Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Nanalla
Naan Nanalla
Naan Nanalla
Ebook320 pages2 hours

Naan Nanalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. These short stories collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850051
Naan Nanalla

Read more from Rajesh Kumar

Related to Naan Nanalla

Related ebooks

Related categories

Reviews for Naan Nanalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Nanalla - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நான் நானல்ல…

    Naan Nanalla...

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    நான் நானல்ல…

    என்னுரை

    அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு!

    வணக்கம். ‘நான் நானல்ல’ இது ஒரு குழப்பமான தலைப்பு. ஆனால் தெளிவான கதை.

    உயரம் நோக்கிப்

    புறப்பட்டோம்!

    மேகம் ஒரு

    தடையா

    நமக்கு?

    இந்தக் கவிதையின் வரிகள்தான் கதையின் கரு. கதையில் வரும் பதஞ்சலி, ஜெயந்த் பாத்திரங்கள் இதைத்தான் சொல்லப் போகின்றன. இந்த நாவலில் க்ரைம் உண்டு, காதல் உண்டு, குடும்பச் சூழ்நிலைகளும் உண்டு. இது 'தேவி’ வார இதழில் தொடராக வெளிவந்தது. அப்போது ஒரு வாசகர் தொடரைப் படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தத் தொடரைப் படித்து முடித்தபோது எனக்கு ஒரு பயம் வந்தது. மனிதர்களில் இப்படியெல்லாம் இருக்கிறார்களா…? இப்படிப்பட்ட மனிதர்கள் நம் வாழ்க்கையின் குறுக்கே வந்துவிட்டால் அவர்களையெல்லாம் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற பயம்தான் அது. ஆனால் நாம் நம் வாழ்க்கையில் யாரையாவது ஒருவரை நம்பித்தான் தீரவேண்டியுள்ளது. அவரோடு வாழ வேண்டியும் உள்ளது. பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்த நாவலின் மூலம் கற்றுக் கொண்டதாய் அந்த வாசகர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    ‘நான் நானல்ல’ நாவலை பால் போன்ற தாளில் அழகாய் அச்சிட்டு என் எழுத்துக்களைப் பெருமைபடுத்திய பூம்புகார் பதிப்பகத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேம்.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்

    ***

    நான் நானல்ல…

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    ***

    1

    ஜெயந்த் அந்தக்காலை பதினொருமணி வேளையில் ஏ.ஸி. காற்றை சுவாசித்துக் கொண்டே முக்கியமான ஃபைல் ஒன்றை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது மேஜை மேல் இருந்த டெலிபோன் சிணுங்கியது.

    ரிஸீவரை எடுத்து இடதுபக்க காதோடு உரசிய ஜெயந்துக்கு இருபத்தேழு வயது. பாலில் லேசாய் குங்குமப்பூ கலந்த மாதிரியான நிறம். கரிய சுருள்முடியும் அடர்த்தியான மீசையும் அவனுடைய தோற்றத்துக்கு கூடுதல் மார்க் கொடுத்து இருந்தன. சந்தன நிற ஸ்லாக், கறுப்பு பேண்ட், சிவப்பு டை காம்பினேசனில் அமர்க்களம் காட்டினான்.

    ஹலோ… ரிஸீவரில் குரல் கொடுத்தான்.

    மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது.

    மிஸ்டர் ஜெயந்த்…?

    ஹோல்டிங்…

    கங்கிராட்ஸ் ஸார்…

    எதுக்கு…?

    இன்னிக்கு சாயந்திரம் உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகுதே… அதுக்காகத்தான்…

    நீங்க யார்னு சொல்லவேயில்லையே?

    என்னோட பேர் தைலா… ஒரு பத்திரிகையில் பிரஸ் ரிப்போர்ட்டரா இருக்கேன்…

    அப்படியா?

    உங்க மனசுக்கள்ளே இப்போ இவ எதுக்காக நமக்கு கங்க்ராட்ஸ் சொல்லணும். இவளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்ன்னு ஒரு யோசனை கிளம்பியிருக்கணுமே?

    ஆமா…

    மிஸ்டர் ஜெயந்த்…! இந்த இருபத்தியேழு வயசுக்குள்ளேயே ஒரு கம்பெனிக்கு அஸிஸ்டண்ட் ஜெனரல் மானேஜர் ஆயிட்டீங்க… உங்களை நிறைய தடவை ஹடெக் எக்ஸ்பிஸினில் பார்த்திருக்கேன். பட் பேசக்கூடிய சந்தர்ப்பம்தான் கிடைக்கலை…! இன்னிக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு…

    ஜெயந்த் குறுக்கே குரலை நுழைத்தான். தைலா! நீங்க மிஸ்ஸா… மிஸ்ஸஸா…?

    மிஸ்தான்…!

    ஓ.கே. மிஸ் தைலா…! நீங்க எனக்கு வாழ்த்து சொல்ல மட்டும் போன் பண்ணலைன்னு நினைக்கிறேன்.

    எஸ்…யூ… ஆர் கரெக்ட் மிஸ்டர் ஜெயந்த்…! நான் உங்களுக்கு போன் பண்ணினதுக்கு வேற ஒரு முக்கியமான காரணம் இருக்கு…

    சொல்லுங்க…

    உங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற பெண்ணோட பேர் பதஞ்சலிதானே…?

    ஆமா…

    பதஞ்சலியை எப்ப பெண் பார்க்க போனீங்க…?

    ரெண்டு நாளைக்கு முன்னாடி…

    அதாவது திங்கட்கிழமை?

    ஆமா…

    இன்னிக்கு வியாழக்கிழமை சாயந்தரம் நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது இல்லையா…?

    எஸ்…

    பதஞ்சலியை உங்களுக்கு பிடிச்சதா…?

    பிடிச்சுது…

    எதனால பிடிச்சுது…?

    ஜெயந்த் லேசாய் கோபப்பட்டான். எதுக்காக இப்படி ஒரு என்கொய்ரி…

    ப்ளீஸ் மிஸ்டர் ஜெயந்த்…! என் மேல கோபப்படாமே நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு வாங்க… நான் காரணம் இல்லாமே எந்த ஒரு கேள்வியையும் கேட்க மாட்டேன்…

    ஜெயந்த் சில விநாடி நிசப்தம் காத்துவிட்டு மெல்லிய குரலில் சொன்னான்.

    சரி கேளுங்க…

    பதஞ்சலியை உங்களுக்கு எதனால பிடிச்சுது...?

    அழகு, அறிவு, அதோடு நல்ல ஃபேமிலி பேக் க்ரவுண்ட்… இதெல்லாம் சேர்த்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா யார்க்குத் தான் பிடிக்காது...?

    இந்த மூணும் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா போதுமா?

    வேற என்ன வேணும்…?

    காரக்டர் வேண்டாமா… ஐ… மீன்… நடத்தை.

    ஜெயந்த் திகைத்து மெளனமாக மறுமுனையில் அந்த தைலா சிரித்தாள்.

    என்ன மிஸ்டர் ஜெயந்த்… பேச்சையேக் காணோம்…?

    இப்ப… நீ என்ன சொல்ல வர்றே?

    பதஞ்சலியோட நடத்தை சரியில்லைன்னு சொல்ல வர்றேன்.

    நடத்தை சரியில்லைன்னா… எப்படி…?

    அதை டெலிபோன்ல சொல்லிட்டிருக்க முடியாது. நீங்க நேர்ல வந்தீங்கன்னா அவ சம்பந்தப்பட்ட ஒரு ரெட் டேப் ஃபைலையே உங்களுக்கு புரட்டி காட்டுவேன்.

    விஷயம் என்னான்னு போன்லயே சொல்லு. நேர்ல வர எனக்கு விருப்பம் கிடையாது.

    இதோ பாருங்க மிஸ்டர் ஜெயந்த்…! ஒரு விசயத்தை நீங்க முதலிலேயே தெரிஞ்சுக்கணும். நான் உங்க வாழ்க்கையை கெடுக்க வந்தவ… கிடையாது! ஒரு பெரிய பள்ளத்துல விழப்போற உங்களைக் காப்பாத்தறதுக்காக வந்திருக்கேன். ஏன்னா நான் ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர். ரெண்டு கண்ணையும் நல்லா திறந்து வெச்சுக்கிட்டு உண்மைகள் எங்கெங்கே ஒளிஞ்சுகிட்டு இருக்கோ அதையெல்லாம் காதைப் பிடிச்சு வெளியே கொண்டு வர்றது என்னோட வேலை. ஒரு பொண்ணுக்கு வேண்டியது அழகோ படிப்போ கிடையாது. அதைக் காட்டிலும் முக்கியமானது நடத்தை. பதஞ்சலி கிட்ட அது கிடையாது. கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிர். நுனிப்புல் கிடையாது. அவசர அவசரமா மேய வேண்டிய அவசியம் கிடையாது.

    ஜெயந்த் நெற்றி வியர்த்து யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த தைலா தொடர்ந்தாள்.

    மிஸ்டர் ஜெயந்த்…! ஒரு விசயத்தை நீங்க யோசிச்சுப் பார்த்திங்கன்னா உங்களுக்கு உண்மை புரியும். நீங்க பெண் பார்த்தது திங்கட்கிழமை. இன்னிக்கு வியாழக்கிழமை நிச்சயதார்த்தம். இவ்வளவு அவசரமா நிச்சயதார்த்தத்தை வெச்சு கிட்டதுக்கு காரணம் உங்க ஃபேமிலியா… இல்லை பதஞ்சலியோட ஃபேமிலியா…?

    பதஞ்சலி ஃபேமிலிதான்…!

    பார்த்தீங்களா…? பதஞ்சலியைப் பத்தின உண்மைகளை உங்ககிட்ட யாராவது சொல்லிடுவாங்களோங்கிற பயத்துல அவசர அவசரமா நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதே வேகத்துல போனா அடுத்த வியாழக்கிழமை கல்யாணமே நடந்துரும்…

    "பதஞ்சலியைப் பத்தி நீ இப்படி பேசறது எனக்கு அதிர்ச்சியாயிருக்கு.

    எல்லாம் ஓ.கே. மிஸ்டர் ஜெயந்த்! பதஞ்சலி நல்ல அழகி. காலேஜ் டேஸ்ல ரெண்டு தடவை மிஸ்.சென்னை அழகிப் பட்டம் வாங்கியிருக்கா. பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்சில் யுனிவர்சிட்டி அளவில் கோல்ட் மெடலிஸ்ட். பரதநாட்டியம் தெரியும். கராத்தே க்ரீன் பெல்ட். யோகா தெரியும். கவிதை எழுதுவா. கர்நாடிக் மியூசிக் தெரியும். ஒரு தடவை வாணி மஹால்ல கச்சேரி கூட பண்ணியிருக்கா, பட் இவ்வளவு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தும் என்ன பிரயோஜனம்…? ஒரு பொண்ணுக்கிட்ட இருக்க வேண்டியது பொக்கிசமா பாதுகாக்கப்பட வேண்டியது இப்போ அவகிட்ட இல்லை. அது அபாண்டம் கிடையாது. அசைக்க முடியாத உண்மை. என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நீங்க என்னைப் பார்க்க வரலாம். இல்லேன்னா இந்த விநாடியே ரிஸீவரை வெச்சுடலாம்.

    நான் எங்கே வரணும்…?

    இப்ப கேட்டீங்களே… இதுதான் கிளாஸிக். இடத்தைச் சொல்றேன். நோட் பண்ணிக்குங்க. போட் கிளப் ரோடு கடைசியில் ‘ரெஸ்டாரெண்ட் நனா’ இருக்கு தெரியுமா?

    தெரியும்…

    அங்கே வந்துடுங்க… டேபிள் நெம்பர் ட்வெண்டி த்ரியில் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன். ஒரு காப்பி சாப்பிட நேரத்துல பதஞ்சலியோட ஃபைலைப் பார்த்துடலாம்.

    அரைமணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்.

    வாங்க… பட் ஒரு விஷயம்.

    என்ன?

    நீங்க இங்கே வர்றது யார்க்கும் தெரிய வேண்டாம். பதஞ்சலியைப்பத்தி நீங்க மொதல்ல தெரிஞ்சுட்ட பிறகு அப்புறமா உங்கு ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட சொல்லலாம்…

    தைலா ரிஸீவரை வைத்துவிட ஜெயந்த் ரிஸீவரை வைக்கத் தோன்றாமல் நெற்றியில் மின்னும் வியர்வையோடு அப்படியே உட்கார்ந்திருந்தான். இதயம் டெலிபிரிண்டர் மாதிரி படபடத்தது.

    ‘என்ன செய்யலாம்?’

    ‘போய்ப் பார்க்கலாமா...? வேண்டாமா…?’

    ஒரு இரண்டு நிமிஷம் யோசித்துவிட்டு எழுந்தவன்.

    ‘போய்ப்பார்க்கலாம்…!’

    இந்தப் பெரிய ட்ரஸ்ஸிங் டேபிளில் பெல்ஜியம் கண்ணாடிக்கு முன்பு நின்றிருந்த பதஞ்சலி அறையின் வெளிப்பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள்.

    அம்மா…அ…!

    ஹாலின் கீழேயிருந்து பதிலுக்கு பதஞ்சலியின் அம்மாக்காரி சொர்ணம் குரல் கொடுத்தாள்.

    என்னடி…!

    மேலே கொஞ்சம் வாயேன்…

    ‘'எதுக்கு…?"

    வாயேன்… சொல்றேன்!

    என்ன பதஞ்சலி நேரம் காலம் தெரியாமே கூப்பிட்டுட்டு… சாய்ந்தரம் நிச்சயதார்த்தம். தலைக்குமேல ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு.

    ஒரே ஒரு நிமிஷம் வந்துட்டு போயிரு. அப்புறம் உன்னை கூப்பிடமாட்டேன்.

    சொர்ணம் மூச்சிரைக்க மாடிப்படி ஏறி வந்தாள். மூக்கிலும் கழுத்திலும் வைரங்கள் டாலடித்தது.

    என்னடி…?

    நிச்சயதார்த்ததுக்கு நான் எந்த புடவையைக் கட்டிக்கிறது?

    ராத்திரி நீ செலக்ட் பண்ணி வெச்சிருந்தியே ஒரு கருநீல பட்டுபுடவை…

    அது வேண்டாம்மா…

    ஏன்…?

    அந்தக் கலர் அவர்க்கு பிடிக்காதாம்…

    யார்க்கு மாப்பிள்ளைக்கா?

    ஆமா…

    உனக்கெப்படி தெரியும்…?

    எப்படியோ தெரிஞ்சுக்கிட்டேன்… நீ அதையெல்லாம் கிளறி கிளறி கேட்கக் கூடாது.

    சொர்ணம் புன்னகைத்தாள். எனக்குத் தெரியாதா என்ன? ராத்திரி மாப்பிள்ளை போன்ல பேசியிருப்பார்.

    சொல்லு… நான் எந்த புடவையை கட்டிக்கிறது?

    இதையும் மாப்பிள்ளைகிட்டயே கேட்டிருக்க வேண்டியது தானே…?

    மறந்துட்டேன்…

    சரி… அந்த வைரஊசி பட்டுப்புடவையைக் கட்டிக்க.

    பதஞ்சலி அட்டைப் பெட்டியில் இருந்த அந்த பட்டுச் சேலையை எடுத்து தன் மீது போர்த்திக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்துவிட்டு சொர்ணத்திடம் திரும்பினாள்.

    எப்படியிருக்கும்மா…?

    ஜொலிக்கிறே…

    ஜரிகை ரொம்ப அதிகமாயிருக்கு. அவர்க்கு பிடிக்குமோ பிடிக்காதோ…?

    சரி…! அந்த கோல்ட் காய்ன்ஸ் பட்டுப்புடவையைக் கட்டிக்க…

    எது…! காஞ்சீபுரத்துக்கு போய் குகன் சில்க் ஹவுஸில் எடுத்தோமே அதா…?

    அதேதான்…! புடவை பூராவும் தங்கக் காசுகள் இறைச்ச மாதிரி அமர்க்களமாயிருக்கும்.

    சொர்ணம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ட்ரஸ்ஸிங் டேபிளின் மேல் இருந்த செல்போன் கூப்பிட்டது.

    பதஞ்சலி எடுத்தாள்.

    எஸ்…

    மேடம்! நாங்க தேவதை ப்யூட்டி பார்லரிலிருந்து பேசறோம். நீங்க ஸ்கின் ப்ளீச் பண்ண டயம் கேட்டிருந்தீங்க… இப்ப நீங்க புறப்பட்டு வந்தா ப்ளீச் பண்ணிடலாம். சீஃப் ப்யூட்டிஸியனும் இங்கே இருக்காங்க…! வர்றீங்களா?

    ஓ...! தேங்க்யூ வெரிமச்…! ஸ்கின் ப்ளீச் பண்ண எவ்வளவு நேரமாகும்?

    ஒரு மணி நேரம் போதும் மேடம். இப்ப நீங்க புறப்பட்டு வந்தா பனிரெண்டரை மணிக்குள்ளே போயிடலாம்.

    புறப்பட்டு வர்றேன்… பதஞ்சலி செல்போனை அணைத்துவிட்டு சொர்ணத்தை ஏறிட்டாள்.

    அம்மா..! நான் ப்யூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்துடறேன். ஸ்கின் ப்ளீச் பண்ணனும்.

    அப்படியே புது மாதிரியா ஏதாவது கொண்டை போட்டுகிட்டு வந்துரு…

    சரி… எந்தக் காரை எடுத்துட்டு போகட்டும்?

    ‘'நீ ஜென்ல போயிரு. காண்டஸா இருக்கட்டும். பெரிய வண்டி இருந்தா எனக்கு உபயோகமாயிருக்கும்."

    பதஞ்சலி ஜென் கார்க்குரிய சாவியை எடுத்துக் கொண்டு அறையினின்றும் ஒரு துள்ளலாய் வெளிப்பட்டாள். அந்த ஐம்பது கிலோ உடம்பு சந்தோஸத்தில் ஒரு இலவம் பஞ்சாய் மாறி காற்றில் மிதந்தது.

    போட் க்ளப் ரோட்டின் கடைசியில் ‘ரெஸ்டாரண்ட் நனா' மரங்களுக்கு மத்தியில் நவீனமீாய் உட்கார்ந்திருந்தது. நிசப்தமான சூழ்நிலை. அடித்த காற்றில் தந்துாரி மணம்.

    ஜெயந்த் வெறிச்சோடிப் போயிருந்த கார் பார்க்கிங்கில் தன் டயோட்டாவை நிறுத்திவிட்டு ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தான். கூட்டம் வெகு சொற்பம். அதுவும் வெளிநாட்டு முகங்கள்.

    ஜெயந்த் உள்ளே போனான். மியூஸிக் சானலில் வயலின் வழிந்தது. சென்ட்ரலைஸ்ட் ஏ. ஸி. அந்த ஹாலை ஊட்டியாக மாற்றியிருக்க க்ரானைட் மேஜைகளுக்கு மத்தியில் நடந்தான்.

    ஒரு பேரர் எதிர்பட்டார்.

    எக்ஸ்க்யூஸ்மீ ஸார்… நீங்க மிஸ்டர் ஜெயந்த்?

    எஸ்…

    டேபிள் நம்பர் ட்வெண்டி த்ரி உங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கு ஸார். மிஸ் தைலா இப்ப வந்துடுவாங்க…! கம் திஸ் சைட் ஸார்… கூட்டிப்போய் 23ம் நெம்பர் டேபிளைக் காட்டினான்.

    ஜெயந்த் போய் உட்கார்ந்தான்.

    இருதயம் துரிதகதியில் துடித்துக் கொண்டிருக்க, டென்ஸனில் நெற்றியின் இடதுபக்க நரம்பு அவஸ்தையோடு புரண்டு புரண்டு படுத்தது. ஜெயந்த் இடது கை விரல்கள் நெற்றிப் பொட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டான். மனசுக்குள் எண்ணங்கள் ரேஸ் குதிரைகளாய் ஓடியது.

    ‘பதஞ்சலி பற்றி தைலா சொன்னது உண்மையாய் இருக்குமோ…?’

    'ஏதோ…! ஃபைலைக் காட்டப் போகிறாளாமே…? காட்டட்டும் பார்க்கலாம்…!’

    ‘தைலா ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர். அவள் சொல்வது பொய்யாய் இருக்க வாய்ப்பு இல்லை…!’

    யோசிப்பில் நிமிஷங்கள் கரைந்து கொண்டிருக்க சட்டென்று காற்றில் மல்லிகை மணம். கூடவே போனஸாய் பெளடர் மணம்.

    எதிர்நாற்காலியில் யாரோ வந்து உட்கார்ந்தார்கள். சட்டென்று குனிந்திருந்த தலையை உயர்த்தினான் ஜெயந்த்.

    பதஞ்சலி புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

    ***

    2

    பதஞ்சலியைப் பார்த்ததும் ஜெயந்தின் விழிகள் ஒரு பத்து விநாடிகளுக்கு அப்படியே ஸ்டில் போட்டோ மாதிரி உறைந்தன. இருதயம் தாளம் தப்பி துடித்ததில் முகம் ஒரு அவசரவியர்வை பூச்சுக்கு உட்பட்டது.

    பதஞ்சலி தன் உதட்டில் நிறுத்தியிருந்த புன்னகையை பெரிதாக்கிக் கொண்டே மேஜையின் மேல் இரண்டு கைகளையும் வைத்து மோவாயைத் தாங்கி கொண்டாள்.

    என்ன மிஸ்டர் ஜெயந்த்...! வேர்த்து விறு விறுத்து போப்ட்டீங்க…?

    ப… பதஞ்சலி…! நீ எங்கே இப்படி…?

    ஏன்… நான் இந்த ரெஸ்டாரெண்டுக்கு வரக்கூடாதா…? இங்கே காலி ஃபிளவர் சூப் பிரமாதமாயிருக்கும். வாரத்துக்கு ஒரு தடவையாவது டேஸ்ட் பார்க்க வந்துடுவேன்…

    அ… அப்படியா...? ஜெயந்த் கழுத்து டையை அவஸ்தையாய் இறுக்கிக் கொண்டு வியர்வையை ஒற்றி எடுத்தான்.

    பதஞ்சலி கேட்டாள்.

    நீங்க எங்கே இப்படி...?

    அது வந்து…

    நீங்களும் சூப் சாப்பிட வந்தீங்களா?

    இ… இல்ல…

    பின்னே…?

    பிஸினஸ் விஷயமா பேசறதுக்காக ஒரு ஃபிரண்ட் இங்கே வர்றதா சொன்னார்…

    பிஸினஸ் விஷயத்தைப் பத்தி பேசறதுக்குத்தான் ஆபீஸ் இருக்கே…?

    இது… இது… கொஞ்சம் கான்பிடென்ஷியல்.

    மிஸ்டர் ஜெயந்த்…! ஒரு பொய்யை பேச ஆரம்பிச்சாவே அப்படித்தான். வரிசையா பொய் சொல்ல வேண்டியிருக்கும்…

    பொய்யா…?

    பின்னே பொய் இல்லாமே என்னவாம்…? நீங்க பார்க்க வந்தது ப்ரஸ் ரிப்போர்ட்டர் தைலாவைத் தானே…?

    ப… ப… பதஞ்சலி…! அது உனக்கு… எப்படி?

    தெரியும்ன்னு கேக்றீங்களா…?

    ம்… ம்…

    அந்த தைலா வேற யாரும் கிடையாது மிஸ்டர் ஜெயந்த். நான் தான். ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர் மாதிரி குரலை மாத்தி பேசினது உங்களை இங்கே வரச் சொன்னது எல்லாமே நான்தான்.

    ஜெயந்தின் முகம் கோப உஷ்ணத்தில் வைத்தது.

    எதுக்காக அப்படி ஒரு போன் பண்ணி இங்கே என்னை வரவழைச்சிருக்கே…?

    உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசத்தான்…

    என்ன பேசணும்…?

    மிஸ்டர் ஜெயந்த்...! உங்களை இப்படி வரவழைச்சி பேசிட்டிருக்கிறதுக்காக ரொம்பவும் ஸாரி… உங்களை தனியா மீட் பண்றதுக்கு இதைவிட வேற வழி எனக்குத் தோணலை…

    இட்ஸ்… ஓ…கே…! விஷயத்துக்கு வா…

    ஜெயந்த்…! நீங்க ஒரு எஜிகேட்டட் அண்ட் கல்ச்சர்ட் பர்ஸன். நான் சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்டு நீங்க எமோஷனல் ஆயிடக்கூடாது…

    அந்த பீடிகையெல்லாம் வேண்டாம். நீ சொல்ல வந்ததை சொல்லலாம்…

    இன்னிக்கு சாய்ந்திரம் நடக்க இருக்கிற நம்ம கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கக் கூடாது…

    ஜெயந்தின் மொத்த

    Enjoying the preview?
    Page 1 of 1