Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paada Marandha Kavithai
Paada Marandha Kavithai
Paada Marandha Kavithai
Ebook103 pages37 minutes

Paada Marandha Kavithai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பாட மறந்த கவிதை' குறுநாவல்களின் தொகுப்பு. சம்பவங்களின் வேகமும் , சலிப்பு தட்டாத உரையாடலும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை நமக்கு தந்துவிடுகிறது.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352853076
Paada Marandha Kavithai

Read more from Arnika Nasser

Related to Paada Marandha Kavithai

Related ebooks

Reviews for Paada Marandha Kavithai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paada Marandha Kavithai - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    பாட மறந்த கவிதை

    Paada Marandha Kavithai

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    பாட மறந்த கவிதை

    1

    அருண்டேல் நகரில் ஜெர்மன் கட்டடக்கலை பாதிப்பில் அந்த அதி ஆடம்பர பங்களா அமைந்திருந்தது.

    மின் வயர்கள் இணைக்கப்பட்ட பன்னிரெண்டடி உயர காம்பவுண்ட் சுவர் பங்களாவை செவ்வகமாகச் சூழ்ந்திருந்தது.

    AK 56 இயந்திரத் துப்பாக்கியுடன் கராத்தே கற்ற செக்யூரிட்டி நின்றிருந்தான். அவனது காவல் கூண்டில் இன்டர்காம் இணைப்பு அமைந்திருந்தது. அவனது இடுப்பு பெளச்சில் வயர்லெஸ் குடியிருந்தது. அவனது மதமதத்த உடற்பயிற்சியால் எஃகாய் இறுகியிருந்த நெஞ்சில் அடையாள அட்டை குத்தப்பட்டிருந்தது. பங்களாவின் எல்லா அறையிலிருந்தும் அழைக்கும் வண்ணம் வயர்லெஸ் அழைப்புமணி செக்யூரிட்டி கூண்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. இரவிலும் பார்க்கக்கூடிய பைனாக்குலர், மற்றும் காம்பவுண்ட் சுவரில் பாயும் மின் இணைப்பை தொடரும், கட் செய்யும் வசதியும் செக்யூரிட்டி கையில்.

    செக்யூரிட்டி கூண்டில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் கேமிரா. பங்களாவின் உள் ஆறு இடங்களில் க்ளோஸ் சர்க்யூட் யூனிட்கள். அவுட் ஹவுஸில் ஒரு க்ளோஸ்சர்க்யூட் கேமிரா.

    தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வெரைட்டிகளில் ரோஜாச் செடிகள்...

    நீள் செவ்வகமாய் பச்சை நிற நீர் நிறைந்த நீச்சல்குளம்...

    தொங்கும் ஊஞ்சலாடும் மூங்கில்பின்னல் தொட்டில்...

    தொட்டிலுக்கு அருகே கீச்கீச்சும் பலவர்ண காதல் பறவைகள்...

    காவல்துறையால் தேர்வு செய்யப்பட்ட முப்பது வயது வேலைக்காரி மீனாட்சி மின் அடுப்பில் கோழி இறைச்சியை சுட்டுக் கொண்டிருந்தாள்.

    பங்களாவுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய நான்கு போலீஸார் மூன்று ஷிப்ட்களில் ரோந்து!

    பங்களாவின் உள் அலங்காரம் மேற்கிந்தியத் தனமாய்...

    சுவர்களில் நகல் பிகாஸோ ஒவியங்கள்!

    வரவேற்பறைச் சுவரில் ராட்சச ப்ளோ அப்பாய் எழுத்தாளன் தானிஷ் முத்தலிப்!

    தானிஷ் முத்தலிப் ஒரு தமிழ் முஸ்லிம் ஆண். வயது 42, உயரம் 170 செ.மீ. மார்பளவு நாற்பது அங்குலம். கார்ட்டூனிஸ்ட் மதன் போல் குறும்தாடி, கழுத்தில் 'தானிஷ்' எனக்கூறும் மைனர் செயின், முன்வழுக்கை ஆரம்பித்திருக்கும் தலைக்கேசம்.

    தினம் ஐந்து வேளை தொழுவதால் நெற்றியில் தொழுகைத் தழும்பு பூத்திருந்தது.

    தானிஷ் முத்தலிப் தமிழில் 500 சிறுகதைகள், 100 நாவல்கள் எழுதி முடித்தபிறகு, ஒரு பப்ளிஷர் ஆலோசனையால் ஒரு நேரடி ஆங்கில நாவல் எழுதினான்.

    தலைப்பின் நாவல் : MIDNIGHT SUN

    பழைமைவாதம் சார்ந்த ஒரு திருநெல்வேலி முஸ்லிம் குடும்பத்தில் நிகழும் மூன்று தலைமுறைக்கதை அது!

    மரணப்படுக்கையில் படுத்திருக்கும் எண்பது வயது முஸ்லிம் மூதாட்டியின் பிளாஷ்பேக் தான் முழுக்கதையும்!

    முஸ்லிம் மூதாட்டி கதையில் பேசும் சில வசனங்கள் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது.

    நாவலின் 412 ஆம் பக்கத்தில் வரும் ஒரு வசனம் ஜோர்போ நாட்டு சர்வாதிகாரியை வெகுவாய் பாதித்தது.

    நாவலின் முதல் பதிப்பு 1985-ல் பிரிட்டனில் பெங்குவின் பதிப்பகம் மூலம் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து உலக நாடுகள் முழுக்க அந்த நாவலுக்கு பலத்த சர்ச்சைக்குரிய வரவேற்பு அலை அடித்தது.

    அரபுநாடுகள் உட்பட 34 நாடுகள் அந்நாவலை தடைசெய்தன. அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் அந்நாவல் BEST SELLER LISTல் முப்பது வாரங்கள் தொடர்ந்து இடம் பெற்றது.

    நாவலை எழுதிய தானிஷ் முத்தலிப்புக்கு ஜோர்போ நாட்டு சர்வாதிகாரி ஸையத்துல்லா ரொமேனி மரணதண்டனை விதித்தார். தானிஷ் தலைக்கு 1985லேயே ஒரு கோடி அமெரிக்கன் டாலர் பரிசு அறிவித்தார்.

    தானிஷ் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெற்றிருந்தான்.

    ஒளிந்து கொண்டே தானிஷ் தொடர்ந்து ஆங்கில நாவல்கள் எழுதினான். எல்லாமே முஸ்லிம் சமூகத்தில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை.

    தலைப்புகள் :

    'BUCKRA'

    'MAHARIF'

    'JAKATH'

    'SULAKA BIVI'

    'ITHAAA'

    'SUNNATH'

    எல்லா நாவல்களுமே பெஸ்ட் ஸெல்லர் லிஸ்ட்டில் இடம் பெற்றன. தானிஷ் முத்தலிப்புக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு வருடங்களில் முத்தலிப்பின் காதல் மனைவி ரஜியா பேகம் விவாகரத்து வேண்டி விரும்பி பெற்று விலகினாள். மஹர் தொகையாக இருபது கோடிரூபாய் அளித்தான் தானிஷ். பதினெட்டு வயது மகள் அஸ்மாபானுவுடன் ரஜியாபேகம் ஒரு ஆர்தடெக்ஸ் முஸ்லிமை மறுமணம் செய்து கொண்டு கனடாவில் வசிப்பதாகக் கேள்வி.

    பிஜேபி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தானிஷ் முத்தலிப்புக்கு இந்தியா திரும்ப அனுமதியளிக்கப்பட்டது. சென்னைக்கு தனது அருண்டேல் நகர் பங்களாவுக்கு திரும்பினான் தானிஷ்,

    தமிழக முதலமைச்சர் தெய்வநாயகி தானிஷ்க்கு முழு போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தார். தானிஷ் தனது பன்னிரெண்டாவது புதிய ஆங்கில நாவலை எழுத ஆரம்பித்திருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1