Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kamban Tamizhum Kanini Tamizhum
Kamban Tamizhum Kanini Tamizhum
Kamban Tamizhum Kanini Tamizhum
Ebook305 pages2 hours

Kamban Tamizhum Kanini Tamizhum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Poet. Naa.Muthunilavan whose real name is Muthu Baskaran is a retired Vice Principal & Senior Tamil Teacher with 35 years of experience in TN Govt.School, Pudukottai.

As an orator, he has attended more than 5000 meetings across all over Tamil Nadu. He has also visited various countries like Singapore, Malaysia, Srilanka, UAE, Muscat, Quatar, Kuwait, Jambia, and Seachells. He is known to Tamil Diaspora through various TV Programs as Dindukkal I.Leoni’s Team-Leader  more than 20 years, and separate Interviews in channels like Pothikai, Kalaingnar, Vijay, Sun, Polymer, Raj, and Local channels also. 

He has written 6 books across various genres and many of his books won various awards.

He has also written various articles, in magazines like Dinamani, Semmalar, Kanaiyazhi including Tamil web e-zines too. And in his own Tamil Blog - http://valarumkavithai.blogspot.com/  His Poems and Stories were inserted in PG, UG class Text books in Madurai and Tirunelveli universities.

One of His Literacy Prog. ‘Cycle song’  is translated in various Indian Languages. He has also many prestigious awards like ‘Barathi Dhasan’ award, ‘Best Poem Collection Award’ Kalki (weekly) Short story award, Tirupur Tamil sangam Award and so on.

He is very active in ‘Tamil Nadu Progressive Writers’ Assn’ from the beginning, and ‘Kanini Tamil Sangam’ conducted various workshops  on Tamil writings.

Currently living in Pudukkottai with wife and children.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115901980
Kamban Tamizhum Kanini Tamizhum

Read more from Naa. Muthunilavan

Related to Kamban Tamizhum Kanini Tamizhum

Related ebooks

Reviews for Kamban Tamizhum Kanini Tamizhum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kamban Tamizhum Kanini Tamizhum - Naa. Muthunilavan

    http://www.pustaka.co.in

    கம்பன் தமிழும் கணினி தமிழும்

    Kamban Tamizhum Kanini Tamizhum

    Author:

    நா. முத்துநிலவன்

    Naa. Muthunilavan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/naa-muthunilavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முகவுரை

    -ச.தமிழ்ச்செல்வன்

    எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்

    கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத் தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும். இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது.

    ஒரு பெண்னை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும் அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்களிகளின் கவிதை வரிகளில் எங்கனம் தெறித்து வருகின்றன என்பதை இன்றைய தமிழில் பெண் கவிகள் என்கிற கட்டுரையில் தொகுக்கிறார் தன்னுடைய கருத்தை துறுத்தலாக முன் வைக்காமல் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தன்னுடைய பார்வையை இடையியையே வைத்துச்செல்கிறார். ஆணாய்ப்பிறப்பது இயற்கை தரும் லாட்டரிப் பரிசு என்கிற நிர்மலா சுரேஷ் வரிகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து. அதுவும் மேல் சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசு என்பதை அவர் சொல்லவில்லை, நாமாகப் புரிந்து கொள்ளவேண்டியதுதான் என்று தன் கருத்தைப் பதிவு செய்யும் விதம் ரசமாக இருக்கிறது.

    புதுக்கவிதையின் வரவு செலவுக்கணக்கைப் பார்க்கும் அடுத்த கட்டுரை உண்மையிலேயே என்னைப் பழைய காலத்துக்கு இழுத்துச்சென்றது. புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அன்று நடந்த விவாதங்களைத் தொகுத்துத்தரும் இக்கட்டுரை வல்லிக்கண்ணன் இல்லையே என்கிற குறையைத் தீர்க்கிறது. அன்றைய சில கவிதைத் திருட்டுகளையும்கூட இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. நமது முற்போக்குக் கவிஞர்கள் குறித்து முத்துநிலவன் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை. அவர்களின் உளக்கமும் நோக்கமும் பாராட்டும்படி இருப்பதுபோல் கவிதைகள் இன்னும் வந்துசேரவில்லை என்பது என் கருத்தாக இருக்கிறது.

    சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூக வரலாறும் குறித்துப் பேகம் கட்டுரை ஒர் அரிய வகைக்கட்டுரை. சங்கப்பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும இல்லாத வாசகர்களுக்கு எளிமையாக ஓர் அறிமுகத்தைச் செய்கிற கட்டுரை இது. சங்க காலத்து மக்கள் நிலை என்னவாக இருந்தது என்பதைப் பேசும் கட்டுரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. மேலாண்மை பொன்னுச்சாமியின் கொலை சிறுகதையை முன் வைத்து அவர் நடத்தும் கருத்துப்போர். ஒரு சக படைப்பாளிக்குக் கேடயமாக நிற்கும் ஆவேசமான வாதங்களின் தொகுப்பாக அமைகிறது. அகல ஆசையில் ஆழத்துக்கு முக்கியத்துவம் தராத அவரின் பிற்காலக் கதைகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துச் செல்கிறது இக்கட்டுரை.

    இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை க.நா.சுவை தெனாலிராமனா படிப்பாளியா என்று கேள்விகேட்கும் கட்டுரை. க.நா.க. பிறந்த நூற்றாண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட பின்னணியில் இக்கட்டுரை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மொழிபெயர்ப்பில் தமிழுக்கு க.நா.சு அளித்துள்ள கொனடகளையும அவரது சோதனைப் படைப்பு முயற்சிகளையும அங்கீகரிப்பதில் துவங்கி ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான அவரது கருத்துவரை எல்லாவற்றையும் பதிவு செய்ததோடு இக்கட்டுரை சுபமங்களாவில் வந்தபோது எழுந்த எதிரும்புதிருமான எதிர்வினைகளையும் நேர்மையுடன் பிற்சேர்க்கையாக இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.

    இதே தரத்துடன் வந்துள்ள இன்னொரு கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது. தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தனை அவருக்கு உரிய மரியாதை அளித்து பிந்திய ஜெயகாந்தனின் சறுக்கல்களைப் பட்டியலிடுகிறார். முனியம்மாவும் ராசாத்தியும் அம்மாசியுமாக இருந்த அவரது நாயகநாயகிகள், கங்காவும் சாரதா மாமியும் கெளதம சித்தார்த்தனுமாக மாறிப்போன கதையை ஆவணப்படுத்தியுள்ளார். விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயகாந்தன் நம்மை ஆகர்ஷிக்கிறார் இன்றும் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.

    கம்பனையும் கார்ல் மார்க்சையும் எதிர்ப்பில் விளைந்த கனிகள் என்கிற புள்ளியில் வைத்து ஒப்பிட்டுப்பேசும் கட்டுரை புதிய அணுகுமுறையோடு இருப்பதோடு அன்றைய நாட்களில் கம்பனை உயர்த்திப்பிடித்த ஜீவாவின் குரலை நினைவுபடுத்துவதாகவும் எதிரொலிப்பதாகவும் அமைந்துள்ளது.

    இன்னும் தொடர்கின்ற வலைத்தளக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விவாதப்புள்ளியை ஆழமாகத் தொட்டுச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுசிறு செய்யுள்களாகத் துவங்கிய தமிழ்க்கவிதை பெருமன்னர்கள் எழுந்தபோது விரிந்து சென்றதையும், காலத்தை மீறி எழுந்த சித்தர்களையும் தேராமன்னா என்று வெகுண்டெழுந்த பெண் குரலாகக் கண்ணகியைக் குறிப்பிடுவதும் நான்கு குறட்பாக்களில் ஆய்த எழுத்தை வள்ளுவன் ஏன் பயன்படுத்தினான் என விரிவாகப் பேசுவதும், இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு குறித்து மனம் திறந்து பேசுவதும் பாரதியின் பரிசு பெற்ற கவிதை குறித்து தேடி எடுத்து முன்வைக்கும் கருத்துக்களும் எனப்பயணிக்கும் ஒன்பது சின்னச் சின்னக் கட்டுரைகளும் காரமான கட்டுரைகள் தாம்.

    இறுதியில் இணையத்தில் புழங்க வசதியாக சில தகவல்களையும் தந்திருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.

    பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் இக்கட்டுரைகள் பரவலாக வாசிக்கவும் விவாதிக்கவும்பட வேண்டிய மிக முக்கியமான சுட்டுரைகள்,

    வாழ்த்துக்கள் தோழரே…

    அன்புடன்

    ச.தமிழ்ச்செல்வன்

    மாநிலத் தலைவர்,

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம்

    15.08.2014

    சிவகாசி

    மதிப்புரை

    –முனைவர் பா.மதிவாணன்

    நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று என் மனம் அசை போடுவதைச் சற்றேனும் பதிவு செய்யாமல் இந்த அணிந்துரையை எழுத இயலாது.

    ஒன்றன் அருமையை நெருக்கடியில் தான் உணர முடியும், இந்திய வரலாற்றில் சனநாயகத்தின் அருமையை நெருக்கடி நிலைக்காலத்தில் (Emergency 1975-1976) உணர முடிந்தது. அப்போது எனக்கு வயது பதினெட்டு. அரசியல் செய்திகளில் அடங்கா ஆர்வம் பிடர்பிடித்து உந்தியது. மறுபுறம் என் இலக்கியக் கல்விவழித் தேடலில் நா. வானமாமாலை, க.கைலாசபதி, கோ. கேசவன் முதலியோரின் ஆய்வுப் போக்கிற்கு ஆட்பட்டேன். இவற்றால் அன்றைய இடதுசாரி இயக்கம் சார்ந்தேன்.

    1980களின் தொடக்கத்தில் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தில் சேர்ந்து செயல்பட்டபோது அதில் இளைஞர்களின் ஈடுபாட்டையும் விறுவிறுப்பான செயலாற்றலையும் உளந்திறந்த தோழமையையும் ஏக்கத்தோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    புறத்தும் அகத்தும் நேர்ந்த பெருத்த மாறுதல்களால் ’தோழர் பலரும் வெவ்வேறு கிளை வழிகளில் பிரிந்தனர். சிலர் வேறு அமைப்புகளில் இணைந்தனர். சிலர் புதிய அமைப்புகளை உருவாக்கினர். சிலர் புதிய கருத்து நிலை சார்ந்தனர். சிலர் ஒதுங்கிப் போயினர் என்றாலும் அன்றைய - கட்சி வறட்டுத்தனமுடையோர் சிலர் தவிர்ந்த - தோழர் பலரிடம் இன்றும் தொடரும் நட்பின் அடையாளம் இந்த அணிந்துரை.

    ஆசிரியப் பணியைத் தொண்டாக மேற்கொள்ளுதல், சமூக அக்கறையோடு அழகியல் தயங்குன்றாக் கவிதையாக்கம் நுட்பமானவற்றையும் சுவைபட எளிமையாய் இயம்பும் பேச்சாற்றல் பாடுதற்கமைந்த குரல்வளம், எழில்மிகு ஒவியத்திறன், இயக்கம் பணிகளில் இடையறாது உழைத்தல், அரவணைப்போடு அமைப்புகளை உருவாக்கி நடத்துதல் கணிணியின் புதிய தொடர்புச் சாத்தியங்களை உள்வாங்கி உலகளாவிய நிலையில் உலவுதல் இத்தனைக்குமிடையே இன்முகம் மாறாதிருத்தல் - இவையனைத்தும் இயைந்த - அரிய - ஆளுமையாளர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்.

    அகவையால் மட்டுமன்றி வேறுபல வகைகளிலும் மூத்தவராகிய முத்துநிலவன் தம் நூலுக்கு அணிந்துரை தரும் வாய்ப்பை எனக்கு நல்கியிருப்பது அவரது அன்பின் பொருட்டேயாகும். நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.

    தமிழறிந்தோரின் வசதிகளுள் ஒன்று செவ்வியல் இலக்கியம் முதல் இடையறாமல் தொடரும் இலக்கிய வகைகள் பலவற்றைத் தமிழ் வழியாகவே துய்க்க முடிவது. இதுவே தமிழின் தலையாய சிறப்பென்பேன் நான்.

    மரபுவழித் தமிழ்க் கல்வி - ஒரு காலத்தில் - நவீன இலக்கியங்களை அலட்சியமாகப் பார்த்தது. நவீன இலக்கியப் படைப்புத் திறனாய்வுகளில் ஈடுபட்டவர்கள் மரபிலக்கியங்களைப் ’பண்டிதச் சரக்’கென்று ஒதுக்கினார்கள். மிகச் சிலர் விதி விலக்காயிருந்தனர். இவ்விதி விலக்குகளின் விரிவுக்குத் தமிழக மார்க்சியரே அடித்தளம் அமைத்தனர் என்பது வரலாற்றுண்மை. இவ்வழியில் இயங்கும் முத்துநிலவன் மோனை கருதி, 'கம்பன் தமிழும்’ எனத் தலைப்பிட்டிருந்தாலும் கபிலர் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை தோய்ந்ததம் சிந்தனைகளைக் கட்டுரையாக்கியிருக்கிறார்.

    ’காலத்தை மீறிய கவிதைகள்' எனும் கட்டுரை தமிழ்க் கவிதை உள்ளடக்க உருவ மாற்றங்களைச் சமூக மாற்றப் பின்னணியில் வைத்துச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. ’சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்’ எனும் கட்டுரை, சங்க இலக்கியங்கள் கொண்டு மார்க்சிய நோக்கில் வரலாற்றை எழுதும் வாய்ப்பைச் சான்றுகளால் புலப்படுத்துகிறது.

    திருக்குறள் முற்றிலும் காலங் கடந்த நூலில்லை என்றாலும் இன்றளவும் ஏற்றிப் போற்றப்படுவதற்கான நியாயங்களை, ’திருக்குறளில் தமிழும் இல்லை தமிழ் நாடும் இல்லை ஏன்?’ என்கிற கட்டுரை - குறள் கூறாமல் உணர்த்தியவை எனும் நோக்கு நிலையில் நின்று - விளக்குகிறது. திருக்குறளில் பாடபேதம்? எனும் கட்டுரை கல்விப்புலம் சார்ந்த விவாதக் கட்டுரை சீர்களை எழுத்தளவில் காண்பதும ஒசையளவில் உணர்வதுமாகிய வேறுபாடும் கருதப்பட வேண்டுமென்று தோன்றுகிறது.

    ’கம்பனும் கார்ல் மார்க்கம்’, ‘செம்மொழி மாநாடும் கம்பனும்’ ஆகிய கட்டுரைகளில் கம்பனை முற்போக்காளர் காண வேண்டிய கோணம் காட்டப்பட்டுள்ளது. ஜீவா, ரகுநாதன், எஸ்.ஆர்.கே. சு.விரையன்நூல்கள் இவ்வகையில் படிக்கத் தக்கன.

    தமிழில் இலக்கிய விருதுகள்/பரிசுகள் பெரிதும் விவாதத்திற்குரியனவாகவே இருந்து வந்திருக்கின்றன; வருகின்ன. அரசாதரவு பெற்ற சுவிச்சக்கரவர்த்திகள் மக்கள் மனத்தில் இடம் பெறவில்லை. கம்பனுக்கே அந்த இடம் நிலைத்தது. விவாதமற்ற சாகித்திய அகாதெமி விருது தமிழில் அரிது. பாரதிக்கு முதல் பரிசு கிட்டாமை பற்றிய ஆய்வில் பொதுவாகத் தமிழ்ச் சமூக மனப்பான்மையையும் புலப்படுத்துகிறார் முத்துநிலவன்.

    திரைப் பாடல்கள் கவிதைகளல்ல என்போரையும் திகைக்க வைத்தவர் கண்ணதாசன். படத்தின் பகுதியாகவன்றித் தனிக் கவிதைகளாகக் கண்ணதாசன் பாடல்கள் பல, தம்மைத் தக்கவைத்துக் கொண்டன. முத்துநிலவன்கண்ணதாசனின் வெகுசன ஈர்ப்பு எழுத்தாற்றலையும், அனுபவம் பதிந்த பாடல்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

    ’புதுக் கவிதை வரவும் செலவும்’ என்கிற கட்டுரையில் ஒருபுறம் புதுக்கவிதையைப் பழம் பண்டிதம் மறுதலித்ததையும் மறுபுறம் புதுப் பண்டிதம் அகமன இருட்டுக்குள் தள்ளியதையும் விமரிசிக்கும் முத்துநிலவன் புதுக் கவிதை வடிவத்தை முதலாளித்துவச் சனநாயகத்தின் விளைவாகவும் அதன் உச்சக்கட்டத்தில் சமூகச் சமத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகவும் காண்கிறார்; வரவேற்கிறார். அதே வேளையில் ‘மரபுக் கவிதை எனும் மகாநதி?’ என்கிற கட்டுரையில் மரபுக் கவிதைகளின் உயிர்ப்பையும் தொடர்ச்சியையும் அடுக்கடுக்கான சான்றுகளால் புலப்படுத்தியிருக்கிறார்.

    ‘இடக்கரடக்கல்’ தமிழுக்கு மட்டும் உரியதன்று. ஆங்கிலம் போன்ற மேலை மொழிகளிலும இம்மரபு உண்டு. இலக்கியத்தில் - குறிப்பாகக் கவிதையில் - இடக்கரடக்கற் சொற்கள் அவ்வப்படைப்பைப் பொறுத்து ஆற்றல் பெறும் அதே வேளையில் வலிந்து புகுத்தும் அதிர்ச்சிகளும் பொறுப்பற்ற அள்ளித் தெளிப்புகளும் தரமாகவே காலாவதியாகிவிடும். (இடக்கரடக்கல் அல்லாத சொற்களுக்கும் இது பொருந்தும்.)

    ஜெயபாஸ்கரன் கவிதையொன்றில் 'மயிரான்' என்ற சொல் வருவதைத் தவிர்த்து மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் என்கிற திருப்பூர் கிருஷ்ணனின் கருத்தை மறுத்துச் சான்றுகள் பல காட்டி விவாதிக்கிறார் முத்துநிலவன்.

    இன்குலாபின் ’மனுசங்கடா’ பாட்டைக் கே.ஏ. குணசேகரன் குரலில் கேட்டபோது ‘நாங்க எரியும்போது எவன் மகரப் புடுங்கப் போனீங்க' என்கிற அவலமும் ஆவேசமும் எங்களை உலுக்கின. இங்கே வேறு எந்த சொல்லும் பொருந்தாது. முத்து நிலவனும் இதனைச் சுட்டியுள்ளார். இத்தொடர்பில் மேலும் ஆர்வமுள்ளோர் பெருமாள் முருகன் ’கெட்ட வார்த்தை பேசுவோம்' எனும்நூலைப் படிக்கலாம்.

    இன்றைய தமிழில் பெண் கவிகள் என்று தலைப்பு இருந்தாலும் சங்ககால ஒளவையை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த காலகட்டத்துப் பெண் கவிகளை சுட்டிக் காட்டிய பின்பே தலைப்புக்கு வருகிறார் முத்து நிலவன்: 'பெண்கவிஞர்’ எனும் அடைமொழியின் நியாயத்தை முதலியேயே சொல்லி விடுகிறார்.

    பெரிதும் 1980 களில் எழுச்சி பெற்று இரண்டாயிரத்தையொட்டித் தொகுப்புகள் மிகுந்து வரும் பெண் கவிஞர் படைப்புகளில் அவர்தம் தனித்த அடையாளங்கள் மிளிர்வதைக் கவிதைச் சான்றுகளால் நிறுவியுள்ளார் முத்துநிலவன்.

    ‘ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும்' என்கிற கட்டுரை ஜெயகாந்தனின் மணிவிழாக் கால மதிப்பீடு, அதற்குப் பின் ஜெயகாந்தன் குறிப்பிடத்தக்க எதையும் எழுதாமையினால் அது முழுமையான மதிப்பீடாகக் கொள்ளத் தக்கது. வணிகவெகுசன இதழ் உலகில் எழுத்தாளனின் கம்பீரத்தை நிறுவியவர் ஜெயகாந்தன். வெகுசன இதழ்களால் புகழ் பெற்று, அவற்றுக்கேற்ப - தமக்கெனத் தனித் தன்மையையும் தக்க வைத்துக் கொண்டு - எழுதிய ஜெயகாந்தனின் சாதனைகளையும் சமரசங்களையும் சீர்தூக்கிக் காட்டுகிறார் முத்துநிலவன்.

    இக்கட்டுரையின் உள்ளடக்கச் சிறப்பு ஒருபுறமிருக்க, ஜெயகாந்தன் பாத்திரங்கள் தமக்குள் உரையாடுவது போல் தொடங்கி, இடையில் தாம்புகுந்து பேசி, நிறைவாக அப்பாத்திரங்களின் உரையாடலோடு முடிக்கும் உத்தி சுவையும் பொருத்தமும் புதுமையம் மிக்கது.

    தமிழிலக்கிய விமர்சன வரலாற்றில் சு.நா.கவுக்குத் தவிர்க்க முடியாத தனியிடமுண்டெனினும் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். தம் பரந்த படிப்பால் பயமுறுத்தி, பட்டியல்களையே - அவ்வப்போது மாற்றி - விமர்சனமெனக் காட்டியவர் க.நா.சு என்கிற முத்துநிலவனின் மதிப்பீடு உணர்ச்சி வயப்படாதவர்கள் கணக்கில் கொள்ள வேண்டியதாகும. க.நா.சு. கருத்துநிலை எதனையும் சாராத தூய இலக்கிய வாதியுமல்ல என்பதைச் க.நா.வின் எழுத்திலிருந்தே காட்டுகிறார் முத்துநிலவன். இக்கட்டுரை குறித்து ‘சுபமங்களா’வில் வந்த ஏற்பு எதிர்ப்புகளையும் தொகுத்துத் தந்திருப்பது நாகரிகம் மட்டுமன்று: சனநாயக முறையுமாகும்.

    தமிழ்ச் சிறுகதைகள் வகைமைவளம் (Variants) மிக்கவை. சில கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எதிரும் புதிருமான விமர்சகர்களாலும் ஏற்கப்பட்ட உண்மை. இந்த வரலாற்றில் முற்போக்கான நடப்பியக் கதைகளால் தமக்கென ஓரிடம் பெற்றிருப்பவர் மேலாண்மை பொன்னுசாமி என்கிறார் முத்துநிலவன். என்றாலும் - குழு மனப்பான்மை கடந்து - விமர்சனமாகக் குறை சுட்டவும் அவர் தயங்கவில்லை.

    உள்ளடக்கத்தால் மட்டுமன்றி உணர்த்து முறையாலும் இக்கட்டுரைகள் வாசகனை இன்முகங் காட்டி அழைத்துச் செல்கின்றன. ஜெயகாந்தன் மதிப்பீட்டுக் கட்டுரை உத்தி பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன்.

    ‘அறிவியலின் படி வேண்டுமானால் ஆலமரம்தான் விழுதுவிடும்’ என்று கூறலாம். ஆனால் தமிழ் இலக்கியவுலகில் ’அரச மரம்’ தான் ஏராளமான விழுதுகளோடும் விதைகளோடும் விரிவடைந்து நிற்கிறது' என்று ஒரு கட்டுரை தொடங்குகிறது. எப்படி…? படித்துப் பாருங்கள்.

    ’கம்பனை மட்டுமல்ல ஆண்டாளையும் ஒவியர் உசேனையும் நாடு கடத்துவதும் அல்லது ஏடு கொளுத்துவதும் ஒன்றுதானே' எனும் வாக்கியத்தில் இயல்பாக நடைபோடுகிறது எதுகை

    இன்னும் பல இடங்களைக் காட்டலாம்.

    ஆய்வாழமும் நுட்பமும் மிக்கவற்றை வெகு மக்களிடம் அநாயாசமாகக் கொண்டு செல்லும் எழுத்தாற்றல் கைவரப் பெற்றவர் கவிஞர் முத்துநிலவன் என்பதற்கு இக்கட்டுரைகள் சான்று பகர்கின்றன. அதே வேளையில் அடுத்த கட்டத்திற்கு வாசகனை உந்தித்தள்ளவும் வேண்டும் இந்தத் தெளிவும் இவரிடம் இருக்கிறது என்பது ‘சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்’ எனும் கட்டுரையின் இறுதியில் புலனாகின்றது.

    மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்பவர்கள் - தமிழிலக்கிய ஆராய்ச்சியளவில், எனக்கு எட்டியவரை - மார்க்சிய அணுகுமுறை தந்த தெளிவைத்தாண்டிப் பெரிய அளவில் புதிதாக எதையும் செய்துவிடவில்லை. கவிஞர் முத்துநிலவன் அவர்களிடம் தமிழ் உலகம் மேலும் எதிர்பார்க்கிறது.

    நட்பார்ந்த தோழமையுடன்

    பா.மதிவாணன்

    தமிழ்த்துறைத் தலைவர்,

    பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

    திருச்சிராப்பள்ளி - 620024.

    செல்பேசி , 943846945

    அணிந்துரை

    - செந்தலை ந. கவுதமன்

    எடை போட்டதை எடை போடுவோம்!

    எழுத்தைப் பார்த்த பலருக்கு, எழுதியவரைப் பார்க்கும் வாய்ப்பு முன்பு இருந்ததில்லை.

    ஊடகங்களின் வளர்ச்சியால் இன்று எழுத்தையும் பார்க்க முடிகிறது. எழுதியவரையும் பார்க்க முடிகிறது.

    'கம்பன் தமிழும் கணினித் தமிழும்' நூலை வழங்கியுள்ள பாவலர் நா.முத்துநிலவன். இன்னும் கூடுதலான வாய்ப்பைப் பெற்றவர். அச்சு ஊடகங்களில் அவர் எழுத்தைப் பார்த்தவர்கள், மின்னணு ஒளடகங்களில் அவர் முகத்தையும் பார்த்திருப்பார்கள்.

    தொலைக்காட்சிப் பட்டிமன்ற ஒளிபரப்புகளும் கணினி வலைப்பூக்களும் சமூக ஊடகங்களும் அவர் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியபடி உள்ளன.

    அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் எனும் இருவழியிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல்

    இந்தக் கட்டுரைகளை முன்னரே படித்தவர்களும் இருப்பார்கள். முன்பு பூக்களாக இருந்தவை இப்போது மாலையாக்கப் பட்டுள்ளன. பூக்களைவிட மாலைக்கு மதிப்பு மிகுதி.

    சங்க இலக்கியம் முதல் இக்காலப் பெண்பாவலர்கள் வரையிலான மூவாயிரம் ஆண்டு காலத் தமிழிலக்கியப் பெரும்பரப்பை தூக்கித் தூசகற்றிக் காட்ட முயல்கிறது இந்த நூல் தேற்றிய விளைச்சலில் தெறித்து விழுந்தவை மடியைக் கனமாக்குகின்றன.

    மடியில் விழுந்தவை. மறுவிளைச்சலை உருவாக்கும விதைகளாகும் விரியம் உள்ளவை.

    பெண்ணுக்குத் தலைமை தரும் பெண்ணுரிமை ஆர்வலர் நா.முத்துநிலவன், முதற் கட்டுரையைப் பெண் சார்ந்ததாகவே

    Enjoying the preview?
    Page 1 of 1