Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uppu Kanakku
Uppu Kanakku
Uppu Kanakku
Ebook535 pages5 hours

Uppu Kanakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580105701923
Uppu Kanakku

Read more from Vidhya Subramaniam

Related to Uppu Kanakku

Related ebooks

Reviews for Uppu Kanakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uppu Kanakku - Vidhya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உப்புக் கணக்கு

    Uppu Kanakku

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    சமர்ப்பணம்

    இந்த தேசத்தின் விடுதலைக்காக

    உதிரம் சிந்திய

    மாவீரர்கள் அனைவருக்கும்

    இந்நாவல்

    சமர்ப்பணம்

    திரு. விஜய திருவேங்கடம்

    அகில இந்திய வானொலி நிலையம், (ஓய்வு)

    ‘எலும்பும் தோலுமாய் காந்தி என்ற மனிதர் தண்டியில் தடையை மீறி மெல்லக் குனிந்து உப்பு அள்ளிய இந்தத் தருணத்தில் ஆசியக் கண்டமே அதிர்ந்ததுபோல் உணர்ந்தேன்’ – இது பி.பி.சி.யின் ஆங்கிலேய நிருபர் தமது வானொலிக்கு அன்று அனுப்பிய செய்தி. மகாத்மாவின் ஆத்ம சக்திக்கு அகிலமே தலை வணங்கியதற்கு ஒரு சான்று.

    ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்டத்தை சத்தியத்திலும், அன்பிலும், அஹிம்சையிலும் புடம் போட்டு, புதுமை பல செய்து வழி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு புதினம் ஒன்று முளைத்தெழுந்து வந்துள்ளதென்பது காந்திய பக்தர்களுக்கும், சுதந்திரப் போராட்ட இலட்சியங்களை மறவாது போற்றுவோருக்கும் நம்பிக்கைச் சுடராக விளங்குகிறது. புதின ஆசிரியருக்கு வயது எழுபதோ எண்பதோ இல்லை இதை எழுதுவதற்கு. சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகட்குப் பிறகு பிறந்தவர் என்பதும், உப்பு சத்தியாக்கிரகம் என்ற அறப் போராட்டக் காட்சியை இராமாயணத்தை வான்மீகி தன் கண்முன்னே நிகழக் கண்டு எழுதியதுபோல உணர்ச்சிப்பூர்வமாக வரைந்திருப்பதும் அதி ஆச்சர்யமான விஷயங்கள். வாசித்ததைக் கொண்டு வரைந்த ஓவியம் அல்ல இது. செவியுற்றது கொண்டு தூரிகையை ஓட்டிய சித்திரம் அல்ல இது. காந்திய சத்தியத்தில் முகிழ்த்த கற்பகத்தரு! ஆம் இதை வாசிப்பவர்க்கு வைக்கப்போகும் பால்ய விவாக எதிர்ப்பு, மது ஒழிப்பு, சாதி சமய ஒற்றுமை, பாரதீய பன்முகக் கலாச்சாரம், ஹரிஜன முன்னேற்றம், சுதேசித் தொழில், தூய கதராடை இன்ன பிற விழுமியங்கள் குறித்த விழிப்புணர்வு உறுதியான வருங்காலத்திற்கு உத்தரவாதம்.

    தேசப்பிரிவினை என்பது, ஒற்றுமையை விரும்பும், ஒற்றுமையை மதமாகவே ஒழுகும் பாரத மக்களுக்கு எதிரான வன்முறைதான் என்று காந்திஜி நம்பினார். அவரையும் மீறி, பிரிவினைக்குப் பின்னர் நிகழ்ந்த அசாதாரணச் சம்பவங்கள், அசம்பாவித நிகழ்வுகள், அண்ணலைப் பெரிதும் காயப்படுத்தின. அண்ணலின் ஆத்ம ரணம் பிட்டுக்கு மண் சுமந்த பெம்மானின் ரணமாய் பாரதமெங்கும் பட்டுப்பரவி நின்றது.

    தேசப்பிரிவினையை ஒட்டிய சம்பவங்கள் வரலாற்றைப் பதிவு செய்வோர்க்கு வேண்டுமானால் தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம். மற்றவர்க்கு அது சகோதரத்துவத்திற்கு சவால் விடுவதுதான். எனவே இதனை மனப்பூர்வமாகத் தவிர்த்து விடுவதுதான் மதியுடைமை.

    உப்புக் கணக்கு கதை மயிலையில் ஆரம்பித்து, நாடெங்கும் சுற்றி, நானாவித ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் கண்டுவிட்டு மீண்டும் மயிலையில், உப்பு சத்தியாக்கிரகப் பாதையில் தீர்த்தயாத்திரை செல்வதென்ற முடிவுடன் நிறைவடைகிறது.

    மனங்கவர் மயிலை, கூட்டுக்குடும்பம், காதல் என்ற மென்மையான விஷயங்களைத் தொட்டுச் செல்லும்பொழுது ஆசிரியரின் நடை, மென்மையான மலராய் மணம் வீசுகிறது. சுதந்திரப் போராட்டம், தேசப்பிரிவினை, வகுப்புக் கலவரம் என்று வரும்போதெல்லாம் உணர்ச்சிப் பிழம்பாய் வெடித்து வருகிறது நடை. அறுபத்தி மூவர் திருவிழா, தண்ணீர்ப் பந்தல், குடும்பத்தில் குதூகல மாறுவேடப் போட்டி, என்ற மந்தஹாசங்கள் வகை வகையாய் மலர்ந்து வருவதும் உண்டு. லாகூர் வரை சென்று பார்க்கும் வகுப்புக் கலவர ரணங்கள், மனிதம் மரணிக்கும் ஓலம், அபலைப் பெண்ணின் அவலம் இவையும் உண்டு.

    இப்புதினத்தைப் படித்து முடித்தவுடன் பெரியவர் கல்யாணராமனை தரிசித்துவிட வேண்டும் என்று மனம் பரபரக்கிறது. எப்போதும் ஜே ஜே என்றிருக்கும் மயிலையில், கல்யாணராமனைக் கண்டுபிடிப்பது கடினமோ? இல்லை இல்லை! நியமநிஷ்டைகளால் வைரம் பாய்ந்த தேகம், தேசபக்தியும், தெய்வபக்தியும் தந்த தேஜஸ், நாலு தலைமுறைக் கூட்டுக்குடும்பம் தந்த நிம்மதி, சுதந்திரப் போராட்ட வீரர்க்கேயான உறுதியான நெஞ்சம், நிமிர்ந்த நன்னடை, தானே நூற்று ஈட்டும் தூய கதராடை, பாரத பூமி பழம்பெரும் பூமி என்ற தேர்ந்த ஞானச்செருக்கு இவற்றால் இலட்சிய இந்தியனாகிய இவரது உருவம் விசுவரூபமாய்த் தனித்திருக்க வேண்டுமே. சுடர்மிகு ஜொலிப்பில் அடையாளம் அம்பலமாகி விடுமே!

    கண்டேன் கல்யாணராமனை! கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரத்தான் திருக்கோவில் பின்புறமாக, வீதி என்றும் பாராது விழுந்து அவரை வணங்குகிறேன். உதாரண புருஷரே! இளைய பாரதத்தை வழிநடத்தி, வாழ்விக்க வந்த வாலிபரே! எம்மை வாழ்த்தும் என்று வேண்டுகிறேன். உப்பு சத்தியாக்கிரக நினைவுப் பயணத்தில் எனக்கும் ஓரிடம் தந்தருள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    காலப் பெருவெளியில் பின்னோக்கிப் போதல் என்பது நினைவு சுகம் நாடுவோர்க்கு எளிதாகலாம். வரலாற்றின் அடிச்சுவடுகளை, நம்மை புதுப்பித்துக் கொள்ளவென்று நாடிச் செல்வதென்பது மெத்தக் கடினம். புராதனச் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்களைப் புனைந்து சேர்த்தல் எளிது. அண்மைய ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றினை ஒட்டி புதினம் வரைவதற்கு மிகுந்த தெளிவும், துணிச்சலும் வேண்டும். கற்பனையின் சதவிகிதம் பற்றி சந்தேகம் வரக்கூடாது. புதின இலக்கணத்தின் சீரும் தளையும் செம்மையாய் இருக்கவும் வேண்டும். சாதித்திருக்கிறார் ஆசிரியர்!

    இன்று பாரதத்தில், பிரிவினையின் கசப்பு இல்லை என்பதே நமது சகோதரத்துவ சாசனம் சாசுவதமானது என்பதற்குச் சான்று. சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்கள் இதனோடு சேர்கிறபோது பாரதம் சுவர்க்கபுரிதான்! சொல்பவர் வித்யா சுப்ரமணியம். சொல்பவர்க்குப் புகழ் சூட்டுவோம். குறைந்தபட்சம் மனமார நன்றி சொல்வோம்.

    திருமதி. வித்யா பின்ட்டோ

    முன்னாள் விரிவுரையாளர், ஊடகத்துறை

    எம்.ஒ.பி. வைஷ்ணவா கல்லூரி

    சென்னை – 600 034

    கதைகளின் மூலம் சரித்திரத்தை அறிவது என்பது புதிதல்ல. பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து பல சாகித்தியங்களின் மூலம் பல்லாயிரமாண்டிற்கு முன் இருந்த கலாச்சாரத்தைப் பற்றிக் கூட நாம் அறியப் பெற்றிருக்கிறோம். அந்த வகையில் ‘உப்புக் கணக்கும்’ தன்னுள் ஒரு சரித்திரத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. இந்த புதினத்தில் நான் படித்ததை, ரசித்ததை, வியந்ததை, மெளனித்ததைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையின் பொருட்டே இந்த எழுத்து.

    எந்த விஷயத்தை முதலில் சொல்வது என்று எண்ணியபோது, அந்த எண்ணமே தவறெனப் புரிந்தது. எழுத்துக்கு முதலிடம், ஆராய்ச்சிக்கு இரண்டாமிடம் என்றெல்லாம் போட்டியிடாமல், அனைத்து விஷயங்களும் முதல் இடத்தையே பெற்றுள்ளதுதான் இந்த சரித்திர யாத்திரையின் வெற்றி. ஆம், இது ஒரு யாத்திரை. இதில் பயணிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நெடும் பயணம் செய்த அசதியும், தானே வெற்றி பெற்று விட்டாற்போன்ற எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு வெர்சுவல் டிராவல் எக்ஸ்பீரியன்ஸ் (Virtual Travel Experience) படிக்கும் அனைவரும் உணர்வீர்கள்.

    இதன் வெற்றி… Blurred boundaries என்று அதைக் குறிப்பிடலாம். கற்பனை கதாபாத்திரங்களுக்கும், நிஜ பாத்திரங்களுக்குமிடையே தெரியாத வித்தியாசம். ராஜாராமைய்யர் தன் மகன்களுக்கு நடத்தும் மாறுவேடப் போட்டி போல், கற்பனை கதாபாத்திரத்தையும், நிஜ பாத்திரங்களையும் பிரித்துச் சொல்லுங்கள் என்று வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தால் ஜெயிப்பது மிகவும் கடினம். ஆனால் போட்டியில் ரகுராமன் மூட்டை சுமந்து பெற்ற காசைப் பெரிதாக நினைத்ததுபோல் கதாபாத்திரங்களின் மூலம் கற்றுக்கொண்ட சரித்திரப் பாடங்கள்தான் வாசகர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த பரிசு.

    நீங்கள்ளாம் எண்பதும், தொண்ணூறும் மார்க் வாங்கறதுக்காகவா சரித்திரங்கள் நடக்கின்றது? என்று கொள்ளுத் தாத்தா கேட்கும்போது, பளாரென அறைகிறாற்போல இருக்கிறது. மதிப்பெண்கள் வாங்கிய அளவிற்கு நாம் சரித்திரத்தை நன்கு அறிந்தோமா என்று யோசிக்க வைக்கிறது. பெரிய தாத்தாவுக்குக் கிடைத்தாற்போல் ஒரு ஆசிரியர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறது.

    கற்பனையோ நிஜமோ, சிறியதோ, முக்கியமானதோ அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. குடிக்கும் பாலின் நான்கு குழந்தைகளைப் பற்றிக் கூறி மனிதர்களின் இன வேற்றுமைக்கு புதிய தாத்பர்யத்தைச் சொல்லும் சுவாமிநாதனின் பேச்சை இன்னும் கொஞ்சம் கூடக் கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. எப்பேற்பட்ட மனிதர் அந்த சுவாமிநாதன்! பகத்சிங்கை தூக்கிலேற்றிய போது அவர் அடைந்த துக்கம், கல்யாண ராமனுக்கு சாரதியாக இருந்து ‘சிகரங்கள் அடைய முடியாதவை அல்ல’ என உபதேசிக்கும் போது விஸ்வரூபமெடுக்கிறார்.

    ருக்மிணி லக்‌ஷ்மிபதி என்று சொன்னால் என்னைப் போன்றவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது சென்னையிலுள்ள அவர் பெயர் கொண்ட ஒரு சாலை. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், உப்பு சத்யாக்கிரகி, மனித சங்கிலியாக மாறி உப்புக்கு அரண் அமைத்தவர் என்பது தெரிந்தபோது என் அறியாமையை எண்ணி வெட்கித் தலை குனிந்தேன்.

    தக்ளி தயாரித்துக் கொடுக்கும் கிருஷ்ணமூர்த்தி அய்யர் நமக்கும் ஒரு மாக்கல் தக்ளி செய்து தர மாட்டாரா என்று ஆசையாக இருக்கிறது. ‘இவ்விடம் சட்ட விரோதக் கூட்டத்துக்கு மட்டும்தான் இளநீர் வெட்டிக் கொடுக்கப்படும் எனக் கூறும் பெயரற்ற ஒரு ஊர்வாசி, அஹிம்சையால் வெள்ளையர்களை சுதந்திரம் தர சம்மதிக்க வைத்த காந்தியால் ஜின்னாவை என்ன செய்ய முடிந்தது?’ என்று கேள்வி கேட்கும் ஆர்.எஸ்.எஸ். கோபால், கல்கண்டு போல் சிரிக்கும் கலியுக சபரி, கண்கலங்கச் செய்யும் குழந்தை விதவை(?) காமு என்று நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். இவர்கள் மட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு புதினத்தின் கதாபாத்திரமான ‘அம்மன் பேட்டை, கூத்தாடி அன்னத்தையும் நமக்கு சம்பாஷனையின் மூலம் அறிமுகப்படுத்தி, அந்தக் காலத்திற்கே நம்மை முழுமையாக அழைத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது.’ மனிதர்களின் குணாதிசயங்களின் வடிவமைப்பு வியக்க வைக்கிறது. மீனாட்சியைப் பெற்ற மகள்போல் நினைக்கும் அபயத்திற்கு தெய்வானையின் வீட்டிற்கு வரும் அளவிற்குப் பரந்த மனப்பான்மை இல்லை என்பதுபோல எல்லாமே யதார்த்தமான பாத்திரப் படைப்புகள்.

    உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பெருமைகள் பல இருக்கலாம். ஆனால் என்னை மிகவும் கவர்ந்த, ஆச்சர்யப்பட வைத்தது, அந்தக் காலத்திலேயே சாத்தியமான தகவல் தொடர்பு முறை. இன்று எங்கிருந்து வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும், தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். ஆனால் அன்று ‘சத்தியாக்கிரகிகளின் முகாம்’ என்று விலாசமிட்டு அனுப்பினால் போதும் அவர்களைச் சென்றடைந்துவிடும். மொபைல் போனைப் போல் மொபைல் முகவரி!

    பிரேக்கிங் நியூஸ், நேரடி ஒளிபரப்பு, சற்றுமுன் கிடைத்த தகவல் என்று இந்த காலத்தில் யுத்தத்தைக் கூட வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் காணும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள நாம், சுதந்திரப் போராட்டக் காலத்தில் ரயிலடியில் நின்று தொலை தூரத்திலிருந்து வரும் பயணிகளின் மூலம் பல விஷயங்களைக் கேட்டறிந்து செய்தி சேகரித்து பத்திரிக்கைகளில் வெளியிட்டு தேச விடுதலைக்கு முக்கியக் காரணமாயிருந்த நிருபர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

    சுதந்திரப் போராட்டத்திற்காக மக்கள் பட்ட கஷ்டத்தை விவரித்திருக்கும் விதம் நேரில் கண்டதுபோல் எழுதியிருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது, ஹாங்காங் சிறையில் ரகுராமன் படும் கஷ்டம், உப்பிற்கு மனித பாதுகாப்பு வளையம் கொடுத்து தடியடி வாங்கிய சத்யாக்கிரகிகளின் தேசப்பற்று, லாகூரை இரத்த நகரமாக்கிய மதக்கலவரம் என்று அவர்கள் பட்ட துயரத்தை நேரில் பார்த்த பிரமை ஏற்படுகிறது.

    துயரத்தை மட்டுமே எழுதாமல் கோடை மழைபோல் காதலும், ஹாஸ்யமும் கலந்து தந்திருப்பது பாராட்டுக்குரியது. கல்யாணராமனோடு அவன் கண்போல் நாமும் கூடவே பயணப்பட்டாலும், நமக்குத் தெரியாமல் தன் வருங்கால மனைவிக்கு வளையலும், மாட்டலும் எப்பொழுது வாங்கினான் என்று பொய்க் கோபத்தோடு யோசிக்கத் தோன்றுகிறது.

    பசி தீர்க்கும் அன்னம் ருசியாக இருப்பதற்கு ஒரு புதிய செய்முறையைச் சொன்னதுபோல ஞானப்பசி தீர்க்கும் இந்த சாகித்யத்தையும், ஒரு தவம்போல் தந்திருப்பது படிப்பவர்களுக்குப் புரியும். இந்த காலத்தில் இளம் வயதிலேயே இரத்தக் கொதிப்பு என்பது சகஜமாகி விட்டது. உணவில் உப்பைக் குறைக்கும் போதுதான் உப்பின் மகிமை இந்த தலைமுறையினருக்குப் புரிகிறது. அந்த உப்பிற்காக இந்த தேசம் பட்ட கஷ்டத்தைத் தெரிந்துகொள்ள இந்த உப்புக் கணக்கைப் படித்தேயாக வேண்டும். ஆன்மீகத்தையும், தேசபக்தியையும் கலந்து என்னை ஒரு புதிய உயிராக்கியதற்கு நன்றிகள் பல கோடி.

    நான் கற்றது உப்பளவு…! கல்லாதது…?

    திருமதி வல்லபா ஸ்ரீநிவாசன்

    சிற்பக்கலை, மற்றும் சரித்திர ஆர்வலர்,

    சென்னை - 600014

    உப்புக் கணக்கு புத்தகம் இன்ஸ்பிரேஷனல் ஃபிக்‌ஷன் வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு. சுதந்திரப் போராட்ட நிகழ்வை மையமாக வைத்து ஒரு நாவலைப் படைக்க நினைப்பது சாதாரண விஷயமல்ல. கல்கியின் அலை ஓசை போன்று வெகுசில படைப்புகளே இத்தகைய முயற்சியை செய்திருக்கின்றன. வித்யா சுப்ரமணியம் அதனை தைரியமாக எடுத்துக்கொண்டு இக்கதையைப் புனைந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    அதிலும் உப்பு சத்தியாக்கிரகம் கதையின் ஒரு பகுதியாக இல்லாமல் உப்பு சத்தியாக்கிரகத்தில் கதை ஒரு பகுதியாக இருப்பது இந்தப் புனைவின் சிறப்பு. அவ்வளவு விரிவான செய்திகள். தகவல்கள். நாமும் வேதாரண்யத்தில் இராஜாஜி கூடவே பயணம் செய்வதுபோல வர்ணனைகள்.

    எளிமையான மொழி, எளிமையான நடை, நேர்கோட்டில் செல்லும் கதை. இவை புனைவையும், அதன் மையமான வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தையும் மேம்படுத்துகிறது எனலாம்.

    தண்டி உப்பு சத்தியாக்கிரகம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகையில் வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் எந்தவிதமான அங்கீகாரத்தையும், வரலாற்றுச் சிறப்பையும் பெறாமலிருப்பது வருத்தத்திற்குரியது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு புனைவை எழுதியது ஆசிரியரின் நாட்டுப் பற்றையும், சமூக அக்கறையையும் காட்டுகிறது.

    உப்புசத்தியாக்கிரக வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்ததுபோல் இக்கால சமூகத்தையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். சரித்திரத்தின் முக்கியத்துவம், நிகழ்வுகளைப் பதிவிடுவதன் அவசியம் இவற்றைக் கருத்தில்கொண்டு ஆதாரங்களுடன் நிகழ்வுப் பதிவுகளை ஒரு கடமையாகவே செய்திருக்கிறார் திருமதி வித்யா சுப்ரமணியம்.

    காந்தி ஒரு ஆளுமை. படித்துத் தெரிந்து கொள்வதைவிட உணரப்பட வேண்டிய ஒருவர் காந்தி. அவரை உள்வாங்கி ஆழ்ந்து லயிக்காமல் இப்படி ஒரு படைப்பை உருவாக்கி இருக்க முடியாது. அஹிம்சை வழிப் போராட்டத்தின் பெருமையைச் சொல்வது போலவே தீவிரவாதத்தால் ஏற்படும் பாதிப்பு, கொந்தளிப்பு இவற்றையும் முன்வைக்கிறார் ஆசிரியர். காந்தியையே கேள்வி கேட்பதுபோல சில பகுதிகள் இருப்பது, இவர் இதில் எவ்வளவு ஆழ்ந்து போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

    இராஜாஜியின் ஆளுமை, அவரது தலைமை, செயல்வீரம், சமயோசிதம், நிதானம், கவனமான அணுகுமுறை போன்ற தலைமைப் பண்புகளை தெள்ளத் தெளிவாகக் காட்டும்படி சித்திரித்திருக்கிறார் ஆசிரியர். இராஜாஜியை நேரில் சந்தித்தது போன்றதான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார். மதுவிலக்கு, தீண்டாமை, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்று பல விஷயங்களிலும் அக்கறையுடன் அஹிம்சா வழியில் செயல்படும் தலைவரை நாம் அறிந்து கொள்கிறோம். இக்கால இளைஞர்கள் படித்துத் தெரிந்துகொள்ள பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது உப்புக்கணக்கு.

    சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவல் சிப்பாய் கலகக் கால இந்தியாவைக் காட்டுவது போல, உப்புக்கணக்கு பிரிவினைக் கால இந்தியாவைக் காட்டுகிறது. அந்த அவலங்களை எழுத்தின் மூலம் கண்முன் கொண்டுவந்து விடுகிறார் ஆசிரியர்.

    நல்ல கதாப்பாத்திரங்கள் இப்புனைவின் சிறப்பம்சம். சந்தர்ப்பங்களினால் வரும் குழப்பம் மட்டுமே இக்கதையில் வில்லனாக இருக்கிறது. அது விலகும்பொழுது அனைத்து கதாபாத்திரங்களும் நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். இதனால் சிறுவர்கள், மாணவர்கள் படிக்க ஏற்றதாக அமைகிறது இப்புதினம்.

    ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்னும் பாரதியின் வரிகள் பொருத்தியிருப்பது மிகவும் அழகான அம்சம். வாழ்க்கைத் தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துக்கள் நிறைந்து மேலும் சிறப்படைகிறது இந்தப் புதினம்.

    கற்காத வரலாற்றைச் சொல்வதால் இப்புத்தகம் பள்ளிகளில் நான்டீடெயில் வரிசையில் படிக்கப்பட வேண்டிய புத்தகம். சமீபத்தில் இப்புதினம் ஆங்கில மொழிபெயர்ப்பு கண்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மேலும் பல பதிப்புகளைக் காண ஒரு வாசகியாக என் வாழ்த்துக்கள்.

    என்னுரை

    இனிய நட்புக்கு,

    வணக்கம். முன்னுரையும், என்னுரையும் எல்லா நாவல்களுக்கும் தேவைப்படுவதில்லை. மிக முக்கியமான சில நாவல்களுக்கு மட்டும்தான் நான் என்னுரை எழுதியிருக்கிறேன். இந்த நாவலும் முக்கியமான நாவல்தான் என்பது இதன்மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

    நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவையாக வரலாறு சொல்வது 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகம், 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, 1930ல் நாடு முழுவதும் நடந்த உப்பு சத்தியாக்கிரகங்கள், 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு புரட்சி, இந்திய பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதையொட்டி ஏற்பட்ட ஹிந்து முஸ்லிம் கலவரங்கள்.

    பள்ளியில் நாம் படிக்கும் சரித்திரப் பாடங்கள் விரிவானவை அல்ல. மதிப்பெண்களுக்காக மட்டுமே நாம் படிக்கும் சரித்திரம் அது. சில கேள்விகளுக்கு பதில் எழுதுவது சுலபம். எந்த அரசரின் சாதனையைப் பற்றி கேட்டாலும், அவர் மரங்கள் நட்டார், குளங்கள் வெட்டினார், அணைகள் கட்டினார் என்று கண்ணை மூடிக்கொண்டு எழுதி விடலாம். அரை மார்க்காவது கிடைத்து நம் மானம் போகாமல் காப்பாற்றிவிடும்.

    நான் உண்மையான சரித்திரப் பாடங்களை இப்போதுதான் படிக்கிறேன். உப்பு சத்தியாக்கிரகத்தின் பின்னணியில் நாவல் எழுத வேண்டும் என்று எதனால் தோன்றியதென்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. அது என்னை எதனாலோ கவர்ந்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். சுதந்திரப் போராட்டங்களின் வலிமையை மையமாக வைத்து எத்தனையோ எழுத்தாள ஜாம்பவான்கள் புதினங்கள் எழுதியிருக்கும்போது நான் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன் என்று தோன்றக்கூடும். ஆனால் நானும் இதைப்பற்றி ஒரு நாவல் எழுத வேண்டுமென்பது இறைவனின் சித்தம் போலும். வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் பின்னணியில் ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற வித்து எனக்கே தெரியாமல் என் மனசுக்குள் விழுந்து வேர் விட்டிருக்க வேண்டும். இந்திய சரித்திரம் தொடர்பாக நிறைய புத்தகங்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க எனக்குள் பிரம்மிப்பு கூடிக்கொண்டே போயிற்று.

    நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் என் அலுவலக வளாகத்தில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் உணவு இடைவேளையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது என் கண்களில் ஒரு புத்தகம் தென்பட்டது. விலை மதிப்பற்ற அந்தப் புத்தகத்திற்கு நான் கொடுத்தது வெறும் இருபது ரூபாய்தான். அந்தப் புத்தகம் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் பற்றியது. திருச்சியில் ஆரம்பித்து வேதாரண்யம் வரையான 150 மைல் பாதயாத்திரையைப் பற்றிய ஆச்சர்யமான தகவல்களோடு எழுதப்பட்டிருந்த புத்தகம் அது. யார் அதை பழைய புத்தகக் கடையில் போட்டார்களோ? என் ஆச்சர்யம் என்னவென்றால் யாரோ ஏதோ ஒரு கடையில் போட்ட புத்தகம் என் அலுவலக வளாகக் கடைக்கு ஏன் வரவேண்டும்? என் கண்ணில் ஏன் படவேண்டும்? நான் அதை வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் இதெல்லாம் நடந்ததா? இப்படி ஒரு புத்தகம் இருப்பது கூட எனக்குத் தெரியாது. இதனால்தான் சொன்னேன், நான் இதை எழுத வேண்டுமென்பது இறைமையின் சித்தம் என்று. ஏற்கனவே எனக்குள்ளிருந்த அக்கினிக் குஞ்சு இந்த வேதாரண்யக் காற்று பட்டதும் திகுதிகுவென கொழுந்துவிட்டு எரியத் துவங்கி விட்டது.

    2006-ன் மழைக் காலத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்த என் நாவல் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. ஐம்பது பக்கம் எழுதுவதற்குள் ஆயிரம் வேலைகள் குறுக்கிட்டது. வீட்டுப் பணி, அலுவலகப் பணி, இதரப் பணிகள் என்று நாவல் அப்படியே நின்று போயிற்று.

    2007 அமுதசுரபி தீபாவளி மலரில் எனது சிறுகதையோடு என்னைப் பற்றி ஒரு குறிப்பும் கேட்டார்கள். சமீபத்தில் நான் எழுதி வரும் நாவல் பற்றி கேட்டபோது நான் இந்த உப்பு சத்தியாக்கிரகப் பின்னணியில் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றிச்சொல்ல, அது பற்றிய குறிப்பு மலரில் வெளியாயிற்று. அந்த உத்வேகத்தில் இன்னும் ஒரு நாற்பது பக்கம் வளர்ந்தது உப்புக் கணக்கு. மறுபடியும் வேறு வேலைகள் சூழ நின்று போயிற்று. ஆயினும் நான் இதற்கான குறிப்புகள் எடுப்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. அடுத்த ஆண்டும் அமுதசுரபி தீபாவளி மலரில் இது பற்றி குறிப்பு போடப்பட்டபோது என் பெண்கள் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எதற்கு இப்படி ஓவராக பில்டப் கொடுக்கிறாய்? குறிப்பு வந்திருப்பதற்காகவாவது நாவலை சீக்கிரமாக எழுதி முடிக்கக் கூடாதா என்று கேட்டார்கள். அதன் பிறகுதான் முழு ரோஷத்தோடு மீண்டும் என் பேனாவை எடுத்தேன்.

    எழுத எழுத என்னை முழுமையாக தனக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது இது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை. காலச்சக்கரம் என்னை எண்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிட்டது. நான் முப்பதுகளில்தான் சில மாதங்கள் வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்குள் சில்லென ஒரு காவேரி ஓடிக் கொண்டிருந்தது.

    இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்திற்குத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள் நடந்திருக்கிறது! சின்னச் சின்ன சமஸ்தானங்களை உள்ளடக்கியிருந்த இந்த தேசத்திற்கு விடுதலை வழங்குவதில்தான் எத்தனை சிக்கல்கள்! இதோ சுதந்திரம் தந்தோம் என்று எத்தனைமுறை ஆசை காட்டி ஏமாற்றியிருக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கம்! இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக எத்தனை லட்சம் உயிர்களை இந்த பாரதமாதா பறிகொடுத்திருக்கிறாள்.

    சிந்து நாகரிகம் ஹிந்து நாகரிகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்த தேசத்திற்குள் கிறித்தவம், இஸ்லாமியம், பெளத்தம், சீக்கியம் என்று எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள், எத்தனை கலாச்சாரங்கள்!

    இந்திய பாகிஸ்தான் பிரிவினைகள் குறித்தும், ஹிந்து முஸ்லீம் கலவரங்கள் குறித்தும் விரிவாகப் படித்தபோது எனக்குள் இரத்தக் கண்ணீர் வடிந்தது.

    வங்காளப் பிரிவினை கூடாதென்று ஒருமுகமாக அதை எதிர்த்த ஹிந்து முஸ்லிம் சகோதரர்களின் அளப்பரிய ஒற்றுமையும், உப்பு சத்தியாக்கிரகத்தில் மகாத்மாவின் பின்னால் ஒன்றுசேர்ந்து சென்றபோதிருந்த அவர்களது ஒற்றுமையும், இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது மாயமாய் மறைந்ததன் பின்னணியிலிருந்த ஆங்கில வைசிராய்களின் தந்திரம் வேதனையிலாழ்த்தியது. ஹிந்துக்களிடம் அவன் தந்திரம் பலிக்கவில்லை. ஹிந்து மதத்தின் கொள்கைகள் அப்படி. அதனால் ஜின்னாவுக்கு ஆசை காட்டினான். சுலபமாய் பலித்துவிட்டது. மதவெறியும், ஜிகாத் என்ற வார்த்தையும் அவரைத் தனிநாடு கேட்க வைத்தது. தனிநாடு கிடைத்துவிடும் என்ற கனவில் இஸ்லாமியர்கள் அவர் பின்னால் திரண்டார்கள். இஸ்லாத்தை ஏற்காதவர்களை அழிப்பதில் தவறில்லை என்ற கோட்பாடும் பின்பற்றப்பட்டது. வீட்டுக்கு வந்த விருந்தாளி மூக்குப் புடைக்க விருந்துண்டுவிட்டு, போகிற போக்கில் அந்த வீட்டின் சகோதரர்களுக்குள் பாகப்பிரிவினையும் செய்துவிட்டுப் போயிருக்கிறான். அவன் தந்திரம் வென்றது நம் துரதிருஷ்டம். சிந்துவால் பெயர்பெற்ற இந்துக்களுக்கு சிந்து இல்லாது போய்விட்டது. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது நிரூபணமாகி விட்டது.

    1857ல் துவங்கி 1947க்குள் எத்தனை லட்சம் மக்களின் இரத்தத்தை இந்த மண் உறிஞ்சியிருக்கிறது! எத்தனை போராளிகளைத் தனக்குள் புதைத்துக் கொண்டிருக்கிறது! மிதவாதிகளும், அமிதவாதிகளும் ஆளுக்கொரு பக்கம் தங்கள் வழியில் கொடுத்த நெருக்கடியில் ஒருவழியாக வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுச் செல்ல, சுதந்திரக்கொடி கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டது.

    உப்பு சத்தியாக்கிரகம் துவங்கி பாகிஸ்தான் பிரிவினை வரையான பின்னணியில்தான் இந்நாவல் நகர்கிறது. சம்பவங்களை நடுநிலையில் நின்றுதான் பதிவு செய்திருக்கிறேன்.

    அன்றைய காலக்கட்டத்திலும் தலைவர்களுக்கிடையே நிறையவே அபிப்ராய பேதங்கள் இருந்திருக்கிறது. காந்திஜிக்கும் நேருஜிக்கும், காந்திஜிக்கும் பட்டேலுக்கும், காந்திஜிக்கும் ராஜாஜிக்கும் பலமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தில் ஒத்துப்போனால் இன்னொரு விஷயத்தில் இவர்கள் முரண்பட்டு இருந்திருக்கிறார்கள். காந்திஜியின் அஹிம்சை கொள்கையை வ.உ.சி. கோழைத்தனம் என்றிருக்கிறார். மாவீரர் என்று போற்றப்பட்ட நேதாஜியை ராஜாஜி ஒட்டைப் படகு என்று விமர்சித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினையை காந்திஜி விரும்பவில்லை. ஆனால் ராஜாஜி பிரித்துக் கொடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.

    முஸ்லீம்களுக்கு ஆதரவாக பலமுறை காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததும், பிரார்த்தனை கூட்டத்தில் குர்ரான் வாசித்ததும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது. அதிலும் பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லீம்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்து அவர் முன்வைத்த கோரிக்கைகள் இந்துக்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. நேருஜியும், பட்டேலும்கூட இதற்காக காந்திஜியிடம் எரிச்சல் பட்டிருக்கிறார்கள்.

    இந்துக்களை அவர் கைவிட்டு விட்டதாகவே எழுந்த விமர்சனத்தைக்கூட அவர் ஒதுக்கிவிட்டு முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்தும்கூட, பாகிஸ்தான் முஸ்லீம்கள் அவரை மதித்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்திய மக்களோ, அவர் எது சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தார்கள். அப்படி ஒரு பக்தி.

    ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கையில் காந்திஜியின் வல்லமை பிரமிக்க வைக்கிறது. மெல்லிய தேகம், எலும்புகள் துருத்திய நெஞ்சுக்கூடு, ஒட்டிய கன்னங்கள், வழுக்கைத்தலை, அரையில் ஒரு துண்டு, பொக்கைவாய் சிரிப்பு, செருப்புகளைத் துறந்துவிட்ட பாதங்கள், என எளிமையின் மொத்த வடிவம்!. இவருக்குப் பின்னால் மொத்த தேசமும் ஒருமித்து நின்றது. அவரது வாக்குக்குக் கட்டுப்பட்டது. அவர் அசைந்தால் அசைந்தது. அவரது அஹிம்சைக்குத் தலை வணங்கியது. அவரது பெயரை மந்திரமாக உச்சரித்து மகிழ்ந்தது.

    கோடிக்கணக்கில் அவருக்காகக் கூடிய கூட்டம் வெறும் பிரியாணி பொட்டலத்திற்காகவோ, தினக்கூலிக்காகவோ திரண்டது அல்ல. அவரது அஹிம்சை கொள்கைகளுக்குத் தலைவணங்கிக் கூடிய கூட்டம் அது. அமிதவாதிகள் கூட அவரை வணங்கி விட்டுத்தான் தங்கள் வழியில் சென்றார்கள்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து அஹிம்சை ஜெயித்தது. ஹிம்சையோ அவரது உயிரையே பெற்றுக்கொண்டது. தலைமைப் பொறுப்பு என்பது எளிதல்ல. அதிலும் ஒரு தேசத்தையே அஹிம்சை வழியில் நடத்திச்சென்று வெற்றி காண்பது என்பது நினைத்தே பார்க்க முடியாத விஷயம். கத்தியின்றி இரத்தமின்றி என்பதில் அவர் கடைசிவரை உறுதியாக இருந்திருக்கிறார். அதற்காக உயிரையும் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    இந்த பூமிப்பந்தில் எத்தனையோ தேசங்கள் இருக்கின்றன. எத்தனையோ மலைகள், ஆறுகள், கடல்கள் இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு தேசத்திற்கும் இல்லாத பெருமை, இந்த பாரத தேசத்திற்கு உண்டு. இதற்கு மட்டும்தான் கர்மபூமி, தர்மபூமி, தேவபூமி, புண்ணியபூமி என்றெல்லாம் பெயர்கள் இருக்கிறது. இங்கு மட்டும்தான் மலைகள் எல்லாம் தெய்வீகமானவை. நதிகள் எல்லாம் பாவம் நீக்கும் புண்ணிய நதிகள். காற்றெல்லாம் வேத ஒலிகள். கால் வைக்கும் இடமெல்லாம் புண்ணிய ஷேத்திரங்கள். பஞ்ச பூதங்களும் தெய்வங்கள். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகோர்த்துக் கொண்டு இந்த தேசத்தை உயர்த்தியிருக்கிறது. இங்கு நிறைந்திருக்கும் புனித அதிர்வுகள் வேறு எங்கும் இல்லாதது. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் நிகழ்ந்த புண்ணிய மண் இது. ஆதிசங்கரரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும் அவதரித்த பேறு பெற்றது. ஆண்டாள், மீரா, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் என்று தெய்வ தரிசனம் செய்த மகான்கள் பிறந்தது இங்கேதான். பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட புண்ய தேசம் இது. உலகிற்கே ஞான உபதேசம் செய்த நாடு. இத்தகைய பெருமைமிகு தேசத்தில் பிறந்திருக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணோடு ஒரு உப்புக்கணக்கு இருக்கிறது. இந்தக் கணக்கு காலம் காலமாகத் தொடரவேண்டும் என்றுதான் இந்த மண்ணின் மகிமை தெரிந்தவர்கள் விரும்புவார்கள். ஹிந்துமதத்தின் அடிப்படை குணமே சகிப்புத் தன்மையும், அன்பும்தான். அதனால்தான் பிற மதங்களால் இங்கே சுலபமாக நுழைந்து காலூன்ற முடிந்தது. மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருப்பதற்குக் காரணம் இந்து மதத்தின் பெருந்தன்மைதான். இதன் காரணமாகத்தான் பலநூறு ஆண்டுகள் முகம்மதியர்களிடமும், பின்னர் அந்நிய நாட்டினரிடமும் அடிமைப்பட்டு கிடந்திருக்கிறது. இந்த பெருந்தன்மையால்தான், தனிநாடு கிடைத்தும் இங்கேயே தங்கிவிட்ட இஸ்லாமியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றாமல் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டார்கள் இந்துக்கள்.

    இந்த நாவலை நான் நேரம் கிடைக்கும் போதுதான் எழுதினேன். எழுதிய நேரத்தைவிட நான் இதற்கான புத்தகங்களை வாசித்த நேரம்தான் அதிகம். ஒருநாளைக்கு இத்தனை பக்கம் எழுத வேண்டும் என்றெல்லாம் எவ்விதத் திட்டமிடல்களும் இல்லாத நிலையில் எனக்கே தெரியாமல் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சரியாக 79 வருடங்களுக்கு முன்பு ஏப்ரல் முப்பதாம் தேதிதான் வேதாரண்யத்தில் ராஜாஜி தன் தொண்டர்களோடு உப்பள்ளி, உப்புச் சட்டத்தை மீறியிருக்கிறார். அந்த சம்பவத்தை நான் நாவலில் எழுதிய தினமும் ஏப்ரல் முப்பதாகவே இருந்ததை எழுதி முடித்த பின்புதான் நானே கவனித்தேன். என்ன ஒரு Co-incidence?

    இந்த உப்புக்கணக்கை எழுத ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரை என் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் நடக்கும்போதெல்லாம் நானும் நடந்தேன். அவர்கள் காவிரியில் நீராடிய போதெல்லாம் நானும் நீராடினேன். கல்யாணம் லாகூருக்குச் சென்றபோது நானும் சென்றேன். சிந்து நதிக்கரையில் வேதம் சொல்லி நீராடினேன். அந்த அளவுக்கு என் கதாபாத்திரங்களோடு நான் ஒன்றிப் போயிருந்தேன். அவர்கள் வந்தே மாதரம் சொன்ன போதெல்லாம் நானும் சொன்னேன். அவர்களைப் பிரிவது சிரமம்தான்.

    இந்த நாவல் எழுதிக் கொண்டிருக்கும்போது அகில இந்திய வானொலியில் பணியாற்றிய திரு. விஜய திருவேங்கடம் அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர் தினமணிக்காக தான் தொகுத்துக் கொடுத்த, சுதந்திரதின பொன்விழா மலரையும், இன்னும் பல புத்தகங்ளையும் எனக்குக் கொடுத்து உதவினார். அந்தப் புத்தகங்களிலிருந்த பல அரிய தகவல்கள் இந்நாவல் எழுதுவதற்குப் பேருதவியாயிருந்தது. தவிர உப்பு சத்தியாக்கிரகி திரு. பி.என். ஸ்ரீனிவாசன் என்பவரது தொடர்பு எண்ணையும் தந்து உதவினார். தன்னிடமிருந்த மிக அபூர்வமான புத்தகங்களையெல்லாம் கொடுத்து உதவியதோடு, மிகுந்த சந்தோஷத்தோடு இதற்கொரு முன்னுரையும் எழுதிக் கொடுத்தார். அவருடைய ஆர்வத்திற்கும், அன்புக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    இந்த நாவல் எழுதிக் கொண்டிருக்கும்போது 2007-ல் என்னோடு திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட என் தோழி ஒருத்தி ஒரு விஷயம் கூறினார். அவரது தந்தையும் திரு. ராஜாஜியோடு உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டவராம். அவர் தந்தை பெயர் திருக்கருகாவூர் வி. ராமச்சந்திரய்யர் என அறிந்ததும், அவரையும் நாவலில் இணைத்துக் கொண்டேன். ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட அவர் சிறையிலிருக்கும் போதுதான் அவரது மனைவி அவர்களது முதல் குழந்தையைப் பிரசவித்தாராம். அவளது தாயும் தந்தையும் கடைசிவரை கதராடை மட்டுமே உடுத்தியவர்கள் என்றறிந்தபோது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது.

    நான் பாரதியின் தீவிர பக்தை. பாரதியார் இல்லாமல் ஒரு உப்புக்கணக்கா? அவரது காலத்திற்குப்பின் நிகழும் சம்பவங்கள் என்றாலும் இந்நாவலில் அவரும் வருகிறார். கவிதை வடிவில்! இந்த உலகில் இதுவரை நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும்,

    Enjoying the preview?
    Page 1 of 1