Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollimalai Kiss
Kollimalai Kiss
Kollimalai Kiss
Ebook137 pages53 minutes

Kollimalai Kiss

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580114201917
Kollimalai Kiss

Read more from Hamsa Dhanagopal

Related to Kollimalai Kiss

Related ebooks

Reviews for Kollimalai Kiss

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollimalai Kiss - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கொல்லிமலை கிஸ்

    Kollimalai Kiss

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    கொல்லிமலை கிஸ்

    1

    புல்லட் பெருமூச்சுக்களைப் புகையாக்கி ஊதியபடியே மேலே மேலே கொண்டை ஊசி வளைவுகளைப் பின்னுக்குத் துரத்திக் கொண்டிருக்கிறது.

    வெளிச்சம் இருக்கிறப்பவே நாம பங்களாக்குப் போயிடணும், மனோ. அப்பத்தான் டேடிய உங்களால மீட் பண்ண முடியும்.

    "டேடியா? டாடின்னு சொல்லு! சரி, உங்கப்பாக்கு ஏதாச்சும் மாலைக் கண்ணா?’’

    ச்சீய் மனோ. நீ மீட் பண்ணப் போறது ஒரு காலத்து சமஸ்தானத்து ராஜ பரம்பரையை. அப்பா காதில விழுந்தா அவர் துப்பாக்கியில ஒரு குண்டு வேஸ்ட்டாகும்.

    அப்படியே உனக்கு இந்த மனோவும் அவுட் அப்புறம் புதுசா நீ.

    கொல்லி மலையிலிருந்து நழுவி வரும் அண்ணா போக்குவரத்து பஸ் இந்த இளம் ஜோடிகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி நகர்ந்து போகிறது. அதிலிருந்து சின்னக் குழந்தை மூக்கில் அருவி கொட்ட இவர்களுக்கு டாட்டா காட்டி நழுவுகிறது.

    சைலன்ஸர் இலலாமல் இடியாய்ப் பறந்து வரும் ஒரு காயலான்கடை மோட்டார் பைக் இவர்களுக்கு அருகே வேகமிழந்து பின் வேகமெடுக்கிறது. அதில் கரிய பெரிய உருவில் கம்பளியும் குல்லாயுமாய் முரட்டு மனிதன்.

    ஒருபுறம் கிடு கிடு பள்ளத்தாக்கு. மறுபுறம் மலைச் சரிவுகளில் தலையசைத்து வரவேற்கும் புஷ்பக் குவியல்கள். பச்சை விரிப்பில் பின்னிய பூக்களாக. நெடிதுயர்ந்த மரங்கள். அதன் கொண்டையில் குல்லாய் போட்ட மேகப் பொதிகள்.

    ஏய்... ய்... யாரது. இப்படி உன்னைப் பார்த்துட்டுப் போறான்?

    எங்க டாடி பாடி கார்ட்ஸ்ல ஒருத்தன்.

    மலையின் செங்குத்தான வளைவப் பாதையில் புல்லட் பறக்க அவனை அணைத்துக் கொள்கிறாள் நயனதாரா கெட்டியாக.

    நயன். முதலில் கைய எடு, எல்லாம் உங்க டேடி சம்மதம் குடுத்தப்புறம் தொடுவியாம்.

    எங்க டேடி நான் எதைக் கேட்டாலும் வாங்கிக் குடுப்பார். நீங்க என்ன பெரிய...

    அப்ப என்னையும் கடைச் சரக்கு என நினைச்சு எடைப் போட்டிருக்கே. உம். லவ் பண்ணலாம் பொண்ணுங்களை. ஆனா நம்ம ஸ்டேட்டஸுக்குச் சமமானவங்களை மட்டுமே.

    அதுயென்ன பன்மை. ஐயா இருக்கிற மூஞ்சிக்கு நான் ஒருத்தி போதாதாக்கும். நயனதாரா அவன் விலாவில் இடிக்க வண்டி தடம் மாறி இஅட, எதிரில் வரும் அரசாங்க ஜீப் டிரைவர் இவர்களை அர்ச்சித்தபடி போகிறான்.

    சேந்தமங்கலத்துக்கு கானப்ப நாயக்கன்பட்டிக்கும் இடையில் மேற்கு நோக்கிப் பயணப்பட்டபோதும் காற்றில் இந்த சில்லிப்பு இல்லை. மலை மீது ஏற ஏற மிகமிக மென்மையாய் உடலை வருடியபடி இன்னும் மேலே போக அதே மென்மை வன்மை வருடலாகக் குளிரில் லேசாய் நடுங்கினான் மனோ.

    இதுதான் பஸ் ஸ்டாண்டு. காலையில் இங்கே பார்த்தா கொய்யா மலையும் அன்னாசி மலையுமா கொட்டிக் கிடக்கும்.

    அவள் காட்டின மண் தரையில் கூரையும் எந்த ஹோட்டலும் இல்லை. ஒரு தகரக் கூரை போட்ட கடை மாத்திரமே இந்த வெளிச்சத்திலேயே மின்மினியாக ஒரு சிறு நாற்பது வாட்ஸ் பல்பை எரிய விடுகிறது. இந்த வெளிச்சச் சந்தையில் அதன் விற்பனை எடுபட வயில்லை.

    நிறம் மங்கின ஒரு பக்கம் ஒடுக்கல் விழுந்த ஆனந்த கலர் மடாடார் வேன் ‘மாதேஸ்வரா டிராவல்ஸ்’ என்கிற போர்டுடன் மலைவாசிகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்தச் சின்ன வண்டிக்குள் இத்தனை பேர்களும் அடைய முடியுமா என் மலைக்கிறான் மனோ.

    நயனதாரா அம்மா மாளிகைக்கு இன்னும் எத்தனை தூரம்?

    ஊம். வாங்க நான் சொல்றேன். டேடிக்கு நான் போன்ல சொல்லியிருக்கணும். நீங்க வேண்டாமுன்னதாலே நான் பேசலை. இப்படி பைக்கில நான் வரது டேடிக்குப் பிடிக்காது.

    சொல்லிட்டுப் போனா த்ரில் இருக்காது நயன்.

    மனோ... மனோ இந்தப் பாதையிலே கவனமா ஓட்டுங்க. வெறும் மண் தரை சரிச்சிடும். இங்கேயெல்லாம் ஜீப்தான் லாயக்கு.

    இந்த இளவரசி கூட வரப்ப இந்த புஷ்பக விமானம் தரையிலா பறக்கும்?"

    இன்னிக்கு உயிரோட போனப்புறம்தான் எங்க மம்மிக்கு நான் செல்லப் பொண்ணு. அதுவரைக்கும் உத்திரவாதமில்லை.

    நயனதாரா சொல்லியது போல் பாதை ஏற்ற இறக்கங்களுடன் குண்டும் குழியுமாய் இருக்கிறது. போதாத குறைக்கு நேற்று பெய்த மழை, நீர்க் குட்டையாய்த் தேங்கி நடுநடுவே இவர்கள் ஆடைகளுக்குச் சந்தனமாய்ச் சேற்றைத் தெளித்து அழகுப் பார்க்கிறது.

    பாதை இப்படி ஓடினாலும் பாதையின் இருபுறமும் மலைச் சரிவுகளில் அன்னாசி தோட்டங்களும், நெடிதுயர்ந்த பலா மரங்களும், அதில் தாய் குரங்கை அணைத்திருக்கும் குட்டிகளாய் ஒட்டி இருக்கும் பலாப் பழங்களும் யூக்லிப்டஸ் மரங்களும் வான மேகங்களைக் குஷாலாய்த் தொட்டுத் தலையாட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றன.

    இருளும் ஒளியும் கைகோத்து ஓடி விளையாடினாலும் ஒளியின் ஆட்டம் உற்சாகமாய் இருக்க, மனோரஞ்சன் புல்லட் பறப்பதில் சிரமம் இருக்கவில்லை.

    ஆங்காங்கே சில தகர வீடுகளும், சீமை ஓடு போட்ட வீடுகளும், பலயிடங்களில் பனை ஒலைகளோ வைக்கோலோ வேய்ந்த குடிசைகளும் முளைத்திருக்கின்றன. சில குடிசைகளில் இப்போதே மின்மினியாய்ச் சிம்னி விளக்குகள் கண் சிமிட்டுகின்றன.

    கனத்த கம்பளிகளைப் போர்த்தியபடி மலைவாசிகள் ஆடுகளை ஓட்டிப் போகையில் இவர்கள் பார்வையில் பட்டு மறைகிறார்கள்.

    வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்த பாதை சமவெளியைச் சமீபித்தபோது, மிகப் பெரிய இரும்பு முள் வேலி போட்ட தோட்டத்தின் நடுவே இரும்பு கேட் போட்டு அதனருகே மரக் கூண்டிற்குள் ஒண்டியிருக்கும் நடுத்தர வயது மனிதன் கட்டுமஸ்தான உடலைக் கம்பளிக்குள் மறைத்தபடி சுருட்டு புகைய பெரிய மீசை இவர்களைப் பார்த்துத் துடிக்க இவளைப் பார்த்து ஒரு கும்பிடு போடுகிறான்.

    அம்மா வரணும்

    வரது இருக்கட்டும். பர்ஸ்ட், கேட்டைத் திற.

    உங்களுக்குத் திறந்துடறேன்மா. ஆனா எசமானைக் கேக்காம இவரை எப்படிம்மா உள்ளே விட முடியும்?

    கையில் பெரிய வேட்டைத் துப்பாக்கியுடன் அந்த மனிதன் இடுப்பிலிருந்து சாவியை எடுத்து கேட்டருகே போகிறான்.

    என் பிரண்ட். என்னோட படிக்கிறவர். அப்பாவைப் பார்க்கத்தான் வந்திருக்கார். அப்பாகிட்டே நேத்து சொல்லி பர்மிஷன் வாங்கிட்டேன்.

    எசமான் என்கிட்ட சொல்லலியேம்மா.

    மறந்திருப்பார். இப்ப கேட்டைத் திறக்கப் போறியா இல்லியா. இல்ல அப்பா கிட்ட சாட்டை அடிக்கு ரெடியா இருக்கப் போறியா?

    பளிங்குச் சிலை போன்ற நயனதாராவின் முகம் கோபத்தால் சிவந்திருப்பதையும் அவள் அழகிய விழிகள் கனல் கக்குவதையும் பார்த்து மனோ வியக்கிறான். குறும்பும் குதுரகலமும் நிறைந்த நயனதாரா வேறு இவள் வேறு.

    கேட் கிறீச்சிட்டு ஆட்சேபணையை எழுப்பியபடி திறந்து கொள்ள, புல்லட் பாதை பிடித்து ஓடுகிறது. கேட் மீண்டும் மூடி மெளனம் காத்துத் தவமிருக்கிறது.

    பலா மரங்களின் நடு நடுவே ஒரு அடி ஒன்றரை அடி வளர்ந்திருக்கும் சிறு செடிகள் லேசான நெடியைப் பரப்புகின்றன. மனோ சுவாசத்தை நன்கு இழுத்து விடுகிறான். மூச்சுக் காற்று மூளையைப் போய்த் தாக்குவதைப் போலிருக்கிறது.

    "இங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1