Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Abaayam
Puthiya Abaayam
Puthiya Abaayam
Ebook65 pages29 minutes

Puthiya Abaayam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402141
Puthiya Abaayam

Read more from Rajesh Kumar

Related to Puthiya Abaayam

Related ebooks

Related categories

Reviews for Puthiya Abaayam

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Abaayam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    புதிய அபாயம்

    Puthiya Abaayam

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    புதிய அபாயம்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    ***

    1

    தட், தடக், தடக், தடக்.

    இரைச்சலோடு ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் தன் வெகுநீள உடம்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஐந்தாவது பிளாட்பாரத்தில் நுழைத்துக் கொண்டு வந்து நின்றதும் – பிளாட்பார இயக்கங்கள் சுறுசுறுப்புக்குத் தாவின. சிவப்பு உடை போர்ட்டர்கள் வாயில்களை மொய்த்தார்கள். பயணப்பட்ட அசதியை முகத்தில் தேக்கிக் கொண்டு அடிடாசையும், அரிஸ்டோகிரேட்டையும் சுமந்தபடி நிறையப்பேர் இறங்கிக் கொண்டிருக்க – காத்திருப்பாளர்கள் அவர்களிடையே பார்வையை அலைக்கழித்துக் கொண்டு போனார்கள்.

    அந்த அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டிலிருந்து கடைசியாக உதிர்ந்திருந்த மருதாசலம் இறங்கின விநாடிக்கு, புதிதான அந்தச் சுற்றுப்புறத்திற்கு எந்தப் பக்கம் போவது எனத் தடுமாறி பின்பு நிறையப் பேர் நகர்ந்து கொண்டிருந்த திசையைச் சரி என எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

    நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்குள்ளான ஏதோவொரு வயதில் இருக்கும் மருதாசலத்தின் மேலிருந்து கீழ் ஆறடி உயரத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கிராமியப்பூச்சு, துகள்துகளாய் அப்பிக்கிடந்த அழுக்கு, காலுக்கு மேல் உயர்ந்திருந்த வேஷ்டியையும் ஜிப்பா மாதிரியான சட்டையையும் ப்ரெளன் நிறத்துக்குக் கொண்டு போயிருந்தது. கக்கத்தில் மஞ்சள்பை இடுக்கிக் கிடந்தது. மோவாயில் பரவலாய் வெள்ளையும் கருப்புமாய்ப் பதிவாகியிருந்தது தாடி.

    கும்பலோடு கும்பலாய் நகர்ந்த மருதாசலம் கேட்டோரம் டிக்கெட் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டார். ஜிப்பா சைட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு நிதானமாய்த் துழாவி எடுத்துக் கொடுத்து விட்டு ஸ்டேசனை விட்டு வெளியே வந்தார்.

    டாக்ஸிகள், ஆட்டோக்கள் அணிவகுத்துக் காத்துக் கிடக்க, டிரைவர்கள் சவாரிகளை இனம்பிரித்து அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

    அந்த அதிகாலை நேரத்தில் சாலையில் ட்ராஃபிக் மைனஸ் ஆகிக்கிடக்க, பிளாட்பாரத்தை நோக்கிப் போன மருதாசலம் எதிரே தெரிந்த பிரமாண்டமான பேனரால் சட்டென நடை தடைப் பட நின்றார்.

    காஸ்ட்யூமரின் மனசுக்குத் தோணின பெயரில்லாத உடை ஒன்றில் அனேகப் பகுதிகள் ஒளிவு மறைவின்றிக் கிடக்க, - சுண்டும் கண்களால் பார்த்து-கன்னங்கள் குழி விழச் சிரித்துக் கொண்டிருந்தாள் நடிகை சாதனா.

    பார்க்கப் பார்க்க -

    மருதாசலத்தின் உடலில் ஒவ்வொரு செல்லும் கோபத்தால் உஷ்ணப்பட்டுக் கிடக்க –

    ‘வெக்கங் கெட்டது!’ –

    Enjoying the preview?
    Page 1 of 1