Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Ponmaanai Thedi...
Oru Ponmaanai Thedi...
Oru Ponmaanai Thedi...
Ebook115 pages46 minutes

Oru Ponmaanai Thedi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850624
Oru Ponmaanai Thedi...

Read more from Rajesh Kumar

Related to Oru Ponmaanai Thedi...

Related ebooks

Reviews for Oru Ponmaanai Thedi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Ponmaanai Thedi... - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு பொன்மானைத் தேடி...

    Oru Ponmaanai Thedi...

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    ஒரு பொன்மானைத் தேடி...

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    ***

    1.

    நம்ருதாவை உங்களில் எழுபது சதவீதம் பேர் சத்தியமாய் பார்த்திருப்பீர்கள். மாதத்தில் ஐந்து தடவையாவது டி.வி. திரையில் 8.40க்கு ஜோர்டான் நாட்டின் கலவரத்தைப் பற்றியோ... பஞ்சாப் படுகொலைகளைப் பற்றியோ... நம் நாட்டு பிரதமரின் வேண்டுகோள் பற்றியோ... நியூஸ் ப்ராம்ப்ட்டராக புன்னகையோடு சொல்லிக் கொண்டிருப்பாள்.

    கடந்த இரண்டு வருடகாலமாய் செய்தி வாசிக்கிறாள். ஆனால் ஒரு தடவை கட்டின புடவையை இன்னொரு தரம் கட்டி - யாரும் பார்த்ததில்லை. போன வருஷ மார்ச் வரை மிஸ்ஸாக இருந்தவள்... அதன்பின் மிஸஸ் நம்ருதா ஷ்யாம் பிரகாஷாகமாறினாள். அவள் இன்றைக்குச் செய்தி வாசிக்க வேண்டுமே என்று இளைஞர்கள் 8.40க்கு டி.வி. பெட்டி முன் காத்திருந்து - பின் வேறு யாராவது பெட்டியில் தெரிந்தால் டப்...பென்று மூடினார்கள்.

    மாதம் முப்பது நாளும் நம்ருதாவே செய்தி வாசிக்க வேண்டும் என சில நேயர்கள் ரத்தத்தில் கடிதம் எழுதி ‘எதிரொலி’க்கு அனுப்பினார்கள்.

    மற்ற பெண் நியூஸ் ப்ராம்ப்ட்டர்கள் வெளியில் புன்னகையைக் காட்டி உள்ளுக்குள் காட்டுத்தீ பற்றின மாதிரி வெந்து போனார்கள்.

    இன்றைக்கு - நம்ருதா செய்தி வாசிக்க வேண்டிய ஷெட்யூல் தினம். நம்ருதா டி.வி. ஸ்டேஷனுக்கு முன்னால் ஆட்டோவில் வந்து இறங்கியபோது சாயந்திரம் ஆறு மணி. உள்ளே நுழைந்தவளை அனெளன்ஸர் கீதாராணி எதிர்கொண்டாள்.

    என்ன நம்ருதா... ஆட்டோவில் வர்றே? ஹஸ்பெண்டோட ஸ்கூட்டர் என்னாச்சு?

    ஆபீஸ்ல அவருக்கு ஏதோ வேலையாம் மத்தியானமே சொல்லிட்டுப் போயிட்டார்.

    இன்னிக்கு உன்னோட டிரஸ் அமர்க்களமாயிருக்கு...

    ஒவ்வொருவாட்டியும்... நீ இதையேதான் சொல்றே!

    நீ அப்படிச் சொல்ல வைக்கிறே...

    நான் வரட்டுமா...! ரிப்போர்ட்டர் விஜயராகவன் காத்திட்டிருப்பார்.

    கவலைப்படாதே! அது கான்டீன்ல வெங்காய வடையை மென்னுட்டிருக்கு... சரியா ஆறேகால் மணிக்குத்தான் ரூமுக்கு வரும்.

    ஹாய்... நம்ருதா!

    பக்கவாட்டிலிருந்து குரல் வர... திரும்பிப் பார்த்தாள் நம்ருதா. அவளுடைய சக பிராம்ப்ட்டர் மாலதி வந்து கொண்டிருந்தாள்.

    வா... மாலு! இன்னிக்கு நீதான் ஏழரை மணி நியூஸா?

    ஆமா... ஷெட்யூல்படி வரவேண்டிய ரங்கநாதனுக்குப் பல்வலியாம். எனக்குப் போன் வந்தது. வந்துட்டேன்...

    என்ன... இன்னிக்கு நியூஸ்ல ஹாட்டா ஏதாவது உண்டா?

    உண்டு.

    என்ன?

    பாராளுமன்றத்துல வரலாறு காணாத கலாட்டா. எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு கவலைக்கிடம். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேருக்கு மண்டை உடைந்து ரத்தக் காயம். சபாநாயகரின் ஜிப்பா நார்நாராய்க் கிழிபட்டு உயிருக்குத் தப்பி பாராளுமன்ற வளாகத்தில் ஓடினார்...

    ரொம்பவும் ஹாட்டா இருக்கே?

    இந்த நியூஸைப் படிக்கும்போதே ஸ்மைல் பண்ணித் தொலைச்சுடாதே! மூஞ்சியை சீரியஸ்ஸா வெச்சுக்கோ... இல்லேன்னா மெமோ வரும்.

    வா... நியூஸ் எடிட்டர் ரூமுக்குப் போகலாம்.

    கீதாராணி நம்ருதாவின் தோள்பட்டை மேல் கையை வைக்க... பக்கத்தில் நின்றிருந்த மாலதி சொன்னாள்.

    நம்ருதா! இன்னிக்கு முன்னாலேயும் பின்னாலேயும் நல்லாப் போர்த்திகிட்டு படி...

    ஏன்?

    பிராவோட பட்டை ட்ரான்ஸ்பரன்சியா பளிச்ன்னு தெரியுது. டி.வி. பார்க்கிற ஜென்ட்ஸுக்கு இது அடிஷனல் அட்ராக்ஷனா அமைஞ்சிடும்.

    அதையெல்லாம் நான் பார்த்துக்குவேன்... - சொல்லிவிட்டு கீதாராணியோடு - நியூஸ் எடிட்டரின் ரூமை நோக்கி நடந்தாள் நம்ருதா.

    கீதாராணி பொருமினாள். அவளுக்கு உம்மேல செம பொறாமை!

    சேச்சே... அப்படிச் சொல்லாதே...

    உனக்குத் தெரியாது நம்ருதா... இந்த மாலதி உன்னைப் பத்தி யார் யார்கிட்ட என்னென்ன சொன்னாள்ன்னு பட்டியல் போட்டுச் சொல்லட்டுமா?

    வேண்டாம்.

    சொல்லுவேன். நீ ஸ்டேஷன் டைரக்டர்கிட்ட ரொம்பவும் வழியறியாம். உனக்கு இந்த ல, ள, ழ, தகராறு இன்னமும் இருக்காம். சீஃப் பாப்புலாரிடிக்கு ஆசைப்பட்டு நியூஸ் படிக்கும்போது நேயர்களைப் பார்த்து அடிக்கடி ஸ்மைல் பண்றியாம். மாசத்துல அதிக ஷெட்யூல் வாங்கறதுக்காக... புருஷனைக் கூட்டிகிட்டு டெல்லிக்குப் போய்ட்டு வந்தியாம்.

    குழந்தை பிறந்தா... பர்சனாலிட்டி போயிரும்ங்கிறதுக்காக - வீட்டுல கட்டிலைத் தனியா பிரிச்சுப் போட்டிருக்கியாம். இதனால உனக்கும் உம் புருஷனுக்கும் தகராறாம்...

    சொல்லு... சொல்லு! இன்ட்ரஸ்டிங்கா இருக்கு...

    நடந்து

    Enjoying the preview?
    Page 1 of 1