Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jana Janathibathikku
Jana Janathibathikku
Jana Janathibathikku
Ebook232 pages2 hours

Jana Janathibathikku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580111002088
Jana Janathibathikku

Read more from Arnika Nasser

Related to Jana Janathibathikku

Related ebooks

Related categories

Reviews for Jana Janathibathikku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jana Janathibathikku - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    ஜனாப் ஜனாதிபதிக்கு…

    Jana Janathibathikku...

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books
    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அதற்காக?

    மனிதம் கொண்டாடு

    மம்மானி

    நோன்பாளி

    தலாக்

    ரபிக்கா

    முகமது குத்தூஸ்

    குர்பானி

    உள்நாட்டு அகதி

    தவிர அனைவரும்

    ஜனாப் ஜனாதிபதிக்கு

    பைத்து கோஷ்டி ...

    விரால்மின் குழம்பு ...

    தானம்...

    பாங்கு...

    ஆடு...

    கதீஜா...

    சுன்னத் கல்யாணம்...

    நோன்புக்கஞ்சி...

    பாபி...

    அவரவர்...

    தப்ரிஷ் அலி...

    அம்மாவைப் போல..

    ரமிஸ்பாத்திமா...

    அவன் வருவானா?...

    ஜனாப் ஜனாதிபதிக்கு…

    அதற்காக?

    ஆகஸ்டு 2001 நான்காவது வார வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி. அயோத்தியா பாக்கம்.

    எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருந்தது அந்த பள்ளிவாசல். பள்ளிவாசலின் பின் விஸ்தீரணமாய் கபர்ஸ்தான் விரிந்திருந்தது. கபர்ஸ்தான் செடிகளை வெள்ளாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சவக் குழிகள் வீறல் விட்டு உள் வாங்கியிருந்தன. புதிய சவக் குழிகள் வெட்டும் போது பழைய சவக்குழிகளின் எலும்புகள் எட்டிப் பார்த்து கிடந்தன.

    பள்ளிவாசலின் வலது முன்புறம் 'ஒது' செய்ய செவ்வக நீச்சல் குளம். குளத்தின் நீர்வாழ் தாவரங்களும், அதனிடையே புகுந்தோடும் விரால் மீன்களும் பார்வை சுகம் கூட்டின. பள்ளிவாசலின் பிரதான வாசலின் வலப்புறம் மதர்ஸா இருந்தது. வேதப்பாடங்கள் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் கோரஸாய் அரபு படித்தன. வாசலின் இடது முகப்பில் தொழுகைக் கம்பளம், குர்ஆன் தமிழ் பதிப்பு, தஸ்பமணி மாலைகள் விற்கும் கடை திறந்திருந்தது.

    - தொழுகைக்கு பின் அஜரத் பயான் செய்ய ஆரம்பித்தார்.

    கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஓர் இளைஞன் அமர்ந்தவாறே உடல் உயர்த்தி ஒரு கேள்வி என்றான்.

    என்ன? இடைமறித்த கோபம் தெரிந்தது.

    நமக்கும் இந்து சமுதாயத்துக்கும் இடையே அண்டர் கரண்ட்டில் வெறுப்பும் , துவேஷமும் நாளுக்கு நாள் அபாயகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மதத்தீவிரவாதிகளின் அட்டூழியங்களால் உலகம் முழுவதும் இஸ்லாமோபோபியா மெதுமெதுவாய் உருவாகிவருகிறதென்று 'ஹிந்து நாளேடு குறிப்பிடுகிறது. மதச்சண்டைகள் நிரந்தரமாய் வராமலிருக்க ஆக்கப்பூர்வமான யோசனைகளை நீங்கள் பயானில் ஒரு 5 நிமிஷம் ஒதுக்கிக்கூறினால் என்ன?

    அக்பரும் இம்தியாஸும் எழுந்து கத்தினர். "கோழைப் பயலே! வாயை மூடிக்கொண்டு உட்கார். உன்னைப் போன்றவர்களால்தான் மற்ற சமுதாயத்தினர் நம் தலை மேல் நின்று கூத்தாடுகிறார்கள்! 'அண்டர்கரண்ட்', 'இஸ்லாமோ போபியா போன்ற அமெரிக்க, நாய்களின் ஆங்கில வார்த்தைகளை வார்த்தைகளை பயன்படுத்தாதே.

    இவ்வளவு பேசுகிறாயே... வினாயகர் ஊர்வலம் இந்த வருஷம் நம்ம மசூதி வழியா போகக்கூடாதுன்னு போலீஸ் கிட்ட எவ்வளவு கெஞ்சினம் தெரியுமா? கேட்டாங்களா? கேட்கலையே... அனுமதி கொடுத்திட்டாங்க. வர்ற ஞாயிற்றுகிழமை நம்ம பள்ளிவாசல் வழியாகத்தான் ஊர்வலம் போறாங்க. போ- போய் முக்காடு போட்டுத் தூங்கு!" இரு இளைஞர்களும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கம்ப்யூட்டர் சென்டர் நடத்துபவர்கள்.

    ஊர்வலம் அமைதியா நடக்கும்னு நான் நம்புகிறேன்!

    உன் நம்பிக்கையைத் தூக்கி குப்பைல போடு. த பார்! ஊர்வலம் அமைதியா போச்சுன்னா நாங்களும் அமைதியா இருப்போம். அவங்க ஏதாவது திட்டமிட்டு வன்முறை பண்ணினா நாங்க பத்து மடங்கா பதிலடி கொடுப்போம். பாதுகாப்புக்கு பள்ளிவாசலுக்குள்ள ஆயுதங்கள் பதுக்கியிருக்கம் தெரியுமா உனக்கு?

    அமைதி விரும்பும் இளைஞன் அதற்கு மேல் வாதம் பண்ணிக்கொண்டிருக்காமல் வினாயகர் ஊர்வலம் அசம்பாவிதம் இல்லாமல் நடக்க துவா செய்ய ஆரம்பித்தான்.

    26.08.2001. ஞாயிற்றுக் கிழமை கோயில் ஒட்டிய  நீண்டத்தெரு

    வரிசையாக ட்ராக்டர்களும், மாட்டுவண்டிகளும் மீன் வண்டிகளும் நின்றிருந்தன. அவைகளில் விதவிதமான வடிவ வினாயகர் சிலைகள் மிடுக்காய் அமர்ந்திருந்தன.

    இந்து புராண இலக்கியம் அதீத கற்பனை கொப்பளிக்க உலகிற்கு அளித்த உன்னத பரிசுதான் வினாயகர் உருவம். வினாயகரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பிடிக்கும்.

    ஊர்வலத்துக்குத் தயாராய் ஆயிரக்கணக்கான காவியுடை வாலிபர்கள் குழுமியிருந்தனர். வாத்தியக் கோஷ்டியும் நின்றிருந்தது.

    ஒரு மாதிரி காவித் தொப்பி அணிந்த இந்து அமைப்புத் தலைவர் மெஹாபோனில் வன்முறைத்தூண்டி பேசினார்.

    ஓர் அமைதி விரும்பும் இந்து இளைஞன், நாம் பிரியமாய் வழிபடும் பிள்ளையாரை கடலில் போட்டு மிதிப்பது பெரும்பாலான இந்து சமுதாயத்துக்கு பிடிப்பதில்லை. மெஜாரிட்டி மக்களுக்கு பிடிக்காத ஒரு காரியத்தை பண்ணுவது மட்டுமல்லாமல் வருடாவருடம் இதனை சாக்காக வைத்து முஸ்லிம் சகோதரர்களுடன் சண்டையிட்டு இரத்தம் சிந்துவது என்ன நியாயம்?

    முதுகலைப்பட்டப்படிப்பு படித்த பாலாஜியும், சாரதியும் அமைதி இளைஞனின் மீது எகிறினர். சிறுபான்மை மக்களுக்கு அதிக சலுகைகள் கொடுத்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டோம். சிவலிங்கத்தின் மீது கால் வைத்து பக்தி காட்டிய கண்ணப்ப நாயனாரை உனக்கு தெரியாதா? வினாயகர், சிலையை கடலில் கரைப்பதை கொச்சைப் படுத்திப் பேசாதே. நாம் என்ன பாகிஸ்தான் தெருவிலா வினாயகர் ஊர்வலம் நடத்துகிறோம்? நாங்க அமைதியாத்தான் ஊர்வலம் போவோம். மாட்டுக்கறி திங்ற அவன்க ஏதாவது ஏடாகூடம் பண்ணினா தொம்சம் பண்ணிருவோம் அவன்களை. ராம்ராம்!

    அமைதி விரும்பும் இளைஞன் ரயில் வண்டி பூச்சியாய் சுருண்டான். பக்தி பாடல்கள் ஒலிக்க - வாத்திய இசைகள் முழுங்க - காவி இளைஞர்கள் ஆவேச நடனமாட - ஊர்வலம் பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. ஊர்வலம் மூடிய கடைகளை கடக்கும் போது சிலர் மூடிய கடைகளின் மீது கல் வீசினர். நடைமேடையில் போகும் பர்தா பெண்களை பார்த்து சீழ்க்கையடித்தனர்.

    ஊர்வலம் பள்ளிவாசலை நெருங்கும் போது 'அஸர்' தொழுகைக்கான பாங்கோசை கூடுதல் ஒலியினில் ஒலித்தது.

    பாங் கோசையும் இந்துமத பக்தி பாடல்களும் கலந்து மெய்யாலுமே காற்று மண்டலத்தில் இறைமை பூத்தது.

    மறுநொடி இறைமை ஓடி ஒளிந்தது.

    பர்தா பெண்களை கிண்டல் செய்வோரை பள்ளிவாசல் முத்தவல்லி கண்டிக்க...

    ஊர்வலத்தில் ஊடுருவியிருந்த ஒரு வன்முறை விரும்பி பழைய ஒற்றை செருப்பை முத்தவல்லி மீது வீச...

    பதிலுக்கு பள்ளிவாசலுக்குள்ளிலிருந்து கருங்கற்களும், அழுகல் முட்டைகளும் ஊர்வலத்தினர் மீது வீசப்பட்டன.

    தொடர்ந்து இரத்தக்களறி - கண்ணீர்புகை - துப்பாக்கிச்சூடு- உயிர்பலி.

    கைது செய்யப்பட்டிருந்த அக்பர், இம்தியாஸ், சாரதி, பாலாஜி மேலிட ஆலோசனைப் படி காவல்துறை ஆய்வாளரின் சொந்த ஜாமீனில் விடுக்கப்பட்டனர்.

    நள்ளிரவு. அயோத்தியா பாக்கத்தில் 7.2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் பூத்தது. கட்டிடங்கள் நொறுங்கின.

    இயற்கை மத பாரபட்சமில்லாது உயிர்களை விழுங்கின. திரும்பும் இடமெல்லாம் மரண ஓலம்.

    இந்துக்கள் பகுதியில் உயிர்தேசம் அதிகம். முஸ்லிம் அமைதி இளைஞன் ஆலோசனைப்படி அக்பரும் இம்தியாஸூம் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை திரட்டிக்கொண்டு, இடுபாடுகளில் சிக்கியிருந்த இந்து மக்களைக் காப்பாற்ற ஆரம்பித்தனர்.

    காப்பாற்றப்பட்டோருக்கு தற்காலிக மருத்துவ முகாமில் முதலுதவி செய்யப்பட்டது. டெட்டால் நனைத்த காட்டனால் காயங்களை சுத்தம் செய்து ட்ரஸிங் செய்தனர் முஸ்லிம் இளைஞர்கள்.

    சரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து சாரதி, பாலாஜியை சிறு காயமும் இல்லாது மீட்டனர் அக்பரும் இம்தியாஸூம்.

    முஸ்லிம் இளைஞர்களின் இரத்தம் காயம் பட்ட இந்து இளைஞர்களுக்கு செலுத்தப்பட்டது.

    விடிய விடிய மதம் தாண்டிய மனிதாபிமானம் பூகம்பம் ஏற்படுத்திய சேதாரங்களை பழுதுபார்த்தது.

    பார்த்த சாரதி கோயிலின் உட்பிரகாரம். அமைதி விரும்பும் இந்து இளைஞன் பாலாஜி, சாரதியிடம் பேசினான். நம் சமுதாயத்தின் ஆயிரக்கணக்கான மக்களை முஸ்லீம் சகோதரர்கள் இடிபாடுகளிலிருந்து மீட்டுக் கொடுத்தனர். பூகம்பத்தால் பாதிக்கப் பட்டோரின் விலை உயர்ந்த உடமைகளை திருடு போகாமல் பாதுகாத்துள்ளனர். இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்துமக்களின் உயிர்களை இரத்ததானம் பண்ணி காப்பாற்றி யுள்ளனர். நாம் அவர்களுக்கு நம் நன்றியறிதலைக் காட்ட வேண்டும். அன்புக்கு பிரதியுபகாரமாய் கூடுதல் அன்பு!

    உண்மைதான் நண்பா. அவர்களுக்கு பிரதியுபகாரமாய் என்ன பண்ணலாம்?

    பூகம்பத்தால் அவங்க மசூதி இடிஞ்சுபோயிருக்கு. புனரமைக்க பல இலட்சம் செலவாகும். நாம் பணமும் உடலுழைப்பும் ஈந்து மசூதியை புதுசா கட்டித் தருவோம். மீண்டும் அவர்கள் அப்பள்ளிவாசலில் வழக்கம் போல தொழுகை நடத்தவேண்டும். தொழுகைக்கு கட்டியம் கூறும் பாங்கோசை கேட்டு நம் காது குளிர வேண்டும்!

    தேவைக்கும் அதிகமாய் பணம் வசூலானது. இரண்டு மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான இந்து இளைஞர்கள் உழைத்து பள்ளிவாசலை புனரமைத்துக் கொடுத்தனர்.

    'இடிக்கும் கரசேவை' இங்கு 'கட்டும் கரசேவை' ஆனது.

    புனரமைப்புக்குப் பின் நடத்தப் பட்ட முதல் 'ஜூம்மா' தொழுகையில் கலந்து திரும்பும் அக்பரும், இம்தியாஸூம் வெளிவாசலில் காத்திருக்கும் பாலாஜி, சாரதியை கட்டிக்கொண்டனர். இரு சமுதாய அமைதி இளைஞர்கள் அர்த்தப் புன்னகை வெடித்தனர்.

    நண்பா! இனி யாரும் எக்காரணத்தைக் காட்டியும் நம்மை பிரிக்க முடியாது. வரும் காலத்தில் நம் இரு சமுதாயமும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் போல அமைதியாக வாழும். நாம் இந்தியர்கள். மகங்களைக்காட்டி நம்மை அந்நியர்கள் துண்டாட  துணை போகமாட்டோம்!

    கோரஸ் ஆமோதிப்புக் குரல்கள் உயர்ந்து ஒலித்தன.

    13.09.2002 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி அயோத்தியா பாக்கம் பள்ளிவாசல்

    ஜூம் மா தொழுகைக்குபின் அஜரத் பயான் செய்ய ஆரம்பித்தார்.

    அமைதி விரும்பும் முஸ்லிம் இளைஞன் கையுயர்த்தினான்.

    ஒரு கேள்வி!

    என்ன?

    செப்டம்பர் 11 ட்வின்டவர் சிதறடிப்பு, குஜராத் இனப் படுகொலைகள் - காஷ்மீரில் பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாதம். இவை இஸ்லாமுக்கும், இஸ்லாம் மக்களுக்கும், ஒட்டுமொத்த உலக அமைதிக்கும் எதிரானவை. ஒருவனின் குற்றத்தை அவனின் மதம் பாதுகாக்காது. மதத்தின் பெயரால் யாரின் குற்றத்தையும் யாரும் நியாயப்படுத்தக் கூடாது. மதத்துவேஷம் வளர்க்கும் காரணிகளை வளரவிடக்கூடாது. மதவெறி இல்லாத மதப்பற்றை உங்கள் பயானில் கொஞ்சம் நீங்கள் வலியுறுத்தினால் என்ன?

    வலைத்தொப்பி அணிந்த ஓர் இளைஞன் இம்தியாஸ்,அக்பரிடம் முணுமுணுத்தான். அதுவரை அமைதியாக இருந்த அக்பர் சிறினான்.

    திருந்திட்டான்கன்னு நினைச்சம். இந்தத் தடவையும் நம்ம மசூதி வழியாத்தான் ஊர்வலம் போறான்களாம். கல்வியை காவிமயமாக்கும் துரோகிகள். நாம் ரெத்தம் கொடுத்தது. அவன்க மசூதிய புதுப்பித்துக் கொடுத்தது எல்லாம் பழையகதை. இம்முறையும் வன்முறைக்குப் பதில் அதிரடி வன்முறைதான்!

    ஊர்வலத்தில் ஊடுருவியிருந்த ஒரு வன்முறை விரும்பி முஸ்லிம்கள் பற்றி இழிவாய் கோஷமிட்டான்.

    அவ்வளவுதான்...

    வன்முறை ஊழித்தாண்டவமாடியது.

    இரத்தக்களறி - கண்ணீர்புகை - கடைகள் சூறை - துப்பாக்கிச் சூடு.

    அக்பர், இம்தியாஸ், பாலாஜி, சாரதி தலைமறைவாயினர். மதத்தீவிரவாதிகளின் எண்ணிக்கையில் நான்கு கூடியது.

    பரம்பொருள் விரக்தியாய் முணுமுணுத்தது. மதநல்லிணக்கம் அதி அவசியம் தான். அதற்காக நான் அடிக்கடி பூகம்பங்கள் உருவாக்கி உதவ முடியுமா?

    மனிதம் கொண்டாடு

    காலைச் சூரியனின் மஞ்சள் கிரணங்கள் நடைமேடை மீது படர்ந்திருந்தன. மாநகராட்சி குப்பைத்தொட்டியின் மீது சிதறியிருந்த பிராய்லர் சிக்கன் கடை கழிவுகளை இரு காகங்கள் கொத்திக் கொண்டிருந்தன.

    முந்தின நாள் வரையப்பட்ட ராமர் படம் ஆங்காங்கே வர்ணம் தொலைத்திருந்தது. ராமரின் தலைமாட்டில் தலைவைத்து அலங்கோலமாய் கிடந்தான் அவன். இடுப்புவரை கம்பீரமாய் இருந்த அவன் கால்கள் இளம்பிள்ளைவாதத்தால் சூம்பியிருந்தன. பரட்டை கேசம். ஒழுங்கீனமான தாடி. அவனின் இடது புறத்தில் சக்கரம் பதித்த பலகை வண்டி ஓய்வெடுத்தது. ராமர் ஓவியத்தைச் சுற்றி பலவர்ண சாக்பீஸ்கள் இரைந்து கிடந்தன.

    ஒரு நாய் மெதுவாக அவனருகே வந்து அவனது வாயை முகர்ந்து பார்த்தது. அவன் அசையவில்லை. தாடியை கடித்து இழுத்தது. அவன் அசையவில்லை.

    'தாமு’ தேநீர் விடுதியின் முன் கிடக்கும் நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்து டீ குடிததுக் கொண்டிருந்த பச்சைக் கட்சி கவுன்சிலர் மருதை தெரு ஓவியனின் தாடியை ஒரு நாய் கடித்து இழுப்பதை பார்த்துவிட்டான். அவசரமாய் டீயை குடித்து காலி கிளாஸை பெஞ்ச்சில் தொம் என்று வைத்துவிட்டு ஓடினான். ஏய்...ச்சூசூ... சூசூசூ... நாய் அசராமல் இப்போது நடைமேடை ஓவியனின் சட்டையைக் கடித்து குதறியது. மருதை குனிந்து ஒரு கல்லை எடுத்து நாயை அடித்தான். அடிபட்ட நாய் ஊளையிட்டபடி ஓடியது.

    மருதை நடைமேடை ஓவியனின் முன் குனிந்தான். நாய் வந்து நக்கியது கூட தெரியாம என்னய்யா தூங்கிட்டு கிடக்க? தூக்கமா இல்ல நைட் அடிச்ச சரக்கோடமப்புல மயங்கி கிடக்கியா?

    மஞ்சள் கட்சி கவுன்சிலர் அங்குசாமியும், சிவப்பு கட்சி கவுன்சிலர் பிச்சையும் ஓடி வந்தனர்.

    அவனை நம்பளை மாதிரி நினைச்சியா மருத? அவன் தண்ணி அடிக்கமாட்டான். உடம்புக்கு என்ன நோவு வந்து இப்படி கிடக்கானோ- நல்லா குனிஞ்சு தொட்டுப்பார்!

    மருதை தொட்டு பார்த்தான். நடைமேடை ஓவியனின் உடல் ஜில்லிட்டுப் போயிருந்தது.

    பார்ட்டி செத்துப்போய் ரொம்ப நேரமாகுது!

    செத்துப் போய்ட்டானா? அட கண்ட்றாவியே..

    தாமு ஓடிவந்தார். பூங்கதிருக்கு என்னாச்சு?

    பூங்கதிரா?

    "ஆமாய்யா. இந்தாளுக்கு ஊர் நாகர்கோவில்

    Enjoying the preview?
    Page 1 of 1