Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jayabharathi Sirukathaigal
Jayabharathi Sirukathaigal
Jayabharathi Sirukathaigal
Ebook370 pages2 hours

Jayabharathi Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆவணப் படங்களையும் எழுதி, இயக்கி, தயாரித்த ஜெயபாரதியின் முழுச் சிறுகதைகள் அடங்கியுள்ள இந்நூல் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123602809
Jayabharathi Sirukathaigal

Read more from Jayabharathi

Related to Jayabharathi Sirukathaigal

Related ebooks

Reviews for Jayabharathi Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jayabharathi Sirukathaigal - Jayabharathi

    http://www.pustaka.co.in

    ஜெயபாரதி சிறுகதைகள்

    Jayabharathi Sirukathaigal

    Author:

    ஜெயபாரதி

    Jayabharathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayabharathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சில வார்த்தைகள்…

    1969, உங்கள் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் கையெழுத்துதான் புரியவில்லை. அலுவலகத்திற்கு வந்து கதையைப் பெற்றுக் கொண்டு, வேறு நகல் எடுத்துத் தந்தால் வருகிற இதழ் 'கண்ணதாசனி'ல் உடன் பிரசுரமாகும் - என்கிற இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து எனது முதல் சிறுகதை 'எல்லாருந்தான் கெட்டவா' வெளிவந்தது.

    இரண்டாவது சிறுகதை கணையாழியில் உடனேயே பிரசுரமாயிற்று. மூன்றாவது வெளிவந்தவுடன் யார் சார் இந்த ஜெயபாரதி? நிறைய எழுதச் சொல்லுங்களேன் என்று கணையாழியில் வாசகர் ஒருவர் சிலாகித்திருந்திருந்தார். 4,5,6வது சிறுகதைகளை தொடர்ந்து வெளியிட்டார்.

    அப்போதைய தினமணிகதிர் ஆசிரியர் திரு. சாவி, அவருக்கும், திரு. கி. கஸ்தூரி ரங்கன், கண்ணதாசன், மற்றும் என் கதைகளை வெளியிட்ட கணையாழி, கல்கி, இந்தியா டுடே, குங்குமம், வாசுகி, சுபமங்களா ஆசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

    - ஜெயபாரதி

    தமிழ் நாட்டின் மிகப் பிரபலமான எழுத்தாளர் தம்பதிகள் அமரர்கள் து.ராமமூர்த்தி மற்றும் சரோஜா ராமமூர்த்தியின் புதல்வர் ஜெயபாரதி.

    பட்டதாரியான இவரும் 1970களில் எழுத ஆரம்பித்து தினமணி கதிர் பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். தினமணி கதிரில் சுஜாதா, புஷ்பாதங்கதுரை ஸ்ரீவேணுகோபாலன், ஜெயபாரதி மூவரும் அன்று போட்டி போட்டுக் கொண்டு எழுதி தமிழ் வாசகர் உலகத்தில் பிரபலமடைந்தனர். கவியரசு கண்ணாதாசன் நடத்திய 'கண்ணாதாசன்' பத்திரிகையில் இவரின் முதல் கதையும் கணையாழி என்கிற இலக்கிய இதழிலும் இவரின் அடுத்த இரு சிறுகதைகளும் அடுத்தடுத்து பிரசுரமாயின.

    இந்தப் பின்னணியில், எழுபதுகளில் ஜெயபாரதி, மாலன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, இந்துமதியைத் தொடர்ந்து புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள் பலர் தமிழில் உருவானார்கள்.

    மூன்று ஆண்டுகள் கதிரில் பணிபுரிந்த பின், ஓராண்டு கணையாழி பத்திரிகையில் பணிபுரிந்து விட்டு பிற மாநிலத்தவரின் தரமான படங்களைப் பார்த்து, அதனால் ஏற்பட்ட தாக்கத்தில், தன் தந்தை து.ராமமூர்த்தி எழுதி, கணையாழியில் வெளியான 'குடிசை' கதையை திரைப்படமாக்க முயன்றார். ஜெயபாரதி நன்கொடை வசூல் செய்து அப்படத்தை தயாரித்து, இயக்கினார்.

    திரைப்படங்களில் 'நியோ-ரியலிச' படைப்பாக சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி' குறிப்பிடப்படுவது போன்று, தமிழில் ஜெயகாந்தனின் 'என்னைப் போல் ஒருவன்' குறிப்பிடப்படும். அதற்கடுத்து ஜெயபாரதியின் 'குடிசை' திரைப்படமும் இவ்வகையில் பெருமையுடன் சேர்ந்து கொண்டது. 'குடிசை' படம் வெளியான பின் மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இப்படத்தின் ஒரு பிரதியை வாங்கி, புனேயில் உள்ள மத்திய திரைப்படக் காப்பகத்தில் வருங்கால தலைமுறைக்காக (Preservation & Study) பாதுகாத்து வருகிறது.

    'குடிசை' படத்தில் பங்கேற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அத்தனை பேரும் சினிமா என்ற ஊடகத்திற்கு முற்றிலும் புதியவர்கள்.

    மேலும் ஜெயபாரதியின் 'குடிசை'தான் தமிழ் சினிமாவை கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களை முற்றிலும் தவிர்த்து, உண்மையான பின்புலத்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமாகும். குடிசைக்குப் பிறகு ஜெயபாரதி ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா… நண்பா…, குருட்சேத்திரம் ஆகிய திரைப்படங்களை இவர் எழுதி இயக்கினார்.

    'உச்சி வெயில்' படம் இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் காட்டப்பட்ட படம். பின் இதே 'உச்சி வெயில்' படம் கனடா நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, டேவிட் ஓவர்பை என்கிற சர்வதேச திரைப்பட விமர்சகரால் பாராட்டப் பெற்று, அவர் எழுதிய விமர்சனம் 'கண்டம்பரரி வேல்டு சினிமா' என்ற புத்தகத்தில் பிரசுரமானது. ஜெயபாரதி எழுதி இயக்கிய 'நண்பா நண்பா' படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்காக வாகை சந்திரசேகருக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகர் பரிசு கிடைத்தது.

    இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டியன் லாங்க்வேஜஸ் என்கிற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைப்புக்காக தொடர்ந்து ஆவணப் படங்களை எழுதி இயக்கி வருகிறார்.

    மிக சமீபத்தில் சென்னை தொலைக்காட்சிக்காக Indian classics என்கிற பிரிவின் கீழ் சாகித்ய அகாதமி விருது பெற்ற எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் 'வேள்வித்தீ' நாவலை திரைக்கதை எழுதி, இயக்கி அளித்துள்ளார்.

    இதுவரை 60 சிறுகதைகள், இரண்டு குறு நாவல்கள் தினமணி கதிர், கணையாழி, கண்ணதாசன், குங்குமம், கல்கி ஆகிய தமிழ் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.

    இவர் எழுதி கணையாழியில் வெளியான 'அந்தத் தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு' என்ற சிறுகதை சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் சிறுகதைகள் என்ற தொகுப்பில் (Anthology) இடம்பெற்று பெருமை அடைந்தது.

    சினிமாவிற்கு வருவதற்கு முன் மிகத்தரமான வேற்று மொழித் திரைப்படங்களை சென்னை தியேட்டரில் வெளியிட்டதோடு சினிமா விமர்சனத்தையும் எழுதியிருக்கிறார்.

    திரைப்படக் கல்லூரியிலும் படிக்காமல், எந்த இயக்குநர் கீழும் பணிபுரியாமல் தானாகவே சினிமா என்ற ஊடகத்தின் தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுச் சுயம்புவாக உருவானவர் ஜெயபாரதி.

    தன் எழுத்தை மதித்து பிரசுரித்த அத்தனை பத்திரிகை ஆசிரியர்களுக்கும்; தன் திறமையை புரிந்து படங்களை இயக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறுகிறார்.

    இங்கே, அவரின் முழுச் சிறுகதைகளின் தொகுதி நூல் வடிவில்…

    நளின சுந்தரி நந்தன்

    பதிப்பாளர்

    சமர்ப்பணம்

    அப்பாவுக்கும்… அம்மாவுக்கும்…

    பொருளடக்கம்

    1. கீதாஞ்சலி

    2. அப்பா ஒரு ஸ்கொயர்

    3. அம்மாவின் கணவன்

    4. எல்லாருந்தான் - கெட்டவா!

    5. அவன் தெருவிலும் அதே பானர்!

    6. தெரு நாய்

    7. பாவம் கஸ்தூரிப் பெண்!

    8. கடன்

    9. விருந்து

    10. நாளை முதல் பட்டணத்தில்…

    11. யாருமே வரமாட்டேளா?

    12. அம்மாவுக்கு ஒரு புடவை

    13. அந்தத் தெருவின் முடிவில்...

    14. சத்யா

    15. நைட் ஷோ

    16. சைத்தான்

    17. கல்யாணச் சந்தடியில்

    18. முதல் ராத்திரி

    19. முன்னோடி

    20. பட்சிதோஷம்

    21. வீட்டை நோக்கி

    22. வேலை

    23. மாயா

    24. ஒரு சின்ன உயிர்க்கொலை

    25. தயக்கம்

    26. ஒரு முயற்சியின் மரணம்

    ***

    1. கீதாஞ்சலி

    அவன் பார்க் ஸ்டேஷனை ஒட்டினாற்போல் இருக்கும் சென்ட்ரல் ஜெயிலில் இருந்தான். காலை ஒன்பது நான்குக்கு ஒரு மின்சார ரயில் வரும். அது தாம்பரம் போகிற வண்டி. அது வந்து நின்றவுடன் ஜெயிலுக்குள் இருக்கும் அவன் நிமிர்ந்து உட்காருவான். அவன் இருக்கும் இடத்திலிருந்து அந்த வண்டியைப் பார்க்க முடியாது. இருந்தாலும் அவனால் அதை மனதுக்குள் கொண்டு வர முடிகிறது தினமும்.

    அந்த வண்டிக்குள்தான் அவள் உட்கார்ந்திருக்கிறாள். அவள் பெயர் கீதாஞ்சலி. வண்டியின் கோடியில் இருக்கும் கார்டு ஒரு தரம் விசில் பண்ணுகிறார். பிறகு சற்று நகர்ந்து ஒரு பட்டனை அமுக்குகிறார். டிரைவர் வண்டியை ஓட விடுகிறார். டடங் என்று கிளம்பி அடுத்த ஸ்டேஷனை நோக்கி ஓடுகிறது அது. அழகான அந்தக் கீதாஞ்சலியும் வண்டியோடு போகிறாள்.

    இப்படித்தான் அவன் அந்தச் சிறைக்குள் தள்ளப்பட்ட நாள் முதல், ஒன்பது நான்குக்கு அந்த நிகழ்ச்சிகளைத் தன்முன் படமாகப் பார்க்கிறான். என்னவோ ஒரு சுகம் அதில்!

    அன்று சனிக்கிழமை; விடுமுறை நாள். பார்க் ஸ்டேஷனில் ஒரு கோடியில் ரயிலுக்காகக் கார்த்திருந்தான் அவன். ஒன்பது நான்குக்கு வந்தது வண்டி. ரயிலை நிறுத்திய டிரைவர் இவனைப் பார்த்து, ஹலோ சுப்பையா! என்றான்.

    ஹலோ, இந்த ஷிப்ட்டுலேதான் நீ இருக்கியா ஜோசப்?

    ஆமாம். உனக்கு ஆபீஸ் கிடையாதா இன்னிக்கு?

    இல்லை. சைதாப்பேட்டைக்கு நான் போகணும். மாமாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சுப்பையா சட்டென்று தலையைத் திருப்பிப் பக்கவாட்டில் பார்த்தான்.

    கவலைப்படாதே! கார்டு விசில் கொடுத்தாலும், நான்தான் வண்டியை ஸ்டார்ட் பண்ணணும்!

    சிரித்துக்கொண்டே பேசினான் ஜோசப். சுப்பையா கார்டைப் பார்க்கவில்லை. அவளைப் பார்த்தான். முதல் பெட்டியில் இரண்டாவது சன்னல் ஓரத்தில் இருந்தாள் அவள்.

    நீ அடுத்த வண்டியில் வா சுப்பு. இதிலே ஒரே கூட்டம்! என்று சொல்லிக்கொண்டே ஜோசப் வண்டியை நகர்த்தினான். ஒவ்வொரு பெட்டியும் அவனைக் கடந்து வேகமாகப் போயிற்று; 'யார் அந்தப் பெண்? இவ்வளவு அழகாக இருக்கிறாளே?' என்று கேட்டுக்கொண்டான். அடுத்த வண்டியில் சைதாப்பேட்டை போனான். மாமாவிடம் பேசும்போதெல்லாம் அவளை நினைத்துக்கொண்டான். மனம் இனம் தெரியாத ஆவலால் சுமையானது.

    அதே சுப்பையா; அடுத்து சனிக்கிழமை; அதே இடம்; ஒன்பது நான்குக்கு அந்த வண்டி வந்தது. ஜோசப்தான் இருந்தான்.

    என்ன சுப்பையா, இன்னிக்கும் மாமா வீட்டுக்கா?

    இல்லை.

    பக்கவாட்டில் பார்த்தான், முதல் பெட்டியின் இரண்டாவது சன்னல் அருகே வேறு புடவையில் இருந்தாள் அவள். சுத்தமான முகம். அழகான குழந்தைக் களை.

    யாரைப் பார்க்கிறே?

    அதோ அந்தப் பெண்ணைத்தான். தினம் உன் வண்டியில்தான் வராப்போல இருக்கு!

    ஜோசப் தொங்கிக்கொண்டே எட்டிப் பார்த்தான். அவளா? கிண்டியில் இறங்கிப் போவாள்.

    ஆமாம்; பேரு என்ன ஜோசப்?

    கீதாஞ்சலி.

    ஜோசப், சுப்பையாவைத் தன்னிடம் கூப்பிட்டான்.

    அதோ பச்சை ஸ்லாக் போட்டிருக்கானே, அவன் இவள் பின்னாலே ஒரு மாசமா சுத்தறான். அவன் இவள் பெயரைச் சொல்லி பிரண்ட்ஸ்கிட்டே பேசுவான்.

    சுப்பையா அவனைப் பார்த்தான். ஆறடி உயரம் இருந்தான்.

    வண்டி கிளம்பப் போறது. போய் ஏறிக்கோ சுப்பையா.

    இல்லே; நான் எங்கேயும் போகலே. இவளைப் பார்க்கறதுக்குத்தான் வந்தேன்!

    ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து ஒரு டீ ஸ்டாலுக்குள் உட்கார்ந்து கொண்டான். 'கீதாஞ்சலி' என்ற பெயரைச் சொல்லிப் பார்த்தான்.

    இந்த வாரம் ஜோசப் அந்த வண்டியை ஓட்டி வரவில்லை. அவன் வேறு ஷிப்ட்டில் இருந்தான். சுப்பையா சன்னலைப் பார்த்தான். எதற்காகவோ தன் உதடுகளால் சிரித்தான். சிரிக்கும்போது கண்கள் அரைகுறையாக மூடிக் கொண்டன. அவன் திரும்பி பச்சை ஸ்லாக்கைத் தேடினான். அவன் 'டி' ஷர்டில் இருந்தான். இரண்டு நண்பர்களுடன் லேடீஸ் கம்பார்ட்மெண்ட் அருகே சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். கீதாஞ்சலி அந்தக் கும்பலைப் பார்த்தாள்.

    மறுநாள் அலுவலகத்தில் சுப்பையா 'அவளும் அவனைப் பார்க்கிறாளே, ஒருவேளை அவனை பிடித்துவிட்டதோ?' என்று யோசித்துப் பார்த்தான். மனம் இம்சை பண்ணியது. மூன்று நாள் லீவில் வெளியேறினான். காரணம் நம்பும்படியாக இருந்தது. பார்க் ஸ்டேஷனில் நின்று கொண்டான். வண்டி வந்தது. ஏறிக்கொண்டான்.

    டேய், அஷோக்! இது வேலையத்த வேலை! நாமோ மெடிகல். தினம் அவ பின்னாலே கிண்டிக்கு எதுக்குப் போகணும் ?

    அவன் பெயர் அஷோக் என்பதைத் தெரிந்து கொண்டான் சுப்பையா.

    நீ வராம போனாலும் தினமும் நான் அவ பின்னாலே போவேன். இப்பத்தான் கொஞ்சம் திரும்பிப் பார்க்கறா.

    சட்டென்று சுப்பையா அவனைப் பார்த்தான்.

    கிண்டியில் எல்லோரும் இறங்கிக் கொண்டார்கள். கீதாஞ்சலி முன்னால் போனாள். அழகானவள் என்பதை விட ஆர்ப்பாட்டமில்லாதவள் என்பதுதான் சரி.

    சுப்பையா 'கீதாஞ்சலியை நான் இழக்கக்கூடாது' என்று இரவுப் படுக்கையில் சொல்லிக் கொண்டான்.

    மறுநாள் பிளாட்பாரத்தில் நின்று அவளையே வெறிக்கப் பார்த்தான் சுப்பையா.

    யாரோ, எதற்காகவோ கை தட்டினார்கள். கீதாஞ்சலி வண்டிக்குள்ளிருந்து பார்த்தாள். தூரத்தில் கார்டு விசில் கொடுத்தார். அவள் தலையைத் திருப்பினபோது சுப்பையாவைப் பார்த்தாள். அவன் வண்டியில் தொற்றிக் கொண்டான்.

    அதே பெட்டியில் அஷோக் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். சுப்பையா அவனை ஒரு தரம் பார்த்தான். காலை நேரக் கூட்டம் வண்டியில் வழிந்து கொண்டிருந்தது. அஷோக் வலது கையில் மூட்டையாய் புத்தகம். இடது கை மேலே கதவு இடுக்கில் தடுமாறிக்கொண்டிருந்தது. சுப்பையா தன் வலது கையை நிஜார் பாக்கெட்டிலிருந்து உருவி மெதுவாக எடுத்து அவன் முதுகில் வைத்து ஒரே தள்ளில் கீழே அனுப்பினான். அஷோக் காற்றில் பறந்து கூடவே ஓடி வரும் கருங்கல் ஜல்லியில் போய் மோதி பிளந்து சிதறினான்.

    ஜெயிலுக்குள் உட்கார்ந்திருந்த சுப்பையா தோள்பட்டையில் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். மனம் பயத்தால் ஏனோ ஆடியது. தன் பயத்தைப் போக்கிக் கொள்ள அருகே தரையில் மல்லாக்கப் படுத்திருக்கும் செல்லப்பாவைக் கூப்பிட்டான்.

    நாளைக்கா நமக்கு விடுதலை?

    ஆமாம், சுதந்திரம் வந்து இருபத்தி அஞ்சு வருஷம் ஆயிடுத்தாம்.

    மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சுப்பையா பார்க் ஸ்டேஷனில் அந்த மின்சார வண்டிக்காகக் காத்திருந்தான். எங்கும் ஒரே கூட்டம். வித்தியாசமான மனித முகங்கள். எல்லோரும் தன்னையே பார்ப்பதாக ஒரு பிரமை. ஒன்பது நான்குக்கு அந்த மின்சார வண்டி வந்தால் அவளைப் பார்த்துவிட்டுப் போகவேண்டியதுதான்! ஒருவேளை ஜோசப் அந்த வண்டியை ஓட்டி வந்தால் 'என்ன கொலைகாரா' என்று கூப்பிடுவானா? சே! அவன் ஒருவன் தானே என்னை ஜெயிலில் வந்து பார்த்தவன்!

    நீயா சுப்பையா இப்படி ஒரு காரியம் பண்ணினே?

    ஏதோ ஒரு வேகத்துல அவனைக் கீழே தள்ளிட்டேன் ஜோசப். அவள் கூட எங்கே பேசிடப் போறானோங்கற பொறாமையிலே பண்ணிட்டேன்!

    சிறையில் கம்பியைப் பிடித்துக்கொண்டு குழந்தையாக அழுதான்.

    ஒரே புள்ளையாம் அவன் அப்பா அம்மாவுக்கு!

    தெரியும்; கேஸ் நடக்கறப்போ சொன்னாங்க. வாழ்க்கையிலே நான் எதுக்கும் ஆசைப்படாதவன். அவளை நான் முதல்லே பார்த்த அன்னிக்கு, அந்த லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட்லே என் எதிர்காலமே இருக்கிறதா நினைச்சேன். ஆமாம், அவள் எப்படி இருக்கா ஜோசப்?

    இன்னுமா நீ அவளைப்பத்தி நினைச்சுட்டு இருக்கே?

    என்ன தப்பு ஜோசப்? புடவைக்குள்ளே அவள் இருக்கிறதனால் நான் அவளையே நினைச்சுகிட்டு இல்லே. எதிர்காலத்தில் என் மனைவி எப்படி இருக்கணும்னு நான் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தேனோ, அதே மாதிரி இருந்தாள் கீதாஞ்சலி!

    ஜோசப் அவனை ஆறுதலாகப் பார்த்தான்.

    அவளுக்காக இப்போது தனித்தவனாக யார் கண்ணிலும்படாமல் மறைந்து நின்றான் சுப்பையா. ஒன்பது பத்து ஆயிற்று. அவன் எதிர்பார்த்த வண்டி வரவில்லை.

    'அவள் வரும் ரயில் பாதியில் நின்று விட்டிருக்க வேண்டும். நான் இங்கேயே நின்று கொண்டிருந்தால் அவள் இறங்கி பஸ் பிடித்துப் போய்விடுவாள்… பார்க் ஸ்டேஷனை விட்டு வெளியேறி தண்டவாளத்தைத் தொடர்ந்து வேகமாக ஓடினான் அவன்.

    கோட்டை ரயில் நிலையத்துள் நுழைந்தான். அங்கும் ஒரே கூட்டம். தூரத்தில் ஒன்பது நான்கு வண்டி நின்று கொண்டிருந்தது. பாக்கெட்டுக்குள் கைவிட்டுத் துழாவிச் சின்ன துண்டுத்துணியை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான். கைவிரல்களைத் தலையில் ஓடவிட்டு கிராப்பை சரி பண்ணினான். அவன் உதடுகள் காய்ந்து வறட்சியைக் கொடுத்தன. அருகே இருந்த அடக்கமான ஸ்டாலில் தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு நிமிர்ந்தபோது, டிக்கெட் ப்ளீஸ் என்ற குரல் அவனைத் தடுமாற வைத்தது.

    சாரி, நான் பாஸஞ்சர் இல்லே. அதோ நிக்கிற வண்டியில் எனக்கு வேண்டியவங்க இருக்காங்க. பார்க்கப் போனேன்.

    அவன் சட்டைக்காலரைக் கசக்கிப் பிடித்து இழுத்துப் போய் வெயிட்டிங் ரூமில் தள்ளிக் கதவை மூடினார் அவர்.

    ஒன்பது நான்கு வண்டி கிளம்பி மெள்ள பிளாட்பாரத்தில் நுழைந்து அவன் இருந்த வெயிட்டிங் ரூமைக் கடந்து, ரொம்ப தூரம் போய் நின்றது. உள்ளே மூலையில் தன்னை மறைத்துக்கொண்டு நின்றிருந்தவன், சட்டென்று சன்னல் அருகே வந்து தலையை வலது பக்கம் சாய்த்து, முதல் பெட்டி தெரிகிறதா என்று பார்த்தான். சுப்பையாவைப் பிடித்து வந்து உள்ளே தள்ளிவிட்டுப் போனவர் இன்னொருவனை இழுத்து வந்து கதவைத் திறந்து உள்ளே தள்ளியபோது, இவன் ஒரே தாவலில் வெளியேறி பிளாட்பாரத்தில் ஓடினான்.

    டேய்! பிடிடா அவனை… யாரோ குரல் கொடுத்தார்கள்.

    சுப்பையா எதிரே கூடை நிறையப் பழத்துடன் வரும் ஒருவன் மீது மோதிக் கீழே சாய்ந்தான்.

    சோமாறி! கண்ணு தெரியல்லே? என்று கத்திக் கொண்டே அவன் பழங்களைப் பொறுக்கிக் கூடையில் போட ஆரம்பித்தான். எழுந்திருக்கப்போன சுப்பையாவை இன்னொரு டிக்கெட் பரிசோதகர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இந்த முறை தப்ப முடியாது என்ற முடிவில் கீழே பார்த்த சுப்பையா தரையில் பழங்களுக்கு நடுவே கிடந்த பேனாக்கத்தியை விருட்டென்று கையில் எடுத்து, அவருக்கு முன்னே வெறிபிடித்தவன்போல பிடித்துக் கொண்டு, என்னை விட்டுவிடு, அதோ அவளை ஒரு தரம் சந்தித்து விட்டு வருகிறேன். என்று கத்தினான்.

    அப்போது மணி ஒன்பது. அவன் மறுபடியும் பார்க் ஸ்டேஷனை ஒட்டினாற்போல் இருக்கும் சென்ட்ரல் ஜெயிலில் இருந்தான். ஒன்பது நான்குக்கு ஒரு மின்சார ரயில் வரும். அதற்காக அவன் பரபரப்போடு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

    ***

    2. அப்பா ஒரு ஸ்கொயர்

    வீட்டிற்குள் வந்தார் ராமநாதன். நடுக் கூடத்தில் அவர் மனைவி சுலோசனை தூங்குவது போல் படுத்திருந்தாளே தவிர, அவள் தூங்கவில்லை; தூங்க முடியவில்லை. ஆடி ஓய்ந்துபோன சரீரம். கண்களைச் சுற்றிக் கருப்பான வட்டங்கள்; கொல்லைக்கும் வாசலுக்கும் நடந்து தேய்ந்துபோன பாதங்கள். இரண்டு கால்களிலும் பழுப்படைந்த மெட்டிகள்.

    ராமநாதன் கூடத்தைப் பார்த்தார். அதற்கு அடுத்தாற்போல் இருந்த ஸ்டடி அறையைப் பார்த்தார். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சன்னல் வழியாக எதையோ பார்த்தார். தான் விடும் மூச்சுக் காற்றே பயங்கரமாக அந்த வீட்டில் கேட்பதாக நினைத்துப் பயந்து மனைவியை மெல்லக் கூப்பிட்டார்.

    அவன்தான் என்னவோ தமாஷுக்குப் பேசினா, நீயுமா அதைப் பெரிசு படுத்தறது?

    அவன் என் மனசைப் புண்படுத்தணும்னே பெண்டாட்டியோட வந்தான்; என்னைப் பார்த்தால் எல்லோருக்கும் கேலியாயிருக்கு.

    அவர் எப்பொழுது கேட்பார், பதில் சொல்லலாம் என்பதைப்போல் சட்டென்று பேசினாள். இடது பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

    அவன் தமாஷுக்குத்தான் சொன்னான். உனக்குத்தான் மாடுன்னா புடிக்குமேன்னு சொன்னான். பெண்களுக்கு ஹாஸ்ய உணர்ச்சியே கிடையாதாம். பாத்தியா சினிமாவில்கூட காமெடி ஆக்டர்ஸ்'தான் அதிகம்!"

    இந்த இரண்டு பேருடைய மூன்றாவது மகன் 'டாபி' என்கிற பட்டாபிராமன் ('என் மகன் ஒரு ராமன் எதிரி' என்று ராமநாதன் சொல்வார்) தன் மனைவி இந்துமதியுடன் வந்திருந்தான். என்றைக்கும் வராதவன் அவன். அவன் திருமணம் செய்துகொண்டதே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. அவன் குடும்பத்தில். இந்துமதியைப் பெண்கள் கல்லூரி அருகே பார்த்து மனதைப் பறிகொடுத்து அவள் பின்னால் போகாமல் அவள் அப்பாவிடம் போய், 'எனக்கு எதிர் ஜாமீன் வேண்டாம்: ஆபட்ஸ்பரி வேண்டாம்: திருநீர்மலையே போதும்' என்று சொல்லி சுலபமாக மணந்து கொண்டான். உடனே தனிக்குடித்தனமும் போனான்.

    என் அம்மா வீடு நிறைய மாட்டைக் கட்டி வச்சிருக்கா. மழைக் காலத்திலே வீடு சகிக்காது. ஒரே சேறும் சகதியுமாக இருக்கும். அந்த வீட்டிலே யார் இருப்பாங்க? என்று இந்துமதியிடம் கூறிக்கொண்டே வேறு வீடுபார்த்துத் தனியாகப் போய்விட்டான். இன்று அவளுடன் ஸ்கூட்டரில் வந்திருந்தான்.

    ஏம்மா என் ஆபீஸ் ப்யூன் வீட்லே இரண்டு ஆடு இருக்காம். வாங்கிக்கிறியா? என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

    கலியாணத்துக்கு முன்னே இவன் மொடா மொடாவா தினம் ராத்திரி படுக்க போறச்ச பாலா குடிச்சது இப்ப மறந்து போச்சு. இப்ப இவன் குடிக்கறானா கேளுங்க?

    மொடா மொடாவாக் குடிக்க அவர் என்ன நாட்டுப்புறமா? டெய்லி நைட் அவர் ஒரு கப் மில்க்மெயிட் சாப்பிட்டுவிட்டுத்தான் படுத்துக்கறார்!

    மகன், தாய், மருமகள்.

    பேச்சு முடிந்தது ஒரு வினாடி ஓய்ந்தது. அவன் இந்துமதியை ஸ்கூட்டர் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு பத்திரமாகப் போய்விட்டான்.

    போகட்டும் மில்க் மெய்டே குடிக்கட்டும்…!

    இப்போது அந்த வீட்டில் அவரையும் சுலோசனாவையும் தவிர கூப்பிட்ட குரலுக்கு வேறு ஆள் கிடையாது. பெரிய வீடு அது.

    ராமநாதன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டார். சொரசொரவென்று முள்ளாகக் குத்தியது. 'இந்த வயதிலும் இப்படி தாடி வளர்கிறதே' என்று அலுத்துக் கொண்டார். இந்த சோம்பேறித்தனமெல்லாம் கொஞ்ச காலமாகத்தான். ரயில்வேயில் 'வேகன் புக்கிங்'கில் இருந்தார். பிழைக்கத் தெரியவில்லை. கள்ளங்கபடு தெரியாத மனிதர். தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் தரப்படும் இலவச பாஸைக்கூட சமயோசிதமாக வேறு ஒருவருக்கு உபயோகித்து பழக்கப்படாதவர்.

    ராமநாதனுக்குப் பேசவேண்டும் போலிருந்தது. அவர் மனைவி கேட்டால் மட்டும் பதில் சொல்லியபின் திரும்பிப் படுத்து விடுவாள். இதே வீட்டில் சில வருடங்களுக்கு முன் தன் ஒரே மகளான பார்வதிக்கும் திருமணம் செய்திருக்கிறார். ஊரில் உள்ள குழந்தைகள் எல்லாம் எப்போதும் அவர் வீட்டிலேயே கிடப்பார்கள். அவரும் தன்னைச் சுற்றி எல்லாரையும் உட்கார வைத்துக்கொண்டு கதைகள் சொல்லுவார்.

    'இப்போது நம் பிள்ளைதான் நம்மை பார்க்க வரமாட்டேன் என்கிறார்கள். ஊரில் என்னிடம் கதை கேட்டவன்கள் எல்லாம் எங்கே இப்போது?' - சபலப்பட்டார்.

    சாய்வு நாற்காலியிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1