Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppu Malargal
Neruppu Malargal
Neruppu Malargal
Ebook194 pages1 hour

Neruppu Malargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateAug 30, 2017
Neruppu Malargal

Read more from Gnani

Related to Neruppu Malargal

Related ebooks

Reviews for Neruppu Malargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppu Malargal - Gnani

    http://www.pustaka.co.in

    நெருப்பு மலர்கள்

    Neruppu Malargal

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ப்ரீதி

    2. பீனா

    3. மூவலூர் ராமாமிர்தம்

    4. ருக்மா

    5. ரமாபாய்

    6. முத்துப்பழநி

    7. மணலூர் மணியம்மா

    8. ஆடைப் போராளிகள்!

    9. பிக்காஜி

    10. அருணா

    11. தில்லையாடி வள்ளியம்மை

    12. குடியாலோ

    13. ஷஹாதா

    14. சங்க காலப் பெண்கள்

    15. ஐய்ரம் ஷர்மிளா

    16. ஒரு பின்னுரை

    சரித்திரத்தில் தொலைக்கப்பட்டவர்கள்

    ஆங்கிலத்தில் வரலாறைக் குறிக்கும் சொல்லான history என்பது his-story - ‘அவன் கதை’ என்பதிலிருந்து உருவானது. வரலாறில் ‘her story’களுக்கு இடமில்லை. ஆணைப் போல நடந்துகொள்கிற, ஆணின் மதிப்பீடுகளைத் தனக்குள் உள்வாங்கிக் கொண்ட பெண்களுக்கே ஆண்களின் ஹிஸ்டரியில் இடம் தரப்படுகிறது. மற்ற பெண்களெல்லாம் ஹிஸ்ட்டீரியா கேஸ்களாக ஒதுக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் கலாசாரங்களிலும் இதுதான் பொதுவிதியாக இருந்துவருகிறது. விதி விலக்குகளாக ஓரிருவர் பேசப்பட்டாலும், அவர்களுடைய முழு ஆளுமை சித்திரிக்கப்படாமல், வசதியாக ஏதேனும் ஒரு குணாம்சம் மட்டுமே பேசப்படும்.

    சரித்திரத்தில் இப்படித் தொலைக்கப்பட்டவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு எனக்கு 1997ல் கிடைத்தது. அது இந்திய விடுதலை-யின் பொன் விழா ஆண்டானதால், விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி தூர்தர்ஷனுக்காக ஒரு தொடர் தயாரித்தேன்.

    விடுதலைப் போராட்டம் எழுச்சி அடைந்த காலத்தில், கூடவே பெண்களின் சம உரிமைக்கான விழிப்பு உணர்வும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. இதில் அனைத்திந்திய அளவில் காந்தியின் பங்கும் தமிழக அளவில் பெரியாரின் பங்கும் பொதுவாக இடதுசாரி இயக்கங்களின் பங்கும் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை. அனைத்திந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி, பங்கேற்ற ஆண்கள் பற்றி விரிவான் குறிப்புகள் இருந்த அளவுக்குப் பெண்களைப் பற்றிப் பதிவு செய்யப்படவில்லை.

    கிடைத்த தகவல்களைக் கொண்டு கதை வடிவில் அப்போது உருவாக்கிய ‘வேர்கள்’ தொடர் தூர்தர்ஷன் நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதற்குப் பின் 1999ல் சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் வருடாந்தரக் கல்லூரி நாடகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இன்று பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி நாடகம் தயாரித்தேன். நாடகத்துக்கு ‘சண்டைக்காரிகள்’என்று பெயரிட்டிருந்தோம். அதற்கு கல்லூரி நிர்வாகம் சம்மதிக்கவில்லை. எனவே ‘பெயர் இல்லாத தமிழ் நாடகம்’ என்று அறிவித்தோம். ‘சரித்திரத்தில் பெயர்கள் இல்லாமல் போனவர்களைப் பற்றிய பெயர் இல்லாத தமிழ் நாடகம்’ என்று அதற்கு விளக்கம் கொடுத்தோம். மாற்றத்துக்காகக் குரல் எழுப்பும் பெண்ணை வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, சண்டைக்காரி என்று முத்திரை குத்தி ஒதுக்குவது நம் சமூக வழக்கம். ஆனால், அத்தகைய சண்டைக்காரிகள் இல்லையென்றால், இன்று காணும் பல மாற்றங்கள் வந்திருக்க முடியாது என்பதே நாடகத்தின் தொனி.

    அடுத்து 2005ல் ‘நெருப்பு மலர்கள்!’ தொடரை ‘அவள் விகடன்’ இதழில் எழுதும் வாய்ப்பு கிட்டியது. மனித சமத்துவத்துக்காக, தங்கள் உரிமைகளுக்காகப் பெண்கள் போராடிய வரலாற்றின் வெவ்வேறு பரிமாணங்களை, தொலைக்காட்சித் தொடர், மேடை நாடகம், பத்திரிகைத்தொடர் என்று முன்று ஊடகங்களில் விதவிதமான வடிவங்களில் சொல்லும் அபூர்வமான வாய்ப்பு கிடைத்த படைப்பாளி நான் மட்டும்தான்.

    வரலாற்றில் பெண்களின் பங்கு பற்றிய பதிவுகள் மிக குறைவாகவே உள்ள சூழலில், பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்கும் முன்னோடிகள் பலர். உமா சக்ரவர்த்தி, நீரஜா தேசாய், சசி தாரு, என்.லலிதா, மீரா கோசாம்பி, சுமித் சர்க்கார், விபூதி பட்டேல், கெயில் ஓம்வெட், ராதா குமார்,ராஜம் கிருஷ்ணன்,வசந்தா கண்ணபிரான், ஆனந்தி, அம்பை சி.எஸ்.லட்சுமி என்று இந்தப் பட்டியல் நீளுகிறது. இவர்கள் அனைவரும் நம் நன்றிக்குரியவர்கள்.

    ஆனந்தவிகடன் குழுமத்துடன் சுமார் முப்பதாண்டுகளாகப் படைப்பாளியாகவும் ஊழியராகவும் மாறி மாறித் தொடர்ந்து உறவு கொள்ளும் மகிழ்ச்சியை எனக்கு சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் திரு.எஸ்.பாலசுப்பிரமணியன், திரு. பா.சீனிவாசன் ஆகியோருக்கும் சிறப்பாக ஓவியம் தீட்டிய நண்பர் ‘அரஸ்‘சுக்கும் என் நன்றி.

    அன்புடன்

    ஞாநி

    மும்பை

    ஜனவரி 2006

    ஒரு பின்குறிப்பு :

    நெருப்பு மலர்கள் முதல் பதிப்பை வெளியிட்ட விகடன் நிறுவனத்தின் நிர்வாகத்துடன் 2008 ஜனவரியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து என் உறவு முறிந்தது. என் நூல்களைப் பதிப்பிக்கும் உரிமையை நான் விகடனுக்கு ரத்து செய்தேன். எனவே இப்போது என் ஞானபாநு வெளியீடாக இது வந்துள்ளது. ‘நெருப்பு மலர்கள்’ தொடர் ‘அவள் விகடன்’ இதழில் வெளிவர முழுமுதற் காரணமாக இருந்த அதன் அன்றைய பொறுப்பாசிரியர் என் நன்றிக்குரிய நண்பர் ம.கா.சிவஞானமும் இப்போது அங்கில்லை. அவர் ‘மல்லிகை மகள்’ என்ற மகளிர் இதழாசிரியராக இப்போது உள்ளார்.

    சென்னை

    நவம்பர்-2010

    இந்த நூல்

    நம் கண் முன்னால் வாழும் முன்மாதிரிகளாக இருக்கும் என் மதிப்புக்குரிய தோழியர் பாப்பா (உமாநாத்), மைதிலி (சிவராமன்), வசந்திதேவி, கீதா (ராமகிருஷ்ணன்) ஆகியோருக்கு.

    1. ப்ரீதி

    பெண்கள் வன்முறையில் ஈடுபடுவார்களா?

    தாய்மை உணர்ச்சி மிகுந்த பெண்களால் அன்பு காட்டத்தான் முடியுமே தவிர, ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்கிவிட முடியாது என்பது பொதுவாக நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நம்பிக்கை.

    உண்மை என்னவென்றால், பெருவாரியான ஆண்களும் சரி, பெண்களும் சரி பொதுவாக வன்முறையில் இறங்க விரும்பாதவர்கள்தான். இரு பாலாரிலும் விதி விலக்காக வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.

    லட்சியத்தை சீக்கிரமாக அடைய வேண்டுமென்ற ஆர்வமும், நமக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ இழைக்கப்பட்ட தவறுக்குப் பொறுப்பானவர்களை தண்டித்தேயாகவேண்டும் என்ற உறுதியும், தங்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளவேண்டும் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும் பலரை வன்முறைக்கு இட்டுச் செல்கின்றன.

    சுதந்திரப் போராட்ட காலம் இந்த மூன்று உணர்ச்சிகளும் உச்சத்தில் இருந்த காலகட்டம். இந்த சூழல் கருத்தால் மட்டும் அல்ல, செயலிலும் நிஜமாகவே நெருப்பு மலர்களாகப் பல பெண்களை வார்த்தெடுத்தது. ப்ரீதி, கல்பனா, சாந்தி, சுனிதி, பினா, கல்யாணி, கமலா என்று இவர்கள் பட்டியல் நீளுகிறது.

    நம் பாடப் புத்தகங்களில் இவர்கள் பெயர்கள் இல்லை. வாள் எடுத்துப் போராடிய ராணி ஜான்சி, வேலு நாச்சியார் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் குறிப்புகள் உண்டு. ஏனென்றால் அப்படிப்பட்ட பெண்கள் ஏதோ ரொம்ப காலத்துக்கு முன்னால் இருந்தவர்கள். அவர்களைப் பற்றிப் படித்தால் ஆபத்தில்லை. நம் சம காலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்குள் இருந்த ப்ரீதி, பினா, கல்பனா பற்றியெல்லாம் படிக்கச் செய்வது ஆபத்து. இன்றைய இளைஞர்களை அவர்கள் பாதித்துவிடுவார்கள் என்ற பயம் சிலபஸ் தயாரிப்பவர்களுக்கு இருக்கிறது.

    ப்ரீதிதான் நமது துணை கண்டத்தின் முதல் ‘சயனைட்’ பெண்.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆயுதம் தாங்கிய புரட்சி, போராட்டம் என்றாலே முதல் இரண்டு இடங்களில் நின்றவை வங்காளமும் பஞ்சாபும்தான். ப்ரீதி வங்காளப் பெண். முழுப் பெயர் ப்ரீதிலதா வடேதார். இப்போது வங்க தேசத்தில் இருக்கும் சிட்டகாங்கில் ப்ரீதி 1911ல் பிறந்தாள்.

    ப்ரீதியின் அப்பா உள்ளூர் முனிசிபல் ஆபீசில் குமாஸ்தாவாக இருந்தார். மிகவும் ஒழுக்கமானவர். அப்பா, அம்மா, இருவரிடமிருந்தும் ஒழுக்கம், நேர்மை போன்ற குணங்களை ப்ரீதி கற்றுக் கொண்டாள். அது மட்டுமல்ல. அவர்கள் வீட்டில் சுதேசிப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

    ப்ரீதி மிகவும் அமைதியான பெண். மிகவும் புத்திசாலியான பெண். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தின் ஹானர்ஸ் பட்டம் பெற்றாள். ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் தினமும் டயரி எழுதும் பழகம் அவளுக்கு இருந்தது.

    ஓயாமல் படிக்கும் பழக்கம் உள்ள ப்ரீதிக்குப் பிடித்தமான நாவலாசிரியர்கள் சரத் சந்திரரும் பங்கிம்சந்திரரும் . இருவரின் படைப்புகளும் அன்றைய இளைஞர்கள் மத்தியில் லட்சிய வேகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இவர்களைப் போல நாமும் வாழ வேண்டுமென்று ஏங்கும் அளவுக்கு இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் இருந்தன.

    ப்ரீதி மாணவிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தாள். சாத்ரி சங்கா என்ற இந்த அமைப்பில் எல்லாருக்கும் சிலம்பமும் வாள் வீச்சும் கற்றுத் தரப்பட்டது.

    வீட்டில் இருந்து கொண்டு புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று அப்போது இளைஞர்கள் பலரும் கருதினார்கள். ப்ரீதியும் ஒரு விடுதியில் சேர்ந்தாள். அந்த விடுதியை நடத்தி வந்த குடும்பமே புரட்சிகர வேலைகளில் ஈடுபட்டிருந்தது. சகோதரிகள் பினா, கல்யாணி, அவர்களுடைய அம்மா, அப்பா எல்லாருமே யுகந்தர் கட்சி என்ற புரட்சிகரக் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். விடுதி ஸ்டோர் ரூமிலேயே வெடி குண்டுகளை ஒளித்து வைத்திருப்பார்கள்.

    வெளி உலகத்தைப் பொறுத்த மட்டில் ப்ரீதி மிகவும் அமைதியான பெண். படிப்பை முடிக்கிற சமயத்தில் அவளுடைய அப்பாவுக்கு வேலை பறி போயிற்று. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ப்ரீதியுடையதாகியது. அவள் ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக வேலையில் சேர்ந்தாள்.

    அப்போது மேற்கு வங்கப் புரட்சியாளர்கள் மாஸ்டர் சூர்யா சென்னின் தலைமையில் நடத்தி வந்த தாக்குதல்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மிகப் பெரிய மிரட்டலாக இருந்தன. சிட்டகாங் ஆயுதக்கிடங்கை தாக்கியதில் தொடங்கி, அரசு அலுவலகங்களில் வெடிகுண்டுகள் வைப்பது, அராஜகமான அதிகாரிகளை சுட்டுக் கொல்வது என்று புரட்சியாளர்கள் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். யாரேனும் கைதானாலும், கடும் சித்ரவதையை தாங்கிக் கொண்டார்களே ஒழிய ஒருவரும் இன்னொருத்தரைக் காட்டிக் கொடுக்கவில்லை.

    இந்த சூழலில்தான் ப்ரீதியும் அவளுடைய கல்லூரித் தோழி கல்பனாவும் புரட்சி¢ இயக்கத்தில் இணைந்திருந்தார்கள். அப்போதெல்லாம் புரட்சிகர இயக்கத்தில் பெண்களை சேர்த்துக் கொள்வதில் பெரும் தயக்கம் இருந்தது.

    புரட்சிகர அமைப்புக்கு வரும் ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது. பெண்களுடன் பழகக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காந்தியவாதிகளும் பிரும்மச்சரிய விரதத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1