Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathaikathaiyam Karanamam
Kathaikathaiyam Karanamam
Kathaikathaiyam Karanamam
Ebook73 pages28 minutes

Kathaikathaiyam Karanamam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352853694
Kathaikathaiyam Karanamam

Read more from G.M. Balasubramaniam

Related authors

Related to Kathaikathaiyam Karanamam

Related ebooks

Reviews for Kathaikathaiyam Karanamam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathaikathaiyam Karanamam - G.M. Balasubramaniam

    http://www.pustaka.co.in

    கதைகதையாம் காரணமாம்

    Kathaikathaiyam Karanamam

    Author:

    ஜீ.எம். பாலசுப்பிரமணியம்

    G.M. Balasubramaniam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/gm-balasubramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கதைகதையாம் காரணமாம்

    2. திருடன் போலீஸ்

    3. அறிந்து கொள்ள..... புரிந்து கொள்ள....

    4. ஏமாறாதே ஏமாற்றாதே....

    5. இப்படியும் கூடவா

    6. எந்நன்றி கொன்றார்க்கும்

    7. தேவன் மஹாதேவன்

    8. வாழ்வின் நிதரிசனங்கள்

    9. காதல் காதல்காதல் காதல் போயின்

    10. PARANOID (பாரநாய்ட்)

    11. வஞ்சம்.

    1. கதைகதையாம் காரணமாம்

    (என் முதுகில் ஏதோ பாரம் ஏறியது போல் இருக்கிறது)

    சேது அன்று மாலை வருவதாகத் தகவல் அனுப்பி இருந்தான். தங்கமணிக்கு கொஞ்சம் ஆறுதல். ஏதோ இருக்க ஒரு வீடு இருந்தாலும் தினப்படி செலவுக்கு எங்கே போவது.? வயிற்றுப் பாட்டுக்கு கிராமத்தில் ஒன்றிரண்டு பட்டர் (பிராமணர்) வீடுகளில் பாத்திரம் தேய்த்து, முறிகளை அடிச்சு கோரினால்(பெருக்கி எடுத்தால்) அம்மியார் (பிராம்மண அம்மணி) கொடுக்கும் சோறும் கூட்டானும் கொண்டு அவளும் அவளது தாயாரும் வயிறு நிறைக்கலாம். கூட இருக்கும் சகோதரி தேவானை அவள் வகையில் வீடுகளில் பணி செய்து அவளது வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொள்வாள். வாழ்க்கை என்பது வெறும் வயிற்றோடு முடிவதா என்ன.? இருக்க இடம் உண்ண உணவு மட்டும் போதுமா.? உடுத்தவும் மேனி அலங்கரிக்கவும் இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே.. இந்த மாதிரித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சேது மாதிரியான புண்ணியவான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.

    தங்கமணிக்கு ஓரோர் சமயம் இந்த வாழ்க்கை சரியா என்ற எண்ணம் தோன்றும் சரியோ தவறோ இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. கட்டின கணவனுக்கு என்ன காரணத்தாலோ இவளுடன் தொடர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால் இவள் இஷ்டப்படி வாழ்வதிலும் கேள்வி வரக்கூடாது. வயசான அம்மா இருக்கும்வரை தலைக்குக் கூரை நிச்சயம். அம்மா போனாலும் இது தொடரும், கூடப் பிறந்த ஆங்கள் (சகோதரர்கள்) தாயின் வீட்டில் பங்கு கிடைக்காதென்று தெரிந்து (மருமக்கத்தாயம்) அவரவர் வழிகளில் சென்று விட்டனர்.

    (இந்த வேதாளம் மறுபடியும் முதுகில் ஏறிவிட்டது போல் தெரிகிறது. நிச்சயமாய் என்னிடம் கேள்வி கேட்டுக் குடையப் போகிறது. நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்கப் போகிறதா என்ன.?)

    தங்கமணியின் வீட்டைப் பற்றிக் கூறவேண்டும். அவளது அம்மா அவரது தரவாடு பற்றி நிறையவே கூறி இருக்கிறார். இப்போது மிஞ்சி இருப்பது பெத்தப் பேர்மட்டும்தான். கூட்டுப்புறத்து வீடு என்றால் தெரியாதவர் கிடையாது. தங்கமணியின் அம்மாவுக்குக் கூடப் பிறந்த சகோதரிகள் ஆறு பேர். அவரவருக்குக் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு இரண்டு கட்டுத் தரவாட்டு வீடு விற்றுப் பணமாக்கப் பட்டு பாகம் பிரிக்கப்பட்டு வந்த பணத்தில் தங்கமணியின் அம்மா இந்தக் குச்சு வீட்டைக் கட்டினாள். இவர்களும் கூட்டுப் புறத்து வீட்டின் பெயரில் அவகாசிகள் (சொந்தம்) ஆனார்கள். இதே பெயருக்கு சொந்தம் கொண்டாட இவர்களுக்கு சந்தான சம்பத்து இல்லாமல் போயிற்று.

    (வேதாளம் முதுகில் நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இவன் என்ன எழுத வருகிறான் என்று தெரியாமல் குழம்புகிறது என்று தெரிகிறது)

    தங்கமணியின் அம்மா திண்ணையே கதி என்றிருப்பாள். திண்ணையை ஒட்டி ஒரு ரேழி . அதை அடுத்து சின்ன மித்தம் (முற்றம்) அதன் இரு பக்கங்களிலும் இரண்டு முறிகள் (அறைகள்) ஒன்றில் தங்கமணியும் மற்றதில் அவள் சகோதரி தேவானையும் உறங்குவது வழக்கம்.

    சேது வரும் தகவல் தேவானைக்கும் தெரிந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1