Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal
Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal
Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal
Ebook170 pages37 minutes

Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புலவர் சா. இராமாநுசம் அவர்கள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றியபவர். இவர் பல்வேறு இயக்கங்களில் பல முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும், பல்வேறு போராட்டங்களில் முன்னின்று வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இவரின் கவிதை தொகுப்பை வெளியிடுகிறோம்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119502169
Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal

Related to Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal

Related ebooks

Reviews for Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal - Pulavar S. Ramanusam

    http://www.pustaka.co.in

    வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்

    Valaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal

    Author:

    புலவர் சா. இராமனுசம்

    Pulavar S. Ramanusam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/pulavar-s-ramanusam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்

    முனைவர் ஒளவை நடராசன்

    முன்னாள் துணைவேந்தர்

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    தஞ்சை.

    புலவர் சா.இராமாநுசம் பல்லாண்டுகளாக நான் பழகி அறிந்த புலமைத் திலகம் ஆவார். தமிழ்ப் புலமையோடு தமிழ் உணர்வு தலைக்கேறிய தறுகண்மை உடையவராகத் திகழ்ந்து அவர் ஆற்றிய பணிகளை நான் அறிவேன். தமிழாசிரியர்களை ஒருங்கு கூட்டி ஒருமையுணர்வோடு உயரிய பணிகளை ஆற்றுவதற்குப் பலவகையில் தலைமை தாங்கிய பெருமையும் அவரைச் சாரும். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராகப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒளவையார் குப்பத்தை அடுத்துப் பேரூராக விளங்கும் இரட்டணை புகழ் வாய்ந்த நன்னகராகும். செல்வப் பெருங்குடி மக்கள் ஊரோடு ஒருங்கிணைந்து நல்வாழ்வு நடத்துகிற பாங்கு இரட்டணையில் இன்றும் உண்டு. அத்தகைய செல்வக் குடும்பத்தில் இரட்டணையில் பிறந்த செம்மை வாய்ந்தவர் புலவர் சா.இராமாநுசம்.

    பண்டிகை அசலாம்பிகை அம்மையார் என்னும் நல்லிசைப் புலவர் பிறந்து வாழ்ந்ததும் இரட்டணைதான். காந்திப் புராணம், வள்ளலார் மாலை முதலிய அரிய நூல்களைப் புனைந்ததோடு வாய்திறந்தால் வண்ணம் பாடும் புலமை அரசியாக நாட்டுப்பற்று மேலோங்கிட அவர் விளங்கியதைத் திரு.வி.க. பாராட்டி எழுதினார். இரட்டணையில் என் தந்தையாரின் தமையனார் வாழ்ந்து வந்ததால் எந்தையார் பல்லாண்டுகள் அங்கே இருந்து மகிழ்ந்தவர். அந்த வகையில் ஊர்ப்புலமையோடு தன் உழைப்பால் உயர்ந்த தகுதிப் பெருமிதமும் புலவர் இராமாநுசத்துக்குப் பெருமை சேர்க்கின்றன. இாமாநுசம் அவர்களுடைய வாழ்க்கைத் துணைவியார் திறம் வாய்ந்த மருத்துவ மாமணியாவார்.

    கற்ற புலமையோடு கலையுணர்வும் இணைந்தால் தான் கவிதைகள் பிறக்கும். இந்நாளில் கலை உணர்வே போதும் எனக்கருதித் தொடர்களை உடைத்தும், சீர்களைக் குலைத்தும், கொலைவெறிக் கொடுமையை வளர்த்தும் புதுக்கவிதை படைத்து கலைமலிந்த தமிழுக்குக் கறைபூசும் படைப்பாளர்கள் பலர் நிரம்பியுள்ளனர். பாழும் திரைப்படம் இப்படிப்பட்ட வாழும் வஞ்சகத்துக்குக் கைகொடுக்கின்றது. இந்நிலையில் மரபு திரியாத மாட்சியோடு இலக்கண வரம்பை எப்போதும் மனத்தில் கொண்டு இறைவணக்கம், இயற்கை வழிபாடு, தமிழின எழுச்சி, தமிழ் இலக்கியக் காட்சிகள், ஈழ அவலம் ஆகிய பொருண்மைகளைத் தம் நடையில் எளிதாக்கிப் புனைதல் என்ற பண்மணித்திரளாக இக்கவிதைக் களஞ்சியம் விளங்குகிறது. காலத்துக்கேற்ப கணிப்பொறியில் அமர்ந்து எழுதும் பழக்கம் புலவருக்குப் பயனுள்ள பொழுதுபோக்காகப் பொலிகின்றது.

    கலைவளம், கற்பனைத்திறம், உள்ளது உரைத்தல், உணர்வால் பொங்குதல், அருமையில் எளிய அழகு ஆகிய இயல்புகள் பாடல்கள் தோறும் பளிச்சிடுகின்றன.

    எழிலார்ந்த கணிணி வலையில் மிதக்கும் இந்த எண்ண அலைகளை நான் படித்து மகிழ்ந்தேன். சிந்தனை வளமும், செயலாற்றலும், சீர்பட விளங்கும் புலவர் இராமாநுசத்தை மனங்கனிந்து பாராட்டுகிறேன். சீரார்ந்த செந்தமிழும் சிறப்பார்ந்த செய்யுள் நலமும் நாளும் வளர்க! புலவர் இராமாநுசம் வாழ்க!

    அன்புள்ள

    ஒளவை நடராசன்.

    புலவர். சு.நஞ்சப்பன்,

    சிறப்புத் தலைவர்

    தமிழகத் தமிழாசிரியர் கழகம்

    கோவை.

    அணிந்துரையல்ல ஒர் அறிமுகவுரை

    பண்பாளர் பெரும்புலவர் சா. இராமாநுசம் அவர்களை நான் நன்கு அறிவேன். பல்லாண்டுகள் நாங்களிருவரும் உடன்பிறவா உடன் பிறப்புகளாக வாழ்ந்து வருகிறோம். அவர் வலை தளத்தில், விதை விதைத்து, தமிழ்க்களத்தில் கொண்டுவந்த கவிதைப்பூக்களை நுகர்ந்தேன். பொய்யான கற்பனைகள் கலவாமல் மெய்யாகத் தம் கற்றறிவையும் பட்டறிவையும் கவிதையாகத் தொடுத்து, தமிழுக்குச் சூட்டியுள்ளார். கவிதைகளை ஆய்ந்து ஆய்வரங்கம் நடத்தாமல் நூலாசிரியரின் பண்புகளைப் பாராட்ட விழைகின்றேன்.

    நூலாசிரியர் அண்ணன் சா. இராமநுசம் அவர்கள் எனக்குத் தலைவர்; அவருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றவன். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், கவியாற்றலும், பேச்சாற்றலும் பெற்ற பெருமகனார். வக்கற்றவன் வாத்தியார் என்ற மொழியைப் பொய்யாக்கிக் களம் கண்ட தலைவர்களில் ஒருவர்.

    குறைந்த ஊதியம், வாயிருந்தும் ஊமைகளாய், அடக்கு முறைக்கும், அதிகார வெறிக்கும் அஞ்சி அஞ்சி வாழ்ந்த ஆசிரியப் பேரினம் உரிமைக்குரலை 1985இல் ஓங்கி ஒலித்தது. ஒன்றுபட்டு களம் கண்டது. அப் பெரும் படையை வழி நடத்தியவர்களில் இவர் ஒப்பற்ற தலைவர்.இவரது உரையில் விவேகம் நிறைந்திருக்கும். வெறும் பகட்டு ஆடம்பரம் அற்றவர். பலர் ஒன்று பட்ட களத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றாது காத்தவர். தோன்றிய போது நல்வழிப்படுத்தியவர்.

    தமிழாசிரியர்கள் ஏமாற்றப்பட்டபோது காயம் பட்டவர். வலிகளைப் பட்டவர். அந்த வலிக்கும் மருந்து தேடித் தந்தவரும் இவரே. எனவே இவர் ஒரு உரிமைப் போராளி, தமிழ்ப் போராளி, மிகச் சிறந்த படைப்பாளி. நெஞ்சில் கனிவும், பேச்சில் பணிவும் செயலில் துணிவும் கொண்டவர். தமிழாசிரியர்களின் உயர்வுக்கு ஒரு ஏணிப்படி, ஏறியவர் மறந்தபோதும் வருந்தாத ஏணிப்படி!

    இவர் நல்ல தமிழாசிரியர், நல்ல இயக்கவாதி, நல்ல குடும்பத்தலைவர். நல்ல தந்தை, நல்லதமிழ்குடிமகன் என்றால் மிகையாகாது. இப்பாராட்டுக்கள் பொய்யுரையல்ல; புனைந்துரையல்ல; உண்மை வெறும் புகழ்ச்சிகாகக் கூறவில்லை. இச்சீர் மிகு பண்பாளர் வலைதளத்தில் தன் கருத்துகளைத் தமிழ்க் கவிதைகளாக விதைத்து வந்துளார். அக்கவிதைகளை நூலாக்கி, தமிழர்களின் கைகளில் மலர விடுகிறார்.

    இவரது கவிதைகளில் காதல் மலர்கிறது. ஏக்கம் தெரிகிறது; பிரிவின் தீயில் வெந்தது தெரிகிறது; தமிழ் இனத்தின் சோகம் தெரிகிறது. முள் வேலிக்கும் அப்பால் முகத்தை மறைத்து, பொங்கும் தமிழச்சியின் கண்ணீர் தெரிகிறது. இத்தனை தெரிந்தும் எழாத தமிழனே இனியேனும் எழ வேண்டும் என்ற இடி முழக்கம் ஒலிக்கின்றது.

    என் நெஞ்சைத் தொட்ட கவிதை வரிகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    "வளத்தில் சிறந்த யாழ்மண்ணில் –மீள

    வளமோடு திகழ யாழ் தண்ணில்

    குளத்தில் வாடும் தாமரையாய் – வன்னிக்

    குடிகள் சுருளக் காண்பதுவோ? "

    "தாக்க வரும் புலிகூடப் பெண்ணைக்கண்டே – சற்றுத்

    தயங்குமெனச் சொல்லுகின்ற கதைகள் உண்டே

    காக்கவொரு ஆளில்லை பெண்ணை என்றால் – அவர்

    கற்பென்ன கடைச்சரக்கா-

    தமிழ் ஈழத்தின் அவலத்தைத் தம் நெருப்புக் கவிதையில் வடித்துள்ளார். அவை போலப் பலபல பாடலில் வடித்து வலைத்தளத்தில் வரைய விட்டுள்ளார்.

    புலவர். சா. இராமானுசம் தமிழ்ப் பற்றைப் பறைச்சாற்றும் ஒருகவிதை;

    "என்று போகும் என் உயிரே – நான்

    இருக்கும் வரையில் தமிழ்ப் பயிரே

    Enjoying the preview?
    Page 1 of 1