Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhaikooda Thenagalam
Mazhaikooda Thenagalam
Mazhaikooda Thenagalam
Ebook304 pages2 hours

Mazhaikooda Thenagalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702833
Mazhaikooda Thenagalam

Read more from Lakshmi Rajarathnam

Related to Mazhaikooda Thenagalam

Related ebooks

Reviews for Mazhaikooda Thenagalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhaikooda Thenagalam - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    மழைகூட தேனாகலாம்

    Mazhaikooda Thenagalam

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பெண் பார்க்கும் படலம்

    2. நினையே ரதியென்று...

    3. பார்வையோடு பார்வை.

    4. புது அனுபவம்!

    5. மாப்பிள்ளை வீட்டார் கடிதம்!

    6. விமலா பார்த்து விட்டாள்!

    7. ஜெயாவுக்கு காதல் கடிதம்!

    8. இப்போதே பந்தாவா?

    9. வரதட்சணை சோதனை!

    10. அத்தான் உதவுவாரா?

    11. கல்யாண ஜன்னி!

    12. ஜெயா முகம் சிவந்தது!

    13. லலிதா தேடிய தனிமை!

    14. உன் கனவில் நான்!

    15. சினிமாவுக்கு கூப்பிடுகிறார்!

    16. லலிதாவா இப்படி செய்தாள்?

    17. ஆளுக்காள் தவிப்பு.

    18. இரு தினங்களுக்கு முன்...

    19. அவனிடம் தன்னை இழந்தாள்!

    20. அன்னம்மாவின் அலட்சியப் பார்வை!

    21. அரவிந்தன் முகம் மாறியது!

    22. இவர்கள் யார்?

    23. அரவிந்தனின் போன்!

    24. மாப்பிள்ளை தந்தை எங்கே?

    25. மோகனாங்கி

    26. இதுதான் அதிஷ்டமா?

    27. தியேட்டரில் அரவிந்தன்!

    28. லலிதா வீட்டைத் தேடி...

    29. சமுதாயக் கோடு!

    30. இது கொலைகார வீடு!

    31. அவளை அழைக்கவில்லை!

    32. கண்ணைத் திறந்தபோது...

    33. அப்பா எங்கே?

    34. லலிதா அறையில் ஆஷா!

    35. மோதிரத்தில் மர்மம்!

    36. லலிதாவின் பொய்கள்...

    37. எதிர்பாரா ஆபத்து!

    38. தன்னந்தனியாய் ஜெயா!

    39. நீ சிகப்பு விளக்கா?

    40. மாமாவைத் தேடி மருமகள்!

    41. அதிகாலை அதிர்ச்சி!

    42. என்னை வாழ வை !

    43. கள்ளியும் ரோஜாவும்!

    44. பாலைவனத்தில் தேன் மழை!

    என்னுரை

    பெண்கள் பிரச்னை பல உண்டு. ஆனால் நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெண்களே பிரச்னை. அதிலும் பல பென்கள் இருந்து விட்டால் ஒருவருக்கு ஒருவர் பிரச்னை ஆகிறார்கள். ஒருவரின் முன்னேற்றம், வாய்ப்புக்கள், அதிலும் கல்யாணத்திற்கு நல்ல வரன்களாக அமைந்து விட்டால் ஏற்படும் போராட்டங்கள், ஏக்கங்கள் என்று எத்தனை சுழல்கள்...

    இதில் சுழல்பவர்கள் தான் லலிதா, ஜெயா, செல்வம், அரவிந்தன், மோகனாங்கி என்று பல பாத்திரங்கள்.

    ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி என்பார்கள். ஐந்து பெண்களைப் பெற்ற தந்தை மூத்த மகளுக்கு மட்டும் திருமணத்தை முடித்து வைக்கிறார். இரண்டாவது மகளைப் பார்க்க வருபவன் மூன்றாவது மகள் ஜெயாவை மணக்க விருப்பப்படுகிறான். திருமணமும் நிச்சயம் ஆகிறது. இதை அவமானமாகக் கருதிய லலிதா அரவிந்தன் என்ற கவர்ச்சி மிக்க ஆடவனை விரும்புகிறாள்.

    அவனை நம்பி வீட்டை விட்டு ஓடும் அளவுக்குத் துணிவு ஏற்படுகிறது. ஆனால் அவள் நினைத்த அளவுக்கு அரவிந்தன் நல்லவனா? பல வருடங்கள் வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களைத் தவிக்க விட்டு ஓடிப் போகும் பெண்ணின் நிலை - வெளியுலகத்தில் எத்தனை ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது இந்த லலிதாவின் செயல்கள்.

    நத்தையின் வயிற்றில் முத்து பிறப்பது போல் மோகனாங்கியின் மகள் ஆஷா.

    பணக்கார இடத்தில் வாழ்க்கைப் பட்டாலும் நிம்மதி இல்லாத ஜெயா.

    ஆணவத்தையே உருவாகக் கொண்ட அன்னம்மா...

    மனைவியிடம் அன்பு செலுத்தினாலும் செல்வத்தின் அன்பு களங்கமற்றதா?

    ஒவ்வொரு மனிதரின் மனத்திலும் எத்தனை போராட்டங்கள்... எத்தனை சகிப்புத் தன்மையுடன் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது?

    வாழ்க்கை என்பது சாதாரணமானதா?

    நீரின்றி உலகம் உயிர் வாழ முடியாது. நீர் பெறக் கூடிய வழி மழையாகும். மழை பெய்து விட்டால் உலகில் சகல ஜீவராசிகளும் செழித்து வளர்கின்றன. மழை நீரினால் செழித்துப் பூக்கும் மலர்கள் தரும் தேன் உடலுக்கு நல்லது.

    ஒன்றிலிருந்து ஒன்று கிடைக்கும் பொழுது வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறது.

    வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மனப்பக்குவம் தேவை.

    அந்தப் பக்குவத்தைப் பெற்றவர் கோதண்டராமன். லலிதாவை மகளாக ஏற்கும் பொழுது - பெற்றவர்கள் என்ற மழை பெய்யாத லலிதாவுக்கு, கோதண்டத்தின் அணைப்பு தேன்மழையாக இருக்கிறது.

    மழைகூட தேனாகலாம் என்ற இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட ‘தினகரன்' பத்திரிகை ஆசிரியருக்கும், நிர்வாகத்தினர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நாவலை வெகு சிறப்பான முறையில் புத்தக வடிவில் வெளியிடும் வானதி பதிப்பகத்தார் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    லட்சுமி ராஜரத்னம்

    ***

    1. பெண் பார்க்கும் படலம்

    வீடு பூராவும் காலையிலிருந்தே ஒரே அமர்க்களம். நெய்மணம். போண்டாக்கள் எண்ணெயில் மிதக்கும் கமரல், ஏலக்காய், பச்சைக் கற்பூர நறுமணம். அப்பொழுதுதான் வறுத்து அரைத்துக் கொண்டு வந்த புதுப்பொடி பெரிய பில்டரில் இறங்கும் வாசனை-கூடத்தில் பெண்களின் ஆரவாரங்கள். கேலிகள், புதுப்புடவைகளின் சரசரப்புகள்...

    லலித், கல்யாணம் ஆனதும் எங்களையெல்லாம் மறந்துடுவியா?

    மல்லிகையையும், கனகாம்பரத்தையும் இணைத்து பிறை வடிவில் சூட்டும் சரோஜாதான் கேட்டுவிட்டு கலீரென்று நகைக்கிறாள். லலித் தலையைத் திருப்பி சரோஜாவைப் பார்க்கிறாள். அந்த ஒரு பார்வையில்தான் உடைந்த கண்ணாடி சிதறல்கள் வெயிலில் படும் ஒளியாக எத்தனை கேள்விகள் மின்னுகின்றன?

    இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் பெண் பார்க்க வரப்ப நீ கேட்கறே…

    எந்த புடவையைக் கட்டிக்கப் போறே லலித்? என் முத்து நெக்லஸை போட்டுக்கறியா? கையில் க்ரீம் கலர் புடவையுடன் அக்கா சந்தியா வந்து கேட்கிறாள்.

    சென்னையிலேயே வசிப்பவள். அவள் கணவர் ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர்.

    நீ என்ன சொல்றியோ அதுதான்

    நெக்லஸை எடுக்க பீரோவைத் திறந்தாள் சந்தியா.

    அடிப் பெண்களா ? அலங்காரம் எந்தமட்டில் இருக்கு? அவா வர்ற நாழியாச்சு. மசமசன்னு நிக்காம வேலையைக் கவனியுங்கடி. எல்லாரும் பளிச்சுனு டிரஸ் பண்ணிக்கோங்க. கிழக்கும் மேற்குமா பரட்டைத் தலையும் வேஷமுமா நிக்காதீங்கோ

    சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் காமாட்சி. அப்பா சிவசுந்தரம் கூடத்தில் ஜமுக்காளத்தை விரித்து ஸ்டாண்டில் ஊதுபத்தி கற்றையைச் செருகினார். கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டால் சட்டென்று கொளுத்தினால் சரியாக இருக்கும்.

    ஏண்டி லலித், மூஞ்சியை உம்முனு வச்சுண்டு இருக்கே? சிரிச்ச மாதிரி ஜம்முனு இருடி என்ற சந்தியா புடவையின் மடிப்புகளை சரி செய்து விடுகிறாள்.

    இப்படி பெண் பார்க்கும் படலம் எத்தனை முறைகள் நடந்தேறி விட்டன? அவளைப் பொறுத்தவரையில் இது ஒரு தொடர் கதையா? இன்றைக்கு வருபவன் ஒரு பெரிய பணக்காரன். குடும்பத்திற்குச் சொந்தமாக ஒரு தொழிற்சாலை இருக்கிறது. குடும்பம் கூட்டுக் குடும்பம். என்னென்ன கேள்விகளை எல்லாம் தயார் பண்ணிக் கொண்டு வரப் போகிறானோ? எப்படி எல்லாம் கேட்பானோ ? முருகா! முருகா!

    அம்பிகே. பரதேவதே. இந்த வரனாவது தகையணும்டி அம்மா. குழந்தையோட மூஞ்சியைப் பார்க்க சகிக்கல்லே வெந்த போண்டாக்களை ஒரு தட்டில் போட்டபடி பாட்டிதான் நெட்டுயிர்த்தாள்.

    லலிதாவின் மாநிறத்திற்கு அந்தக் க்ரீம் கலர் மிகவும் பொருத்தமாக இருந்தது. கொடி போன்ற உடல் வாகு. காதளவு நீண்ட கண்கள் மைப்பூச்சில் பளபளத்தது. முப்பது வயசு என்று சொல்லித்தான் தெரிய வேண்டும்.

    ஐந்து பெண்களைப் பெற்ற அவள் தந்தை ஆண்டியாக வேண்டியவர்தான். லலிதாவிற்குக் கல்யாணம் ஆன பின்பு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு காத்துக் கொண்டிருப்பார்கள்.

    அதன் பிறகல்லவா ஆண்டியாக வேண்டும். அடுத்தவள் ஜெயா, தயாராக ரேஸில் பாயும் குதிரையாக நிற்கிறாள். அதற்கும் அடுத்தவள் விமலா, ஸ்வீட் செவன்டீன். கடைசிப் பெண் ரமா-காணும் கனவுகளுக்குப் பொருள் தேடி அலைகிறாள்.

    வாசலில் கார் நிற்கும் சத்தம். சிவசுந்தரம் தன் பருத்த சரீரம் குலுங்க ஓடினார் வாசலுக்கு. ரமா ஊதுபத்திக் கற்றையைக் கொளுத்தினாள்.

    வாங்கோ... வாங்கோ... கணீரென்று வாய் நிறைய வரவேற்றார் சிவசுந்தரம்.

    மாப்பிள்ளையாக வரவிருக்கும் செல்வமும், அவன் தாயார் அன்னம்மாவும் காரிலிருந்து இறங்கினார்கள். செல்வம், தானே காரை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான். அன்னம்மா கீழே இறங்கி நின்று புடவையை சரி செய்து கொண்டாள். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. காது, கழுத்து, மூக்கு , கை என்று வைரங்களை ஜொலிக்க வைத்துக் கொண்டு அவர்களைப் பயப்படுத்தினாள்.

    முழ அகல பார்டர் பாதங்களில் படர அமர்த்தலாகப் படி ஏறினாள். நின்று தன் மகன் வருகிறானா என்று பார்த்தாள். காரைப் பூட்டிக் கொண்டு, சாவியைச் சுழற்றியபடி செல்வம் வந்தான். அன்னம்மாவின் முகத்தில் சின்ன முறுவல் தவழ்கிறது.

    சிவசுந்தரம் செல்வத்தையே கவனித்தார். ஒல்லியான கச்சிதமான உடம்பு.

    சிவந்த நிறம். நல்ல உயரம். ஆனால் முகத்தில் நாற்பது வயசை நெருங்கும் முதிர்ச்சி தன் முத்திரையைப் பதித்து விட்டிருந்தது. தலைமுடி கூட சில இடங்களில் வெள்ளி இழையாக ஓட... நெற்றி சற்று அகலமேடிட்டு...

    தன் பெண் மட்டும் சின்னவளா! வயசு முப்பதாகவில்லை-இருந்தாலும் வயசு பத்துன்னா வித்தியாசம்... என்ன செய்வது. லலிதாவைப் பார்த்தால் இருபத்தைந்து கூட மதிக்க முடியாது. சில நிரூபணங்கள் கசக்கத்தானே செய்யும். அவரைத் தொடர்ந்து அன்னம்மாவும், செல்வமும் ஹாலுக்குள் வந்தனர்.

    கம்மென்று ஓர் அமைதி, அன்னம்மா கூடத்தின் நடுவே நின்றாள். தரையில் விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளம் கண்களை உறுத்தியது. ஒரு சோபா செட் கூடவா இல்லை? கண்கள் பெண் வீட்டாரின் அந்தஸ்தை அளப்பதிலேயே இருந்தது. காமு, காமு, என்ன பண்றே? இங்கே வந்து பார்... சம்மந்தி அம்மா வந்தாச்சு என்று உரிமையாக குரல் கொடுத்தார் சிவசுந்தரம்.

    வாங்கோ... வாங்கோ... நாட்டுப் பெண்களையெல்லாம் அழைச்சுண்டு வரலையாக்கும்? புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டே காமாட்சி ஓடி வந்து வரவேற்றாள்.

    வியர்த்துப் போன முகமும், தீற்றிய குங்குமம் கரைய... இவளா தன் மகன் செல்வத்திற்கு மாமியாரா வரப்போகிறவள்! அன்னம்மா வாயை திறக்காமலேயே இதழ்களை வலது பக்கம் இழுத்த மாதிரி சிரிப்பை சிரித்து வைத்தாள். அக்காவுக்கு வரப்போகும் மாப்பிள்ளையைக் காணும் ஆவல் ஜெயா, விமலா, ரமாவிற்கு. கூடத்து அறையிலிருந்து மறைவாக எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். காரில் வந்ததினால் செல்வம் ஜெயாவின் மதிப்பில் மிகவும் உயர்ந்து போயிருந்தான். அதனால் விமலா, ரமாவைத் தாண்டி நன்றாகவே தலையை நீட்டி கவனித்தாள்.

    கூடத்து ஒற்றை நாற்காலியில் செல்வம் அமர்ந்த பின்பு, அன்னம்மா அரை மனசாக கீழே ஜமக்காளத்தில் அமர்ந்து கொண்டாள். அம்மாவின் மனத்தில் அவ்வளவாகத் திருப்தி இல்லை என்று செல்வம் கண்டு கொண்டான். அவன் மனத்திலேயே சங்கடம் நெளிந்தது.

    ஜெய், மாப்பிள்ளை ரொம்ப வயசானவராகத் தெரியல்லே? ஜெயாவின் தோளில் முகவாயைப் பதித்து முணுமுணுத்தாள் விமலா.

    அவள் தன் மணவாளனை ஒரு கமலாகவோ, ஒரு மோகனாகவோ, ஒரு ரஜினியாகவோ கற்பனை பண்ணி வைத்திருந்தாள். லலிதாவிற்கு எப்பொழுது கல்யாணமாகி தனக்கு எப்பொழுது ஆவது என்ற கவலை ஜெயாவிற்கு. அலுவலக டைப்பிஸ்ட் கிறிஸ்டி தனக்கும் தன் கணவனுக்கும் நடக்கும் ஊடல், கூடல்களை எல்லாம் ஜெயாவிடம் ஒளிவு மறைவின்றிக் கூறுவாள்.

    அதனால் ஜெயா ஒரு கணவனுடன் இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெறத் துடித்தாள். ஏதாவது கிளம்பி இந்த வரனும் நின்னு போனால்!

    ஏன், லல்லிக்கு மட்டும் என்ன சின்ன வயசா? நேத்து தலை வார்றப்ப பார்த்தேன். ரெண்டு மூணு நரைமுடி ஓட ஆரம்பிச்சுடுச்சு என்றாள் ஜெயா அவசரமாக.

    சிவசுந்தரம் செல்வத்திடம் எதையோ பேசிக் கொண்டிருந்தார்.

    அன்னம்மா வீட்டை அளப்பது போல எந்த விதத்தில் பார்த்தாலும் தன் அந்தஸ்துக்கு ஏற்றவர்களாகப்படவில்லையே? பெண் எப்படி இருப்பாளோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். லலிதாவை வரச் சொல்லலாமா-இல்லே முன்னால டிபனைக் கொண்டுவந்துடலாமா ? என்று காமாட்சி கேட்டதை அப்படியே அன்னம்மாவிடம் திருப்பினார் சிவசுந்தரம்.

    செல்வத்தின் பார்வை சுற்றி வந்தது. விமலாவையும், ரமாவையும் தள்ளிக் கொண்டு தலையை நீட்டிய ஜெயா அந்தப் பார்வை ஊறலில் பட்டாள். கறுப்புப் புடவையில் சரிகைப்பூக்கள் போட்ட சேலை உடுத்தி, கற்றை முடியை ஒற்றைப் பின்னலாகத் தொங்க விட்டுக்கொண்டு, கண்கள் அலைபாய துறு துறுவென்று பரக்க விட்டபடி இதழ்கள் செக்கச் சிவப்பாக சிவந்தது-என்ன அழகு... என்ன அழகு? இவளா மணப் பெண்? அவன் முகத்தில் திருப்தி குடி கொண்டது.

    தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற போதையில்-பார்த்த சினிமாவின் பாதிப்போ என்னவோ பட்டென்று கண்ணைச் சிமிட்டிப் புன்னகைத்தாள் ஜெயா.

    ***

    2. நினையே ரதியென்று...

    இப்படி ஜெயா கண் சிமிட்டுவாள் என்று செல்வம் துளிக்கூட நினைக்கவேயில்லை. திகைத்துப் போனாலும் அந்தக் குறும்புக்காரப் பெண்ணைத் திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தடைபோட முடியாமல் தவித்துப் போனான். இப்போதைக்கு இது போதும் என்பது போல் தலையை இழுத்துக் கொண்டாள் ஜெயா.

    சிவசுந்தரம் கேட்ட கேள்விக்குப் பெண்ணையே கொண்டு வந்துடச் சொல்லலாமே? ரெண்டும் ஒரே சமயத்தில் நடந்துடுமே? என்றாள் அன்னம்மா வெகு சமர்த்தாக. தனக்கு சரிசமானம் இல்லாத இடத்தில் உட்கார கூசுவது போலப் பரபரத்தாள் அவள்.

    இப்படிப்பட்ட அபூர்வ யோசனைகள் தனக்குத்தான் தோன்றும் என்பது போல கர்வத்தடன் ஒரு தடவை எல்லோரையும் பார்த்தாள். தோழி சரோஜாவும் சந்தியாவும் பக்கத்தில் வர லலிதா கூடத்திற்கு வந்தாள். பின்னால் வந்த காமாட்சி டிபன் தட்டுகளை மகள் கையில் கொடுத்தாள். வலிதா பூ நடைபயின்று தட்டுகளை அவர்கள் முன்பு வைத்தாள். நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தாள்.

    வா. இப்படி உட்காரு என்றாள் அன்னம்மா.

    காலை மடக்கிக் கொண்டு அவளருகில் போய் உட்கார்ந்து கொண்டாள் லலிதா. நெஞ்சு படபடத்தது. விரல்கள் எல்லாம் சொத சொதவென்று நெய் பூச்சு பூசிய கேசரியை எடுத்து வாயில் திணித்துக் கொண்டாள் அன்னம்மா. தலையை அசைத்த வேகத்தில் காது வைரத் தோடுகள் ஆடின. இரண்டு காரெட்டுக்கு மேல் இருக்குமா? நீலம் கொட்டியது குளுகுளுவென்று. வைரத் தோடு போடு என்று கேட்பார்களோ!என்ற கலக்கம் எழுந்தது சிவசுந்தரத்திற்கு.

    அன்னம்மா லலிதாவை ஆராய்ந்தாள். பெண் பரவாயில்லை என்ற திருப்தி எழுந்தது. அதை முகத்தில் காட்டாமல் அடக்கிக் கொண்டாள். மகனைப் பார்த்தாள். அவன் உருளைக்கிழங்கு போண்டாவில் இருந்தான். எண்ணங்கள் சிதறி, கூடத்து அறைக்கு பார்வை ஓடி… ஓடி…

    அவள் இல்லையா மணப்பெண்?

    "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? விசாரணையில் இறங்கினாள் அன்னம்மா.

    அஞ்சும் பெண்கள்தாம்மா. ஒண்ணாவது பிள்ளையா பிறக்காதாங்கற எதிர்பார்ப்பிலேயே அஞ்சும் பெண்ணாப் பிறந்துடுத்துகள், என்ற சிவசுந்தரம், தம் பெண்களை அழைத்து அறிமுகப்படுத்தினார்.

    மூத்தவள் சந்தியா. அவள் குரோம்பேட்டையில் இருக்கா. மாப்பிள்ளை கணேசன் தாம்பரத்துல ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். ஒரு ஃப்ரண்ட் கல்யாணம்னு போயிருக்கார். இரண்டாவதுதான் உங்க எதிரே உட்கார்ந்து இருக்கிற லலிதா, அடுத்தவ ஜெயா... டீ ஜெயா இங்கே வா

    ஜெயா பதுமை போல வந்து நின்றாள். செல்வத்தின் முகத்தில் ஒரு சமுத்திரம் உண்டாயிற்று. ‘ஜெயா, ஜெயம்மா, ஜெய், ஜெய்யு-எப்படிக் கூப்பிட்டால் அழகாக இருக்கும்?’ ஜெயா தலையைத் தூக்கியதும் அவன் கண்களைச் சந்திக்கத் தவறவில்லை. நாற்பது வயதிலும் செல்வத்தின் பார்வை, புன்சிரிப்பு, இமைகளின் அசைவு என்று இளமை செழித்துக் கொட்டுவதைக் கண்ட ஜெயா மெய் மறந்து நின்றாள்.

    விமலா, ரமா, அறிமுகம் ஒன்றும் செல்வத்துக்கு சுவாரஸ்யமில்லை.

    லலிதா பாடுவாளா?

    சுமாராப் பாடுவா?

    ஒரு பாட்டு பாடு, கேட்கலாம் என்றாள் அன்னம்மா அதிகாரமாக.

    தயங்கினாள் லலிதா. அன்னம்மா புன்சிரிப்பு இதழை அசைத்து, கச்சேரி பண்ணவா போப்பறே? ஆத்துல ஒரு இழை கோலமிட்டா கெளரி கல்யாண வைபோகமேனு பாட வேண்டாம்? அதுக்கே அடுத்த வீட்டுக்காராளைப் போய் கூப்பிடக் கூடாது" என்றாள் பட்டென்று.

    லலிதாவின் கண்கள் ஜெயாவை அழைத்தன.

    ஜெயா, நீயும் லல்லி கூடப் பாடு என்றார் சிவசுந்தரம்.

    ஓ... இந்தக் குயில் கூவப் போகிறதா? இது மயில் என்று தானே செல்வம் எண்ணினான். இவள் குரல் எப்படி இருக்கும்? ஆவலாய் கண்கள் பளபளத்தன. இருவரும் சேர்ந்து ஒரு பாட்டைப் பாடினார்கள்.

    சிட்சை ஒண்ணும் கிடையாது. என் அகத்துக்காரியும், தாயாரும் பாடறதைக் கேட்டுத்தான் பாடறதுகள். என் தாயார் அனந்தங்காடு சரித்திரத்தையும், வண்டிக்கால் சரித்திரத்தையும் பாடினா இன்னிக்குப் பூராக் கேட்கலாம் என்றார் சிரித்துக் கொண்டே சிவசுந்தரம்.

    அதுதான் முன்னாடியே சொல்லிட்டேனே. கெளரி கல்யாணம் பாடத் தெரிஞ்சா போதுன்னுட்டு. சினிமாப் பாட்டைச் சொல்லுங்கோ, ஆறுலேயிருந்து அறுபது வயசுக்காரர் வரை பாடுவா சொன்னவள் தனக்குத் தானே ரசித்துச் சிரித்தாள்.

    ஜெயா நன்னாப் பாடுவா. லலிதா குரலை அட்ஜஸ்ட் பண்ணினதுல அமுங்கி இருந்தது என்றாள் காமாட்சி.

    அப்போ நீ தனியா ஒண்ணு பாடு. சினிமாப்பாட்டா பாடு. எனக்கு சினிமாப் பாட்டுதான் பிடிக்கும். இவன் கல்யாண வரவேற்புக்குக் கூட லைட் மியுஸிக் தான் வைக்கப் போறேன் என்றாள் அன்னம்மா.

    என்ன பாடுவது? எதைப் பாடினால் இந்த சூழ்நிலைக்குப் பொருந்தும்? நெஞ்சு அடித்துக் கொண்டது. அலுவலகத்தில் அத்தனை ஆண்கள் நடுவிலும், அரட்டை அடிக்கும் தனக்கு எப்படி இப்படி ஒரு கூச்சம் ஏற்பட்டு தொலைகிறது? ஜெயா நிமிர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1