Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nerukkamana Idaiveli
Nerukkamana Idaiveli
Nerukkamana Idaiveli
Ebook194 pages1 hour

Nerukkamana Idaiveli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தும் சித்திரமும் விட்டல்ராவுக்குக் கைவந்த கலைகள். இவர் நிறைய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

சித்திரக் காட்சிகளில் இவருடைய ஓவியங்கள் பாராட்டுப் பெற்றுள்ளன. எழுத்தில் இவருக்குள்ள தாகம்தான் வெற்றி பெற்றது. தூரிகையின் லாவகம் எழுத்தில் சங்கமித்து விட்டது.

1941-இல் ஓசூரில் பிறந்த இவர், 1967 முதல் எழுதி வருகிறார். இவருடைய 'போக்கிடம்' நாவலுக்கு இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கியது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121502428
Nerukkamana Idaiveli

Read more from Vittal Rao

Related to Nerukkamana Idaiveli

Related ebooks

Reviews for Nerukkamana Idaiveli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nerukkamana Idaiveli - Vittal Rao

    http://www.pustaka.co.in

    நெருக்கமான இடைவெளி

    Nerukkamana Idaiveli

    Author:

    விட்டல் ராவ்

    Vittal Rao

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vittal-rao

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நெருக்கமான இடைவெளி

    2. மரி சுவாமிகள்

    3. நிவாரணம்

    4. தயவு

    5. பன்றி

    6. அவர் நினைவாக

    7. தேடல்

    8. விரிசல்

    9. நாக கன்னிகை

    10. தீர்ந்தது

    11. நான் சிரெகட்டை நிறுத்திய நாள்

    12. அசைக்க முடியாத மனிதன்!

    13. பாத்திரம்

    14. கொடும்பாவி

    15. நாகூர் ஆடு

    16. தாக்குதல்

    முன்னுரை

    கபிலர் ரெம்ப காலத்திற்கு முன்பு ஒரு கதை எழுதியிருந்தார். எதிரிகள் படையெடுத்து ஒரு ராஜாவின் நாட்டிற்கு வந்தார்கள். பெரிய படை-குதிரைகள் ஏராளம். சண்டை நடந்தது. ஜெயித்தது யார் என்பதெல்லாம் இருக்க, எதிரிப்படைகள் வரும்போது, அந்த ராஜாவின் பிள்ளைகள் கோட்டை மீது ஏறிக் குதிரைகளை எண்ணிப் பார்த்தது பற்றிக் குறிப்பிட்டு முடித்து விடுகிறர்.

    பின்னர் நாம் செகாவ் கதை படித்தோம். ஜார்ஜ் ஸ்டிவன்சனின் திரைப்படங்கள் பார்த்தோம். நமக்கு ரெம்ப மகிழ்ச்சியாக விருந்தது. கபிலர் என்ற படைப்பாளி கதை எழுதினர் என்று நம்மிடையே சொல்லி விடுதல் அத்தனை சாதாரண விஷயமல்ல. பாடல் அல்லவா பாடினர் என்பார்கள் நமது ஆசிரியர்கள். தலை கீழாகத் தொங்க விட்டு உதைப்பார்கள். கதையைப் படிக்கும் மகிழ்ச்சியில் எதையும் தாங்கிக் கொள்ளலாம், குதிரைகளை எண்ணிப் பார்த்த கதையைக் குழந்தைத்தனமானது என்றெண்ணுமல் கண்டறியாதை கண்டோம் என்று மகிழத் தொடங்கி விடுகிறோம். நாம் மகிழவில்லை-மகிழ்ச்சியாக நாம் ஆகிவிடுகிறோம். குழந்தையின் புகைப்படமாக விருந்தால் வேறு விஷயம், இது குழந்தைத்தனத்தின் படம். குறைந்தது ஒரு கணத்திலோ அதற்கும் குறைந்த நேரத்திலோ, கதையைக் கூட மறந்துவிடுகிறோம். கதை மறந்தாலும் அந்தக் கனல் தங்குகிறது. கஞ்சியோ, கூழோ இருப்பது போதும் என்ற தொடர், இப்படைப்பிலக்கியம் பற்றிக் குறிப்பிடும்போது, நினைவிற்கு வருகிறது. அவைகள்-கஞ்சியும் கூழும்-சத்துள்ளவைகளாகவும் இருப்பது இன்னொரு விசேடம்.

    அரை நூற்றாண்டாகப் பலர் தங்கள் சட்டைப் பையில் புதுமைப்பித்தனை வைத்துக் கொண்டிருப்பது போலவும், இன்னும் பலர் அவரது ஆவியாக எழுதியும், தங்களைத் தாங்களே வீணடித்துக் கொண்டதைக் கண்டிருக்கிறோம். ஒரு சகாப்தமாகப் புதுமைப்பித்தன்தான் நின்று நிலைக்க முடிந்தது. வேறு எதையும் காணவில்லை.

    ஆனால் பரிச்சயங்களும் கிடைக்கிற அனுபவங்களும் நம்முடன் ஒட்டுகின்றன. அவை-மகாத்மா காந்தியாக விருந்தாலும் சரி,குப்பைமேனிக் கீரையாக விருந்தாலும் சரி-நமக்கே சொந்தம். மொழிகள் ஏற்படுவதற்கு முன்பே அவை அஸ்திவாரம் பெற்று விட்டன. மனித பலகீனத்தையும் பலத்தையும் கனவுகளையும் சேர்த்துக் கூறும் கதைகள், எழுத்தே இல்லாத மொழிகளிலும் வழங்கப்பெறும். உலகக் கணக்கு வழக்குகளிலோ, நாடுகளின் எல்லைக் கோடுகளிலோ நம்பிக்கையில்லாத சுதந்திரமான உணர்வுகள் அவை. ஒருவனேப் பொறுத்ததாக இல்லாமலிருப்பதோடு, பார்வை என்பது எந்த விஷயத்தையும் பற்றியிராதவை. பற்றியிருந்தால் வேறு வழியில்லாத காரணத்தால் பயன் படுத்தப்பட்டிருக்கும்-வழிகள் மாறும். படைப்பின் வெளிப்பாடில் தனது உலக பந்தங்களைப் பற்றியெல்லாம் ஒருவன் எழுதலாம். அது படைப்பாளிக்கும் உலக வாழ்விற்குமாக இருக்கிற ஒரு பாதையாகவே இருக்கும். அந்த வேலை மகத்தானது. ஏனெனில் நாமெல்லாம் நமது உலக பந்தங்களுடன் மிகவும் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறோம் இதற்கு எல்லாவிதக் காட்சிகளும் சார்புடையவைதாம்

    மேநாட்டுக் கலைகள், திரைப்படங்கள், புத்தகள், அன்றாடம் நாம் சுமந்து திரியும் நாகரிகப் போக்குகள்- இவைகள் யாவற்றையும் அறிவு பூர்வமாகக் கொண்டிருந்தும், அவைகளை இலக்கிய ரீதியாகத் தள்ளி விட்டவர் எத்தனை பேர்? தமிழ் வார-மாத இதழ்களில் வருகின்ற கதைகளில், எத்தனை சுய பார்வையோடு அநுபவத் திறனைக் கொண்டிருக்கின்றன? விஷயமே பார்வையாகிற அளவிற்குப் போய்விட்ட பின்னர், நாற்றமே சகித்துக் கொள்ளக்கூடிய வாசனேயாகி விடுவது நடக்கக்கூடிய காரியம்தான்.

    திரு. விட்டல் ராவ் மேற்சொன்ன மேநாடு சம்பந்தப்பட்ட இலக்கியம், கலை, திரைப்படம் ஆகியவற்றில் மிக்க ஆர்வமுடையவர் என்றாலும், நுணுக்கமான விஷயங்களை விளக்கமாக எழுதுகையில் அவர் கதைகளில் ஆங்காங்கே வந்துபோகும். அறிவு பூர்வமான சங்கதிகள்-ஆங்கில உரையாடல்-அவர் கற்ற கல்வி படுத்துகிற பாடு-இவற்றிடையே ஒரு முழுமை கிடைப்பது விசேடம். விளக்கங்கள் கதையாகிவிடாது என்பது ராமாயணம் படிக்கிறபோதே தெரிந்திருக்க வேண்டிய விஷயம். அவ்வாறே இவரது பல கதைகளிலும் ஒரு கண முழுமை எப்படியும் கிடைத்து விடுகிறது. அப்படிப் பட்ட ஒரு கண சமாச்சாரத்தைவிட சிறு கதையின் இலக்கணங்கள் பெரிதாகி விடவில்லை. அந்தக் கணம்தான் சிறு கதை என்பதை நாம் அறிகிறோம். சொல்லப் போனால் எந்தக் கலைக்குமே முழுமையான இலக்கணத்தைச் சுட்டிக்காட்டிவிட முடியாது என்பதும் தெரிகிறது.

    ஒரு கண முழுமை என்பது கவிதையல்லவா என்று கேட்கலாம். கவிதையல்லாத நல்ல சிறுகதை உண்டா என்றுதான் திருப்பிக் கேட்க முடியும். இத்தனைக்கும் இந்த ஆசிரியரின் நடையில் கவித்துவம் இல்லை-வெறும் வசனம்தான்.

    ‘தேடல்’ என்ற சிறுகதை, சாக்கடையில் பொன் துகளைத் தேடுபவனைப் பற்றியது. அவனது அசைக்க முடியாத நம்பிக்கை-சில சமயங்களில் ஆசிரியரையும் மிஞ்சி வெளியாகி விடுகிற அவனது தொழில் பந்தம்-இவைகள் கதையம் சத்தைத் தூக்கி வைக்கின்றன. பாதி வேலை நடந்து கொண்டிருக்கையில், வேகமாக வந்து கொண்டிருந்த சைக்கிள் காரனைப் பார்த்து, ‘மணி யென்னங்க?’ என்று கேட்கிறான். கேள்வியும் பதிலும் அவசியமில்லாத வரிகளோ என்ற சந்தேகமோ சிந்தனையோ எழாது. தேடுகிறவன் அடுத்த நாளும் வந்து தேடப் போகிறான்-அதுவும் நிச்சிந்தையாக, தேடல் ஒரு சிறந்த கதை.

    கதை எங்கு முடிய வேண்டுமோ, அங்கு முடிந்துவிட வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆசிரியரின் பல கதைகளில்-அவரது பழைய கதைகளில் கூட-இந்நிலையை நாம் பார்க்க முடிகிறது.

    விட்டல்ராவ் நிறையவே எழுதியுள்ளார். அவரது ஆரம்ப காலச் சிறுகதைகளையும் பின்னர் வெளி வந்தவைகளையும் படித்தால் பதினைந்து வருட காலத்தில் அவர் ஒன்றும் மாறி விடவில்லை என்று சொல்ல இயலும். நாவல்களையும் எழுதியுள்ளார். நிறையவே எழுதியுள்ளார். தனது முதல் நாவல் ஒரு தோல்வி என்று அவரே கூற முடிந்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் அவர் தம் திண்மை, சிறு கதைகளிலேதான் தெளிவாக வருகிறது என்பது என் எண்ணம். மனித பலவீனமும், ஆக்ரோஷமும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவரது ஆரம்ப காலச் சிறுகதைகளிலும் இதைப் பார்க்க முடியும். நெருக்கமான இடைவெளி என்ற கதை பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்தவொன்று.

    திருப்தியாக கண்ணீரைச் சிந்தினாள் என்ற அந்தக் கதை முடிவில் வரும் வரிகளிலும் மேற்சொன்ன ஆக்ரோஷத்தைக் கண்டு கொள்ள முடியும்.

    ஆக்ரோஷமும் அமைதியும் எல்லாவற்றிலும் உண்டு. சீறுதல்-காறித் துப்பல்-இகழ்ச்சி இவைகளெல்லாம் ஏற்றுக்கொள்ளுதல்-மறுத்து விடுதல் போன்ற இரண்டிற்குமான சங்கதிகளாகையால், அரைத்த மாவையே அரைப்பது என்றெல்லாம் விமரிசனம் செய்து, தீர்மானங் கண்டு விடுகிற சமாச்சாரம் இல்லை இவை

    அத்தனை சீக்கிரத்தில் மனிதன் வெற்றி கொள்ளப்பட முடியாதவன். கொடுமை உண்மையின் ஓர் அம்சம்தான் என்ற நிலையில் பாத்திரம், தீர்ந்தது, பன்றி, தாக்குதல் ஆகிய கதைகளின் நிர்வாணத்தனம் நம்மை அலைக்கழிக்கின்றன. பன்றி ஓர் உயர்தரமான கதை. ஆனால் அந்த மரி சுவாமிகள்கதையும் இவ்வாறே கொண்டு செல்லப்படுவது வியப்பானது. உண்மையில் அங்கதம் பரிபூரணமாக அமைந்திருக்க வேண்டிய வொன்றை ஆசிரியர் தம் போக்கிலேயே நடத்திச் செல்கிறார். சுவாமிகள் காதை முறுக்கி பள்ளிக்கூடத்திற்குப் போ என்று அனுப்பவும் மாட்டார். இந்தக் கொடுமையைப் பாருங்கள் என்று சொல்வதும் கிடையாது. நினைத்தால் ரொம்பவும் சங்கடமாகவிருகிறது. அவர் ரசனையோடு கூறுகிறார் ஊருடன் பகைத்தாலும் வேருடன் விழமாட்டேன் என்கிறர். இதே நிலை ‘கொடும்பாவி’ என்ற கதைக்கும்.

    சுவாமிகள் இப்படியென்றால் சிகரெட்? சிகரெட்டை நிறுத்தவது என்பது நல்ல விஷயம். அறிவு பூர்வமான-நெறிமுறை சம்பந்தப்பட்ட விஷயம். கதையில் சிகரெட் சாகடிக்கப்படுகிறது. மனித பலவீனத்தைச் சகித்துக் கொள்ளாமலிருப்பது எடைபோட்டு சான்றிதழ் தர வேண்டிய விஷயமல்ல. பார்வையின் பின்னர் உள்ள காரியம் அத்தனை பெரியதுமல்ல. சகித்துக் கொள்வதும் உன்னதமான விஷயமல்ல. எத்தனை உலகங்கள் வெறுத்து ஒதுக்கப்படடுகின்றனவோ- அல்லது சீரணம் செய்யப்படுகின்றனவோ அத்தனை புத்துலகங்கள் தோன்றுகின்றன. சிகரெட் சின்ன விஷயமோ சுவாமிகள் பெரிய விஷயமோ அல்ல.

    ‘அவர் நினைவாக’ மாத்திரமே மேற்சொன்னபடியில்லாத மாறுதல் அம்சம் பெற்ற கதை. ரத்தினத்தைக் கந்தசாமி வரவேற்றுப் பேசுகிற சகஜ பாவம்-பிணமாகத்தானே நிற்பது போன்ற கந்தசாமியின் எண்ணம் ஆகியவைகள் இது ஒரு மாற்றமுள்ள கதை என்று காட்டுகின்றன. அவரது நல்ல கதைகளில் ஒன்றுங்கூட.

    நாகூர் ஆடு ஒரு குறு நா வ ல் என்று சொல்ல வேண்டும். நிலைக் களன்கள் தயார்ப்படுத்திக் கொண்டு தங்களது சம்பவ வேட்டைக்காக அலைகின்றன.

    பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட நிலை போல, திரு. விட்டல்ராவ் இனியொரு சலிப்படைந்த அறிவுலகத்திற்குச் செல்லும் அபாயமும் ஏற்படலாம். காட்சி மூலமாக எழுந்த கனல்கள் அவரிடமிருந்து விடுபடும் நிலையும் ஏற்படலாம். ஆனால் வாழ்வின் பரிச்சயம் பெற்ற ஒவ்வொருவரும் வாழ்வை அற்புதம் செய்கிற படைப்பு சக்தியை-நல்லது கெட்டது என்றோ, உயர்வு தாழ்வு என்றோ உன்னதம் அற்ற ரீதியிலே கொண்டு வந்து சபல புத்திக்கு இலக்காவது எத்தனை நஷ்டமான காரியம் என்பது அவரது பல படைப்புகளில் நமக்குத் தோன்றி மறைகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை வெல்ல வேண்டியது படைப்புலகிற்கு அவசியம் என்று சொல்ல ஒரு திராணியும் கிடைக்கிறது.

    திரும்பவும் சொல்லத் தோன்றுகிறது. கொடுமைகளைப் பல கோணங்களில் சந்தித்துத் தவித்க் ஓர் உயிர்-கொடுமை உட்பட எல்லாவற்றிலும் அழகுணர்வைப் பார்க்கிற ஒரு நிலை-இவை விட்டல்ராவின் எழுத்தில் காணப் பெறுபவை.

    -அரங்கநாதன்

    1. நெருக்கமான இடைவெளி

    அன்றென்னவோ தெரியவில்லை, ரொம்ப நேரமாகி விட்டது ஒரே பதற்றம் பாப்பாவுக்கு.

    சீக்கிரம் நட, என்று சீறியபடி கயிற்றை இரண்டாக மடித்து ஒரு விளாசு விளாசினுள். அந்தப் பெரிய கருப்பு எருமைகள் தமக்கே உரிய மதமதப்போடு நடந்தன. இரண்டு நிமிடத்திற்கொரு முறையிருக்கும், எதிரில் வருபவர்களிடம், இன்னுப்பா மணி என்று கேட்டுக் கொண்டாள்,

    நேரமாயிடுச்சே... அவள் ஓடாமல் நடந்தாள்.

    இப்போதுதான் செயிண்ட் தெரஸா ஸ்கூலைத் தாண்டியிருந்தாள். ஒரு வழியாக அதையும் கடந்து ஜி. எஸ். டி. ரோடில் நடந்தாள். கவுல் பஜார் ரோடிலிருந்து திரும்பிய பெரிய மிலிடெரி லாரி ஒன்றின் இரைச்சலால் புத்துணர்ச்சி பெற்ற அவளுடைய எருமைகள் திசை தெரியாது நடு ரோடிலேயே ஒடத் தொடங்கின. மிலிடெரி லாரியில் அடைபட்டிருந்த சர்தார்ஜி சிப்பாய்கள் இதைக் கண்டு அனுபவித்துக் கேலி செய்தபடி பாப்பாவையே

    Enjoying the preview?
    Page 1 of 1