Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravu Nera Suriyagandhi!
Iravu Nera Suriyagandhi!
Iravu Nera Suriyagandhi!
Ebook79 pages42 minutes

Iravu Nera Suriyagandhi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. These short stories collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateDec 8, 2017
Iravu Nera Suriyagandhi!

Read more from Rajesh Kumar

Related to Iravu Nera Suriyagandhi!

Related ebooks

Reviews for Iravu Nera Suriyagandhi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravu Nera Suriyagandhi! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    இரவு நேர சூரியகாந்தி!

    Iravu Nera Suriyagandhi!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அண்ணி…!

    சர்க்கரை டப்பாவைத் தேடிக் கொண்டிருந்த கல்பனா குரல் கேட்டுத் திரும்பினாள். சமையலறை வாசலில் பாபு நின்றிருந்தான். கல்பனா தலையைச் சாய்த்துப் புன்னகைத்தாள்.

    என்ன?

    நான் போட்டிருக்கிற பேண்ட், சர்ட் பொருத்தமா இருக்கா?

    சகிக்கலை! இந்த உடுப்பைப் போட்டுக்கிட்டு நீ பெண் பார்க்கப் போனா… பேட்டை ரவுடி வர்றதா அவங்க நினைச்சுக்குவாங்க! உனக்கு எப்படி பாபு இந்தப் பிண்ணாக்கு கலரெல்லாம் கிடைக்குது?

    என் ராசி அப்படி! சரி அண்ணி… நீங்களே வந்து செலக்ட் பண்ணிக் கொடுங்க!

    வானத்து நீலக் கலர்ல ஒரு சபாரி வெச்சிருந்தியே... அது எங்கே?

    பீரோவில் இருக்கு!

    அதைப் போட்டுக்க, அந்த சபாரி புண்ணியத்துல உன் மூஞ்சிக்கே ஒரு ராஜகளை வந்துவிடும்.

    அண்ணி….! இந்த கிண்டல் தானே வேணாம்கிறது...!. என்னோட அம்மா உயிரோட இருந்திருந்தா… இப்படிப் பேசுவாங்களா?

    கல்பனா பாபுவுக்குப் பக்கத்தில் வந்து அவனுடைய காதைப் பிடித்து முறுக்கினாள்.

    கோபிச்சுக்காதே! ஒரு தமாசுக்குச் சொன்னேன். அந்த சபாரியையே நீ போட்டுக்க!

    அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் அங்கே என்ன தகராறு? கேட்டுக் கொண்டே கல்பனாவின் கணவன் ராகவன் உள்ளே நுழைந்தான். முப்பது வயது ராகவனுக்கு முன் மண்டையில் லேசான வழுக்கை.

    கல்பனா கணவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

    உங்க தம்பிக்கு என்ன வயசுங்க?

    இருபத்தஞ்சு!

    இந்த இருபத்தஞ்சு வயதுக் குழந்தைக்குப் பெண் பார்க்கப் போகும் போதே எந்த டிரஸ் போட்டுட்டுப் போறதுன்னு தெரியலை!

    ராகவன் பாபுவை ஏறிட்டான். ஏன்டா…! பெண் பார்க்கப் போக இப்பவே ரெடியாயிட்டியா? இன்னும் முழுசா மூணு மணி நேரம் இருக்கு! கிடந்து அலையறான்...

    கல்பனா கணவனைப் பார்த்துக் கேலியாய் கண்ணைச் சிமிட்டினாள். பாபுவுக்கு இப்போ பார்க்கப் போற பொண்ணை ரொம்பவும் பிடிச்சிருக்காம்!

    இவன் தான் பொண்ணை இன்னும் நேரில் பார்க்கலையே?

    போட்டோவைத் தான் பார்த்தாச்சே!

    சில பொண்ணுக போட்டோவில் பார்க்க அம்சமா இருக்கும். நேர்ல பார்க்க சகிக்காது! அநாவசியமாப் போட்டோவைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்காதே! பொண்ணை நேர்ல பார்த்துட்டு… அப்புறமா உன்னோட முடிவைச் சொல்லு! இப்ப அப்பா உன்னைக் கூப்பிட்டாரு... என்னான்னு போய்க் கேளு!

    அப்பா மாடியில் இருக்காரா? கீழே இருக்காரா?

    மாடியில்!

    பாபு சமையலறையை விட்டு வெளியே வந்து முன் அறையில் நுழைந்து மாடிப் படிகளில் ஏறி - அப்பா சபாநாயகம் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

    ஈசி சேரில் சாய்ந்து - வெள்ளெழுத்துக் கண்ணாடி யின் உதவியோடு... திருவாசக விளக்க உரைப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சபாநாயகத்துக்கு அறுபது வயது இருக்கலாம். சற்றே தளர்ந்த உடம்பு. நெற்றியின் மையத்தில் இட்டிருந்த விபூதித் தீற்றமும் - அதன் நடுவே இருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1