Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Thoongum Neram
Nilavu Thoongum Neram
Nilavu Thoongum Neram
Ebook271 pages2 hours

Nilavu Thoongum Neram

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.

இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113302300
Nilavu Thoongum Neram

Read more from Vathsala Raghavan

Related to Nilavu Thoongum Neram

Related ebooks

Reviews for Nilavu Thoongum Neram

Rating: 3.625 out of 5 stars
3.5/5

8 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Thoongum Neram - Vathsala Raghavan

    http://www.pustaka.co.in

    நிலவு தூங்கும் நேரம்

    Nilavu Thoongum Neram

    Author:

    வத்சலா ராகவன்

    Vathsala Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    நிலவு தூங்கும் நேரம்

    1

    2016 ஜனவரி 3

    கெளதம்!!!

    பளிச்சென்ற வெள்ளைக்கோட்டும் தோள்களில் தொங்கும் ஸ்டெதெஸ்கோப்புமாக அந்த காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தான் கெளதம். டெல்லி நகரின் அந்த முக்கிய வீதிகளில் வளைந்து திரும்பி பறந்து வந்துக்கொண்டிருந்தது அந்த கார்.

    அடுத்த சில நிமிடங்களில் அந்த மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்தது கார். மருத்துவமனையின் வாசலில் பத்திரிக்கையாளர்கள் கூட்டம். கட்சிக்காரர்களின் கூட்டம். அவனது வரவை அங்கே அனைவரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்க, கார் கதவை திறந்துக்கொண்டு அவன் இறங்க அங்கே பரப்பரப்பு தொற்றிக்கொண்டது. படபடவென காமெரா ஃபிளாஷ்கள்.

    எதையுமே கவனத்தில் கொள்ளாமல் புயலென அவன் நடக்க அவனை நோக்கி வந்தனர் இரண்டு மூன்று பெரிய மருத்துவர்கள். நடையின் வேகத்தை குறைக்காமலேயே அவர்களுடன் கை குலுக்கி, பேசிக்கொண்டே நடந்தான் அவன்.

    அவன் ஒரு அறைக்குள் செல்ல அவனை நோக்கி வந்தன சில ரிபோர்ட்டுகள். அது ஒரு பெரிய அரசியல்வாதியின் மருத்துவ ரிபோர்ட்டுகள். இன்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறான் கெளதம்.

    அவன் வந்து சில நிமிடங்கள் கடந்திருக்க அறையில் நடந்த படியே ரிப்போர்ட்களை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் அவன்.. பின்னர் ரிபோர்ட்களை டேபிளின் மீது வைத்து விட்டு

    'இஸ் எவ்ரிதிங் ரெடி... வேர் இஸ் டாக்டர் ராஜேஷ்???' அவனருகே நின்றிருந்த நர்சை பார்த்து கேட்டான் கெளதம்.

    'ஆன் தி வே சார். ஹி வில் பி ஹியர் இன் அனதர் 20 மினிட்ஸ்'

    'நான்ஸென்ஸ். இன்னும் எத்தனை 20 நிமிஷம்? நான் வந்தே கால் மணி நேரம் ஆச்சு. தேவையில்லை. அவர் வர வேண்டிய அவசியம் இல்லை. லெட் ஹிம் கோ பேக். வி வில் டேக் கேர் ஆஃப் தி சர்ஜரி. அப்படியே அவர் வந்தாலும் தியேட்டர் உள்ளே வரக்கூடாது. அப்படி வந்தால் நான் பாதியிலே வெளியே வந்திடுவேன். புரியுதா? சொல்லிடுங்க அவர்கிட்டே' என ஆங்கிலத்தில் பொரிந்து விட்டு மின்னலென ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே சென்று விட்டிருந்தான் கௌதம்.

    உள்ளே அறுவை சிகிச்சை ஆரம்பித்திருக்க, சில நிமிடங்கள் கடந்த பிறகு வந்த ராஜேஷ் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை. அவன் உள்ளே செல்ல முயற்சிக்கவில்லை. அப்படி செய்தால் கௌதம் உடனே வெளியே வந்து விடுவான் என்பதும் தெரியும் ராஜேஷுக்கு . இந்த அறுவை சிகிச்சைக்கு அவன் உள்ளே இருப்பதே அவசியம். இவனால் தான் பிரச்சனை என்று தெரிந்தால் இவனை எல்லாருமாக ஒரு வழி செய்து விடுவார்கள்.

    பொதுவாகவே கெளதம் இப்படித்தான். அவனது நேரம் தவறாமை, கடமையில் அவன் காட்டும் கவனமும், அக்கறையும் அவனை ஒரு நல்ல மருத்துவனாக நிலை நிறுத்தி இருந்தது. அதனாலேயே அங்கே இருப்பவர்களுக்கு அவன் மீது மதிப்பும் மரியாதையும் அதிகம்.

    யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டு கொடுத்ததில்லை அவன். யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டதும் இல்லை அவன். அவள் ஒருத்தியை தவிர.!!!! அவன் டெல்லிக்கு வந்ததே அவளுக்காகதானே!!! இனி இங்கே இருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் கெளதம் இன்று தான் இந்த மருத்துவமனையில் அவன் வேலை பார்க்கும் கடைசி நாள்.

    கிட்டதட்ட மூன்று மணி நேரங்கள் கழித்து வெளியே வந்தான் கௌதம். 'அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததற்கான அடையாளமாக அவன் முகத்தில் புன்னகை கீற்று. அவன் மீது பொழிந்துக்கொண்டிருந்தது பாராட்டு மழையும், நன்றி மழையும்.

    அப்போது அவனருகில் வந்தார் அவனை விட சீனியர் டாக்டரான சக்கரபாணி. அவர் அவனுடைய ஆசிரியரும் கூட.

    'ரொம்ப ரொம்ப கிரிடிகல் கேஸ் கௌதம். அவர் ஒரு பாப்புலர் பெர்சன் வேறே. கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் இவ்வளவு பெர்ஃபெக்ட்டா .... க்ரேட் ஜாப் கௌதம்.' கை குலுக்கினார் அவர்.

    'ஐ நோ யூ மேன் அதான் உன்னை கூப்பிட்டேன்' அவர் சொல்ல அதற்கு பதிலாக முகம் மலர்ந்த சிரிப்பு மட்டுமே அவனிடத்திலிருந்து.

    அவனை சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தவர் 'ஒரு சில நேரம் உன்னை அடிச்சா கூட தப்பில்லைன்னு தோணுது.' என்றார் சட்டென .

    'அய்யோ... ஏன் ஸார்?'

    'உனக்கு என்ன 28 - 29 வயசு இருக்குமா? பெரிய கார்டியாலிஜிஸ்ட். இந்த சின்ன வயசிலே இவ்வளவு திறமைகளை வெச்சிக்கிட்டு அங்கே கொடைக்கானல் மலை மேலே போய் உட்கார்ந்திருக்கியே. சரி ஒரு வருஷமா இங்கேயே இருக்கியேன்னு பார்த்தேன். மறுபடியும் கிளம்பறே. இப்போ நீ எவ்வளவு பெரிய வேலை பண்ணி இருக்கே தெரியுமா.??? எவ்வளவு பெரிய ஆளை காப்பாத்தி இருக்கே தெரியுமா??? இன்னும் கொஞ்ச நாள் இங்கே இரு நீ எங்கேயோ போயிடுவே .'

    கலகலவென சிரித்தான் அவன். 'நான் எங்கேயும் போக விரும்பலை டாக்டர். என்னோட உலகம் ரொம்ப சின்னது. அதிலே இருக்கிறது என்னை இவ்வளவு தூரம் வளர்த்து படிக்க வெச்ச என்னோட அங்கிள், என்னோட ரெண்டு ஹாஸ்பிடல்ஸ் மதுரைலே, ஒண்ணு கொடைக்கானல்லே ஒண்ணு, என்னோட சில நல்ல ஃபிரண்ட்ஸ், இது எல்லாத்துக்கும் மேலே என்னோட ...... அவனிடம் சில நொடி மௌனம் குடி கொள்ள மனம் அவளை தொட்டு திரும்பியது'

    'என்னாச்சு திடீர்னு சைலன்ட் ஆயிட்ட...' கலைத்தார் டாக்டர்

    'யெஸ்... டாக்டர் ... நிமிர்ந்தான் அவன்.

    'படிச்ச படிப்புக்கு நம்மால முடிஞ்ச அளவுக்கு நிறைய உயிர்களை காப்பாத்தணும். அதிலே பணக்கார உயிர், ஏழை உயிர்னு வித்தியாசம் எல்லாம் எனக்கு இல்லை டாக்டர். வாரத்திலே மதுரைலே ரெண்டு நாள் கோடைலே ரெண்டு நாள், அங்கே சுத்தி இருக்கிற கிராமங்கள்லே இருக்கிற மக்களுக்காக ரெண்டு நாள்.. ஒரு நாள் எனக்காக மட்டுமே. நான் நிறைவா வாழந்திட்டு இருக்கேன் டாக்டர்.'

    புன்னகைத்தார் டாக்டர் சக்கரபாணி

    'இப்போ ஒரு வருஷமா ஒரு சேஞ் எடுக்க வேண்டிய சூழ்நிலை. இனிமே அது தேவை இல்லைன்னு தோணுது. இனிமே எல்லாமே சரியாயிடும்ன்னு ஒரு நம்பிக்கை. ' புன்னகை ஓடியது அவன் உதடுகளில்.

    'சொன்னா கேட்கவா போறே? ஆல் தி பெஸ்ட் ...' கை குலுக்கினார் அவர். புன்னகையுடனே கை குலுக்கி விட்டு வாட்சை பார்த்தான் கௌதம். நேரம் இரவு பத்து.

    'ஸோ.. கேன் ஐ மேக் அ மூவ் டாக்டர்...'

    'ஷுயர் கௌதம்... இனிமேல் நாங்க பார்த்துக்கறோம். கேரி ஆன். டேக் கேர்...'

    அவன் மருத்துவமனையை விட்டு வெளியே வர, மறுபடியும் கை குலுக்கல்கள், காமெரா ஃபிளாஷ்கள். அவன் அவர்கள் தலைவரை காப்பாற்றிய செய்தி கட்சியினரை எட்டி இருக்க வேண்டும். திடீரென்று சில கட்சியினர் அவனை சூழ்ந்துக்கொண்டனர். படபடவென அவன் தோளில் விழுந்தன சில மாலைகள். அவனை அப்படியே தூக்கிக்கொண்டனர்.

    இது எதுவுமே அவனை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் ஒரு சின்ன புன்னகையுடன் எதிர்க்கொண்டு விட்டு கம்பீரமாக நடந்து அவன் காரில் ஏறி அமர விமான நிலையம் நோக்கி பறந்தது கார்.

    தனது கைப்பேசியை எடுத்து சனாவின் எண்ணை அழைத்தான்' முதல் கேள்வி. 'அவ சாப்பிட்டாளா?'

    'டே.......ய்.....' என்றாள் சனா. ஆபரேஷனை ஒழுங்கா முடிச்சிட்டியா இல்லையா?? அங்கிருந்து எத்தனை தடவை போன் பண்ணுவே? அவளை இந்த ஆறு மாசமா நான் தானே பார்த்துக்கறேன் என்னவோ ரொம்பத்தான்.... நான் பார்த்துக்க மாட்டேனா? அவ சாப்பிட்டு தூங்கியாச்சு. நீ எங்கே இருக்கே? கேட்டாள் சனா

    'வந்திட்டே இருக்கேன். நீ அவ கூடவே இருக்கியா? இல்லை வெளியே சுத்திட்டு இருக்கியா?'

    'டேய்....

    சரி சரி டென்ஷன் ஆகாதே சும்மா தான் சொன்னேன்... அவ கூடவே இரு. வந்திடறேன்.' சிரித்தபடியே அழைப்பை துண்டித்தான் கௌதம். கண் மூடி சில நொடிகள் அப்படியே சாய்ந்துக்கொண்டான்.

    நாளை மறுநாள் ஜனவரி 5. அவனுக்கும் சௌம்யாவுக்குமான முதல் திருமண நாள். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஓடிப்பறந்து விட்டது. அப்போது பிரிவு என்ற ஒன்று வருமென அவன் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அதுவும் வரத்தான் செய்தது!!! இதோ இன்றோடு அவளை பார்த்து ஆறு மாதங்கள் ஆகின்றன!!!

    மற்றவர்கள் திருமணத்தை போல் அவர்கள் திருமணம் சாதரண திருமணமா என்ன??? இப்போது நினைத்தாலும் அந்த திருமணமும் அப்போது அவனுக்கு இருந்த மனநிலையும் என எல்லாமே படமாக அவன் மனத்திரையில் விரியும்.

    ஒரே வாரத்தில் நடந்தே ஆக வேண்டுமென அவன் அவசரமாக நடத்திக்கொண்ட திருமணம். அப்படி நடத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை!!! திருமணம் நிச்சியக்கப்பட்ட தினத்தில் இருந்தே அவனுக்குள்ளே பரபரப்பு. அதே பரபரப்பு அங்கே இருந்த சனா, அரவிந்த் சௌம்யாவின் அப்பா என அனைவரிடமும் இருந்தது.

    வீட்டிலேயே திருமணம் நடத்துவதே சரி என்று தோன்றியது அவனுக்கு. ஏற்பாடுகள் செய்வதற்கு முன்பாக தயக்கமான குரலிலேயே அவளிடம் கேட்டான் அவன்.

    'வீட்டிலேயே கல்யாணம் வெச்சிடலாம்னு ஒரு பிளான் சௌம்யா..... யாரையும் பெருசா கூப்பிட போறதில்லை.. ரொம்ப நெருக்கமான ஃபிரண்ட்ஸ் மட்டும்தான்..'

    'ஏன் கெளதம் அப்படி???'

    'அப்படி ஒரு சூழ்நிலைன்னு வெச்சுக்கோயேன்...' என்றான் பார்வையை கொஞ்சம் தாழ்த்தியபடியே. அவள் முகம் பார்த்து பேச கூட தயக்கம்தான் அவனுக்கு.

    .................................

    என்னடா சைலெண்டா இருக்கே??? இதிலே உனக்கு ஏதாவது வருத்தமாடா??? மெல்லக்கேட்டான் அவன்

    'கெளதம் சொன்னா சரிதான்.' அழகான புன்னகையுடன் சொன்னாள் அவள்.

    'கெளதம் சொன்னா சரிதான்...' இதுதான் அவள் அப்போதெல்லாம் மறுபடி மறுபடி சொல்லிகொண்டிருந்த வேதம். அப்போது அவன்தான் அவளுக்கு எல்லாம்.

    'வீட்டிலே கல்யாணம் பண்றதுதான் ரொம்ப நல்லா இருக்கும் கெளதம். தினமும் நமக்கு இந்த வீடு நம்ம கல்யாண சந்தோஷத்தை ஞாபக படுத்திட்டே இருக்கும்...' கண்கள் விரிய சந்தோஷமாக சொன்னாள் அவள்.

    'எனக்கு இதெல்லாம் எப்பவும் ஞாபகம் இருக்கணும் கெளதம்' அவள் குரல் கொஞ்சம் இறங்க அவள் என்ன நினைத்து சொன்னாள் என புரிய அவளை தனது தோளில் சாய்த்துக்கொண்டான் அவன்.

    இதிலே எனக்கு ஒரே ஒரு ஆசை கெளதம். நம்ம வீட்டு ஊஞ்சலிலே உட்கார்ந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா???' திடீரென நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கேட்டாள் சௌம்யா.

    அவர்கள் வீட்டு ஹாலில் இருக்கும் அந்த பெரிய ஊஞ்சல். அவளுக்கு ஊஞ்சல் மீது ஒரு காதல் என அவனுக்கு தெரியுமே. அவள் வரைந்த அந்த ஊஞ்சல் ஓவியம் இன்னமும் அவன் கண் முன்னாலே இருக்கிறதே!!!

    ஆனந்த புன்னகையுடன் தலை அசைத்தான் கெளதம்.

    'எனக்கு புடவையை நீயே செலக்ட் பண்ணு கெளதம்...'

    'இந்த நெக்லஸ் எனக்கு நல்லா இருக்குமா??? நீயே சொல்லு கௌதம்...' அவனிடம் கேட்டு கேட்டு ரசித்து ரசித்து தான் செய்துக்கொண்டாள் எல்லாவற்றையும்

    எது நடந்தாலும் சரி அவள் உதடுகள் 'அம்மா' என்ற வார்த்தையை மட்டும் உச்சரித்து விடக்கூடாது என்பது தான் எல்லாருடைய தவிப்பாகவும் இருந்தது.

    திருமணதிற்கு முதல் நாள் இரவு. திடீரென அவனை கைப்பேசியில் அழைத்தாள் அவள். வீட்டில் தனது அறையில் படுத்திருந்தான் அவன் இன்னொரு அறையில் இருந்தாள் அவள்

    'சொல்லுடா கண்ணா...'

    'கெளதம்.... என்னவோ கனவா வருது கெளதம்.... அன்னைக்கு வந்த மாதிரி என்னமோ ..எனக்கு புரியலை கெளதம்... .' நான் அம்மா அம்மான்னு கத்தறா மாதிரி..... எனக்கு அம்மா இருக்காங்களா கெளதம்..' அவள் குழப்பமாக கேட்க கொஞ்சம் திடுக்கிட்டு பதறிப்போனான் அவன்.

    'இரு இரு.. நீ நீ இங்கே வா சொல்றேன்...' என்றபடி அவளறைக்கு வந்து அவளை தன்னறைக்கு அழைத்து சென்றான் கெளதம். தனது அறை பால்கனியில் அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்டான் அவன்.

    'என்னடா ஆச்சு???'

    'நீ அன்னைக்கு சொன்னா மாதிரி என்னோட சின்ன வயிசிலேயே எங்க அம்மா இறந்துட்டாங்களா கெளதம்.??? எனக்கு எங்கம்மா முகம் திரும்ப திரும்ப கனவிலே வருது....'

    'சௌம்யா... அவள் தலையை தனது தோளில் சாய்த்துக்கொண்டான் தூங்கறதுக்கு முன்னாடி டி.வியிலே ஏதாவது பார்த்திட்டு இருந்தியா???'

    'ம்... ஏதோ சீரியல்....'

    'அதுதான். அதிலே யாரவது எப்பவும் அழுதிட்டு இருப்பாங்க. அதெல்லாம் பார்த்தா இப்படித்தான் ஏதாவது கனவு வரும். நாளைக்கு கல்யாணத்தை வெச்சிட்டு இதெல்லாமா பார்ப்பாங்க??? எதாவது ரொமான்டிகா பார்த்தா பரவாயில்லை...' குறுகுறு பார்வையுடன் அவள் மூக்கை திருகினான்.

    'ரொமான்டிக்கா??? அவன் பார்வையில் அவளுக்குள் கொஞ்சம் சிலிர்த்தது.

    'ம்..' கண்சிமிட்டினான் அவன்

    'அதெல்லாம் தெரியாது எனக்கு...' அவள் மெல்ல சொல்ல மலர்ந்து சிரித்தான் அவன்.

    'நான் நாளைக்கு கத்து கொடுக்கிறேன் உனக்கு சரியா??? இப்போ வா என் மடியிலே படுத்துக்கோ... ' அவன் இதமாக சொல்ல வெட்கம் கலந்த புன்னகையுடன் அவன் மடியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

    அவள் தலையை இதமாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான் அவன். ஆனால் அப்போதும் அவனுக்கு உள்ளுக்குள் முள் ஒன்று சுள்ளென தைத்தது நிஜம்.

    'என்னை மன்னித்து விடு என்னவளே!!!!' அவள் உறங்கி சில மணி நேரங்கள் கடந்த பிறகும் விழித்திருந்தான் அவன். அந்த டைரியின் பக்கங்களில் ஐநூறாவது முறையாக எழுதிக்கொண்டிருந்தான்

    'என்னை மன்னிச்சுடு சௌம்யா ப்ளீஸ்....'

    பெரிதாக யாருக்கும் சொல்லாமல் நடந்த திருமணம். அவள் அம்மாவின் உறவுகளில் திருமணதிற்கு வந்தது அவளது தாத்தா மட்டுமே. அவர் அவளது அம்மா லக்ஷ்மியின் தந்தை. .

    திருமணத்தன்று காலை அவனருகில், அந்த ஊஞ்சலில் மணக்கும் மலர் மாலைகளுடன் முகம் நிறைய சந்தோஷமும் கண்களில் வழியும் வெட்க சிரிப்புமாக அமர்ந்திருந்தாள் சௌம்யா.

    அவள் அணிந்திருந்த அந்த அரக்கு நிற கூரை சேலைக்கும் கழுத்தை ஒட்டி இருந்த அந்த நெக்லசுக்கும் , காதோர ஜிம்மிகளுக்கும் கூடுதல் அழகு சேர்த்துக்கொண்டிருந்தது அவள் கன்ன சிவப்பு,

    ஒவ்வொரு முறை அவன் கால் கட்டை விரலை தரையில் ஊன்றி ஊஞ்சலை ஆட்டிய போதும் அவர்கள் தோள்கள் உரசிக்கொண்டதும்... சனா அழகாய் பாடிய அந்த லாலி பாடல்களும்.....

    அந்த நேரத்து இவனது ரகசிய சீண்டல்களும்..... 'சும்மா இரு கெளதம்...' இவள் கிசுகிசுப்பாய் கெஞ்சியதும் ...ஊஞ்சலின் அந்த நேரத்து லேசான க்ரீச் சத்தமும் கூட இன்னமும் அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    உள்ளம் எங்கும் சந்தோஷ பரபரப்புடன், இவன் அவளுக்கு அணிவித்த மாலை கூட அறிந்திருக்கும் இவன் மனதில் உள்ள நேசத்தை.

    'எப்போது வரும்??? அவள் கரம் என் கரங்களுக்குள் எப்போது வரும்???' தவித்தது அவன் உள்ளம். அந்த தவிப்பில் அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற வெறி நிச்சியமாக இல்லை.

    இது மொத்தமும் அவன் அவள் மீது கொண்டிருக்கும் நேசம்!!! தனக்குறியவளை சிறகு விரித்து உள்ளிழுத்து பத்திரமாக அடைகாத்துக்கொண்டு விட வேண்டும் என்ற அவசரம்!!! அதற்கான உரிமையை உடனே பெற்று கொண்டு விட வேண்டும் என்ற துடிப்பு.

    அக்னி சாட்சியாக அவன் கைக்குள்ளே வந்தது அவளது மருதாணி சிவப்பேறிய கரம். ஏதோ ஒரு பொக்கிஷம் போல் பற்றிக்கொண்டான் அதை. அவன் கையால் ஏறியது அவள் கழுத்தில் தாலி. நிம்மதி பெருமூச்சு அவனிடத்தில். அப்போது ஜெயித்திருந்தான் அவன். ஆனால் இப்போது???

    பழைய நினைவுகளில் இருந்து கெளதம் வெளிவந்த போது கார் விமான நிலையத்தை அடைந்திருந்தது.

    மறுநாள் காலை

    2016 ஜனவரி 4

    இடம் கொடைக்கானல்: காலை ஏழு மணி.

    சூரியன்

    Enjoying the preview?
    Page 1 of 1