Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dinosaurgal Veliyeri Kondirukindrana
Dinosaurgal Veliyeri Kondirukindrana
Dinosaurgal Veliyeri Kondirukindrana
Ebook309 pages1 hour

Dinosaurgal Veliyeri Kondirukindrana

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Manushya Puthiran (born 1968) is a poet and also a DMK supporter in Tamil Nadu. He was born as S.Abdul Hameed in Tiruchirappalli District district Thuvarankurichi. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as a young writer.

Over the past two decades, several of his poems got published in popular Tamil Magazines like Ananda Vikatan, Kumudam, Kalki and Kalachuvadu. His political and topical columns are regular in Tamil periodicals such as Kungumam, Nakeeran and Tamil popular daily Dinamalar.

He is known for his progressive views on various socio-political issues like capital punishment abolition, caste system annihilation, women liberation etc.

Now he lives in Chennai He is running Uyirmmai publication and Uyirmmai magazine. On Aug 19th 2015, he joined leading political party Dravida Munnetra Kazhagam of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114001993
Dinosaurgal Veliyeri Kondirukindrana

Read more from Manushya Puthiran

Related authors

Related to Dinosaurgal Veliyeri Kondirukindrana

Related ebooks

Reviews for Dinosaurgal Veliyeri Kondirukindrana

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dinosaurgal Veliyeri Kondirukindrana - Manushya Puthiran

    http://www.pustaka.co.in

    டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன

    Dinosaurgal Veliyeri Kondirukindrana

    Author:

    மனுஷ்ய புத்திரன்

    Manushya Puthiran

    For other books

    http://www.pustaka.co.in/home/author/manushya-puthiran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன

    மனுஷ்ய புத்திரன்

    மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல்ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 1968இல் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதி வரும் இவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ் கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தியா டுடே இவரை தமிழகத்தின் 10 செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. 2011இல் கனடாவின் தமிழ்த் தோட்ட விருது அதிதத்தின் ருசி தொகுப்பிற்காக வழங்கப் பட்டது. அதே ஆண்டில் ஆனந்த விகடனால் அதீதத்தின் ருசி சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மைமாத இதழ், உயிரோசை இணைய வார இதழ் ஆகிய இதழ்களை நடத்தி வருகிறார். 2011இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா விற்காக இவர் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்று கொண்டுவந்த டைம்ஸ் இன்று சிறப்பிதழ் பெரிதும் கவனம் பெற்றது. ஊடகங்களில் முன்னணி விமர்சகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

    இவரது கவிதைத் தொகுப்புகள்:

    மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கை யறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993), இடமும் இருப்பும் (1998). நீராலானது (2002), மணலின் கதை (2004), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2006), அதீதத்தின் ருசி (2009), இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் (2010), பசித்த பொழுது (2011), அருந்தப்படாத கோப்பை (2012)

    கட்டுரைத் தொகுப்புகள்: காத்திருந்த வேளையில் (2003), எப்போதும் வாழும் கோடை (2003), என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009), டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன (2012), தோன்ற மறுத்த தெய்வம் (2012)

    e-mail: manushyaputhiran@gmail.com

    நெருப்பை மறைக்கும் புகை

    உயிர்மை தலையங்கங்களின் இரண்டாவது தொகுதி இது. கடந்த மூன்றாண்டுகளில் எழுதப்பட்ட இந்தத் தலையங்கங்கள் இந்திய வரலாற்றின் மிகக் கடினமான காலகட்டத்தைப் பற்றிய பதிவுகளைக் கொண்டிருக்கின்றன.

    இந்தியாவில் அதிகாரமாற்றம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சிவில் சொசைட்டியின் இருப்பை இந்தியா உணர்ந்த காலம் இது. நம்பிக்கையிழந்த, ஏமாற்றப்பட்ட மக்கள் வீதிக்கு வந்தார்கள். தாங்கள் இருக்கிறோம் என்ற குரலை ஆட்சியாளர்களை நோக்கி எழுப்பினார்கள். அடுத்த தேர்தல்வரை தங்களால் மெளன சாட்சிகளாக இருக்க முடியாது என்று உரத்துச் சொனனர்கள்.

    இந்தியா முழுக்க பல்வேறு மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வெடித்தவண்ணம் இருக்கின்றன. கடும் விலைவாசி உயர்வு, விவசாயிகள், சிறுவர்த்தகர்களின் அழிவு, பிரமாண்டமான ஊழல்கள், பணவீக்கம், செயலற்ற குற்றமனப்பான்மை கொண்ட அரசு, இவற்றின் முன் மக்கள் தங்கள் கசப்பையும் எதிர்ப்பையும் காட்டுவதற்காகத் தவியாய் தவிக்கிறார்கள் ஆனால் இந்தியாவின் அரசியல் வறுமையின் முன்பு அரசியல் வெற்றிடத்தின் இந்த அதிருப்தியும் கோபமும் தொடர்ந்து சிதறடிக்கப்படுகிறது.

    மக்களின் கோபத்தை ஒரு மாற்றத்தை நோக்கிச் செலுத்துவதற்கு புரட்சியாளர்களும் சிந்தனாவாதிகளும் முன் நிற்கமுடியாத ஒரு காலத்தில் போலிப் புரட்சியாளர்களும் போலி சிந்தனாவாதிகளும் அந்த இடத்தைக் கைப்பற்றிக்கொள்கிறார்கள். நாம் ஒரு ஒடுக்குமுறை யாளனை எதிர்த்து தெளிவாகப் போராட முடியும். ஆனால் ஒரு போலிப் புரட்சியாளனை எதிர்த்து அவ்வளவு எளிதாகப் போராட முடியாது. அவன் எல்லா சித்தாந்தங்களையும் குழப்பிவிடுகிறான். எல்லாப் பாதைகளிலும் தவறான மைல்கற்களை நாட்டிவிடுகிறான்.

    இதுதான் இப்போது நம்முடைய பிரச்சினை. இலக்கற்ற மக்களின் கோபமும் அவற்றைத் தங்கள் உடனடி நோக்கங்களுக்காக விற்க விரும்பும் போலிப் புரட்சியாளர்களும் நமது சமகால வரலாற்றின் இரண்டு பக்கங்கள்.

    நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக் கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்ற எதிர்ப்பு சாரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன.

    இந்த தலையங்கங்கள் அரசியல் ஆய்வுகள் அல்ல. மக்களின் கோபங்களையும் நிராசைகளையும் சந்தேகங்களையும் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிப்பதே இவற்றின் நோக்கம். அரசியல் கோமாளிகளையும் அரசியல் சூதாடிகளையும் எதிர்ப்பதன் மூலம், எள்ளி நகையாடுவதன் மூலம் இவை இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை உங்கள் பார்வைக்கும் பரிசீலனைக்கும் முன்வைக்கின்றன.

    மனுஷ்ய புத்திரன்

    27.12.2012

    12.46 am

    manushyaputhiran @ gmail.com

    பொருளடக்கம்

    1.தமிழை அவமதிக்க ஒரு விருது

    2.உயர் கல்வியின் இருண்ட பக்கங்கள்

    3. சில அரசியல் ஜோதிடங்கள்

    4.நித்யானந்தர் என்னும் நிகழ்வு

    5.இன்னும் காயாத குருதிக் கறை

    6.எது தேசபக்தி

    7.பிணங்களின் விலை

    8.நீங்கள் எப்போது ஒரு கொலை செய்யப் போகிறீர்கள்?

    9.ஊ(ழல்)ழ் வினை வந்து...

    10.யாரும் விரும்பாத நீதி

    11.ரகசியத்திற்கெதிரான யுத்தம்

    12.குற்றத்தின் எல்லை

    13. 2010 சில எண்ணங்கள்

    14.கல்லைத்தான் மண்ணைத்தான்... காய்ச்சித்தான் குடிக்கத்தான்...

    15.பத்ம வியூகம்

    16.இருண்டகால குறிப்புகள்

    17.நரகத்திற்குப் போகும் பாதை

    18.ஒரு புரட்சியின் கதை

    19.கார்ப்பரேட் சாமியார்கள் இந்தியாவின் ஸ்விஸ் வங்கிகள்

    20.அறியாமை - அகம்பாவம்அவமானம் கலைஞரின் அறியாமையின் விலை

    21.ஊழல் எதிர்ப்பு மேளா

    22. நான்கு பேருக்கு நன்றி

    23.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

    24.தேசத்தின் கன்னத்தில் விழுந்த அறை

    25.இது யாருக்கு எதிரான யுத்தம்?

    26.ஒரு வரலாற்றுக் களங்கம்

    27.பெரிய பஞ்சம் வந்திருக்கு

    28.இருண்ட காலக் குறிப்புகள்

    29.தேசபக்த பயங்கரவாதம்

    30.அம்பேத்கர் அடையாளமற்றவர்களின் அடையாளம்

    31.இந்திய குடியரசுத் தலைவர் பதவியும் மதுரை ஆதீன மடத்தலைவர் பதவியும்

    32.டெசோ: ஒரு கைதியின் டைரி

    33.பொய்களின் காலம்

    34.கறுப்பு வெள்ளி

    35.டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன

    36.சாதி தூய்மைவாதம் நம்மைப் பிடிக்கும் பெரு நோய்

    1.தமிழை அவமதிக்க ஒரு விருது

    இந்த ஆண்டு சாகித்ய அகாதெமியின் விருது தமிழில் கவிஞர் புவியரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் முறையாக இவ்விருதைப் பெற்றிருக்கும் அவரை உயிர்மை வாழ்த்துகிறது. அடுத்த ஆண்டும் அவரோ அல்லது அவரது நண்பர்களோ இந்த விருதைப் பெறவேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.

    இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருதுக்கான தேர்வுப்பட்டியலில் நாஞ்சில் நாடன், எஸ்.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பல நவீன எழுத்தாளர்களின் பெயர்கள் அடிபட்டு, கடைசியில் வழக்கம்போல அகாதெமி அதிகாரவர்க்கத்தின் ஒரு உள்வட்ட எழுத்தாளர் அதைத் தன்வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்.

    தமிழைப் பொறுத்தவரை சாகித்ய அகாதெமி விருதுகள் கடந்த பத்தாண்டுகளில் அடைந்திருக்கும் வீழ்ச்சி மிக மோசமானது. எந்த நேர்மையும் அற்ற இலக்கியவிரோத கும்பலின் கையில் தமிழ்சார்ந்த தேர்வு முழுமையாகச் சென்றுவிட்டது என்பதற்கான நிரூபணம் இது. கடந்த பத்தாண்டுகளில் விருது பெற்றவர்களின் இந்தப் பட்டியலைப் பாருங்கள். கவிக்கோ அப்துல் ரகுமான் (1999), தி.க.சிவசங்கரன் (2000), சி.சு.செல்லப்பா (200), சிற்பி பாலசுப்பிரமணியம் (2002), வைரமுத்து(2003), ஈரோடு தமிழன்பன்(2004), திலகவதி(2005), மு.மேத்தா(2006), நீலபத்மநாபன்(2007), மேலாண்மை பொன்னுச்சாமி (2008), இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்மூலம் உருவாகும் தமிழ் இலக்கிய சித்திரத்தை கற்பனை செய்வதற்கே அச்சமாக இருக்கிறது.இரண்டு விதிவிலக்குகள் தவிர).

    இதற்கு முந்தைய பத்தாண்டுகளின் விருதுப் பட்டியலோடு ஒப்பிட்டால்தான் இந்த நசிவின் தீவிரத்தை அறிய முடியும். லாசராமா மிருதம் (1989), சு.சமுத்திரம்(1990), கி.ராஜநாரயணன்(199), கோ.விமணி சேகரன்(1992), எம்.வி.வெங்கட்ராம்(1993), பொன்னீலன்(1994), பிரபஞ்சன் (1995), அசோகமித்திரன்(1996), தோப்பில் முகமது மீரான்(1997), சா. கந்தசாமி (1998). இந்த மதிப்பு வாய்ந்த பட்டியலிலும் இரண்டு விதி விலக்குகள்)

    நவீனத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, சமகால முக்கியத்துவம் உடைய ஒருவர்கூட கடந்த பத்தாண்டுகளில் இந்த விருதிற்குப் பொருட்படுத்தப்படவில்லை. இது தற்செயலான தல்ல. சாகித்ய அகாதெமி குழுவைக் கைப்பற்றி தன்கையில் வைத்திருக்கும் இடதுசாரிகள், வானம்பாடிகள், கல்வித்துறையினரின் பரஸ்பர கொடுக்கல் வாங்கல்களின் வழியாகவே இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்குப்பின்னே மிகத்தெளிவான ஒப்பந்தங்கள் இருக்கின்றன.

    சாகித்ய அகாதமி போன்ற மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு இவ்வாறு ஒரு இலக்கியவிரோதக் கும்பலால் ஹைஜாக் செய்யப்பட்டு மூன்றாம்தர எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகளைத் தொடர்ந்து வழங்குவதன் வாயிலாக தமிழில் ஒரு இயக்கமாகச் செயல்பட்டு இலக்கியப் போக்குகளின் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த, இருக்கிற பல எழுத்தாளர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறார்கள். நகுலன், சுந்தரராமசாமி, ஜி.நாகராஜன், சுஜாதா, ப. சிங்காரம், வண்ணதாசன், வண்ணநிலவன், ஞானக்கூத்தன், சி. மணி, சுகுமாரன், கலாப்ரியா, தேவதேவன், தேவதச்சன், நாஞ்சில் நாடன், பூமணி, ராஜேந்திர சோழன், அம்பை, கோபி கிருஷ்ணன், விக்கிரமாதித்யன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், இமையம், தமிழவன், அ.மார்க்ஸ், ராஜ்கொளதமன் என இந்த அவமதிக்கப்பட் டோர் பட்டியல் மிக நீண்டது. இவர்கள் அனைவரும் தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மதிக்கத்தக்க முக்கியமான ஆக்கங்களை ஏற்கனவே எழுதிவிட்டவர்கள். பெரும் படைப்பு சக்திகளாகவும் சிந்தனா சக்திகளாகவும் தமிழ் இலக்கியத்தின், தமிழ் மொழியின் ஆதார நீரோட்டத்தைத் தீர்மானிப்பவர்களும் இவர்களே. ஆனால் இவர்களை முந்திச் செல்பவர்களும் அங்கீகாரங் களையும் விருதுகளையும் பெறுபவர்களும் யார் என்று பாருங்கள். இந்த எழுத்தாளர்கள் என்னமாதிரியான ஒரு நசிந்த கலாச்சாரச் சூழலில் நம்பிக்கையுடன் செயலாற்றி வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெரும் வருத்தமே மிஞ்சுகிறது. வேறெந்த இந்திய மொழிகளிலும் இதுபோன்ற ஒரு கேவலத்தை நீங்கள் கற்பனைகூட செய்யமுடியாது.

    தமிழில் இன்று எட்டப்பட்டிருக்கும் படைப்புச் சாதனைகளுக்கும் சிந்தனை நீரோட்டங்களுக்கும் இணையான ஒன்றை வேறெந்த இந்திய மொழிகளிலும் காண இயலாது. அவ்வளவு செறிவும் பன்முகத் தன்மையும் கொண்ட தமிழ்ப் படைப்பியக்கம் குறித்து எதிர்மறையான, கீழான பிம்பங்களை உருவாக்கவே சாகித்ய அகாதெமி போன்ற நிறுவனங்கள் வேலை செய்கின்றன. இந்த விருதுகளின் வழியே பிற மொழிகளில் கவனம்பெறுகிற மூன்றாம்தர எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியம் குறித்து ஏற்படுத்திருக்கும் அவமானகரமான தோற்றங்கள் கொஞ்சமல்ல. நமது அரசியல் தலைவர்களும் நடிகர்களும் பிற சமூகங் களிடம் எத்தகைய அவமானங்களை நமக்குத் தேடித்தந்து கொண்டிருக்கிறார்களோ அதன் ஒரு நீட்சியாகவே இந்த எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

    சாகித்ய அகாதெமியின் தமிழ்சார்ந்த தேர்வுகளைத் தீர்மானிக்கும் பிற்போக்கு அதிகாரவர்க்க, இலக்கியவிரோதக் கும்பல் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும். அகாதெமி விருதுகள் தொடர்பான செயல்பாடுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும்.

    அடுத்த ஆண்டும் இதேபோக்குகள் தொடரும் பட்சத்தில் இந்த விருதுகளைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட திரைமறைவு வேலைகள் அனைத்தையும் நாம் பகிரங்கமாக விவாதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அத்தோடு சாகித்ய அகாதெமியின்மீது பொதுநல வழக்கு தொடருவது, எந்தக் கூச்சமும் இன்றி கீழான வழிமுறைகளைப் பின்பற்றி இந்த விருதைத் தொடர்ந்து பெற்றுவரும் மூன்றாம்தர எழுத்தாளர்களின் கொடும்பாவிகளை சாகித்ய அகாதெமி அலுவலகத் தின் முன் கொளுத்துவது போன்ற வழிமுறைகளையும் நாம் யோசலாம்.

    ஜனவரி, 2010

    2.உயர் கல்வியின் இருண்ட பக்கங்கள்

    இந்தியாவில் உயர் கல்வி அமைப்பின் நோய்மைகளையும் சீரழிவுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பெரும் விவாதமாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சர்ச்சை உருவெடுத்துள்ளது. இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்த நாட்டின் மகத்தான மனித வளத்தையும் வைத்துச் சூதாடும் கல்வி வியாபாரத்தின் கோரமுகங்களைப் பற்றிய விவாதம் இது. கல்வித் துறையினர், அரசியல்வாதிகள், பண முதலைகளின் கூட்டணியில் உருவான இந்தச் சீரழிவிற்கும் சுரண்டலுக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பலியாகி இருக்கின்றன, பலியாகி வருகின்றன.

    கல்வியை, குறுக்கு வழியில் பணம் ஈட்டுவதற்கான தங்கச் சுரங்கமாக அடையாளம் கண்டுகொண்ட அரசியல்வாதிகள் ஏராளமான அளவில் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை தங்கள் உறவினர்கள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் திறந்தனர். மக்களின் ஆதார உரிமையும் தேவையுமான தரமான கல்வியை பரவலாக அளிக்க முடியாத நமது அரசாங்கத்தின் தோல்வி இந்தத் தனியார் கல்வி அமைப்புகள் காளான்கள் போல் வளர்வதற்கான சமூகச் சூழலை உருவாக்கின. ஆரம்பப்பள்ளியிலிருந்து இன்று உயர் கல்வித்துறை வரை இந்தச் சீரழிவு விஸ்வரூபம் எடுத்து விட்டது. கட்டுப்பாடற்ற சுரண்டலையும் கண்காணிப் பற்ற ஊழலையும் வேண்டிய தனியார் கல்வி அமைப்புகள் எந்த விதிமுறைகளுக்கும் உட்படாத தமது செயல்பாடுகளுக்காக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற வழி முறையைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டன.

    நிகர்நிலைப் பல்கலைக் கழகம் என்ற கருத்தாக்கம் ஒரு கல்வி நிறுவனம் சுதந்திரமான முறையில் தனிச்சிறப்பு வாய்ந்த கல்வியினையும் கல்வி சார்ந்த ஆய்வுகளையும் ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட தாகும். பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்படாமல் பாடத்திட்டம், தேர்வு முறை, மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள் போன்றவற்றைதானே வகுத்துக்கொள்ளும் வாய்ப்புப் பெற்ற நிகர்நிலை அந்தஸ்துள்ள இந்தக் கல்வி அமைப்புகள் இந்தச் சுதந்திரத்தை எவ்வளவு கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் சீரழிக்கமுடியுமோ அந்த அளவு சீரழித்திருக்கின்றன.

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்ட பி.என்.டாண்டன் குழு 44 கல்வி நிறுவனங்களின் நிகர்நிலை அந்தஸ்து பறிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 14 நிறுவனங்களும் அடங்கும். இலட்சக்கணக்கில் பணம் செலுத்தி இந்தக் கல்வி அமைப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் வன்முறையில் இறங்குகின்றனர். இந்தக் கல்வி அமைப்புகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கிய பல்கலைக் கழக மானியக் குழுவின்(யூஜி.சி) மாபெரும் ஊழல் இப்போது பகிரங்கமாகியிருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்குரிய எந்த அடிப்படை கட்டுமான வசதிகளும் இல்லாமை, ஏராளமான மாணவர்களின் சேர்க்கை, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, கல்வி அமைப்பின் நிர்வாகம் முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுவதால் உருவாகும் ஜனநாயகமற்ற போக்கு, கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவர்கள்மேல் செலுத்தப்படும் சர்வாதிகாரம் மற்றும் தகுதியற்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள் என எண்ணற்ற பிரச்சினைகளை இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளன.

    நமது கல்லூரிகள் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் 25 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே பணிக்கு அமர்த்தத் தகுதியானவர்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பட்டதாரிகளாக வெளியே வரும் மாணவர்கள் பெரும்பாலானோர் சிந்தனைத்திறன், மொழித் திறன், வேலைத்திறன், ஆளுமைத் திறன் ஏதுமற்றவர்களாகவே வெளியே அனுப்பப்படுகின்றனர். வளாக நேர்முகத் தேர்வுகளை நடத்தும் நிறுவனங்கள் அதில் பயனில்லை என்று முடிவு செய்து நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்யத் துவங்கிவிட்டன. கல்விக்கும் வேலைவாய்ப் பிற்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதைவிடவும் பிரமாண்டமானதாகிவிட்டது.

    இந்தச் சூழலுக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மட்டும் காரணம் அல்ல, அரசுக் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களால் நிர்வகிக்கப்படும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் அதே தரத்தில்தான் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் தரமான கல்வி என்ற பெயரில் ஏராளமான குடும்பங்களை பொருளாதாரரீதியாகச் சூறையாடி மாணவர்களின் எதிர்காலத்தையும் சூறையாடும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் செயல்பாடு கொலைக்குற்றத்திற்கு நிகரானது.

    44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மீதான நடவடிக்கையை மார்ச் 8 வரை நிறுத்திவைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. யூஜிசி வழங்கிய அங்கீகாரத்தைக் காட்டி நாட்டின் பெரிய வழக்கறிஞர்களின் உதவியுடன் மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் முனைந்துள்ளன.

    மத்திய அரசு மிக உறுதியுடன் இந்தக் கல்வி வியாபாரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கவேண்டும். தரமற்ற நிறுவனங்களுக்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு அங்கீகாரம் வழங்கிய யூஜி.சி ஆய்வுக் குழுவினைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை நெறிப்படுத்துவதுடன் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு தெளிவான உறுதியான விதிமுறைகளும் அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை பிற உயர் கல்வி அமைப்புகள் மேலும் செய்யப்படவேண்டிய அவசியமான சீர்திருத்தங்களுக்கு முதல்படியாக இருக்கவேண்டும்.

    பிப்ரவரி, 2010

    3. சில அரசியல் ஜோதிடங்கள்

    அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடை பெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அரசியல் சூதாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. காங்கிரஸ் இதை முதலில் ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் ஜெயலலிதா, சோனியா காந்தியைச் சந்தித்தது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே ராகுல் காந்தி தமிழக வருகையின் போது மரியாதை நிமித்தமாகக்கூட தி.மு.க. தலைவர்கள் யாரையும் சந்திக்காதது காங்கிரஸின் மனப்பான் மையைக் கோடிட்டுக் காட்டியது. இதனால் காங்கிர ஸூம் தி.மு.க.வும் ஏதோ கருத்துரீதியாகப் பிளவுண்டிருப்பதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. அடுத்த தேர்தல் பேரத்திற்காக இப்போதே செய்யப்படும் முஸ்தீபு இது. அதன் ஒரு பகுதிதான் சோனியா -ஜெயலலிதா சந்திப்பும்.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த வெற்றி, அது தி.மு.க.வைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையைப் பெருமளவில் குறைத்துவிட்டது. தி.மு.க.வின் ஆதரவு இல்லாவிட்டால்கூட வேறு சில உதிரிக்கட்சிகளின் உதவியுடன் தனது ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது தான் யதார்த்தம். ஆனால் தி.மு.கவின் நிலை மிகவும் சிக்கலானது. மாநில ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, மத்திய

    Enjoying the preview?
    Page 1 of 1