Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasellam Maya
Manasellam Maya
Manasellam Maya
Ebook103 pages48 minutes

Manasellam Maya

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583932
Manasellam Maya

Read more from Rajesh Kumar

Related to Manasellam Maya

Related ebooks

Reviews for Manasellam Maya

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasellam Maya - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மனசெல்லாம் மாயா

    Manasellam Maya

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    மனசெல்லாம் மாயா

    1

    கலிவரதன் தன் பல்சர் பைக்கை ஜூபிடர் நர்ஸிங் ஹோமுக்கு முன்பாய் இருந்த கோல்ட் மெஹர் மரத்துக்குக் கீழே நிறுத்திவிட்டுத் தோளில் மாட்டிய ஜோல்னாப்பையோடு, ஹாஸ்பிட்டலின் ரிசப்ஷன் கெளண்ட்டரை நோக்கி நடக்க முற்பட்ட போது முதுகில் அந்தக் குரல் கேட்டது. கொஞ்சம் பரிச்சயமான குரல்.

    டேய் வரதா..!

    கலிவரதன் திரும்பிப் பார்த்தான். இருட்டும் வெளிச்சமும் கலந்த பின்னணியில் கைனடிக் ஸ்கூட்டரோடு அந்த இளைஞன் தெரிந்தான். கலிவரதனின் கண்கள் வியப்புக்குப் போயிற்று.

    டேய் பாஸ்கி..! நீயா...?

    அவன் சிரித்தான். நானே தான்...

    "என்னடா இது.. ஊருக்குத் திரும்பிப் போறதா சொன்னே.. இன்னமும் மெட்ராஸிலேயே இருக்கே...?

    ‘நீ மட்டும் என்னவாம்...? ‘இனிமே சினிமா சான்ஸ் எல்லாம் கிடைக்காது. வீட்டுக்குப் போய் விவசாயம் பார்க்க வேண்டியதுதான்’னு சொல்லிட்டு கொண்டு வந்த மஞ்சள்பையோடு ஆட்டோவில் ஏறினே...! இப்பப் பார்த்தா.. ஒயிட் பைஜாமா; தோள்ல ஜோல்னாப் பை."

    கலிவரதன் சிரித்தான். "ஊருக்கு ரயில் ஏறுறதுக்காக எக்மோர் ஸ்டேஷன்ல நின்னுட்டிருந்த போது ஒரு பத்திரிகையாசிரியரைப் பார்த்தேன். பேச்சு வாக்கில் 'என்னோட பத்திரிகையில் ரிப்போர்ட்டராய் ஜாய்ன் பண்ணிக்கிறியா'ன்னு கேட்டார். சரின்னு தலையாட்டிட்டேன். ஜாயின் பண்ணி ஒரு வருஷமாச்சு. ஆமா.. இப்ப நீ என்ன பண்ணிட்டிருக்கே...?

    எனக்கும் சென்னையை விட்டுப் போக மனசில்லை. ஒரு டைரக்டர்கிட்டே உதவி டைரக்டராய் சேர்ந்துகிட்டேன். அந்த டைரக்டர் இப்ப உடல்நலம் சரியில்லாமே இந்த ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட்டாகியிருக்கார். பார்த்துட்டு வர்றேன்.

    நானும் ஒரு பேஷண்ட்டைப் பார்க்க வந்தேன் பாஸ்கி.

    அப்படியா...! விசிட்டிங் ஹவர்ஸ் முடியப்போகுது. சீக்கிரம் போ...! நான் அதே ட்ரிப்ளிகேன் லாட்ஜில்தான் தங்கியிருக்கேன். டைம் கிடைக்கும் போது வா.. வரதா!

    கண்டிப்பா வர்றேன்! - பாஸ்கியின் கையைப் பற்றிக்குலுக்கி விட்டு ரிசப்ஷன் கெளண்ட்டரை நோக்கிப்போனான் கலிவரதன். உயர்த்திப் போட்ட கொண்டையோடும் லேசான பெளடர் பூச்சோடும் கண்களுக்கு அழகாய் தெரிந்த அந்த ரிசப்னிஷ்ட் எஸ் என்றாள்.

    நான் ‘புதிய புயல்’ பத்திரிகையின் ரிப்போர்ட்டர்.

    யாரைப் பார்க்கணும்?

    ஒரு பேஷண்ட்டை! பேரு மாயா!

    மாயா?

    எஸ்! நேற்று மத்தியானம் ரெண்டு மணிக்கு விஷம் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்ச மாயா.

    நீங்க அந்தப் பொண்ணுக்கு உறவா?

    இல்லை

    பின்னே?

    அந்தப் பெண் மாயா தற்கொலை பண்ணிக்க முயற்சின்னு பேப்பர்ல செய்தி பார்த்தேன். எதுக்காக அந்தத் தற்கொலை முயற்சின்னு கேட்டுட்டு போலாம்ன்னு வந்தேன்.

    அதாவது பேட்டி எடுக்கப் போறீங்க?

    அதை பேட்டின்னு சொல்ல முடியாது. ஜஸ்ட் ஒரு என்கொய்ரிதான்!

    என்கொய்ரி பண்ணுறதால என்ன பிரயோஜனம்?

    இதோ பாருங்க மேடம். நான் ரிப்போர்ட்டராய் இருக்கிற ‘புதிய புயல்’ பத்திரிகை வெறும் பொழுது போக்குப்பத்திரிகை கிடையாது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகிற பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் அச்சாகிற ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வைட்டமின் மாத்திரை. மாயா என்கிற அந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிற எண்ணத்தோடு தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கா. அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு அதுக்கு நிவாரணம் தர்றதுதான் எங்க பத்திரிகையோட வேலை.

    ஸாரி... ஸார்... இப்போ விஸிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சு. நீங்க நாளைக்கு வாங்க..!

    என்ன மேடம் இது.. நான் ஒரு நல்ல நோக்கத்துக்காக வந்து இருக்கேன். எனக்குப் போய் 144 போடறீங்களே?

    அந்தப் பெண் புன்னகைத்தாள். ஸார்! உங்க நோக்கம் நல்ல நோக்கம்தான். இருந்தாலும் விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சே.. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் ரவுண்ட்ஸ் போவார். அந்தச் சமயத்துல அவர் உங்களைப் பார்த்துட்டார்ன்னா திட்டு வாங்கறது நான்தான்...! போய்ட்டு... நாளைக்கு வாங்க ஸார்...

    பத்தே பத்து நிமிஷம்...!

    வெரி.. வெரி.. ஸாரி... நீங்க கிளம்புங்க ஸார்... - அவள் சொல்லிவிட்டு கிணுகிணுத்த இண்ட்டர்காம் போனை அட்டெண்ட் பண்ணப் போய்விட, கலிவரதன் சில விநாடிகள் ஏமாற்றமாய் நின்றுவிட்டு நகர்ந்தான். வரவேற்பறையை விட்டு வெளியே வந்து போர்டிகோ படிகளைத் தொட்டபோது பக்கவாட்டில் அந்தக் குரல் கேட்டது.

    ஸார்...!

    கலிவரதன் திரும்பிப் பார்த்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1