Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Lakshmi Rajarathnam Sirukathaigal
Lakshmi Rajarathnam Sirukathaigal
Lakshmi Rajarathnam Sirukathaigal
Ebook395 pages2 hours

Lakshmi Rajarathnam Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702796
Lakshmi Rajarathnam Sirukathaigal

Read more from Lakshmi Rajarathnam

Related to Lakshmi Rajarathnam Sirukathaigal

Related ebooks

Reviews for Lakshmi Rajarathnam Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Lakshmi Rajarathnam Sirukathaigal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    லட்சுமி ராஜரத்னம் சிறுகதைகள்

    Lakshmi Rajarathnam Sirukathaigal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam
    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1 பொன்மலர்

    2 மனத் தழும்பு

    3 அவள் இட்ட பிக்ஷை

    4 யாருக்கு யார் சொந்தம் என்பது

    5 ஸீ பீம்

    6 மனங்கள் மாடர்ன் ஆர்ட்

    7 கண்கள்

    8 சந்திரிகா ஒரு சிகரெட் ஆஷ்

    9 வைஷ்ணவ ஜனதோ

    10 இல்லாத பிள்ளை

    11 வானவில்

    12 மல்லிகை

    13 நாரில் இணையாத மலர்

    14 நீ எங்கிருந்தாலும் வாழ்க!.

    15 மழையில் நனைந்தது ஒரு மலர்

    16 மாங்கல்யம் உள்ள வரையில்

    17 முத்துக்களே பெண்கள்

    18 பாவங்கள் இதயத்தில் மன்னிக்கப்படுகின்றன

    19 ஒரு ராமனைத் தேழ

    20 எதிர் வீட்டு மருமகள்

    21 இருட் கதவம் திறந்தால்..?

    22 இன்றாவது பதில் சொல்வாயா?

    23 பிணைப்பு

    24 அழகு பொம்மை

    25 கார் கலந்து வானவில்!

    26 சிந்திய பால்

    27 மனைவி அமைவதெல்லாம்.

    28 காஷ்மீர் ரோஜா

    முன்னுரை

    நடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் யாத்ரீகன் போல - இவ்வளவு தூரம் வந்த யாத்திரையை முடித்திருக்கிறோமா - என்ற பிரமிப்பு ஏற்படுவது போல.

    'காஷ்மீர் ரோஜா சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி கலந்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது. என்னை ஊக்குவித்த தினமணி கதிர். ஆனந்த விகடன். கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமலர், தினத்தந்தி, இதயம் பேசுகிறது. குங்குமம் - போன்ற பத்திரிக்கைகளை மிக்க நன்றியுடன் இச்சமயம் நினைவு கூர்கிறேன்.

    என்னுடைய கதாபாத்திரங்கள் உயிர் பாத்திரங்களாக உங்களுடன் உலாவ வருகிறார்கள். அவர்கள் என்றும் உங்கள் நெஞ்சில் இடம் பெறுவார்கள் என்பது நிச்சயம். என் வாசகர்களாகிய உங்களுக்கு என் நன்றி.

    மிக்க அன்புடன்,

    லட்சுமி ராஜரத்னம்.

    1 பொன்மலர்

    சீதா வேதவல்லி வீட்டிற்குள் வரும்போது வேதவல்லி, ராதா, விஜயா, கமலா அனைவரும் அவளுக்காகக் காத்திருந்தனர். சீதாவின் எழில் சிந்தும் எளிமையான தோற்றம் அங்கு ஒரு நிமிடம் மெளனம் நிலவிடச் செய்தது.

    விஜயா சீதாவின் புடவையைத் தொட்டுப் பார்த்தாள் இந்தப் புடவை உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது.

    அவளுக்கு எந்த புடவைதான் பொருந்தல்லே. எல்லாம் தான் பொருந்துகிறது என்று ராதா வெடித்தாள்.

    இது என் அண்ணா வாங்கித் தந்தது என்று சீதா பெருமையுடன் கூறினாள்.

    அட, இந்த சிவப்புப் புடவைக்கு மேட்சா ஆர்ட்டி பிஷியல் ஜுவல்ஸ், ரொம்ப நன்றாக இருக்கிறது சீதா என்று வேதவல்லி தன் பங்குக்கு பாராட்டிக் கொண்டே காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.

    சீதா புன்னகையுடன் கூறினாள். எனக்குத் தங்க நகைகளை விட இதெல்லாம் தான் பிடிக்கும். என் தம்பி ஹாங்காங்கிலிருந்து இதை வாங்கி வந்தாள்.

    அவர்கள் அனைவரும் சோஷியல் ஓர்க்கர்ஸ். வேலைகளை இழுத்துவிட்டுக் கொண்டு செய்து, பதிலுக்குப் புகழை வளர்த்துக் கொள்ள விரும்புவர்கள். பப்ளிசிட்டி கிடைக்கும் பணிகளுக்கு மட்டும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள்.

    இதில் சீதா எப்படியோ சிக்கிவிட்டாள். வேதவல்லியுடன் மட்டும் தற்செயலாக நட்புக் கொள்ளும்படியாக நேர்ந்தது. சீதாவின் இனிய குரல், சுறுசுறுப்பும் சாதுரியமும் அதே சமயத்தில் தன்னடக்கமும் கொண்ட அவளது குணம், எளிமையும் எழிலும் கலந்த தோற்றம், கை வேலைகளில் ஆர்வமும் கற்பனைச் செறிவும், நிறைவும் வேத வல்லியைக் கவர்ந்து விட்டது.

    நாளடைவில் சீதாவையும் தங்களுள் ஒருத்தியாக வற் புறுத்திச் சேர்த்துக் கொண்டுவிட்டாள். அவர்களுக்கு தேவைப் பட்ட பப்ளிசிட்டிக்கு அவளைச் சாமர்த்தியமாக உபயோகப் படுத்திக் கொண்டாள்.

    சீதா அதை உணர்ந்தும் அவர்களிடம் தான் கொண்ட நட்பில் ஆழம் காட்டிய போதிலும், ஒரு எல்லை வகுத்துக் கொண்டு பழகினாள்.

    அன்று அவர்களுடைய காலனிக்குக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு அனைவரும் கிளம்பினார்கள். சமூக சேவகிகளான அவர்கள், கூட்டத்தை ஒழுங்கு செய்வதிலும் நெரிசல் தாங்காது மயக்கமடைந்தவர் களுக்கு முதல் சிகிச்சை செய்வதுமாக ஈடுபட்டிருந்தனர்.

    எல்லாம் முடிந்து சீதா வேதவல்லியைத் தேடிப் போகும் போது அவள் யாரோ ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்தாள். நெடிய உயரமும் சிவந்த மேனியும், சில்க் ஷர்டும் பட்டு வேஷ்டியுமாக காணப்பட்ட அவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தாளியாக வந்திருந்தான். இந்தக் கோவிலுக்கு அவர் நிறைய பணம் வாரி வழங்கியுள்ளதாகக் கூட யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

    சீதா தயங்கினாள். வேதவல்லி அவளைப் பார்த்ததும் உற்சாகமாக அருகில் அழைத்தாள். சீதா, இவர்தான் பிரபல நடிகர் ஜெயநாதன்... மை ஃபாமி ஃப்ரெண்ட் என் கணவரின் கூடப் படித்தவர் என்று அறிமுகப்படுத்திவிட்டு அவனிடம் கூறினாள்.

    "ஜெய், இவ பார்த்தா சிம்பிளா இருக்காளே…னு நினைக்கா தீங்க. நல்ல பொஸிஷன்லே இருக்கறவதான். ஆனால் வெரி சிம்பிள்... ரொம்ப நன்றாகப் பாடுவாள். கை வேலைகள் தினுசு தினுசா செய்வாள். ஆல் ரவுண்டர்’

    ஜெயநாதன் கண்களில் வியப்புத் தெரிந்தது. சீதா, இன்னிக்கு எங்க வீட்டிலே என் பர்த்டே பார்ட்டி இருக்கு. நீங்க அவசியம் வரணும்... வேதா அவங்க இல்லாம நீ வந்தா உன்னை உள்ளே விடமாட்டேன் என்று வேதவல்லியிடம் பரிகாசமாகக் கூறினான்.

    வேதவல்லி உரக்கச் சிரித்தாள். சீதா திகைப்புடன் நின்றாள். ஜெயநாதனைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். அவ்வளவு புகழ்பெற்றவன் வீட்டுக்கு அவளுக்கு அழைப்பு வந்துள்ளது என்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    வேதவல்லி சீதாவை வீட்டுக்கு அனுப்பாமல் தன்னுடனேயே இருக்கச் சொல்லி, அன்று மாலை ஜெயநாதன் வீட்டு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றாள்.

    சீதாவுக்கு அந்த சூழ்நிலையே பிடிக்கவில்லை. முள்ளின் மேல் நிற்பதுபோல இருந்தாள். ஜெயநாதன் கேக் வெட்டியதும் ஒரு துண்டை எடுத்து எங்கோ ஒரு மூளையில் நின்ற அவளைத் தேடி வந்து கொடுத்தான். ‘ப்ளீஸ் சீதா, சிங் ஃபார்மி’

    வேதவல்லிக்கு ஒரே உற்சாகம். சீதாவை அதைப் பாடு, இதைப் பாடு என்று வற்புறுத்தினாள். வேறுவழியின்றி சீதா பாடினாள். அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்ககானவர்களுடைய கவனத்தையும் அவளது தேன் குரல் அவள்பால் ஈர்த்தது.

    ஒரு வழியாக எல்லாம் முடிந்து சீதா வேதவல்லியுடன் புறப்படும் சமயம் ஜெயநாதன், யாரோ ஒரு பெரிய மனிதருடன் அவர்களை நெருங்கினான்.

    அடுத்ததாக அவன் கூறியதைக் கேட்டதும் சீதா அதிர்ச்சியுற்றாள். அவர்கள் அடுத்ததாக எடுக்கப் போகும் புதிய படத்தில் அவள்தான் பின்னணியில் பாட வேண்டும். என்று கூறியதும், சீதா சுய நினைவிற்கு வந்து பதில் கூற சில நிமிடங்கள் பிடித்தது. தன் கணவருடன் கலந்து ஆலோசனை செய்து கூறுவதாக மழுப்பி விட்டாள்.

    வழியில் வேதவல்லி அவளைக் கோபத்துடன் திட்டினாள். சீதா, நீ உன் பதிபக்தியை இப்படிதான் காட்டணுமாக்கும், உனக்கு உன் கணவர் எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருப்பது எனக்குத் தெரியும். அத்தனை பேர் நடுவில் நீ அவரைக் கேட்டுச் சொல்லுவதாக சொல்கிறாயே... அவர் உன்னை அடிமையைப் போல் ட்ரீட் பண்றதாக மற்றவர்கள் நினைக்க நீ இடம் கொடுக்கலாமா?

    'தப்புதான் வேதா... எனக்கு விருப்பமில்லை என்று முகத்திலடிப்பது போல் சொல்வது மரியாதைக் குறைவு இல்லியா?

    "சீதா, உனக்கு பைத்தியம் பிடிச்சுடுத்தா? எல்லாரும் நடிக்கிறதுக்கே சான்ஸ் வராதானு ஏங்கறாங்க... நீ சினிமாவிலே பாடறதுக்கு என்னவோ பயப்படறியே? அது மட்டுமில்லே.

    உன்னை என்னாலே புரிஞ்சுக்கவே முடியல்லே... இவ்வளவு பழகியும் என்னை ஒரு தடவைகூட உன் வீட்டுக்கு கூப்பிடவும் இல்லே. உன் ஃபோன் நம்பரும் தரல்லே வேதவல்லி கொடுமையுடன் கூறினாள்.

    சீதா சிரித்துவிட்டு, இருட்டில் கம்பீரமாக நின்ற ஒரு பங்களாவைக் காட்டி, காரை நிறுத்தச் சொன்னாள். அந்தப் பக்கத்திலிருந்து ஒரு நாய் குரைக்கும் சப்தமும், யாரோ அதை அடக்கும் குரலும் ஒரே சமயத்தில் கேட்டது.

    சீதா வேதவல்லியிடம் விடைபெற்றுக் கொண்டு காரிலிருந்து கீழே இறங்கினாள். வேதவல்லி திடீரென்று நினைவு வளாகக் கூறினாள். சீதா, அடுத்த வாரம் எங்க வீட்டு கிரஹப்ரவேசத்துக்கு வர மறந்துடாதே. உன் கணவரையும் அழைத்து வா. அவரை நாங்கள் இன்னும் அறிமுகம் செய்துக்க்க்ல்லியே

    சீதா பரிகாசம் கலந்த குரலில் கேட்டாள். திருவனந்தபுரத்துக்கு ஆபீஸ் விஷயமாகப் போயிருக்கார் தந்தி அடித்து வரவழைக்கட்டுமா?

    வேதவல்லி சிரித்துக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்தாள். சீதா சப்தம் செய்யாமல் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து அவுட் ஹவுஸ் பக்கமாகச் சென்றாள்.

    வேதவல்லியின் வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு சீதா போனாள். வேதவல்லி, அவள் கணவர் இருவருமே புகழ்பெற்றவர்கள். பட்டத்திற்குக் கேட்க வேண்டுமா? சீதாவும் வேதவல்லிக்கு உடன் இருந்து பரபரப்புடன் உதவினாள்.

    அவள் எதிர்பாராத முறையிலே அந்தச் சம்பவம் நடந்து அவளுடைய உற்சாகத்தைக் குலைத்துவிட்டது. இவள் நடுஹாலில் அவசரமாக வருவதை கவனிக்காமலேயே சமையல்காரர் காபியுடன் வந்து கொண்டிருந்தவர் மோதி அவள் மேல் கொட்டி விட்டார்.

    வேதவல்லி அத்தனை மனிதர்களின் நடுவில் சமையல் காரரைக் கடிந்து கொண்டாள். சீதா சிலையாக நின்றாள். சமையல்காரர் உடனேயே அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும், சீதாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

    வேதவல்லி, அவளை அழைத்துப் போய் வேறு புடவையை மாற்றிக் கொள்ளச் செய்தும் அவள் மனம் சமாதானம் அடைய வில்லை. அன்று இரவு எல்லாம் முடிந்து தாம்பூலத்துடன் திரும்பும் போது, வேதவல்லியின் வேலைக்காரி துவைத்துப் போட்டிருந்த தன் புடவையை உடுத்திக் கொண்டு, வேதவல்லியின் புடவையை திருப்பிக் கொடுத்துவிட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பினாள்.

    அவுட் அவுஸின் வராண்டாவில் அவளது கணவர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். சீதா கண்ணீர் பெருக அவரது கால்களில் விழுந்து என்னை மன்னிச்சிடுங்க... என்று கதறினாள்.

    அவளது தலையை பரிவுடன் தடவிக் கொடுத்த அவளது கணவர் எதுக்கு சீதா, தப்பு என் மேலேதானே... உன் ஃப்ரெண்ட் பத்து ரூபாயை அதற்காக பிடித்துக் கொண்டு விட்டாள்.

    எனக்குத் தெரியும், அவள் உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தப்போ. நான் பக்கத்து ரூமிலேதான் இருந்தேன். ரூபாயை விட்டுத் தள்ளுங்க... அத்தனை பேர் நடுவிலே நீங்க, என் கிட்டே மன்னிப்பு கேட்கும்படியாக ஆயிடுத்தே... னு நினைச்சா. எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கு.

    ‘அசடே நீ எங்கேயோ. எப்படியோ வாழ வேண்டியவள். நீ ஒரு பொன் மலர். தகுதியே இல்லாத ஏழை நான் என்னிடம் வந்து சேர்ந்திருக்கே.

    சீதா சட்டென்று அவரது வாயைமூடினாள். நான் பொன் மலரில்லே. நீங்க எனக்குத் தினம் வாங்கிவார மல்லிகை மலராகவே நான் இருக்க விரும்பறேன். பெரிய வீட்டுப் பெண்கள் நட்பிலே எனக்கு இருந்த சபலமும் போயிடுத்து. உங்க கெளரவத்தைவிட எனக்கு அவங்க நட்பு பெரிசில்லே.

    வேதவல்லியின் வீட்டில் கிரஹப்ரவேசத்திற்காக வேலை செய்த அந்த சமையல்காரர் தன் மனைவி சீதாவின் கண்களைத் துடைத்தார்.

    ***

    2 மனத் தழும்பு

    அவனைத் தீபாவளிக்கு வரச்சொல்லி அத்தை கடிதம் எழுதி இருந்தாள். அதைக் கேட்டதும் அவனுடைய தம்பி தங்கைகள் கேலி செய்தனர்.

    தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அந்தக் கிராமத்துக்கா போகப்போகிறாய்? என்று கேட்டான் தம்பி.

    தீபாவளிக்குப் புதுப்படம் எப்படிப் பார்ப்பாய்? என்று கேட்டாள் தங்கை,

    இதை எல்லாம் லட்சியம் பண்ணாத கண்ணன் கிளம்பி விட்டான். ஒரு மாத லீவில்.

    அங்கே போயாவது அலையாதே என்று அனுப்பி வைத்தாள் அம்மா.

    அத்தையின் கிராமம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். காவேரிக் கரையும் தென்னந் தோப்புகளும் சங்கீதம் இசைக்கும் புள்ளினங்களும். அவற்றை ரசிக்கும் கவிதை மனம் அவனுக்கு இருந்தது. கிளம்பும் பொழுதே அத்தைக்குப் புடைவை, அத்திம்பேருக்கு வேஷ்டி எல்லாம் வாங்கிக் கொண்டான். இனிப்பு வகைகள் உள்பட இரவுதான் போய்ச் சேர்ந்தான். பளபளவென்று விடியும் பொழுதே அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. யாரோ வைத்த ஒற்றை வெடி வெடித்தது. மாடியின் ஒரே அறை மீதி இடம் எல்லாம் திறந்தவெளி நீண்ட பக்கவாட்டுச் சுவரில் சாய்ந்து பார்த்தால் பக்கத்து வீடு தெரியும். முன் பக்கத்துச் சுவரின் அருகில் நின்றால் வாசல் பக்கம் தெரியும்.

    அவன் அங்கு வந்து நின்றான். வீடுகளே தெரியாதபடி மரங்கள். அவன் வந்து இரண்டு வருடங்களாகிவிட்டபடியால் பல வீடுகள். புதுப்புதுக் கட்டிடங்களாக எழுந்திருந்தன.

    சிவன் கோவிலிலிருந்து இசைத்தட்டு முழங்கியது. அதையும் மீறி அத்தையின் குரல் ஒலித்தது. இவ்வளவு பெரிய வீட்டில் ராஜ்யபாரம் செய்து பழக்கம். அதற்கு அத்திம்பேரே அடிமை. பதில் பேச முடியாது. குழந்தை குட்டிகள் இல்லை. தம்பியின் குழந்தைகளிடம், அதுவும் அவனிடம் தனிப் பாசம்.

    நாலு பெண்கள், இரண்டு ஆண்களுக்கு நடுவே பிறந்த அவன் அத்தையின் பாசத்தைப் பயன்படுத்திக் கொண்டான். அதனால்தான் கட்டிட ஒலி நிர்ணய நிபுணன் ஆக முடிந்தது. அத்திம்பேரின் உதவியால் நல்ல இடத்தில் வேலையும் கிடைத்தது. இவை எல்லாம் நன்றி நினைவுகளாக நெஞ்சில் பீறிடுகின்றன.

    அவன் கீழே இறங்கி வந்தான். அத்தை காபியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். ஆற்றும் பொழுதே மணந்தது. பல் தேய்த்தால்தான் காபி என்பது தெரியும். அத்தையின் கண்டிப்பு பிரசித்தமானது.

    அவனை நிமிர்ந்து பார்த்தாள் அத்தை. எதற்காக இவ்வளவு சீக்கிரமாக எழுந்து வந்தாய்? பல்லைத் தேய்த்து விட்டு வா, காபி தரச் சொல்லுகிறேன்.

    கொல்லைப்புறம் எருமை, ஓர் இரண்டு பசுக்கள். வெள்ளை வெளேரென்று கன்றுக் குட்டிகள் துள்ளி ஓடின. பல்லைத் தேய்த்துக் கிணற்றுத் தண்ணீரை இறைத்துச் சில்லென்று முகத்தைக் கழுவினான்.

    ஒரு மின்னல் வெட்டியதுபோல் உள்ளே போன விமலா பாலுடன் திரும்பிப் பக்கத்து வீட்டில் நுழைந்தாள்.

    விமலாவா? அவளா இப்படிக் கொடி போல் வளர்ந்து விட்டாள்? அவனைப் பார்க்கவில்லையா அவன் உள்ளே வந்ததும், சமையற்காரி கனகம், காபியைக் கொண்டு வைத்தாள்.

    கண்ணா, அப்பா அம்மா எல்லாரும் செளக்கியமா? த்திராவுக்கு ஏதாவது வரன் தகைந்ததா? அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு கேட்டாள் அத்தை

    டின்பால் காபி குடித்த நாக்குக்குக் கறந்த பால் காபி மணந்தது.

    இளைச்சுப் போயிட்டியே! ஆபீஸ் வேலை ஜாஸ்தியா? வேளா வேளைக்குச் சாப்பிடணும். ராத்திரி பன்னிரண்டு மணிக்குத்தானே வந்து இறங்கினே? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கக் கூடாது?

    அத்தையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டுத் துண்டு, சோப்புப் பெட்டியை எடுத்துக் கொண்டான்.

    அத்தை, காவேரிக்குக் குளிக்கப் போகிறேன்.

    பார்த்து இறங்கு. போன வாரம் பெய்த மழையில் வெள்ளம் போகிறது உள்ளேயிருந்து அத்தை எச்சரித்தாள்.

    அவன் வாசற்படியில் இறங்கியதும், ஈரப் புடைவை தடுக்க விமலா பக்கத்து வீட்டினுள் நுழைந்தாள். ஒரே கணம்; அவன் கண்கள் அவளைப் படம் பிடித்து இதயத்தினுள் போட்டுக் கொண்டது.

    நீரின் சலசலப்பிலும், சில்லென்ற குளுமையிலும் சோப்பின் வெண்மை நுரை உடலைத் தழுவும்போது அவன் நினைவுகள் விமலாவையே சுற்றிப் படர்ந்தன. அவள் தன்னைப் பார்த்திருப்பாளோ? என்னை நினைப்பாள்? அவன் விமலாவைச் சந்திக்கத் துடித்தான்.

    அன்று மாலை அத்திம்பேருடன் டவுனுக்குப் போயிருந்தான். ஊரிலிருந்து தனக்குப் புது ஆடைகள் கொண்டு வந்திருந்தாலும், அத்தை பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து வாங்கிக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தினாள். அத்திம்பேரின் நண்பர் ஒருவர் அவரை வழியில் பிடித்துக் கொண்டு விட்டார்.

    நீ முதல் பஸ்ஸில் போ கண்ணா, நான் அடுத்த பஸ்ஸில் வருகிறேன்.

    கண்ணன் கிளம்பினான்.

    சற்றுத் தூரத்தில் தூக்கிப் போட்ட கொண்டையில் ஒற்றை ரோஜா வீற்றிருக்க, கழுத்து பளபளக்க, நாலே எட்டில் அவளை அடைந்து விட்டான்.

    விமல்!

    விமலா திரும்பினாள், நாணத்தில் கண்கள் பளபளத்தன. அவளுடன் இணைந்து நடந்தான்.

    ‘என்னைப் பார்க்கவில்லையா, விமல்?’

    பார்க்காமல் இருப்பேனா?

    எங்கே போய்விட்டு வருகிறாய்?

    நான் இங்கே ஒரு பள்ளியில் பாட்டு வாத்தியாராக வேலை பார்க்கிறேன். துணிகள் வாங்க வேண்டியது பாக்கியாக இருந்தது. அதனால் முன்னால் கிளம்பினேன்.

    கையில் உள்ள பையில் மேலாக வைத்திருந்த தஞ்சாவூர்க் கதம்பம் மணந்தது.

    நீ என்னை மறந்து விட்டாயோ என்று நினைத்தேன்.

    எப்படி மறக்க முடியும்? என்றாள் சன்னக் குரலில், உனக் காகத்தான் ஒரு மாத லீவில் வந்திருக்கேன். நீ என்னடாவென்றால் என்னைத் திரும்பியே பார்க்கவில்லை.

    இரண்டாண்டுகளுக்கு முன்பு அவன் கல்லூரி மாணவனாக வந்திருந்தான். தேர்வு எழுதப் போகும் போது விமலாவின் அம்மா அவனைத் துணைக்கு அனுப்பினாள்.

    எத்தனையோ தடவைகள் அவளுக்கு அவன் கடிதம் எழுத நினைத்ததுண்டு. ஆனால் அவள் அம்மாவிடம் கிடைத்து விட்டால்? இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து விட்ட துணிச்சல் அவளுக்கு வியப்பைத் தந்தது.

    தனக்காகத்தான் வந்திருக்கிறானாமே?

    எனக்கு இங்கு வரமுடியாமல் போய் விட்டது. படிப்பு முடிந்ததும் கட்டிட ஒலி அமைப்புப் பயிற்சிக்காக வடக்கே போய் விட்டேன். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் அங்கே இருந்தேன். இங்கே வேலை கிடைத்ததும் லீவ் எடுக்க முடியவில்லை

    பேச்சுச் சுவாரசியத்தில் தெருப் பையன்கள் வைத்த சரவெடியின் அருகில் அவள் நடந்து விட்டாள். அதைக் கவனித்த கண்ணன் பாய்ந்து அணைத்து அவளை நகர்த்திக் கொண்டு விட்டான். சரவெடிகள் படபட வென்று வெடித்த சத்தம் போல் நெஞ்சு துடித்தது.

    நன்றி, கண்ணன்

    இந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

    பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர்கள் பிரிந்து சென்றார்கள்.

    தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு சின்ன அத்தை தன் குடும்பத்துடன் வந்து விட்டாள். கோலமும் செம்மண்ணுமாக வீடு அமர்க்களப்பட்டது. கண்ணன்தான் வெடிகளை வெடித்தான். வாசலில் நின்றதால் விமலா அடிக்கடி கண்களில் பட்டாள். விழிகள் சந்திக்க, புன்னகை பூக்க நிறைய வாய்ப்புகள்.

    தீபாவளி அன்று காலை, விமலா புதுப் புடைவையுடன் அத்தையை நமஸ்கரிக்க வந்தாள். கண்ணன் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

    இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. என் அன்பளிப்பாக உனக்கு நான் ஒரு புடவை வாங்கித்தர ஆசைப் பட்டேன். ஆனால் நீ வாங்கிக் கொள்ளுவாயோ, மாட்டாயோ என்று வாங்கவில்லை என்றான் கண்ணன்.

    நீங்களுந்தான் புது மாப்பிள்ளை போல இருக்கிறீர்கள். உங்கள் ஆசை எல்லாம் கல்யாணம் ஆன பின்புதான் நிறைவேறும்.

    அடுத்த தீபாவளி நம் தலை தீபாவளிதான்.

    அடுத்த தீபாவளி, அதற்கு அடுத்த தீபாவளி என்று எத்தனையோ தீபாவளிக்ள் வந்தன. ஆனால் அவர்கள் தலை தீபாவளியாக அமையவில்லை. அவன் எந்த வேலையில் சொன்னானோ?

    அன்று மாலை குடும்பத்தினர் அனைவரும் காபி குடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அத்தை பட்சணத் தட்டுடன் வந்தாள். சின்ன அத்தை அவன் கல்யாணப் பேச்சை எடுத்தாள்.

    அக்கா, நம், ரத்னாவைக் கண்ணனுக்குக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்

    பெரிய அத்தை ஆமோதித்தாள். ரத்னா கண்ணனுக்கு என்று ஏற்கனவே முடி போட்ட விஷயந்தானே?

    கண்ணனுக்குத் தலையில் அணுகுண்டு வெடித்தது. இது என்ன புது விஷயம்?

    ஒரு நல்ல நாள் பார்த்து லக்னப் பத்திரிகை கொடுத்து விடலாம். சுபமான விஷயத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றாள் பெரிய அத்தை

    முடித்து விட வேண்டியதுதான். என்னடா கண்ணா, நீ இப்படியே சுற்ற முடியாது. உறவு விட்டுப் போகலாமா?

    ரத்னாவை அவன் தன் மனைவி ஸ்தானத்தில் வைத்துப் பார்த்ததே இல்லையே கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அவனை ஒரு வார்த்தை சம்மதம் கேட்க வேண்டாமா? பொங்கினான் கண்ணன்.

    பெரிய அத்தை பூஜையறையில் விளக்கேற்றும் சமயம்.

    அத்தை!

    திரும்பினாள். ‘நீ எங்கேயும் உலாவப் போகவில்லையா?’

    இல்லை ஒரு விஷயம், நீ பாட்டிலே என் கல்யாணத்தை முடிவு செய்துவிட்டாயே! என்னைக் கேட்க வேண்டாமா?

    அத்தை சிரித்தாள். முதிர்ச்சி பொதிந்த சிரிப்பு. நீ குழந்தை உனக்கு என்னடா தெரியும். இதெல்லாம் பெரியவர்கள் பார்த்துக் செய்ய வேண்டிய விஷயம்?

    இருக்கட்டும் அத்தை, நீயாவது என்னைப் புரிந்து கொள்வாய் என்று நினைச்சேன்.

    என்னப்பா சொல்றே நீ? உங்க அலுவலகத்திலே யாரையாவது?... குலம் கோத்திரம் பார்க்க வேண்டாமா!

    அத்தை பெரிய பாத்திரப் பெட்டி மேல் உட்கார்ந்து விட்டாள்.

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இங்கே பக்கத்து வீட்டிலே குடியிருக்கிற விமலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

    அத்தையின் புருவங்கள் ஏறி இறங்கின.

    அப்படிச் சொல்லு அவள் உன்னை நன்றாக மயக்கி விட்டிருக்கிறாள்!

    அவள் ஒன்றும் என்னை மயக்கவில்லை அத்தை அவன் காதருகே வந்து இரகசியமாகச் சொன்னாள். பெண்ணான நானே சொல்லக் கூடாது. பெண் பாவம் பொல்லாதது. ஆனாலும் உனக்குக் கெடுதல் செய்யலாமோ, கண்ணா?

    அவன் விக்கித்துப் போனான்.

    மறுநாள் மாலை அவன் கிளம்பிவிட்டான். அத்தை ஒப்புக்குத் தடுத்துப் பார்த்தாள். பிறகு போவதுதான் நல்லது என்று விட்டுவிட்டாள். திடீரென்று கண்ணன் தன்னிடம் சொல்லாமல் கிளம்பிப் போனதை எண்ணிக் கலங்கினாள் விமலா,

    கால் கட்டை விரலில் அவன் சுற்றிய கைக்குட்டை மாலையில் ஊருக்குப் போகிறவர் ஏன் காலையில் அவளிடம் சொல்லவில்லை? ஆற்றங்கரையில் அவன் போவதைக் கண்டு அவள் ஓடியபோது பெரிய கல் ஒன்று தடுக்கிக் கட்டை விரலில் நகம் பெயர்ந்து விட்டது. இரத்தம் கொட்டியது.

    கண்ணா!

    கண்ணன் திரும்பினான். மண்ணுல இரத்தம் சொட்டச் சொட்டக் கைக்குட்டையை நீரில் நனைத்துக் கட்டினான்.

    டாக்டரிடம் போய் மருந்து போட்டுக் கொள்.

    அத்தை சொன்ன அதிர்ச்சியைத் தாங்க இயலவில்லை. நெஞ்சு வலித்தது அவனுக்கு இன்று காவிரியில் குளிப்பது இழந்து விட்ட என் காதலுக்கா என்று துடித்துப் போனான் அவன். இது விமலாவுக்கு எப்படித் தெரியும்? ஒரு மாதம் தங்கப் போவதாகச் சொன்னானே!

    அது மட்டுமா சொன்னான்? இன்னும் நெஞ்சு மணக்க மணக்க எத்தனையோ சொன்னான். கண்ணீர் வடித்த கன்னம் உலருவதற்குள் கண்ணனின் அத்தை கல்யாணப் பத்திரிகையை நீட்டினாள்.

    ‘என் தங்கை பெண் ரத்னாவைத்தான் கண்ணனுக்குத் தருகிறோம். உறவு விட்டுப் போகக்கூடாது பாருங்கள். கண்ணனுக்கும் ரத்னாவின் மேலே ஆசை" என்று சொன்னாள் அத்தை.

    சுட்டுக் கொண்ட இடத்திலேயே விமலாவுக்குச் சூடு போட்டு விட்டாள்.

    ‘கண்ணா, நீங்கள் இப்படிப்பட்டவரா? போகும் இடத்தில் எல்லாம் ஒரு காதலியா?’ என்று குமுறினாள் கண்கள் வற்றும்வரை அழுது தீர்த்தாள்.

    ரேடியோவைத் திருப்பினான் கண்ணன். அவனுக்குப் பிடித்த பாடல். சமீபத்தில் படங்களில் பின்னணி பாட ஆரம்பித்திருக்கும் புதுப்பாடகியின் வளம் செறிந்த குரல், காந்தம் போல் அவனை ஈர்த்தது. உள்ளத்தை சுண்டி இழுத்து இன்ப வேதனையைக் கிளறும் வகையில் பாடும் அந்தப் பாடகியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு.

    கண்களை மூடிக்கொண்டு ரஸித்தான்.

    ஐயோ! அதைக் கொஞ்சம் நிறுத்துங்களேன். எனக்குப் படபடவென்று வருகிறது. டாக்டரை வரச் சொல்லிப் போன் பண்ணுங்களேன் என்று அரற்றினாள் ரத்னா.

    வெறுப்புடன் திரும்பிப் பார்த்தவன், உனக்கு நல்ல தெல்லாம் ஆகாதே. எனக்குப் பிடித்த பாடகி பாடுகிறாள் உனக்கு என்ன கேடு? என்று சத்தமிட்டான்.

    ரத்னா தலையணையில் முகத்தைப் பதித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1