Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oliyin Nizhalil...
Oliyin Nizhalil...
Oliyin Nizhalil...
Ebook208 pages1 hour

Oliyin Nizhalil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒளியின் நிழலில்...புதினத்தில் மின்னலாய் ஒளிக் காட்டும் நடிகை பிரேமலதா மனித வாழ்க்கையின் ஒரு பிரதிபலிப்புதான். காதலும் தாய்மையும் இரக்கமும் இதயமும் கொண்ட இந்தப் பேதைப் பெண்ணின்பால் ஆபாஸங்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. நல்லதோர் வாழ்க்கை வாழ நாடும் அந்த பெண்னிடம் சமூகம் துச்சாதனமாய் நடந்துகொள்கிறது. நல்லதோர் வீணை புழுதியில் வீசப் பட்டிருக்கிறது.

தன் குடும்பம் காக்கப் புறப்பட்ட இந்த பெண்ணின் ஊதியத்தில் உல்லாசம் தேடும் அவள் இரத்தத்தின் இரத்தங்கள் அவள் இதயத்தைக் குத்தி கிழிக்கின்றனர். அவளால் வாழ்வு பெற்றவர்களே அவள் வீழ்ச்சியில் கெக்கிலி கொட்டி சிரிக்கின்றனர்.

பொதுவாய் சினிமா... சினிமா நடிகை என்றவுடன் ஆவலாய் வேடிக்கை பார்க்கும் நாம் அவர்களை வேடிக்கைப் பொருளாக மட்டுமே பார்க்கிறோம். அவர்களுக்கும் பிரச்னைகள் உண்டு, கவலைகள் உண்டு என்பதை மறந்து விடுகிறோம். உண்மையோ பொய்யோ அவர்கள் பற்றி வரும் சம்பவங்களைக் கிசுகிசுப்பாய் சொல்லி மகிழும் மனித மனம் ஏராளம்.

எல்லோர் கவனமும் எளிதில் படியும் கண்ணாடி மாளிகை அது. அங்கே கண்ணகியே நடந்து போனால்கூட மாதவிதான் போகிறாள் எனச் சாதிப்பதில் சுகம் காண்பவர் ஏராளம். அப்படி சாதிப்பதில் ஊனப்பட்ட மனங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது.

நடிகைகள் எனச் சொல்லும்போதே அவர் கள் என்னமோ மிக மோசமான ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை நடத்தும் பிறவிகள் என எண்ணும் மனிதர்கள் பலர் உண்டு. யாரோ ஒரு சிலர் அப்படி இருக்கலாம். அது தவிர்க்க முடியாத தாய் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அங்கே நடமாடுபவர்களும் பெண்கள்தான் அவர்களுக்கும் கற்பு உண்டு; தாய்மை உண்டு; காதல் உண்டு என நினைப்பவர்கள் ஒரு சிலராகக்தான் இருக்கிறார்கள்.

ஒன்றை நினைத்துப் பார்த்தால் சிகப்பு விளக்கு என முத்திரை குத்தப்பட்ட பெண்ணை யாரும் பழிக்கவே மாட்டார்கள். அவளுடைய அந்நிலைக்கு யார் காரணம்; ‘எவனொருவன் தவறு செய்யாதவனோ அவன் இவள் மீது முதல் கல்லெறியுங்கள்’ என இயேசுபிரான் அருளினாரே... எந்தப் பெண்மையின் சரிவிற்கும் ஒரு ஆண்மகன்தான் மூலக் காரணம். தவறு செய்யக் காரணமாய் இருந்த ஆண்களைவிட்டு தவறு செய்த பெண்ணை மட்டும் நாம் சபித்தல் எங்ங்னம் நியாயம்.

‘கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்று சொல்லி இருவரும் நேர்மையாய் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் நம் மகாகவி.

ஆசிரியை தனக்கே உரித்தான பாணியில் வாழ்க்கையில் தென்படும் மனிதர்களின் மனங்களைக் கெல்லிப் பார்த்து எழுத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதில் வரும் மாந்தர்கள் ஆசாபாசங்களும், ஆபாசங்களும், உல்லாசமும், சுய நலமும் மிக்க கதை மாந்தர்கள், நாம் அன்றாடம் வாழ்வில் பார்க்கும் நபர்கள். பணம் என்றால் வாய் திறந்து அதைக் கொண்டு வந்து கொடுப்பவளை எள்ளி நகையாடும் எத்தர்கள்.

பேரழகு பெண்ணின் மூலதனம். அந்த பேரழகே அவளுக்குப் பெரு விலங்காகி விடுகிறது. வீட்டில் எரியும் அகல்விளக்கை வீதியில் ஏற்றி விட்டு அதன் வெளிச்சத்தில் குளிர் காய நினைக்கும் எத்தர்களை இங்கே அடையாளம் காட்டுகிறார் ஆசிரியை.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580114201951
Oliyin Nizhalil...

Read more from Hamsa Dhanagopal

Related to Oliyin Nizhalil...

Related ebooks

Reviews for Oliyin Nizhalil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oliyin Nizhalil... - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    ஒளியின் நிழலில்...

    Oliyin Nizhalil...

    Author:

    ஹம்ஸா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    ஒளியின் நிழலில்...

    ஹம்ஸா தனகோபால்

    1

    பிரேமலதா சாகவாசமாக கட்டிலில் சாய்ந்தபடி அன்றைய தினசரியைப் புரட்டினாள். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தியும் அவள் கவர்ச்சிப் படமும் பிரசுரமாகியிருந்தன.

    ‘திரைப்படத் தன்னிகரில்லாத் தாரகை’, நடனகலை மாமணி செல்வி. பிரேமலதா மயிரிழையில் உயிர் தப்பினார்.

    கோவையில் ஷுட்டிங் முடிந்து தன் காரில் திரும்பிக் கொண்டிருந்தவர் எதிரில் பயங்கரமாக வந்து கொண்டிருந்த லாரியைக் கண்டு வீறிட்டார்.

    டிரைவர் சமயோசிதமாக காரை ஒடித்து சாலையை விட்டு இறக்கி ஒட்டி புளிய மரத்தில் லேசாக இடித்து நிறுத்தினார். குடிவெறியில் இருந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    இது பற்றி பிரேமலதா நம் நிருபருக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். பேட்டி நான்காம் பக்கம்.

    பிரேமலதாவின் வெளியிட்ட சாயம் பூசப்படாத இதழ்கள் மெல்ல புன்னகைக்க பளிச்சென பற்கள் தெரிந்தன.

    பேப்பரைப் போட்டுவிட்டு ஸ்விம்மிங் சூட் உடலுக்குப் பொருந்துகிறதா என பெரிய ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தாள். எடுப்பான மார்பகம். வயிறும் முதுகும் தந்த நிறம். பின்னம் பகுதி புடைத்து கன கச்சிதமா அஜந்தா ஒவிய உடல் அமைப்பு. தேவையான இடத்தில் தேவையான ஏற்ற இறக்கங்கள். வாழைத்தண்டு தொடைகள். லட்சத்தில் ஒருவருக்கு இருக்கிற வாய்ப்பு.

    முகத்தில் ஒப்பனை இல்லை. அதுகூட அவளுக்கு அழகாகத்தான் இருந்தது. இமை அடர்ந்த மிகப்பெரி கண்கள். பால் கோப்பையில் உருளும் கருந்திராட்சைகளாக அந்த கருவண்டு விழிகளின் அடியில் இனம் காண முடியாத செய்திகள்.

    ஹேர் கவரை எடுத்து தலை முடியை மறைத்து முடிச்சிட்டாள் பிரேமலதா.

    அந்த ஏஸி அறையை ஒட்டின பாத்ரூம் கதவை திறந்துகொண்டு வேலைக்காரி அஞ்சலை டெட்டால் நீர் கொண்ட பிளாஸ்டிக் வாளியுடன் வெளிவந்தவள் பிரேமலதாவைப் பார்த்து தயங்கி ஒருபுறம் நின்றாள்.

    பிரேமலதா அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

    வெற்றிலை புகையிலையில் எப்போதும் சிவந்த உதடுகள். பம்மிட்ட கொண்டை. தலைமுடி பறந்ருந்தது. மிகப் பெரிய மார்பகம். சரிவர மூடப்படாமல் முன் கொசுவத்துடன் கூடிய நைலான் புடவை. அவளே நடிகை என்கிற நினைப்புக் கொண்ட வேண்டா ஒப்பனைகள்; ஸ்டைல்கள், போலி நகைகள் கருப்பு நிறத்தை மறைக்க அதீதமான பவுடர் பூச்சு. பெரிய குங்குமப் பொட்டு. மை.

    அவளைப் பார்க்கும் போதெல்லாம் பிரேமலதா எந்த மனநிலையில் இருந்தாலும் மனதில் சிரிக்காம இருந்ததில்லை. அஞ்சலையைப் பொறுத்த வரை அவள் வாங்கும் சம்பளமும் சாப்பாடும் ஒரு பொருட்டே அல்ல. ஒரு பிரபல நடிகையின் வீட்டில் இருக்கிறோம். தானே ஒரு நடிகை என்பதுதான் முக்கியம்.

    அம்மா... அஞ்சலை தேவையில்லாமல் பின்னங்கழுத்தைத் தடவிக்கொண்டு குழைந்தாள.

    உம்...உம்...

    ஏதாச்சும் பய பொடவயிருந்தா... திரும்பவும் பின்னங்கழுத்தைத் தடவி சொறிந்தாள் அஞ்சலை.

    ...ம்...

    அம்மாதான் தயவு வெக்கணும்.

    போன மாசம்தானே மூணு சாரி கொடுத்தேன்.

    ஆமாம்மா. அதெல்லாம் கிளிஞ்சுப்போச்சு.

    மை காட், ஒரு மாசத்திலேயா. உண்மையைச் சொல்லு.

    வந்து...வந்தும்மா. நீங்க தப்பா நினைக்கக் கூடாது. என் தங்கச்சி பல்லாவரத்தில இருக்குது. பத்தாவது படிக்குது. அதுக்குத் தந்துட்டேன். மீண்டும் பின்னங்க கழுத்தைச் சொறிந்தாள்.

    அண்ணியண்டே கேள் தருவா,

    அந்தம்மாவா ஐயோ. இருந்தா அவங்க வூட்டுக்கில்லே அனுப்புவாங்க. எல்லாம் பட்டாப் பார்த்து.

    அப்புறமா பார்த்துதரேன். டாக்டர் வந்துட்டாரா. அப்பாவைப் பார்த்துட்டாரா.

    மணி ஏழுதாமா ஆச்சு. ஏழரைக்கு வருவார். அப்ப நான் வரட்டுங்களா.

    அஞ்சலை நான் ஸ்விம் பண்ணப் போறேன். யாரையும் அந்தப் பக்கம் விடாதே. விமலா வந்துட்டாளா.

    இன்னிக்கு ஞாயித்துகிளமையாச்சே. செகரட்டரி அம்மா வராதுங்களே.

    ஓ...சரி நீ போ.

    அஞ்சலை வாயெல்லாம் சிவப்பு பல்லாக அறையை திறந்துகொண்டு வெளியேறினாள். வாயே திறந்து பேசாத அம்மா இவ்வளவு தன்னுடன் பேசிவிட்டாளே என்ற மகிழ்ச்சி. உடனே இதை தோட்டக்காரன் வேலப்பனிடமாவது வேலைக்காரன் பசுவப்பாவிடமாவது சொல்ல வேண்டும் என்ற துடிப்பு.

    பிரேமலதா பிளாஸ்க்கிலிருந்த காப்பியைப் பீங்கான் கோப்பையில் ஊற்றி மெல்ல ஊறிஞ்சினாள். ஏஸி அறையைத் திறந்துகொண்டு வெளியேறினாள் பால்கனியில் நின்று தந்தையைச் சென்று பார்ப்போம என நினைத்தாள்.

    நோ. அப்பா முன்னாடி சாரியிலே தவிர வேறு டிரஸ்ஸிலே போய் வழக்கமில்லியே.

    பால்கனியில் நின்றிருந்த அவள் பார்வையில் தூரத்தே தோட்டத்தின் மகிழ மரத்தடியில் அவள் கடைசித் தங்கைகள் இருவரும் அண்ணன் ராகவன் குழந்தைகளுடன் குதியாட்டம் போடுவது தெரிந்தது.

    பங்களாவிற்குச் செல்லாமல் தோட்டத்துப் பக்கம் செல்லும் மாடிப்படிகளில் இறங்கினாள் பிரேமலதா.

    நோ...நோ...ஸீஸர். காலெடு. ஸ்விம்மிங் சூட்டோட இருக்கிறப்போ என்மேலே கால வெச்சுட்டு...சே...கோ... கோ. யூ ஸில்லி. அவள் வழவழத்த தொடைகள் சிவக்க கால்களை அழுந்த வைத்திருந்த லீஸர் கால்களை எடுத்துவிட்டு அவள் மீது உராய்ந்துகொண்டு அவளுக்கு அஞ்சியதுபோல நகர்ந்து அவளுடனேயே நடந்தது.

    ஊசி முனைகளாக கதிரவன் கதிர்களில் சதுர சிமெண்ட் தடாகத்தில் ஊதா நீர் லேசான அலைகளுடன் தகதகத்தது. இருகரங்களையும் மேலே தூக்கி தொபிர் என நீருக்குள் பாய்ந்தாள் பிரேமலதா.

    லீஸர் நீர்த் தடாகத்தின் ஒருபுறம் அமர்ந்து அவள் நீந்துவதை வேடிக்கை பார்த்தது. அவள் நீந்துகையில் அதுதான் காவல். அவள் சொல்லிக்கொடுத்ததில்லை. அதுவாக பழகிக்கொண்டது.

    பூப்பந்து ஒன்று உருண்டு வர பிரேமலதாவின் கடைசித் தங்கை அனுசுயா ஓடிவந்து அதை எடுத்தாள். அதற்குள் ஸீஸர் அவளைப் பார்த்து குரைத்தது. பயத்துடன் பாவாடை தடுக்க அந்த பத்து வயது சிறுமி பந்துடன் ஒடினாள்.

    சில்லென்ற நீரில் திளைத்து நீந்திக்கொண்டிருந்த பிரேமலதா இதைப் பார்த்து மெல்ல சிரித்துக்கொண் டாள். அந்த நீண்ட தடாக நீரில் முன்னும் பின்னும் விரைவாக லாகவமாக நீந்தலானாள்.

    ஹலோ பிரேம், குட்மார்னிங். கம்பீரமான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் பிரேமலதா.

    கரையில் சுற்றிலும் நடப்பட்ட அசோக மரங்களிடையே புல்தரையில் கோட்டும் சூட்டுமாக வாயில் புகையும் பைப்புமாக கம்பீரமாக ஆண்மையுடன் நின்ற அவனைப் பார்த்து கையாட்டிச் சிரித்தாள் பிரேமலதா.

    குட்மார்னிங் சத்யன், எய்ட் ஒ கிளாக்குக்கு வரதா சொன்னிங்களே. சீக்கிரமா வந்துட்டீங்களா. நீர் சொட்டச் சொட்ட அவனருகே வந்தாள் பிரேமலதா.

    மார்வலஸ். சினிமாலே பார்க்கறதைவிட நீ நேர்ல... பிரேம்... தடுமாறினான் சத்யன்.

    நோ...இது ரூம் இல்லே. கலகலவென சிரித்தாள் பிரேமலதா. அதில் செயற்கை இழையோடியது.

    பிரேம்...

    சரி வாங்க ரூமுக்குப் போகலாம். உங்களுக்கு விஷயம் தெரியுமா சத்யன் லீஸர் நான் ஸ்விம் பன்னறப்போ உங்கள மட்டும்தான் அலோ பண்ணும். மித்தவங்கள குரைச்சி கடிச்சுடும்.

    ஒ...ஐ.ஸி. பிரேம் இந்த ஸ்விம்மிங்பூலே மூடிடச் சொல்லு. இத கட்டினா ஆகவர்றதில்ல என்கிறாங்க. நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ கேட்கலே. சத்யனின் தமிழில் மலையாள நெடி.

    அவளை ஒட்டின மாதிரி நடந்து கொண்டிருந்த பிரேமலதா அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள்.

    ச்சூ.நான் இதயெல்லாம் நம்பறநில்ல. டெய்லி என் ஸ்விம்மிங்குக்காக வெளியே போக முடியுமா. இன்னிக்கு நம்ம புரோக்கிராம் எங்கே.

    என் சாந்தோம் பங்களாக்கு. அப்புறம் கோல்டன் பீச். இன்னிக்கு ஷாட்டிங் இருக்கா.

    நோ. ஸண்டே நான் கால்ஷீட் தர மாட்டேனே.

    அவள் விடுவிடுயென படிகளில் ஏற அவளுடன் அவனும் ஏறினான்.

    மகிழ மரத்தடியில் நின்று அனுசுயாவை அதட்டிக் கொண்டிருந்த பிரேமலதாவின் அண்ணி சகுந்தலா பிரேமலதாவையும் சத்யனையும் பார்த்துவிட்டு தோள் பட்டையில் முகவாயை இடித்துக்கொண்டு பங்களாக்குள்ளே விரைந்தாள். அனுசுயா சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில் ஸிகிப்பிங் ஆடலானாள்.

    மிகப்பெரிய ஹால். ஹாலை ஒட்டின இடத்தில் கலைப் பொருட்கள் கண்ணாடி ஷோபாவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதில் பிரேமலதா வாங்கி குவித்த பரிசுப் பொருட்கள், சென்ற வருடம் அவள் சிறந்த நடிகைக்காக வாங்கிய ஜனாதிபதி பரிசு. நடன விருதுகள்.

    அவளுடைய பெரிய படம். ஆயில் பெயிண்ட்டிங் சித்திரம்.

    ஹாலை ஒட்டினாற்போல ரிஸப்பஷன் அறை ஒலி செய்யப்பட்டது. மாடியிலிருந்து இறங்கும் சலவைக்கல் மாடிப்படிகள். தரையெங்கும் விரிக்கப்பட்ட காஷ்மீர் கம்பளம், சுவரில் பதிக்கப்பட்ட ஆளுயரக் கண்ணாடிகள். குஷன் சோபாக்கள்.

    விர்ரென உள்ளே நுழைந்தாள் சகுந்தலா, பூஜை யறையிலிருந்து சர்க்கரைப் பொங்கல், மல்லிகை, ஊதுவத்தி, சாம்பிராணி என எல்லாம் கலந்த மணமாக வந்து கொண்டிருந்தது.

    உள்ளே பிரேமலதாவின் அன்னை வத்தலான தேகத்துடன் தலைக்கு நீராடி முடிச்சிட்ட கூந்தலுடன் கை கூப்பி வணங்கிக்கொண்டிருந்தாள்.

    அம்மா... அம்மா... பூஜைய முடிச்சுட்டேளா. தெரியுமா. உங்க பெரிய மாப்பிள்ளை ஆத்துக்கு வந்துட்டார். தோளில் முகவாயை இடித்துக்கொண்டே குனிந்து குங்குமமும் திருநீரும் சுவாமியிடருந்து எடுத்துக் கொண்டாள் சகுந்தலா.

    யாரைச் சொல்ற சத்யனையா. ஏண்டி இப்படி காலம்பற பேச ஆரம்பிச்சுட்டே. மீனா என்ன அவனைக் கல்யாணமா பண்ணின்டா. கையில் ஊற்றிய தீர்த்தத்தை வாயில் ஊற்றிக்கொண்டு பேசினாள் ராஜம். இருமிவிட்டு நெஞ்சை நீவிட்டுக் கொண்டாள்.

    பண்ணிக்கப் போறா. அதான் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் அடிபடறதே. அப்புறம் என்ன. எல்லாம் தலை எழுத்து. இந்த ஆத்துலே கொணந்து என்னைத் தள்ளிப்பிட்டார் எங்க தோப்பனார். வைர மூக்குத்தியும் வைரக் கம்மலும் டாலடிக்க வெளியே போய் மறைந்தாள்.

    மீனா எவனை செஞ்சுண்டா இவாளுக்கெல்லாம் என்ன என்னையானாக் கரிச்சு கொட்டரா. கடைசிக் காலத்திலே சிவசிவான்னு இருக்க முடியறதா...இப்பப் போய் இந்த மீனாட்சிக்குப் புத்தி போகறதே... தலையில் அடித்துக்கொண்டாள் ராஜம்,

    பாதி நரைத்தும் நரைக்காத மயிர்க்கால்களில் மல்லிகைகையை முடிந்தபடி வெளிவந்த ராஜம் அடுத்த அறையில் இருந்து வீணையின் நாதம் தவழ்ந்து வருவதைக் கேட்டு எட்டிப் பார்த்தாள்.

    ரத்தினக் கம்பளத்தில் அமர்ந்து வீணையும் கையுமாக ஒரு பதினேழு வயதுப் பெண் வாசித்துக்கொண்டிருந்தாள். நல்ல களையான முகம். தந்த நிறம். ரத்தினக் கம்பளத்தில் உறவாடும் முடிக் குழல்,

    ஏண்டி கற்பகம். ஆரம்பிச்சுட்டியா. கமலா, சரசு, சுலோ எல்லாம் வாய் பாட்டு கத்துண்டுடனுமுனு ஒத்த கால்லே நின்னா, உங்க அக்கா மீனா பிடிவாதமா அவாளுக்கெல்லாம் கல்யாணத்ததைப் பண்ணி புக்ககத்துக்கு அனுப்பி வச்சுட்டா. நோக்கு என்னடான்னா வீணை சாதகம் பண்ண ஏற்பாடு செஞ்சிருக்கா. இந்த மீனாவை என்னாலே... இருமல் வர நிறுத்தினாள் ராஜம்.

    ம்..ம்மா...உ.ம்... சையால் ஏதோ சொன்னாள் கற்பகம்.

    அப்பாவைப்போய் பார்த்தியான்னு கேட்கறியா. இன்னும் இல்லேடி, உம்...அந்த பகவான் நோக்கு வாயை வெச்சு தொலைச்சிருக்கப் படாதோ. எல்லாம் நாங்க பண்ணின பாவம். இப்படி ஊமைக்கோட்டானா வந்து பொறந்து உசிரை வாங்கிண்டிருக்கே. மீனாக்கு முன்னாடி ரெண்டு பொறந்து போனதே அப்படி நீயும் போயிருந்தா ஏதோ அப்போதைக்கு அழுதுட்டு மறந்திருப்பேன். தலையில் அடித்துக்கொண்டாள் ராஜம்,

    கற்பகம் வீணையை நகர்த்திவிட்டு பனித்த கண்களைத் தாவணியில் துடைத்தாள்.

    சொன்னா மட்டும் வந்துடறது. சரி சரி காலம்பற கண்ண கசக்காதே பேசிக்கொண்டே ராஜம் பின்பக்கம் சென்றாள். பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1