Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Ammachiyum Magizham Pookkalum
En Ammachiyum Magizham Pookkalum
En Ammachiyum Magizham Pookkalum
Ebook107 pages38 minutes

En Ammachiyum Magizham Pookkalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பான ‘என்றாவது ஒரு நாள்’ என்னும் என் சிறுகதைத் தொகுப்பு அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் பொழுதுபோக்குகள்.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580117602018
En Ammachiyum Magizham Pookkalum

Read more from Geetha Mathivanan

Related to En Ammachiyum Magizham Pookkalum

Related ebooks

Reviews for En Ammachiyum Magizham Pookkalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Ammachiyum Magizham Pookkalum - Geetha Mathivanan

    http://www.pustaka.co.in

    என் அம்மாச்சியும் மகிழம் பூக்களும்

    En Ammachiyum Magizham Pookkalum

    Author:

    கீதா மதிவாணன்

    Geetha Mathivanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-mathivanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

    2. குருகாணிக்கை

    3. உனக்கென இருப்பேன்

    4. நிறக்குருடு

    5. நேர்த்திக்கடன்

    6. அப்பா வருவார்

    7. அறுந்த செருப்பு

    8. பிரம்படி

    9. அவளா காரணம்?

    10. ஒன்றும் அறியாத பெண்ணோ....

    1. என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

    இந்தக் கோடை விடுமுறைக்குப் புதிய இடம் எங்காவது செல்ல வேண்டுமென்ற குழந்தைகளின் நச்சரிப்பையும் ஆர்வத்தையும் பார்த்து யோசித்ததில், வெகு நாட்களாய் என் மாமனும், மாமியும் என்னை வரச்சொல்லி அழைத்துக் கொண்டிருந்த, என் அம்மாச்சி வாழ்ந்த கிராமத்திற்குச் செல்வதென்று முடிவாயிற்று.

    சிறுபிள்ளைப் பிராயத்தில் வருடந்தோறும் எனது கோடை விடுமுறையைக் கழித்த, அந்தக் கிராமத்தை நினைக்கும்போதே ஆங்காங்கே மின்னுகின்றன, சில ஞாபக மின்னல்கள்.

    நினைவு தெரிந்த நாளாய் நானறிந்த ஓர் உற்சாக ஊற்று, என் அம்மாச்சி! அம்மாச்சிக்குத் திருமணமாகும்போது, அவருக்கு வயது பதினைந்தாம்; நான் அறிந்திராத தாத்தாவோ, அவரைவிட பதினைந்து வயது மூத்தவராம்! இல்லற வாழ்வின் இலக்கணமாய், ஈன்ற பிள்ளைகள் பதினால்வர் ஆயினும், வாழ்க்கைப் போராட்டத்தில் வென்றவர் எழுவரே! அவர்களில் பெண் வயிற்றுப் பேத்தி நான் ஒருத்தியே என்பதில் மிகப் பெருமை அவருக்கு.

    என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச் சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும் சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும் அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே, கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில் தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர்.

    தளர்ந்த வயதிலும், தளராத நையாண்டியும், நயமான சாதுர்யப் பேச்சும் எவர்க்கும் எளிதில் கைவராத கலை, அது என் அம்மாச்சிக்கு இறுதி வரை இருந்தது என்பதே ஒரு மலைப்பான உண்மை!

    அவரோடு நான் கழித்த தருணங்கள் அத்தனையும் என் மனதில் பசுமரத்தாணிகள். என் இரண்டங்குலக் கூந்தலோடு, இடுமயிர் வைத்துப் பின்னலிட்டு, இறுதியில் குஞ்சலங்கட்டி அழகு பார்த்தவர் என் அம்மாச்சி. குஞ்சலம் ஆட வேண்டுமென்று, நான் ஆட்டி, ஆட்டி நடந்த நடையில், கொத்துக் கதம்பத்தோடு இடுமயிர்ப் பின்னலும் எங்கோ அவிழ்ந்து விழ, அதைக் கூட உணராமல் நான் விளையாடிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் இதழ்க் கோடியில் எழுகிறது, ஒரு புன்னகை!

    யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எனக்குப் பூத்தைத்து விட்ட அழகென்ன! பூ எதுவும் கிடைக்காத பொழுதுகளில், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பொரிய மகிழமரத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் பூக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, மண் துடைத்து ஊசி நூல் கொண்டு சரம் சரமாய்க் கோத்து, எனக்குச் சூட்டி அழகு பார்த்த அன்பென்ன!

    அம்மாச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ஒளவையார்தான் என் ஞாபகத்துக்கு வருவார். எனக்குத் தெரிந்து, ஒளவையாராய் என் மனதில் உருவகப்படுத்தியிருந்த கே.பி. சுந்தராம்பாளைத் தோற்றத்தில் சற்று ஒத்திருந்தார். அம்மாச்சியின் உடற்கட்டும், புடவைக்கட்டும், திருநீற்றுப்பூச்சும், அவரையே ஒத்திருக்க, பஞ்சு மிட்டாய் போன்ற நரைத்த, அடர்த்தியான, நெளிமயிரில் மட்டும் வித்தியாசப்படுவார்.

    அவ்வளவு பரந்த தலைமயிரைக் கொண்டையிட்டு, கொண்டையூசி கொண்டு கட்டுக்குள் அவர் கொண்டு வருவதைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு, இறுக்கிப் பிடித்தால், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் பஞ்சு மிட்டாயின் நினைவுதான் வரும். அவரிடம் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், அவர் வெற்றிலை போடும் அழகுதான். அதனினும் அழகு, அந்த வெற்றிலை வாசத்தோடு என் கன்னத்தில் அவரிடும் சில முத்தங்கள்! ஒவ்வொரு முறையும் அவர் முத்தமிட்ட பின்னால் மறைவாகச் சென்று வெற்றிலை எச்சில் பட்ட கன்னங்களைத் துடைத்துக் கொள்வேன்.

    வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைக் காண்பதே அரிது. அவரது வெள்ளி நிற வெற்றிலைப் பெட்டி பல அறைகளைக் கொண்டது. ஒவ்வொரு அறையிலும் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு, புகையிலை, பாக்குவெட்டி என்று தத்தம் இடத்தில் அழகாய் அமர்ந்திருக்கும். அந்த வெற்றிலைப் பெட்டியைப் பார்த்த மாத்திரத்தில், அம்மாச்சியும் இதற்குச் சமீபமாக இங்குதான் எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கை எழும்.

    என்னை அலங்காரம் செய்து அழகு பார்த்த அவரே என்னைச் சில சமயங்களில் அழவும் வைத்திருக்கிறார். ஒரு நாள் தெருவில் முந்திரிப் பழங்கள் விற்கக் கண்டேன். அவற்றின் வடிவிலும், பொன்னிறத்திலும் மயங்கி, வாயில் நீரூற, அம்மாச்சியிடம் அவற்றை வாங்கித் தருமாறு கேட்டேன். அவரோ, 'வேண்டாமம்மா, சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும்' என்று எவ்வளவோ மறுத்தும், நான் விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கூத்தாடி, அதில் வெற்றியும் பெற்று, இரண்டு பழங்கள் உண்டிருப்பேன். அதன் பிறகு என்

    Enjoying the preview?
    Page 1 of 1