Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhavishya Puranam
Bhavishya Puranam
Bhavishya Puranam
Ebook348 pages3 hours

Bhavishya Puranam

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702838
Bhavishya Puranam

Read more from Lakshmi Rajarathnam

Related to Bhavishya Puranam

Related ebooks

Reviews for Bhavishya Puranam

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhavishya Puranam - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    பவிஷ்ய புராணம்

    Bhavishya Puranam

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஒரு எளிய அறிமுகம்

    பாரதத்தின் பாரம்பரியமான செல்வங்களில் பதினெட்டுப் புராணங்களும் அடங்கும். அவற்றைச் சாதாரண மனிதர்களும் பயனடையும் வகையில் சொல்ல வேண்டுமென்று புத்தகப் பூங்கா அதிபர் திரு. தேவகோட்டைப் பஞ்சநதம் விரும்பினார்.

    அந்தப் பதினெட்டுப் புராணங்களில் நான் பவிஷ்ய புராணத்தை முதலில் தேர்ந்தெடுத்ததற்கான முதல் காரணமே அதன் செகுலர் (Secular) அமைப்புதான். அதில் நமது புராதன மதங்களோடு, கிருஸ்துவும் போற்றப்படுகிறார். நபிகள் நாயகமும் போற்றப் படுகிறார். அசோகரைப் போற்றுவதைப் போலவே அக்பரும் போற்றப்படுகிறார். விக்கிரமாதித்த மன்னன் சிலாகிக்கப்படுவது போலவே விக்டோரியா மகாராணியும் புகழப்படுகிறார்.

    இரண்டாவதாக அதில் உள்ள கருத்துக்கள் புரட்சியானவை. புதுமைக் குரல் புராணத்திலேயே ஒலிக்கிறது. வள்ளுவரின் கருத்துக்கள் போல அவை எக்காலத்தும் நிற்பவை.

    மூன்றாவதாக எப்படிச் செய்வது? ஏன் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கூடத் தெரிவிக்கப்படுகின்றது.

    ‘சாமானியனுக்கான’ சமூக செகுலர் புராணமே இந்த பவிஷ்ய புராணம் என்று சொல்லலாம்.

    வணக்கம்

    லட்சுமி ராஜரத்னம்

    ***

    உள்ளே...

    பிரம்மபர்வம்

    மத்யபர்வம் - முதல் பாகம்

    மத்யபர்வம் - இரண்டாம் பாகம்

    மத்யபர்வம் - மூன்றாம் பாகம்

    பிரதிசர்க்க பர்வம் - முதல் காண்டம்

    ப்ரதிசர்கம் பர்வம் - இரண்டாவது காண்டம்

    பிரதிசர்கம் - மூன்றாவது காண்டம்

    பிரதி சர்க்கம் - நான்காவது காண்டம்

    ***

    பிரம்மபர்வம்

    புராணம் என்றால் தொன்மையானது. புரா, நவம் என்ற இரு சொற்களின் கலவையே புராணம். புரா என்றால் தொன்மை, நவம் என்றால் புதுமை. அதாவது தொன்மையில் புதுமை.

    காளிதாச மகாகவி, புராணம் என்பதால் எதனையும் ஏற்க முடியாது. நவம் என்பதால் எதனையும் மறுக்கவும் கூடாது. எதிலும் உண்மையை ஆராய்ந்து, பகுத்தறிவுடன் அலசிப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

    அவ்வகையில் ஊகங்களையே முக்கியமாகக் கூறுவது பவிஷ்ய புராணம். அந்த ஊகங்கள் உண்மையானதைக் கண்டு உலகமே பிரமித்துப் போகிறது. புராணங்களில் பவிஷ்ய புராணம் கலியில் என்ன என்ன நேரும் என்பதைச் சிறப்புறக் கூறுகிறது. இஸ்லாம், கிருஸ்தவ மதம் இவை உண்டான வகை, பல மொழிகள் உண்டாகுமென்பது, முஸ்லிம்கள், ஆங்கிலேயர் பாரத தேசத்தை ஆள்வரென்பது, அக்பர், சிவாஜி, போஜன், பிருதிவிராஜ், பதினெட்டுக் கப்பங்கள், மனிதரியல்பு, ஆயுள் முதலியன இங்கு சிறப்பானவை (தமிழ்க் கலைக் களஞ்சியம் தொகுதி ஏழு பக்கம் 437).

    பவிஷ்ய புராணம் பதினெட்டுப் புராணங்களில் ஒன்பதாவது. இதை இயற்றியவர் பராசரர், தொகுத்தவர் வேத வியாசர். பிரும்ம தேவர் படைத்த 9 பிரஜாபதிகளில் வசிஷ்டரும் ஒருவர். அவரின் மகன் சக்தி, சக்தியின் மைந்தர் பராசரர். பராசரரின் மகன் வேத வியாசர். இவர்களின் வம்சா வழியை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்கிறது. அந்த ஸ்லோகம் இதோ.

    ‘வியாஸம் வசிஷ்டநப்தாரம் சக்தே: பெளத்ர மகல்மஷம்│

    பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்││’

    வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும், சக்தி மகரிஷியின் பேரனும், குற்றமற்றவரும் பராசரரின் புத்தரும், சுகருடைய பிதாவும் தபோநிதியுமான வியாசரை வணங்குகிறேன்.

    வியாசர் நித்ய சூரிய பல காலங்களில் பல ரூபங்களில் அவதரித்தவர். இந்தப் புராணங்களைத் தொகுத்தவர் கிருஷ்ணத்வைபாயனர், பராசரருக்கும் பரசுவர் குலத்துதித்த சத்தியவதிக்கும் ஒரு அபூர்வமான நேரத்தில் ஜனித்தவர்.

    மகாபாரதம் ஆதிபர்வத்தில் வியாசரின் பிறப்பு குறிப்பிடப்படுகிறது. ஒரு சமயம் பராசர மகரிஷியைப் படகில் ஏற்றிக் கொண்டு படகுக்காரனின் மகள் மச்சகந்தி படகோட்டினாள். ஆற்றின் நடுவில் செல்லும் பொழுது பராசரர் விண்கோள்களை ஆராய்ந்தார். அப்போது அவரின் கணக்குப்படி ஜனிக்கும் குழந்தை மாமேதையாகவும் யுகங்களைக் கடந்தும் மதிக்கப்படுபவனாக இருப்பான் என்பதைத் தெரிந்து கொண்டார். அப்போது அருகிலிருக்கும் பெண் மச்சகந்தி ஒருவள்தான்.

    மச்சகந்தியிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அவளோ சின்னஞ்சிறுமி, எதிரில் நிற்பவரோ பெரிய மகரிஷி. சாபம் இட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை. மகரிஷி சொன்னதைக் கேட்டு மெளனம் சாதித்தாள். அவள் மெளனத்தைச் சம்மதமாக ஏற்றுக் கொண்டு ஒரு அருமையான இடத்தை மகரிஷி சிருஷ்டித்தார். மச்சகந்தி என்ற சிறுமியை அழகிய பெண்ணாக, வாசனை மிக்க யுவதியாக, பரிமள கந்தியாக மாற்றினார். முனிவரின் ஆசைக்குப் பரிமளகந்தி இணங்கினாள். அந்த அருமையான நேரத்தில், மகரிஷி சிருஷ்டித்த தீவில் பிறந்தவர் தான் வியாசர். தீவில் பிறந்தவரானதால் த்வைபாயனர் ஆனார். த்வீபம் என்றால் தீவு என்று அர்த்தம். கிருஷ்ண என்பது அவரின் கருப்பு நிறத்தைக் குறிக்கும். அதனாலேயே கிருஷ்ணத்வைபாயனர். வேதங்களைத் தொகுத்ததால் வியாசர் என்ற பெயர் ஏற்பட்டது. பராசர மகரிஷி குழந்தையைத் தானே வளர்ப்பதாக எடுத்துச் சென்று விட்டார். பரிமளகந்தியைத் தன் தவ வலிமையால் மீண்டும் சிறுமியாக்கி விட்டார். அத்துடன் அவள் உலகம் போற்றும் மன்னரின் பத்தினியாவாள் என்றும், அவளின் வழித் தோன்றல்கள் காலத்துக்கும் புகழப்படுவார்கள் என்றும் ஆசியளித்தார். அத்துடன் மீண்டும் அவள் பழைய கன்னிப் பருவத்தையே அடைவாள் என்றும் ஆசீர்வதித்தார். அந்தப் பரிமளகந்தியை, சத்தியவதி என்று அழைக்கப்பட்டவளைத்தான் சந்தனு மகாராஜன் மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அவளின் தந்தை விரும்பியபடி சத்தியவதியின் பிள்ளைகள் தான் அரச பதவி ஏற்க வேண்டுமென்பதற்காகத் தான் சந்தனு கங்கையின் மைந்தன் நித்ய பிரம்மச்சாரியாக இருப்பதாக சபதம் செய்து பீஷ்மர் ஆனார். அன்னை சத்தியவதியின் அபிமான புத்ரனாகவும் இருந்தார். சத்தியவதியின் வாரிசுகளே தர்மபுத்ரருடன் பிறந்த பாண்டவர்கள், துரியோதனனுடன் பிறந்த கெளரவர்கள்.

    வேத வியாசரின் அருமையான சீடர் சதானிக மன்னர். அபிமன்யுவின் பேரன் ஜென மேஜயனின் மகன். ஒரு சமயம் அவரைத்தேடிப் பல முக்கியமான ரிஷிகள் வந்தார்கள். அவர்களில் வசிஷ்டர், பராசரர், புலஹர், புலஸ்த்தியர், பிருகு, க்ரது போன்ற மகோன்னதமான ரிஷிகளும் அடங்குவர். புராணங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டும் அவர்களின் மனம் சமாதானமடையவில்லை. ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவதற்கான வழி தெரியவில்லை. அவர்களுக்குப் படிப்பவர்களில் ஆன்மா பரிசுத்தமடைய, விடுதலை பெற ஏதேனும் வழி இருந்தால் சொல்லும் படி மன்னரிடம் கேட்டனர்.

    நீங்கள் சொல்வது சரிதான், என்னுடைய முன்னோர்களின் ஆசியாலும், தங்களைப் போன்ற சான்றோர்களின் அனுக்ரஹத்தாலும் பல விஷயங்களை வியாச குருவிடமிருந்து நேரில் கேட்கும் வாய்ப்புப் பெற்றவன் நான். ஆனாலும் தங்களின் கேள்விகளுக்கான விடைகள் என்னிடமும் இல்லை. எனக்கும் அதே ஐயப்பாடுகள் உண்டு. இருப்பினும் என்னுடைய குருநாதரையே கேட்கலாம் மன்னர் முனிவர்களை அழைத்துக் கொண்டு வேத வியாசரையே அணுகினார்.

    வேத வியாசர் அருள் கூர்ந்து சொன்னார். ஹே, ராஜன், நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என் சிஷ்யர் சுமந்துவை அணுகினால் பதில் கிடைக்கும். நீங்கள் அவரை அணுகவும்.

    அதன் பின் மன்னர் சதானிகரும், மகரிஷிகளும் சுமந்து முனிவரை அணுகினார்கள்.

    மகாமுனிவரே, தங்கள் மூலம் பல தர்ம சாஸ்திரங்களையும், இராமாயண, மகாபாரதம் போன்ற இதிஹாசங்களையும் கேட்டு மகிழ்ந்துள்ளோம். நான்கு வர்ணத்தாருக்கும் நன்மை பயக்கக் கூடிய புராணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

    மன்னவா, மகா சிரேஷ்டர்களே, நீங்கள் கேட்டு கொண்ட விவரங்களை எல்லாம் தெரிவிக்கக் கூடியது பவிஷ்ய புராணமே. இந்த புராணத்தைக் கேட்பதால், படிப்பதால் பல பெரும் பயன்கள் கிட்டும். அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கடைசியில் சூர்ய லோகத்தை அடைவார்கள். இது மங்களகரமானது. இதை நன்றாகத் தெரிந்து நான்கு வர்ணத்தாரிடமும் பரவச் செய்பவர்கள் பரமபதத்தை அடைவார்கள்.

    எல்லா வர்ணத்தாருக்கும் நல்லவற்றைச் சொல்லி, அல்லாதவற்றின் விளைவையும் கூறுவதால் ‘சுதாசார்ஹி ச்ரேஷ்டதர்ம ஹை’ என்று கூறப்படுகிறது. பிராம்மணர்கள் தங்கள் ஆசாரப்படி நடந்து கொண்டால் என்ன பதவி அடைவார்கள் என்பதையும், அப்படி ஆசாரத்தைக் கை விட்டவர்கள் என்ன தண்டனை அடைவார்கள் என்பது பற்றியும் விளக்குகிறது. பல விதமான ஆசாரங்களை விளக்குகிறது. அதைத் தவிர மூன்று உலோகங்களின் உற்பத்தி, விவாஹம் மற்றும் விசேஷங்களின் சமஸ்காரங்கள், ஆண், பெண் லக்ஷணங்கள், தேவ பூஜை பற்றிய விவரங்கள், அரசர்கள் செய்ய வேண்டிய தர்மங்கள், கடமைகள், சூரிய நாராயணர், விஷ்ணு, ருத்ரன், துர்க்கை, சத்திய நாராயணர் ஆகியோர் தொடர்பான பூஜைகள், தீர்த்தங்களின் விசேஷங்கள், ஸ்நான, தர்ப்பண, வைசுவதேவ, போஜன விதிகள், ஜாதி தர்மம், குலதர்மம், வேத தர்மம், யாகங்களின் அமைப்பு, பலன் என்று பல கூறப்படுகின்றன. இந்த மகா புராணத்தைப் பிரம்மா சங்கரனுக்கும், சங்கரன் விஷ்ணுவுக்கும், விஷ்ணுவால் நாரதருக்கும், நாரதரால் இந்திரனுக்கும், இந்திரனால் பராசரருக்கும் அவர் மூலம் வியாச பகவானுக்கும் சொல்லப்பட்டது. அத்தகைய பரம்பரையான பவிஷ்ய புராணத்தை உங்களுக்குச் சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள். இந்தப் புராணத்தில் 50,000 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் பிரம்மா, வைஷ்ணவ, சைவ, த்வஷ்டா மற்றும் பிரதிசர்க்கம் என்ற ஐந்து பர்வங்கள் உண்டு. எல்லாப் புராணங்களுக்கும் உரிய ஐந்து லட்சணங்களை அதாவது சர்கம், பிரதிசர்கம், வம்சம், மன்வந்தரம் மற்றும் வம்ச வரலாறு கொண்டுள்ளது. 16 வித்தைகளும் வர்ணிக்கப்பட்டுள்ளன. நான்கு வேதங்கள் (ரிக், யஜூர், சாம, அதர்வண) ஆறு வேதாகமங்கள் (சிக்ஷா, கல்ப, நிருக்த, வ்யாகரண, சந்த, ஜ்யோதிஷ), மீமாம்சம், ந்யாயம், புராணம் தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் இவைகளுடன் சேர்ந்தால் மொத்தம் 18 வித்தைகள் ஆகும்.

    மாமுனிவர் சுமந்து மேலும் சொன்னார். மன்னா, பூதசர்க்கத்தில் அனைத்துப் பிராணிகளின் உற்பத்தியையும் சொல்கிறேன். இதைக் கேட்பதால் எல்லாப் பாவங்களும் விலகும், மனிதனுக்குப் பரம சாந்தி கிடைக்கும்.

    அன்பிற்குரியவரே, ஆதி காலத்தில் இந்த உலகம் முழுவதும் அந்தகாரத்தில் மூழ்கியிருந்தது. எந்தப் பொருளும் கண்களுக்குப் புலப்படக் கூடிய நிலையில் இல்லை. அறிவின் வெளிச்சம் இல்லை, அக்ஞானம் தான் எல்லா இடத்திலும் இருக்கும். அச்சமயம் இந்திரியங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவனும், சர்வ பூதத்திலும் வியாபித்தவனும் பரப்ரம்மாவும், பரமாத்மாவும் பகவானுமான பாஸ்கரன் தன் சரீரத்திலிருந்து நாலா வித சிருஷ்டிகளையும் உற்பத்தி செய்யும் எண்ணத்துடன் ஜலத்தை உற்பத்தி செய்தார். இதிலிருந்த தேவதைகள், அசுரர்கள், மனிதர்கள் மற்றும் உலகம் முழுவதும் உண்டாயிற்று. அந்த வீர்ய ஜலத்திலிருந்து பிரகாசமான பொன் வண்ணமான முட்டை வெளி வந்தது. அந்த அண்டத்தின் மத்தியிலிருந்து சிருஷ்டிகர்த்தா சதுர்முக பிரம்மா உற்பத்தியானார்.

    நரம் என்றால் தண்ணீர் அதிலிருப்பவர் நாராயணன். எதிலிருந்து உற்பத்தியானாரோ, அதைக் கொண்டே அவர் நாராயணன் என்று அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் முன்னால் இடம் பெற்றவர் என்பதால் அவர் நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் நல்ல ரூபமுடையவர். அவர் புலனுக்கெட்டாதவர். எல்லாவற்றுக்கும் எப்போதும் காரணமானவர். அவர் விசேஷமாகத் தண்ணீரிலிருந்து சிருஷ்டித்த விசேஷமான சிருஷ்டி புருஷர் தான் பிரம்மா.

    பிரம்மா நீண்ட காலம் அண்டத்தை இரண்டு கூறுகளாகப் பிரித்தார். ஒரு பாகத்தைப் பூமியாகவும் மற்றதை ஆகாசமாகவும் முறைப்படுத்தினார். மத்தியில் சுவர்க்கத்தையும், திசைகளில் எல்லாம் வருணனின் சமுத்ர வாச ஸ்தலத்தையும் (ஜலம்) படைத்தார். அதன் பிறகு மஹத் முதலிய தத்துவங்களையும் பிராணிகளையும் முறைப்படுத்தினார்.

    பரமாத்மா முதலில் படைத்தது ஆகாயம். அதைப் படைத்த பிறகு வாயு, அக்னி, ஜலம், பிருத்வி என்ற ஐந்து தத்துவங்களைப் படைத்தார். பிரம்மா தான் சிருஷ்டி செய்தவற்றிற்குப் பெயர்களையும் அவற்றுக்கான குணாதிசயங்களையும் முறைப்படுத்தினார். தேவகணங்கள், ஜோதிடம் தொடர்பான வேள்விகள், கிரஹங்கள், நக்ஷத்திரம், நதிகள், சமுத்ரம், பர்வதம் மற்றும் காலங்களில் வேத, சுவேதமான காலத்தின் கூறுகளான வருஷம், மாசம், தினம், ருதுக்கள், காம, க்ரோத, லோபம், மோஹம் போன்ற குண விசேஷங்களையும், வழக்கமாகப் பின்பற்ற வேண்டிய தர்மம் மற்றும் அதர்மம் மற்றும் பிராணிகளுக்கான வாசஸ்தலங்கள், சுகம், துக்கம், சோகம், மகிழ்ச்சி என்பதை எல்லாம் படைத்தார். உலகம் மற்றும் பிரபஞ்சத்தை நடத்திச் செல்ல இந்திரன், சந்திரன், சூரியன் ஆகியோரையும் படைத்தார். மற்றும் ஹிம்ஸை, அஹிம்ஸை, மிருதுத் தன்மை, மென்மை, க்ரூரம், சத்யம், அசத்யம், தர்மம், அதர்மம் ஆகிய சுபாவங்களைப் படைத்தார். பருவ காலங்களில் வளரும் மரங்கள், புஷ்பம், பழம் ஆகியவைகளையும் படைத்தார்.

    இந்த உலகம் விருத்தியடையப் பிரம்மா தன்னுடைய முகத்திலிருந்து பிராம்மணர்களையும், கைகளிலிருந்து க்ஷத்திரியர்களையும், தொடையிலிருந்து வணிகர்களையும், கால்களிலிருந்து நான்காவது வர்ணத்தாரையும் படைத்தார். பிரம்மா தன் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்களைப் படைத்தார். கிழக்கு முகத்திலிருந்து ரிக் வேதத்தையும், வசிஷ்டரையும் படைத்தார், தெற்கு முகத்திலிருந்து யஜூர் வேதத்தையும், யாகஞவல்கியரையும் படைத்தார். மேற்கு முகத்திலிருந்து சாம வேதத்தையும், கெளதமரையும் படைத்தார். வடக்கு முகத்திலிருந்து அதர்வண வேதத்தையும், சொனகரையும் படைத்தார். பிரசித்தமான ஊர்த்வ (ஐந்தாவது) முகத்திலிருந்து புராண, இதிஹாஸ, யமன், ஸ்ம்ருதி, சாஸ்திரம் ஆகியவற்றைப் படைத்தார்.

    அதன் பின் பிரம்மா தனது வலது பாகத்திலிருந்து ஆணையும், இடது பாகத்திலிருந்து பெண்ணையும் படைத்தார். அந்த விராட் புருஷன் நாலா விதமான ச்ருஷ்டிகளைச் செய்யப் பல காலம் தவம் செய்து பத்துப்பிரஜாபதிகளை உற்பத்தி செய்தார். அவர்களின் பெயர்கள் நாரதர், பிருகு, வசிஷ்டர், ப்ரகேதஸ, புலஹர், க்ரது, புலஸ்த்தியர், அத்ரி, அங்கரங்கன் மற்றும் மரீசி. இதே போல் மஹா தேஜஸ்விகளான பல ரிஷிகளைப் படைத்தார். அதன் பிறகு தேவதைகள், ரிஷிகள், அசுரர்கள் மற்றும் ராட்சசர்கள், பிசாசுகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், பாம்புகள் மற்றும் அசுர கணங்களை உற்பத்தி செய்தார். மின்னல், மேகம், வஜ்ரம், இந்திர தனுஷ் (வானவில்) தூமகேது, எரிநட்சத்திரம், புயலோசை மற்றும் சிறிய நட்சத்திரங்களை உற்பத்தி செய்தார். மனிதர்கள், கின்னரர்கள் மற்றும் மீன், வராஹம் (பன்றி), பட்சி, யானை, குதிரை, பசு, மயில், புழு, பூச்சிகள், கிருமிகள் ஆகியவற்றையும் உற்பத்தி செய்தார். இவ்வாறு பாஸ்கர தேவனால் மூன்று லோகங்களும் முறைப்படுத்தப் பட்டன.

    சிருஷ்டிகளின் பெருக்கம் நான்கு வகைகளில் நடந்தது. யானை, மிருகங்கள், பசு, ராட்சசர்கள், மனிதர்கள், ஜராயு என்ற முறையில் அதாவது கருவிலிருந்து உற்பவித்தல் முறையில் சிருஷ்டிக்கப்பட்டன. மீன், பாம்பு, ஆமை போன்றவைகள் முட்டையிடுவதின் மூலம் சிருஷ்டி செய்யப்பட்டன. ஈ, பெரிய மீன் போன்றவைகள் வியர்வையிலிருந்து உண்டாயின. நான்காவதாக உத்பீஜா என்ற முறையில் அதாவது தரையிலிருந்து விதைகள் மூலம் மரங்கள், மூலிகைகள் தோற்றுவிக்கப்பட்டன. மேல் நோக்கி வளரும் விருக்ஷங்கள், பூமிக்கடியில் விளையும் கிழங்குகள், கொத்தாகப்படரும் கொடிகள் என்று பலவகையான தாவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

    இவ்வகையாகப் பகவான் பாஸ்கரனால் சிருஷ்டி நடந்தது. அவர் தூங்கும் சமயத்தில் பிரபஞ்சம் லயித்தது. அவர் தூக்கத்தை விட்டு விழித்தெழுந்த போது பிரபஞ்சமும் சிலிர்த்து எழுந்தது. அந்தந்தச் சிருஷ்டிகள் அவர்களின் பூர்வ கர்மானு சாரங்களை அனுசரித்து அதற்கேற்றாற் போல அமைந்திருந்தன. அழிவற்ற நித்யமான பரமாத்மா அனைத்துச் சராசரங்களையும் விழித்திருக்கும் போதும் சயனத்திலிருக்கும் போதும் அடிக்கடி உற்பத்தி செய்து கொண்டும் அழித்துக் கொண்டுமிருந்தார்.

    பரமேஸ்வரன் ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் தானே பிரளயத்தை உருவாக்குகிறார். ஒரு கல்பம் என்பது பரமேஸ்வரனுக்கு ஒரு நாள். அதனாலேயே பரமேஸ்வரன் பகலில் சிருஷ்டியையும் இரவில் பிரளயத்தையும் உண்டாக்குகிறார். மகாராஜனே, சதானிகனே, காலங்களின் கணக்கைச் சொல்கிறான்.

    ஒரு பழம் கீழே விழக்கூடிய நேரம் நிமிஷம் எனப்படுகிறது. பதினெட்டு நிமிஷங்கள் கொண்டது ஒரு காஷ்டம். 30 காஷ்டம் ஒரு கலம். முப்பது கலம் ஒரு க்ஷணம். 12 க்ஷணம் ஒரு முகூர்த்தம். முப்பது முகூர்த்தங்கள் ஒரு நாள். அதாவது பகலும், இரவும். முப்பது தினங்கள் ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருது, மூன்று ருதுக்கள் அயனம் (உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம்). இரண்டு அயனங்கள் ஒரு வருஷம், இவ்விதமாக சூர்ய பகவானால் பகல், இரவு கால ப்ரமாணம் நடைபெறுகிறது. எல்லா ஜீவன்களும் இரவில் உறங்கியும் பகலில் கர்மாக்களைச் செய்து கொண்டுமிருக்கின்றன.

    பித்ருக்களுக்குப் பகல், இரவு கொண்ட ஒரு நாள் மனிதர்களுக்கு ஒரு மாதம். சுக்லபக்ஷம் பித்ருக்களுக்கு இரவு, கிருஷ்ணபக்ஷம் பித்ருக்களுக்குப் பகல். தேவர்களுக்குப் பகல் இரவு கொண்ட ஒரு நாள் மனிதர்களுக்கு ஒரு வருடம். உத்தராயணம் தேவர்களுக்குப் பகல், தட்சிணாயனம் இரவு. சூரியன் வடபுலத்தில் சஞ்சரிப்பது உத்தராயணம், தென் புலத்தில் சஞ்சரிப்பது தட்சிணாயனம். ஒரு மனித யுகமென்பது பிரம்மாவுக்கு இரவு, பகல் அடங்கிய ஒரு நாள்.

    சத்யயுகம் (கிருதயுகம்) 4000 பிரும்ம யுகங்கள் கொண்டது. திரேதாயுகம் 3000 பிரும்ம யுகங்கள் கொண்டது. த்வாபரயுகம் 2000 பிரும்ம யுகங்கள் கொண்டது. கலியுகம் 1000 பிரும்ம யுகங்களைக் கொண்டது. ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பத்தின் போதும், முடிவின் போதும் சந்த்யை மற்றும் சந்தியாம்சம் ஏற்படும். முதலில் வருவது சந்த்யை, முடிவில் வருவது சந்தியாம்சம். அது யுகத்துக்கு யுகம் வேறுபடும்.

    சத்ய (க்ருத) யுகத்துக்குச் சந்தியை சந்தியாம்சம் தலா 400 யுகங்கள். திரேதா யுகத்துக்குச் சந்தியை, சந்தியாம்சம் தலா 300 யுகங்கள். த்வாபர யுகத்துக்குச் சந்தியை, சந்தியாம்சம் தலா 200 யுகங்கள். கலியுகத்துக்குச் சந்தியா, சந்தியாம்சம் தலா 100 யுகங்கள். இக்கணக்கின் படி பார்த்தால் சத்ய, கிருத யுகம் 4800 (4000+400+400), திரேதாயுகம் 3600 (3000+300+300), த்வாபரயுகம் 2400 (2000+200+200), கலியுகம் 1200 (1000+100+100). நான்கு யுகங்களுக்கும் சேர்த்து 12,000 யுகங்கள். அதாவது 12000 x 360= 43,20,000 மனித வருஷங்கள். இவ்விதமாகச் சதுர் யுகங்களைக் கணக்கிட்டு 1000 சதுர் யுகங்களைக் கொண்டது பிரும்ம தேவனுக்கு ஒரு பகலாகும். அதே அளவைக் கொண்டது இரவாகும்.

    தேவர்களின் ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு தினம். அதே போல் அளவு பிரம்மாவுக்கு ராத்திரி. இந்தப் பிரம்மா அந்த ராத்திரியின் முடிவில் தூக்கத்திலிருந்து விழித்துச் சத்-அசத்துக்குக் காரணமான மனத்தை உற்பத்தி செய்கிறார். அந்த மனத்தின் மாற்றத்தினால் ஆகாசம் உண்டாகியது. ஆகாசத்தின் குணத்தின் மாற்றத்தால் சப்தம் உண்டாகியது. அதிலிருந்து வாயு உண்டானது. வாயுவிலிருந்து அந்தகாரத்தை ஒழிக்கப் பிரகாசமான தேஜஸ் உண்டாகியது. அந்த தேஜஸிலிருந்து ஜலம் உண்டாகியது. தண்ணீரிலிருந்து பிருத்வி உண்டாகியது.

    முன்பு ஆயிரம் திவ்ய வருஷங்கள் ஒரு தேவ யுகமென்று சொல்லப்பட்டது. 71 சதுர் யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம்: பிரும்ம தேவனுக்கு ஒரு பகல் நேரத்தில் 14 மன்வந்தரங்கள். அப்போதுதான் 14 மனுக்கள் அவதரிக்கிறார்கள். 71 சதுர் யுகங்கள் என்பது 71 x 12000 = 8,52,000 தேவ வர்ஷங்களாகும். அதாவது மனித வருஷ பரிமாணத்தில் 30,67200 மனித வருஷங்களுக்குச் சமம்.

    சத்ய (கிருத) யுகத்தில் நான்கு பாதங்களிலும் தர்மம் நிலவியது. அதாவது சர்வாங்க பூர்ணம், த்ரேதா யுகத்தில் அது ஒரு பாதமாகக் குறைந்து மூன்று பாதமாகியது. த்வாபர யுகத்தில் தர்மம் மேலும் குறைந்து இரண்டு பாதங்களாயிற்று. கலியுகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1