Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarthavai Padithavai
Paarthavai Padithavai
Paarthavai Padithavai
Ebook196 pages3 hours

Paarthavai Padithavai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.

ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580118702128
Paarthavai Padithavai

Read more from Jeevee

Related authors

Related to Paarthavai Padithavai

Related ebooks

Reviews for Paarthavai Padithavai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarthavai Padithavai - Jeevee

    http://www.pustaka.co.in

    பார்த்தவை படித்தவை

    Paarthavai Padithavai

    Author:

    ஜீவி

    Jeevee

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jeevee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வாசிப்பு என்னும் பேரின்பம்

    2. இரு கவிஞர்கள்; இரு வேறு நினைவுகள்..

    3. பிறரில் தன்னைக் காண்பதுவும், தன்னில் பிறரைக் காண்பதுவும்:

    4. தேடித் தெரிவதின் சுகம்

    5. வரலாற்றுக் கதைகளின் வரலாறு

    6. இறைவழிபாடு ஓர் அலசல்

    7. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    8. ஜெயமோகனின் ‘கெய்ஷா’-- சிறுகதை

    9. இளையராஜாவும் அசோகமித்திரனும்

    10 இந்திய விவசாயி!...

    11. ஜெயமோகனின் ‘வெண்முரசு’

    12. விமரிசனக் கலையும் கதையின் கதையும்

    13. கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!

    14. ‘யாத்ரா’ இதழ்களின் தொகுப்பு

    15. குமுதம் எஸ்.ஏ.பி.யின் 'நீ''

    16. மறக்கமுடியாத மதுரை நினைவுகள்

    17. கல்லிலே கலைவண்ணம் கண்டான்

    18. அழகிய தமிழ்மொழி இது!..

    ஜீவியின்

    பார்த்தவை படித்தவை

    1. வாசிப்பு என்னும் பேரின்பம்

    நிச்சயமாக வாசிப்பது என்பது பேரின்பம் பயப்பது தான்.

    ஆழ்ந்து வாசிக்கும் பொழுது அப்படி வாசிக்கும் ரசனையில், வார்த்தைகளின் கோர்வையில் அந்த அனுபவத்தைத் தந்த எழுத்தாளருக்கு என்ன கொடுத்தாலும் தகும் என்று தோன்றும். 

    ‘குங்குமம்’ பத்திரிகையைப் பற்றிச் சொல்ல வேண்டாம். கனமான விஷயங்களையும் எளிமையாகக் கொடுப்பதில் கைதேர்ந்த பத்திரிகை.

    அந்தப் பத்திரிகையில் எழுத்தாளர் ஜெயமோகன் ‘முகங்களின் தேசம்’

    என்னும் பெயரில் தனது பயண அனுபவங்களை எழுதி வந்த்தைத் தொடர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.

    அன்று மதியம் அவரது பயண அனுபவங்களில் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அது 'முகங்களின் தேசம் தொடரின் 41-வது பகுதி.  

    தனதுப் பயணக் கட்டுரையின் நடுவே நீண்ட பயணங்களின் ஊடே வாய்த்த அரிய நட்புகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வருகிறார். போகும் இடங்களில் சரியான வழிப்பாதை தெரியாது தடுமாறிய சமயங்களில் வழிப்பாதைகளை விளக்கி வழிகாட்டியவர்களை பற்றி நன்றியுடன் நினைவு கூர்கிறார்.  கார் பயணங்களில் நூறு கிலோ மீட்டருக்கு மேல் எங்களுடன் வந்து வழிகாட்டியவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.  'முற்றிலும் சம்பந்தமற்ற ஊர்களில், மொழியே தெரியாமல் வந்து வழிகாட்டி, அந்த இடத்தையும் விரிவாக விளக்குவார்கள். அங்கிருந்து நாங்கள் அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல அவர்கள் பஸ் பிடித்து தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் அதற்குள் எங்களுக்குள் ஆழ்ந்த அறிமுகம் ஆகியிருக்கும். குடும்ப விஷயங்கள் எல்லாம் பரிமாறப்பட்டிருக்கும். பல நேரங்களில் ரோட்டோர டீக்கடைகளில் சேர்ந்து டீ சாப்பிட்டு பிரியாவிடை தந்து வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  சமயங்களில் கண்ணீர் மல்குவது கூட உண்டு..’'என்று அவர் சொல்லும் பொழுது வழிப்பயணங்களில் இப்படியாக ஏற்படும் நட்புகள் பற்றியும் அந்த நபர்களின் உதவிகள் பற்றியும் பெருமிதமாக நினைக்க முடிகிறது.

    ஒரு தடவை ஹளபீடு சென்று கொண்டிருந்த பொழுது வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று மேலும் பல ஹொய்சாள ஆலயங்களைக் காட்டினாராம் ஒருவர். ‘பெலவாடி போகாம ஒரு பயணமா?’ என்று கூட்டிச் சென்ற அவர், ‘அடுத்த முறை வர்றப்ப சொல்லுங்க. இன்னும் நெறைய எடம் இருக்கு." என்றாராம். இதே மாதிரி தலைக்காவிரி போனபோது முகமறியா ஒருவர் சொல்லித் தான் திபேத்திய குடியிருப்பைப் பார்க்க முடிந்தது’ என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார் ஜெயமோகன்.

    ஒருமுறை கேரளத்தில் திருநெல்லி என்னும் ஊருக்கு நண்பர்களுடன் சென்றிருந்தாராம். அடர்த்தியான காட்டின் நடுவே சிவன் கோயில் இருக்கும் ஊர் அது. அங்கு வன விடுதியில் தங்கியபடி மழையில் காட்டைச் சுற்றிப் பார்த்தார்களாம். மறுநாள் அதிகாலை கிளம்பி காட்டுச்சாலை வழியாக நாகரஹோலேயைக் கடந்து சாம்ராஜ்பேட் வந்து சத்தியமங்கலம் வழியாக ஈரோடு வந்து விட வேண்டும் என்பது அவர்கள் திட்டம்.  

    கிளம்பிய கொஞ்ச நேரத்தில் விடிகாலை இருட்டில் மின் ஒளி வெளிச்சத்துடன் வழியில் ஒரு டீக்கடையைப் பார்க்கிறார்கள். வாழையிலையில் உருளைகளாக அடுக்கப்பட்டிருந்த சூடான குழாய்ப்புட்டையும் பொன்னிறமாகத் தொங்கிக் கொண்டிருந்த நேந்திரம் பழக் குலையையும் கூடப் பார்த்து விடுகிறார்கள். அதிகாலை ஆயிற்றே இப்பொழுதே சாப்பிட வேண்டுமா என்ற யோசனை போலும். ‘கொஞ்ச நேரம் போகட்டும்; அடுத்து வரும் இதே மாதிரி ஒருகடையில் சாப்பிடலாம்’ என்று அந்த நேரத்தில் அவர்கள் சாப்பிடுவதைத் தள்ளிப்போட்டது தான் வம்பாகப் போய்விடுகிறது. ‘வழிநெடுக எந்தக் கடையும் தென்படாமல்  அன்று இரவு சாம்ராஜ்பேட்டில் தான் சாப்பிட ஏதோ கிடைத்தது’ என்று ஜெயமோகன் சொல்லும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.

    ‘வழிநெடுக எங்கும் கடைகளே இல்லை; ஏன் மனித நடமாட்டமே இல்லை. சாலையோ மிக மிக மோசம். தூக்கி தூக்கிப் போடப்பட்டு வண்டியில் பயணம். அங்கங்கே மிருக நடமாட்டம் வேறே. கொலைப்பசியுடன் பகல் முழுக்க ஊர்ந்து கொண்டே பயணித்தோம்’ என் கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் எதையாவது பேசிக் கொண்டே பசியை மறப்போம் என்று அவர்கள் நினைத்தால் எதைப் பேசினாலும் அவர்கள் பேச்சு சாப்பாட்டிலேயே வந்து முடிந்து வெறுத்துப் போனார்களாம். ‘சரி, இலக்கியம் பேசுவோம்’ என்று ஆரம்பித்து ‘லாசராவின் ஒரு கதையில் வந்தக்குழம்பு வர்ணிப்பில்’ பேச்சு வந்து நின்று, ‘காபி நெறத்திலே பளபளன்னு அது. சூடான சோறு மேலே நெய் உருகி மின்னுறது; புன்னகைக்கிறது’ என்று லாசரா எழுதியதை ஜெயமோகன் சொல்லும் அழகே அழகு! கூடவே நாஞ்சில் நாடனின் ‘சாளைமீன் புளிமுளம்’, தி.ஜானகிராமனின் ‘பாயசம்’ கதைகளும் நினைவு கூறப்படுகின்றன.

    குண்டும் குழியுமான பாதையில் போய்க் கொண்டிருக்கையில் வழி வேறு தவறி விட்டது. யாரிடமாவது கேட்கலாம் என்றால் மனித முகமே தென்படாத பிரதேசமாக இருக்கிறது. கடைசியில் ஒருவர் பேருந்துக்காக நிற்பதை காரிலிருந்தே பார்க்கிறார்கள். கையில் குடை, பெரிய மஞ்சள் பை, நரைத்த மீசை, நெற்றியில் துருத்திய முடி, குறுகி இறுகிய உடம்பு, மலைப்பகுதி ஆள் போலவான தோற்றம். (எழுத்தாளர் பத்திரிகை ஓவியருக்காக ஒதுக்கிய வர்ணனை. சும்மா சொல்லக்கூடாது. ஓவியர் ராஜாவும் தூள் கிளப்பியிருக்கிறார். வர்ணனை ஓவியமாகும் பொழுது எதையாவது தவற விட்டிருக்கிறாரா என்று உன்னிப்பாகப் பார்த்தேன். கையில் குடை என்பதை மட்டும் பின்புல வர்ணத்தில் தனித்துக் காட்ட சிரமப்பட்டிருப்பார் என்பது தெரிந்தது)

    காரை அவர் அருகில் நிறுத்தி, விஷயத்தைச் சொல்லி வழி காட்ட முடியுமா என்று கேட்ட போது அந்த மஞ்சப்பைக்காரர் யோசிக்கிறார்.  வாருங்கண்ணா.. சாப்பிட்டே நேரமாகுதுண்ணா.. என்று

    தூண்டில் போட்டதும் ஒரு தயக்கத்துடன் வண்டியிலேறிக் கொள்கிறார்.

    வழிநெடுக கன்னடத்தில் அந்த மஞ்சள் பைக்காரர் பேசிக் கொண்டே வருகிறார். காட்டின் இயல்புகள், வழியின் சிக்கல், விவசாயப் பிரச்சினை இப்படி... ஒரு வழியாக ஒரு சிறிய சாலையின் தாழ்வான கூரை போட்ட வீட்டின் முன் வண்டியை நிறுத்தச் சொல்கிறார். டாங்க்ஸ் குரு.. என்று மஞ்சள் பை சொந்தகாரரின் முகம் மலர்கிறது... இதான் என்னோட வீடு. நீங்க இப்போ வந்த வழியேத் திரும்பிச் சென்றால் நாம் கடந்து வந்த ஆலமரத்தைப் பாக்கலாம். நீங்க என்ன செய்யறீங்க, அந்த இடத்தில் வலப் பக்கமாக திரும்புறீங்க.. திரும்பினா, பெரிய சாலை வரும். அதான் சாம்ராஜ்பேட் போற வழின்னு நெனைக்கிறேன். நிச்சயமாத் தெரியாது.. யாருகிட்டேயாவது வழிலே கேட்டுக்கங்க.. என்கிறார்.  கிட்டத்தட்ட பாதி தூரம் சுத்தமாக சம்பந்தமே இல்லாத திசையில் அழைத்து வந்திருக்கிறார் என்ற ஞானம் உறைத்தும் எதுவும் சொல்ல முடியாது போகிறது.

    நூறு கிலோ மீட்டர்கள் கூட வந்து சரியான பாதை காட்டி வழி சொல்லி தங்கள் இடத்திற்கு பஸ்ஸில் திரும்பியிருக்கிறார்களே, சில புண்ணிய ஆத்மாக்கள், இப்பொழுது ஒருவர் வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று இவர்கள் காரை தன்னிடத்தில் தான் வந்திறங்க உபயோகப்படுத்திக் கொண்டது ஒன்றும் பெரிசாகத் தெரியவில்லை. அது பெரிசாகத் தெரியாத அளவுக்கு வழிப்ப்யணங்களில் அகால வேளைகளில் வழி தவறும் பொழுது சம்பந்தமேயில்லாதவர்கள் வழிகாட்டி பேருதவி புரிந்ததை ஜெயமோகன் நன்றியுடன் வர்ணித்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

    ‘வண்டியைத் திருப்பினோம். வண்டிக்குள் பேச்சுக் குரலே எழவில்லை. ‘ என்று ஜெமோ முடிக்கும் பொழுது அவருடன் பயணித்த நாமும் அவர் பெற்ற அனுபவங்களைப் பெற்ற மாதிரியான உண்ர்வே மிஞ்சுகிறது. இப்படியான ஒரு அனுபவம் நமக்கும் ஏற்பட்டதென்றால் நாம் என்ன செய்திருப்போம் என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை. இதெல்லாம் நல்ல ஒரு எழுத்தாளரை வாசித்த உணர்வில் ஏற்பட்ட யோசனைகள். 

    பத்திரிகைக்கு வேண்டுமானால் இதழுக்கு இதழ் விதவிதமான விஷயங்களை எழுத எழுதுபவர்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் 'இவர் இல்லையென்றால் அவர்' என்று பத்திரிகைக்கும் எழுதுபவர்களுக்குமான தொடர்பு அந்தந்த காலகட்ட வரையறைகளுக்குள் சுருங்கிப் போகிறது.  

    ஆனால் தன்னை மறந்து எழுத்தோடு ஐக்கியமாகி வாசிப்போருக்கு அப்படி இல்லை. வாசிக்கும் எழுத்துக்கள் வழிகாட்டி வழி நடத்திச் செல்ல்லும் அற்புத அனுபவங்கள் மனசில் தேங்கி தங்கி விடுகின்றன. அவை விளைவிக்கும் உணர்வுகள் நிறைய... காசு பணத்தால் எடை போட முடியாத சமாச்சாரம்.

    எப்படிப்பார்த்தாலும் வாசிப்பு என்பது பேரின்பம் தான் என்பது என் கட்சி. புற உலகையே மறந்து வாசிப்புலகில் மூழ்குவதும் பேரின்ப சுகத்தில் மூழ்குவது தான் என்பேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?..

    2. இரு கவிஞர்கள்; இரு வேறு நினைவுகள்..

    தொலைபேசித் துறையில் வேலை கிடைத்ததும் எனக்கு முதல் பணியிடமாக வாய்த்தது பாண்டிச்சேரி. புதுவை ஜிப்மரில் என் ஆப்த நண்பன் ரகுராமன் பணியாற்றிக் கொண்டிருந்தது கூடுதல் சந்தோஷம்.

    முன்னே பின்னே புதுச்சேரிக்குப் போனதில்லை. முதல் போஸ்டிங் புதுச்சேரி என்றவுடனேயே அங்கே இருக்க வேண்டிய மனக்கட்டுப்பாட்டை மனசில் படியும்படி நினைவுறுத்தித் தான் என் சகோதரர் ரயிலேற்றி விட்டார். புதுவை ரயிலடியில் காத்திருந்து என்னை வரவேற்று தான் தங்கியிருந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றவன் ரகுராமன் தான்.

    புதுவையில் இரண்டு வருட வாழ்க்கை தான். ஆனால் ஏழெட்டு வருடங்கள் வாழ்ந்த மாதிரி ஏகப்பட்ட அனுபவங்கள்.

    ஒவ்வொன்றாகச் சொல்லலாம் என்றால் முந்திக் கொண்டு இந்த இரு நினைவுகள் நினைவுக்கு வருகின்றன.

    புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும். அந்தத் தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

    Enjoying the preview?
    Page 1 of 1