Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhalala
Nandhalala
Nandhalala
Ebook131 pages45 minutes

Nandhalala

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சிட்டி, சிவபாதசுந்தரம் போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள்/ விமர்சகர்களாலும், பிரபஞ்சன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம் போன்ற சமகால எழுத்தாளர்களாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற அடுத்த தலைமுறையினராலும் ஒரு சேரப் பாராட்டப்படும் மாலன் (நாராயணன்) இலக்கிய உலகிலும் இதழியல் உலகிலும் நன்கறியப்பட்டவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பட்டப்படிப்பும், அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

20 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில பரிசுகள் வென்றிருக்கின்றன. சமகால இலக்கியம் குறித்த வகுப்பறைகளில் இவரது படைப்புக்கள் விவாதிக்கப்படுகின்றன. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு 1997ஆம் ஆண்டின் சிறந்த நூல் என்ற பரிசளித்து பாராட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இவரது படைப்புலகம் பற்றிய ஒருநாள் கருத்தரங்கை நிகழ்த்தியது.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளிலும் பிரன்ச், சீனம், மலாய் ஆகிய உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதை ஒன்றை திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா குறும்படமாகத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவரது நாவல் ஜனகணமன ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எமர்ஜென்சிக் காலத்தை விமர்சிக்கும் இவரது கவிதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள டஃப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி பதிப்பித்த ‘அவசரநிலைக்காலக் குரல்கள்'(Voices of Emergency- an anthology of protest poetry) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவரது வேறு சில கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில், சாகித்ய அகாதெமி இலக்கிய இதழான Indian Literature இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதும் பரவி வாழும் தமிழர்களின் எழுத்துக்களை ‘புலம் பெயர் இலக்கியம்’ என 1994ஆம் ஆண்டே வகைப்படுத்தி தினமணிக் கதிரில் அதற்கென சிறப்பிதழ் வெளியிட்டு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அதனைத் தொடர்ந்து அதனைக் குறித்துப் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புரை ஆற்றியவர். 2011ல் சிங்கப்பூரிலும் 2014ல் கோயம்புத்தூரிலும் இந்தப் பொருள் குறித்த சர்வதேச மாநாடுகளை நட்த்துவதில் முக்கியப் பங்களித்தவர். 2015 ஆம ஆண்டு புலம் பெயர்ந்த எழுத்தாளார்களின் படைப்புக்களைத் தேர்ந்து தொகுத்து சாகித்ய அகாதெமி மூலம் நூலாக வெளியிட்டவர் சிங்கப்பூர் அரசு அளிக்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, தங்க முனைப் பேனா விருது, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அளிக்கும் விருது, கனடா இலக்கியத் தோட்டம் அளிக்கும் விருது போன்ற சர்வதேச விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராகப் பணியாற்றியவர்.

சிங்கப்பூரின் எழுத்தாளர் வாரம், மலேசியாவில் நடை பெற்ற இந்திய விழா, சாகித்ய அகாதெமியின் எழுத்துக்களின் திருவிழா போன்ற பல சர்வதேச இலக்கிய விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டவர். இலக்கியத்தை வளர்த்தெடுக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சாகித்ய அகாதெமி அமைப்பில் தமிழ் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கிறார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழக ஆளுநரால் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.

தமிழகத்தின் முன்னணி இதழ்களான இந்தியா டுடே, தினமணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சன் செய்திக் குழுமத்தின் செய்திப் பிரிவுத் தலைவராக இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை வழிநடத்தியதன் காரணாமாக தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அண்மைக்காலம் வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இயக்குநராக கடமை ஆற்றியவர்.

யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் இதழான திசைகள் மின்னிதழை நிறுவியவர். இப்போது அது மின்பதிப்பு, மின் சொல், மின் செய்தி மின் ஆவணங்கள் ஆகியவை கொண்ட ஓர் மின் களஞ்சியமாக வளர்ந்துள்ளது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115402753
Nandhalala

Read more from Maalan

Related to Nandhalala

Related ebooks

Reviews for Nandhalala

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhalala - Maalan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நந்தலாலா

    Nandhalala

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    வண்ணதாசன்,

    8, மேலப்பாளையம் தெற்கு ரத வீதி,

    அம்பாசமுத்திரம் - 627 401.

    பிரியமுள்ள மாலன்,

    நேற்றுத்தான் இந்த வீட்டிற்குக் குடிவந்தோம். ஆறு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது. அதாவது ஆறே கூப்பிடுகிற தூரம். தனியாகப் போக இஷ்டமில்லை. மலையும் ஆறும் காற்றுமாக இருக்கிற இடத்துக்குத் தனியாகப்போனால் தாங்க முடியுமா? மூர்த்தி வந்ததும் போனேன். போனோம். ஆறுவரைதான் எல்லை என்பதுபோல் நடந்துகொண்டே போய், பேச்சும் பார்வையும் ஆற்றில் குளிக்க, திரும்பினோம். நிறையப் பாறைகள், தடவிச் செல்லும் தாமிரவருணி, அசையும் மருத மரங்கள். இத்துடன் உயரத்தில் நாங்கள் நின்ற இடத்தில் தண்டவாளங்கள், இயற்கையை இரும்பு நாகரிகத்தின் கீழ் பார்க்கிற புதிய அழகிய பரிமாணம். ஆற்றின் மேல் பாலம். டி.வி. ஆன்டெனா மேல் மீன்கொத்தி. கல்லிற்குக் கீழும் பூக்கள். இப்போது நந்தலாலா.

    இவ்வளவு நாட்கள் கழித்துப் புத்தகமாக வருவதற்கு வியாபாரமும், விற்பனையும் மட்டும் காரணங்களாக இருக்காது. நீங்களே இனம் காட்டியிருப்பது போல, ‘இதன் ஈரமான நினைவு இன்னுமிருக்கிற வாசகர்களின் பிரியத்தால்’ இது புத்தகம் ஆகிறது. பிரியம் என்பதால் புத்தகம் மட்டுமல்ல, என்னென்னவோ எல்லாம் ஆகும். ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. பிரியம் என்கிற வார்த்தையைக் கிண்டல் செய்கிறவர்கூட யாரிடமாவது பிரியமாக இருக்கக்கூடியவர்கள் தான். இந்தக் கிண்டலே ஒருவகைப் பிரியமாகவும் இருக்கலாம்.

    நீங்கள், நான், எழுதுகிற மற்றவர்கள் எல்லோரும் பிரியம் என்ற உணர்விற்கு அவரவர்க்குண்டான அனுபவத்திற்கும், ஆழத்திற்கும் ஏற்ப ஒவ்வொன்றாகப் பெயரிட்டுப் பார்க்கிறார்கள், பார்க்கிறோம். தி.ஜா, யமுனா என்று, பாபு என்று, பாலி என்று, அம்மிணி என்று, அனுசூயா என்று, இந்து என்று, செங்கம்மா என்று எத்தனை பெயர் வைத்துப் பார்த்திருக்கிறார். அத்தனை பெயரும் ஒரே பெயர்தானே. நீங்கள் வைத்திருக்கிறது ‘நந்தலாலா’ என்று.

    ***

    நம்முடைய சாயலும், நம்முடைய வாழ்வின் சாயலும், ஊரின் சாயலும் இல்லாத எழுத்து நல்ல எழுத்தில்லை, நந்தலாலா எழுதும்போது, நீங்கள் திசைகள் ஆசிரியராகவோ, அந்த ஆசிரியர் என்பதன் அனுபவங்களுடனோ இருந்தீர்களா என்பது ஞாபகமில்லை. ஞாபகம் தாண்டியும், கிருஷ்ணனின் சாயல், சிவராமனின் சாயல், உஷாவின் சாயல் எல்லாம் தெரிகிறது. இன்னும் நெருங்கினவர்களுக்கு இன்னும் சில சாயல்கள் தெரியலாம்.

    மனிதர்களின் சாயலை வாழ்க்கையின் சாயலாகவே கொள்ளுவோம். உண்மையும் அதுதானே.

    ***

    சாயல் - அது எவ்வளவு ஈடுபாடுள்ள விஷயம்! பிறந்த குழந்தையைப் பார்க்கப்போயிருக்கிறோம். பெண் குழந்தை. பெற்றவள் கொண்டுவந்து கொடுக்கிறாள். மடியில் வைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்ச நேரம் பேச்சு மறந்துபோகிறது. சாந்துப் பொட்டு, திரள்கிற கன்னம், உதைக்கிற கால், நனைகிற மடி என்று இருக்கிறோம். ‘யார் ஜாடை ஸார்’ என்று கேட்கிறார் அப்பாவான கூச்சத்துடன், ஒரு நிமிடம் குழந்தையை அல்ல, அவர் முகத்தைப் பார்க்கிறோம். சிறு நறுங்கலாக உதடு துடிக்கிறது அவருக்கு. ‘உங்க ஒய்ஃப் ஜாடைதான்’ என்கிறோம். கொஞ்சமும் தாமதியாமல் ‘ஆமா ஸார்’ என்று சொல்கிறார். சொல்லும்போதே மலர்ச்சி. ‘என்ன துணியை நனைச்சுட்டாயா படவா’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் அப்பாவைப் பெற்ற முகம் வருகிறது. ‘பேத்தி யார் ஜாடை’ என்று நாம் கேட்கிறோம். வெற்றிலைச் சாற்றை மீறிச் சிரிப்பு வருகிறது. ‘நீங்கல்லியா சொல்லணும்’ - என்று சொன்னதை நிறுத்தாமல் ‘நெத்தி, மூக்கெல்லாம் அப்படியே அதோட தாத்தா ஜாடை’ என்று கன்னத்தை ஒற்றி முத்திக் கொள்கிறார்கள்.

    குழந்தையின் ஜாடை என்பது குழந்தையின் ஜாடை மட்டுமா, பார்க்கிறவர்களுக்கு யார் யார் மீது பிரியமோ, அந்தப் பிரியத்தின் ஜாடை. சொல்லப்போனால் அவரவர் ஜாடை.

    ***

    நந்தலாலா புத்தகமாக வெளிவருவதற்கு வாழ்த்துக்கள். தீண்டுமின்பம் தோன்றட்டும்.

    எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் எடுத்துச் சொல்லியிருந்த விதம் ‘ஐயோ! அசந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன்.’

    பிரீதி,

    சென்னை - 10

    ***

    நீங்கள் எழுதிய ‘நந்தலாலா’ மூலம் நான் எழுதுவது எப்படி என்று தெரிந்துகொண்டேன். கதை சொல்லும் திறனும், பாத்திரப் படைப்பும், அமைப்பும், நடையும் ‘நந்தலாலா’ எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

    சி.என். ராஜராஜன்

    சுவாமிமலை

    ***

    நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு கவிதையைப் படித்த உணர்வு ஏற்பட்டது. மாலன் சார் நீங்கள் எங்கோ உச்சிக்குப் போய்விட்டீர்கள். மனதிலிருக்கும் எண்ணங்கள் தாளில் வடிக்கப்படுமுன், இரு நயனங்களிலிருந்தும் கண்ணீர்ப் பூக்கள் பூத்துவிட்டன.

    துளசி மைந்தன்

    சேலம் - 9

    ***

    இதுவரை நாம் படித்த எத்தனையோ நவீனங்களில் நந்தலாலா மாறுபட்ட பாணியில் வித்தியாசமான முறையில் மனதைத் தொட்டிருக்கிறது.

    த. சத்தியநாராயணன்

    அயன்புரம்

    ***

    மாலன் எழுதியது சாதாரணக் கதையல்ல. காவியம் இந்தக் கதைக்கு இப்படியொரு முடிவை மாலனைத் தவிர வேறு யாராலும் தர இயலாது. ரொம்ப நாளைக்குப் பிறகு, போரடிக்காமல் படித்த கதை ‘நந்தலாலா’ தான்.

    டி. அசோக்குமார்

    சென்னை - 2

    1

    குழந்தை வீறிட்டது. கத்து கத்தென்று கத்திற்று. நெற்றிப்பொட்டு, காது மடல், கழுத்துச் சரிவு எங்கும் சிவக்கக் கதறிற்று. கிருஷ்ணமூர்த்தி எழுதிக் கொண்டிருந்ததைத் தூக்கிப்போட்டுவிட்டு பதற்றமாய் ஓடிவந்தான். தோளில் சாய்த்துக்கொண்டு, ‘ஜோ ஜோ’ என்று தட்டிக் கொண்டிருந்தாள் ஜானு. மார்போடு அணைத்துக்கொண்டாள். மடியில் போட்டுத் தொடையை அசைத்து அசைத்துத் தாலாட்டினாள். குழந்தை அடங்கவில்லை. பெரிதாய் வீறிட்டது. கிருஷ்ணமூர்த்தி எடுத்துத் தோளில் சார்த்திக்கொண்டு உலாத்தினான். தூக்கிப்போட்டுப் பிடித்தான். பாட்டுப் பாடிக் காண்பித்தான். நந்தலாலா மசியவில்லை. அழுகை நிற்கவில்லை.

    நந்தலாலாவிற்கு மூன்று மாதம். அத்தனை நாள் இருந்த பாட்டி, தலைநிற்க ஆரம்பித்ததும் ஊருக்குப்போய்ச் சேர்ந்தாள். அவள் இருந்தபோது இத்தனை கஷ்டமில்லை, பால் குடிக்கும். தூங்கும். துணியை ஈரம் பண்ணும். கொஞ்சம் சைக்கிள் ஓட்டும். முகம் பார்த்துச் சிரிக்கும். நிறம் பார்த்துக் கையசைக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1