Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nermai Oru Kuttrama?
Nermai Oru Kuttrama?
Nermai Oru Kuttrama?
Ebook106 pages44 minutes

Nermai Oru Kuttrama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேர்மையாக பணியாற்றிய ஒரு நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவமே “நேர்மை ஒரு குற்றமா?” என்ற கதை. ஒரு நல்ல ஆசிரியன் நினைத்தால், முயன்றால் ஒரு மோசமான மாணவனையும் மாற்றி விடமுடியும் என் நம்பிக்கை. இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்! உணர்த்தியவன் நான்!

‘அண்ணன்’ என்ற கதை எனது நெகிழ்வான உண்மை அனுபவமே! ‘கண்டிஷன் கல்யாணம்’ சிறுகதை முற்றும் கற்பனையான நகைச்சுவைக் கதை! யார் கண்டது? உலகம் போகிற போக்கில் பெண்கள் தாங்கள்தான் தாலி கட்டுவோம் என்று கோரிக்கை வைத்தாலும் வைக்கலாம்!

இந்திய இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதைப் பார்த்து வருந்துகிறேன். அதன் வெளிப்பாடுதான் ‘பணம் சிரித்தது’ என்ற கதை. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பு இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் உண்டு! அந்த வகையில் இதில் உள்ள கதைகள் உங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119202127
Nermai Oru Kuttrama?

Read more from V.K. Kasthurinathan

Related to Nermai Oru Kuttrama?

Related ebooks

Reviews for Nermai Oru Kuttrama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nermai Oru Kuttrama? - V.K. Kasthurinathan

    http://www.pustaka.co.in

    நேர்மை ஒரு குற்றமா?

    Nermai Oru Kuttrama?

    Author:

    வீ.கே. கஸ்த்தூரிநாதன்

    V.K. Kasthurinathan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/v-k-kasthurinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நேர்மை ஒரு குற்றமா?

    2. கர்னல் கார்த்திக்

    3. கண்டிஷன் கல்யாணம்

    4. அண்ணன்

    5. தண்டனை

    6. தீபாவளிப் புடவை

    7. பணம் சிரித்தது

    8. இந்தியா இனி வெல்லும்

    9. அர்த்தமுள்ள ஆசைகள்

    நேர்மை ஒரு
    குற்றமா?
    என்னுரை

    இனிய வாசகர்களே!

    வணக்கங்கள் பல! வாஞ்சையும் அப்படியே! மணிமேகலை வெளியீடாக வெளிவரும் என்னுடைய 4-வது நூல் நேர்மை ஒரு குற்றமா? என்ற இச்சிறுகதைத் தொகுப்பு.

    இதிலுள்ள ஒன்பது சிறுகதைகளும் ஒன்பது வகையான களங்களில் அமைந்த கதைகள் ஆகும். கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், நாடகம் எழுதினாலும், ஏதாவது சமுதாயக் கருத்தை மையமாக வைத்தே, என் படைப்புகள் அமைந்திருப்பதை வாசகர்கள் அறியலாம். காரணம் நான் சமுதாயத்தின் அங்கமாகவே என்னை உணர்கிறேன். என்னுள் ஊறும் உணர்வாகவே சமுதாயத்தைப் பார்க்கிறேன்.

    நான் பள்ளியில் படிக்கும் போதே, பாடப் புத்தகங்களை விடவும் புகழ்பெற்ற படைப்பாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் அதிகம் படித்தவன். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மனிதர்களையும், மாளிகையின் மாந்தர்களையும் அன்றாட வாழ்வில் அதிகம் பார்ப்பவன் நான். எனது படைப்புகளில் நான் பார்த்த மனிதர்களும், பழகிய மனிதர்களுமே அதிகம் வருவார்கள். காரணம் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் என்னைப் பாதித்து இருக்கிறார்கள்.

    நேர்மையாக பணியாற்றிய ஒரு நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவமே நேர்மை ஒரு குற்றமா? என்ற கதை. ஒரு நல்ல ஆசிரியன் நினைத்தால், முயன்றால் ஒரு மோசமான மாணவனையும் மாற்றி விடமுடியும் என் நம்பிக்கை. இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்! உணர்த்தியவன் நான்!

    ‘அண்ணன்’ என்ற கதை எனது நெகிழ்வான உண்மை அனுபவமே! ‘கண்டிஷன் கல்யாணம்’ சிறுகதை முற்றும் கற்பனையான நகைச்சுவைக் கதை! யார் கண்டது? உலகம் போகிற போக்கில் பெண்கள் தாங்கள்தான் தாலி கட்டுவோம் என்று கோரிக்கை வைத்தாலும் வைக்கலாம்!

    இந்திய இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதைப் பார்த்து வருந்துகிறேன். அதன் வெளிப்பாடுதான் ‘பணம் சிரித்தது’ என்ற கதை. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பு இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் உண்டு! அந்த வகையில் இதில் உள்ள கதைகள் உங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.

    புதுக்கோட்டை மாவட்ட இலக்கியப் பேரவையின் தலைவர் திரு. முத்து. சீனிவாசன், இந்த நூலுக்கு அழகாக ஒரு அணிந்துரை வழங்கியுள்ளார்! மற்றவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்குவதில் மிக உயர்ந்த மனிதர் அவர்! அவர் சிறந்த எழுத்தாளரும்கூட அவர் என்பால் கொண்ட அன்பு அளவிட முடியாதது. அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது கதைகளை வெளியிட்டு உதவிய தேவி, வார மலர், தினகரன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களின் ஆசிரியர்களுக்கும், இந்நூலை அழகிய முறையில் வெளியிட்டிருக்கும் மணிமேகலைப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி என்றும் உண்டு.

    இதை வாங்கிப் படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? ஏன் என்றால் நீங்கள் இன்றி நான் இல்லையே! உங்கள் கருத்துக்களை உடன் எழுதி அனுப்புங்கள்! அவையே என்னை வளர்க்கும் இன்னொரு தாய்!

    அன்புடன்

    வீ.கே. கஸ்தூரிநாதன்

    குழிபிறை.

    சொல்லருவி

    மு. முத்து சீனிவாசன்

    தலைவர்

    புதுக்கோட்டை மாவட்ட

    இலக்கியப் பேரவை

    50, வெங்கடேச நகர்,

    சமத்துவபுரம் சாலை,

    புதுக்கோட்டை - 622 005

    போன் : 04322 - 271100

    செல் 94450 41100

    அணிந்துரை

    சிந்தனைச் செழிப்பில், கற்பனை வளத்தில், கருத்தின் ஆழத்தில், சொற்களின் பயன்பாட்டில் ஒன்பது சிறுகதைகள் ‘வீ.கே. கஸ்தூரிநாதன்’ அவர்களின் படைப்பில், காவியமாய் திகழ்கின்றன.

    திரு. வீ.கே. கஸ்தூரிநாதன் நாடறிந்த நல்ல கவிஞர். நினைத்தவுடன் கவிதை பாடும் ஆற்றல் படைத்தவர். பட்டிமன்ற மேடைகளில் சொற்சிலம்பாடி சொக்க வைக்கும் பேச்சாளர். பல கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே எழுதி வெளியிட்டவர். சிறுகதைகளையும் அவரது கை வண்ணத்தில் மிளிர வைத்தவர்.

    இப்படிப்பட்ட பின்னணியில், திறமையான எழுத்தாளர் எனப் பெயர்பெற்ற, வீ.கே. கஸ்தூரிநாதன் ஒன்பது வேறுபட்ட கதைத் தளங்களில் சிறுகதைகளைப் படைத்து, முதல் கதையின் தலைப்பான் ‘நேர்மை ஒரு குற்றமா?’ என்ற தலைப்பில் நூலை எழுதி உள்ளார்.

    சிறுகதை எழுதுவது கடினமான ஒன்றாகும். சுவை குன்றாமல், படிப்பதற்கு எளிமையாய், கதைப் போக்கு மாறாமல், சுருக்கமாய்ச் சொல்ல வேண்டும். வாசகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட ஆங்காங்கே எதிர்பாராத திருப்பங்களும் இருக்க வேண்டும்.

    இந்த வகையில் திரு. வீ.கே. கஸ்தூரிநாதன் எழுதியுள்ள ஒன்பது கதைகளிலும், நீதி போதனைகள் நிரம்பி வழிகின்றன. எதிர்பாராத திருப்பங்கள் சுவை, கூட்டுகின்றன. வார்த்தைப் பிரயோகங்களும் எளிமையாய், இயல்பாய் விரிகின்றன.

    நேர்மை ஒரு குற்றமா? கதையில் ஒரு அருமையான கருத்தை வலியுறுத்துகிறார். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்றுத் தரவேண்டியது ஒழுக்கமும் நேர்மையுந்தான். இந்த இரண்டையும் மாணவர்களிடம் நாம் பதிய வைத்துவிட்டால் மற்றவை எல்லாம் தானே வந்து விடும் என்று ஒரு நல்லாசிரியரின் கடமையை வலியுறுத்துகிறார்.

    இரண்டாவது கதை கர்னல் கார்த்திக். தீவிரவாதக் கும்பலை தனது திறமையால் எதிர்கொள்ளும் ஒரு கர்னலின் கதை; மிக அருமையாக அமைந்துள்ளது. தீவிரவாதி கூறுகிறார்: சிந்திப்பவர்கள் நமது இயக்கத்துக்குத் தேவையில்லை. செயல்படுபவர்கள்தான் தேவை. எப்படி தீவிரவாதிகளின் மூளை மழுங்கடிக்கப்பட்டு, தலைவனின் கட்டுப்பாட்டுக்கு ஆடும் பொம்மை போல் செயல்பட வைக்கப்படுகின்றனர் என்பதைக் கதாசிரியர் நன்கு விளக்குகிறார்.

    ஒரு இடத்தில் நம் பகைவர்கள் நம்மோடுதான் இருக்கிறார்கள் என்று கர்னல் கூறுகிறார். இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு உதவும் நம் நாட்டவரை நூல் ஆசிரியர் சாடுகிறார். தனது மகள் சத்யாவை இழந்து,

    Enjoying the preview?
    Page 1 of 1