Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kallichedi Kaadhal
Kallichedi Kaadhal
Kallichedi Kaadhal
Ebook126 pages45 minutes

Kallichedi Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802763
Kallichedi Kaadhal

Read more from Vimala Ramani

Related to Kallichedi Kaadhal

Related ebooks

Reviews for Kallichedi Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kallichedi Kaadhal - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    கள்ளிச்செடி காதல்

    Kallichedi Kaadhal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    அந்தச் சூழ்நிலையே அமைதியாக இருந்தது. அற்புதமாக இருந்தது. அனைவரும் தியானத்தில் அமர்ந்திருந்தனர். சற்றே ஒளியும், இருட்டுமாக இருந்தது அந்தத் தியான மண்டபம்.

    அனைவரின் கண்களும் மூடிக் கிடந்தன. ஸ்பீக்கரில் 'ஓம்' - என்கிற பிரணவ மந்திர ஒலி, வண்டின் ரீங்காரம் போல் ஓங்கி ஒலித்தது. அத்தனை பேரும் பிராணாயாமப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பத்மாசன நிலையில் நாபியிலிருந்து மூச்சை இழுத்து உள்ளடக்கிப் பின் வெளிக் கொணர்ந்தார்கள்.

    ஸ்வாமிஜியின் குரல் ஒரு தாலாட்டைப் போல் 'மைக்'கின் மூலமாய் ஸ்பீக்கரில் துல்லியமாகக் கேட்டது.

    உங்களுக்குள் ஒரு சக்தி... பிராண சக்தி. ஆதார சக்தி. அதை நீங்கள் உணருகிறீர்கள். உங்களை ஆட்டுவிக்கும் மனசக்தி. இந்தப் பிராணாயாமத்தின் மூலம் உங்களை நீங்களே உள்ளுக்குள் தரிசிக்கிறீர்கள். உங்களை நீங்களே ஆனந்தமயமாக உணருகிறீர்கள். உடலெல்லாம் மகிழ்ச்சி அலைகள் பரவுகின்றன. 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' - என்பது போல் உங்களின் மகிழ்ச்சி மற்றவர்களையும் பற்றிக் கொள்கிறது. 'அன்பே சிவம்' - அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவதுதான் வாழ்க்கை. இந்த உள்ளமே பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம். உங்கள் உள்ளுக்குள் இருக்கும் ஜீவசக்தி அன்பின் சக்தி... ஓம்

    ஸ்வாமிஜியின் குரல் மெல்ல ஒலிக்க... அனைவரும் 'ஓம்' - என்று உரக்கச் சொல்ல, உத்தமுக்கு அழுகை வந்தது! இந்த அன்பின் சக்தியை, ஆதாரமான ஜீவசக்தியை இவன் உணர்ந்திருக்கிறான். இவன் தன்னுள் இருந்த அன்பை, பாசத்தை, நேசத்தை, மானுட நேயத்தை மற்றவர்களுக்குத் தந்தவன்தான்.

    ஆனால்... ஆனால்...

    பயிற்சி முடிந்துவிட்டது. ஸ்வாமிஜி எழுந்துவிட்டார். அனைவரும் எழுந்து நின்றனர். இது... இவர்களின் கடைசி வகுப்பு.

    இந்தச் சிறைக்கைதிகளுக்குத் தியான மையத்திலிருந்து பயிற்சி கொடுப்பதற்கென்றே சத்குரு சிவானந்தா அவர்கள் வந்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக இந்தப் பயிற்சி தொடர்கிறது. தினம் தினம் மூன்று மணி நேரம் யோக நித்திரை.

    ஜெயில் அதிகாரிகள் மனமுவந்து இந்தச் சிறைக் கைதிகளுக்கு ஸ்வாமிஜி பயிற்சி அளிக்க அனுமதி தந்ததால்தான் இந்த நிலை... இந்த வாய்ப்பு.

    கிட்டத்தட்ட 500 கைதிகள்... இந்த மூன்று மணி நேரமும் தங்களைக் கைதியாக உணரவில்லை... ஏதோ ஒரு தியானப் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பதாக ஒரு பாவனை!

    இன்று பயிற்சி நிறைவு நாள். இந்தப் பயிற்சிக்குப்பின் ஒரு விழா இருக்கிறது. சிறைக் கைதிகளும் கலந்துகொள்ளலாம். இவர்களை மனிதர்களாக நினைத்து நடத்தப்படும் விழா இது! தீபாவளி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் ஊர்ப் பெரிய மனிதர்கள் வருவார்கள். இனிப்புத் தருவார்கள். வரிசையாகக் 'க்யூ'வில் வந்து அந்த இனிப்பைப் பெற்றுக் கொள்வது இவர்கள் வழக்கம். அது பழகிப் போன ஒன்று!

    ஆனால் இது புதிது... அனைவருக்கும் ஒரே சமயத்தில் விருந்து... ஆன்மிக விருந்து. இவர்கள் குற்றவாளிகளாக மாறிய கொடுமையிலிருந்து மன அமைதி கிடைக்கும் விருந்து.

    கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்கடிக்கச் செய்யும் ஒரு மயக்க மருந்து. வாழ்க்கை இந்தச் சிறைக்குள் முடிந்து விடப் போகிறது என்பதை மாற்றி, இது சிறையல்ல... இங்கும் விடுதலை உணர்வு உண்டு - என்பதை உணர வைத்த பயிற்சி இது...

    பொதுமக்களும், பத்திரிகையாளர்களும், கைதிகளோடு இணைந்து அமர்ந்து எந்தவித வித்தியாசமும் இன்றி (?!) ஒன்றாகக் கலந்துகொண்ட விழா இது.

    மேடையில் ஜெயில் அதிகாரிகள் பேசினார்கள்.

    இந்த யோகப் பயிற்சியில் பயனடைந்த கைதிகள் பேசினார்கள்.

    நான் ஒரு கொலை செய்துவிட்டு இங்கு வந்தேன். விடுதலைக்குப் பின் வெளியே வந்து இன்னும் இரண்டு கொலைகள் செய்வதாக இருந்தேன். ஆனால் இந்தப் பயிற்சி என்னை மாற்றிவிட்டது. மிருகமாக இருந்த நான் மனிதனாக மாறினேன்... மனித நேயத்தை உணர்ந்தேன்...

    வரிசையாகப் பலர்... தாங்கள் இங்கு வந்த சூழ்நிலை பற்றிக் கூறி, தங்கள் இயலாமை, கோப, தாபம் அத்தனையும் மாற்றப்பட்டுவிட்ட அற்புதத்தை அனைவருக்கும் பறை சாற்றினார்கள்.

    இது சாதாரண விழா அல்ல.

    சிறை என்பது இரும்புக் கம்பிகளுக்குள் அல்ல... இங்கும் சுதந்திர எண்ணம் படைத்த மனிதர்கள் இருக்கிறார்கள்.

    சந்தர்ப்பவசத்தால் இவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். இவர்களால் மனிதர்கள் ஆக முடியும். வெறும் எண்களால் மட்டுமே அடையாளம் காட்டப்பட்ட இவர்கள் இப்போது எண்ணங்களால் அறியப்படுகிறார்கள்.

    சிறைச்சாலை என்ற இந்தப் பெயர் இப்போது அன்பு இல்லமாக மாற்றப்பட்டு விட்டது. கைதிகள் என்ற கறை படிந்த சொற்கள் அன்பு இல்லம் வாழ் அன்பர்கள் என்று மாற்றப்பட்டுவிட்டது!

    உத்தம் பார்த்துக் கொண்டிருந்தான்.

    கைதி எண் என்று எண் சொல்லி அழைக்கப்பட்டவன் இவன். இவன் பெயர் உத்தமன்!

    உத்தம் எழுந்தான். வெள்ளை அரைக்கால் நிஜாரும், சட்டையும் அணிந்து அவன் மேடை நோக்கி நடக்க, இவனது சக நண்பர்கள் கைதட்டி ஆரவாரிக்க உத்தம் 'மைக்'கின் அருகே போய் நின்றான்.

    கண்களில் கண்ணீர் வழிந்தது.

    கடந்த காலம் இதயத்தில் ததும்பியது.

    உத்தம் பேச ஆரம்பித்தான். கூட்டம் கேட்டுக் கொண்டிருந்தது.

    ***

    2

    நான் இசைக்குழு வைத்து நடத்திக் கொண்டிருந்தேன். கல்லூரியில் என் குழுதான் எல்லாப் போட்டிகளிலும் முதலிடம் வகிக்கும். என் குழுவின் பெயர் என்ன தெரியுமா?

    ஆனந்தலஹரி!

    ஆனந்தலஹரி!

    ஆனந்தி ஒரு முறை அந்தப் பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

    ஆனந்தி கேட்ட கேள்விக்கு உத்தம் சிரித்தான்.

    "உன் பேர் ஆனந்தி? நீ பாடும்போது ஸ்வரங்களின்

    Enjoying the preview?
    Page 1 of 1