Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poruthathu Pothum Vivek!
Poruthathu Pothum Vivek!
Poruthathu Pothum Vivek!
Ebook120 pages1 hour

Poruthathu Pothum Vivek!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. These short stories collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583925
Poruthathu Pothum Vivek!

Read more from Rajesh Kumar

Related to Poruthathu Pothum Vivek!

Related ebooks

Reviews for Poruthathu Pothum Vivek!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poruthathu Pothum Vivek! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    பொறுத்தது போதும் விவேக்!

    Poruthathu Pothum Vivek!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொறுத்தது போதும் விவேக்!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1.

    விவேக் ஆகா! என்றான்.

    மூணார் செல்லும் மலைப் பாதையில் கார் ஒரு ஏவுகணையாய் விரைந்து கொண்டிருக்க... பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரூபலா, விவேக்கின் தோளை இடித்தாள். முகத்தில் லேசாய் கோபம்.

    என்ன ஆகா?

    எந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினாலும் கண்ணுக்குள்ளே ஐஸ் வாட்டர் பாய்ஞ்ச மாதிரி இருக்கு... ரூபி! இவ்வளவு தேயிலைத் தோட்டங்களை நாம எந்த ஹில் ஸ்டேஷனிலும் பார்க்க முடியாது! பாரேன்...! பச்சை பெயிண்ட் அடிச்ச மாதிரி என்ன ஒரு ரம்யமான நேச்சுரல் போர்ட்ரெய்ட்! பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கே!

    எனக்குப் பிடிக்கலை.

    என்ன பிடிக்கலை?

    மூணார் வந்ததே பிடிக்கலை... இதுக்குப் பதிலாய் ஒரு ஊட்டியோ கொடைக்கானலோ போயிருக்கலாம்...

    வருஷா வருஷம் ஊட்டியோ... இல்லைன்னா கொடைக்கானலோ தான் போறோம். இந்தத் தடவை ஒரு மாறுதலாய் இருக்கட்டுமேன்னுதான்... ஊட்டியையும் கொடைக்கானலையும் மறந்துட்டு மூணாருக்கு வந்திருக் கோம், என்ஜாய் பண்ணு ரூபி…!

    மூனாரில் பார்க்க ஒண்ணுமே இல்லைன்னு விஷ்ணு சொன்னான்...

    அவன் சொன்னா... நீ நம்பிடறதா? மூணார் எந்த ஸ்டேட்ல இருக்குன்னு கேட்டுப் பாரு... அவன் பதில் சொல்ல முடியாம முழிப்பான். மூணாரில் பார்க்க எவ்வளவோ இடம் இருக்கு. ராஜ்மலா, எலிபெண்ட் ரெய்ட் மாட்டுப்பட்டி டேம்... அப்புறம் நேஷ்னல் பார்க், எக்கோ பாய்ண்ட்...

    ஊட்டி மாதிரி பொட்டானிக்கல் கார்டன் இருக்குமா?

    அப்படியெல்லாம் இருக்காது.

    கொடைக்கானலல் மாதிரி லேக்…?

    இதோ பார் ரூபி…! ஒரு ஊர் மாதிரியே இன்னொரு ஊர் இருந்தா... அதுல என்ன த்ரில் இருக்கு? மூணார் சம்திங் டிஃபரண்ட் நீ வந்து பாரு... உனக்கே தெரியும்...

    மூணார் போகணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?

    போன வாரம் டூரிஸம் வெப்சைட் ஒண்ணைப் பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு போட்டோகிராஃபி யையும் பார்க்கப் பார்க்க எனக்குள்ளே பிரமிப்பு! ‘அடடா... இப்படியொரு இடத்தை இன்னமும் பார்க்காமே இருக்கோமே?’ன்னு மனசுக்குள்ளே ஒரே உறுத்தல். உன்னைக் கேட்காமலேயே ஆன் லைன்ல ரூம் புக் பண்ணிட்டேன்.

    நாம எந்த ஹோட்டல்ல தங்கப் போறோம்?

    ஹோட்டல் டீப் ப்ளூ ஸ்கை. த்ரீ ஸ்டார் ஹோட்டல். ஸ்பைன் ட்ரீ ஃபாரஸ்ட்டுக்குள்ளே இருக்கு... பியூட்டிஃபுல் ஸ்பாட்...

    போய்ப் பார்த்தாத்தானே தெரியும்?

    பார்க்கத்தானே போறே? - விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்ஃபோன் அழைத்தது.

    எடுத்து யாருன்னு பாரு ரூபி?

    விவேக்கின் சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து... அழைப்பது யார் என்று பார்த்தாள் ரூபலா.

    விஷ்ணு.

    என்னங்க.. கூப்பிடறது யார் தெரியுமா? தென் நாட்டு ரோமியோ!

    என்னன்னு கேளு...

    ரூபலா செல்ஃபோனைக் காதுக்கு ஒற்றினாள். சொல்லு விஷ்ணு! உன்னோட பாஸ் காரை ஓட்டிக்கிட்டு இருக்கார், என்ன விஷயம்?

    மேடம்... மூணார் போய் சேர்ந்துட்டீங்களா?

    போய்கிட்டே இருக்கோம்...

    காட் ரோடு எப்படி இருக்கு மேடம்?

    உன்னோட பாஸ்தான் ரசிச்சுட்டே வர்றார். எனக்குச் சகிக்கலை... க்ளைமேட்டும் அவ்வளவு ப்ளஸண்ட்டா இல்லை. வெய்யில் மெட்ராஸ் மாதிரி இருக்கு... ராத்திரியில் தான் குளிர் இருக்குமாம். கொடுமையாய் இருக்கு. நீ சொன்னது சரிதான்!

    நான்தான் மொதல்லயே சொன்னேனே மேடம்! மூணார் உங்களுக்குப் பிடிக்காதுன்னு... நீங்கதான் கேட்கலை. பாஸ்கூட பிடிவாதமாய் புறப்பட்டு வந்துட்டீங்க. வழியில யானையைப் பார்த்தீங்களா மேடம்?

    ஒரு பூனையைக் கூடப் பார்க்கலை. யானையைப் பார்க்கணும்ன்னா ஏன் மூணார்க்கு வர்றாங்கன்னு தெரியலை. ஏதாவது ஒரு ஜூவுக்குப் போனாலே போதுமே!

    ரொம்பவும் கோபமாய் இருக்கீங்க போலிருக்கு, மேடம்!

    பின்னே என்ன? நான் எதிர்பார்த்த மூணார் வேற. இப்போ பார்த்துகிட்டு இருக்கிற மூணார் வேற…

    மேடம்! மூணார் போற வழிதான் இப்படி இருக்கும். மேலே போய்ப் பாருங்க... குலுமணாலி மாதிரி இருக்கும்.

    போய்ப் பார்த்தாத்தானே அந்த லட்சணம் தெரியும்? சரி, இப்ப எதுக்காக நீ ஃபோன் பண்ணினே?

    பாஸ் கிட்ட கொஞ்சம் பேசணும் மேடம்

    என்ன பேசணும்?

    ஸாரி மேடம்! இது டிபார்ட்மெண்ட் மேட்டர் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா மன்மோகன் சிங்குக்குக் கோபம் வந்துடும்.

    ரூபலா தன் கையில் இருந்த செல்ஃபோனை விவேக்கிடம் நீட்டினாள். ஏதோ டிபார்ட்மெண்ட் மேட்டராம்.

    விவேக் காரை மலைப்பாதையின் ஓரம் ஒரு தேயிலைத் தோட்டத்துக்குப் பக்கத்தில் நிறுத்தினான். பேசினான்.

    "சொல்லு விஷ்ணு!

    என்ன பாஸ்! மேடம் சூடாய் இருக்காங்க போல் இருக்கு.

    மேலே போனதும் சூடு ஆறிடும்... நீ விஷயத்துக்கு வா. ஏபிசிடி படிச்சியா?

    படிச்சேன் பாஸ்!

    ஏதாவது புரியுதா?

    புரியலையே...

    நான் வர்றதுக்குள்ளே ஒழுங்காப் படிச்சு வை…

    படிக்கிறதுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு பாஸ்

    'கஷ்டம்தான்! வேற வழியில்லை. அந்த நாலு எழுத்தைப் படிச்சாத்தான் மத்த எழுத்துக்களையும் படிக்க முடியும்."

    ட்ரை பண்றேன் பாஸ்! - மறுமுனையில் விஷ்ணு செல்ஃபோனை

    Enjoying the preview?
    Page 1 of 1