Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengalum Vallalar Aaga...
Neengalum Vallalar Aaga...
Neengalum Vallalar Aaga...
Ebook467 pages3 hours

Neengalum Vallalar Aaga...

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Mr. C. Seganathan born in 1948 has written almost 30 books on various topics like Tamil Literature, Spiritual topics etc. He has got many many recognitions like “Arutkavi Arasu”, “Akaval Arasu”, “Varakavi” etc and many awards/prizes for his writings. His books like “Manamey Iraivan”, “Thirukkural Gnana Urai”, “Vinayakar Akaval” are very famous amongst his books. He is still writing many books like “Ovvai Kural”, “Gnana Kural” etc.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123002604
Neengalum Vallalar Aaga...

Read more from C. Seganathan

Related to Neengalum Vallalar Aaga...

Related ebooks

Reviews for Neengalum Vallalar Aaga...

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengalum Vallalar Aaga... - C. Seganathan

    http://www.pustaka.co.in

    நீங்களும் வள்ளலார் ஆக…

    Neengalum Vallalar Aaga…

    Author:

    சி. செகாநாதன்

    C. Seganathan

    For more books

    www.pustaka.co.in/home/author/c-seganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    1. வருவிக்க உறுதல் வேண்டும்.

    2. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

    3. சிற்றம்பலக் கல்வியைக் கற்றது. அதன் பயனை உற்றது.

    4. வள்ளலாரை ஆண்டவர் வளர்த்த விதம்.

    5. சுத்த சன்மார்க்க நெறியை ஆண்டவரே கூறப் பெறுதல்.

    6. சமரச சுத்த சன்மார்க்கத்தை வள்ளலார் பெற்ற இடம்.

    7. வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கத்தைக் கூழயதும், ஆண்டவரோடு ஒன்றான இடமும்.

    8. வள்ளலாருக்கு ஆண்டவர் தாயாகி வந்து தந்த 76 அமுதங்கள்

    9. சாகாக் கல்வியின் தரங்கள் அனைத்தையும் உணர்த்தப் பெற்றது.

    10. சுதந்திரம் கொடுத்தல்.

    11. எல்லாம் வல்ல சித்தியைப் பெறுதல்.

    12. ஓம் மயமான திரு உரு அடைந்தது.

    13. உளவறிந்து உத்தமன் ஆனது.

    14. சன்மார்க்க வியப்பை அடைதல்.

    15. ஆழி சூழ் உலகோடு அனைத்தையும் படைத்தல்.

    16. அண்டங்கள் யாவையும் படைக்கும் ஆற்றல் பெறுதல்.

    17. தன் இரு கண்களையும் சூரிய, சந்திரன் ஆக்கப் பெற்றது.

    18. உடல், உயிர், அறிவு, கருத்து, உள்ளம் ஆகிய அனைத்திலும் ஆண்டவர் கலந்தது.

    19. அருளின் ஒளியால் வேதிக்கப்படுதல்.

    20. காமம், வெகுளி, மயக்கக் கடல்களை, மூன்று நிலைகளில் கடந்து நிற்றல்.

    21. நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது எனல்.

    22. அச்சம் தவிர்த்தது.

    23. மெய்க்காப்பாளராகி வள்ளலாரை இரவும், பகலும் ஆண்டவர் காத்தது.

    24. அருள் அறிவைப் பெறுதல்

    25. தம் உடம்பு கற்பூரம் மணந்தது.

    26. பூதங்கள், சத்தி, சத்தர்களை ஏவல் கொண்டது.

    27. சுத்த சன்மார்க்கத்தின் இலக்கணம் கூறுதல்.

    28. மெஞ்ஞான சித்தியும், அனக வாழ்வும் அடைதல்.

    29. மெய்ப் பொருளாகவே தான் ஆதல்.

    30. ஆண்டவரே வள்ளலாருள் 32 நிலைகளில் தானாகி விளங்கியது.

    31. எண்ணும் பொழுதே செழுந்தேனாக ஆண்டவர் இனித்தது.

    32. உயிர்ப்பிணி, உடற்பிணி முழுதும் தவிர்த்தது.

    33. தனது அறிவையே சிற்சபை ஆக்கிக் கொண்டது.

    34. முத்தேக சித்தியைப் பெற்ற வள்ளலார் அதனைத் தாமே பிறருக்கு அளித்தல்.

    35. கருவிற் கலந்த ஆண்டவர் என்றும் தன்னைப் பிரியாது கலந்திருந்தது.

    36. சத்தி, சத்தர்கனை ஏவல் கொள்ளும் திறன் பெற்றது.

    37. சுத்தசன்மார்க்கச் சுகநிலைச் சத்தியன் ஆக்கியது.

    38. மூன்று பெரிய இரகசியங்களை அறிந்தது.

    39. சன்மார்க்கம் அணிபெற வள்ளலாரை ஈன்று அமுதம் அளித்தது.

    40. சன்மார்க்கம் அணிபெற ஈன்று வள்ளலாரை ஆண்டவர் காத்தருளிய விதம்.

    41. சபை எனது உள்ளம் என ஆண்டவர் வந்து அமர்ந்தது.

    42. உலக உயிர்த்திரள்கள் முழுக்க ஒளி நெறியைப் பெற்றிடவே வந்துள்ளன.

    43. உலகினில் உயிர்களுக்கு வரும் இடையூறுகளைக் களைந்தது.

    44. மூவர், தேவர், முத்தர், சித்தர், யாவரும் பெறாத இயற்பேறு.

    45. இறைமையையே பெறுதல்.

    46. அருட்பெருஞ் சோதித்தாய் வள்ளலாரை ஈன்று தன் கண்ணைப்போல் பாதுகாத்தது.

    47. எங்குறு தீமையும் தொடரா வகையால் காத்தது

    48. தூங்காமல் விழித்திருக்கும் கருது அறிவித்தல்.

    49. நம் அறிவே உனது வழவம் என ஆண்டவரே கூறியது.

    50. ஆனேன் அவனா (அருட் சோதி ஆனேன் என் றறைப்பா முரசு)

    51. தன்னையே, எனக்குத் தந்தது.

    52. துன்புள அனைத்தும் தொலைத்து இன்புரு ஆக்கியது

    53. அகத்தும் புறத்தும் ஜோதி அருள் உருவாய் திரிந்து திரிந்து அருளியது

    54. சுதந்தரம் தனக்கே தரப் பெற்றது.

    55. அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

    56. சன்மார்க்கம் உள்ள இடத்தை அறிதல் அறிந்து பெறுதல்

    57. சமரச சன்மார்க்கத்தை வள்ளலார் கூடியதும், ஆண்டவர் மருவப் பெறுதலும்.

    58. திருச்சிற்றம்பலத்தைக் காணல்.

    59. சுத்த சன்மார்க்கச் சுகம் பெறுதல், உத்தமன் ஆகுதல்.

    60. இறப்பு வருகின்ற வழிகள் அனைத்தையும் தவிர்த்தது.

    61. சுத்த சன்மார்க்க மரபு உரைக்கப் பெறுதல்

    62. அருட்சோதி அரசைக் கொடுத்தருளிய விதம்.

    63. கற்பது அனைத்தையும் ஒரு கண நேரத்தில் கற்றது.

    64. அருட் செங்கோல் உனக்கு அளித்தோம், அனைத்துலகங்களையும் நீயே ஆள்க! என்றது.

    65. இறைவனே தனக்குக் காயகற்பம் தந்தது.

    66. பிறவிப் பெருங்கடலைத் தாண்டிய பின் அதற்கும் அப்பால் உள்ள நிலைகள்.

    67. ஆண்டவரின் அருட் பெருஞ்சோதி, அவரின் நாடு, கொடி, செங்கோல் ஆகியன கூறல்.

    68. உடல், பொருள் ஆவியை மாற்றிக் கொண்டது.

    69. சமரச சன்மார்க்கம் உறுதல், சிற்சபையை காணப்பெறுதல், மெய்ப் பொருளாம் சுத்த சிவநிறைவை அடைதல்.

    70. ஆண்டவரே வள்ளற் பெருமானை நேர்காண வந்தது.

    71. சிற்றம்பலக் கல்வியைக் கற்றது

    72. சமரச சன்மார்க்கத்தின் வியப்பு.

    73. தன்னைச் செந்தமிழ் போல வளர்த்தது.

    74. கைம்மாறு அறியா எழுவகை ஆற்றல்களைப் பெற்றது.

    75. ஒருமை உயிர்ப்பைத் தருவதும், இருமை உயிர்ப்பைத் தவிர்ப்பதும் கருணையே.

    76. ஆறாறு காட்டியதும், கடத்தியதும்.

    77. எட்டு தொலைந்ததும் ஏழு நுழைந்ததும்.

    78. எட்டுக் கிசைந்த இரண்டு.

    79. இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்தல்.

    80. ஒன்பது திரைமறைப்பும் ஒழிந்து அற்றுப்போதல்.

    81. மறப்பொழித்த மாண்பு.

    82. சுக வடிவம் பெறுதல்.

    83. வள்ளலார் பெற்ற உருவங்கள் மற்றும் வடிவங்கள்.

    84. எல்லா உலகமும் ஏத்துதற்கு ஈன்றெடுத்தது.

    85. கடல் சூழ் உலகோடு அண்டங்கள் யாவையும் படைத்தளித்தது.

    86. அருட்சோதியின் குறியே குணமே பெற என்னைக் குறிக் கொண்டது.

    87. முத்தேக சித்தியில் வள்ளலாரின் பரிணாம வளர்ச்சி.

    88.ஐம்பூத வடிவங்களை ஐயமறக் காணும் அற்புதப் பேறு.

    89. அன்பே வழவமாக ஆதல்.

    90. இறைவனாய் ஆவதை விட இறைமையைப் பெற்றது.

    91. இறைவனது சகல சுதந்தரங்களையும் கேட்டதும், பெற்றதும்.

    92. உடலுள் உயிர் பொருந்தும் வகை, பிரியும் வகை, பிரியா வகையை அறிதல்.

    93. தனக்குரிய 17 நிலைகளையும் ஆண்டவராகக் காணல்.

    94. இரக்கமும் தீானும் ஒன்றாய் பிறிவறநின்ற நிலை.

    95. மெய்ப்பொருள் தன்கையிற் கிடைக்கப் பெற்றது.

    96. எல்லாமும் தனக்குரிமையான விந்தை.

    97. யாருக்கும்எட்டாத ஆண்டவர் வள்ளலாரிடம் எட்டுநிலைகளில் வந்தது. (எட்டியது)

    98. ஆண்டவர் வள்ளலாரை வருவித்ததும். தெரிவித்ததும்.

    99. ஆண்டவர்தம் ஆசைகள் அனைத்தும் வள்ளலாரின் உள்ளத்தில் புகுத்தி தானும் உடன் கலந்தது.

    100. எல்லாவற்றையும் நீயே அருள்ஒளியால் ஆள்க எனப் பெற்றது.

    101. அருட்பெருஞ் சோதியாகவே தான் ஆகப் பெற்றதின் உண்மை,

    102. திரை மறைப்புகள் முழுதும் நீங்கப் பெற்றது.

    103. நீ என்னை மறந்தாலும் நான் உன்னை விட்டுப் போகேன் என்றது.

    104. எச்சம் நினக்கு இல்லை.

    105. உணர்வே உருவாய் உறப் பெறுதல்.

    106. எங்கெங்கும் உள்ள எல்லாக் கடவுளர்களையும் படைக்கும் ஆற்றல்.

    107. எல்லாம் வல்ல சித்தன் எல்லா நன்மையும் அளிக்கப் பெற்றது.

    108. இகத்தும் பரத்தும் பெறுபவைகள் எல்லாம் பெறுதல்.

    109. எல்லா உலகங்களிலும், அண்டங்களிலும் உள்ள உடல்களை தோற்றுவித்தது.

    110. அனக வாழ்வு பெறுதல்

    என்னுரை

    வள்ளற் பெருமானாருடைய அருமை பெருமைகளை, அரிய உண்மைகளை, அருட்பாவை ஆராய்ந்து தெரிந்து அதனை மேடைகளில் பேசும் பொழுதும், பேசி முடித்த பின்னரும் பலர் என்னைச் சூழ்ந்து கொண்டு கேட்கும் கேள்வி, வள்ளலாருக்குப் பின்னர் வந்த 190 ஆண்டுகளாக யாரேனும் ஒருவர் அவர் போன்று வந்துள்ளாரா? என்பதே ஆகும்.

    இப்படிப்பட்ட கேள்வி அவர்களுக்குள் எழுந்த இனம் புரியாத, அவாமிகுந்த கேள்வி என எண்ணிக் கொள்வேன்.

    இக்கேள்விக்குச் சரியான பதிலை என்உளம் தேடிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் வள்ளலாரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஐயோ பாவம்! இந்த ஜனங்கள் இறைவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாததினாலே தான் நம்மை இறைவன் எனச் சுற்றுகிறார்கள் என்ற அவர் தம் கருத்து என்னுள் பளிச்சிட்டது.

    ஆம்! ஆம்! இந்த மக்கள் வள்ளலாரைச் சரியாகப் புரிந்து கொள்ளாததினால் அல்லவா, இன்னுமொரு வள்ளலாரைத் தேடி அலைகிறார்கள். ஐயோ பாவம் என எண்ணினேன். இவர்கள் வள்ளலாரை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்வார்கள்? அல்லது நம்மால் இவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? எனச் ஊன்றிச் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த நூல்.

    இம்மனிதர்களுக்குப் புரிய வைக்க முடியும் என்ற திடம் என்னுள் எழுந்ததும், மடமடவென அருட்பாவில் இருந்தும், அகவலில் இருந்தும் தலைப்புகள் என்னுக்குள் பெருக்கெடுத்தன. 200, 250 தலைப்புகளை விறுவிறுவென்று ஒரே மூச்சில் எழுதி முடித்தேன்.

    இத்தலைப்புகளை இங்கே எழுதியிருப்பது போல் விரித்து எழுதும் பொழுது, இந்த நூலுக்கு என்ன பெயரிடலாம் என எண்ணினேன். அப்பொழுது முதன் முதலில் தோன்றிய தலைப்பு வள்ளலார் போன்று இது வரை யார் வந்துள்ளார்? என்ற கேள்விக்கு மறுப்பு என்பதே இது சற்று நீண்ட தலைப்பாக இருந்தது. எனது சில நண்பர்களிடம் இந்தக் கருத்தைக் கூறி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கூறினார்.

    நீங்கள் கூறுவது போல் எழுதினால் வள்ளலார் போல எவரும் வரமுடியாது போல் இருக்கிறதே என அவர்களின் ஆர்வம் தடைபடுமே? என்றார். அவர் கூற்று எனக்கு மிகச் சரியெனப்பட்டது. வேறு தலைப்பை யோசித்தேன். எல்லோர்க்கும் நாமும் வள்ளலாராக ஆக வேண்டும் என்னும் அவாவும், திறமும், வல்லபமும் வர வேண்டும், வருமாறு நமது தலைப்பு அவர்களை ஈர்க்கவேண்டும் என எண்ணினேன்.

    அதன் விளைவாகவே நீங்களும் வள்ளலார் ஆக… என்ற இந்தத் தலைப்புத் தோன்றியது. இதனையே தலைப்பாக இட்டுள்ளேன்.

    வள்ளலார் போன்று இதுவரை யாரும் தோன்றவில்லை என்பதும், இறைவனால் தோற்றுவிக்கப்படவும் இல்லை. இதனை இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே என்றும், அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு என்று வள்ளலார் கூறுவதாலும், சுதந்தரம் உனக்கே கொடுத்தனம், உனது தூய நல் உடம்பிலே புகுந்தேம் என்றும், நீயே என் பிள்ளை என்றும், எனது குலத்து முதன் மகனே, என்றும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கூறுவதாலும் அறியலாகும்.

    வள்ளலாரை ஆண்டவர் எப்படியெல்லாம் வள்ளலாராக ஆக்கினார் என்பதும், அருளப்பட்டார் எனவும், என்னென்ன திறங்களைப் பெற்றார் எனவும் இவர் ஒருவரே உத்தமர் ஆனார் என்பதும் அருட்பா முழுக்க விரவிக் கிடப்பதை யாரும் அறியலாம்.

    அப்படி அருட்பா முழுக்க விரவிக் கிடந்த முத்துக்களில் சிறந்தவைகளாக எடுத்துக் கோர்த்துத் தந்துள்ளதே இந்த மணி நூல்.

    இதனுள் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் நீங்களும் இவ்வாறு ஆக்கப் பெற்றால் நிச்சயமாக வள்ளலாராக ஆகலாம் என்றும், அவர் உங்களில் ஒருவராக இருக்கலாம் அல்லவா? என்றே கூறி முடித்துள்ளேன்.

    ஏனெனில் நாமும் வள்ளலாராக ஆகலாம் போல் தோன்றுகிறதே என்ற எண்ணம் எழ வேண்டும் என்னும் என் விருப்பமே அதாகும்.

    நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாதென்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என வள்ளலாரே இறைவனிடம் தன் போல் எல்லோரும் வர வேண்டும் என விண்ணப்பித்து வேண்டுகிறார் எனின், நானும் அவர் கருத்தின் வடிவத்தையே ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் குறித்துள்ளேன்.

    இதற்கு முன் வெளிவந்துள்ள வள்ளலாருக்கு மட்டுமே வாய்த்த வரங்கள் என்ற நூலுள் எழுதியுள்ளவைகள், இதுவரை யாருக்கும் வாய்க்காத பெரும் நிலைகளை வள்ளலார் பெற்றார் என்பது. இந்த நூலுள் நான் கூறியிருப்பதெல்லாம் வள்ளலாருக்கு ஆண்டவர் தம் கருணையாற் செய்த பேருதவியும், அப்பேருதவியே இராமலிங்கத்தை வள்ளலாராக ஆக்கியிருக்கிறது என்பதையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளமையை படித்துக் கொண்டு வரும் பொழுது நீங்களே உணர்வீர்கள்.

    இந்த நூலுள் 110 தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்த தலைப்புகளில் வரும் அருள் நிறைவு சிறிதளவே ஆகும். இராமலிங்கத்தை வள்ளலாராக ஆக்கிய பேறுகளை எண்ணிக்கை தந்து கூறமுடியாது என்பதை

    "நான்பெற்ற நெடும்பேற்றை ஓதிமுடியா தென்போலிவ்

    வுலகம் பெறுதல் வேண்டுவனே"

    என்பார். எழுகடல் அளவினும் பெரியது அவர் பெற்றது. அதில் ஒரு சிறிய நீர் துளியே இந்த கட்டுரைகள்.

    இதனைப் படிக்கும் அன்பர்கள், இதன்வழி அவர்களுக்கு ஆர்வம் உந்தப் பெற்று, அருட்பா ஆறாயிரத்தையும் படித்தின்புற உளங் கொள்வார் எனின், அதுவே இந்த நூலை எழுதிய எனக்கு இந்த உலகளின் கைமாறாகும் என விதந்து மகிழ்ந்து இன்புறுவேன்.

    இந்த அழகிய நூல் வெளி வருவதற்கு எல்லாவிதத்தும் பேருதவியும், பேர் ஊக்கமும், ஆக்கமும் தந்து என்னை உற்சாகப்படுத்திய சன்மார்க்க சீலர், சன்மார்க்க அன்பர் நாகபட்டினம் சிவசக்திக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மேதகு R.K. ரவி அண்ணார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்களுக்கும், சூழ்ந்த நண்பர்களுக்கும் வள்ளற் பெருமானின் தனிப்பெருங் கருணைத் திறத்தால் இக, பர நலன்கள் அனைத்தும் தடையின்றிக் கிடைத்து உயர வேண்டுமென வள்ளல் மலரடியை வாழ்த்தி வணங்குகிறேன்.

    இந்த நூலின் கணினிப் பிரதியைப் பிழைத் திருத்தம் செய்யும் பொழுதும், இந்நூலினை நான் எழுதுங் காலத்தும் எனக்கு எல்லா விதத்தும் ஆக்கமும், ஊக்கமும், உதவியும் புரிந்த எனது துணைவியார் செல்வ மீனாள் அவர்களுக்கும் எனது அன்பு மகன் ராமசிவத்திற்கும் நன்றி உரித்தாகுக.

    இந்த நூலினைக் கணினி அச்சுச் செய்து அழகிய அட்டைப்படத்துடன், சிறந்த முறையில் கட்டமைப்புச் செய்த சிவகாசி சூர்யா பிரிண்ட் கொலூசன்ஸ் அச்சகத்தின் உரிமையாளர் திரு. C. முருகேசனார் அவர்களுக்கும், அவர் தம் உதவியாளர் திரு. பழனியப்பன் அவர்களுக்கும் மற்றும் கணினி அச்சுப் பொறித்த நண்பர்களுக்கும், அச்சக உதவியாளர்களுக்கும் எனது மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்

    சி. செகநாதன்

    ஆர்.கே. ரவி

    நிர்வாக இயக்குநர்

    சிவசக்தி நிறுவனங்கள்

    20/43 நீலா தெற்குத் தெரு

    நாகப்பட்டினம்.

    அணிந்துரை

    திருவருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்! சரணம்!

    பெருமதிப்பிற்குரிய புதுக்கோட்டை உயர்திரு சி. செகநாதன் ஐயா அவர்களுக்கு வணக்கம்! தங்களுடைய நீங்களும் வள்ளலார் ஆக நூல் பிரதி கிடைத்தது. ரொம்பவும் மகிழச்சி.

    திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானாரைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும், நினைப்பதும், சிந்திப்பதும் எல்லாமே இறைவழிபாடு என்று கருதுகிறேன். 1823 முதல் 1874 வரை மனித வடிவில் நடமாடிய வள்ளற் பெருமானாரின் நிலையும், 1874ல் அருட்பெருஞ்சோதி ஆண்டவரும், திருவருட் பிரகாச வள்ளற் பெருமான் அவர்களும் ஒன்றான பின்னால் அந்நிலை வேறு என்று கருதுகிறேன். அதாவது வெவ்வேறு நிலை என்று சிந்திக்கின்றேன்.

    எல்லா உயிர்களிலும் பெருமானார் கலந்த பின்னர் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களோடு அவற்றையும் கடந்து ஆட்சிக்கு மாறிய பின்னர், எந்த தெய்வத்தை நாம் ஆராதித்தாலும், எந்த மகான்களை நாம் ஆராதித்தாலும், அங்கும் எங்கும் இலாதபடி எல்லா நிலையிலும் அருள்புரிபவர் வள்ளற் பெருமான் அவர்களே ஆகும் என்று புரிந்து கொள்கிறேன்.

    தாங்கள் நீங்களும் வள்ளலார் ஆக என்ற இந்த நூல் அருமையாகப் பெருமானாரை, அருட்பாவை அற்புதமாகச் சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். இதுவரை பெருமானாரைப் பற்றி வந்த நூல்களில் சிகரத்தில் வைத்து எண்ணக் கூடிய எழுத்தில், தங்கள் எழுத்தும் முதன்மையாகத்தான் இருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருப்பதற்கில்லை.

    சுகம் தரும் சன்மார்க்கம் என்பது போல, தாங்கள் எழுதியிருக்கும் இந்த நூலை வாசிப்பது ரொம்ப ரொம்பவும் சுகமானது. அதே சமயம் சூட்சுமமானதும் கூட. அன்பே சிவம் திருமந்திரம், அன்பின் வழியது உயிர்நிலை திருக்குறள். அன்பெனும் குடில் புகும் அரசு திருவருட்பா.

    திருவருளும் குருவருளும் கைகுலுக்குகிற போது அங்கு அருட்பெருஞ் சோதி தரிசனம் உயிர்களுக்கு மிகப் பெரிய அளவில் ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்தது. தரும். தந்து கொண்டே இருக்கும்.

    ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிசெயும் ஆக்கையும்

    ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் சோதி

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

    திருச்சிற்றம்பலம்

    அன்புடன்

    ஆர்.கே. ரவி

    1. வருவிக்க உறுதல் வேண்டும்.

    உலகில் நீங்களும் வள்ளலார் ஆக வேண்டுமாயின், அருட்பெருஞ்சோதி ஆண்டவரால் இந்த உலகிற்கு வருவிக்கப் பெறுதல் வேண்டும். வருவிக்க உறுதல் மாத்திரம் அல்ல, உலகமே உய்ய, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு உரிய ஒரு பெரிய குறிக்கோளுடனும், அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு உரிய ஆற்றலைத் தர உள்ள அமுதமும் தரப்பட வேண்டும், அத்துடன் அல்ல, அருளின் முழுமைப்பாடான ஆற்றலையும். சூழலையும் உங்களுக்கும் ஆண்டவர் தந்து, ஆண்டவர் உங்கள் அருகிலேயே என்றும் பாதுகாவலாக இருப்பார் ஆயின், நீங்களும் வள்ளலாரைப் போல வாழ்வாங்கு வாழலாம்,

    மேலும் எந்தக் குறிக் கோளுக்காக இங்கே வர உற்றீர்களோ அந்தக் குறிக்கோளின் முழுமைப்பாடாக நீங்கள் விளங்குமாறும் ஆண்டவர் உங்களை முழுமைப்படுத்த வேண்டும்,

    நான் இன்ன குறிக்கோளுக்காக இவ்வுலகிற்கு வந்துள்ளேன் என அறிவித்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் ஆக்கப் பெற்றால் நீங்களும் வள்ளலார் ஆகிவிட முடியும்.

    வள்ளலார் தான் இவ்வுலகிற்கு ஏன் வந்தேன்? எதற்காக வருவிக்கப் பெற்றேன் என்ற பாடலைப் பார்ப்போமா?

    அகத்தே கறுத்துப் புறத் துவெளுத்

    திருந்த உலகரனை வரையும்

    சகத்தே திருத்திச் சன்மார்க்க

    சங்கத் தடைவித் திடஅவரும்

    இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்த்

    திடுதற் கென்றே எனை இத்த

    உகத்தே இறைவன் வருவிக்க

    உற்றேன் அருளைப் பெற்றேனே – 5485

    வருவிக்க உற்றதையும், அதற்கான காரியத்தையும் இப்பாடலில் கூறியுள்ளதை உற்று நோக்குக.

    2. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

    இந்த உலகத்தில் மட்டுமல்ல எல்லா உலகங்கள் ஆகிய 2427 உலகங்களிலும், வான், விண் வெளி, அண்டம் ஆகிய அனைத்திலும் உள்ள உயிர்வகைகள் அனைத்தும் சுகமாக அல்ல, வசதியாக அல்ல, இன்பத்தைப் பெற்று, அவைகளுக்கு ஒரு துன்பமும் இல்லாது வாழ வேண்டியே வந்த வள்ளலாரைப் போல நீங்களும் ஆக வேண்டுமாயின், அவர் ஆண்டவரிடம் முறையிட்டுக் கண்ணீர் வடித்து, உலக உயிர்கள் அனைத்தும் கடுந்துயர், அச்சமாதிகளில் இருந்து என்னால் அவைகள் இன்பமடையும்படி வரம் தர வேண்டும் என நீங்களும் அழுதால் அவர் போன்று ஆகலாம் அல்லவா? பாடலைப் பார்ப்போம்.

    கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த

    கடுந்துயர் அச்சமா திகளைத்

    தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்

    தரவும்வன் புலைகொலை இரண்டும்

    ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க

    உஞற்றவும் அம்பலந் தனியே

    மருவிய புகழை வழுத்தவும் நின்னை

    வாழ்த்தவும் எனக்கிச்சை எந்தாய் - 3407

    மற்றொரு பாடல்

    மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்

    வருத்தத்தை ஒருசிறிதெனினும்

    கண்ணுறப் பார்த்தும் செவியுற கேட்டும்

    கணமும் நான் சகித்திட மாட்டேன்

    எண்ணுறும் எனக்கே நின்அருள் வலத்தால்

    இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

    நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான்

    நல்குதல் எனக்சிச்சை எந்தாய் - 34.08

    முதற்பாடலில் கடுந்துயர், அச்சம் முதலாக உள்ளவற்றை ஆண்டவனே நின் அருளால் நான் தவிர்த்திடல் வேண்டும் என்றும், இந்த உலகம் அனைத்தும் புலை, கொலை இல்லாத நெறியில் நடக்க வேண்டும் எனவும் தன் இச்சையாக ஆண்டவரிடம் கூறியவர்.

    இரண்டாவது பாடலில் மண்ணால் ஆன எல்லா உலகங்களிலுமுள்ள உயிர்களின் அனைத்து வருத்தத்தை ஒரு சிறிது எனினும் என் கண்களால் பார்த்தும், செவிகளால் கேட்கவும் கணமும் என் உள்ளம் சகிக்காது. அதனால் அவ்வுயிர்களுக்கு வந்த வருத்தத்தைத் தவிர்த்து அவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ உள்ள வரத்தை நான் கேட்ட போதெல்லாம், கேட்கும் போதெல்லாம் தருதல் வேண்டும். இதுவே எனது இச்சை என்கிறார்.

    கருணையே வடிவமாகத் தான் ஆகிய வள்ளலார் போல் உலக உயிர்களுக்கு துன்ப நீக்கம் செய்து இன்பந்தர நீங்களும் ஆண்டவரிடம் வரம் கேட்டு அழுது அவர்தர உங்களுக்கு அவ்வரம் கிடைத்தால் வள்ளலார் ஆகலாம்.

    3. சிற்றம்பலக் கல்வியைக் கற்றது. அதன் பயனை உற்றது.

    உலகில் சாகாக் கல்வி, சாகாக் கலை, சாகாத்தலை என்றெல்லாம் உள்ள சொல் வழக்கு சித்தர்கள் காலத்திலே இருந்து தொடர்ந்து வழக்கில் இருந்து வருவனவே ஆகும்.

    ஆனால் இதையெல்லாம் மீறி வள்ளலாருக்கு ஆண்டவர் சிற்றம் பலக் கல்வி என்றொரு கல்வியைக் காட்டி, கற்றுக் கொடுத்துள்ளார்.

    அந்தச் சிற்றம்பலக் கல்வியில் மட்டும் தான் இயற்கை உண்மையின் அடிப்படையாகிய கருணை என்பது உள்ளது. அதுவே கடவுள் மயமானது. தன்னைப் போலவே வள்ளலாரையும் ஆக்க நினைத்த ஆண்டவர் அவருக்குச் சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்தார்.

    இதுவரை தோன்றிய ஞானிகள் யாரும் இயற்கை உண்மைக் கருணையை, அதன் விரிவை, விளக்கத்தைக் கூறி இயற்கையில் உள்ள கருணையே ஆண்டவர் என்று கூறிடவில்லை என்பது கூர்ந்து நோக்கத் தக்கது.

    எங்கே கருணை இயற்கையின் உள்ளன

    அங்கே விளங்கிய அருட்பெருஞ் சோதி

    என்ற அகவலடி இதற்குச் சரியான சான்றாகும்

    அந்தச் சிற்றம்பலக் கல்வியுள் கருணை மட்டுமல்ல, ஐந்து பெரிய நிலைகள் உள்ளன. அவை வருமாறு:-

    1 சிற்றம்பலக் கல்வியைக் கற்றது.

    2 அதனுள் இருந்த ஒரே நிலையாகிய கருணை நெறியையே தன்னதாகப் பெற்றது.

    3.எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றது.

    4. யாராலும் அடைய முடியாத உயர்நிலையைப் பெற்றது.

    5. உலகில் பிறநிலையைப் பற்றாது, சிவானாந்தப் பற்றையே பற்றாகப் பற்றியது.

    என இவ்வைந்தையும் சிற்றம்பலக் கல்வியுள் இருந்து வள்ளலார் பெற்றார். பெற்றுக் கொள்ளும்படி ஆண்டவர் சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்தார். பாடலைப் பார்ப்போம்.

    கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி

    உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்

    பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்

    பற்றேன் சிவானந்தப் பற்றேனன் பற் றெனப் பற்றினனே - 4745

    இது போல் ஆண்டவர் யாருக்காவது சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்து அதனுள் உள்ள ஆற்றல்களைப் பெறுமாறு செய்கிறாரோ அவர் வள்ளலார் ஆகலாம் தானே!

    4. வள்ளலாரை ஆண்டவர் வளர்த்த விதம்.

    சமரச சுத்த சன்மார்க்கத்தை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து, எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும், மரணமற்று நித்தியப் பேரின்பப் பெரு வாழ்வைப் பெற்று ஓங்கவுமே வள்ளலாரை இவ்வுலகிற்கு வருவித்துத் தந்தார் ஆண்டவர்.

    வள்ளலாருக்கு இட்ட பணி நீண்ட நெடியது. இது உலகந்தோன்றியதிலிருந்து வெளிப்படாத ஒரு புதிய நெறி, ஆற்றல் நெறி, இகத்தேபரத்தை எல்லோரும் பெற்ற இன்புறும் நெறி, சுகமயமான நெறி, இப்படிப்பட்ட நெறியை உலகில் பரப்ப அனுப்பிய வள்ளலாரை, ஆண்டவர் எப்படி எல்லாம் வளர்த்து ஆளாக்கி மாண்புற செய்தார் என்பதைப் பார்ப்போம். இதனை அவரே கூறுமாறு காண்போம்.

    1. என்னையும் ஒரு பொருட்டாக அருட்சோதி ஆண்டவர் தம் உள்ளத்தில் எண்ணி, என் உள்ளத்தில் அவரே

    2. அன்னையாகவும், அப்பனாகவும் நீங்காது என்றும் இருந்து,

    3. உலகியலோ, உலகியல் எண்ணமோ, உலகியல் கவர்ச்சியோ என் உள்ளத்தை சிறிதும் பிடிக்காத வகையாக்கி,

    4. ஆண்டவரின் அளவற்ற பேரருளால் என் தன் அறிவினை விளக்கம் பெறச் செய்து,

    5. சிறிய நெறிகளில் என் எண்ணங்கள் செல்லாத திறத்தைக் கொடுத்து,

    6. அழிந்து போகாத அதாவது இறந்து படக் கூடாது என்னும் உயரிய உணர்ச்சியை, அதன் உணர்ச்சி நெறியை என்னுக்குள் தந்து

    7. என் உடலில் உள்ள புலால், இரத்தம் ஆகியவை அனைத்தையும் இல்லாதாக்கி, என் உடம்பை ஒளிமயம் ஆக்கிய பின்,

    8. சாகாத கல்வியுள் உள்ள இதுவரை யாருக்கும் தராத 43 தரங்கள் முழுவதையும் உணர்த்தி.

    9. அதன் மேல் உள்ள சாகாத வரத்தையும் எனக்குத் தந்து.

    10. அதோடு மேலும் மேலும் என்னுள் ஆண்டவர் மேல் அன்பைப் பெருகச் செய்து, விளைவேறி முற்றும் படி செய்து,

    11. அருளினது பேர் ஒளியாலே என்னை நிறைவித்து,

    12. அப்பேரொளியால் ஏற்படும் இன்பங்களையெல்லாம் என்னுள் விளைவேறும் படி செய்வித்து,

    13. இவ்வளவும் செய்த பின்னர் ஆண்டவரோடு என்னையும் ஓருருவமாக ஆக்கி,

    14. அதன் பின்னர் நான் எது நினைத்தேனோ, அது அனைத்தையும் சீர் உறுமாறு எனக்குச் செய்வித்து,

    15. எனது உயிர் மேலும் மேலும் திறம் பெற்று

    Enjoying the preview?
    Page 1 of 1