச்சிலம்போடுநீதி கேட்ட நிகழ்வினைச் செம்மையாக, உணர்ச்சி மிக்கு காட்சிப்படுத்தும் நாடகமாகும். நட்பின் வலிமையைக் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் இருவரும் நேரில் அறிமுகமில்லாமலேயே நெஞ்சு நிறைநட்பு பாராட்டியதும், சாவினில் கூட, சேரத்துணிந்த நட்பாக அது விளங்கியதும் நட்புக்கு இலக்கணம் குறிப்பதாக உள்ளது.

    தமிழில் தேர்ந்த புலமையும், ஆழமான அர்ப்பணிப்பும் இருப்பதாலும், பல மேடை நாடகங்களை முன்னரே படைத்த அனுபவம் பெற்றுள்ளதாலும், பல வனொலி நாடகங்களை எழுதி ஒலிபரப்பிய ஆளுமை கொண்டிருப்பதாலும், இந்நாடக ஆசிரியர், இந்த ஐந்து நாடகங்களிலும் தனித்தன்மையைப் பதித்துள்ளார். கருக்களைத் -தேர்தல், காட்சிப்படுத்துதல், உரையாடல்களை, மூலம் கெடாமல், நற்றமிழில் தேன் போலச் சுவைபெற ஆக்கியளித்தல், நாடகக் கட்டமைப்புப் பேணுதல், செறிவான நாடகத்தலைப்பு என ஓரங்க நாடகத்துக்கான இலக்கியங்களை முறையாகக் கடைப்பிடித்து, நாடகம் செய்துள்ள நிலை குறிப்பிடத்தக்கதாகும். பல இடங்களில் தமிழின் சொற்களால் சிலம்பம் ஆடியுள்ள ஆசிரியர், வரலாற்று இலக்கிய நாடகத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் அவற்றை ஆக்கியுமளித்துள்ளார். 'எங்குள்ளான் சொல் அந்த வண்டு மனப்பேகன்? கொண்டு வருகிறேன் நான்’ (பக்.15) 'புறமுதுகு காட்டவா மார்பு கொடுத்தேன்’ (பக்.25) 'வெற்றிக்கு நீளாமல் வெறித்தனத்திற்கு வாளை நீட்டிய உனக்குவீரவாள் எதற்கு?’ (பக்.67)என பல நாடகவரிகள் சொற்சுவை, பொருட்சுவை, காட்சிச்சுவைமிக்கு அமைந்துநிற்கின்றன.

    தொன்மைத் தமிழ்மொழி செம்மொழியாய், தமிழர்தம் வாழ்வோடும்

    Enjoying the preview?
    Page 1 of 1