Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inikkum Inba Irave Nee Va!
Inikkum Inba Irave Nee Va!
Inikkum Inba Irave Nee Va!
Ebook112 pages48 minutes

Inikkum Inba Irave Nee Va!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802739
Inikkum Inba Irave Nee Va!

Read more from Vimala Ramani

Related to Inikkum Inba Irave Nee Va!

Related ebooks

Reviews for Inikkum Inba Irave Nee Va!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inikkum Inba Irave Nee Va! - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    இனிக்கும் இன்ப இரவே நீ வா!

    Inikkum Inba Irave Nee Va!

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    அந்த முதலிரவு அறையில் ஊதுபத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. சென்ட்டுகளாலும் பூக்களாலும் அந்த அறை வாசனை சுவாசத்தை வெளியிட்டபடி திணறிக்கொண்டிருந்தது.

    மருதோன்றி தடவிய விரல்களால் பாலும், பழமும் நிறைந்த தட்டை எடுத்தபடி பாவனா அந்த அறைக்குள் தன் மருதோன்றி கால்களை வைத்து உள்ளே நுழைகிறாள்.

    கருணாகரன் படுக்கையிலிருந்தபடியே திரும்பிப்பார்த்தான். இவன் பாக்கியசாலி.

    பணக்கார பாவனா இவனுக்கு கிடைத்தது ஆச்சரியம். அழகான பாவனா இவனுக்கு மனைவியானது அதைவிடப்பெரிய ஆச்சரியம். கருணாகரன் தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். இது மெய் தானா?

    காலையில் வேள்விப்புகையில் இந்த பாவனாவின் கழுத்தில் தாலி கட்டியது மெய்தானா? அக்னி வலம் வந்தது உண்மைதானா?

    கோவையில் ஓடிக்கொண்டிருக்கும் மில்களை விட இப்போது ஓடாத மில்கள் தான் அதிகம். முன்பு மில் அதிபராக இருந்த புவனேஸ்வரன் இப்போது ஒரு வெட் கிரைண்டர் கம்பெனியின் முதலாளி. கோவையில் பிரபலமான ஒரு வெட் கிரைண்டர் பேட்டன் வாங்கி, அப்ரூவல் வாங்கி, தயாரித்து புவனேஸ்வரன் நிறைய சிரமப்பட்டிருக்கிறார். வெட் கிரைண்டர் என்றால் அதைச்சார்ந்த உபரித்தொழில் எவர்சில்வர் டிரம், மோட்டார், பெல்ட்... வாஷர் என்று தொழிற்சாலை பெரிதாகி விட்டது. காளப்பட்டியில் ஒரு ஏக்கரா நிலப்பரப்பில் இவரின் புதிய சாம்ராஜ்ஜியம் துவங்கியது.

    இந்த சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்தான் புவனேஸ்வரன்,

    இந்த மன்னரின் ஒரே வாரிசு....

    பட்டத்து இளவரசிதான் பாவனா. தன் மனைவி இறந்ததும், பாவனாவிற்கு எந்த குறையும் இல்லாமல் வளர்த்தார் புவனேஸ்வரன்.

    சில வருடங்களுக்கு முன் கருணாகரன் புவனேஸ்வரனின் கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்த காட்சி நினைவுக்கு வந்தது. கிராமத்தில் நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் தன் தாய்க்கு வைத்தியம் பார்க்கும் வசதி இவனுக்கு இல்லை. அன்பை மட்டுமே ஊட்டி அன்னையின் அருகில் இருந்தால் நோய் எப்படி குணமாகும்?

    துணிந்து தாயை தன் மாமாவின் பொறுப்பில் விட்டு விட்டு வேலை தேடி கோவை வந்தான். அலைந்தான். வேலை என்று ஒன்று கிடைத்தது. ஒழுங்காக சம்பளம் வந்தால் ஊருக்கு பணம் அனுப்புவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஒருவேளை இவன் பெரிய மனிதன் ஆகி, ஆயிரக்கணக்காய் சம்பாதிக்கத் தொடங்கி விட்டால் தாயை இந்த கோவைக்கே அழைத்து வந்து, தனி வீடு எடுத்து, நல்ல மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கலாம். அப்போதுதான் புவனேஸ்வரனின் அறிமுகம் கிடைத்தது.

    ஒரு கூரியர் சர்வீசில் ஆரம்பத்தில் அட்டண்டராகச் சேர்ந்தான். விலாசம் பார்த்து தபால்களை சேர்ப்பிப்பது இவன் வேலை.

    அப்படித்தான் ஒரு நாள் புவனேஸ்வரனின் வீட்டிற்குப் போக நேரிட்டது.

    அப்போதுதான் புவனேஸ்வரனின் அறிமுகம் கிடைத்தது. அது மட்டுமா?

    யாரோ விசும்பும் ஒலி....

    கருணாகரன் சட்டென்று கலைந்தான்.

    அழுவது யார்?

    இவன் காலைப்பிடித்தபடி பாவனா தன் அழுது கொண்டிருந்தாள்.

    'ஏன்...? என்னவாயிற்று?'

    சினிமாக்களில் வருவது போல் பாவனா இவனை விரும்பவில்லையா? அவளுக்கு ஏற்கெனவே யாராவது காதலன் இருக்கிறானா? புவனேஸ்வரன் இவளின் விருப்பத்திற்கு விரோதமாகத் திருமணம் செய்து கொடுத்து விட்டாரா?

    கருணாகரன் குனிந்து பாவனாவை அன்புடன் அணைத்து, நிற்க வைத்தான்.

    ஏய்... என்ன இது? ஏன் அழறே?

    பாவனா மலங்க மலங்க விழித்தாள்.

    ரிலாக்ஸ்… டோன்ட் வொர்ரி... நான் ஒன்னும் பூதம் இல்லை... உன்னை ஒண்ணும் பண்ணிட மாட்டேன்... இரு... இரு....

    - என்றவன் சங்கீதம் கேட்டால் அந்த சூழ்நிலை இயல்பாக இருக்கும் என்று தோன்றியதால் அருகில் இருந்த டேப் ரெக்கார்டரை ஆன் செய்தான்.

    அதிலிருந்து...

    கெட்டி மேளச்சத்தம் கேட்டது.

    நல்ல சகுனம் தான்...

    ஆனால்...?

    திடீரென்று பாவனா இரைந்து கத்தினாள்.

    அதை நிறுத்து... அதை நிறுத்து...

    கத்தியவளுக்கு திடீரென்று 'வலிப்பு' வர வாயில் நுரை தள்ளியபடி இவன் காலடியில் மயங்கிச் சாய்ந்தாள்.

    அறைக்கதவு தட்டப் பட்டது. வெளியே...?

    மாப்பிள்ளை மாப்பிள்ளை.... அந்த 'மியுசிக்' கை நிறுத்துங்க என்ற புவனேஸ்வரனின் குரல் கேட்டது.

    காலடியில் மயங்கிய பாவனா...

    கதவோரத்தில் மருண்ட புவனேஸ்வரன்...

    டேப்பில் கெட்டி மேளம்.!

    2

    தன் மாமனார் புவனேஸ்வரன் முன் கருணாகரன் அமர்ந்திருந்தான். கருணாகரனின் கைகளைப் பிடித்தபடி புவனேஸ்வரன் பேசினார்.

    "மாப்பிள்ளை...! நான் பண்ணியது தப்புத்தான். என் பொண்ணுக்கு வலிப்பு நோய் இருக்கிறது நிஜம். ஆனா இந்த நோய் பிறவியில் இருந்து வரவில்லை. திடீரென்று ஒரு நாள் கல்லூரியிலிருந்து திரும்பிய போது எதையோ பார்த்து பயந்து இருக்கிறாள். திடீரென்று அழுவாள். சிரிப்பாள்... மேளச்சப்தம் கேட்டால் 'பிட்ஸ்' வந்து விடும். நானும் பார்க்காத டாக்டர் இல்லை. செய்யாத மருத்துவம் இல்லை... 'இவள் ஆழ்மனதில் ஏதோ ஒரு சம்பவம் பதிந்திருக்கிறது. அதை மெல்ல மெல்ல அறிய வேண்டும். அப்போதுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1