Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திருக்குறள் கூறும் மருத்துவம்
திருக்குறள் கூறும் மருத்துவம்
திருக்குறள் கூறும் மருத்துவம்
Ebook60 pages20 minutes

திருக்குறள் கூறும் மருத்துவம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு விசயத்தையும் விரிவாகவும், பல அதிகாரங்களாகவும் விரித்து விளக்கிய திருவள்ளுவர், மனிதர்களின் ஆரோக்கியம் என்று வரும் போது மிகச் சுருக்கமாக, ஒரே அதிகாரத்துடன் முடித்துக் கொள்கிறார்.

அதிகாரத்தின் தலைப்பு “மருந்து” ஆனால் உட்கொள்ளக்கூடிய, அல்லது உடலின் வெளிப்புறமாகப் பயன்படுத்தக்கூடிய எந்த மருந்தையும் அவர் பரிந்துரைக்கவில்லை. மனிதர்களின் நோய்களைக் குணப்படுத்த எந்தெந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றோ, இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றோ அவர் எதையுமே பரிந்துரைக்கவில்லை.

மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்களை உண்டாகக்கூடிய காரணங்களையும், நோய்கள் அண்டாமல் தவிர்க்கும் வழிமுறைகளையும், ஒருவேளை நோய் உண்டானால் அதனைக் குணப்படுத்தக் கூடிய எளிய வழிமுறைகளையும் மட்டுமே விளக்குகிறார்.

திருவள்ளுவர் எதனால் எந்த மருந்தையும் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு தோன்றிய புரிதல். மருந்து அதிகாரத்தின் பத்துக் குறள்களிலும் கூறப்படும் ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றினால், உடலின் உள்ளேயும் வெளியிலும் எந்த நோயும் உண்டாகாது. ஒருவேளை தற்போது நோய் உள்ளவர்களாக இருந்தால் அது எளிதாகக் குணமாகிவிடும்.

Languageதமிழ்
Release dateJan 20, 2018
ISBN9781370545124
திருக்குறள் கூறும் மருத்துவம்
Author

Raja Mohamed Kassim

Healer - Reiki Master - Acupuncturist - Writer - Author - Blogger

Read more from Raja Mohamed Kassim

Related to திருக்குறள் கூறும் மருத்துவம்

Related ebooks

Reviews for திருக்குறள் கூறும் மருத்துவம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திருக்குறள் கூறும் மருத்துவம் - Raja Mohamed Kassim

    முன்னுரை

    வணக்கம், பல வருடங்களாக ரெய்கி மற்றும் அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலமாக பல்வகையான உடல் மற்றும் மனப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை வழங்கியதில் கிடைத்த அனுபவங்களையும்; இயற்கையின் படைப்பு, மனித உடல் மற்றும் மனதின் இயக்கத்தை ஆராய்ந்ததில் கிடைத்த அனுபவங்களையும் புரிதல்களையும் கொண்டு, மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு விளக்கம் எழுத முயற்சி செய்கிறேன்.

    திருவள்ளுவர் இந்தக் குறள்களை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதே, இன்றைய மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தக் குறள்கள் பயனுள்ளதாக இருக்குமா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இரண்டாயிரம் அல்ல இருபதாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இக்குறள்கள் சொல்லும் வழிமுறைகளைக் கொண்டு மட்டுமே நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

    மருந்து அதிகாரத்தின் பத்துக் குறள்களுக்கும் நான் கூறும் விளக்கம் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை நீங்கள் சரி பார்த்துக் கொள்வதற்காக, திருக்குறளுக்குப் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட மரியாதைக்குரிய பரிமேலழகர், மணக்குடவர் மற்றும் மு.வரதராசனார் அவர்களின் உரைகளை இணைத்துள்ளேன்.

    அன்புடன்

    ராஜா முகமது காசிம்

    மருந்து அதிகாரத்தின் முன்னுரை

    மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் திருக்குறளில் அடங்கியுள்ளன என்று அறுதியிட்டுக் கூறும் அளவுக்கு மனித வாழ்க்கையில் அனைத்துச் சூழ்நிலையிலும் வழிகாட்டக்கூடிய விசயங்களை மிக எளிமையா திருவள்ளுவ ஆசான் நமக்கு வகுத்து வழங்கியுள்ளார்.

    ஒவ்வொரு விசயத்தையும் விரிவாகவும், பல அதிகாரங்களாகவும் விரித்து விளக்கிய திருவள்ளுவர், மனிதர்களின் ஆரோக்கியம் என்று வரும் போது மிகச் சுருக்கமாக, ஒரே அதிகாரத்துடன் முடித்துக் கொள்கிறார்.

    அதிகாரத்தின் தலைப்பு மருந்து ஆனால் உட்கொள்ளக்கூடிய, அல்லது உடலின் வெளிப்புறமாகப் பயன்படுத்தக்கூடிய எந்த மருந்தையும் அவர் பரிந்துரைக்கவில்லை. மனிதர்களின் நோய்களைக் குணப்படுத்த எந்தெந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றோ, இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றோ அவர் எதையுமே பரிந்துரைக்கவில்லை.

    மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்களை உண்டாகக்கூடிய காரணங்களையும், நோய்கள் அண்டாமல் தவிர்க்கும் வழிமுறைகளையும், ஒருவேளை நோய் உண்டானால் அதனைக் குணப்படுத்தக் கூடிய எளிய வழிமுறைகளையும் மட்டுமே விளக்குகிறார்.

    திருவள்ளுவர் எதனால் எந்த மருந்தையும் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு தோன்றிய புரிதல். மருந்து அதிகாரத்தின் பத்துக் குறள்களிலும் கூறப்படும் ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றினால், உடலின் உள்ளேயும் வெளியிலும் எந்த நோயும் உண்டாகாது. ஒருவேளை தற்போது நோய் உள்ளவர்களாக இருந்தால் அது எளிதாகக் குணமாகிவிடும்.

    ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1