Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruppumunai Nayagan M.G.R
Thiruppumunai Nayagan M.G.R
Thiruppumunai Nayagan M.G.R
Ebook109 pages39 minutes

Thiruppumunai Nayagan M.G.R

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி,
என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
Languageதமிழ்
Release dateAug 30, 2017
Thiruppumunai Nayagan M.G.R

Read more from Umapathi K

Related to Thiruppumunai Nayagan M.G.R

Related ebooks

Reviews for Thiruppumunai Nayagan M.G.R

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruppumunai Nayagan M.G.R - Umapathi K

    http://www.pustaka.co.in

    திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர்

    Thiruppumunai Nayagan M.G.R

    Author:

    கே. உமாபதி

    K. Umapathi
    For more books

    http://www.pustaka.co.in/home/author/k-umapathi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    தமிழகத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆளுமை, மருதூர் கோபாலமேனோன் ராமசந்திரன் எனும் எம்.ஜி.ஆர். அவரைப் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரே தமது வாழ்க்கை வரலாறு குறித்து ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடர் எழுதினார். ஆனால், அது முழுமையாக வரவில்லை. அந்தப் தொடரிலும் கூட அவரது வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் முழுமையாக இல்லை. வாழ்க்கை வரலாறு என்பது திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அப்படி ஒரு திறந்த புத்தகமாக அவரது வாழ்க்கை வரலாறு தொடர் இல்லை.

    குறிப்பாக கருணாநிதி உடனான நட்பு குறித்து எம்.ஜி.ஆர் விரிவாக எழுதவில்லை. தாம் சுடப்பட்டது குறித்தும் விரிவாக எழுதவில்லை. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றவை முக்கியமான குறிப்பிட்ட சில திருப்புமுனை சம்பவங்கள்தான். அவை குறித்து நுணுக்கமாக தகவல்களைச் சேகரித்து இதில் எழுதி இருக்கிறேன்.

    எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்று வந்த பிறகு மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், அவரது உடல் நிலையில் தொடர்ந்து அவ்வப்போது பிரச்னைகள் இருந்து வந்தன. இதனால், அவரால் சிறப்பான ஆட்சி நடத்த முடியவில்லை. எம்.ஜி.ஆரின் கடைசி கால மூன்று ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இவற்றைப் பற்றியும் தகவல்களை கொடுத்திருக்கிறேன்.

    இந்தப்புத்தகத்தை எழுதுவதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் வரை ஆனது.

    எம்.ஜி.ஆர் பற்றி ஆளாளுக்கு தப்பும், தவறுமாக புத்தகங்களை எழுதி இருக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், எம்.ஜி.ஆர் மற்றும் அவரது அம்மாவை பாலக்காட்டில் இருந்து கும்பகோணம் அழைத்து வந்தவர் நாராயணன் நாயர் என்றும், அவர் சத்யபாமாவின் சகோதரர் என்றும் தவறான தகவல்கள்தான் பெரும்பாலான புத்தகங்களில் காணப்படுகிறது.

    ஆனால், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி எழுதியுள்ள ‘என் தம்பி எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் இது பற்றி தெளிவாகக் கூறி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் தந்தை கோபால மேனோன் மறைவுக்குப் பின்னர் பாலக்காடு வரும் அவர்களை, கோபாலமேனோனின் நண்பர் வேலு நாயர் என்ற ஓய்வு பெற்ற போலீஸ்காரர்தான் பாதுகாக்கிறார். அவர்களை கும்பகோணம் அழைத்து வருகிறார்.

    பின்னர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் உள்ள வேலு நாயரின் நண்பர் நாராயணன் நாயர் என்ற பின்பாட்டுக்கார ர்தான் எம்.ஜி.ஆரையும், சக்கரபாணியையும் நாடகத்தில் நடிகராகச் சேர்த்து விடுகிறார்.

    பல்வேறு தகவல்களை உறுதி செய்த பிறகே இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். தமிழகத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் எனும் ஆளுமையின் ப்ளஸ், மைனஸ் இரண்டையும் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த புத்தகம் எழுத முக்கிய காரணங்களாக இருந்த ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன், இந்த நூலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அழகானதொரு அணிந்துரை மட்டுமின்றி, இந்த நூலுக்கு ‘திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர்’ என்று தலைப்பு வைத்தால் சிறப்பாக இருக்கும் யோசனையையும் அளித்த எனது நண்பரும், விகடன் குழுமத்தின் செய்தியாளர் கிருபாகரன் ஆகியோருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

    அன்புடன்

    கே.பாலசுப்பிரமணி என்ற உமாபதி

    ***

    அணிந்துரை

    எம்.ஜி.ஆரைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் மிகப் பிடித்தமான விஷயம். எம்.ஜி.ஆர் என்ற ஒரு மனிதர் நிறைய பலமும், குறைவான பலஹீனங்களும் கொண்ட ஒருவர்தான். ஆனால் பலஹீனங்களை பலமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரர். வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் அவர் விடாது கடைபிடித்த மனிதநேயம்தான் அவரை வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

    தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை அவருடையது. 1936-ம் ஆண்டு 'சதி லீலாவதி' திரைப்படத்தில் சாதாரண ஒரு காவலராக சிறுவேடத்தில் அறிமுகமான அவர், கதாநாயகனாக நடிப்பதென்ற தன் லட்சியைத்தை எட்ட 11 வருடங்கள் ஆனது. 'வாய்ப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்கமுடியாது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தகுதியுடன் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கவேண்டும்' என்பது அவரது வாழ்வின் வெற்றியின் ரகசியம். அதற்கு அந்த 11 வருடங்களே சாட்சி. அதன் பின்னர், திரையுலகின் உச்சகட்ட புகழை எட்ட அவருக்கு மேலும் 10 வருடங்கள் ஆனது. கடும் உழைப்பினால் அதை அவர் சாதித்தார்.

    ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கை ஒரு சினிமாப்படமாக ஆகிறபோது அதைச் சில மணிநேரங்களில் முடிக்கிற கட்டாயம் படைப்பாளிக்கு உண்டு. அப்படி ரத்தினச் சுருக்கமாக அந்த வாழ்க்கையை ரசிகர்களுக்குச் சொல்ல சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனைகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. சுமார் அரைநுாற்றாண்டுக்காலம் தமிழகத்தின் பேசுபொருளாக வாழ்ந்து மறைந்த அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்வும் அவரது திரைப்படங்களைப்போன்றே வெகு சுவாரஸ்யமான திருப்புமுனைச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான். கண்டியில் வசதியான குடும்பத்தில் பிறந்து பால்குடி மறக்காத வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் ஒரு சகோதரன் சகோதரியுடன் சொந்த மண்ணான பாலக்காடு திரும்புகிறான் குழந்தை ராம்சந்தர். அங்கு உறவினர்களிடம் அவமானப்படும் அவரது தாய் சத்தியபாமா, உறவினர் என யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு குடிபெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் கும்பகோணத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1