Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudhal Nimisham
Mudhal Nimisham
Mudhal Nimisham
Ebook118 pages51 minutes

Mudhal Nimisham

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402140
Mudhal Nimisham

Read more from Rajesh Kumar

Related to Mudhal Nimisham

Related ebooks

Related categories

Reviews for Mudhal Nimisham

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudhal Nimisham - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    முதல் நிமிஷம்…

    Mudhal Nimisham...

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முதல் நிமிஷம்…

    1

    ஏழு முப்பது ஆவதற்காகப் பரபரப்பாகக் காத்திருந்த மிருதுளா - கம்ப்யூட்டரிடம் ஓடினாள்.

    அவள் குடியிருக்கும் ஃப்ளாட் மும்பை நகரத்தின் இடுப்புப் பகுதியில் - நானா செளக்கிற்கு அருகாமையில் பிரியும் கிளைச் சாலையில் இருந்தது.

    சுவிட்சைத் தட்டி விட்டு - கம்ப்யூட்டர் பூட் ஆவதற்காகக் காத்திருந்த மிருதுளா மோடம் கருவிக்கு உயிர் கொடுத்த பின் - இன்ட்டர்நெட் இணைப்புக்காக டயல் செய்ய ஆரம்பித்தாள்.

    நாலாவது முயற்சியில் அவளுடைய கம்ப்யூட்டர் இன்ட்டர்நெட்டோடு இணைந்து கொள்ள - ச்சேட் சர்வருக்குள் நுழைந்து - அரட்டை அறைகளின் பெயர்களை உன்னிப்பாய்ப் பார்வையிட்டுக் கொண்டு வந்தார்.

    Mrudhula - Domodhars Personal Chat Room

    இந்தப் பெயரைப் பார்த்தவுடன் மிருதுளாவின் முகம் மலர்ச்சிக்குப் போனது.

    டெல்லியிலிருக்கும் தாமோதரும், மிருதுளாவும் பேசிக்கொள்வதற்காக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அரட்டை அறை அது.

    ‘இன்றைக்கு ஏழரை மணியிலிருந்து எட்டு மணிக்குள் அந்த ச்சேட் ரூமுக்கு வந்தால் பேசலாம்' என்று ஏற்கெனவே தாமோதர் ஈ-மெயில் கொடுத்திருந்தான்.

    ச்சேட் ரூம் காலியாக இருக்க - சின்ன ஏமாற்றம்.

    நேரம் பார்த்தாள் மிருதுளா.

    7.36.

    எட்டு மணிக்குள் இந்த அரட்டை அறைக்கு வந்து இணைந்து கொள்வதாகத்தானே சொல்லியிருக்கிறான். இன்னும் எட்டு மணி ஆகவில்லை.

    தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு படபடப்புடன் காத்திருந்தாள் மிருதுளா.

    எட்டு மணி ஆவதற்கு ஐந்து நிமிஷங்கள் இருக்கும் போது - மெம்பர்ஸ் பேனலில் தாமோதர் என்ற பெயர் தெரிந்தது.

    குப்பென்று மனசுக்குள் மகிழ்ச்சி எகிறியது.

    அவன் கீபோர்டில் தட்டிய, ஹாய் மிருதுளா… மிருதுளாவின் கம்ப்யூட்டரில் சட்டென்று விழுந்தது.

    மிருதுளா பேசாமலே இருந்தாள்.

    மிருதுளா…

    இவள் மவுனம் சாதித்தாள்.

    ஏய்… என் மேல கோபமா…?

    ஆமா...

    கோபத்துக்குக் காரணம் என்னவோ…?

    அரை மணி நேரம் என்னை அலை பாய வெச்சிட்டீங்களே…?

    டாண்ணு எட்டு மணிக்கெல்லாம் ஆஜர் ஆயிட்டேனே மிருதுளா…

    நான் ஏழரையிலிருந்தே காத்திருக்கேன்… நீங்க வேணும்ன்னே என்னைத் தவிக்க விட்டிருக்கீங்க… என் மேல சத்தியமடிச்சு உண்மையா இல்லையான்னு சொல்லுங்க…

    உன் மேல் சத்தியமா சொல்றேன்… நான் உன்னை வேணுமின்னேதான் தவிக்கவிட்டேன்… இன்ட்டர்நெட் ச்சேட்டிங்கல இருந்தாலும் உன்னோட கோபத்தைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்…

    யூ நாட்டி…

    இதைச் சொல்லறப்போ உன்னோட மூஞ்சி பேபிபிங்க் நிறத்துக்கு மாறுமே… அதைப் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு…

    அதைப் பார்க்கணும்ன்னா நீங்க மும்பைக்கு வரணும்… டெல்லில உக்காந்துக்கிட்டு இன்ட்டர்நெட் மூலமாவே எத்தனை நாளைக்கு காதலிச்சிட்டிருப்பீங்க…?

    எப்போ வரட்டும்…

    எனக்கு இப்பவே உங்களைப் பார்க்கணும் போலத்தான் இருக்கு…

    இதுதான் உன் ஆசைன்னா நிறைவேற்ற நான் தயார்…

    என்ன விளையாடறீங்களா…? எப்படி டெல்லில இருந்து உடனே வருவீங்க…

    நான் இப்பமும்பைலதான் இருக்கேன்..

    ஏய் தாமோதர்… ரியலி…?

    எஸ்… ஜேக்கப் சர்க்கிள் பக்கத்தில் ஒரு இன்ட்டர்நெட் ப்ரெளசிங் சென்ட்டரில் இருந்து ச்சேட் பண்ணிட்டிருக்கேன்…?

    தாமோதர்… நீங்க ஏமாத்தலையே..?

    ஐஎஸ்ஓ 2000 நிஜம்…

    அஃபிஷியலா இங்கே வந்தீங்களா…?

    நோ…நோ… ப்யூர்லி பர்சனல்…

    பர்சனல்…?

    ஆமா… நான் மட்டுமில்லை… என்னோட அம்மா அப்பாவும் என்கூட வந்திருக்காங்க…

    எதுக்கு…?

    எனக்கு மும்பைல பொண்ணு பார்க்கப் போறாங்க…

    ச்சேட் பாக்சில் விழுந்த எழுத்துக்களைப் பார்த்து மிருதுளா அதிர்ந்தாள்.

    தாமோதர்… ஆர்யூ ஜோக்கிங்…?

    நோ…நோ…ஸிரியசாய்த்தான் பேசறேன்…

    அப்போ நான்…? சும்மா இன்ட்டர்நெட்ல அரட்டை அடிக்கறதுக்கு மட்டும்தானா…?

    உனக்கு ஏன் இவ்வளவு கோபம் மிருதுளா…?

    தாமோதர்… இன்ட்டர்நெட்ல எவ்வளவு ஆசை வார்த்தைகள் பேசியிருப்பீங்க…? உருகி உருகிக் காதலிச்சீங்க… எல்லாம் வெறும் பொழுதுபோக்குத்தானா…?

    அவசரப்படாதே… பொண்ணு யார்ன்னு தெரிஞ்சிட்டு அப்புறமா கோபப்படு… உன்னைப் பார்க்கத்தான் வந்துட்டிக்கோம்…

    தா… தாமோதர்…? என்ன இப்படி ஒரு ப்ளெஸண்ட் ஷாக்குடுக்கிறங்க… உங்க அம்மாவும், அப்பாவும் இப்போ என்னைப் பார்க்க வரப்போறாங்களா…?

    ஆமா… ரெண்டு நாளைக்கு முன்னால எங்க வீட்டில் கல்யாணப் பேச்சு எழுந்தது… நம்ம காதல் விவகாரத்தை உடைச்சு சொல்லிட்டேன். அப்பாவும், அம்மாவும் உன்னைப் பார்க்கணும்ன்னு விருப்பப்பட்டாங்க… ஸர்ப்ரைஸா போகலாம்ன்னு அவங்க சொன்னாங்க… நான்தான் இப்ப அவசரக்குடுக்கை மாதிரி நாங்க வரப்போற மேட்டரை டைப் பண்ணிட்டேன்…

    எப்ப வர்றீங்க…?

    ஹோட்டல் ரூமில் அம்மாவும், அப்பாவும் குளிச்சு ரெடியாயிட்டு இருக்காங்க… அவங்க புறப்பட்டவுடனே டாக்சி பிடிக்க வேண்டியதுதான்…

    "அய்யோ… எனக்குக் கையும்

    Enjoying the preview?
    Page 1 of 1