Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaniyarai
Thaniyarai
Thaniyarai
Ebook130 pages47 minutes

Thaniyarai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

PUTHIYAMAADHAVI is the pen name of Mallika, who began to write in 2000. She has a Post Graduate Degree from Madurai University and has also done Certificate Courses in Feminism and social Service. She lives in Mumbai. She is the Fourth Generation of Mumbai Tamil Community. Her house has become the Central place for Tamil Literarty activities in Mumbai.

Pudhiyamaadhavi worked in HSBC for 22 years and took VRS in 2004 to concentrate on her writing, reading and other social activities. She is a prolific writer and has published 15 books so far, which includes six collection of poems, four short stories collections and five non-fixtion. Her poems ans stories have received appreciation and recognition. In 2006, she won the SHIRPI AWARD for her poetry collection "NIZHALKALAI THEDI" . Her short story collection "PEN VAZHIPADU" got writer JAYANTHAN AWARD. EZHUTHTHU trust selected her collection of poems "MOUNATHTHIN PILIRAL" and publised in 2015.

Puthiyamaadhavi's stories and poems have been translated into Malayalam and German Language. She has translated collection of poems of other Indian languages into Tamil and published with title "KATHAVUKAL THIRAKKUM VANAM".

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580117302602
Thaniyarai

Read more from Puthiyamaadhavi

Related to Thaniyarai

Related ebooks

Reviews for Thaniyarai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaniyarai - Puthiyamaadhavi

    http://www.pustaka.co.in

    தனியறை

    Thaniyarai

    Author:

    புதியமாதவி

    Puthiyamaadhavi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/puthiyamaadhavi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என் தனியறையிலிருந்து...

    தனியறை - 1

    தனியறை - 2

    தனியறை - 3

    தனியறை - 4

    தனியறை - 5

    தனியறை - 6

    தனியறை - 7

    தனியறை - 8

    தனியறை - 9

    தனியறை - 10

    தனியறை - 11

    தனியறை - 12

    தனியறை - 13

    தனியறை - 14

    தனியறை - 15

    தனியறை - 16

    தனியறை - 17

    தனியறை - 18

    தனியறை - 19

    தனியறை - 20

    தனியறை - 21

    தனியறை - 22

    தனியறை - 23

    தனியறை - 24

    தனியறை - 25

    தனியறை - 26

    "தனியறை போராட்டத்தில்-

    உலக வரைபடத்தில்

    புள்ளிகளாக சிதறிக்கிடக்கும்

    என் உடன்பிறப்புகளுக்கு...'

    என் தனியறையிலிருந்து...

    தனியறை-

    பிரபஞ்சத்திற்கு சூரிய மண்டலம் தனியறை

    சூரிய மண்டலத்திற்கு பூமி உருண்டை தனியறை

    பூமி உருண்டைக்குப் பணித்துளிகூடத் தனியறை

    ஆகாயத்திற்கு மேகக்கூட்டம் தனியறை

    மேகங்களுக்கு மலைமுகடு தனியறை

    மலைக்கெல்லாம் மழைத்துளியே தனியறை

    மழைத்துளிக்குக் கடலடியில் தனியறை

    கடலுக்கு அலையெல்லாம் தனியறை

    அலைக்கு மண்மீது தனியறை

    மண்ணுக்கு உயிரெல்லாம் தனியறை

    உயிருக்குத் தாயின் கருவறையில் தனியறை

    மண்ணில் பிறந்து

    வளர்ந்து

    வாழும் நாட்கள்

    அவரவர்களுக்கான

    தனியறைக் கதவுகளைத் தேடித் தேடி

    தொடர்கிறது வாழ்க்கை.

    தனியறைகள் தேடும் போராட்டத்தில்

    தனித்தனியாகப் பிரிந்துடோன

    அண்ணன் தம்பிகள்

    அக்கா - தங்கைகள்

    கணவன் –மனைவி

    பெற்றோர் - பிள்ளைகள்

    உடைந்துபோன கண்ணாடித் துண்டுகளாய்

    தனியறைக் கதவுகளின் முன்னால்

    சிதறிப்போன உறவுகள் -

    பேரரசுகள் -

    அரசியல் கட்சிகள் -

    இயக்கங்கள் -

    வரலாறு நெடுகிலும் உண்டு

    காதல் பாசம்,

    அதிகாரம், ஆளுமை,

    இவற்றை மட்டுமல்ல...

    மனித நாகரிகத்தில்

    பண்பாட்டு மாற்றங்களையும்

    சிதைவுகளையும்

    தனியறையின் கதவுகள்

    தீர்மானிக்கின்றன.

    சிந்திக்க சிந்திக்க...

    கண்களை அகல விரித்து

    ஆகாயத்தைப் பார்த்து பிரமித்து நிற்கும்

    சிறுமியாக நான்...

    தனியறை ஒரு பிரபஞ்சமாக விரிகிறது.

    இந்தப் பிரபஞ்சத்தில்

    நான் எழுதியது

    என்னை நனைத்த

    இந்த மாநகர மழைத்துளியின்

    ஒரு சிறுதுளியைத்தான்.

    அன்புடன்,

    புதிய மாதவி,

    மும்பை.

    முகவரி

    505, HEMA PARK TOWER

    BHANDUP (EAST)

    MUMBAI 400042: Tel : 022-25912414

    email: puthiyamaadhavi@hotmail.com

    தனியறை - 1

    இந்த மனுசனுக்கு வர வர புத்தி கெட்டுப் போச்சு... இல்லாட்டா இப்படி நான் வாங்க, நேரமாகுது, கிளம்புங்க சீக்கிரம்னு பலவிதமாகச் சொன்னபிறகும் சோபாவை விட்டு எழுந்திருக்காமா டி.வி.யும் ரிமோட்டுமா உட்கார்ந்திருக்குமா? அதுகளும் புதுசா கல்யாணம் ஆனதுகள். இந்த ஒன் ரூம் கிட்சன் ஃப்ளாட்டில் டி.வி. பாக்க றேன்னுட்டு இப்படி ராத்திரி 11 மணி வரைக்கும் சோபாவை விட்டு எழுந்திருக்காம டி.வி.யும் ரிமோட்டுமா உட்காந்திருக்குமா?

    அந்தப் பொண்ணுதான் என்ன நிணச்சுப்பா? ஏன்தான் வர வர இந்த மனுசனுக்கு எதுவுமே சட்டுனு புரியமாட்டேங்குதோ, சோபாவில் உட்கார்ந்திருக்கும் சண்முகத்தைப் பார்த்து தவமணி முறைத்துக் கொண் டிருந்தாள்.

    டி.வி.யில் கிரிக்கெட் ஒன் டே மேட்ச் டே அன் நைட் ஓடிக் கொண்டிருந்தது. ராகுல் கடைசிப் பையன். அவன் விருப்பப்படி பஞ்சாபிக்காரியை லவ் பண்ணித் திருமணம் செய்து கொண் டான். அந்தத் திருமணத்திற்கு வந்து பெற்றோர்களாக கலந்து கொண் டதன் மூலமே தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற கடைசி நிலைமையில்தான் சண்முகமும் தவமணியும் திருமணத்தில் வந்து கலந்து கொண்டார்கள்.

    ராகுலுக்கு ஏற்ற மாதிரி நல்ல 6 அடி உயரம், நீண்ட மூக்கு, திடகாத்திரமான உடல்வாகு, தோள்பட்டை வரை சீராக வெட்டி விடப்பட்டிருக்கும் தலைமுடி என்று எல்லா வகையிலும் அந்தப் பெண் ராகுலுக்குப் பொருத்தமாகவே இருந்தாள். இருந்தாலும் அவளைக் கண்டாலே பிடிக்கவில்லை தவமணிக்கு. பெரியவர்கள் சிறியவர்கள் என்று மதிப்பு மரியாதை எல்லாம் அவளிடமில்லை. மாமனாருக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பாள். சில சமயங்களில் மாமனாருக்கும் ராகுலுக்கும் நடுவில் வந்து இருவரையும் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். இதெல்லாம்கூடப் பரவாயில்லை, இரவு 8 மணிக்குப் பின் ஒரு டு ஃபீஸ் நைட்டியை மாட்டிக் கொண்டு வந்து நிற்கும்போது அவளை நிமிர்ந்து பார்க்க தவமணியால் முடியாது. மெல்லிய காட்டனில் பூப்போட்ட டுஃபீஸ் நைட்டி, பல நேரங்களில் மேல் சட்டையில் கழுத்துப் பகுதி முன்பக்கமாக கீழிறங்கி ரொம்பவே இறுக்கம் தளர்த்து துள்ளும்.

    டி.வி.யில் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது நல்லவேளை அவள் அந்த மாதிரி டூஃபீஸில் இருக்கவில்லை. ஆனால் கை இல்லாத ஸ்லீவ்லஸ் நைட்டியில் இருந்தாள். அவள் கைகள்கூட ரொம்பவே கவர்ச்சியாக இருப்பதாகத் தோன்றியது தவமணிக்கு. மாமனார் சோபாவில், அவருக்கு மிக அருகில் ராகுல். ராகுலின் முழங்கால்களில் தலையை வைத்து சாய்ந்து கொண்டு தரையில் கால்நீட்டி அவள்...

    ஊரில் தன் மற்ற இரண்டு மருமக்களையும் நினைத்துப் பார்த்தாள். இரண்டு பேருமே நல்ல வசதியான வீட்டுப் பெண்கள்தான். படித்து வேலைக்குப் போகிறவர்கள்தான். இப்படி எல்லாம் அவர்கள் மாமனார், மாமியார் முன்னிலையில் நடந்து கொள்வதில்லை. அவளுக்குத்தான் தெரியாது என்றே வைத்துக் கொண்டாலும் இந்தப் பயல் ராகுலுக்கு என்ன தெரியாது... சேருறதுகள் கூடச் சேர்ந்தா இப்படித்தான்.

    அவர்கள் இருக்கும் வீட்டில் தூங்குவதற்கு வசதிப்படாது என்பதால் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் அவர்களின் இரண்டாவது மருமகளின் அக்கா வீட்டில் போய் இருவரும் இரவு படுப்பதற்கு ஏற்பாடு செய்துகொண்டார்கள். ராகுலுக்குத் திருமணமாகி ஒரு வாரத்திற்கு மேலாகிறது. சீசன் டைம் என்பதால் டிக்கெட் கிடைக்காமல் இங்கே இன்னும் ஒரு வாரம் இருக்க வேண்டி வந்துவிட்டது.

    ஊரில் முதல் மகனுக்குத் திருமணம் ஆனவுடன் மாடி அறையை அவனுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்துவிட்டார்கள். அதன் பின் இன்றுவரை மாடி ஏறி அந்த ரூமைக்கூட தவமணி பார்த்ததில்லை. அடுத்தவனுக்குத் திருமணம் ஆனவுடன் முன்பக்கமிருக்கும் ரூமை கொஞ்சம் மாற்றி அமைத்து அவனுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்துவிட்டு பின்பக்கமாக அடுக்களைப் பக்கத்திலிருக்கும் சின்ன ரூமில் தவமணியும் சண்முகமும் இருக்க ஆரம்பித்தார்கள். புதுசா கல்யாணம் ஆனதுகள் அப்படி இப்படி இருக்குங்கள். இதில் நமக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1