Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruppugal Kathaigal
Thiruppugal Kathaigal
Thiruppugal Kathaigal
Ebook129 pages2 hours

Thiruppugal Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

This book contains many spiritual stories written by Lakshmi Rajarathinam
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580115702010
Thiruppugal Kathaigal

Read more from Lakshmi Rajarathnam

Related to Thiruppugal Kathaigal

Related ebooks

Reviews for Thiruppugal Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruppugal Kathaigal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    திருப்புகழ் கதைகள்

    Thiruppugal Kathaigal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    திருப்புகழ் கதைகள்

    லட்சுமி ராஜரத்னம்

    பொருளடக்கம்

    1. புன்னகை மன்னன்

    2. குதிரை வியாபாரி

    3. காவல்காரன்

    4. அன்றைய சேது

    5. மயிலையிலே கபாலீஸ்வரா…

    6. வியாச பாரதம்

    7. மச்சான் பேரு மதுர

    8. பூ வேண்டாம் புல் போதும்

    9. ராமதூதன்

    10. குகை பிளந்த குஹவேல்

    11. அசுரகுல பக்தன்

    12. முருகனின் தம்பி

    13. கயிலையில் ஓர் அரங்கேற்றம்

    14. குழந்தை குருநாதன்

    15. சீர்காழி வித்தகர்

    16. பகலில் இருள்

    17. மத்தான மந்தரமலை

    18. பழத்திற்காக பழமானவன்

    19. ஒரு பாடல் மூன்று கதைகள்

    20. உலகை அளந்தவன்

    21. விஷமக்கார பிள்ளை

    முன்னுரை

    முருகப் பெருமானை நாவினிக்க, மனம் இனிக்க நாளெல்லாம் மறக்கும்படியாக திருப்புகழ் பாடியிருப்பவர் அருணகிரிநாதர். திருப்புகழில் இல்லாதது எதுவும் இல்லை. உபநிடதம், தத்துவம், புராண இதிகாசங்கள் என்று முங்கி முங்கிக் குளித்து முத்தெடுக்கலாம். காணபத்தியம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம் என்று ஷன்மதங்களையும், இதில் பின்னிப் பிணைந்துள்ளார். திருப்புகழால் மாலை சூட்டிய அருணகிரிநாதர் பெரியபுராணம், கந்தபுராணம், ராமாயணம், பாரதம் என்று சம்பவங்களை ஆங்காங்கு நவரத்தினங்களாக பதித்திருக்கிறார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் கவிதையின் மரபு என்றாலும் ஆங்காங்கு விரிவாகச் சொல்லும்படி திருப்புகழ் வரிகள் அமைந்திருப்பது திருப்புகழின் சிறப்பு. அப்படிப்பட்ட வரிகளை எடுத்து விரிவாக கதையை எழுதியிருப்பதே திருப்புகழ் கதைகள். புகலிவித்தகரான ஞானசம்பந்தரைப் போல அமிர்தகவி பாடவேண்டும் என்று சொன்னவர் அருணகிரிநாதர். அமிர்தகவி என்பது தேவாரம். இக்கதைகளைப் படிக்கும் பொழுதோ அந்தக் காலத்திற்கே போவது போல இருக்கும். சம்பவங்களின் அமைப்பு அப்படி. அதனால் இது நோய் தீர்க்கும் மருந்து என்று கூறலாம். இதை புத்தக வடிவில் கொண்டு வரும் அல்லயன்ஸ் பூரீநிவாசன் அவர்களுக்கும், படிக்கப் போகும் உங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - லட்சுமி ராஜரத்தினம்

    திருப்புகழ் கதைகள்

    1. புன்னகை மன்னன்

    சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார் என்று சொல்கிறோம், அப்படி என்றால் என்ன? அதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

    தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்று மூன்று அசுரர்கள்.

    அசுரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு. தாங்கள் அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அது. அந்த எண்ணம் இந்த அசுரர்களுக்கும் தோன்றியது. உடனே அவர்கள் பிரம்மாவைக் குறித்து பெருந்தவத்தைச் செய்தார்கள். பக்திக்குக் கடவுள் இரங்கித்தான் ஆக வேண்டும். பிரம்மா தோன்றினார்.

    பக்தியை மெச்சினோம். என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் என்றார்.

    இறைவனிடம் கேட்கும்பொழுது இறவா வரத்தைக் கேட்டுப் பெற வேண்டும். அறுபத்து நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிவபெருமானிடம் இறவா வரம் தாரும் என்றுதான் கேட்டார்.

    மரணமில்லாமல் பெருவாழ்வு பெறுதல் அரிது. அழியா முக்திதான் ஆனந்தம். ஆனால் அசுரர்கள் தங்கள் தவத்தின் வலிமையால் கேட்பது கிடைக்கும் என்ற ஆணவத்தில் இருந்தார்கள். அதனால் அண்ணலே, எங்களுக்கு அழியா வரத்தைத் தந்தருள வேண்டும் என்று கேட்டார்கள்.

    அருமைக் குழந்தைகளே… அழியாதவர்கள் யாருமில்லை. கற்ப காலம் கழிந்த பின்பு நானும் அழிந்து போவேன். எல்லாமே அழிந்து போகும். அழியாத ஒருவர் ஈசனார் ஒருவரே. தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். இதனால் வேறு ஏதாவது ஒரு வரத்தைக் கேளும் என்றார்.

    பொன், வெள்ளி, இரும்பினாலமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் - பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை விரும்பிய இடத்திற்குப் பெயர வேண்டும். அந்த முப்புரமும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி வேறு யாவராலும் மாளாத வரம் வேண்டும் என்று கேட்க நான்முகன் அவர்கள் விரும்பிய வரத்தை அளித்தார்.

    மூவசுரர்களும் அளவற்ற அவுணர் சேனைகளை உடையவர்கள். மயன் எனும் தேவதச்சனை அழைத்து தங்களின் விருப்பப்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், பொன் மதிலையும் அமைத்துக் கொண்டார்கள். சிவ பூஜையைக் காலந்தவறாது புரிந்து வந்தாலும். நினைத்த பொழுது அசுர குலத்தின் இரக்கமற்ற தன்மையோடு முப்புரங்களோடு போய் தேவர்களுக்கும் இன்னல் விளைவித்தார்கள்.

    அவர்கள் நமதடியார்கள் என்பதால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார் முக்கண்ணன்.

    மேரு மலையை அடைந்த தேவர்கள் தவமிருந்தனர். தேவர்கள் கூட்டமாகத் தவமிருப்பதைக் கண்டு ஆலமுண்ட கண்டப் பெருமான் அருள் வடிவமான நந்தியெம் பெருமானை அழைத்தார்.

    நந்தியே, அமரர்களிடம் சென்று திரிபுரத்தவரை ஜெயிக்க இரதம் முதலிய யுத்த கருவிகளை ஆயுதப்படுத்தச் சொல்ல கட்டளையிடுக என்றார்.

    நந்தி பெருமான் மேரு மலையை அடைந்து சிவனின் உத்தரவை தேவர்களிடம் கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த அமரர் பெருமக்கள் ஆனந்தமுற்று இரதத்தை அலங்காரம் செய்தார்கள். எப்படி?

    மந்தர கேசரி மலைகள் அச்சாகவும், சந்திர - சூரியன் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்களும் பதினான்கு தட்டுகளாகவும். உதயாஸ் திரிகள் கொடிஞ்சியாகவும் செய்தார்கள். நதிகள் கொடிகளாகப் படர்ந்தன. நட்சத்திரங்கள் விதானமாகக் கட்டப்பட்டன. அட்டப் பர்வதங்கள் தூண்களாகத் தாங்கின. எட்டுதிக்கு யானைகள் இடையீற்றாகவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும் கலன்களாகவும் விளங்கின.

    மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும் வைக்கப்பட்டன. நாள் முதலியன எண்ணெய் ஊற்றும் இடுக்குகளாகவும் அமைந்தன.

    புராண வேதாகமங்கள், சாத்திரங்கள், மனுக்கள் எல்லாம் மணியாயின. மருத்துக்கள் படிகளாயின. வேதங்கள் நான்கும் நான்கு குதிரைகளாக இரதத்தில் பூட்டப்பட்டன. சதுர்முகன் சாரதியானார். பிரணவ மந்திரமே குதிரை தூண்டுகோலாகக் கொண்டது. கங்கை, அதிதி முதலிய தேவ நங்கையர் நாற்புறமும் சாமரம் வீச நின்றார்கள். தும்புரு நாரதர் இசை பாடவும், அரம்பையர்கள் போன்ற தேவமாதர்கள் நடனமாடவும் தயாரானார்கள்.

    மேரு மலை வில்லாகவும், நாகராஜன் நாரையாகவும், துளசியணிந்த பச்சை வண்ணப் பெருமாள் பாணமாகவும் சரஸ்வதி வில்லிற் கட்டிய மணியாகவும், அக்னி தேவன் அம்பின் கூராகவும், வாயு தேவன் அம்பிற் கட்டிய இளகாகவும் தயாரானார்கள். இதையறிந்த எம்பெருமான் மெல்ல நடந்து வந்து இரதத்தில் காலை வைக்க அச்சு முறிந்தது. இதை,

    "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்

    அச்சது பொடி செய்த அதிதீரா"

    என்கிறது திருப்புகழ்.

    முதலில் வினாயகரை பூஜை செய்யவில்லை என்று உணர்ந்து பூஜை செய்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1