Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Pookkal Uthiruma
Kaadhal Pookkal Uthiruma
Kaadhal Pookkal Uthiruma
Ebook167 pages1 hour

Kaadhal Pookkal Uthiruma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120902343
Kaadhal Pookkal Uthiruma

Read more from Raya Chellappa

Related authors

Related to Kaadhal Pookkal Uthiruma

Related ebooks

Reviews for Kaadhal Pookkal Uthiruma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Pookkal Uthiruma - Raya Chellappa

    http://www.pustaka.co.in

    காதல் பூக்கள் உதிருமா?

    Kaadhal Pookkal Uthiruma?

    Author:

    இராய செல்லப்பா

    Raya Chellappa

    For more books

    http://www.pustaka.co.in/home/author/raya-chellappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    இராய செல்லப்பா ஓர் அறிமுகம்

    என்னுரை

    1 காதல் பூக்கள் உதிருமா?

    2 சுபாவதாரம்

    3 ஜானகி இராவணம்

    4 முஸ்தபா முஸ்தபா

    5 கடவுளின் கடன்

    6 வந்தவன் யாரோடி

    ***

    இராய செல்லப்பா ஓர் அறிமுகம்

    தமிழிலும் கணினித்துறையிலும் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர், இராய செல்லப்பா. பாரதியாரைப் பற்றிய இவரது கவியரங்கக் கவிதைகள் ‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. தில்லிக் கவிஞர்களின் கவிதைகளைத் ‘தலைநகரில் தமிழ்க் குயில்கள்’ என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளன, ‘அகநாழிகை’ மூலம்.

    பன்மொழி அறிந்தவர். அமெரிக்கா, கனடா, மத்தியக் கிழக்கு நாடுகளில் பயணித்தவர். பல்துறை சார்ந்த கட்டுரைகள்/தகவல்களைத் தனது வலைப்பதிவுகள் மூலம் தருவதில் வாசகர்களிடையே கவனம் பெற்றவர்.

    ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்து வளப்படுத்திய வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட திரு செல்லப்பா, இராணிப்பேட்டையிலும், தேன்கனிக்கோட்டையிலும் தன் பள்ளிப் படிப்பை முடித்தவர். (கணிதத்தில்) பட்டப்படிப்பை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியிலும், பட்டமேற்படிப்பை சேலம் அரசு கலைக்கல்லூரியிலும் பயின்றவர். இடையில் சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் இருந்தவர். (கும்பகோணம்) சிட்டி யூனியன் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்து, வங்கிப்பணியைத் தொடங்கியவர், பின்னர் விலகி, அரசுடைமை வங்கியான கார்ப்பொரேஷன் வங்கியில் சேர்ந்து பணியாற்றி, துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர்.

    ***

    என்னுரை

    காதல் இல்லாத உலகம் இல்லை. இளமையின் வேட்கை காதல். சில சமயம் வெல்லும், பல சமயம் தோற்கும்.

    காதலில் தோற்றால் காவியம் பிறக்கும், வென்றால் குழந்தைகள்தான் பிறக்கும் என்பார் கண்ணதாசன்.

    காதலில் யார் வென்றாலும் தோற்றாலும் எழுத்தாளனுக்குக் கதைகள் பிறப்பது மட்டும் தவறுவதில்லை. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அப்படிப் பிறந்தவையே.

    ஒன்றுக்கொன்று வேறுபட்ட களங்களில் பிறந்த கதைகள். சுவாரசியமாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

    படித்தபின் உங்கள் மனதில் தோன்றுவதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பயன்பெறுவேன். (chellappay@gmail.com) எனது வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

    http://chellappatamildiary.blogspot.com

    இராய செல்லப்பா

    சென்னை மே 2017

    ***

    1. காதல் பூக்கள் உதிருமா?

    நகரத்தின் வெளிப்புறமாக அமைந்திருந்தது ‘நல்லதோர் வீணை’ குழந்தைகள் காப்பகம். ஆதரவற்ற குழந்தைகளின் புகலிடம். புகழ்பெற்றதொரு அம்மன் கோவில் அந்த இடத்திற்கு முகவரியாக இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பூ, பழம், தேங்காய் விற்கும் கடைகள் இருபதுக்கும் மேல் இருந்தன. வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதே கடினமாக இருக்கும். கோவிலின் பின்புறமாகப் பத்துநிமிடம் நடந்தால் ‘நல்லதோர் வீணை’ வந்துவிடும். ஆனால் அனாதைக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் காப்பகத்திற்கு அடிக்கடி வந்துபோகும் நல்ல நெஞ்சங்கள் குறைவு. பிரேமுக்கும் அன்றுதான் முதல் அனுபவம்.

    காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு, காப்பகத்தின் நீண்ட வாயிற்கதவுகளின் மேல்புறத்திலிருந்த அழைப்புமணியை அழுத்தினான்.

    ஒரு முதியவள் வேகமாக வந்து கதவைத் திறந்தாள். வாங்க சார், அப்பா உள்ளே தான் இருக்கிறார் என்றாள். காப்பகத்தின் தலைவரும் பொறுப்பாளருமான சாந்தப்பனைத் தான் அவள் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது. மென்முறுவலோடு அவளைத் தொடர்ந்து சென்றான்.

    வரவேற்பறைக்குள் ஐந்தாறு எளிமையான நாற்காலிகள் இருந்தன. சில மேசைகளில் காப்பகத்தின் குழந்தைகள் தயாரித்த செயற்கைப் பூக்களும், பிளாஸ்டிக் பொருட்களும், துணிப்பைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய கண்ணாடித் தொட்டியில் வண்ண மீன்கள் அலைந்துகொண்டிருந்தன. சுவற்றில் காப்பகத்திற்கு வருகை தந்த முக்கியமானவர்களுடன் சாந்தப்பனும் குழந்தைகளும் இருக்கும் பெரிதுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் தொங்கின. சிதைந்த மரக்கிளையொன்றைச் சிற்பமாகச் செய்து வண்ணம் தீட்டி அறை நடுவில் வைத்திருந்தார்கள். ஓர் அறிவிப்புப் பலகையில் காப்பகம் தொடங்கிய வருடம், எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் தோன்றின. இன்னொரு அறிவிப்புப்பலகையில் அரிசி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் போன்ற என்னென்ன பொருட்கள் காப்பகத்திற்குத் தேவை என்ற தகவல் இருந்தது. எளிமையிலும் தூய்மை கடைப்பிடிக்கப்படுவது தெரிந்தது. அழுக்கோ ஒட்டடையோ எங்கும் காணவில்லை.

    இரண்டு இளம்பெண்கள் சற்றுத் தொலைவில் இருந்த மூன்று மாடிக் கட்டிடத்திலிருந்து இறங்கி ஓடோடி வந்தனர். ஒருத்தி பிரேமைப் பார்த்து, வணக்கம் சார்! உட்காருங்கள். இன்று மருத்துவர்கள் வரும் நாள் என்பதால் வரவேற்பறையில் யாரும் இருக்கவில்லை. மன்னிக்கவேண்டும் என்று ஏதோ பெரிய தவறு நடந்துவிட்ட குற்ற உணர்வோடு கூறினாள். என் பெயர் லதா என்றாள். பிரேம் அமர்ந்தான். மடிக்கணினி இருந்த முதுகுப் பையை அடுத்த நாற்காலியில் வைத்தான்.

    லதாவின் அலைபேசி ஒலித்தது. ஆம் என்று பதில் கூறியவள், அப்பா உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். போகலாமா? என்றாள். அதற்குள் இரண்டாவது இளம்பெண் ஒரு கண்ணாடித் தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து நீட்டினாள். தாகம் இல்லாதபோதும் கொடுத்தவளின் புன்முறுவலுக்காக அதைக் குடித்து நன்றி என்றான் பிரேம்.

    சக்தி, நீ இங்கேயே இரு. வாருங்கள் சார்! என்று லதா அந்த மூன்று மாடிக் கட்டிடத்தை நோக்கி நடந்தாள். ‘ஓ, இவள் பெயர் சக்தியா? அழகாகத்தான் இருக்கிறாள்’ என்று பிரேம் மனதில் மின்னல் ஓடியது. ‘ஏன், லதாவும் அழகுதானே’ என்றது உள்மனம். பிரேமுக்கு இன்னும் மணமாகவில்லை.

    வரவேற்பறை இருந்த ஒற்றைமாடிக் கட்டிடத்திற்கும் இந்த மூன்றுமாடிக் கட்டிடத்திற்கும் இடையில் இரண்டு அழகிய தோட்டங்களும் குழந்தைகள் விளையாடுமிடங்களும் உணவருந்தும் கூடமும் இருந்தன. சிறிய நூலகமும் இருந்தது.

    சாந்தப்பனின் அறையில் பெரிய ஜமுக்காளம் விரித்திருந்தது. சுவற்றை ஒட்டிய நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவர், பிரேமைக் கண்டதும் எழுந்து நின்று, வாங்க மிஸ்டர் பிரேம்! என்று கைகுலுக்கி அமரவைத்தார்.

    நீங்கள் காப்பி அருந்துவீர்களா? இங்கு அந்தப் பழக்கம் கிடையாது. ஆனால் விருந்தினருக்குச் சுவையான காப்பி தயாரிப்பதில் சக்திக்கு அனுபவம் உண்டு என்றவர், அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் லதாவைப் பார்த்து சைகை காட்டினார். உடனே வெளியேறினாள் லதா.

    உங்களைப் போன்ற இளைஞர்கள் இம்மாதிரி தொண்டு நிறுவனங்களுக்கு வருகை தர நினைப்பதே மிக நல்ல காரியம்! எங்கள் அனுபவத்தில் பலர், தபால் மூலம் அவ்வப்போது பணம் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். இதே ஊரில் இருந்தாலும் ஒருமுறையாவது இங்கு வந்து குழந்தைகளை நேரில் பார்க்கத் தோன்றுவதில்லை. பணம் தேவைதான், ஆனால் மனிதர்கள் அல்லவா முக்கியம்! இங்குள்ள குழந்தைகளுக்குத் தாய் தந்தை கிடையாது. உறவினர்களும் இல்லை. உங்களைப் போல யாராவது வந்து நேரில் பார்க்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி எத்தகையது தெரியுமா? நீங்களே பாருங்களேன் என்று அவனை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகக் காட்டினார். ஹைதராபாத்தில் இதுபோன்ற காப்பகங்களுக்குப் போனதுண்டா நீங்கள்? என்றார்.

    இதுவரை இல்லை ஐயா! நான் ஹைதராபாத் போய் ஆறுமாதம்தான் ஆகிறது. கணினித்துறையில் வேலை அதிகம். ஓய்வு கிடைப்பதில்லை என்று பதிலளித்தான் பிரேம்.

    ஆம், கேள்விப்படுகிறேன். கணினித்துறையில் கம்பெனிகளுக்கிடையே நிறைய போட்டிகள் உண்டு. பெரும்பாலும் வெளிநாடுகளைச் சார்ந்த பணியாக இருப்பதால், கெடுபிடிகள் அதிகம். கவர்ச்சியான சம்பளம் மட்டும் இல்லையென்றால் யாரும் அத்துறைக்குப் போகமாட்டார்கள் என்று கேள்விப்படுகிறேன்.

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்! என்று புன்னகைத்தான் பிரேம்.

    சக்தி சூடான காப்பியை அவன் கையில் தந்தாள். கண்களால் நன்றி சொல்லியபோது அவள் முகத்தில் எவ்வளவு மலர்ச்சி!

    சக்தியின் காப்பி என்றால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை அதிகமாகப் போட்டுவிடுவாள். ஆனால் நீங்கள் இளைஞர். பரவாயில்லை என்று புன்னகைத்தார் சாந்தப்பன்.

    காப்பியை அருந்தியபடியே, இல்லை, அளவாகத்தான் இருக்கிறது. ஒருவேளை அடுத்தமுறை அதிகம் போடுவார்களோ? என்று சிரித்தான் பிரேம்.

    அதற்காகவாவது அடிக்கடி வாருங்கள். இனி, இரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் இடத்திற்குப் போகலாமா? என்று அறையிலிருந்து அவனுக்கு முன்பாக வெளிவந்து மாடியிலிருந்து இறங்கத் தொடங்கினார், சாந்தப்பன்.

    இன்னும் அறைக்குள்ளேயே இருந்த சக்தியிடம் காப்பி தம்ளரைத் திருப்பிக் கொடுத்து மிக்க நன்றி, சக்தி என்றான் பிரேம் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி.

    தன் பெயரை அப்படி மென்குரலில் அவன் உச்சரித்தது அவளுக்குப் பிடித்திருந்தது. இமைகளை மெல்ல மூடி அரைக்கண்ணால் அவனைப் பார்த்து ‘நன்றி’ என்று தன் உதடுகளுக்கும் தெரியாமல் அவள் சொன்னது பிரேமுக்குக் கேட்டது. மாடிப்படிகளில் நின்றுகொண்டு தன்னையே அவள் பார்த்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது.

    *****

    குழந்தைகள் பிரிவில் மொத்தம் மூன்று அறைகள். ஆறுமாதக் குழந்தைகள் ஓர் அறையிலும், ஒருவயது வரையுள்ளவர்கள் அடுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1