Mangai Necklace
5/5
()
About this ebook
திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்திற்குப் பிறகு வளைகுடா நாடு ஒன்றில் அரசுப் பணியில் இருந்தார். இப்போது சென்னை வாசி.
சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். விளையாட்டுகள் எதிலும் அத்தனை திறமை இல்லாததும், இப்போது போல ஊடகங்கள் இல்லாததும் இவரை நிறைய படிக்க வைத்தன போலும். பள்ளி காலத்திலேயே எழுத தொடங்கி விட்டாலும், பத்திரிகைகளுக்கு எழுத துவங்கியது பதின் வயதுகளில்தான். இவருக்கு ஒரு எழுத்தாளர் என்னும் அந்தஸ்து தந்திருப்பது வலையுலகம். நகைச்சுவையாக எழுத வருவது ஒரு வரம். கட்டி இழுக்கும் குடும்ப பொறுப்புகளுக்கு நடுவில் எப்படியோ வலைப்பூவில் எழுதி, இதோ இப்போது மின்னூல் வெளியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
Read more from Bhanumathy Venkateswaran
Thirukanden Pon Meni Kanden Rating: 0 out of 5 stars0 ratingsKodayaum Edayum Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Thantha Nava Tirupathiyum, Nava Kailasamum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mangai Necklace
Related ebooks
Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Kuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAndha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsRanjani Rating: 0 out of 5 stars0 ratingsEnnalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Nilavey Vaa... Nillathey Vaa... Rating: 0 out of 5 stars0 ratingsUllam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Sakunthala Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Vasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Kaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsMathamennum Vaanaththil Manamennum Pura Rating: 5 out of 5 stars5/5
Reviews for Mangai Necklace
1 rating0 reviews
Book preview
Mangai Necklace - Bhanumathy Venkateswaran
https://www.pustaka.co.in
மாங்காய் நெக்லேஸ்
Mangai Necklace
Author:
பானுமதி வெங்கடேஸ்வரன்
Bhanumathy Venkateswaran
For more books
https://www.pustaka.co.in/home/author/bhanumathy-venkateswaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சாருவும் நானும்
இரெண்டாம் தாரம்
வானப்ரஸ்தம்
இன்னும் கொஞ்ச நாள்…
என் மகன், யார் முகம்?
குங்கும பொட்டின் மங்கலம்!
கடைசி ஆசை!!
வேலை, வேலை, வேலை
தோல்வியே வெற்றியாய்
மாங்காய் நெக்லெஸ்
சாருவும் நானும்
ஒரு மனிதனுக்கு போதாத காலம் என்றால் அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக தூங்கலாம் என்று படுத்தால் மீண்டும் எழுந்திருக்க முடியாத ஸ்ட்ரோக்காக, சிவனேன்னு பிளாட்பாரத்தில் ஓரமாக போய் கொண்டிருக்கும் பொழுது பிரேக் இழந்து பிளாட்பாரத்தில் ஏறி மோதித் தள்ளும் அரசு பேருந்து வடிவத்தில், உயரும் என்று எதிர்பார்த்து போட்ட கம்பெனி ஷேர் சடாரென்று கீழே விழுந்து உங்களுக்கு பலமாக அடி படலாம். இப்படி ஏதாவது மோசமான நிகழ்வுகளால் வரலாம். ஆனால் எனக்கோ வெகு வினோதமாக என் சின்சியாரிட்டி வடிவில் வந்தது.
என்னுடைய உழைப்பு எங்கள் கம்பெனியின் விற்பனை டார்கெட்டை தாண்டியதில் கம்பெனிக்கு கணிசமான லாபம் கிடைத்ததோடு, இந்த ரீஜெனிலேயே அதிகம் விற்பனை செய்த டிவிஷன் என்ற சிறப்பும் சேர எங்கள் மானேஜர் வெகு குஷியானார்.
எல்லோருக்கும் முன்னால் அவர் என்னை ஆஹா! ஓஹோ! என்று புகழ்ந்த பொழுதே பயந்தேன், பயந்தபடியேதான் நடந்தது. என்னை தனியாக அழைத்து, இந்த சண்டே எங்க வீட்டுக்கு டின்னருக்கு வந்துடு, ஓ.கே.?
இல்லை, எதுக்கு…?
என்ன எதுக்கு? சாப்பிடத்தான்… நான் என் வொய்ப்கிட்ட சொல்லியாச்சு. அவ இதுக்காக தன்னோட ப்ரோக்ராமெல்லாம் கேன்சல் பண்ணியிருக்கா. ஸோ, யூ, ஆர் கமிங் வித் யுவர் வொய்ப்…
ஆணையிடுவதுபோல சொல்லிவிட்டு தீவிரமாக சிஸ்டத்தை பார்ப்பதுபோல பாவனை செய்தார்.
அவருக்கு அசிடிட்டி வந்தாலும் வந்தது, அதுதான் சாக்கென்று அவர் மனைவி புளி சேர்க்கக் கூடாது, காரம் அதிகம் கூடாது, கிழங்கு கூடாது, எண்ணெய் கூடாது என்று தினசரி பத்திய சமையலை சமைக்க, இவருக்கு நாக்கு அருவருத்து போகும் போதெல்லாம் எங்களில் யாரையாவது ஏதாவது சாக்கு சொல்லி சாப்பிட கூப்பிட்டு விடுவார்.
வேறு வழியில்லை, போய்த்தான் ஆக வேண்டும். அங்கு போய் மானேஜர் யாரையாவது சாப்பிடக் கூப்பிட்டாலே அவர் மனைவி செய்யும் சாம்பார் சாதத்தையோ, வாங்கி பாத்தையோ, பிஸிபேலா பாத்தையோ, உருளைக் கிழங்கு ரோஸ்டோடு சாப்பிட வேண்டும். அவர் கை வசம் இருக்கும், எத்தனையோ முறை கேட்டு அலுத்த, இரண்டு ஜோக்குகளுக்கு விலா நோக சிரிக்க வேண்டும். அவர் குழந்தைகளின் அதிகப் பிரசங்கித்தனங்களை ஆஹா! என்ன அறிவு கூர்மை என்று வியக்க வேண்டும்.
இதையெல்லாம்விட அவர் மனைவி புதிதாக வாங்கியுள்ள நகையையோ, புடவையையோ, க்ளாஸ்வேரையோ, துடைப்பத்தையோ பார்த்துவிட்டு என் மனைவி சாரு என்னோடு போடப்போகும் சண்டைக்கும், அதன்பிறகு சமாதான நடவடிக்கைக்காக செலவிட வேண்டியதற்கும் ஆயத்தமாக வேண்டுமே.
மாலை காபியை குடித்துக் கொண்டே சாருவிடம் விஷயத்தை சொன்னேன்.
அப்படியா? அப்போ நான் அந்த பின்னி சில்க்கை எடுத்துக்கலாம்… என்று சாரு சொன்னதும், நில அதிர்ச்சிக்கு உண்டானதைப் போல என்றெல்லாம் சொன்னால் அது பொய். சாரு அவ்வப்பொழுது வீசும் குண்டுகளை சமாளித்து, சமாளித்து நான் ஷாக் புரூப் ஆகவே மாறிவிட்டேன். ஹைட்ரஜன் குண்டாவது, நைட்ரஜன் குண்டாவது? ஒன்றும் இனிமேல் என்னை எதுவும் செய்ய முடியாது.
என் ப்ரெண்ட் மீனா மத்தியானம் வந்திருந்தா, அவளுக்காக இந்த புடவையை வாங்கினாளாம், ஆனா அவ ஹஸ்பேண்ட் அவளுக்கு இந்த கலர் சூட் ஆகாதுன்னு சொன்னாராம். நான் கலராக இருப்பதால் எனக்கு நன்னா இருக்கும்னு மீனா சொன்னா…
இப்போது இதை நான் ஆமோதித்தாலும் கஷ்டம், ஆமோதிக்காவிட்டாலும் கஷ்டம். ரெண்டும் கெட்டானாக, ம்… ம்… புடவை நன்னாத்தான் இருக்கு ஆனா இப்போ எ…து…க்…க்…கு?
ஒங்க மேனேஜர் வீட்டில சாப்பிட கூப்பிட்டிருக்காங்க, பளிச்சுனு ட்ரெஸ் பண்ணின்டு போக வேண்டாமா? தவிர போன தடவை உங்க மேனஜர் வொய்ப் ஒரு பின்னி சில்க் கட்டிண்டிருந்தா, என்ன விலைனு கேட்டதுக்கு இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லீனு திமிரா பதில் சொன்னா. அவளாலதான் காஸ்ட்லீ புடவை கட்டிக்க முடியுமா? என்னாலேயும் முடியும்னு காட்டணும்…
"காஸ்ட்லீ புடவை கட்டிக்கணும்னா ஒங்கிட்ட எவ்ளோ பட்டுப்