Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhuthugalai Thedi Vergalin Payanam
Vizhuthugalai Thedi Vergalin Payanam
Vizhuthugalai Thedi Vergalin Payanam
Ebook184 pages1 hour

Vizhuthugalai Thedi Vergalin Payanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம், இராமநாதம் முதலிய எட்டு நூல்களின் ஆசிரியர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும், தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தின் மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினையும் பெற்றவர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580117102225
Vizhuthugalai Thedi Vergalin Payanam

Read more from Karanthai Jayakumar

Related to Vizhuthugalai Thedi Vergalin Payanam

Related ebooks

Reviews for Vizhuthugalai Thedi Vergalin Payanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhuthugalai Thedi Vergalin Payanam - Karanthai Jayakumar

    http://www.pustaka.co.in

    விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம்

    Vizhuthugalai Thedi Vergalin Payanam

    Author:

    கரந்தை ஜெயக்குமார்

    Karanthai Jayakumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/karanthai-jayakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம்

    தமிழ் வாழ்வுறவே – தம்

    வாழ் வின்பம் அனைத்தும்

    துறந்த

    சங்கத்தின் முதற்றலைவர்

    உமாமகேசரின்

    திருமுன்

    எளியேனின்

    இந்நூல்

    படைக்கப் படுகிறது

    நா. கலியமூர்த்தி

    தலைவர்,

    கரந்தைத் தமிழ்ச்சங்கம்

    வாழ்த்துகிறேன்

    உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் திரு கி. ஜெயக்குமார் அவர்கள் மலாயாப் பல்கலைக்கழகமானது, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உலகின் தலைசிறந்த தமிழ்ச்சங்கம் என்று அறிவித்து விருது வழங்கிச் சிறப்பித்த விழாவினை நேரில் கண்டு, இவ்விழா பற்றியும், தனது இலங்கை, மலேசியா பயண விவரங்களைத் தொகுத்தும் விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் எனும் தலைப்பில் நூலாக வெளியிடுவது அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.

    கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சாதனைகள், பணிகள் குறித்து தமிழ்ப் பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவரும் திரு கி. ஜெயக்குமார் அவர்கள் மேலும் பல நூல்களை வெளியிடவாழ்த்துகிறேன்.

    கரந்தை,

    11.11.2010

    நா. கலியமூர்த்தி,

    ***

    ச. இராமநாதன்,

    செயலாளர்,

    கரந்தைத்தமிழ்ச்சங்கம்

    வாழ்த்துரை

    செம்மொழி வரலற்றில் கரந்தைத் தமிழ்ச்சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக விளங்குகிறது என்று மாண்புமிகு தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பெற்ற அமைப்பு கரந்தைத் தமிழ்ச்சங்கமாகும்.

    தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளை, கோலாலம்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலம் மற்றும் இலக்கியகம் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்திய , தற்காலத் தமிழ்மொழி இலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு விழாவின்போது, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உலகின் தலைசிறந்த தமிழ்ச்சங்கமாக அறிவித்து தங்கப்பதக்கத்துடன் கூடிய சிறப்பு விருதானது, மலேசிய கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்களால், 14.2.2010 அன்று வழங்கப்பெற்றது.

    இவ்விருதினைப் பெறுவதற்காக, எனது மனைவியையும், உமாமகேசுவர மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு கி. ஜெயக்குமார் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு மலேசியாவிற்குப் பயனமானேன். திரு கி. ஜெயக்குமார் அவர்கள் தமிழ்ப் பொழில் இதழில், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். இதனால் பயணம் மேற்கொள்வதற்கு முன்னரே, இப்பயண நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளுமாறும், தாயகம் திரும்பியவுடன், பயணக் கட்டுரை ஒன்றினை எழுதி தமிழ்ப் பொழில் இதழில் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டேன்.

    திரு கி. ஜெயக்குமார் அவர்களும் எனது வார்த்தைகளுக்கிணங்க விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் எனும் பெயரில் பயணக் கட்டுரையொன்றினை, தொடர் கட்டுரையாக, தமிழ்ப் பொழில் இதழுக்கு எழுதி வழங்கினார். இக்கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தனியொரு நூலாக வெளி வருவது எனக்கு மட்டில்லா மகிழ்வைத் தருகின்றது.

    திரு கி. ஜெயக்குமார் அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன்.

    கரந்தை,

    24.10.2010

    ச. இராமநாதன்

    ***

    கலைநன்மணி, நல்லாசிரியர்

    கள்ளிப்பட்டி சு. குப்புசாமி.

    கள்ளிப்பட்டி-625 605

    பெரியகுளம் வட்டம்,

    தேனி மாவட்டம்.

    வாழ்த்துரை

    திரைக்கடலோடியும்

    திரவியம் தேடு…

    என்ற பழமொழிக்கேற்ப கடல் கடந்து சென்று திரவியம் தேழய தமிழர்கள் ஒரு பக்கம்.

    அந்நியர்களால் அழமையாகக் கொண்டு சென்று திரவியம் தேஜய தமிழர்கள் ஒருபக்கம்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்து சென்று திரவியம் தேடிய தமிழர்கள் இன்னொரு பக்கம்.

    இவ்விதம் மலேசியா, சிங்கப்பூர். பர்மா.தாய்லாந்து,இந்தோனேசியா,பிஜி தீவு, மொரீசியஸ் தீவு போன்ற கிழக்காசியப்பகுதிகள் நாடுகளாவதற்குதங்களது உழைப்பின் பெரும்பங்கினை அளித்தவர்கள் தமிழர்கள்.

    அந்நியர்களால் அழமைகளாகக்கொண்டு செல்லப்பட்டவர்கள் உழைத்த உழைப்பிலிருந்து இன்று மிளிர்ந்து கொண்டிருக்கும் வழுவழுக்கும் போக்குவரத்து சாலைகளும், ரயில் பாதைகளும், வானுயர்ந்த கட்டிடங்களும், அழகு மிளிரும் கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தமிழர்கள் சிந்திய ரத்தமும், கடுமையான உழைப்புமே...

    இன்னும் சொல்லப்போனால் தன்னை உருக்கிக் கொண்டு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்தான் அன்றைய தமிழர்கள். இன்றும் தொப்புள் கொடி உறவுகளாக இருந்து வருவதோடு, தமிழ் மொழியையும் கட்டிக் காத்து,

    சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து

    வீழ்த்துதுமே! விழ்த்துதுமே...

    என்று பாடி, மொழியினை வளமாக்கி வைத்துள்ள பாங்கினை, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காணவும், கேட்கவும் நேர்ந்தது சுற்றுலாச் சென்ற அனைவருக்கும் பெருமிதத்தை அளிப்பதாக இருந்தது.

    கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு... என்பது போல தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலெல்லாம் சிறப்புகளும், பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றது.

    உலகெலாம் என்று இறைவன் எடுத்துக் கொடுக்க சேக்கிழார் பெரியபுராணம் எழுதியது போல கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளரும், செம்மொழி வேளிருமான அய்யா திரு ச. இராமநாதன் அவர்களால் விழுதினை என்று எடுத்துக் கொடுக்க நூலாசிரியர் தஞ்சை ஜெயக்குமார் விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் என்னும் தலைப்பில் தமிழ்ப் பொழில் இதழில் எழுதிய பயணக் கட்டுரை, பலமாதங்கள் வெளிவந்து இப்போது நூலாகியுள்ளது.

    நான் சொல்வதெல்லாம் உண்மை

    உண்மையைத் தவிர வேறான்றுமில்லை

    என்று நீதிமன்றக் கூண்டில் நிற்பவர்கள் சொல்வது போல இந்நூலில் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையான மொழி வரலாறேத் தவிர, கற்பனைக்கு ஏதும் இடமில்லை என்று அவர் சார்பில் நான் கூறிக்கொள்கிறேன்.

    மேலும் சொல்லப்போனால்,

    தங்கப் பதக்கத்தின் மேலே-ஒரு

    முத்துப் பதித்தது போலே

    என்ற திரைப்படப் பாடல் வரிகளைப் போன்று மொழிவரலாற்றின் மீது சுற்றுலாத் தலங்கள் சிலவற்றை முத்தாகப் பதித்து சிறப்பித்துள்ளார்.

    தமிழ்த் தாய் அறக்கட்டளை சார்பில் தமிழகத்திலிருந்து சென்ற பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் என ஐம்பத்தெட்டு பேர்களில் நானும் ஒருவன் என்பதோடு, நூலாசிரியருடன் ஒரு வாரம், ஒரே அறையில் தங்கியிருந்தோம். அவரது எளிமை.பெருமை மிகவும் எம்மைக் கவர்ந்தது.

    கேட்டவர் குரலுக்கு ஓடோடி சென்று உதவும் கண்ணனைப் போன்று உதவும் நல் உள்ளம் கொண்டவர்.

    யாம் பெற்ற இன்பம்

    இவ்வையகம் பெறவேண்டும்.

    என்ற பாணியில் அவர் பெற்ற அனுபவங்களை இந்நூலினைப் படிப்பவர்களும் பெறுவார்கள். கரந்தைத் தமிழ்ச்சங்கம் என்றும் புகழுடன் விளங்கும். நூலாசிரியரும் பல்வேறு சிறப்புக்களைப் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    வாழ்க செம்மொழித் தமிழ்

    வளர்க கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தொண்டு

    என்றும் அன்புடன்,

    கற்றிப் பட்டி சு. குப்புசாமி

    ***

    கவிஞர் பால. திருநாவுக்கரசு.

    மின் வாரிய உதவி நிர்வாக அலுவலர்(ஓய்வு),

    54, குந்தவைக் குடில்,

    நிர்மலா நகர்,

    தஞ்சாவூர் - 613 OO7

    முயற்சிகள் என்றென்றும் தோற்பதில்லை

    விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் எனும் இந்தப் பயணக் கட்டுரையினைப் படித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். ஏனெனில் பழமையின் பெருமையும், தமிழ்ப் பற்றின் பெருமையும் நிறைந்துள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கம் என்றாலே அதில் தமிழுக்கு மட்டுமல்ல, தமிழின் தேடலுக்கு மட்டுமல்ல, தமிழில் உள்ள சிறந்த படைப்புகளுக்கு மட்டுமல்ல, தமிழ்ச்சங்கத்தில் பணிபுரிந்து வருகின்ற பேராசிரியர்களும் தமிழின்பால் பற்றுள்ள, நேச உணர்வு கொண்ட உறவுகள்தான் என்பதனை உளம் நெகிழ்ந்து உணர்த்தியுள்ளார் பட்டதாரி ஆசிரியரும், நூலாசிரியருமான பெருமை மிகு சகோதரர் கி.ஜெயக்குமார்.முதலில் அவரது இச்சீரிய செயலுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களையும், ஸ்ரீவரசித்தி விநாயகரின் நல்லாசிகளையும் மேன்மேலும் பல அரிய பொக்கிசமான பல நூல்களை வெளியிட வேண்டுமென பாராட்டி மகிழ்கிறேன்.

    திரு மணியன் அவர்கள் ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதிவந்த இதயம் பேசுகிறது என்ற பயணக் கட்டுரைகளை எனது பள்ளிப் பருவத்தில் நான் விரும்பிப் படிப்பேன். ஏனெனில் அவரது எழுத்துக்களில் அந்தந்த இடங்களும், அமைப்புகளும் நம் கண் முன்னால் படமாக திரையோடுவது போல இருக்கும். நாமும் இப்படிப்பட்ட இடங்களுக்கு விமானப் பயணம் செய்திட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அதற்கு ஆணிவேர் போல் எனது தாய்வழித் தாத்தா கோலாலம்பூர் திரு த.மா.சாமிநாதப் பிள்ளை இருந்து மகிழ்ந்து வாழ்ந்த மலேசிய மண்ணுக்குப் போகக் கூடுமென என் உள்மனம் சொல்லியது.

    தமிழக, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலம் மற்றும் இலக்கியகம் இணைந்து நடத்தும் தற்காலத் தமிழ் மொழி இலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்கு-2010 மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாய்ப் பல்கலைக்கழக இரண்டாம் கல்லூரியில்14.2.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறக் கூடிய நிகழ்ச்சிக்கான இந்தப் பயணத்திற்கு தமிழகத்திலிருந்து பல பேராசிரியர்களுடன், தமிழ்ப் பற்றாளர்களையும் சேர்த்து 58 பேர்களுடன் பயணக்குழு ஒருங்கிணைப்பாளாராக எனது 63 வது வயதினில் நானும் மலேசியா செல்ல வாய்ப்பு அமைந்தது.

    சாதாரணமாக பயணக் கட்டுரைகளில் பார்க்கப்பட்ட இடங்களையும், அதன் அமைப்பு சூழல், கலைநயங்கள், பண்பாடுகளை மட்டுமே காணமுடியும். ஆனால் இந்தப்பயணக் கட்டுரையில் இதனையும் தாண்டி, சுமார் 1OOO ஆண்டுகளுக்கு முன்னாலும், கி.மு.2 ஆம் நூற்றாண்டுகளிலும் உள்ள தமிழின் கலைப் பொக்கிசங்களையும், தமிழர்களின் கடும் உழைப்பையும், தமிழ் வளர்ச்சியின் பெருமையையும், தமிழனின் வீரச் செயல்களையும் காலப் பெட்டகங்களாக இன்றைய இளைய சமுதாயத்தினர்களும், ஆராய்ச்சி வல்லுநர்களும் தெளிவுற அறிந்திடும் வண்னமாக சொல்லப்பட்டிருப்பது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ் வளர் பெருமைக்கு இந்நூலாசிரியர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    கரந்தைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் அவர்கள் தமிழ் மீதும், சங்கத்தின் வளர்ச்சி மீதும், வயதான நாட்களிலும் ஒரு இளைஞனை போல பம்பரமாகச் செயல்பட்டு வருவது கண்டு, இந்நாள் இளைஞர்கள் தமிழால் இவர் மூலமாக பாடம் கற்க வேண்டும். வெற்றியின் இரகசியம் என்பது உழைப்பில் மட்டுமல்ல, எண்ணகளின் வலிமையில் மட்டுமே அமையும் என்பது திண்னம், இதற்கு எடுத்துக் காட்டாக கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு மலேசிய பல்கலைக்கழகம் வழங்கி இருக்கும் உலகிலேயே தலை சிறந்த தமிழ்ச்சங்கம்-கரந்தைத் தமிழ்ச்சங்கம் என தங்கப் பதக்கத்துடன் கூடிய சிறப்பு விருதினைப் பெற்றிட செம்மொழி வேளிர் கரந்தை ச.இராமநாதன் அவர்களின் பணி, புதையுண்டு கிடப்பதைத் தோண்டி எடுத்து உலகறியச் செய்யும் மகத்தானப் பணி- என்பதை நினைக்கையில் எனது உள்ளம் பெருமிதத்துடன் பூரித்துப் போகிறது.

    முதலில் பிடித்தது தலைப்பு

    கரந்தைத்

    Enjoying the preview?
    Page 1 of 1