Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Maariya Paravaigal
Thisai Maariya Paravaigal
Thisai Maariya Paravaigal
Ebook348 pages2 hours

Thisai Maariya Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண், சமூகத்தின் கண். அவளை நன்கு வாழவைத்தால் சமூகம் தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறது. பெண்ணின் வாழ்க்கைத் தரம் உயராத எந்தச் சமூகமும் முன்னேறி விட்டதாக மார் தட்டிக் கொள்ள முடியாது.

இன்ரே கைநிறைய வருவாய்கொண்டு வரும் பெண்ணை இழந்துவிட மனமில்லாமல் அவளை-அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இல்லறத்தைக் கொடுக்காமல்-வாடிய பயிராக அவள் இளமையெல்லாம் காணலாக விடுகிறரர்கள். வயதோ ஏறுகிறது மன மாலையோ விழுவதில்லை. ஏற்றம் என்று நினைப்பதே சரிவாகி விடுகிறது.

இந்நிலையில் கிடைத்த மணவாழ்வில் அந்த வாடிய பயிர் தழைக்கிறதா பூக்கிறதா என யார் பார்க்கிருர்கள்? பெற்றேர்களோ அன்றி நம் அரசியல் வாதிகளோ அதற் காக எந்த முயற்சியும் செய்வதில்லை. பெற்றேர்களுக்கோ வருவாய் தரும் பெண்ணை இழந்ததில் வருத்தம், அரசியல் வாதிக்கோ ஒட்டுவரை இருந்த எண்ணங்கள் ஒட்டுக்குப்பின் ஆதாயத்தில் போய்விடுகிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. போட்ட முதலைத் திரும்ப எடுக்கும் வியாபார மாகிவிட்டது அரசியல். இந்நிலையில் இந்தியச் சட்டம் பெண்ணிற்காக எண்ணிறந்த சலுகைகளை அளித்திருக்கிறது. ஆனல் அவள் தன் வாழ்க்கையில் எந்த அளவிற்கு அதைப்பயன்படுத்திக் கொள்கிருள்? பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஊசலாடும் அவளது உணர்வுகளின் உயிர்ப்பே இந்த 'திசை மாறிய பறவைகள்'. இதில் வரும் கதாநாயகியின் வாழ்வில் நடந்த தவரே சிறியது, அந்தச் சிறிய தவறில் கப்பும் கிளையுமாக கனவுக் கோட்டைகளைக் கட்டிவிடும் இளநெஞ்சங்கள்; சட்டம் சலுகை காட்டினலும், சமூகம் இழித்துக் கூறும் கொடுமை! இதைப் பெண்ணின் உயர்ச்சி என்பதா அல்லது விதி என்பதா?
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580114202036
Thisai Maariya Paravaigal

Read more from Hamsa Dhanagopal

Related to Thisai Maariya Paravaigal

Related ebooks

Reviews for Thisai Maariya Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Maariya Paravaigal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    திசை மாறிய பறவைகள்

    Thisai Maariya Paravaigal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நீ எனக்காக நான் உனக்காக

    2. அவன் வருவானா?

    3. மனசாட்சிக்கு வேலியிட விரும்பவில்லை

    4. சத்யாவுக்காக ஆசைப்பட்டு வாங்கினேன்!

    5 சத்யா உன்னைக் கூண்டிலடைத்து…

    6. என் பெண்டாட்டி ஆகியிருப்பாய்

    7. அவனை டைவர்ஸ் செய்து விடு

    8. அவள் கொண்ட முடிவு

    9. ‘என்னகந் தொட்டு விட்டான்'

    10. 'உங்களுக்கு கேர்ள் பிரண்ட்ஸ்கூட உண்டா என்ன?'

    11. தூங்கிய இளமைக் கனவுகள் விழித்தால்...

    12. வாடாத கண்ணீர்ப் பூக்கள்

    13. காலம் நினைத்தால் கைகூடும்

    14. அவள் பிரார்த்தனை பலிக்குமா?

    15. இந்தச் சட்டத்திற்கும் உரிமையில்லை

    16. நீ என்னை நேசிக்கிறாயா?

    17 அவன் மூடிய கண்களுக்குள் சொர்க்கம் தெரிந்தது

    18. உங்களை நெருங்கவிட்டால்.

    19. ‘எப்படிச் சொல்வேன் அம்மா’

    20. ‘இந்த விஜய் இருந்தாலே போதும்’

    21. எல்லாம் கனவுகள் தானு?

    22. ஜூலியட் இல்லாத ரோமியோவா?

    23. தேவிக்கு இன்னும் என்ன வேண்டுமோ?

    24. உலகத்தில் கல்லறைகள் தான் மிஞ்சும்

    25. சட்டத்தில் இடமிருக்கும் சமூகத்தில் இடமிருக்காதே!

    26. யாருக்கு யார் காவல்

    27. சிறைப் பறவைக்குச் சிறகு முளைக்கலாமோ?

    28. அவன் இல்லை என்றே இருக்கட்டும்

    29. சிறைப்பட்ட உணர்வுகள் சுதந்திரம் கண்டால்….

    30. யாருக்கடி, அவருக்கும், எனக்குமா?

    31. இந்த அடிமைக்கு தண்டனை என்னவோ?

    32. சத்யா உன் வாழ்வு மலர வேண்டும்

    33. காத்திருப்பதில் சுகமும் உண்டோ?

    34. இந்த உலகத்திற்கு ஒரு தாஜ்மஹால் கிடைத்திருக்காது!

    திசை மாறிய பறவைகள்

    என்னுரை

    பெண், சமூகத்தின் கண். அவளை நன்கு வாழவைத்தால் சமூகம் தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறது. பெண்ணின் வாழ்க்கைத் தரம் உயராத எந்தச் சமூகமும் முன்னேறி விட்டதாக மார் தட்டிக் கொள்ள முடியாது.

    இந்திய சுதந்திரத்திற்குப் பின் பெண்களின் நிலை எவ்வளவோ உயர்ந்திருக்கிறது. இதற்கு மன மகிழ்ச்சி கொள்கின்ற நேரத்தில் உயர்ந்து விட்ட காரணத்தாலேயே அவள் நிலை தாழ்ந்தும் விட்டிருக்கிறது, என்பதற்காக நாம் வருந்தியே ஆகவேண்டும். முன்னர் பெண்ணை மணமுடித்து அவளுக்கு மணவாழ்க்கை அமைத்துத் தருவதிலேயே குறியாக இருந்தார்கள்.

    இன்ரே கைநிறைய வருவாய்கொண்டு வரும் பெண்ணை இழந்துவிட மனமில்லாமல் அவளை-அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இல்லறத்தைக் கொடுக்காமல்-வாடிய பயிராக அவள் இளமையெல்லாம் காணலாக விடுகிறர்கள். வயதோ ஏறுகிறது மன மாலையோ விழுவதில்லை. ஏற்றம் என்று நினைப்பதே சரிவாகி விடுகிறது.

    இந்நிலையில் கிடைத்த மணவாழ்வில் அந்த வாடிய பயிர் தழைக்கிறதா பூக்கிறதா என யார் பார்க்கிருர்கள்? பெற்றேர்களோ அன்றி நம் அரசியல் வாதிகளோ அதற் காக எந்த முயற்சியும் செய்வதில்லை. பெற்றேர்களுக்கோ வருவாய் தரும் பெண்ணை இழந்ததில் வருத்தம், அரசியல் வாதிக்கோ ஒட்டுவரை இருந்த எண்ணங்கள் ஒட்டுக்குப்பின் ஆதாயத்தில் போய்விடுகிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. போட்ட முதலைத் திரும்ப எடுக்கும் வியாபார மாகிவிட்டது அரசியல்.

    இந்நிலையில் இந்தியச் சட்டம் பெண்ணிற்காக எண்ணிறந்த சலுகைகளை அளித்திருக்கிறது. ஆனல் அவள் தன் வாழ்க்கையில் எந்த அளவிற்கு அதைப்பயன்படுத்திக் கொள்கிருள்? பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஊசலாடும் அவளது உணர்வுகளின் உயிர்ப்பே இந்த 'திசை மாறிய பறவைகள்'.

    இதில் வரும் கதாநாயகியின் வாழ்வில் நடந்த தவரே சிறியது, அந்தச் சிறிய தவறில் கப்பும் கிளையுமாக கனவுக் கோட்டைகளைக் கட்டிவிடும் இளநெஞ்சங்கள்; சட்டம் சலுகை காட்டினலும், சமூகம் இழித்துக் கூறும் கொடுமை! இதைப் பெண்ணின் உயர்ச்சி என்பதா அல்லது விதி என்பதா?

    தமிழகத்தின் தலை சிறந்த இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிக் கொடுத்த மீனுட்சி புத்தக நிலையத்தார் மூலமாக என் நாவல் வெளியாவது குறித்துப் பேருவகை கொள்கிறேன். அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.

    ஹம்சா தனகோபால்

    ‘சரணுலயா’

    சேலம் 2.10.1978

    (இந்நூலே அவள் வாழ்வு யாருக்காக என்ற தலைப்பில் வெளியிட ஏற்பாடாயிற்று. பின்னர் 'திசை மாறிய பறவைகள்" என்ற தலைப்பே இந்த நாவலுக்கு அதை விடப் பொருத்தமானது என்று நினைத்து அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.)

    1. நீ எனக்காக நான் உனக்காக

    இரவும் பகலும் சந்திக்கும் நேரம். அந்தப் பெரிய பங்களாவின் ஹாலில் சஞ்ஜெய் டெலிவிஷன் அருகில் அமர்ந்திருந்தான். பாப் மியூசிக்கின் தாளகதியில் மயங்கினவனுய் உஷா உதுப் பாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ஹாலின் நடுமையத்தில் விலையுயர்ந்த சோபா ஸெட்டுகள் போடப் பட்டிருந்தன. அதில் சஞ்ஜெயின் தாயார் கற்பகம் அம்மாளும் அண்ணன் விஜயும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். விஜய் அன்னையிடம் மிகவும் அபூர்வமாகத் தான் சமீபகாலமாக பேசிக் கொண்டிருந்தான். ஏன் தன்னிடம் கூட பட்டும் படாமலும் தான் பேசுவதாக சஞ்ஜெயிக்குப்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் தந்தை விட்டுச் சென்ற மிகப் பெரிய 'கற்பகம் பிளாஸ்டிக் தொழிற்சாலையை' இருவரும் திறம்பட நிர்வகித்தனர்.தொழிற் சம்பந்தப்பட்டதைத் தவிர விஜய் சஞ்ஜெயிடம் வேறு எதுவும் பேச மாட்டான்.

    அவர்கள் என்ன பேசுகிருர்கள் என கேட்கும் ஆவலுள்ள வணுய் சஞ்ஜெய் டெலிவிஷன் டியூனை மட்டுப்படுத்தினன்.

    எனக்கு இப்போது திருமணமே வேண்டாம்மா திருமண ஆசை ஏற்படும்போது உங்களிடம் சொல்கிறேன். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றான் விஜய்.

    விஜய், விளையாடாதே. உனக்கு வயது முப்பது ஆகப் போகிறது. இதுவரை தள்ளிப் போட்டதே தப்பு,உன் அப்பா கூட இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாராம்.அப்புறம் என்னைச் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தவில்லையா? என்ருர் கற்பகம் அம்மாள்.

    என்னம்மா நீங்க...நான்தான்...

    இங்கே பார் விஜய், இதுவரை பல பெண்களைப் பார்த்துப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாய். இது ஏழைகள்வீடு. பெண் பி.ஏ. படித்திருக்கிருள். பெண் ரதியைப் போலிருக்கிருள். நல்ல குணமும் கூட. இதை மறுத்தாயா னல் என்னை உயிருடன் உன்னுல் பார்க்க முடியாது.

    அம்மா...

    ஆமாம் விஜய். இப்போது பெண் பார்க்கக் கிளம்புகிறோம். அதனுல்தான் உங்களிருவரையும் பேக்டரியைவிட்டு சீக்கிரம் வரச் சொன்னேன். என்ற கற்பகம் தன் இளைய மகனைத் திரும்பி நோக்கினரி.

    சஞ்ஜெய். நீயும் கூட வாப்பா. விஜய்க்குத் துணையாக இருக்கும்.

    விஜயிக்குத்தானேமா பெண் பார்க்கப் போகிறீர்கள் நான் எதற்கு எனக்குப் பெண் பார்ப்பதாகச் சொல்லுங்கள் இப்போதே வருகிறேன். என்றன் சஞ்ஜெய் குறும்பும் சிரிப்புமாக.

    அவன் அன்னை வாய்விட்டே சிரித்துவிட்டார். விஜய் கூட லேசாகச் சிரித்தான்.

    உனக்குக்கூட கூடிய விரைவில் பார்க்கத்தான் போகி றேன். இப்போது நீயும் வா.

    நீட்டாக டிரஸ் செய்துகொண்டு வந்துவிடுகிறேன் அம்மா. சஞ்ஜெய் டெலிவிஷனை ஆஃப் செய்துவிட்டு மாடிக்கு விரைந்தான்.

    விஜய் நீயும் டிரஸ் மாற்றவில்லையா?

    இதே போதும்மா. என்றன் விஜய் விட்டேற்றியாக.

    அவன் குரலில் விரக்தியும் சலிப்பும் இருந்தன. இதைக் கவனித்தும் கவனிக்காதவராய் அந்த அம்மையார் மேற்கொண்டு அலுவல் கவனிக்க உள்ளே சென்றார்.

    பங்களாவின் போர்டிகோவில் பிளைமவுத் கார் நின்றிருந்தது. அதன் பின் சீட்டில் கற்பகம் அம்மையாரும் பக்கத்து வீட்டு என்ஜினியரின் மனைவியர் இருவரும் அமர்ந்திருந்தனர். அக்கா தங்கை இருவருமே ஒருவருக்கே வாழ்க்கைப்பட்டிருந்தனர். சுமங்கலிகள் இருக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் அவர்களை அழைத்திருந்தார் கற்பகம் அம்மையார். இந்த நேரத்தில் தன் கணவரின் நினைவுகள் எழ கண்ணில் துளிர்த்த நீரை யாரும் பார்க்கா வண்ணம் துடைத்துக் கொண்டார். விஜய்கூட வந்து காரில் ஏறிவிட்டான். எங்கே இந்த சஞ்ஜெயை இன்னும் காணவில்லை. கற்பகம் பரபரத்தார். நேர்த்தியாக உடையணிந்தவனுய் மாரிஸ் செண்டின் மணம் கமகமக்க வந்த சஞ்ஜெயைக் கண்டபோது அந்த அம்மையாரின் பெற்ற உள்ளம் பூரித்தது. இவன் பெண்ணுகப் பிறந்திருந்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருப்பானோ எனவும் நினைத்தது.

    புறப்படுவோமா அம்மா சஞ்ஜெய் டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான்,

    தாய் சொன்ன வழிகளில் காரை செலுத்தினான். ஜன நெரிசல் மிகுந்த மெளண்ட் ரோடைக் கடந்து மயிலாப்பூரில் கார் திரும்பியது. கபாலீஸ்வரர் கோயிலைக் கடந்தபோது, கோயில் கோபுரத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார் கற்பகம் அம்மையார். அவர் உதடுகள் லேசாக முணுமுணுத்தன.

    கார் ஒரு சந்தில் திரும்பி ஒரு சாதாரண வீட்டின் முன் நின்றது. பெண்ணைப் பெற்றவர்கள் வந்து வரவேற்புக் கூறி அழைத்துச் சென்றனர்.

    ஹாலில் இரு மர நாற்காலிகளில் சஞ்ஜெயும் விஜயும் அமர சற்று தள்ளி பாயில் என்ஜினியர் மனைவியரும் அமர்ந்தனர். பெண் வீட்டாரின் உறவுப் பெண்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டனர். மற்ற முக்கிய நிகழ்ச்சிகளைச் சட்டை செய்வதாகக் காணோம். தங்களுக்குச் சம்பந்தமில்லாத நிகழ்ச்சி போன்று பேசிக் கொண்டிருந்தனர்.

    பெண்ணின் தாயுடன் கற்பகம் அம்மையார் உள் அறைக்குச் சென்று விட்டார். பெண்ணைப் பெற்றவர் உபசாரத்திற்காக சகோதரர்கள் இருவருடனும் சற்று பேசிவிட்டுச் சென்றார். அவர் அப்படி மறைந்ததும் சஞ்ஜெய் விஜயின் காதில் இவரைப் பார்த்தால் பெண் அப்படி ஒன்றும் அழகாய் இருப்பாள் என்று தெரியவில்லை. என்று சொல்லிச் சிரித்தான்.

    விஜய் அதனை காதில் வாங்கியும் வாங்காதவனுய் சுவரில் இருந்த காலண்டரைக் கவனித்துக் கொண்டிருப்பதாக பாவனை செய்தான். சஞ்ஜெய்க்கு அவன் செய்கை எப்படியோ இருந்தது. விஜய் முன்பெல்லாம் கலகலப்பாக இருந்தவன்தான். தம்பியுடன் சரிக்குச் சரி நின்று விளையாடி சண்டையிடுபவன்தான். சஞ்ஜெய் பள்ளி இறுதி வகுப்பு படிக்கையில் விஜய் கல்லூரியில் பி.ஏ. முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

    அதிலிருந்து தான் அவன் குணமே மாறிவிட்டது. யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தான். அவனுக்கு நண்பர்கள்கூட கிடையாது. பின்னர் போஸ்ட் கிராஜுவேட் படிப்பை முடிக்கவும் அவர்கள் தந்தை காலமாகவும் சரியாக இருந்தது.

    தந்தை சிவநேசச் செல்வர் கவனித்துவந்த பல நிறுவனங்களின் பொறுப்புகள் அவன் மீது சுமத்தப்பட்டன. அதையெல்லாம் அவன் திறம்பட நிர்வகித்தான். ஆனல் அவனுக்காக என அவன் எதையும் செய்து கொள்ளவில்லை. இக்கால நவநாகரிக யுவர்கள் போன்று அலங்கரித்துக் கொள்ளமாட்டான். ஏன் சினிமாவுக்குக்கூட எப்போதோ ஒருமுறை செல்வான். அதுவும் தனியாக.

    சஞ்ஜெய் எம்.ஏ.பி.எல். படித்து முடித்ததும் அவனுக்கும் அண்ணனுக்குக்கீழ் பணிபுரியவே சரியாக இருந்தது. ஆனலும் அவன் போக்கே அண்ணனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. அவன் எங்கிருந்தாலும் அந்த இடம் கலகலப்பாக இருக்கும். கிருதாவும் கெல்லியுமாக கம்பீரமாக இருந்தான். பிடரி வரை சரிந்த மயிர்.

    அவர்கள் ‘கற்பகம் பிளாஸ்டிக் தொழிற்சாலையின், ஜெனரல் மானேஜர் குமரேசன் எதிர்பாராமல் அங்கே வந்தார். விஜயைப் பார்த்து மெல்ல தலை அசைத்து அழைத்தார். அவரும் விஜயும் வீட்டின் வெளியே செல்வதை சஞ்ஜெய் பார்த்தான். ஏதேனும் அவசரமாக இருக்கும். என்னதான் அவசரமாக இருக்கும் என்னதான் அவசரமாக இருக்கட்டுமே, அதற்காக பெண் பார்க்கும் இடத்தைத் தேடிக் கொண்டு வருவானேன் என அவர் மீது சலித்துக் கொண்டான் சஞ்ஜெய்.

    அந்த வீட்டின் ஒர் அறையில் கண்ணாடியின் முன்பாக அமர்ந்திருந்தாள் சத்யா. தோழி லதாவின் கைவண்ணத்தால் அழகின் தேவதையாகவே திகழ்ந்தாள் சத்யா. சத்யாவைப் பார்த்துப் பார்த்து லதா பூரித்துப் போனாள். பெரிய கண்களும் சின்னஞ்சிறு ஆப்பிள் துண்டங்களை ஒத்த இதழ்களும் சிறிய பிறை நெற்றியும் சுருண்ட கூந்தலும் மேனியின் சந்தன நிறமும்,

    சத்யா நீதான் எத்தனை அழகடி.

    போடி லதா. உனக்கு இதைத் தவிர வேறு பேச்சே கிடையாது. எப்போது பார்த்தாலும் என் அழகைப் பற்றித்தான் பேச்சு.

    இருப்பவனுக்கு அருமை தெரியாது. இல்லாதவனுக்குத்தானே அதன் அருமை தெரியும். இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய பணக்கார இடம் உன்னைத் தேடிவருமா

    போதுமடி லதா. வேண்டுமானால் அவருக்கு ஒரு தம்பி இருக்கிறாராம். அவருக்கு வேண்டுமானால் உன்னை சிபாரிசு செய்யட்டுமா.

    உக்கும். என்னைக் கண்டால் அவன் ஓடியே விடுவான் இவர்கள் பாதியில் நிற்க அங்கே சத்யாவின் அம்மா சிவகாமி வந்தாள்.

    சத்யா மாப்பிள்ளையின் காலில் விழுந்து நமஸ்காரம் செய் அம்மா. இதோ நான் மாப்பிள்ளையின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் ஏதேனும் தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறார். உம்... எல்லாம் நல்லபடியா நடக்கணும். சிவகாமி பெண்ணை நிறைவுடன் நோக்கி விட்டு லதாவிடம், சத்யாவை அழைத்துச் செல் லதா என்றவராய் வெளியேறினார்.

    கூடத்தினுள் லதா அழைத்துவர சத்யா நுழைந்தாள் நாற்காலியில் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் சஞ்ஜெயின் விழிகளை அவள் மைவிழிகள் சந்தித்தபோது எல்லாவற்றையும் மறந்து இமைக்கவும் மறந்தன. அவன் விழிகளின் குறு குறுப்பும் குறும்பும் காந்தக் கவர்ச்சியும் அவன் இதழ்களில் இழையோடிய புன்னகையும் அவளைப் பெரிதும் கவர்ந்தன. அவன் விழியோட்டம் தன் மேனி முழுதும் ஓடுவதை உணர்ந்து நாணத்துடன் தலை குனிந்துகொண்டாள்.

    அவனுடைய ஆண்மையின் கம்பீரமும் அழகும் அவளுள் ஒரு மின்னேட்டத்தை ஏற்படுத்தின. இந்தப் பிறவி எடுத்ததே இந்த ஆண்மகனின் கை சேர்வதற்காகத்தானோ என்று நினைத்தாள் சத்யா.

    போதுமடி பார்த்தது. நமஸ்காரம் செய். லதா அவள் காதுகளில் கிசுகிசுத்தாள்.

    தோழியின் கட்டளைக்கிணங்க சஞ்ஜெயை மாப்பிள்ளையாக நினைத்து மெய்மறந்து அவன் கால்களில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தாள். லதாவின் துணையுடன் அவன் எதிரே அமர்ந்தாள். அதற்குள் அங்கே விஜய் வந்தான்.

    சத்யாவின் அன்னை சிவகாமி வந்து அவளருகில் குனிந்து மாப்பிள்ளையை நமஸ்கரிக்கச் சொன்னாள். இவர்தான் மாப்பிள்ளை என அன்னை விஜயைச் சுட்டிக் காட்டியபோது சத்யா தடுமாறிப்போனள். அவளுக்குத் தலையைச் சுற்றியது. மெல்ல சமாளித்துக் கொண்டாள். எவ்வளவு பெரிய ஏமாற்றம் அவளுக்கு. விழியோரங்களில் நீர் துளிர்க்க தலை நிமிர்ந்து சஞ்ஜெயைப் பார்த்தாள்: அவன் முகம் களையிழந்து இருந்தது. அவன் விழிகளிலும் நீர்.

    முகத்தைத் துடைத்துக்கொள்ளும் பாவனையில் அவன் கைக்குட்டையால் விழிகளை ஒற்றிக்கொள்வதை அவள் கவனித்தாள். அவள் அன்னை மறுபடியும் குனிந்து சொன்ன போது சத்யா விஜயின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். அவள் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் தரையில் உருண்டது.

    அமைதியும் ஆரவாரமுமற்ற விஜயை அவள் முதல் முதலாக மாப்பிள்ளையாக பார்த்திருந்தால் இப்படியெல்லாம் கலங்கி இருக்கமாட்டாளோ, என்னமோ. சஞ்ஜெய் போன்ற தோற்றமும் அழகும் அவன் பெற்றிருந்தபோதும் சற்று பூசினாற் போன்று இருந்தான். மனதார மாப்பிள்ளையாக சஞ்ஜெயை நினைத்துவிட்டு விஜயைக் காணக்காண சத்யாவின் இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கொண்டிருந்தது:

    இந்த உணர்ச்சிகரமான நாடகத்தை ஆங்கிருந்த யாருமே உணரவில்லை. லதா கூட ஏதோ தவறுதல் நடந்தது என நினைத்தாளே ஒழிய ஒரே கணத்தில் இரு இதயங்கள் சங்கமித்து விட்டதையும் அதில் தோன்றிய அவலத்தையும் உணரவேயில்லை.

    வீணையும் கையுமாக அவள் பாடிக்கொண்டிருக்கையில் அதில் இழையோடிய சோகம் சஞ்ஜெயிக்கு நன்கு புரிந்தது.

    டிபன் சாப்பிட்டு சம்பிரதாயப் பேச்சுகள் முடிந்து காரில் புறப்பட்டனர் எல்லோரும். சஞ்ஜெய் விஜயிடம் ஜெனரல் மானேஜர் வந்த காரணத்தை வினவினான். பாக்டரியில் வேலை செய்யும் தொழிலாளி மிஷினில் அடிபட்டு விழுந்ததாகவும் அதை அறிவிக்க வந்ததாகவும் சொன்னான். தான் ரூ 500/- கொடுத்து அரசினர் மருத்துவமனையில் ஸ்பெஷலாக கவனிக்கச் சொன்னதாகவும் விஜய் விவரித்தான்.

    வீட்டிற்கு வந்தவுடன் கற்பகம் அம்மையார் சஞ்ஜெயிடம் பெண் எப்படி இருக்கிறாள் என பெருமிதத்துடன் கேட்டபோது, விஜயிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். வரவர யாரிடம் என்ன கேட்பது என்பதே உங்களுக்கு இல்லை. தலையை வலிக்கிறது. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். என படபடப்பாகப் பேசி மாடிக்குச் சென்றுவிட்டான்.

    கலகலப்பாக இருக்கும் இந்தப் பிள்ளைக்கு என்ன வந்தது என அதிசயமாக அவன் மாடியேறிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த அம்மையார்.

    மூடிய கதவுகளின் உள்ளே ஓர் இதயம் காதலின் நிறைவேறா தவிப்பில் தத்தளித்தது. அந்த இதயம் சஞ்ஜெயுடையது: "சத்யா, என் அண்ணனுக்குப் பெண் பார்க்க நான் வராமலே இருந்திருக்கக் கூடாதா? உன்னைப் பார்த்து குறை சொல்ல வேண்டும் என்றல்லவா வந்தேன். குறையற்ற அழகியாக நீ பிறந்துவிட்டாயே. உன்னைக் கண்ட போது நீ எனக்காகத்தான் பிறந்திருக்கிறாய் என்றல்லவா நினைத்தேன். ஐயோ, என் காதல் நிறைவேறக் கூடியது தானா எனப் புலம்பிக் கொண்டிருந்தான் சஞ்ஜெய்.

    இரண்டு நாட்கள் கழித்து சத்யாவின் வீட்டில் ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. பெண்ணைப் பிடித்திருக்கிறது என இவர்கள் சொல்லி அனுப்பிய செய்தி தேனாக இனித்தது அவர்களுக்கு. சத்யாவிற்கு மட்டும் எட்டிக் காயாக இருந்தது.

    தன் அன்னையிடம் மெல்ல நெருங்கி, அம்மா இந்த கல்யாணம் வேண்டாம் அம்மா. அங்கே போனல் நிம்மதியாக என்னால் இருக்க முடியும் என்று தோன்றவில்லையம்மா என்றுள் சத்யா.

    உனக்கென்னடி பைத்தியமா பிடித்திருக்கிறது. இவ்வளவு, பெரிய இடம் வாய்த்ததே உன் அதிர்ஷ்டம் என நான் நினைக்கிறேன். நீயோ இப்படிச் சொல்கிறாய். சாதாரண ஒரு குமஸ்தாவான உன் அப்பாவால் இவ்வளவு பெரிய இடம் பார்க்க முடியுமா என்ன? என்னதான் நீ ஒரே பெண்ணாக இருந்தபோதும் இதைவிட நல்ல இடம் எங்களால் பார்க்க முடியாது. பேசாமல் வாயை மூடிக் கொண்டிரு. என அதட்டல் போட்டு மகளின் வாயை அடைத்து விட்டாள் சிவகாமி.

    தோன்றின கணத்திலேயே அவள் காதல் அழிய வேண்டியது தானா?

    சத்யாவின் வாழ்வில் நடக்கப்போவதை உணர்ந்திருந்தால், அவள் அன்னை சிவகாமி இந்தத் திருமணத்திற்கு உடன்பட்டே இருக்க மாட்டாள்.

    2. அவன் வருவானா?

    திருமணம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. மணப்பந்தலில் விஜயும் சத்யாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆயின் அவர்கள் இதயங்களோ நெருங்க முடியாத தூரத்தில் இருந்தன.

    கொட்டு மேளங்களின் இன்னிசையில் விஜய் சத்யாவின் சந்தனக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். உதிரும் கண்ணீருக்கிடையே தலைகுனிந்திருந்த சத்யா கர்சீப்பால் கண்களை யாரும் அறியாவண்ணம் துடைத்துக் கொண்டாள். ஆமாம் அவள் அழக்கூடாது. அவள் மாற்றான் மனைவியாகி விட்டாள். இனி யாரையும் நினைக்கக் கூடாது.

    புதிய தெம்புடன் தலை நிமிர்ந்த அவள் மைவிழிகளின் பார்வையில் முதலில் பட்டது காமிராவும் கையுமாக நின்றிருந்த சஞ்ஜெய்தான். அவன் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. அன்று பார்த்ததற்கு இன்று இளைத்திருந்தான். வியர்வை துடைக்கும் சாக்கில் கண்களைத் துடைத்த அவனும் அதே கனம் சத்யாவை நோக்கினான்.

    சத்யாவின் தெம்பும் தைரியமும் புதிய நம்பிக்கையும் இப்போது போன இடம் தெரியவில்லை.

    கல்யாணத்தில் நடந்த மற்ற சடங்குகளிலும் அவள் ஜீவனில்லாமல் தன்னை ஆட்படுத்திக் கொண்டாள். அதே நேரத்தில் தன் கணவனாக விஜய் கூட அப்படியே செயல்படுவதை அவள் கூர்ந்து கவனித்தாள்.

    ஒருக்கால் இவரும் வேறு யாரையாவது காதலித்து ஏமாந்து இருப்பாரோ. அன்றி வேறு எவளுடனாவது தொடர்பு இருக்குமோ. அவள் நெஞ்சம் துணுக்குற்றது.

    அன்றிரவு அவர்களுக்கு முதலிரவு… சத்யாவை அவள் தோழிகள் அழகுச் சிலையாக சிங்காரித்திருந்தனர். மருமகளைப் பார்த்து மனம் பூரித்தார் கற்பகம் அம்மையார். இரு சுமங்கலிகளும் தோழிகளும் புடை சூழ கணவரின் தனியறைக்கு அவள் செல்கையில் ஒரு ஓரத்தில் நின்றிருந்த சஞ்ஜெய் அவள் கண்களில் பட்டான்.

    அவன் இயல்பான குறும்புத்தனம் மறைந்து சோகம் படிந்த முகத்துடன் அவன் ஓரத்தில் ஒதுங்கியிருந்ததைக் கண்ட சத்யாவின் உள்ளம் ஓலமிட்டது. அங்கேயே குப்புறப்படுத்துக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது. அவள் உணர்ச்சிகளை யார் கேட்டார்கள்.

    என்னதான் படித்திருந்தாலும் நாகரிகம் பேசினாலும் யதார்த்த வாழ்க்கையில் பெண்கள் ஊமைகள் தானே?

    Enjoying the preview?
    Page 1 of 1