Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalu Vari Note
Naalu Vari Note
Naalu Vari Note
Ebook361 pages2 hours

Naalu Vari Note

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசியல், நாட்டு நடப்பு , சினிமா கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்ட இவர் B.Com FCA முடித்துவிட்டு, சென்னையில் தொடங்கி பிறகு ஜகர்த்தாவில் சில வருடங்கள் பின் வளைகுடா வாழ் தமிழனாய் சில வருடங்கள். இப்போது மறுபடியும் சென்னை வாசி. வேலூர் போன்ற ஒரு small town ல் சினிமா பார்த்து, விவித் பாரதி,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவையில் திரை இசை பாடல் கேட்டு , தெருவில் கிரிக்கெட் விளையாடி, வளர்ந்தவர். புத்தகங்கள், தமிழ் திரை இசை, கோவில்கள் மற்றும் தமிழ் இலக்கியம் பக்தி சார்ந்து இருப்பதை ரசிப்பவர்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119302125
Naalu Vari Note

Related to Naalu Vari Note

Related ebooks

Reviews for Naalu Vari Note

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalu Vari Note - N. Mohanakrishnan

    http://www.pustaka.co.in

    நாலு வரி நோட்டு

    Naalu Vari Note

    Author:

    நா.மோகனகிருஷ்ணன்

    N.Mohanakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/n-mohanakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இறைவன் இருக்கின்றானா?

    2 பாடல் வரிகள்

    3. தேன் உண்ணும் வண்டு

    4. ஆடை கட்டி வந்த…

    5. விஞ்ஞானத்தை வளர்க்க…

    6. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

    7. நான் சிரித்தால் தீபாவளி

    8. மாட்டுக்கு மரியாதை

    9. தீர்ப்ப மாத்தி சொல்லு

    10 கீதையும் காதலின் கீதமும்

    11. அவள் ஒரு ராகமாலிகை

    12. தங்கத்திலே ஒரு குறை

    13. கேட்டதும் கற்றதும்

    14. கொஞ்சம் கனவு கொஞ்சம் நிஜம்

    15. கம்யூனிசமும் (கந்த) சாமியும்

    16. கல்யாண மாலை

    17. கொஞ்சும் கொலுசு

    18. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

    19. ரிப்பீ(பா)ட்டு

    20. வைரமுத்துவுடன் ஒரு நாள்

    21. சொல் சொல் சொல்

    22. நிஜம் நிழலாகிறது

    23. இரு வரிக் கவிதை

    24 உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா

    25. கனவுக்கு மேலாடை

    26. என் அரிய கண்மணியே!

    27. ஆயிரம் நிலவு

    28. இவர்கள் சந்தித்தால்…

    29. முரண்களைக் கோத்து மாலை

    30. காந்தன்

    31 ஜாடை நாடகம்

    32. அன்பாலே அழகாகும் வீடு

    33. தமிழும் அவளும் ஓரினம்

    34. உன் பார்வை போல் என் பார்வை இல்லை

    35. பசி தீரப் பாடினோர்

    36 எந்த ஊர் என்றவனே

    37. வெண்ணிலவே வெண்ணிலவே

    38. காந்தர்வ மணம்

    39. துயிலாத பெண் ஒன்று

    40. இயற்கை என்னும் இளைய கன்னி

    41. நல்ல நல்ல நிலம் பார்த்து

    42 பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…

    43. சென்னையில் ஒரு நாள்

    44. குடியிருந்த கோயில்

    45. குமரிப் பெண்ணும் குழந்தைப் பெண்ணும்

    46 வட்டங்களும் கோடுகளும்

    47. ஆத்தோரம் மணலெடுத்து

    48. ஒரு கணம் ஒரு யுகமாக

    49. என்ன விலை அழகே

    50. எங்கே எந்தன் காதலி

    51. இருக்கும் இடத்தை விட்டு…

    52. மௌனத்தில் விளையாடும்

    53. காற்றில் வரும் கீதமே

    54 உன் குத்தமா என் குத்தமா

    55. நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி!

    56. வேப்பமரம் புளியமரம்…

    57 பாஞ்சாலி புகழ் காக்க

    58. ஆழக்கடலில் தேடிய முத்தையா

    59. இதுதான் எங்கள் வாழ்க்கை

    60 அன்னமிட்ட கைகளுக்கு

    61. கற்க கற்க

    62. கத்துக்கணும்!

    63. சொட்டு நீலம் டோய்..

    64. நரை எழுதும் சுயசரிதம்

    65. கொஞ்சம் மிருகம் நிறைய கடவுள்

    66. மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ?

    67. வாழ நினைத்தால் வாழலாம்

    68. ஞாயிறு என்பது…

    69. தலைவா

    70. அறிந்தும் அறியாமலும்

    71. உறவுகள் தொடர்கதை

    72. ராஜா என்பார் மந்திரி என்பார்

    73. என்ன சத்தம் இந்த நேரம்

    74. கல்லிலே கலைவண்ணம் கண்டோர்

    75. நடந்தாய் வாழி

    76. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

    77. கங்கை தலையினில் மங்கை இடையினில்

    78. கண்ணன் பிறந்தான்

    79. உன்னுடைய வசந்தத்திலே

    80. எங்கிருந்தோ வந்தான்

    81. ஆயுத எழுத்து

    82. ஆயிரம் மலர்களே

    83. கண்ணை நம்பாதே

    84. இல்லற ஜோதி

    85. சென்னை செந்தமிழ்!

    86. கூட்டம் கூட்டமாக

    87. வீரமுண்டு வெற்றியுண்டு

    88. நோய் விட்டுப்போகும்

    89. அன்னலட்சுமி

    90. குழந்தையும் தெய்வமும்

    91. அனல் மேலே

    92. தவறுகள் குற்றங்களல்ல

    93. உருவங்கள் மாறலாம்

    94. நான் யார் நான் யார்

    95. இறைவன் படைத்த…

    96. இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

    97. முகவரிகள் தொலைந்தனவோ

    98. பூமாலையும் பாமாலையும்

    99. கூந்தலிலே

    100. நிலவின் நிறம்

    101. மீன்கொடி தேரில்

    102. தங்க மழை தூவும் திருநாளாம்

    103. உண்ணும் உணவும் நீரும் தந்த

    104. வண்ண வண்ண சேலைங்க

    105. மணியே மணியின் ஒலியே

    106. தலைப்பு செய்திகள்

    107. எங்கே அவன் என்றே மனம்

    108. நீ பார்த்த பார்வைக்கொரு

    109. எது நடந்ததோ

    110. உரிமை உன்னிடத்தில் இல்லை

    111. இல்லாததுபோல் இருக்குது

    112. நதிபோல ஓடிக்கொண்டிரு

    விருந்தினர் பதிவில் நான்

    1. எண்ணும் எழுத்தும்

    2. கண்ணனும் தாசனும்

    3. திருக்குறளும் கண்ணதாசனும்

    4. கண்ணனின் நிறம்.

    ***

    1. இறைவன் இருக்கின்றானா?

    இறைவன் இருக்கின்றானா என்பது மிகவும் பழைய கேள்வி. ஆத்திக நாத்திக நண்பர்கள் காலம் காலமாக செய்யும் முடிவில்லா விவாதம். சமீபத்தில் கமலஹாசன் தசாவதாரம் படத்தில் சொன்ன ‘நான் எங்கே இல்லன்னு சொன்னேன், இருந்தா நல்ல இருக்கும்னுதானே சொன்னேன்’ என்ற வசனம் சுவாரஸ்யமானது. ‘Thank God, I am an Atheist’ போன்ற இந்த unresolved conflict விவாதத்திற்கு அழகு சேர்க்கிறது.

    தமிழகத்தில் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற வரிகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு கடவுள் மறுப்பு அரசியல் கட்சி வளர்வதற்கு அடித்தளமாய் அமைந்த பிரபல வாசகம். தமிழ் திரைப்பாடல்களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா? இறைவனும் கடவுளும் ஆண்டவனும் தெய்வமும் சாமியும் எத்தனையோ பாடல்களின் கருப்பொருளாய் வந்திருக்கும்போது நிச்சயம் விடை கிடைக்கும்.

    முதலில் கண்ணதாசன்

    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்

    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்?

    நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை

    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை (அவன் பித்தனா)

    என்று விவாதத்தை ஆரம்பிக்கிறார். மற்றொரு பாடலில் முதல் கட்ட விடை கண்டு கொள்கிறார்

    கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா

    காற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா (ஆனந்த ஜோதி)

    இது இறைவன் கண்ணுக்கு தெரிய வேண்டியதில்லை என்று உணர்ந்தது போல் வரிகள். இப்போது இறைவன் இருக்கின்றானா என்பது கேள்வியில்லை. எங்கே என்ற கேள்வி மட்டும் இன்னும் இருக்கிறது. தொடர்ந்த தேடலில் எங்கே என்றும் அறிந்து சொல்கிறார்.

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே

    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு

    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு (சரஸ்வதி சபதம்)

    வாலியும் இந்த தேடலில் சளைக்கவில்லை. இதயத்தை திற இறைவன் வரட்டும் என்று சொல்கிறார்

    மனம் என்னும் கோவில் திறக்கின்ற நேரம்

    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் (சந்திரோதயம்)

    தினசரி வாழ்க்கையில் நாம் வாழும் முறையில் இறைவனை காண்பதே இனிது என்பது வாலியின் வாதம். கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கிறார். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று சட்டென்று அடையாளம் கண்ட அவர் கோணத்தில் பாசமுள்ள பார்வையும் கருணையுள்ள நெஞ்சும் இறைவன் வாழும் இடம். இயற்கையின் பூவிரியும் சோலை, பூங்குயிலின் தேன்குரல், குளிர் மேகம், கொடி விளையும் கனிகள் எல்லாமே  தெய்வம் வாழும் வீடுதான்.

    முடிவாக

    பல நூல் படித்து நீ அறியும் கல்வி

    பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் (பாபு)

    எவ்வளவு தெளிவான பார்வை. நயமான வரிகள். கல்வி கற்று நல்ல நிலைக்கு வந்து, பொது நலத்திற்கு செல்வம் வழங்கி, அடுத்தவர் உயர்வில் இன்பம் காண்பவர் வாழ்க்கைதான் சொர்க்கம் போன்றது. அந்த நிலைதான் தெய்வம் என்றால் யார் மறுப்பு சொல்வார்?

    ***

    2.பாடல் வரிகள் Remix

    பழைய பாடல்களின் இசை ரீமிக்ஸ் கேட்டிருக்கிறோம் (அது பிடிக்குமா இல்லையா என்பது வேறு விஷயம்). பாடல் வரிகளின் ரீமிக்ஸ் பார்த்திருக்கிறீர்களா?

    தூக்கு தூக்கி படத்தில் ஒரு பாடல். உடுமலை நாராயண கவி இயற்றியது. கண் வழி புகுந்து கருத்தினில் வளர்ந்த மின்னொளியே ஏன் மௌனம் இதை வைரமுத்து எப்படி ரீமிக்ஸ் செய்கிறார்? விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்று வார்த்தைகளை சீராட்டி அலங்கரித்து ஒரு இலக்கிய வேஷம் கட்டி … அழகாக இருக்கிறதே!

    அடுத்து பாசம் படத்தில் வரும் பாடல். கவியரசு கண்ணதாசன் கற்பனையில் மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்,மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தை தந்தவள் நீயே. இதையும் வைரமுத்து அவரது வார்த்தைகளில் ரசவாதம் செய்கிறார். எப்படி? இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு

    இரண்டு வேறு பாடல்களில் இருந்து இரண்டு வரிகளை இரவல் வாங்கி

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

    இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு

    கருமாறாமல் உருமாற்றி மெட்டுக்குள் உட்காரவைக்கிறார்.

    ஆசை முகம் என்ற படத்தில் ஒரு பாடல். காதலனும் காதலியும் உரையாடுவது போல அமைந்த வரிகள்

    நீயா இல்லை நானா நீயா இல்லை நானா

    நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

    நீயா இல்லை நானா

    இருவரும் அமர்ந்து காதல் எப்படி மலர்ந்தது என்று யோசித்து பல சம்பவங்களை நினைத்து இதை செய்தது நீயா இல்லை நானா என்று பேசுவது போல ஒரு அமைப்பு. கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் கொஞ்சம் கிண்டல் கொஞ்சம் சீண்டல் என்று வாலி அட்டகாசம் செய்யும் பாடல். எல்லா வரிகளும் நீயா இல்லை நானா என்றே முடியும்.

    ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது

    ஊர்வலமாக பார்வையில் வந்தது

    ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது

    இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது

    ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

    இன்று மறு முறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது

    பூவிதழோரம் புன்னகை வைத்தது

    இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது

    இந்த பாடல் வைரமுத்துவை inspire செய்திருக்கவேண்டும். பஞ்சதந்திரம் படத்தில் சரியான காட்சியமைப்பு கிடைத்தவுடன் வாலியின் இந்த வரிகளை அடித்தளமாக வைத்துக்கொண்டு எழுதிகிறார். இதுவும் காதலன் காதலி பேசிக்கொள்ளும் காட்சிதான். காதல் இளவரசனும் கனவுக்கன்னியும் பாடும் பாடல் கடற்கரை நிலவொளி எல்லாம் இல்லை. ஜஸ்ட் லைக் தட் நடந்துகொண்டு பாடும் பாடல். கொஞ்சம் Blame game போல கட்டமைப்பு. கூர்ந்து பார்த்தால் காதல் பொங்கும் வரிகள்

    என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா

    ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்து நீயா இல்லை நானா

    சட்டை பொத்தான், கூந்தல், கண்ணில் தூசி ஊதும் சாக்கு, லிப்டின் நீள அகலம் என்று ஒரு contemporary காதல் உரையாடலை முன் வைக்கிறார். நக்கல் இருந்தாலும் ‘உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது, நீ வேறு நான் வேறு யார் சொன்னது என்று சமரசம் செய்துகொள்ளும் யதார்த்தம்

    கவாஸ்கர் போலவே சச்சின் straight டிரைவ் அடித்தால் கொண்டாடுகிறோம் அதை பாராட்டுவது போல், இதையும் பாராட்டலாம்.

    ***

    3. தேன் உண்ணும் வண்டு

    கவிஞர்களுக்கு பூ என்றால் பெண்தான். அவள்தான் ரோசாப்பூ, மல்லிகைப்பூ, ஆவாரம்பூ செந்தூரப்பூ, செவந்திப்பூ, கொத்தமல்லிப்பூ மாம்பூ எல்லாம். பூவின் தன்மையெல்லாம் அவளுக்கு என்பது போல் பெண்தான் பூ. அவள் ஊதாப்பூ, கன்னங்கள் ரோசாப்பூ, கண்கள் அல்லிப்பூ. அவள் சிரிப்பு மல்லிகைப்பூ என்று மிகையாக வர்ணித்து சலிக்காமல் பெண் பூவுக்கு நிகர் என்று அலங்கார வார்த்தைகளில் ஜாலம் செய்யும் கவிஞர்கள் உண்டு .

    பலமுறை சொல்லப்பட்டதால் பெண்ணுக்கு தான் பூதான் என்று நினைப்பு வந்திருப்பது

    பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத

    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

    என்று நாயகி பாடுவதிலிருந்து தெரிகிறது.

    ஆண் ? அவன் வண்டு, தேனீ, பட்டாம்பூச்சி. காலங்காலமாக அவன் பூவையும் பூவில் உள்ள தேனையும் தேடி ஓடும் ஒரு ஜீவராசி. கரப்பான்பூச்சி என்று சொல்லவில்லை.அவ்வளவுதான். முல்லை மலர் அவள்தான். மொய்க்கும் வண்டு இவன். பொதுவாக காதலன் காதலியை தேடி வருகிறான் என்பதை சொல்ல இந்த பூ-வண்டு equation ஒரு சுலபமான வழி. பூவில் தேனெடுக்க என்று சட்டென்று ஒரு காட்சியை விவரிக்க முடிகிற சௌகர்யம்.

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

    திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

    பூங்கொடியே நீ சொல்லுவாய்

    என்னும் பாடல் வரிகள் சொல்லும் பிம்பமும் அதுவே. வைரமுத்து பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் என்று சொல்வது கொஞ்சம் ஆணாதிக்கம் போல் தெரிந்தாலும் அழகான சொல்லாடல்.

    இதில் ஒரு ட்விஸ்ட் உண்டு. ஆண் பெண்ணை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லவும் இதே equation தான் (என்னா வில்லத்தனம்)

    எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி

    அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி

    என்று சொல்லி ஆடவர்கள் ஆயிரம் பேரை வில்லனாக்கும் வரிகளும் உண்டு. கண்ணதாசன் இரண்டு பக்கமும் பேசுவார் நானே கேள்வி நானே பதில் போல

    பூவிலே தேன் எதற்கு - வண்டு வந்து சுவைப்பதற்கு

    வண்டுக்கு சிறகெதற்கு – உண்ட பின்பு பறப்பதற்கு

    என்று கண்ணிலே நீரோடு தந்தையின் மகளின் சோகத்தை பாட்டில் வைப்பார் இந்த cliche தாண்டி பூவையும் வண்டையும் பற்றி வேறு என்ன சொல்லமுடியும்? வைரமுத்து சவாலை ஏற்கிறார். கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்கும்போது கைகளால் வகிடெடுத்துவிட்டு ஆண் பாடும் வரிகளாக

    போதை கொண்டு பூ அழைக்க

    தேடி வந்து தேன் எடுக்க (இசை மேடையில் இன்ப வேளையில்)

    என்று எழுதி இதை புரட்டி போடுகிறார். பூதான் அழைத்தது என்று தெளிவாக statement கொடுக்கிறார். இது உண்மையா நம் கலாசாரத்தில் இது சரியா என்ற கேள்விகளை புறக்கணித்து நிற்கும் நிலை. யோசித்து பார்த்தால் இதுவும் சரிதானே? ஆணும் பெண்ணும் சமம் என்று கொள்ளும் வரிகள் அல்லவா? கண்ணதாசன் சொன்னது போல்

    இன்பம் என்பது இருவரின் உரிமை

    யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை

    என்னும் போது இந்த புதிய கோணம் இன்னும் இன்னும் அழகாக தெரிகிறதல்லவா?

    ***

    4. ஆடை கட்டி வந்த…

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள் பொதுவாக அவள் உடை பற்றி பேசும். வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்கள் அன்றைய ரசனைகளையும் விருப்பங்களையும் சார்ந்து இருக்கும். உடை பற்றிய பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

    இந்த உடை ஒரு பெண்ணின் வயதையும் தோரயமாக விவரிப்பதால், கவிஞர் பழைய நினைவுகளை அசைபோட ஒரு Pivot ஆக எடுத்துக்கொள்கிறார். அந்த நாளில் ஒரு பெண் வேறு ஆடை அணிந்தால்

    பட்டுப் பாவாடை எங்கே

    கட்டி வைத்த கூந்தல் எங்கே

    பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா… சொல்லம்மா…

    என்று கேள்வி வருகிறது. வைரமுத்து அந்தி மழை பொழியும்போது தாவணி விசிறிகள்தான் வீசுகிறார். சமீபத்தில் ஒரு கவிஞர் வீட்டுக்கு வந்ததும் தாவணி போட்ட தீபாவளி தான்

    பெண்ணின் சின்ன சின்ன ஆசையில் சேலை கட்ட வேண்டும் என்பதும் உண்டு. வாழ்வின் அடுத்த நிலையில் பெண் சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலை கட்டும்பொழுது கவிஞன் தன கற்பனைக்கு றெக்கை கட்டி விடுகிறான். புடவையின் தேர்ந்த மடிப்பு விசிறி வாழைகள் என்று ஒரு பெண் கவி சொல்ல ஆண் கவியோ நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி என்று கிறங்குகிறான். புலமைப்பித்தன் சேலை சோலையே என்றும் வைரமுத்து சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல என்றும் பஞ்சு அருணாசலம் பட்டு வண்ண சேலைக்காரி என்றும் – பல வரிகள் சேலை மகிமை சொல்லும்.

    பழனி பாரதி ‘சேலையிலே வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ என்று ஒரு வசீகரமான கேள்வி கேட்கிறார். வைரமுத்து தன் பங்கிற்கு

    சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

    கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

    என்று கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ரேஞ்சுக்கு ஆதங்கப்பட்டு சொல்லிவிட்டு இன்னொரு பாடலில் உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததே என்பதை கம்பன் பாடாத சிந்தனை என்று அழகாக பொய் சொல்லுகிறார். பரவாயில்லை கவிதைக்கு பொய் அழகுதானே.

    செந்தமிழ் நாட்டு தமிழச்சி சேலை உடுத்த தயங்கி சட்டென்று சுரிதாருக்கு மாறியவுடன் கவிஞர்கள் அதை வர்ணிக்க – சுரிதார் அணிந்து வந்த சொர்கமே என்று பாட்டெழுத வைரமுத்து

    குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே உன் துப்பட்டா வில் என்னை கட்டிதூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எறியாதே

    என்று துப்பட்டாவிடம் பயப்படுகிறார்

    பாவாடையும் தாவணியும், பட்டு, சுங்கிடி கைத்தறி கண்டாங்கி சேலை, சுரிதார் துப்பட்டா -என்னடா இது பழைய பஞ்சாங்கம் என்று வெகுண்டெழும் வாலி

    அக்கடான்னு நாங்க உடைபோட்டா

    துக்கடான்னு நீங்க எடை போட்டா

    தடா உனக்குத்தடா

    என்று அதிரடியாக Section 144 பரிந்துரை செய்கிறார். தொடர்ந்து பிரபுவின் நகைக்கடை புரட்சி போல்

    திரும்பிய திசையிலே எங்கேயும் கிளாமர்தான்

    நான் போட்ட டிரஸ்சுகளை பிலிம் ஸ்டாரும் போட்டதில்லை

    மடிசாரும் சுடிதாரும் போயாச்சு

    ஓரங்கட்டு ஓரங்கட்டு

    உடையெல்லாம் ஓரங்கட்டு

    என்று கேட்பவர்களை மிரள வைக்கிறார்.

    இப்போதெல்லாம் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க என்று வரிகள். இன்றைய டா போட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1