Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagasa Thoothu
Aagasa Thoothu
Aagasa Thoothu
Ebook386 pages3 hours

Aagasa Thoothu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105702611
Aagasa Thoothu

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Aagasa Thoothu

Related ebooks

Reviews for Aagasa Thoothu

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    What an excellent story charactors of people bhakthi desapatru author has simply took me to
    another world while reading no word in the dictionary

Book preview

Aagasa Thoothu - Vidya Subramaniam

https://www.pustaka.co.in

ஆகாசத்தூது

Aagasa Thoothu

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

ஆகாசத்தூது

ஜெ. ராம்மோகன்

(இப்புதினத்தில் வரும் திரு ஜெயராமனின் மகன்)

MRF Ltd, சென்னை.

வணக்கம்

ஸ்ரீமதி வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய ஆகாசத்தூது புதினத்தில் வரும் திரு வேணுகோபால் எனது தந்தைவழி தாத்தா ஆவார்.. திரு மாரீஸ் ஃபரீட்மன் பற்றிய எனது மலரும் நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்

ரமண மகரிஷியின் சீடரான திரு மாரீஸ் ஃபரீட்மன் அவர்களை 1971 ஆம் ஆண்டு எங்கள் குடும்பத்தினரோடு மும்பையில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். நாங்கள் சென்ற அன்று அவர் உபவாசம். எங்கள் அனைவருக்கும் தனது கையால் அன்போடு சாத்துக்குடி சாறு பிழிந்து கொடுத்தார்.

என் தாத்தா வேணுகோபாலய்யரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்ததோடு, வேணுவின் அடுத்த தலைமுறையினரான எங்களனைவரைப் பற்றியும் விசாரித்துவிட்டு குலுங்கி குலுங்கி அழுதார். அதை ஆனந்த கண்ணீர் என்றார். வேணு என்கிற ஆலமரம் பல விழுதுகளை விட்டுச் சென்றுள்ளது என்று நெகிழ்ந்தார்.

என் தாத்தா வேணுவைத் திருவண்ணாமலையில் முதன்முதலில் சந்தித்தது முதற்கொண்டு, அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு, அக்குடும்பத்துடன் தனக்கேற்பட்ட பிணைப்பு என அனைத்தையும் நினைவுகூர்ந்து கோர்வையாகப் பேசினார். வேணுவின் பேரப்பிள்ளைகளான எங்களிடம், நீங்கள் எல்லோரும் படிப்பில் கவனம் செலுத்தி நல்லநிலைக்கு வருவீர்கள் என்று ஆசீர்வதித்தார். கூட்டுக் குடும்பத்தால் விளையும் நன்மைகள், இந்துமதத்தின் சிறப்பு, அதன் மீதான ஆழ்ந்த நம்பிக்கை, பிள்ளைகளாகிய எங்களுடைய கடமைகள் என்ன என்பது பற்றியெல்லாம் பல விஷயங்களை அன்பொழுகப் பேசினார்.

எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி, எங்களது குடும்பத்திற்கு தக்க சமயத்தில் தான் செய்த உதவியை மற்றவர் யாருக்கும் கூறி விளம்பரப்படுத்திக் கொள்ளாத அவரது உயர்ந்த குணத்தை என்னவென்று சொல்ல? போலந்து நாட்டில் பிறந்திருந்தாலும், பணக்காராராக இருந்தாலும், மிக எளிமையாக, நேர்மையாக, யாரிடமும் பிரதிபலன் எதிர்பாராது அன்பு செலுத்தி, ஒழுக்கத்துடனும், உயர்வான எண்ணங்களோடும் வாழ்ந்த பிரம்மச்சாரி. சிறந்த காந்தியவாதி. நினைத்த நேரத்தில் காந்தியோடு பேசுபவரும் கூட. யாரையும் இழிவு செய்யாது சாதி மதம் பாராது, உயர்வாக நடத்துவார். மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்.

இந்துமதக் கோட்பாடுகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். ரமண மகரிஷியிடம் மிகுந்த பக்தி கொண்டவர். சிதைந்து போக இருந்த ஒரு குடும்பத்தைத் தாங்கிப்பிடித்து அன்பெனும் நீரூற்றி ஆலமரமாகத் தழைக்கச் செய்தவர்.

"இன்று ஒரு பொன்னான நாள் என்று கூறி வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார். அன்று அவரோடு இருந்த சில மணித்துளிகள் இன்றளவும் என் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது. அவரது அன்பைப் பெற்ற நாங்கள் பாக்கியசாலிகள். பூர்வ புண்ணியம் நிறைந்தவர்கள்.

கதையின் நாயகனாகிய என் தாத்தா வேணுகோபாலய்யர் பற்றி கூறாவிட்டால் எப்படி?

அரக்கோணம், காஞ்சீபுரம் அருகே திருமால்பூர் என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றியவர். பிறகு வேலையை விட்டு விட்டார். மனைவியை இழந்த சோகத்தில் யாருடைய தயவும் கிடைக்காத நிலையில் பிள்ளைகளைப் பிரிந்து கஷ்டப்பட்டார். மறுமணத்தில் நாட்டம் கொள்ளவில்லை. ஏகபத்தினி விரதனாக உறுதியுடன் வாழ்ந்தார்.

நான்கு பிள்ளைகளின் திருமணத்தை முடித்து விட்டு, நால்வரது வீட்டிலும் அனுசரித்து வாழ்ந்தவர். யாரிடமும் எவ்வித எதிர்பார்ப்பும் கிடையாது. யாரைப் பற்றியும் குற்றம் குறை கூறமாட்டார். பேரக் குழந்தைகளைப் பாட்டு பாடி தூங்க வைப்பார். குழந்தைகளுக்கு நந்தனார் சரிதம், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளை உணவு நேரத்திலும், மாலை நேரத்திலும், இரவு உறங்கும் போதும் சுவை குன்றாமல் சொல்லுவார். கர்னாடக சங்கீதம், கிரிக்கெட், பிடிக்கும். பழைய படங்களை விரும்பிப் பார்ப்பார்

ஒரு போஸ்ட் கார்டில் எல்லோருக்கும் குடும்ப விவரங்களை முத்து முத்தான கையெழுத்தில் எழுதி தானே போஸ்ட் செய்துவிட்டு வருவார். மருமகளின் அந்த மூன்று நாட்களில் அவரே உணவு சமைத்து அனைவருக்கும் பொறுமையாகப் பரிமாறுவார். குழந்தைகள் ரசம் கேட்டால் மேலாக இருக்கும் தெளிவையும், சாம்பார் கேட்டால் கலக்கியும் விட்டு சமாளிப்பார்.

அவர் இறந்த அன்று அவரது பெட்டியில் இருந்தது ரூ.85/- மட்டுமே. முழு நிறைவோடு எவ்வித மனக்குறையுமின்றி தன் வாழ்கையை வாழ்ந்துமுடித்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

வேணுகோபாலய்யர் என்ற ஆலமரம் விட்டுச்சென்ற விழுகளில் நானும் ஒன்று என்பதில் நான் மிகவும் பெருமையுறுகிறேன்.

கீழாம்பூர் எஸ். சங்கரசுப்ரமணியன்

ஆசிரியர் – கலைமகள்

அணிந்துரை

1980-களில் எழுத ஆரம்பித்த ஸ்ரீமதி வித்யா சுப்பிரமணியம் பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர். விஷயங்களைச் சரியாக உள் வாங்கிக் கொண்டு பின்னர் ஒழுங்குபடுத்தி கதைகளையோ நாவல்களையோ எழுதுவதில் வல்லவர். கற்பனையோடு நிஜத்தைச் சொல்வதில் கெட்டிக்காரர் என்பதற்கு இந்த ஆகாசத் தூது சாட்சி சொல்கிறது!

நீ உன்னையறி.

உலக வினை தன்னாலே நடக்கும்.

நடத்துவோன் நடத்துகிறான்.

நீ சாட்சியாக இரு

நான் என்று எதிலும் கிளம்பாதே.

இது ஒரு ரமணதத்துவம்

இந்த ரமண தத்துவத்திற்கு விடை காணுகிறது ஸ்ரீமதி வித்யா சுப்பிரமணியத்தின் ஆகாசத்தூது என்று கூடச் சொல்லலாம்.

‘பெரியவர்களுக்கு நீ செய்யும் உதவி முன்னோர்களுக்கு நீ செய்யும் ஈமக் கடன் இவைகள் உன்னை உயர்த்தும்! இப்படி ஒரு ரிக்வேத மந்திரம் சொல்கிறது. நாம் பித்ருகளுக்குச் செய்யும் காரியங்கள் மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கக் கூடியவை இல்லை. மாறாக அவர்கள் நினைவாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பம் என்பதை நாம் உணரவேண்டும்.

ஆகாசத்தூது நாவலைப் படிக்கும் போது இனம் மதம் கடந்து சில விஷயங்கள் நம் மனசுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனிதம் என்ற சொல்லுக்கும் நன்றி என்ற சொல்லுக்கும் இந்த நாவலில் விடை கண்டுள்ளார் எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம். நாவலில் வரும் சில கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் நம்மை நிஜவாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க தூண்டுகின்றன என்றால் அது மிகையல்ல!

வாழ்க்கையின் யதார்த்தப் போக்கிலே நிதசர்னமான சம்பவங்களோடு கதையைப் பின்னியிருக்கும் விதம் அழகானது.

இந்த நாவலில் வேணு என்ற கதாபாத்திரம் ஏகபத்னி விரதத்தைக் கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்ற வைராக்யத்துடன் வாழ்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளைப் படிக்கும்போது கண்ணில் நீர் அரும்பு கட்டுகிறது. கிராமத்துச் சூழ்நிலை, உதவி என்று வரும் போது நழுவும் தன்மை கொண்ட மக்கள் இவர்களைத் தன் வார்த்தைகளால் நன்றாக வருணித்துள்ளார் கதாசிரியர். வேணு திருவண்ணாமலைக்குள் நுழையும் போது நாவலும் ஆன்மிகத்திற்குள் நுழைந்து விடுகிறது. ரமண மகரிஷியின் அருமை பெருமைகளைத் திறம்பட எழுதியுள்ளார் கதாசிரியர்

இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் புராண இதிகாசப் பாத்திரங்களோடு ஒப்பிடலாம். வேணுவின் வீட்டு சொந்தக்காரர் சம்புவையரை ஹரிச்சந்திர புராணத்து நட்சத்திரேயனுடன் ஒப்பிடலாம். வேணுவின் மாமனார் நாகராஜய்யரின் இரண்டாவது மனைவி கனகத்தை ராமாயணக் கைகேயியோடு ஒப்பிடலாம். ஃப்ரீட்மன் என்ற கதாபாத்திரம் நாவலின் போக்கை மாற்றி நம்மையும் சிந்திக்க வைத்து மையமாக விளங்குகிறது. ஃப்ரீட்மனைத்தான் நீங்கள் இந்த நாவலைப் படிக்கும் போது சந்திக்கப் போகிறீர்களே? அவரின் கல்யாண குணங்களை நீங்களே படித்து நேரிடையாக அனுபவிப்பதுதான் முறையாக இருக்கும்.

இந்த நாவலை எழுத வைத்த சக்தி எது? வித்யா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கு இதனைப் படிக்கும் வாசகர்கள்தான் விடை காண வேண்டும். ஆம் அவர் எழுதியிருப்பதைப் போல வேணுகோபாலய்யரும், மாரிஸ் ஃப்ரீட்மனும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள். தவரிஷி பகவான் ரமணர் இவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். பகவான் ரமணர் இந்த நாவல் மூலம் நமக்குச் சொல்ல வருவது புரிந்தால். அதுதான் வித்யா சுப்பிரமணியத்திற்குக் கிடைத்த வெற்றி. அவருடைய எழுத்தில் இருக்கும் தீர்க்கம் என்றென்றும் நிலைத்திருக்க ரமணர் அருள்புரியட்டும்.

தபஸ் என்றால் என்ன? இதற்கு பகவான் ரமணரின் விளக்கம், ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால், அந்த மந்திர த்வனி (சப்தம்) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே லீனமாகிறது. அதுதான் தபஸ். ஸ்ரீமதி வித்யா சுப்பிரமணியம் செய்த தபஸ்தான் இந்த ஆகாசத் தூது. இந்த அற்புத நாவலைப் படித்து நம்மை நாம் உயர்த்திக் கொள்வோம்

அன்பன்

கீழாம்பூர்

செல்வி. இந்திரஜா

திரைப்பட நடிகை

வணக்கம்,

திரைப்பட நடிகையானதற்காக நான் பெருமையும் சந்தோஷமும் அடைவதுண்டு. அதே போல ஒரு சிலரின் எழுத்துக்களை வாசிக்கும் போதும் சந்தோஷமும் பரவசமும் ஏற்படும். ‘ஆகாசத்தூது’ நாவலைப் படித்து முடித்த போது மேற்கண்ட உணர்வுகளோடு லேசாய் கொஞ்சம் கர்வமும் ஏற்பட்டது நிஜம். ஒரு சாதாரணக் கதையாக அல்லாமல் ஒரு மகாஞானியின் வாழ்வையும் கதையோடு அழகாகப் பின்னிப் பிணைத்து ஒரு வேள்வியாக இந்தப் புதினத்தை நமக்கு தந்திருக்கிறார் ஆசிரியர் வித்யா சுப்ரமணியம்.

இவரை நான் ஒரு வாசகியாக ரசிக்கத் தொடங்கி, ரசிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, இன்று அவரது குடும்பத்தினருக்கே நல்லதொரு தோழியாய் ஆகிவிட்ட பிறகும்கூட அவரது நாவல்களை வாசிக்கும் போது மட்டும் வாசகியாகவே இருந்து அவற்றை ரசிக்கிறேன்.

‘ஆகாசத் தூது’ ஒரு கதையல்ல. வாழ்க்கை என்று சொல்வதுதான் சரி என எண்ணுகிறேன். தனி மனிதனின் தேடலில் துவங்கி ஒரு மாபெரும் ஞான ஒளியில் ஜக்கியமாகும் ஒரு சாதாரணனின் வாழ்க்கை. வேணு என்ற காதப்பாத்திரத்தை நம் யதார்த்த வாழ்வில் பல இடங்களிலும் நம்மால் காண முடிகின்ற அளவுக்கு அக்கதாபாத்திரத்தை இயல்பாக் கொண்டு சென்றிருப்பது வியக்க வைக்கிறது. குஞ்சம்மாவின் மரணத்தில்தான் கதை ஆரம்பிருக்கிறது என்றாலும் நாவலின் இறுதி வரையில் அவளை நாவலில் மட்டுமல்ல, நம் மனதிலும் வாழ வைத்திருப்பது Amazing! குழம்பியிருக்கும் மனதைத் தெளிய வைப்பது அத்தனை சுலபமல்ல. வேணு குழம்பித் தவித்து நிற்கும் அந்த நிலையில் நீலகண்ட சாஸ்திரியின் விளக்கங்கள் ஒவ்வொன்றும் கண்டிப்பாக வேணுவை மட்டுமல்ல. வாசிப்பவரையும் தெளிவிக்கும்.

"பாலைக் காய்ச்சி கஷ்டப்படுத்தினாதான் அது

கெட்டுப் போகாம உபயோகப்படும்.

காய்ச்சின பாலை உறை குத்தி கஷ்டப்படுத்தினாதான்

அது தயிராகும்.

அந்த தயிரைக் கடைஞ்சு கஷ்டப்படுத்தினாதான்

வெண்ணை கிடைக்கும்.

இந்த வெண்ணையையும் காய்ச்சி கஷ்டப்படுத்திதான்

உயர்வான நெய் கிடைக்கும்.

கஷ்டங்கள் ஒவ்வொன்றும் நம்மை இன்னும் இன்னும் உயர்வாக்கத்தான்!" நீலகண்ட சாஸ்திரிகளின் குரல் மூலம் இதனை வாசித்த போது இரண்டு நிமிடம் நான் ஹாவென்று மெய்மறந்து அமர்ந்திருந்தேன். எனக்கேற்பட்ட இந்தப் பரவசம் இந்தப் புதினத்தை வாசிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் ஏற்படப் போவது சர்வ நிச்சயம். நாகராஜய்யரின் இயலாமையும் கனகத்தின் சுயநலமும் நம் உறவுகளில் சிலரை நிச்சயம் ஞாபகப்படுத்தும்.

ஒரு சமூகக் கதையில், நம்மையும், நாம் எங்கோ பார்த்த சில முகங்களையும், குணங்களையும் கண்முன் நிறுத்தி, நாம் அதில் ஒன்றி தொலைந்து போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு ஞான ஒளியால் நம் அகக் கண்களைத் திறந்து நம்மை அந்த வாழ்க்கைச் சூழலிலிருந்து சாமர்த்தியமாய் இழுத்து வந்து விடுகிறார் ஆசிரியர். வேணுவுக்கு மட்டுமல்ல. நமக்கும் அந்த 'ரமண ஒளி’யை அறிமுகப்படுத்தும் அந்த இடம் அற்புதமான ஒரு மெளன கவிதை. 'அது' என்பதற்கு அருமையான விளக்கம் கூறப்பட்டுள்ளது. மகரிஷியின் கேள்வி பதில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் அறிந்து உணர்ந்து அனுபவித்து மகிழ வேண்டியவை. தத்துவார்த்தமான 'அதன்’ பதில்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை படித்தால்தான் புரியும். அவற்றைப் புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கையே நமக்கு புரிந்து விடும் என்பது திண்ணம்.

அந்த மகாஞானி, வேணுவுக்கும், மாரிஸ் ஃப்ரீட்மன் எனும் உத்தம மனிதனுக்கும் இடையில் மெளனமாய் தூது சென்றிருப்பதை உணரும்போது ஒரு வித பரவசமும் பிரம்மிப்பும் ஏற்படுகிறது.

இயல்பு வாழ்வையும், ஆன்மிகத்தையும் ஒருசேர அனுபவித்த உணர்வு ஒவ்வொரு வாசகருக்கும் ஏற்படுவது நிச்சயம்.

ஆன்மிகத்திற்காக குடும்பத்தைப் பிரிந்தவர்கள்

மத்தியில் - ஆன்மிகம்

ஒரு குடும்பத்தை இணைத்து உயர்த்தியிருக்கும் நிகழ்ச்சிதான்

ஆகாசத்தூது

அன்புடன்

இந்திரஜா

வித்யா சுப்ரமணியம்

சென்னை-4

என்னுரை

இனிய நட்புக்கு

வணக்கம். ‘ஆகாசத்தூது’ பற்றிய சில உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்நாவல் எழுதி முடித்தபோது நான் விவரிக்க இயலாத ஒருவித பிரம்மிப்பு நிலையிலிருந்தேன். எது இதனை எழுத வைத்தது என்ற ஆச்சர்யம். இதை நான் எழுதியதாக சத்தியமாக எனக்குத் தோன்றவில்லை. யாரோ என் மூலம் எழுதினாற் போல்தான் தோன்றுகிறது. ஒரு சமயம் தேவதூதன் என்ற மலையாளப் படத்தின் ப்ரிவியூ காட்சி பார்த்தேன். மோகன்லால் நடித்த அந்தத் திரைப்படத்தின் கரு என்னை வியக்க வைத்தது.

"Some one wants to tell something

to some one through someone"

இதுதான் அதன் கரு. யாரோ, யாருக்கோ யார் மூலமோ ஏதோ ஒரு சேதியைச் சொல்ல விரும்புகிறார்கள். நான் ஆகாசத்தூது எழுதியதற்கும் மேற்கூறிய இந்தக் கருவுக்கும்கூட சம்பந்தமிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. இருபதுகளில் பிறந்து வளர்ந்த வேணு கோபாலய்யரின் வாழ்க்கையையும், அவரது வாழ்வுக்கு வழிகாட்டிய மாரிஸ் ஃப்ரீட்மன் என்னும் உன்னதமான அயல் நாட்டுக்காரரையும், ஃப்ரீட்மனின் குருவான ரமண மகரிஷியையும் ஒருங்கிணைத்து இரண்டாயிரத்தின் முடிவில் இப்படி ஒரு நாவல் எழுதுவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால் இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால், இதற்கான ஏற்பாடுகள், எனக்கே தெரியாமல் பத்து வருடங்கள் முன்பே ஆரம்பித்திருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அலுவலகப் பயிற்சிக்காக நான் பவானிசாகர் சென்றிருந்த போதுதான் அங்கு சக பயிற்சி மாணவியாக மைதிலியை சந்தித்தேன். ஏனோ தெரியவில்லை வேறு எவரிடமும் ஏற்படாத நட்பும் அன்பும் எனக்கு மைதிலியிடம் ஏற்பட்டது. இரண்டு மாத பயிற்சிக் காலம் மறக்க முடியாத நாட்கள். பயிற்சி முடிந்த பிறகும் நட்பு தொடர்ந்தது. தனிப்பட்ட நட்பு போய் குடும்ப நட்பாக எங்கள் நட்பு மாறியது. நான்கு வருடம் முன்பு நானும் எனது அம்மாவும் மாங்காடு சென்று திரும்பிவரும் வழியில் மைதிலியின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் மைதிலியின் வீட்டு பூஜையறையிலிருந்த ஒரு மாலையிட்ட புகைப்படம் என்னை வியக்க வைத்தது. 'மாரிஸ் ஃப்ரீட்மன் என்று அந்த படத்தினடியில் பெயர் எழுதியிருந்தது. நான் அதுபற்றி விசாரித்தபோது மைதிலியின் மாமனார் தன் தகப்பனார் பற்றி கூற ஆரம்பித்து தங்கள் வாழ்க்கைச் சரிதம் முழுக்கக் கூறிமுடித்த போது நான் பிரம்மிப்பில் உறைந்து போனேன் என்று சொல்லலாம். ஹிந்து மதம் எனும் சுதந்திரமான அற்புதமான மதத்தின் வழியில் ஒழுகி, ஹிந்துவாகவே வாழ்ந்து மறைந்த ‘சுவாமி பரதானந்தா’ என்று பெயர் மாற்றமும் செய்து கொண்ட திரு மாரிஸ் ஃப்ரீட்மன் எனும் போலந்து நாட்டுக்காரர். ஒரு தென்னிந்தியக் குடும்பத்திற்கு எப்பேற்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறார் என்றறிந்தபோது நான் வாயடைத்துப் போனேன். இன்றளவும் அந்தக் குடும்பம் அந்த அயல்நாட்டுக்காரருக்கு பித்ரு காரியம் செய்து வருவதாக அறிந்தபோது எனக்கேற்பட்ட உணர்வுகள் விவரிக்க இயலாதவை. இந்நாவலின் நாயகன் வேணுகோபாலய்யரின் கடைசி புத்ரன் ஜெயராமனின் மருமகள்தான் எனது தோழி மைதிலி. இந்த விஷயங்களை நீ கதையாக எழுத வேண்டும் என்று திரு ஜெயராமன் கேட்டுக் கொண்டபோது எப்பேற்பட்ட காரியம் அது என்ற பயமும் திகைப்பும்தான் எனக்கேற்பட்டது. திரு ஜெயராமன் உடனே தன் பெட்டியைத் திறந்து ஃப்ரீட்மன் தங்களுக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். ரமண மகரிஷியின் சிஷ்யனாய் வாழ்ந்த ஒரு மாமனிதன் தன் கைப்பட எழுதிய கடிதங்கள் அத்தனையும் என் கையில்! என் உடலில் மின்சாரம் பாய்ந்தாற்போல் ஒருவித அதிர்வு பரவியது.. எப்பேற்பட்ட பொக்கிஷங்கள்!

இருப்பினும், உடனடியாக நான் நாவலை எழுத ஆரம்பித்துவிடவில்லை. வேணுகோபாலய்யரின் வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப திரு ஜெயராமனிடம் கேட்டு எனக்குள் அசை போட்டேன். ரமணர் பற்றி நிறைய புத்தகங்கள் வாசித்தேன். மாரிஸ் ஃப்ரீட்மன் பற்றி நிறைய குறிப்புகள் சேகரித்தேன். அவர் எழுதிய புத்தகங்களும் வாசித்தேன். அவர்கள் வாழ்ந்த காலத்திற்கே மனதளவில் சென்று மானசீகமாக அவர்களை அணுஅணுவாக உணர முயன்றேன். எட்டு மாதங்களுக்கு மேலாயிற்று இதனை எழுதி முடிக்க. ஏதோ ஒரு சக்தி என்னை இயக்கியது என்றும் சொல்லலாம். ஏதோ ஒன்று என் மூலம் இதனை உங்களுக்கு சொல்ல விரும்புகிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும். நடுவில் நான் தெரிய மாட்டேன். என் பிறப்பின் காரணம் இதுதானோ என்றுகூட எனக்குத் தோன்றியது. இந்நாவல் உங்களுக்கு உன்னதமாய்த் தோன்றினால் தயவு செய்து என்னைப் பாராட்ட வேண்டாம். என்னை எழுதவைத்த சக்திக்குதான் இதன் பெருமை எல்லாம் போய்ச்சேரும். அது யாரோ நானறியேன். யார் இதனை என்மூலம் உங்களுக்குச் சொல்ல சொல்ல விரும்புகிறார்? வேணுகோபாலய்யரா? மாரிஸ் ஃப்ரீட்மனா.. அல்லது மகரிஷியா..? தெரியவில்லை. எதுவாயிருப்பினும் அதற்கு என் ஆத்ம நமஸ்காரம் என்னை கருவியாக்கிக் கொண்டமைக்கு நன்றி.

ஒருவிஷயம் மட்டும் முக்கியமாகச் சொல்லியே ஆகவேண்டும். இந்நாவல் எழுதிய பிறகு இதன் கையெழுத்து பிரதியை எடுத்துக்கொண்டு ரமணாசிரமத்திற்குச் சென்றிருந்தேன். ரமண மகரிஷியின் பூட்டியிருந்த அறைக்கு முன்னால் கையெழுத்து பிரதியை வைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக அங்கே அமர்ந்திருந்தேன். என் மனசில் ஒரே ஒரு வேண்டுகோள் இருந்தது அவரிடம். இந்நாவல் எழுதுவதற்காக நான் பல குறிப்புகள் தேடி எடுத்தேன். ரமண மகரிஷியின் இறுதி மூச்சு நின்ற பொது அவரது ஆன்மா ஒளிர்ந்தபடி அனைவரும் பார்க்க அண்ணாமலையோடு ஐக்கியமானதைப் பலபேர் பார்த்திருக்கிறார்கள் என்றறிந்திருந்தாலும் அதுபற்றி யாரேனும் விவரித்து கூறினால் நன்றாக இருக்குமே. நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லையே என்று என் மனசில் ஒரு சிறிய தாபமிருந்தது. என் தாபத்தையே பகவானிடம் வேண்டுகோளாக வைத்த மறுநிமிடம் எனக்குப் பின்னால் பலபேர் வந்து கொண்டிருக்கும் சந்தடி கேட்டது. நான் திரும்பிப்பார்க்கக் கூட இல்லை. அவர்களில் ஒருபெண் மற்றவர்களிடம் பேசியது என் காதில் கணீரென விழுந்தது.

அப்போது எனக்கு பத்தோ பதினொன்றோ வயதிருக்கும். பகவானோட கடைசி நிமிடங்கள். ஆசிரமம் முழுக்க நாமாவளிகள் சொல்லியபடி பக்தர்கள் கூட்டம். எல்லோரது கண்களிலும் கண்ணீர். நான் அதோ அந்த இடத்தில்தான் எங்கம்மாவோட பக்கத்துல ஒண்ணும் புரியாம உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல நாமாவளி சொல்றது உச்சஸ்தாயிக்கு போச்சு. ஒளியாட்டம் ஏதோ தகதகன்னு நகர்ந்து அண்ணாமலையை நோக்கி போனதை நான் என் கண்ணால பார்த்தேன். அதுபத்தி அப்போ எதுவும் தெரியலை. அப்பறம்தான் அது என்னன்னு புரிஞ்சுது.

நான் யார் சொன்னார்கள் இதை என்று ஆர்வத்தோடு திரும்பிப் பார்க்க நினைத்தாலும் ஏனோ என்னால் திரும்பிப் பார்க்க இயலவில்லை. அவர்கள் நகர்ந்து சென்று விட்டார்கள். நான் சிலைமாதிரி அந்த அறியப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். சொன்னது யாரென்று எதற்கு அறியவேண்டும்?. உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டதே போதாதா? உள்ளே அது படத்திலிருந்தபடி என்னை நோக்கி புன்னகைக்க, நான் கண்ணீரை அடக்கமுடியாமல், கேவியபடியே தரையில் சாய்ந்து நமஸ்கரித்தேன். எனக்குப் புரிந்தது. அவனருளால்தான் இவையெல்லாம் நடந்திருக்கிறது.

அன்புடன்

வித்யா சுப்ரமணியம்

1

வருடம் - 1930-ன் மழைக்காலம்

நான்காவது நாளாய் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாள் பெய்தால் ஊரே முழுகி விடும் போலிருந்தது. பேய் மழை என்பார்களே அப்படி ஒரு மழை! அடுத்த வீட்டுக் கொட்டிலில் மழை தாங்காமல் பசு ஒன்று தீனமாய்க் கத்தியது. கொல்லைப்பக்கம் சடசடவென்று ஏதோ சரியும் சத்தம் கேட்டது. வேணு பயமும் கவலையுமாய் எழுந்தான், வீடு முழுக்க ஆங்காங்கே சின்னச் சின்ன குண்டான்களும் பாத்திரமுமாய் ஒழுகுகிற இடங்களில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு நடுவே மரவட்டை மாதிரி சுருண்டும் நெளிந்தும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவன் மட்டும் தூக்கம் வராமல் குத்துக்காலிட்டு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான். மாற்றி மாற்றி பாத்திரங்களில் சொட்டிய நீரின் ஒசையில் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வேணு எழுந்தான். லாந்தரை இடது கையில் எடுத்துக்கொண்டு கொல்லைக் கதவருகில் வந்து இரு கதவுகளுக்கும் இடையில் செருகியிருந்த மரக்கட்டையை இழுத்து கதவைத் திறந்தான். கொஞ்சம் திறப்பதற்குள்ளேயே சாரலோடு காற்று சீறிக்கொண்டு உள்ளே வந்தது. ஒரு கையில் லாந்தரும் மறுகையால் ஓலைத்தடுக்கை தலைக்கு மேல் பிடித்தபடி கொல்லைப் பக்கம் இறங்கினான். கொல்லையின் நடுமத்தியில் தென்னை மரமொன்று புயலுக்கு சாய்ந்து அடுத்த வீட்டு கட்டைச் சுவரில் விழுந்திருந்தது. பதினைந்து வருடத்திற்கு முன் அவன் ஆசையாய் நட்ட தென்னை மரம். நிறைய காய்த்து ஓய்ந்து விட்டது. இப்பொழுது காய் கம்மிதான் என்றாலும் வேணுவுக்கு அதன் மீது ஒரு தனி பாசமுண்டு. மனசு சரியில்லை என்றால் அதனடியில் வந்து சற்றுநேரம் அமர்ந்து கொள்வான். எல்லாம் சரியாகி விடும் போ என்று. அது அவன் காதுக்குள் காற்றாய்ப் பேசும். நிஜமோ பிரமையோ, ஆனால் மனது சரியாவது நிஜம். விழுந்து சாய்ந்திருந்த மரத்தை வேதனையோடு பார்த்து விட்டு உள்ளே வந்து கொல்லைக் கதவைத் தாளிட்டான்.

கதவை சாத்தாதீங்கோ. பின்னால் குஞ்சம்மாவின் குரல் கேட்க திரும்பினான்.

"நேக்கு அந்தப் பக்கம் போகணும். சித்த

Enjoying the preview?
Page 1 of 1