Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vallalarukku Mattume Vaitha Varangal
Vallalarukku Mattume Vaitha Varangal
Vallalarukku Mattume Vaitha Varangal
Ebook560 pages3 hours

Vallalarukku Mattume Vaitha Varangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mr. C. Seganathan born in 1948 has written almost 30 books on various topics like Tamil Literature, Spiritual topics etc. He has got many many recognitions like “Arutkavi Arasu”, “Akaval Arasu”, “Varakavi” etc and many awards/prizes for his writings. His books like “Manamey Iraivan”, “Thirukkural Gnana Urai”, “Vinayakar Akaval” are very famous amongst his books. He is still writing many books like “Ovvai Kural”, “Gnana Kural” etc.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123002599
Vallalarukku Mattume Vaitha Varangal

Read more from C. Seganathan

Related to Vallalarukku Mattume Vaitha Varangal

Related ebooks

Reviews for Vallalarukku Mattume Vaitha Varangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    எனக்கு இப்புத்தகம் பெற்றுக்கொள்ள உதவுங்கள் 9600686611. தனித்ததன்மை யான செய்திகள் இருக்கின்றன. திருவருள் தயவு.

Book preview

Vallalarukku Mattume Vaitha Varangal - C. Seganathan

http://www.pustaka.co.in

வள்ளலாருக்கு மட்டுமே வாய்த்த வரங்கள்

Vallalarukku Mattume Vaitha Varangal

Author:

சி. செகநாதன்

C. Seganathan

For more books

http://www.pustaka.co.in/home/author/c-seganathan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

1. நுதற்கண் பெறுதல்

2. அனக வாழ்வு பெறுதல்

3. அனகவாழ்வின் ஆற்றல்

4. சுதந்தரம் அடைந்தது

5. ஆண்டவரே கற்பம் தர உண்டது.

6. ஆண்டவரே நேர் காண வந்தது

7. தன் உள்ளே இறைவன் இசைந்து இருந்தது

8. என் சென்னி தொட்டு உரைத்தது

9. தானே எண்குணத்தான் ஆனது

10. ஆண்டவரே தன்னை பள்ளி எழுப்பப் பெறுதல்

11. தன் ஆசை எல்லாம் எனக்கே தந்து கருணை செய்யச் சொன்னது

12. வள்ளலாருக்கு ஆண்டவரே ஆறுகால பூசை செய்தது

13. இறைத்திரு நடனத்தைத் தான் ஆடியது

14. சிற்றம்பலக் கல்வி கற்றல்

15. வள்ளலார் பெற்ற வடிவப் பேறும் உருவப் பேறும்

16. வள்ளலார் பெற்ற தடுக்கப்படாத உடல்

17. வள்ளலார் பெற்ற அழிவுறா உடம்பு

18. வள்ளலார் பெற்ற 10 அறிவுகள்

19. வள்ளலார் பெற்ற 12 இன்பங்கள்

20. வள்ளலார் பெற்ற 13 ஆனந்தங்கள்

21. ஐந்தொழிலைத் தானே செய்தல்

22. அண்டத்திலும் ஐந்தொழில் இயற்றல்

23. எல்லா உலகமும் என் வசம் ஆயின

24. அரும்பெருஞ் சோதிபதியாகவே தான் ஆனது

25. சிவம் ஆக்கியதும், சிவம் ஆக்கிய பரிசும் தந்தது

26. சிவசக்தியை ஈந்து, அதனின் ஆற்றலை தனக்குள் வளர்த்தது

27. பொதுவாம் திருச்சிற்றம்பலம், அதில் நடம்புரி பொருள், தான், அத்துவிதம் ஆதல்

28. நானே அரும்பெருஞ்சோதியாகி எல்லா உலகங்களையும் அரசாள, ஆண்டவரே மணிமுடி சூட்டி அரசனாக்கியது

29. மணிமுடி சூட்டியபின் செங்கோல் தந்து நீதி தவறாது ஆளும்படி செய்தது

30. மணிமுடி சூட்டி, செங்கோல் கொடுத்து கங்கணம் கட்டியது

31. ஜோதி மா மகுடம் சூட்டி, செங்கோல் கொடுத்து, கங்கணமும் கட்டிய பின், என் சொல்லும் (ஆணை) நின் சொல்லும் சரி சமம் என்றது.

32. முடிசூட்டி, செங்கோல் கொடுத்து, கங்கணம் கரத்து அணிந்து, என் சொல்லும் நின் சொல்லும் சரிசமம் என்று கூறி, இந்த நான்கையும் முடித்து நில உலகில் சன்மார்க்கத்தை விளங்கச் செய்க என வருவித்தது.

33. இறைவனுக்குரிய சகல சுதந்திரங்களை தனக்களிக்குமாறு ஆணையிட்டது

34. பாரிடை வானிடை இறைவர்களை தானே உண்டாக்க விதி செய்யப் பெற்றது.

35. அருட்சோதி அரசாட்சியைப் பெற்றது.

36. வள்ளல் பெருமானைத் தமது வலப் பக்கம் வைத்துக் கொண்டது.

37. அருட்பெருஞ் சோதி ஆண்டவரது அருட்பேர் ஒளியை அவரே தரப் பெற்றுக் கொண்டது.

38. எனக்கு எவ்வுலகில் யார் சரிசமம் ஆனவர்? என வள்ளலாரே கேட்பது

39. அரும்பேரொளித் திருவை திருமணம் செய்து கொண்டது.

40. மெய்ஞான உருவை அடைதல் இதுவே சமரச சன்மார்க்க வியப்பு.

41. வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர் ஆனது.

42. வள்ளலார் பெற்ற பன்முக ஆற்றல்கள்.

43. வள்ளலாரிடம் முற்றிலும் இல்லாதன.

44. ஐம்பெரும் பூத உண்மைகளையும் கண்ணால் கண்டவர்.

45. இவ்வுலகில் இனி உலகத்தவர்கள் உன்னையே குறிக் கொள்வர் என்றது.

46. திருச்சிற்றம்பலத்து அரசு பெறுதல்.

47. ஈரேழு பதினான்கு உலகவர்களும் அதிசயித்தது.

48. அருட்பெருஞ்சோதி ஆண்டவரே தன்னை நேர் காண வந்தது.

49. இரக்கமே வடிவாய் ஆனது.

50. நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது.

51. இனி எந்த வழியிலும் உன்னைப் பிரிய மாட்டேன் எனத் தன்மேல் ஆணையிட்டுக் கூறியது.

52. அருட்பெருஞ்சோதி பதியின் உடல் அங்கங்களைக் கூறியது.

53. ஆராலும் அறிந்தும் பார்க்க முடியாத உயர்நிலையில் இருந்தது.

54. பிறவிப் பெருங்கடலை கடந்து அதற்கு அப்பால் உள்ளவைகளைக் கூறியது.

55. சுத்த சன்மார்க்க விளக்கம்.

56. சுத்த சன்மார்க்க அனுபவச், சுதந்தரம் பெற்றது.

57. உலக உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழ வள்ளலார் நினைத்தது போன்று யாரும் நினைக்கவில்லை. இது ஆண்டவரே கூறியது.

58. அருள் ஒளி வட்டம் உன்னைச் சூழ்ந்தது.

59. ஓங்கார அணையின் உச்சியில் இருந்தது. அப்போது ஒருவருள் ஒருவர் கலந்தது.

60. முதல் மகனாகிய வள்ளற் பெருமானை ஆண்டவர் வளர்த்த விதம்.

61. இயற்கை உண்மை உருவம் பெறுதல்.

62. அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் அவரின் அருட்சோதியையே பரிசாகப் பெற்றது.

63 அருட்பெருஞ்சோதியோடு அம்பலத்தில் ஒன்றாக ஆடவும், அவரின் அறிவுருவானதும்.

64. பூதாதிகளைப் பொருத்தும் நிலைகளை அடைந்தவர்.

65. பிரணவ ஆகாரப் பரிசு பெற்றது

66. எல்லாம் வல்ல சித்தியை விட எல்லாம் வல்ல இறைமை பெற்றது

67. அனக வடிவம் பெறுதல்

68. என்னைச் சுற்றி சுற்றித் திரிந்து அருள்கின்றாய் எனல்,

69. வள்ளலார் ஒரு புதிய உலகையும் அண்டங்களையும் படைக்கும் ஆற்றல் பெற்றது.

70. வள்ளலார் ஓருடம்பு வடிவம் ஆனார்.

71. பொன் உடம்பில் எட்டு வகைப் பொன் உடம்பு பெற்றது.

72. என் போல் எவ்வுலகில் யார் உளர்? என இறைவனிடமே கேட்டது.

73. இறைவன் தன் கைவிட்டு அகலாத பெரும் பொருளை வள்ளலார் தம் கையிற் கொடுத்தது.

74. எல்லாம் வல்ல சித்தியை இந்நாள் போல் எந்நாளும் தராதது.

75. சமரச சுத்த சன்மார்க்கம் உள்ள இடமும், அதனைப் பெற்ற நிலையும்.

76. சமரச சன்மார்க்கத்தைக் கூடப் பெற்றதும் ஆண்டவர் வடிவம் பெற்றதும்.

77. ஆண்டவர் பெருமையை அவரே அறியார் என அறிந்தவர் வள்ளலார்.

78. மெய்யருள் திருவைத் திருமணம் செய்து வைத்தது.

79. வானைவிடவும், வான்மழையை விடவும் கருணையில் தாம் உயர்ந்தது.

80. இரக்கமாம் கருணையையும் வள்ளலாரையும் ஒன்றாய் இருத்தியது.

81. தானே தான் நான் ஆனான்

82. அருட்பாப் பாடல்களைப் பாடுமாறு ஆண்டவர் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டது.

83. என் மேல் நினக்கு இவ்வளவு மோகம் ஏன்? என்றது.

84. ஆண்டவர் நானாகி என்னுள் எவ்வெவ்விடங்களில் எப்படி விளங்கினார் என்பது.

85. யாராலும் அறியாத உயர்நிலையில் வைத்தது.

86. உலகுக்கு உண்மை இன்பம் செய்வோம் என்று இறைவனையே அழைத்தது.

87. நின்போல் உரைக்க வல்லார் யார் என்றான் அம்பலவன் ஆய்ந்து.

88. அருட்பா அருட்பெருஞ்சோதி ஆண்டவர் முன் அரங்கேற்றப்பட்டது

89. யோகநிலை, யோகப் பயன் இவற்றை ஒரு நாழிகையில் பெற்றது

90. ஓமத்தன் ஆக்கப் பெற்றது.

91. வள்ளலார் பெற்ற நான்கு வித நேயங்கள்.

92. அயன் ஆதிய ஐவர்களும் அருட்பேர் ஆழி என்றே துதித்து ஏற்றப் பெற்றது.

93. உன்னை உற்றவர்கள் உரைக்கின்ற வார்த்தையும் என் வார்த்தையே என்றது.

94. ஐந்தொழில் செய் ஆற்றலைப் பிறர்க்கும் கொடுக்க நினைத்தது

95. மூன்று மெய்ம்மொழிப் பொருள்களைப் பெற்றது.

96. 76 வித அமுதங்களை உண்டவர் வள்ளலார்.

97. அண்டங்கள் பற்றி அருட்பிரகாசரின் பரிணாம வளர்ச்சி.

98. பரநாத நாட்டு அரசைப் பெற்றது.

99. உள்ளது உரைத்தான்.

100. ஐம்புதங்களின் அளவு கூறியது.

101. மெய்ப்பொருள் விளக்கம் கூறியது.

102. அருட்பெருஞ்சோதியைப் பெற்றதும் அதன்ஒளி அளவு கூறுதலும்.

103. பொதுவாம் திருச்சிற்றம்பலமே தான் ஆனது.

104. உலகீர் உண்மை இவ்வாசகம் உணர்மின்!!

105. இயற்கை உடம்பு பெற்றது.

106. அருட்பாவே ஆண்டவருக்கு வேதாகமம் ஆனது.

107. நினைப்பாட என்னை வளர்க்கின்றாயப் என்றது.

108. தன் பிடிக்குள் அகப்பட்டார் ஆண்டவர்.

109. நான்கு மார்க்கங்களையும் ஒரே பிறவியில் ஒருசேரப் பெற்றவர்.

110. வபாய்மை நீக்கி காணக் காட்டுதல்

111. ஐம்பூதங்கள், சத்தர், சத்திகளைத் தாம் ஏவல் கொண்டது.

112. வள்ளலாரின் உண்ணா நோன்பின் நீட்சி.

113. வெல்லுகின்ற சொல்.

114. நின்பாட்டில் குற்றம் ஒன்றும் ஆராய மாட்டோம் என்றது.

115. பாடுக! என்னோடு கலந்து ஆடுக என்றது.

116. ஐம்பூதங்களும் அடங்கும் காலவரை ஆண்டவரை வாழ்த்திக்களிப்பேன் என்றது.

117. பிறவிச் சட்டத்தையேக் கிழித்து எறிந்தது.

118. இறைவனே வந்து கற்பம் கொடுத்தது.

119. அரும்பெருஞ் சோதி ஆண்டவரின் இயற்கை உண்மை விளக்கம்.

120. அழியாத தேகத்தை எனக்களித்துவிட்டு மறுவேலையைச் செய்க என்றது.

121. "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என்றதற்குரிய வரம் பெற்றது.

122. எல்லா முடிவுகளையும் ஒருநாளில் தனக்கு உணர்த்தப் பெற்றது.

123. அருளின் நிலைபேறு எது என்று அருளப் பெற்றது. அடி, நடு, முடி கண்டது

124. ஆண்டவரே தனக்கு ஆறுகாலப் பூஜை செய்தது.

125. வானநாட்டவர் குலத்திற்கே தலைவன் ஆக்கப் பெற்றது.

126. மூன்று காலங்களில் செய்த தவப் பயனை எல்லாம் ஒரு பகலில் பெற்றது.

127. ஆண், பெண், அலி இல்லாத உடம்பை, இயலைப் பெற்றது.

128. ஆண்டவரிடமே அரைக் கணநேரத்திற்கு ஆயிரமாயிரம் கோடி வட்டி வாங்குவேன் என்றது.

ஆசிரியர்:

அருட்பா அவதானி.

திருமந்திர ஆய்வுரைத் திலகம், திருமந்திரச் செம்மல்

சி. செகநாதன்

***

1. நுதற்கண் பெறுதல்

வள்ளலார் ஒருவரே ஞானிகளிலேயே நுதற்கண் பெற்றார். சமய வழக்கில் சிவபெருமானுக்கு நுதற்கண் உண்டு. அங்கே சிவபெருமான் அந்த நுதற்கண்ணாலே சிறப்பிக்கப்படுகிறார். நுதற்கண் பற்றிய புராணக்கதைகள் ஏராளம் ஏராளம். ஆனால் வள்ளலாரும் நுதற்கண்ணாகிய நெற்றிக்கண்ணைப் பெற்றுள்ளார்.

எனக்கும் நின்னைப் போல நதற்கண்

ஈந்து மதனையே

எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய்

அருவ மதனையே

சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச்

சிதைவு மாற்றியே

தேவர் கற்பம் பலவுங் காணச்

செய்தாய் போற்றியே -5001

***

2. அனக வாழ்வு பெறுதல்

இதுவரை யாரும் அறிந்தும் பார்க்காத, பார்க்க முடியாத, இதுவரை எவர்க்கும் நிகழ்ந்திராத அனக வாழ்வைப் பெற்றது. அனக வாழ்வு என்பது இறைவன் போல் தான் எங்கும் நிறைந்திருப்பது. எதிலும் நிறைந்திருப்பது ஆகும். இறைவனது வாழ்வு மட்டுமே அனகமாகும். அதனையே பெற்றதாகும். இப்பெரும் மகாப் பேற்றை இதுவரை யாரும் பெறவில்லை. இனி எப்பொழுதும் யாரும் பெற முடியாத பேறு ஆகும்.

அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி

அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடி என் உளத்தே

முகவடிவம் தனைக்காட்டிக் களித்துவியந் திடவே

முடியனைத்தும் உணர்த்தியொரு முன்னிலையில்லாதே

சகவடிவில் தானாகி நானாகித் தானும்

நானும் ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே

சுகவடிவம் தனையளித்த துரையேளன் உளத்தே

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே – 4761

இப்பாடலிலே சுக வடிவம் என்றொரு வடிவம் பெற்றதாகக் கூறியுள்ளார். இவ்வடிவத்தையும் இதுவரை யாரும் பெற்றிடவில்லை. மேலும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் நானும் ஒரேவடிவாகித் தானும் நானும் ஒருவடிவாகி என்ற பேற்றினையும் பெற்றுள்ளார்.

***

3. அனகவாழ்வின் ஆற்றல்

இந்த அனகவாழ்வு என்பது என்ன? அது எப்படிப்பட்ட வாழ்வு என்பதை வள்ளலாரே கூறியுள்ளார். இங்கே இப்பாட்டில் வருகின்றபடி வள்ளலார் பெற்றுள்ளார்.

அண்டமெலாம் பிண்டமெலாம் உயிர்களெலாம் பொருள்கள்

ஆன எலாம் இடங்களெலாம் நீக்கமற நிறைந்தே

கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டு கொண்டு மேலும்

கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றி

கண்டமெலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

கடந்தவெளி யாயதுவும் கடந்த தனி வெளியாய்

ஒண்டகுசிற் றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி

ஒங்குகின்ற தனிக் கடவுள் ஒருவருண்டே கண்டீர் - 3276

இப்பாடல் அருட்பெருஞ் சோதி பதியாரின் அகண்டபெரு வாழ்வு ஆகும். வள்ளலாரும் அருட்பெருஞ்சோதி ஆகிவிட்டதனால் இவ்வாற்றல்களை பெற்றே இருக்கின்றார். மேற்கண்ட ஆற்றல்களே அனகவாழ்வுக்குரிய ஆற்றல்கள் ஆகும்.

இவ்வளவு ஆற்றல்களையும் பெற்ற ஒரே ஒருவர் ஆண்டவருக்குப் பின்னால் நம் பெருமானே ஆவார்.

***

4. சுதந்தரம் அடைந்தது

இவ்வுலகில் எந்த ஒரு உயிரும் பெறாத சுதந்தரத்தை வள்ளலார் மட்டுமே பெற்றார். இந்த சுதந்தரத்திற்குரியவர் ஆண்டவர் ஒருவரே. அதனை தாம் பெற்று ஆண்டவராகவே ஆனது. சுதந்தரம் என்பது பசி, கொலை, ஆபத்து, தாகம், ஆசை, வறுமை, நோய், மரணம் ஆகிய எட்டிலிருந்தும் விடுதலை அடைவதே ஆகும். இந்த எட்டு நிலைகளிலிருந்தும் ஒரு உயிரினம் கூட விடுதலை பெறவில்லை. ஆண்டவருக்கு அடுத்து வள்ளலாரே இந்த சுதந்தர வாழ்வைப் பெற்றவர் ஆவார்.

இப்படியொரு சுதந்தர வாழ்வு உள்ளது என்று கூட இதுவரை வந்த ஞானிகளுக்குத் தெரியவில்லை. தெரிந்தால் தானே அவர்கள் அடைய முடியும். இதனை

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் இருந்தனம் உனையே

இன்புறக் கலந்தனம் – 3851

என்றும்

துன்பெலாம் தீர்ந்தன சுகம்பலித் ததரநினைச்

சூழ்ந்த தருள்ஒளி நிறைந்தே

சுத்தசன் மார்க்க அனுபவம் நினக்கே

சுதந்தரம தான துலகில் - 3676

இதில் சுதந்தரம் அடைந்ததும், சத்தசன்மார்க்க அனுபவம் இதுவரை யாரும் பெறவில்லை. நீயே இதனை உலகினில் பெற்றவன் என ஆண்டவரே கூறுவதும் உள்ளத்தில் கொள்க.

***

5. ஆண்டவரே கற்பம் தர உண்டது.

பதினெட்டுச் சித்தர்களும் தாம் இறவாமல் வாழ மூலிகைக் கலவைகளால் கற்பம் என்ற ஒரு முறையைக் கண்டுபிடித்தனர். இவர்களது கண்டுபிடிப்புகளை அவரவர் பெயரால் கருக்கடை என்று கூறியுள்ளனர். உதாரணமாக திருமூலர் கருக்கடை, அகத்தியர் கருக்கடை, புலிப்பாணி கருக்கடை, காக்கையர், தேரையர் கருக்கடை என எழுதியுள்ளனர். இந்தக் கருக்கடை என்ற சொல் எதனைக் குறிக்கிறது எனின் ஒருவனது இந்தப் பிறவியே கடைசிப்பிறப்பாக இருக்கட்டும். இனி ஒரு கருவுக்குள் நமது ஆன்மா புகுந்து பிறவி எடுக்காது, இப்பிறவியே கடைசிப் பிறவியாக ஆக இந்த இந்தக் கற்பங்கள் உதவும் என்பது அவர்களது கூற்று, இதன்படி அகத்தியர் 72 கற்பங்கள், காக்கையர் 60 கற்பங்கள், இடைக்காடர் 67 கற்பங்கள் என பதினெட்டுப் பேர்களும் உண்ட கற்பங்கள் எத்தனை என கணக்கையும் அவர்கள் குறித்துள்ளனர்.

ஆனால் அவர்களது கற்பம் ஒருவனை மூன்று முதல் ஐந்து ஆயிரம் ஆண்டுகளே வாழ வைப்பதாக அவர்களே கூறியுள்ளனர்.

ஆனால் வள்ளற்பெருமான் அருட்சித்தர் மகன் அல்லவா? ஆகையால் அருட்சித்தரான ஆண்டவராம் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே வள்ளலாருக்குக் கற்பம் கொடுத்தார். வேறு யாரும் ஆண்டவரால் கற்பம் கொடுத்து உண்ணும் பெரும் பேற்றைப் பெறவில்லை. பாடலைப் பார்ப்போம்.

இதிலும் விந்தை என்னவெனில் ஆண்டவர் கொடுத்த கற்பத்தில் என்னென்ன கலந்துள்ளது என்பதையும் கூறியது தான்.

பொற்பங் கயத்தின் புதுநறவும்

சுத்த சலமும் புகல்கின்ற

வெற்பந் தரமா மதிமதுவும்

விளங்கு பசுவின் தீம்பாலும்

நற்பஞ் சகமும் ஒன்றாகக்

கூட்டி மரண நவை தீர்க்கும்

கற்பங் கொடுத்தாய் நின்தனக்கு

கைம்மாறேது கொடுப்பேனோ - 4785

***

6. ஆண்டவரே நேர் காண வந்தது

இண்டர்வியு என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய நேரிய தமிழ்ச் சொல் நேர்காணல் என்பதாகும். இந்தச் சொல்லை 185 ஆண்டுகட்கு முன்னரே பெருமானார் கூறியுள்ளார்.

நேர்காணல் என்பது அதிகாரிகள் ஓரிடத்திலிருப்பர். அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் அந்த அதிகாரிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று அதிகாரிகள் வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுதான் உலக நடைமுறை வழக்கம்.

ஆனால் ஓரிடத்தில் வள்ளலார் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் இடம் தேடி ஆண்டவர் வந்து, அவரை எழுப்பி உன்னை நேர்காணும்படிக்கு வந்துள்ளேன் எனக் கூற வள்ளலார் அது கேட்டுப் பதில் ஒன்றும் கூறாது மறுபடியும் கண்ணை மூடி உறங்க, ஆண்டவர் வள்ளலார் தலைமீது தன்னிரு கால்கள் படும்படி வைத்து, அவரும் படுக்க, தன்தலைமீது கால்கள் வைத்திருப்பது உணர்ந்த வள்ளலார், சற்று கோபப்பட்டு, ஆனால் பேசாது, அவ்விரு கால்களைத் தன் தலைமீதிருந்து எடுத்து விலக்கி வைக்க இது கண்ட ஆண்டவர், இராமலிங்கம் எனது கால்கள் உனது தலைமேல் இருக்கக் கூடாது என நீ எண்ணுகின்றாய். அது உன் சுதந்திரம். ஆனால் என் கால்கள் உனது தலைமேல் தான் இருக்க வேண்டும் என்பது எனது சுதந்திரம். ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்திரத்தை எனக் கேட்டு வள்ளலாரை ஆண்டவரே நேர்காண வந்து தமது அருட்பேர் திருவடியை அவர் தலையில் சூட்டி மகிழ்ந்தார்.

இவ்வாறான நேர்காணல், உடன் திருவடிச் சேர்ப்பாம் தகுதியை ஞானிகள் யாரும் பெற்றிடவில்லை. பாடலைப் பார்ப்போம்.

நீ நினைத்த நன்மையெலாம் யாமறிந்தோம் நினையே

நேர்காண வந்தனம்என்றென் முடிமேல் மலர்க் கால்

தானிலைக்க வைத்தருளிப் படுத்திட நான் செருக்கி

தாள்கள்எடுத் தப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே

ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே

எனக்கிலையோ என்றருளி எனையாண்ட துரையே - 4140

***

7. தன் உள்ளே இறைவன் இசைந்து இருந்தது

இறைவனை எல்லா அன்பர்களும், அடியார்களும் அடையப்படாத பாடெல்லாம் பட்டு முடிவில் ஓரிருவர் இறைவனை அடைந்து அவனது பாதார விந்தத்தில் சேர்வதே ஞான முடிவு என எல்லாரும் கூறி, எழுதி வந்த காலத்தில் இதுவே தான் உண்மை நிலை என்று எல்லாரும் கருதி இருந்த காலத்தில் வள்ளலாரைத் தேடி இறைவன் வந்து அவனது காலடியை வள்ளலாரது தலையில் சூட்டி மகிழ்ந்ததைக் கண்டோம். இனி ஆண்டவரே வள்ளலாரைப் பார்த்து, இராமலிங்கம்! இனி உனக்கும் எனக்கும் எந்தப் பிரிவும் கிடையாது. நீயே நான், நானே நீ என்று கூறி, வள்ளலாரோடு கலந்தது. எல்லா அடியார்களும், அன்பர்களும, முத்தரும், சித்தரும், தேவரும் ஆண்டவரைத் தேடி அலைய, ஆண்டவர் வள்ளலாரைத் தேடி அலைந்து வந்து உனக்கும் எனக்கும் வேறுபாடே கிடையாது என்று வள்ளலாரோடு கலந்தது. பாடலைப் பார்ப்போம்.

பிறிவே தினிஉனைப் பிடித்தனம் உனக்கு நம்

அறிவே வடிவெனும் அருட்பெருஞ் சோதி

ஆண்டவருடைய அறிவே வள்ளலாருடைய வடிவம். இந்த வடிவத்தை யார் பெற்றார்?

மேலும்

………………………..அருட்சோதியாம்

ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்

ஆணை நமதாணை என்றே

மெய்யுற திருவாக்களித் தென்னுளே கலந்

திசைவுடன் இருந்த குருவே - 3626

***

8. என் சென்னி தொட்டு உரைத்தது

இறைவன் வள்ளலார் தலை மேல் அடித்துச் சத்தியம் செய்து உன்னை நான் பிரிய மாட்டேன் என்று கூறியது. இறைவன் யார் ஒருவரிடமும் உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன் உன் கூடவே இருப்பேன் என எந்த ஞானியரிடமும் கூறிடவில்லை. இது இப்படி இருக்க வள்ளலார் தலைமேல் தன் கையால் அடித்து உன்னை எப்பொழுதும் யாம் பிரியவே மாட்டேன் என்பது வள்ளலாருக்கு மட்டுமே வாய்த்த நிலையாகும்.

அறிந்திலையோ என் பாடெலாம் என்றே

அழைத்தனன் அப்பனே என்னை

எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்

எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே

பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்

பெருந்திறற் சித்திகள் எல்லாம்

சிறந்திட உனக்கே தந்தனம் என என்

சென்னிதொட்டுரைத்தனை களித்தே

சென்னி என்பது தலை. இவ்வாறு சத்தியம் செய்து ஆண்டவர் களிப்படைந்தாராம். எடுத்து அனைத்து அஞ்சிடேல் மகனே என்றதில் அருட்பெருஞ் சோதி ஆண்டவரின் ஒளி எண் கடந்த கோடி சூரியர்கள், சந்திரர்கள், அக்னிகள் கூடியுறு என்றாலும் இணையாகாது என்ற பேரொளி வடிவினர். அவ்வளவு பேரொளியோடு இராமலிங்க வள்ளலாரை தூக்கி அணைத்தார் என்றால் வள்ளலாரின் ஒளி உடம்பின் நிலை என்னவாக இருந்திருக்கும். இவ்வாறு ஆண்டவர் உலகில் யாரையும் எடுத்து அணைத்து மகிழ்ந்திடவில்லை.

***

9. தானே எண்குணத்தான் ஆனது

திருவள்ளுவர் தம் திருக்குறளில் இறைவனது இலக்கணத்தைக் கூறும் பொழுது எண்குணத்தான் என்பர். கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது குறள். இந்த எட்டுக் குணங்களாக உரைகாரர்கள் கூறுவது யாதெனின் 1. தன்வயத்தனாதல், 2. தூய உடம்பினன் ஆதல், 3. இயற்கை உணர்வினன் ஆதல், 4. முற்றும் உணர்தல், 5. பாசங்களில் பந்தப்படாதிருத்தல், 6. பேரருள் உடைமை, 7. எல்லையற்ற வல்லவனாயிருத்தல், 8. சச்சிதானந்தமயமாய் இருத்தல் இவைகளே இறைவனுக்குரிய எட்டுக் குணங்கள் எனக் குறிக்கின்றனர்.

ஆனால் வள்ளலார் தாம் எட்டுக் குணமான பெருங் குன்றாம் மலை உச்சியில் ஏறி நின்றதாகக் கூறுகிறார்.

வள்ளுவர் காட்டிய இறைவனாக தாமே ஆனதாக வள்ளல் கூறுகிறார். இதில் வித்தியாசம் என்னவெனில் மேற்கண்ட எட்டுக் குணங்கள் இறைவனுக்கு உள்ளன என்றது. ஆனால் வள்ளலார் இந்த எட்டுக் குணங்களின் உச்சி மீது ஏறி நின்றதாக அவரே கூறுவதுதான். பாடலைப் பார்ப்போம்.

சிற்றம்பலத்தைத் தெரிந்த கொண்

டேனெம் சிவ அருளால்

குற்றம் பலவும் தவிர்ந்துநின்

றேன் எண் குணக்குன்றிலே

வெற்றம்பல் செய்தவ ரெல்லாம்

விரைந்து விரைந்து வந்தே

நற்றம் பலந்தரு வாய் என்கின்

றார் இந்த மாநிலத்தே – 4816

குற்றம் பலவுந் தவிர்ந்து நின்றேன் எண் குணக் குன்றிலே என்ற அடியை நோக்குக. எண் குணம் எது என்று உரைகாரர்கள் கூறியது மேற்கண்டவைகள். இனி வள்ளுவரே கூறிய எண் குணம் என்ன என்பதை இதுவரை யாரும் அறியவில்லை. அவைகளைப் பார்ப்போம்.

1. ஆதிபகவனாய் இருத்தல், 2. வால் அறிவுடையவனாய் இருத்தல், 3. மாண் அடியை உடையவனாய் இருத்தல், 4. வேண்டுதல் வேண்டாமை இல்லாதிருத்தல், 5. இருள்சேர் இருவினையும் சேராதிருத்தல், 6. பொய் தீர்ந்த ஒழுக்கம் உடைமை, 7. தனக்கு உவமை இல்லாது இருத்தல், 8. அற ஆழி அந்தம் தணிந்தவனாய் இருத்தல் என்பதாகும்.

இவ்வாறுள்ள எட்டுக் குணங்களில் தான் ஏறி நின்றதாக வள்ளலார் கூறுகிறார்.

உலகில் இந்த நிலையை அதாவது இறைவனுக்குரிய எட்டுக் குணங்களில் தாம் ஏறி அதன் உச்சியில் நின்றதாக எவரும் கூறிடவில்லை. யாருக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்கவும் இல்லை. இது வள்ளலாருக்கு மட்டுமே வாய்த்தது.

***

10. ஆண்டவரே தன்னை பள்ளி எழுப்பப் பெறுதல்

ஞானிகள் தம் தவமுயற்சியின் உச்ச கட்டத்தில் இறைவனை உணர்வார்கள். தன்னுள் இறைவன் உறைந்துள்ளதை இத்தனை கோடிப் பிறவிகளிலும் தாம் உணராது இருந்தோமே என எண்ணுவார்கள். அந்த வியப்பில் இனியும் இறைவனைத் தாம் விட்டு விடக் கூடாது என எண்ணி இறைவா நீ என்னுள் உறங்கியது போதும் விழித்தெழுந்து என்னை உய்யக் கொண்டு அருள்வாயாக, என் உடம்பு இத்தனை விதங்களில் தூய்மை உடையதாக இருக்கின்றது என்றெல்லாம் கூறி இறைவனைத் தன்னுள் பள்ளி எழுந்திருக்கும்படி வேண்டித் தொழுது நிற்பர்.

இவ்வாறு கூறிப் பாடிப் பள்ளி எழுப்புதல் ஞானிகளின் நிலை. மாணிக்கவாசகர், ஆண்டாள் போன்ற இன்னும் பல ஞானிகள் திருப்பள்ளி எழுச்சி என்ற தலைப்பில் இறைவனைத் துயில் எழும்படி அழைப்பர். ஏன் வள்ளலாரும் திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார்.

இதில் வியப்பு என்னவென்றால் ஒரு மனிதன் ஞானமுதிர்வில் இறைவனை துயில் எழும்படி அழைக்க, ஒரு தனி மனிதன் ஆன வள்ளலாரை, தெய்வங்களை எல்லாம் விரித்து அடக்கும் ஆண்டவரே வந்து பள்ளி எழுப்பியதே ஆகும்.

தூங்கியவர்களை எழுப்புவது என்பதை விடப் பள்ளி எழுப்புதல் என்ற சொல் விசேடமானது. இச்சொல்லையே போட்டு என்னை எழுப்பினார் என்கிறார் வள்ளலார்.

ஆண்டவரைப் பள்ளி எழுப்பிய திருப்பாடல் 4891. இப்பாடலில் எனைப் பள்ளி எழுப்பிய அருட்பெருஞ்சோதி என்னப்பனே பள்ளி எழுந்தருள்வாயே என்பது.

இது தவிர தன்னைப் பள்ளி எழுப்பியதாக ஒரு பதினோரு பாடல் மெய் இன்பப் பேறு என்ற தலைப்பில் 4716 முதல் 4726 முடிய ஒரு 11 பாடல்கள் உள்ளன. இந்தப் பதினோரு பாடல்களின் முடிவில் எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பந் தந்தீரே என்பது தான். ஒரு பாடலைப் பார்ப்போம்.

தெய்வங்கள் பலப்பல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலப்பல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்க மொன் றில்லார்

மேல்விளை வறிகிலர் விண்கழி கின்றார்

எய்வந்த துன்பழித் தவர்க்கறி வருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந் தந்தீரே – 4726

என்ற பாடல்.

***

11. தன் ஆசை எல்லாம் எனக்கே தந்து கருணை செய்யச் சொன்னது

இந்த உலகுக்கு உலக உயிர்களுக்கு மட்டும் அல்ல. வள்ளலார் கூறியுள்ள 2427 உலகங்களிலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் என்னென்ன கருணையைச் செய்ய நினைத்தாரோ, அத்தனை விதமான ஆசைகளையும் இதுவரை அருளினிடத்தே தந்து அவ்வருள் மூலமாகவே தான் நிறைவேற்றி வந்தார் ஆண்டவர். வள்ளலாரைக் கண்ட ஆண்டவர் இவரின் உயரிய ஒழுக்கம், தயவு, கருணையைக் கண்டு, இவனே நமக்குரிய கண் என ஆக்கி அதுவும் முதல் மகனாக ஆக்கிக் கொண்டார். கொண்டு இந்த 2427 உலகங்களிலும் உள்ள உயிரினங்களுக்குச் செய்ய நினைத்த தன் ஆசைகளை எல்லாம் வள்ளலாரிடத்து உண்டாக்கி, அருளுக்குப் பதிலாக இவரையே செய்யும்படி ஆக்கினார் ஆண்டவர்.

இங்கே ஆண்டவருக்குச் சரிசமமான நிலையில் இருந்ததினாலேயே இவ்வேலையைப் புரியும்படி செய்தார். பாடலைப் பார்ப்போம்.

என்னாசை எல்லாந்தன் அருள்வடிவந் தனக்கே

எய்திடச்செய் திட்டருளி எனையுமுடன் இருந்தித்

தன்னாசை எல்லாம் என் உள்ளகத்தே இருத்தித்

தானுமுடன் இருந்தருளிக் கலந்த பெருந் தகையே

அன்னாயென் ஆருயிரே அப்பாயென் அரசே

ஆவா என்றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே

பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே

புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும் ஏற்றருளே - 4155

வள்ளலார் உலக உயிர்களுக்கு ஆண்டவரின் ஆசைப்படி தயவு செய்கின்ற பொழுது, ஆண்டவரும் தன்னுடன் இருந்தே இருவரும் செய்வோம் என்ற நிலையை இதுவரை யார் பெற்றார்? வள்ளலார் ஒருவரே பெற்றார் இனியாரும் பெறவும் மாட்டார்கள்.

***

12. வள்ளலாருக்கு ஆண்டவரே ஆறுகால பூசை செய்தது

அருட்பெருஞ்சோதி ஆண்டவரே வள்ளலாரை ஒரு மனிதனாக நோக்காது, தனக்கு மேம்பட்ட இறைநிலையை உடையவன் எனக் கருதி வள்ளலாருக்கு ஆண்டவர் ஆறுகாலப் பூசையை செய்துள்ளார். பூசையில் என்ன வைத்துப் பூசை செய்தார் ஆண்டவர் எனில், அருள் தண் அமுது என்ற அமுதைப் படைத்தே பூஜை செய்துள்ளார். இது என்னே அதிசயம். இப்பெருங் கொடை செயல் யாருக்கு வாய்த்தது? ஆண்டவர் வணங்கும் ஆண்டவரானார் வள்ளலார் எனில் அவருக்கு ஒப்பு யாருளர். இதைப் படிக்கும் பொழுதும் நான் எழுதும் பொழுதும் உணர்ச்சி பீறிட்டு எழுகின்றது. பாடலைப் பார்ப்போமா?

மடுக்கும்நரம் பேரருள் தண்ணமு தெனக்கே

மாலையும் காலையும் மத்தியா னத்தும்

கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்

காலையும் தந்தென் கடும்பசி தீர்த்து

எடுக்கும்நற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்

இறையவரே உமை இன்றுகண் டல்லால்

அடுக்கவீழ் கலை எடுத் துடுத்தவும் மாட்டேன்

அருட்பெருஞ் சோதியீர ஆணைநம் மீதே - 3798

***

13. இறைத்திரு நடனத்தைத் தான் ஆடியது

இறைவனின் திருநடனம் அம்பலமாம் திருச்சிற்றம்பலத்திலே நடப்பது, நடிப்பது. இந்த நடனம் ஆண்டவரால் நிகழ்த்தப்படுவதாலே அண்டங்கள் முதல் கோள்கள் வரை, அணு முதல் உயிர்கள் அனைத்தும் சுழற்சிக்கு ஆளாகி உலகங்கள் அனைத்தும் இயங்குகின்றன. இந்த நடனம் நின்று விட்டால் உலகம் மற்றும் அண்டங்கள் அனைத்தும் சூன்யமாகி ஒன்றும் இல்லாமல் போய்விடும். அவ்வாறு அருட்பெருஞ் சோதி ஆண்டவர் அம்பலத்தே நடிக்கும் நடனத்தைத் தானே ஆடுவதாக மட்டுமல்ல, ஆங்காங்கு நானே

Enjoying the preview?
Page 1 of 1