Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seithigalin Athirvalaikal
Seithigalin Athirvalaikal
Seithigalin Athirvalaikal
Ebook147 pages55 minutes

Seithigalin Athirvalaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நன்றியுடன்,

புதிய மாதவி.

" />

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். யாருடைய வரலாறு? என்ற கேள்விதான் இன்றைய செய்திகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயத் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே செய்திக்கு அலைவரிசை மாறும் போதெல்லாம் அர்த்தங்களும் மாறிப்போகின்றன. இந்தச் சூழலில்தான் எமைப் பாதித்த சமகாலச் செய்திகளின் ஊடாகப் பயணித்து செய்திகளின் நடுவில் உறைந்து போன மவுனங்களை உடைத்து அதிகாரத்தை, தனி மனித ஆளுமைகளின் மறுபக்கத்தை மும்பை அலைவரிசையில் உங்களுக்காக....

கடலில் சங்கமிக்கும். நதியின் உரிமையைப் பறிகொடுத்த மித்திநதியின்கரையிலிருந்து

நன்றியுடன்,

புதிய மாதவி.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580117302111
Seithigalin Athirvalaikal

Read more from Puthiyamaadhavi

Related to Seithigalin Athirvalaikal

Related ebooks

Reviews for Seithigalin Athirvalaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seithigalin Athirvalaikal - Puthiyamaadhavi

    http://www.pustaka.co.in

    செய்திகளின் அதிர்வலைகள்

    Seithigalin Athirvalaikal

    Author:

    புதிய மாதவி

    Puthiyamaadhavi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/puthiyamaadhavi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    செய்திகளின் அதிர்வலைகள்

    (கட்டுரைகள்)

    புதிய மாதவி

    மும்பைத் தாக்குதல்களின்

    தங்கள்-

    உறவுகளை இழந்து வாடும்

    உறவுகளுக்கு. . .

    நன்றி

    ஊடறு

    திண்ணை

    கீற்று

    வடக்கு வாசல்

    தமிழர் கண்ணோட்டம்

    தி சன்டே இந்தியன்

    திருவள்ளுவர் நற்பணி இயக்கம், மும்பை

    மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்

    என்னுரை

    இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். யாருடைய வரலாறு? என்ற கேள்விதான் இன்றைய செய்திகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயத் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஒரே செய்திக்கு அலைவரிசை மாறும் போதெல்லாம் அர்த்தங்களும் மாறிப்போகின்றன.

    இந்தச் சூழலில்தான் எமைப் பாதித்த சமகாலச் செய்திகளின் ஊடாகப் பயணித்து செய்திகளின் நடுவில் உறைந்து போன மவுனங்களை உடைத்து அதிகாரத்தை, தனி மனித ஆளுமைகளின் மறு பக்கத்தை மும்பை அலைவரிசையில் உங்களுக்காக. . .

    கடலில் சங்கமிக்கும்.

    நதியின் உரிமையைப் பறிகொடுத்த

    மித்தி நதியின் கரையிலிருந்து

    நன்றியுடன்,

    புதிய மாதவி.

    puthiyamaadhavi@hotmail.com

    www.puthiyamaadhavi.blogspot.com

    www.puthiyamaadhavi.wordpree.com

    பொருளடக்கம்

    1. தாக்கரேக்கள் மராத்திய மண்ணின் மைந்தர்களா?

    2. ராஜ்தாக்கரேவின் நாடகக் காட்சிகள்

    3. மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்

    4. யார் இவர்கள்?

    5. சலாம் மும்பை

    6. கண்ணில் கரையாத இரத்தக் கறைகளுடன். . .

    7. சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்

    8. எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்

    9. செய்திகளின் நடுவில்

    10. தமிழ்முரசு - ‘சன்’ விளம்பரம்

    11. மும்பையில் தமிழர்கள்

    12. தலித் அரசியல்

    13. அரபிக்கடலோரம் ஒரு தமிழலை

    14. டப்பாவாலாக்கு. . . ஜே!

    15. மும்பைக் குடியுரிமைக் கதவுகள்

    16. மும்பையும் இந்தியாவும்

    1. தாக்கரேக்கள் மராத்திய மண்ணின் மைந்தர்களா?

    ‘தமிழர்களை விரட்டி அடி. ’

    ‘ஸாலா மதராஸிக்கு. . . அட்டோ. ’

    ‘தென் இந்தியர்கள் மும்பை மண்ணின் மைந்தர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். ’

    ‘வட இந்தியர்கள் மும்பையை நாசப்படுத்தும் நச்சுக்கிருமிகள்’

    ‘பீகாரிகள் மும்பையின் புற்றுநோய்’

    ‘ஏக் பீகாரி சவ் ப்பிமாரி’ (ஒரு பீகாரி நூறு வியாதிகள்') (சாம்னா பத்திரிகை 06/3/2008)

    1966ல் தொடங்கி 1970ல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த கோஷங்கள் இன்றுவரை வெவ்வேறு காரணங்களுக்காக தொடர்கிறது.

    ஒரு அடுத்த தலைமுறையும் இக்குரலை அப்படியே உள்வாங்கிக் கொண்டு மும்பையை அதிர வைக்கிறது.

    அன்று பால்தாக்கரே. இன்று அவரிடமிருந்து பிரிந்து நிற்கும் ராஜ்தாக்கரேயும் அவரைவிட உக்கிரமாக இக்குரலை எடுத்துச் செல்லும் காட்சிகள் அடிக்கடி அரங்கேறுகிறது. இக்குரல்களுக்குப் பின்னால் இருக்கும் நியாயங்கள், உரிமைகள், தேவைகள் ஒரு பக்கம்.

    இந்தியச் சட்டம், இந்தியக் குடியுரிமை, இந்திய இறையாண்மை. . . இவை மறுபக்கம்.

    இந்த இரண்டுக்கும் நடுவில் அரங்கேறிய காட்சியில் மூன்றாவதாக ஒரு பார்வை தாக்கரேக்களாலும் பதில் சொல்ல முடியாத மூன்றாம் பார்வை அண்மையில் வெளிவந்துள்ளது.

    மராட்டிய மண் மராட்டியர்களுக்கே,

    வடஇந்தியர்களை விரட்டி அடி

    என்று நேற்றுவரை குரல் கொடுத்த இவர்கள் யார்?

    இவர்கள் மராட்டிய மண்ணின் மந்தர்களா?

    இல்லை.

    இவர்கள் மராட்டிய மண்ணுக்கு வந்து இரண்டு தலைமுறை

    தான் ஆகிறது!

    வட இந்தியாவிலிருந்து இன்றைக்கு இவர்கள் விரட்ட நினைக்கும் பீகாரிகளைப் போல, உ. பி. பையாக்களைப் போல, தென்னிந்தியர்களைப் போல இவர்களும் வேலைத் தேடி, பிழைப்பு தேடி இந்த மராட்டிய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான்!

    இப்படி சரித்திர உண்மையை அறுசுவை உணவின்போது மிளகாயைக் கடித்த மாதிரி போட்டு உடைத்திருக்கிறார் புனே பல்கலைக் கழக பேராசிரியர் ஹரி நர்க்கே (Hari Narke). தேசியவாத காங்கிரசு பத்திரிகையான ராஷ்டிரவாடியில் அவர் கட்டுரை ரொம்பவும் காரசாரமாக வெளிவந்துள்ளது.

    "Mumbai, June 24 (ANI). Nationalist Congress Party's mouthpiece Rashtravadi has said that the Thackerays came to Mumbai two generations ago for jobs and have no right to assault those coming in search of livelihood in the financial capital of India. NCP mouthpiece made this claim in an article published in this month's issue. A renowned scholar and Professor at the Pune University, Hari Narke, has writter the strong-worded article in the Rashtravadi.

    Narke flayed Maharashtra Navnirman Sena chief Raj Thackeray, who is Bal Thackeray's nephew, over attacks on migrants in Mumbai.

    Raj should read the autobiography of his grandfather Prabodhankar Thackeray (Bal Thackeray's father). Probodhankar, who studied in Madhya Pradesh, has written how he travelled in other states for livelihood, Narke said.

    This proves that the Thackerays, Who are not original inhabitants of Mumbai, came to this city in search of livelihood, the scholar said. -

    Incidentally, Maharashtra Government published Prabodhankar's literature in 1995 at the behest of Narke, the article said.

    பால்தாக்கரேயின் தந்தையார் பிரபோதன்கர் தாக்கரே தன் சுயசரிதையில் பிழைப்புத் தேடி அவர்கள் மும்பைக்கு வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

    பேரன் ராஜ்தாக்கரே தாத்தாவின் எழுத்துகளைப் படித்தால் நல்லது என்று தெரிகிறது. தாக்கரேக்கள் யார்? என்ற கேள்வி எழும்போது அவர்கள் CKP இனம்/சாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. தாக்கரே என்ற குடும்பபெயர் (Surname) இந்த வம்சம்/இனம்/சாதியின் பெயரில் ஒன்றாகும். :

    யார் இந்த CKPக்கள்?

    CKP - Chandraseniya Kayastha Prabhu

    சந்திரசேன்ய கயஸ்த பிரபு வம்சம்.

    பல்வேறு. வரலாற்று செய்திகளும் புராண/ நாட்டார் கதைகளும் இவர்களைப் பற்றிய நிறைய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

    காஷ்மீர அரசன் சந்திரசென் பரசுராமரால் கொல்லப்படுகிறான். அவன் மனைவி அரசி கங்கா/கமலா கர்ப்பிணியாக இருப்பதால் அவளைக் கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான். அவள் வயிற்றுப் பிள்ளைகள்தான் சந்திரசென்ய வாரிசுகள் என்ற பொருள்பட சந்திரசேன்ய கயஸ்த பிரபுக்கள் என்றழைக்கப் படுகிறார்கள். பிரபு என்ற சொல் அரசுமரியாதை/அதிகாரத்தை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

    கயாவில் வாழ்ந்த இனக்குழு மக்கள் கயஸ்தா என்றழைக்கப் படுகிறார்கள்.

    H S Wilson (1819) கயஸ்தா என்றால் பேரதிகாரம் படைத்தவர்கள் என்று பொருள். க்ஷத்திரிய ஆணுக்கும் சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவர்கள் இவர்கள் என்கிறார்.

    7வது 8வது நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கயஸ்தர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் மத்திய பகுதிக்கு நகர்ந்தார்கள். புத்த மதம் கோலோச்சிய காலத்திலும் அதற்குப் பின் அலாவுதீன் கில்ஜியின் படை எடுப்பிலும் இப்பிரபுக்கள் குஜராத், கொங்கன் கடற்கரை வழி மராட்டிய மாநிலத்திற்கு வந்தார்கள். அப்படி 1305ல் 42 கயஸ்தா பிரபுக்கள் மராத்திய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது.

    ஜீனாப் நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் இவர்கள் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஜினாப் என்ற சொல் சமஸ்கிருதத்தில் சந்திர என்றுமருவி வந்துள்ளது. Senya Shreni என்ற சொல் என்ற சமஸ்கிருத சொல்லின்

    Enjoying the preview?
    Page 1 of 1