Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andru Oru Naal...
Andru Oru Naal...
Andru Oru Naal...
Ebook191 pages1 hour

Andru Oru Naal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘அன்று ஒரு நாள்…’ என்று ஹம்சா தனகோபால் அள்ளித் தருகிற இந்த நாவலில் இந்த மண்ணின் பலம், பலவீனம் இரண்டும் வேறு வேறு அல்ல - ஒன்றுதான் என்கிற உறுதி பீறிட்டு வருகிறது.

சின்ன வயதில் சேலம் நகரின் மையப்பகுதியில் அவர் நெஞ்சில் விழுந்த அமிலத் துளிகளே இந்த நாவலுக்கான ஆரம்ப வித்துக்கள்.

சமுதாயத்தின் பொறுப்பின்மை, போலித்தனம், பொல்லாங்கு இவற்றைத் தமது இந்த நாவலில் வலிமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஹம்சா தனகோபால்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202192
Andru Oru Naal...

Read more from Hamsa Dhanagopal

Related to Andru Oru Naal...

Related ebooks

Reviews for Andru Oru Naal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andru Oru Naal... - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    அன்று ஒரு நாள்…

    Andru Oru Naal…

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அன்று ஒரு நாள்…

    ஆகாயம் தனது எல்லைகளை
    அகலமாக்குவதாக!

    -டாக்டர் வலம்புரி ஜான் எம். பி.

    தமிழில் எழுதுவோர் தமிழருக்குத் தெரிவதில் வியப்பேதும் இல்லை. தமிழருக்குத் தமது எல்லைக் கோடுகளைத் தாண்டி வேற்றுமொழி எழுத்தாளர்கள் சிலரைக் காலம் கவனப் படுத்தியிருக்கிறது.

    இவ்வாறு தமிழருக்கு அறிமுகமானவர்களில் சரச்சந்திரர், தாகூர், சரோஜினி ஆகியோர் வங்கமொழி இலக்கிய வட்டத்தைச் சார்ந்தவர்கள்.

    அவ்வாறே மராத்திய மண்டலத்திலிருந்து சிறகு விரித்த காண்டேகர் அவர்களைத் தமிழர்கள் அறிவார்கள். அவரது ‘கிரெளஞ்சவதம்’, ‘வெறுங்கோயில்’, ‘எரிநட்சத்திரம்’ போன்ற பல நாவல்கள் பலகாலமாகத் தமிழர்களுக்குப் பழக்கமாகி உள்ளன.

    வேற்றுமொழி எழுத்தாளர்களில் காளிதாசனுக்குப் பிறகு, கவிதையில் தாகூரும், கதையில் காண்டேகரும் போல பிறிதொருவரும் தமிழர்களின் நெஞ்சிலே இடம் பெற்றார்களில்லை.

    காண்டேகரது நித்தியமான கதைச் செடிகளைத் தமிழ் நிலத்தில் ஊன்றிய பெருமக்களை இந்தத் தேவ வேளையில் நினைத்துக் கொள்கிறேன்.

    காண்டேகர் பிறந்த மராட்டிய மண்ணிலே இருந்து மராத்தியைத் தாய் மொழியாகக் கொண்ட தேவமாது ஒருத்தி தமிழ் நிலத்திற்கு நதியாக வந்திருக்கிறாள் என்பதைப் பத்தாண்டு காலமாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

    திருமதி ஹம்சா தனகோபால் என்கிற இந்த மராத்தியப் பெண் - வியக்கவைக்கும் வித்தக வார்த்தைகளாலும், நெஞ்சில் கனலேற்றும் நிறைவான கதைப் பாங்காலும், செய்திகளைச் சுமந்து கொண்டு வருகிற செழுமையான எழுத்துத் திறத்தாலும் தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவர் ஆகிறார்.

    தமிழ் இலக்கியம் கற்பனை மாடங்களிலிருந்து இறங்கி, சமுதாய மாற்றத்திற்கான கருவியாகத் தன்னை மாற்றிக்கொண்டு, வேகம் காட்டுகிற இந்த நாளில் ஹம்சா தனகோபால் என்கிற தனது மருமகளைத் தமிழகம் ஆரத்தி காட்டி அன்பொழுக வரவேற்கிறது.

    இந்திய இலக்கிய மாளிகையின் மகுடங்களில் ஒன்றாகத் திகழுகின்ற மராட்டிய இலக்கிய பீடத்திலிருந்து தமிழ் கதை உலகத்தை அலங்கரிப்பதற்காக அல்ல - அர்த்தப்படுத்துவதற்காக வந்த பனிப் பறவை ஹம்சா தனகோபால்.

    ஹம்சா தனகோபால் அவர்களின் நாவல்களைப் படித்தவன் - ஒரு வாசகன் என்கிற வகையில் வாரா வாரம் ஒன்றை வளர்த்துக் கொண்டே போக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லாமல், பாடம் சொல்லுகிறவைகளாக இவரது கதைகள், நாவல்கள் அமைந்திருப்பது இலக்கியம் இரட்சிக்கப்பட்டு வருகிறது என்பதற்கான அழுத்தமான அடையாளம் ஆகும்.

    ‘அன்று ஒரு நாள்…’ என்று ஹம்சா தனகோபால் அள்ளித் தருகிற இந்த நாவலில் இந்த மண்ணின் பலம், பலவீனம் இரண்டும் வேறு வேறு அல்ல - ஒன்றுதான் என்கிற உறுதி பீறிட்டு வருகிறது.

    சின்ன வயதில் சேலம் நகரின் மையப்பகுதியில் அவர் நெஞ்சில் விழுந்த அமிலத் துளிகளே இந்த நாவலுக்கான ஆரம்ப வித்துக்கள்.

    சமுதாயத்தின் பொறுப்பின்மை, போலித்தனம், பொல்லாங்கு இவற்றைத் தமது இந்த நாவலில் வலிமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஹம்சா தனகோபால்.

    மேம்போக்கான இலக்கிய வேடிக்கைகளில் காலத்தைச் செலவிடாமல், கனமான இலக்கியத்திற்குக் கால்கோள் விழா நடத்திவருகிற ‘மீனாட்சி புத்தக நிலையம்’ நமது பாராட்டுக்கு உரியது.

    திருமதி ஹம்சா தனகோபால் அவர்களின் எழுத்துப் பிரவாகம், எண்ணியதை முடிக்கும் எழுச்சியோடு, சமுதாய மாறுதலுக்கான கருவியாக ஒலி எழுப்புவதால் அதன் நாதமே எங்கும் நிறைந்து விளங்குவதாக!

    தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத்தை ஒரு வேள்வியாக நடத்தி வரும் இந்தச் சக்தியின் தரிசனத்தால் தமிழ் கெளரவப்படும்; தமிழ் நாவல் உலகம் கனப்படுத்தப்படும்.

    ஒரு நாவலாசிரியை என்கிற வளையத்திற்கும் அப்பால், பெண் விடுதலைக்காக உண்மையாகவே முழங்குகிற உயிர்க் குரல் ஹம்சா தனகோபால் அவர்களுடையது.

    நிலத்துக்கும், நதிக்கும் பெண்ணைக் கனப்படுத்துகிற வேலைகளைவிட்டு விட்டு, மனித நாகரிகம் எப்படி அவளை வஞ்சித்து வறுத்தெடுக்கிறது என்பதை நெஞ்சால் உணர்ந்து தனது நினைவுகளில் பதித்து வைத்திருப்பவர் ஹம்சா தனகோபால்.

    அடுப்படிகளில் சம்பளம் இல்லாத வேலைக்காரிகளாகவும், படுக்கை அறைகளில் திருப்திப்படுத்தப்படாத கேளிக்கை பொம்மைகளாகவும், சமூக அவலங்களால் தலைகுனிந்து தாழ்ந்து போகிற பெண் இனத்திற்காக ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து இரத்தம் கலந்து ஒலிக்கிறது இவரது உரிமைக் குரல்.

    ஆகவே இவரைப் பொறுத்து எழுத்து என்பது மலிவான பொழுதுபோக்குப் பொருளாக இல்லாமல், சமுதாய நியாயத்திற்காக வளைந்து கொடுக்காமல் போராடும் வாளாக நிமிர்ந்து நிற்கிறது.

    ஆகவே, இவரது எழுத்திற்கு அப்பாலும் வாழுகிற உரிமை இவரது ஆளுமைக்கு இயற்கையாகவே வந்துவிடுகிறது.

    இவர் எழுதியது கொஞ்சம்; எழுதாமல் விட்டது அதிகம்.

    சொல்லாமல் சொல்லுகிற கவிதை போல எழுதாமல் சிந்திவிட்ட சிந்தனை மணிகளே இவரது எழுத்து முற்றத்தில் எழுச்சிக் கோலங்களாய் நெளிகின்றன.

    இவரது மெளனமே வலிவான எழுத்து;

    இவரது எழுத்து இதயத்தில் இறுகிக் கிடக்கிற மெளனத்தின் வெளி முனகல்கள்.

    இந்த இலக்கியப் பறவை தனது சிறகுகளை இந்திய வானில் இன்னமும் வலிமையாக விரிக்கிற போது, ஆகாயம் தனது எல்லைகளை அகலமாக்கிக் கொள்ளுவதாக!

    என்றென்றும் அன்புடன்,

    வலம்புரி ஜான்.

    ‘பானுவில்லா’

    சென்னை -94

    14-0-1985

    ###

    இந் நாவல்

    நான் இவ்வுலகம் காணக் காரணமாயிருந்த

    என் மதிப்பிற்குரிய தந்தையார்

    ஸ்ரீ.ஷிந்தே கிருஷ்ணாஜிராவ்

    அவர்களுக்கும் என் அன்பிற்குரிய அன்னையார்

    ஸ்ரீமதி. ருக்மணிபாய்

    அவர்களுக்கும்

    என்

    இனிய

    சமர்ப்பணம்!

    ###

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அன்று ஒரு நாள்

    1

    நகரத்தின் பிரதான இடத்தில் கட்டப்பட்டிருந்த அந்தப் புதிய பாலத்தின் மீது கூட்டம் நெருக்கியடித்துப் போய்க் கொண்டிருந்தது. பெருமாள் கோவிலில் அன்று ‘வைகுண்ட ஏகாதசி’ சொர்க்க வாசல் திறப்பு விழா. கோவிலுக்குச் சென்று வரும் ஆணும் பெண்ணுமான கூட்டத்தின் கைகளில் நெடிய - மன்மதன் கைவில்லைப் போல - கரும்புகள். வெட்டித் துண்டம் போடப்பட்டும் அப்படியே வேரோடு பிடுங்கி முனைக் கொழுந்து காய்ந்து சரசரவென ஓசையோடும் அவர்கள் போவதைப் பார்க்கையில் உண்மையில் சொர்க்கத்திற்குச் சென்று வந்தவர்கள் போல இருந்தார்கள். அத்தனை எக்களிப்பு அவர்கள் முகங்களில்.

    கூட்டம் முட்டி மோதிக்கொண்டு - இதற்காகவே வெளிக் கிளம்பிய புதிய பக்தியில் திளைக்கும் விடலைகள். பாலத்தின் மீது செல்லும் விடலையின் சீழ்க்கையொலி. பாலத்தின் கீழே சலசலத்து - நகரின் சாக்கடை நீர் மட்டும். சமயத்தில் மழை வெள்ளமும் ஒடும் திருமணிமுத்தாற்றின் மேடான கரையில் குடிசையென்று சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளான அந்த வீட்டிலிருந்து வெளிவந்த பாப்பா கண்களைத் தேய்த்து விட்டு கொண்டாள். இரு கரங்களை மேலே தூக்கிக் கூந்தலை முடிகையில்… அங்க அசைவுகள்; அதற்கான பரிசுதான் சீழ்க்கையொலி.

    தன்னைப் பிறர் ரசிக்கிறார்கள் என்கிற உணர்வே கிஞ்சித்தும் இல்லாத பாப்பா இருள் கவிழ்ந்த குடிசையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததால் கண்கள் கூச எதிர்க்குடிசையைப் பார்த்தாள்.

    குடிசையின் வாசலில் கழுவ வேண்டிய சட்டிப் பானைகள், சோற்றுப் பருக்கைகள் காய்ந்து கிடந்தன. சட்டிப் பானைகளோடு தோழமை கொண்ட அலுமினியப் பாத்திரங்கள், வட்டாக்கள். சொறி நாயொன்று அதைச் சுற்றிவர உள்ளிருந்து ‘ஏய்… சூ…’ என நாயைத் துரத்துகிற ஒலி பெரிதாகக் கேட்டது. குழந்தை சிணுங்கி அழுகிற சங்கீதம் வேறு.

    பாப்பா சேலையை உதறி இடையில் செருகிய வண்ணம் ஓலைக் கூரையில் முளைத்துத் தொங்கிய கூண்டில் இரு மைனாக்கள் சிறகடிப்பதை இமைக்காமல் பார்த்து சிரித்துக் கொண்டாள். ‘பாவம்… அப்பா… ரெண்டு ரூபா முழுசா போட்டு வாங்கி வந்திச்சு. மைனாக் கறின்னா அதுக்கு உசிரு.’ தனக்குத் தானே முனகிக் கொண்ட பாப்பா மூங்கில் குச்சியினாலான கூட்டின் கதவைத் திறந்தாள்.

    எதிர்பாராமல் கிடைத்த சுதந்திரத்தில் மைனாக்கள் விருட்டென அவள் கரத்தில் ஏறி மறுகணம் வான வீதியில் உல்லாசமாகப் பறந்து கொண்டிருந்தன. பாப்பா வெள்ளி மணிகளாகக் குலுங்கிச் சிரித்தாள்.

    புதிதாகப் பருவம் வந்து தோழமை பூண்டிருந்ததால் மேனியெங்கும் வசந்தம் கண் சிமிட்டியது. ஐந்தடி உயரம், ஒடிசலான தேகம், வட்ட முகம். குறுகுறுவென அலை மோதும் கருவிழிகள், மைகொண்டு எழுதாமலே இயற்கையில் வளைந்த புருவங்கள். சிறு இதழ்கள். சிரிக்கையில் தெரியும் முல்லைப் பற்கள்.

    வளமையில் இருந்தால் அவள் நிறம் பொன்னாக இருக்கும். வறுமையில் நிறம் மங்கி தேய்க்கப்பட்ட பித்தளையாக இருந்தது. இரு அல்லி மொட்டுக்களான மார்பகம். நீள நீளமான மெலிந்த விரல்கள். சுருண்ட கருங்குழல். மொத்தத்தில் அவள் அழகி. அந்த தாழ்த்தப்பட்ட குலத்தில் பேரழகி.

    இடையில் சாதாரண பழைய துணிக்கடையில் வாங்கிய விலை மலிவான சுருங்கி நிறம் மாறிப்போன நைலக்ஸ் சேலை, காலின் சலங்கைகள் அவள் நடக்கையில் நிற்கையில் அவள் சிரிப்புக்கு இணையாகச் சப்தித்தன. ஐந்து பத்து பைசா நாணயங்களை உருக்கிச் செய்த கால் சலங்கை விலை மலிவு.

    "அடியே பாப்பு, உங்க ஐயாரு வந்தா திட்டப் போறாரு. இப்படியாடி மைனாக் குருவிங்களை வுட்டுப்புடுவே. பொழைக்கத் தெரியாத புள்ளையாயிருக்கே.

    உம்… இல்லேன்னா இப்படியா… இங்கே… இந்த…" ஆற்றின் கரைக்கு மேலாக ஓடும் சாலையின் ஒரத்தில் இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு மகாராணி தோரணையில் வாயிலிட்ட வெற்றிலைப் பாக்குப் புகையிலையை மென்று கொண்டு, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், கண்களில் அப்பிய கரி மையும், பெரிதாகப் போட்ட கொண்டையும் அதில் துலுக்க சாமந்தியுமாக ஒரு குட்டி பூதமாக அவள்-அதுதான்-ராஜாத்தி நின்று உரக்கப் பேசினாள்.

    அப்படிச் சொல்லாதேன்னு பல தபா சொல்லிட்டேன். மேலே பார்த்துச் சிணுங்கினாள் பாப்பா.

    காலைக் கதிர்களின் வேகத்தைத் தாங்காமல் கண்களுக்குக் கையைச் சாரமாக்கி ஒங்க ஐயாரு இந்த மைனாக் குருவிகளுக்காவ… ராஜாத்தி பேசுவதற்குள் வெள்ளி மணிகளாகச் சிரித்துச் சொன்னாள் பாப்பா.

    அப்பாரு ருசியை விட மைனா உசிரு பெரிசி சில்லியா? சொல்லி மீண்டும் சிரித்தாள்.

    மேட்டில் பாப்பாவையே பார்த்துக் கொண்டு நின்ற ராஜாத்தி, உம் இனனிக்கு அவன் வந்தாண்டி. பெரிய இடம்… நீ மனசு வெச்சினா ஒங்க ஐயாரு இப்படி சைக்கிள் ரிக்ஷா இழுக்க வாண்டாம் இந்த வயசிலே… என்றாள் சப்பென புகையிலைச் சாற்றை உமிழ்ந்து.

    போக்கா. ஒனக்கு எத்தனை தபா சொல்லிட்டேன்.

    என்னமோடிம்மா பொழக்கத் தெரியாத புள்ளையாயிருக்கே…

    குட்டி பூதமாக அசைந்து போனாள் ராஜாத்தி.

    பாப்பா கலங்கின கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். இந்த ராஜாத்தி இப்படிப் பேசியதைக் கேட்டால் அவள் அப்பா கொலையே செய்துவிடுவார். ஏன் ராஜத்தியிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1