Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Chinna Penna?
Aval Chinna Penna?
Aval Chinna Penna?
Ebook236 pages1 hour

Aval Chinna Penna?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பட்டிமன்றங்கள், ஐநூறுக்கும் மேற்ப்பட்ட வழக்காடு மன்றங்கள்கவியரங்கங்கள், கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் பங்கு வகித்துள்ளார். இவர் உலகத்தமிழ் மாநாடு, உலகத் திருக்குறள் மாநாடு, கம்பராமாயண மாநாடு போன்று பல மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை பதினேழு நூல்கள், இரண்டு வாணொலி நாடகங்கள், நான்கு மேடை நாடகங்கள் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள், தினமலர், தினகரன், கல்கி, தேவி போன்ற பல பிரபல இதழ்களில் வெளி வந்துள்ளன.

இலட்சியக் கவிஞர், குளிர்விக் கொண்டல், கவிதைக் கணல், கவிஞர் திலகம், கவிச்செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119202136
Aval Chinna Penna?

Read more from V.K. Kasthurinathan

Related to Aval Chinna Penna?

Related ebooks

Reviews for Aval Chinna Penna?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Chinna Penna? - V.K. Kasthurinathan

    http://www.pustaka.co.in

    அவள் சின்ன பெண்ணா?

    Aval Chinna Penna?

    Author:

    வீ.கே. கஸ்தூரிநாதன்

    V.K. Kasthurinathan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/v-k-kasthurinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    காணிக்கை

    எல்லா வகையிலும்

    என்னை உருவாக்கிய

    என் ஆசிரியப் பெருமக்களுக்கு!

    ***

    என்னுரை

    இனிய இதயங்களே!

    வணக்கம். மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளிவரும் என்னுடைய மூன்றாவது நூல் ‘அவள் சின்னப் பெண்ணா?’ இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு சமயங்களில் நான் எழுதிய 20 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள கதைகளில் சில தேவி, வாரமலர், தினகரன் ஆகிய இதழ்களில் வெளி வந்தவை.

    கதை எழுதும் ஆர்வம் பள்ளியில் படிக்கும்போதே என்னிடம் ஒட்டிக் கொண்டது. கல்லாகக் கிடந்த என்னை கல்வி என்னும் உளி கொண்டு சிறுகச் சிறுக செலுக்கிச் சிலையாக மாற்றிய பெருமை எனது ஆசிரியர் பெருமக்களையே சாரும். ஒருவர் இருவர் என்று தனித்துச் சொல்ல முடியாமல் எனக்குக் கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குவது ஒன்றே நான் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

    இந்த நூலை நுணுகிப் படித்து அணிந்துரை வழங்கியுள்ளார் எனது கெழுதகை நண்பரும் நீண்ட காலமாக பத்திரிகைத் துறை அனுபவமும் உள்ள திரு. வாழைக் குறிச்சி மணிமொழி அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. எனது எழுத்துப் பணி தொய்வின்றி தொடர எனக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருபவர் எனது துணைவியார் சுகுமாரி பி.ஏ., பி.எட்., அவர்கள். அவருக்கும் இவ்வேளையில் நன்றி கூறி விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

    எனது படைப்புகளை வெளியிட்டு உதவுகின்ற தினமணி, சிறுவர்மணி, தினமலர் - வாரமலர், தினகரன், தேவி, ராணி, ஆனந்த விகடன், முல்லைச் சரம், தமிழ்ப்பாவை உள்ளிட்ட அனைத்து இதழ்களின் ஆசிரியர்களுக்கும் என் நன்றி என்றும் இருக்கும்.

    இந்த நூலை நல்ல முறையில் அச்சிட்டுவெளியிடும் மணிமேகலைப் பிரசுரத்தின் உரிமையாளர் திரு. ரவி தமிழ் வாணன் அவர்களுக்கும் நிர்வாகி திரு. மோகன் அவர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களாகிய உங்களுக்கு என் இதயத்தில் நன்றி என்னும் நல்லூற்று என்றும் ஊறிக் கொண்டே இருக்கும். இதைப் படிப்பவர்கள் தங்கள் விமரிசனங்களை அனுப்பலாம்! அவை ஊக்கமூட்டினால் வாங்கிக் கொள்கிறேன். தாக்கினாலும் தாங்கிக் கொள்கிறேன்.

    அன்பகம்,

    8/68, மு.ராம.மு.வீதி,

    குழிபிறை - 622 402

    தொலைபேசி:04333 – 273309

    அன்பன்

    வீ.கே. கஸ்தரரிநாதன்

    01.09.05

    ***

    அணிந்துரை

    தமிழ் மொழி வரலாற்றில் சிறுகதை இலக்கியத்தின் தோற்றம் அன்மைக் காலத்ததே என்று அறிவுத் தேட்டாளர்கள் கூறுவர். ஒரு வகையில் அஃது உண்மை போலத் தெரிந்தாலும் நடைமுறை நமக்கு வேறு சில செய்திகளைத் தருகிறது. காலங் காலமாய் நம் முன்னோர்கள் வாய் மூலம் சொல்லிச் சொல்லிச் செவிக்குள் புகுத்திச் சிந்தையில் இருத்தி வழி வழியாக வழங்கி வரும் கதைகள் ஏராளமாய் உலவுகின்றன. அவ்வளவு ஏன்? நம்முடைய புராணங்களும் இதிகாசங்களும் ஏடுகளில் எழுதப்படாமலேயே பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டே புழக்கத்தில் வந்து பின் வரி வடிவம் பெற்றன. அத்தகைய பெரிய இலக்கியச் சோலையில் எத்தனையோ தளிர் மரங்கள் கிளைகள் பரப்பி, கதைக்குள் கதையாக பல மலர்களைச் சொரிந்து மணம் பரப்புகின்றன; நம் மனம் கவர்கின்றன.

    ஒரு குறிப்பிட்ட செய்தியை அழுத்தம் திருத்தமாக அறைவதே சிறுகதையின் நோக்கமாக அமைதல் வேண்டும் என்பர் ஆய்வாளர்கள். அந்த வகையில் கவறாட்டம் (சூதாட்டம்) தவறானது என்பதை எடுத்தியம்பும் நளன் கதை, உண்மையின் மேன்மையை உணர்த்தும் அரிச்சந்திரன் கதை, எமனையும் ஏமாற்றலாம் (விதியையும் மதியால் வெல்லாம்) என்பதைத் தெரிவிக்கும் சாவித்திரி கதை - என இப்படி எத்தனையோ கதைகள் நம்முடைய இலக்கியங்களில் அடங்கிக் கிடக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட கொள்கையை - குறிக்கோளை - தத்துவத்தை வலியுறுத்துகின்றன. எனவே, இவை புராணமாயினும் இதிகாசமாயினும் நெடுங்கதையாயினும் குறுங்கதையாயினும் - வடிவத்தில் மாறுபட்டாலும் அவை சிறுகதை என்னும் அளவுகோலிலேயே அடக்கமாகின்றன என்பது தெளிவு. அதன்படி, அச்சுப் பொறிகளின் கண்டுபிடிப்புக்குப் பின் வந்த அயல்நாட்டுப் படைப்பாளிகளின் கதைகளை விடவும் ஓலைச் சுவடிக் காலத்திற்கு முன்னேயே நமது சிறுகதை இலக்கியம் வளர்ச்சியுற்றிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அந்த மறக்க முடியாத ‘கதை சொல்லி’களின் வழி வந்த நம் அருமைக் கவிஞர் திரு.வி.கே. கஸ்தூரி நாதன் அவர்கள் இங்கே ஒரு சிறுகதைத் தொகுப்பின் மூலம் தனித்தனியே பல்வேறுபட்ட செய்திகளைத் தெரிவிக்கிறார்.

    குடிப் பழக்கத்தால் நிதானமிழந்து பெற்ற மகளையே பெண்டாள முயலும் சண்டாளனைக் கட்டிய மனைவியே வெட்டிச் சாய்க்கும் செயலை, ‘தவிர்க்க முடியாத தவறு?’ என்று கூறுகிறார். அதை நாம் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. தீவிரவாதத்தின் தீமையை அறிந்து கொள்ள ‘வழிதவறிய ஆடுகள்?’ நமக்கு வழிகாட்டுகின்றன. வருங்கால மனைவியின் கடந்த கால நடத்தையை அறிய விரும்பும் சந்தேகப் பிராணிகளாம் மாப்பிள்ளைகளை, ‘சீதையைத் தேடும் இராவணர்கள்’ என்று சாடுகிறார். பெற்ற தாய் நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் போது எட்டிப் பார்க்காத, தனிக் குடித்தனம் சென்ற மகன்கள் அவள் இறந்த பின் கொள்ளிபோட மட்டும் உரிமை கொண்டாட வரும்போது, தாய்க்குப் பணிவிடைசெய்த ஒரே மகள்தான் அதற்கு உரிமையுடையவள் என்று கூறும் தந்தை, இது வரை அர்த்தமில்லாது வழங்கப்பட்டு வந்த ‘வாரிசு’ என்னும் சனாதன தர்மத்தை உடைத்தெறிகிறார்.

    இளமையில் வறுமையின் காரணமாக, திருமணத்திற்கு முன்பே, பணத்திற்காகப் பொய் சொல்லிக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஒருவனும் அதே வறுமைக்காக விலை மகளாய் மாறிப் போன ஒருத்தியும் சந்திக்கும்போது ‘சிவப்பு விளக்கில் வெள்ளை ஒளி’ தென்படுகிறது.

    பாவேந்தர் பாரதிதாசன் பார்வையில், கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலாவைப் பரிவுடன் பார்த்து அதனைப் பயனுறச் செய்கிறார் நம் ஆசிரியர் ‘உனக்கு மட்டும்தான்...’ எனும் கதை வழி. காதலித்து, சாதி விட்டுச் சாதி திருமணம் செய்து கொள்பவர்களிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவம் இருந்தால்தான் அவர்களின் வாழ்க்கை வெற்றி பெறும் என்பதை, ‘காதலுக்குக் கண்ணுண்டு?’ எனச் சொல்வதன் மூலம் அறிவுறுத்துகிறார். வகுப்புப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறானோ என்று ஒரு மாணவனைச் சந்தேகித்துக் கேள்வி எழுப்பும் ஆசிரியை, அவன் தவறு செய்யவில்லை என அறிந்ததும் தன் சந்தேகம் தவறு என உணரும் அந்தக் கோபக்காரக் ‘கணக்கு டீச்சர்’ தன்னிடம் குணமும் உண்டு எனக் காட்டுகிறார்.

    சொந்தத்தில் சொத்துள்ள குழந்தைகளைத் தத்தெடுக்கும் வழக்கத்தை மாற்றி, அனாதைக் குழந்தைகளையே ஆதரித்துக் காக்க வேண்டும் என்பதை ‘தத்துப் பிள்ளை’ தத்துவமாகத் தருகிறது. காமப் பசியைக் கன்றின் பசி வென்று விட்டது என உணர்த்தும் ‘பசி’ ஒரு பாசத்தின் வெளிப்பாடு.

    தனக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியரையும் அவரைப் பிரிந்து வாழும் அவரது மனைவியையும் இணைத்து வைக்கும் ஒரு மாணவியை அறிமுகப்படுத்தி ‘அவள் சின்னப் பெண்ணா?’ என்ற கேள்வியை எழுப்பி நம்மைச் சிந்திக்க வைக்கிறார். இந்தத் தொகுப்பு நூலின் தலைப்பும் இதுவே!

    தன்னை ஒதுக்கி இன்னொருவனைக் கைப் பிடித்த காதலியின் வறுமையை அறிந்து அவளுக்குத் தன் அலுவலகத்திலேயே வேலை கொடுத்துவிட்டு, தான் வேறு ஊருக்கு மாறிச் செல்லும் முன்னாள் காதலன் ‘காதல் பழி’ வாங்காதவனாக விளங்குகிறான்.

    தேசப் பற்றை உணர்த்தும் ‘உணர்வுகள்’ இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டம் தருவதாகும். போரஸ் என்னும் புருஷோத்தமன் தம்மிடம் தோல்வியுற்றாலும் அவனது துணிவை மெச்சி தாம் வென்ற நாட்டை அவனுக்கே திருப்பியளிக்கும் அலெக்ஸாண்டரின் பெருந்தன்மை அவர் பாரத மண்ணில் கண் வைத்ததால் கற்றுக் கொண்ட பண்பு நலனாகும் எனக் கூறும் ‘அறம் வளர்த்த பூமி’ ஓர் அற்புத வரலாற்று ஆவணமாகும்.

    நாணயமான விவசாயத் தொழிலாளிக்கு, ஈடு வைத்த மாடுகள் இறந்த பிறகும் கடன் தந்து உதவும் வட்டிக் கடைச் செட்டியார் ‘ஜோடிக் காளை’களில் ஜொலிக்கிறார். சாதிக் கலவரத்தில் தப்பி வந்து தஞ்சம் புகுந்த எதிர் சாதிப் பெண்ணைக் கெடுத்துப் பழி வாங்கத் துடிக்கும் மகனைக் காவு வாங்கும் தாய் அந்தச் சாவு சாதி வெறிக்குக் கொடுக்கும் ‘கடைசி விலை’யாக இருக்கட்டும் என்று சூளுரைக்கிறார். இவ்வாறு, ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு புதை பொருள் பொதிந்து நம்மை உற்று நோக்கி உணரச் செய்கிறது.

    இவை தவிர, ‘எங்கோ பார்த்த முகம்’ - நாம் அடிக்கடி சந்திக்கும் அதிரடித் திரைப்படத் திருப்பு முகம் - திருப்பு முனை ஆகும்.

    ‘புள்ளி இல்லாத கோலங்கள்’ போடும் - இரக்கவுணர்வால் இன்னொருத்தியின் நடுத்தர வயதுக் கணவனிடம் தன்னை இழந்து கர்ப்பமாகும் இளம் பெண் -

    தன்னை ஒதுக்கி விட்டு இன்னொருத்தியுடன் வாழ்ந்த கணவன் இறந்ததும் அவனது இறுதி யாத்திரையே ‘தெய்வ தரிசனம்’ எனக் கருதும் முதுமைப் பெண் -

    முரடர்களிடம் சிக்கிய தங்கை சிதையாமல் இருக்க அவளைத் தானே கொன்று சிதைத்து, ‘கொலையெல்லாம் கொலையல்ல’ என்று கூறும் ஓர் அண்ணன் ஆகிய இவர்களின் செயல்களில் எமக்கு உடன்பாடு இல்லையெனினும் முன் சொன்ன பிற கதை மாந்தர்களின் நற்செயல்கள் கருதி ஆசிரியரோடு எம்மால் முரண்பாடு கொள்ள முடியவில்லை. கதை சொல்லும் உத்திகளில் ஓரிரு இடங்களில் காணப்படும் நெருடல்கள் களையப்பட்டால் எதிர்காலத்தில் ஆசிரியரிடம் நல்ல விளைச்சல்களை எதிர்பார்க்கலாம்.

    மொத்தத்தில், இத் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் வெறுமையான பொழுது போக்கு என்று இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் நிறைந்த செய்தியை நமக்கு உணர்த்துகின்றன. அந்த வகையில் இது ஒரு பயனுள்ள தொகுப்பு என்பதில் ஐயமில்லை. இந்த எளிய வாசகனுக்கு இப்படி ஓர் அரிய வாய்ப்பை நல்கிய ஆசிரியருக்கு நன்றி.

    வாழைக்குறிச்சி

    குழிபிறை (அஞ்சல்)-622402

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்

    அன்பன்

    பொன்.மணிமொழி

    ***

    பொருளடக்கம்

    1. தவிர்க்க முடியாத தவறு

    2. வழி தவறிய ஆடுகள்

    3. சீதையைத் தேடும் இராவணர்கள்

    4. வாரிசு

    5. சிவப்பு விளக்கில் வெள்ளை ஒளி

    6. உனக்கு மட்டும்தான்…

    7. எங்கோ பார்த்த முகம்

    8. காதலுக்கு கண்ணுண்டு

    9. புள்ளி இல்லாத கோலங்கள்

    10. கணக்கு டீச்சர்

    11. தெய்வ தரிசனம்

    12. தத்துப்பிள்ளை

    13. பசி

    14. அவள் சின்னப் பெண்ணா?

    15. காதல் பழி

    16. உணர்வுகள்

    17. அறம் வளர்க்கும் பூமி

    18. கொலையெல்லாம் கொலையல்ல….!

    19. ஜோடிக்காளை

    20. கடைசி விலை

    ***

    1. தவிர்க்க முடியாத தவறு

    ‘மாமாவைத் தூக்கிக்கிட்டு வர்ராங்க அத்தை "மூச்சு இரைக்க இரைக்க குப்பி வந்து இப்படிச் சொன்னதும், அதைப் பற்றி எவ்வித சலனமுமின்றி வாசலுக்கு வந்தாள் செல்லம்மாள், இடுப்பில் இருந்த பையனுடன். மனசு மரத்துக் கிடந்தது. நான்கு பேர் பிடியில் மாணிக்கம்! மேல் சட்டை கிழிந்து வேட்டி அவிழ்ந்து ட்ரவுசரில் சாணியும் சகதியும் அப்பி பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    குடிச்சிட்டு ரோட்டிலே கிடந்தாரு, மனசு கேட்கலே, தூக்கிக்கிட்டு வந்தோம். மாணிக்கத்தை கூடத்தில் இறக்கிவிட்ட கையோடு காடப்பன் தலையைச் சொரிந்தான்.

    வாடிக்கையான மனிதர்கள்! வழக்கமான பதில்! அவர்கள் தேவை செல்லத்துக்குத் தெரிந்தது. எதுவும் பேசாமல் இரும்பாகி நின்றாள்!

    என்னடி மொரைக்கரே! வந்திருக்கிற பெரிய மனுசன்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத முண்டம், நீங்க உட்காருங்க மாணிக்கம் குடிவெறியில் உளறினான்.

    நாங்க இருக்கிறோம், நீங்க விழுந்திடாதீங்க அவரைப் பிடிக்க முயன்ற காடப்பனும் மற்றவர்களும் தள்ளாடியதில் இருந்து அவர்களுக்கும் போதை தலைக்கேறி விட்டது என்று புரிந்தது.

    ‘குடிகாரத் தடியன்கள்! அவரிடம் எலும்பு துண்டுக்கு அலையும் எச்சில் நாய்கள். நல்லா இருந்த மனிதரை நாசமாக்கிவிட்ட பாவிகள்!’

    மனசு எரிமலையாய் வெடித்தது. பதில் பேச நாக்கு புரள மறுத்தது. பதறி அழ நெஞ்சு கனத்தது. நடப்பதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த செல்லத்தை மாடசாமி போதையுடன் பார்த்தான். பையன் அம்மாவைப் பயத்துடன் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

    புருசன் குடிச்சிப் பிட் டு ரோட் டிலே கிடந்தானேன்னு பரிதாபப்பட்டு தூக்கிக்கிட்டு வந்து போட்டிருக்கிறோம்! கொஞ்சம் கூட இரக்கப்படாம கல்லாட்டம் நிக்கறியே அக்கா, இது உனக்கே நல்லாயிருக்கா வாய்க் கோணலுடன், வக்கிர பார்வையுடன் சொன்னான் காடப்பன். அவனை ஒரு முறை முறைத்தாள்.

    குப்புறக்கிடந்த மாணிக்கம் குபீரென்று எழுந்தான் ‘என்னடி தேவடியா முறைக்கிறே’ என்று கேட்டபடி செல்லத்தை இழுத்து கீழே தள்ளி கண்மண் தெரியாமல் உதைத்தான். பையன் தூரப்போய் விழுந்தான்.

    அய்யோ. அம்மா! அதுவரை தேக்கி வைத்த அணை உடைந்து விட்டது. வாய்விட்டு கதறினாள். வலி தாங்க முடியாமல் புரண்டாள், புழுவாக நெளிந்தாள். இதற்கென்றே காத்து நின்றவர்கள் போல் தடியன்கள் ஒதுங்கி நின்று விட்டார்கள்.

    அப்பா! அம்மா! என்று விவரம் புரியாமலே ‘வீல்’ என்று கத்தியபடி நெருங்கிய சிறுவனை காடப்பனும் மற்றவர்களும் பாய்ந்து பிடித்துக் கொண்டார்கள்.

    கை ஓயும் வரை அடித்து முடித்த மாணிக்கம் வாசலைப் பார்த்து இழுத்து வந்தான். போடி இந்த வீட்டுலே ஒரு நிமிஷம் இனி இருக்கப்படாது என்று தெருவில் செத்த நாயை இழுப்பதுபோல் கொஞ்ச தூரம் இழுத்தான், முடியவில்லை.

    அவன் கோபம், வேடிக்கை பார்த்த கூட்டத்து மேல் திரும்பியது. என்ன பார்க்கறீங்க! இங்க அவுத்துப் போட்டுக்கிட்டா ஆடறாங்க. எவளாவது நின்னு வேடிக்கை பார்த்தீங்க இழுத்து வச்சு அறுத்துப் புடுவேன்.

    கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்தபடியே மாணிக்கம் கூட்டத்தைப் பார்த்து இப்படிக்

    Enjoying the preview?
    Page 1 of 1