Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Pugaiyin Kallarai
Kadaisi Pugaiyin Kallarai
Kadaisi Pugaiyin Kallarai
Ebook192 pages1 hour

Kadaisi Pugaiyin Kallarai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயபாஸ்கரன் அவர்கள் பன்முகம் கொண்டவர். அவர் புத்தக வெளியீட்டாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என்று பல பணிகளை புரிந்து வருகிறார். தேவி, தராசு போன்ற பல பத்திரிக்கைகளில் நிருபராக பணிபுரிந்துள்ளார். சென்னைத் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில், இனை இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் 250க்கும் மேல் பல்வேறு இலக்கிய அமைப்புகளுக்காக கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளார். 10க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580119802284
Kadaisi Pugaiyin Kallarai

Read more from Jayabaskaran

Related to Kadaisi Pugaiyin Kallarai

Related ebooks

Reviews for Kadaisi Pugaiyin Kallarai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Pugaiyin Kallarai - Jayabaskaran

    http://www.pustaka.co.in

    கடைசிப் புகையின் கல்லறை

    Kadaisi Pugaiyin Kallarai

    Author:

    ஜெயபாஸ்கரன்

    Jayabaskaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayabaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    கடைசிப் புகையின் கல்லறை

    கட்டுரைத் தொகுப்பு

    மருதுபாண்டிய மன்னர்களின்

    மரபுப் பெருமை – என்

    ஆழ்மனதில் நிலைத்திருக்கும்

    அன்பின் வடிவம்...

    திரு. சின்னமருது தீனதயாளபாண்டியன்

    அவர்களுக்கு...

    ***

    பொருளடக்கம்

    அணிந்துரை

    சமகாலத்தின் சமூக உணர்வு!

    என்னுரை

    கண்டனக் கணைகளும் கருணை மனுக்களும்

    உளவியல்

    கடைசிப் புகையின் கல்லறை

    பயணித்தல் குறித்து

    அலட்சியவாதிகள்

    சமூகம்

    நம் குழந்தைகள்

    கால்கட்டு?

    உருக்குலைந்த ஊர்ப்பெயர்கள்

    காதலும் காதலர் தினமும்

    விருது வாங்கலியோ விருது?

    வேதனைக்குரிய விருந்து!

    சுருக்கெழுத்தாளர்கள்

    விருதுகளுக்குப் பிறகு...?

    ஊடகம்

    திரையுலகமும் திருநங்கையரும்

    வயது முதிர்ந்த வாலிபர்கள்

    திரைப்பாடலில் சிதைந்த தில்லையாடி வள்ளியம்மை

    பின்னணி இசை

    வரவேற்பறையில் வன்முறை

    ரீ மிக்ஸ் அவலம்

    சுற்றுச்சூழல்

    துளையிடுவதுதான் தொழிலா?

    ஒலியின் ஓசை

    ***

    அணிந்துரை

    திருப்பூர்கிருஷ்ணன்

    ஆசிரியர்,

    அமுதசுரபி மாத இதழ்

    சமகாலத்தின் சமூக உணர்வு!

    விதைத் துறையிலும் கட்டுரைத் துறை யிலும் ஒருசேர வெற்றிபெற்ற இலக்கிய வாதிகள் மிகவும் குறைவு. அப்படிப் பட்ட குறைவான எண்ணிக்கை யினரில் கண்ணதாசனை ஒருவராகச் சொல்ல லாம். அவரது சேரமான் காதலி என்ற சரித்திர நாவலுக்குத்தான் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த நாவலை அவரது சிறப்பான படைப்பாய்க் கொள்ள இயலாது. கவிதையிலும் கட்டுரை யிலும் கண்ணதாசன் காண்பித்த தேர்ச்சியை நாவல், சிறுகதை போன்ற வடிவங்களில் அவரால் காண்பிக்க இயலவில்லை. சிலரது மூளை அமைப்பு சிலவகை இலக்கிய வடிவங் களுக்குத்தான் பெரிதும் பொருந்தும் போலும்.

    கவிஞர் கண்ணதாசன் என்றே அவர் அறியப்பட்டாலும் அவரது கட்டுரை களும் காலத்தை வென்று நிற்கும் வடிவ நேர்த்தி கொண்டவை என்பதை நடுநிலை விமர்சகர்கள் ஒப்புக் கொள் வார்கள். அவரது வனவாசம் என்ற தன்வரலாறு ஆகட்டும், தன் வாழ்க்கைச் சம்பவங்களை உள்ளடக்கி அவர் அவ்வப்போது எழுதிய தனிக் கட்டுரைகள் ஆகட்டும் அவருடைய அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைத் தொடர் ஆகட்டும், எல்லாமே கவிதைக்கு இணையாகக் கட்டுரை வடிவத்திலும் அவருக்கு இருந்த அபாரமான தேர்ச்சியைக் காட்டுகின்றன.

    மிகச் சிறந்த நாவலாசிரியராகவும் அதற்கு இணை யான மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் திகழ்ந்த தீபம் நா. பார்த்தசாரதிக்கு, அவர் ஆசைப்பட்ட போதும் ஏனோ கவிதை வடிவம் இறுதிவரை சரிவரக் கைவர வில்லை. எல்லோரும் எல்லா வடிவங்களிலும் சாதனை படைத்தாக வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதும் சரியல்ல. ஒருசில வடிவங்களில் தேர்ச்சி பெறவே ஆயுள் போதாதபோது எல்லா வடிவங்களிலும் தேர்ச்சி பெறுவது என்பது இயலாததுதான்.

    அதனால் தான் ஒவ்வோர் இலக்கியவாதியும் இலக்கியத்தின் பல வடிவங்களில் முயன்று பார்த்தாலும் ஒரு காலகட்டத்தில் தனக்கு ஏற்ற வடிவம் எது என்பதைக் கண்டுணர்ந்து பிறகு அந்த வடிவத்திலேயே எழுதத் தலைப்படுகிறார்.

    கவிஞர் கண்ணதாசனின் மரபில் கவிதை, கட்டுரை ஆகிய இருவடிவங்களிலும் தம் தனித்த ஆளுமையை நிரூபிப்பவர் என்று கவிஞர் ஜெயபாஸ்கரனைச் சொல்ல லாம். தம் சமுதாய உணர்வு நிறைந்த கவிதைகளால் ஏராளமான தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட ஜெயபாஸ்கரன், அதே வகையில் சமுதாயப் பொறுப்பு நிறைந்த தமது கட்டுரைகளாலும் வாசகர்களைக் கவர்கிறார்.

    கவிதை, கட்டுரை ஆகிய இவரது இருவகை இலக்கிய வடிவங்களிலும் இருக்கும் பொதுவான ஒற்றுமையே உயர்ந்த சமுதாய உணர்வுதான். சமூகப் பொறுப்பற்ற ஒரு வார்த்தையைக்கூட இவரது எந்தப் படைப்பிலும் காண இயலாது என்பதே இவரது தனிச் சிறப்பு.

    வெளிப்படைப் பாலியலை இப்போது பல நவீன இலக்கியவாதிகள் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். இது ஏதோ கொண்டாடத்தக்க புதுமை என்று தவறுதலாய்க் கருதி அதே பாணியில் தொடர்ந்து எழுதவும் அத்தகைய தங்கள் எழுத்துக்களை வலிந்து நியாயப்படுத்தவும் அவர்கள் தங்கள் சக்தியையெல்லாம் செலவிடுகிறார்கள். தி. ஜானகிராமனும் கு.ப.ரா. வும் பூடகமாகப் பாலியல் பிரச்சனைகளை எழுதக் காரணம் அதுவே சிறந்த கலை என்பதால் தானே அன்றி வெளிப்படைப் பாலியலை எழுதத் தெரியாததால் அல்ல இலைமறை காயாகச் சொல்வதில்தான் உயரிய கலை நுணுக்கம் அடங்கியிருக்கிறது. எதையும் வெளிப்படை யாகப் போட்டுடைத்தால் அது கலை அல்ல. பண்பாட்டுக் கொலை.

    ஜெயபாஸ்கரன் வெளிப்படைப் பாலியல் போக்கை முற்றிலுமாக நிராகரிப்பவர். கண்ணியமான இலக்கிய மரபைப் போற்றுபவர். கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் இறுதிவரை நிறைவுடன் வாழ்ந்த போற்றத்தகுந்த இலக்கியவாதிகளும் தமிழில் கொஞ்சம் பேர் உண்டுதானே? அத்தகையோரான வல்லிக் கண்ணன், நாரண துரைக்கண்ணன் போன்றோர் மரபில் தழைக்கும் சில இளங்குருத்துகளில் ஜெயபாஸ்கரனும் ஒருவர்.

    ஜெயபாஸ்கரனை நான் அறிந்த வரையில் அவர் சரியக்கூடிய சுயமரியாதை உடையவர் அல்லர். பீடும் பெருமிதமுமாகத் தன் சுயமரியாதையையே ஒரு மகுடமாய்த் தரித்தவர் அவர். உள்ளார்ந்த சத்திய ஆவேசத்தோடும் நுணுக்கமான பார்வையோடும் இலக்கியம் படைக்கும் படைப்பாளி.

    கட்டுரைகளிலும் சரி, கவிதைகளிலும் சரி, அவரது வடிவ நேர்த்தியைப் பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருவகையில் சிறுகதை வடிவத்தை அவர் தம் கவிதை, கட்டுரை ஆகிய இரு வடிவங்களிலும் ஊடுருவச் செய்கிறார் எனலாம். அதனாலேயே அவரது கவிதையும் கட்டுரையும் தனி மதிப்புப் பெறுகின்றன.

    சிறுகதை வடிவத்தில் அதன் இறுதிப் பகுதி மிக மிக முக்கியமானது. முத்தாய்ப்பானது. ஒரு வரி அதிகமாக இல்லாமல் கச்சிதமாகக் கத்தரித்தால்தான் சிறுகதை வடிவம் முழுமை பெறும். ஜெயபாஸ்கரனின் கட்டுரைகளிலும் சரி, கவிதைகளிலும் சரி, அவற்றின் இறுதிப் பகுதிகள் அதிக அழுத்தம் பெறுகின்றன.

    எனவே அந்த இறுதிப் பகுதியைப் படித்து முடித்ததும் நம் மனத்தில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. இலக்கியம் தாவி நம் மனத்தில் நிரந்தரமாய் உட்கார்ந்து கொள்கிறது. சொல்லப்பட்ட கருத்து இறுதிப் பகுதியில் அதிக வீச்சோடு முழுமை பெறுவதால் படித்து முடித்ததும் நாம் நீண்ட நேர யோசனையில் ஆழ்கிறோம். எந்த வகையிலான சமுதாய மாற்றம் வரவேண்டும் என்று ஜெயபாஸ்கரன் ஆர்வம் கொள்கிறாரோ அந்த வகையிலான மாற்றத்தை நோக்கி வாசகரின் மனம் தன்னிச்சையாய்த் திருப்பப்படுகிறது. ஜெயபாஸ்கரனது கலையின் வெற்றிக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

    கடற்கரையின் மணல்வெளி முழுவதும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பதிந்து கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறிய காலடிச் சுவடுகள், அந்தக் காலடிச் சுவடுகளுக்குச் சொந்தக்காரர்கள் தன்னைவிடப் பெரிய சுண்டல் டப்பாக்களோடு அங்குமிங்கும் அலைந்து நம் முன் பணிந்து மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மண்டியிடுதலை சுண்டலையும் தாண்டிப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

    என்ற வரிகளோடு முடியும் கட்டுரையில் அந்த வரிகளைப் படித்ததும் நம் மனம் நீண்ட நேரம் பிசைந்து தவிக்கிறது. அதுதானே எழுத்தாளனின் வெற்றி? இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மை யோசிக்க வைத்துவிடுகிறார் கட்டுரையாசிரியர். இதைவிட ஓர் எழுத்தாளன் செய்யக் கூடிய பணி வேறென்ன?

    கட்டுரைகளில் பல இடங்களில் நுணுக்கமான பார்வையுடன் கூடிய பதிவைப் பார்க்க முடிகிறது.

    பயணித்தவர்களாலும் படையெடுத்துப் போனவர் களாலுமே நமது உலக வரலாறு எழுதப்பட்டு வருகிறது. நாம் பாட்டுக்குப் பேசாமல் நமது மண்ணில் நமது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கிருந்தோ பயணித்து வந்தவர்கள் நம்மையும் நமது நாட்டையும் வளைத்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களை வெளியேற்ற நாம் பட்ட பாடு எத்தகையது என்பதை நமது விடுதலைப் போராட்ட வரலாறு நமக்குச் சொல்கிறது. பயணிக்காதவர்கள் பயணிக்கிறவர்களிடம் தோற்றுப் போய் அடிமைகளாகி விடுகிறார்கள்.

    என்ற வரிகளில் ஒரு சிந்தனைத் தெறிப்பு பளிச்சிடுகிறது. இதுபோன்ற பல அறிவார்ந்த வரிகள் கட்டுரைகளோடு இணைந்தும் அதே நேரம் கட்டுரையிலிருந்து பிரிந்தும் நெடுநேரம் நம்மை யோசிக்க வைக்கும் தகுதியோடு திகழ்கின்றன.

    வீதியோரக் குழந்தைகளைக் குறித்த நமது பொறுப்புணர்வு என்பது அக்குழந்தைகளின் பெற்றோரைத் திட்டுவது மட்டுமே. பச்சிளம் குழந்தைகளை அநாதைகளாக்கி அலையவிடுகிற பெற்றோரைத் திட்டுகிற நாம், பொறுப்பற்ற பெற்றோர்களையே உருவாக்குகிற நமது சமூக அமைப்பின் இழிவை வசதியாக மறந்து விடுகிறோம்.

    வானில் வட்டமடித்துக் கொண்டே பூமியின் பிரச்சனைகளைப் படம்பிடித்து அனுப்பும் நமது அறிவியல் குறித்து நாம் பெருமைப் படலாம். ஆனால் பூமியில் இருந்து கொண்டே பூமியின் பிரச்சனைகளைப் பார்க்கவும் அவற்றுக்குத் தீர்வு காணவும் முடியாத நமது சமூக அறிவியலைக் குறித்து நாம் வெட்கப்படவே வேண்டியிருக்கிறது.

    என்றெல்லாம் கட்டுரையாசிரியர் சொல்லும்போது அந்த வரிகளே திடீரென மூடிய வலக்கரமாய் மாறி நம் தலையை நோக்கி வந்து நம் தவறை உணர்த்தி நம் தலையில் நறுக்கென வலிக்கும்படி ஒரு குட்டுக் குட்டுகின்றன. கொஞ்சம் நம்மைப் பற்றிய உண்மை உணர்ந்த வகையில் நாம் திகைத்துத்தான் போகிறோம்.

    நட்புத் தொனியிலேயே எல்லாக் கட்டுரைகளையும் ஆசிரியர் எழுதியிருந்தாலும், நகுதற் பொருட்டு மட்டுமல்ல, மிகுதிக் கண் மேற்சென்று இடித்தற்கும் நான் உண்டு எனப் புலப்படுத்திக் கொண்டேதான் செல்கிறார். வாசிப்பவர்களின் சிந்தனையில் கிளைவிரிக்கும் இத்தகைய வரிகள் நூலெங்கும் பொறிப்பொறியாய் ஆங்காங்கே மின்னி நூலின் விறுவிறுப்பைக் கூட்டு கின்றன.

    கட்டுரை நூல் நாவலைப் போன்றதல்ல. ஒரு கட்டுரை நூலை ஒரே தடவையில் விறுவிறுவென்று வாசித்து முடிப்பது கடினம். அப்படி வாசிக்க வேண்டுமானால் கட்டுரையாசிரியரான அறிஞர் வ.ரா.வுக்கு இருந்தது போல் வெடிப்புறப் பேசும் உயர்ந்த நடைநலம் இருக்க வேண்டும். கருத்தின் மலர்ச்சி நூலில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் இதழ்விரிக்க வேண்டும். ஒரு கட்டுரை சோடை போனாலும் இடையே வரும் அந்தக் கட்டுரைக்குப் பின்னுள்ள பிற கட்டுரைகளை உடனே வாசிக்க மனம் முயலாது.

    இந்த வகையில் தாம் எழுதிய கட்டுரைகளை நூலுக்காகத் தேர்வு செய்வதிலும் அவற்றை நிரல்பட ஒழுங்கமைதியோடு தொடுப்பதிலும் நூலாசிரியர் சிறப்பான கவனம் செலுத்தியிருக்கிறார். நூலின் வெற்றிக்கு கட்டுரைகளின் வரிசையமைப்பும் கூடக் காரணம். பல்வேறு கோணங்களை உள்ளடக்கிப் பல்வேறு துறைகளை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் ஒரு மணம் வீசும் கதம்ப மாலை போல் தோற்றமளிக்கின்றன. அந்தக் கதம்ப மாலையின்

    Enjoying the preview?
    Page 1 of 1