Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaakka Choru
Kaakka Choru
Kaakka Choru
Ebook196 pages1 hour

Kaakka Choru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எண்பதுகளின் தொடக்கத்தில் அறிவொளி நாடகக் கலைஞனாக, தொழிற்சங்க பிரதிநிதியாக எல்லாவற்றிலும் தனது செய்நேர்த்தியை உறுதி செய்கிற விமலன் தன் கதைகளின் மூலமாக அகம் புறம் இரண்டையும் இன்னொரு தளத்திற்கு கொண்டு போகிறார்.

யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன.

சில கதைகள் படிமங் கலந்து கண்ணாமூச்சி காட்டுகின்றன. இப்புவி பரப்பில் தன் கண்ணுக்குள் படுகிற அவலங்கள் அனைத்தையும் மொத்தமாக படம் பிடிக்கிற ஆர்வத்தோடு கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போலவே மென்மையானதும் விசாலமானதுமாகிறது.

- எஸ். காமராஜ்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123502808
Kaakka Choru

Related to Kaakka Choru

Related ebooks

Reviews for Kaakka Choru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaakka Choru - Vimalan

    http://www.pustaka.co.in

    காக்காச் சோறு

    Kakka Choru

    Author:

    விமலன்

    Vimalan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    எனது தாய், தந்தை

    எனது சகோதரி எஸ். மகாலட்சுமி

    எனது மாமா அமரர் திரு சுப்பையா அவர்களுக்கும்

    முன்னுரை

    வீடு என்பது அகமா? புறமா?

    இரண்டும் சந்தித்துக்கொள்கிற களம் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

    வீட்டிலிருந்து வெளிக் கிளம்புகிற சரியான மனிதனும் அவன் புரிதலுமே, புற உலகம் குறித்து தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. கணவர்களின் உடனடி ஆலோசகர்கள் மனைவிகள். குழந்தைகளின் உடனடி உதாரண மனிதர்கள் பெற்றோர்கள். அவர்களுக்குள் உரையாடல் தீர்ந்து போன பின்னர் முகட்டு வளையைப் பார்த்தபடித்தான் எல்லோரும் காலம் தள்ள நேரிடும். நமது சமூக ஏற்பாட்டில் உறவுகளுக்குள் உரையாடல்கள் குறைந்தே காணப்படுகிறது. காரணம், இங்கு எல்லா உறவுகளுமே ஆண்டான், அடிமை கோட்பாட்டில் தான் தீர்மானிக்கப் படுகிறது, செயல்படுகிறது. ஆதலால் தான் அந்த இடத்தை பாட்டிகளும் நண்பர்களும் பிடித்துக் கொள்கிறார்கள். தோழர் விமலன் உறவுகள் குறித்து ஒரு மிகப்பெரிய இலக்கிய ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார்.

    இடக்கரடக்கல் வனராஜன் வீட்டை விட்டுக்கிளம்பும்போது துணிப்பை நிறையக் கோரிக்கைகளோடு கிளம்புகிறார். நிராதரவான நிலைமையில் கிடந்து அல்லாடுகிற மனது மண்குழியில் கிடக்கிறதான கற்பனையும் வர்ணனையும் வாசகனிடம் மனசைப் பிசைகிற கிரக்கத்தை உண்டு பண்ணும். இறுதியில் தூக்குவாளி டீயுடன் இசக்கியின் இடத்தில் அவருக்கு ஒரு மாயக்கம்பளம் காத்திருக்கிறது அது இசக்கியின் முதுகு. அதில் ஏறித்தான் வாழ்க்கையின் வெறுமைகளைத் தாண்டிப் போகிறார்கள்.

    குழந்தைகள் உலகம் ரொம்ப அலாதியானது, அதில் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது, எதிர்கொள்ளவும் இயலாது. உங்களிடம் இருக்கும் அச்சடிக்கப்பட்ட பதிலுக்குள் இல்லாத கேள்விகள் உற்பத்தியாகும் வாழ்க்கைக்கான ஆராய்ச்சி சாலை அது. அதைத்தான் வண்ணத்துப்பூச்சி பேசுகிறது. வண்ணத்துப் பூச்சிகளுக்கு காங்க்ரீட் தளங்களிலும் தேனெடுக்கிற வல்லமை கூடிப்போகிறது கதையின் ஓட்டத்தில். படைப்பாளி எல்லாவற்றையும் கூடுதலாக உற்றுப்பார்க்கிறான் அதனால் தான் காகங்கள் அவனிடம் சொல்லாத சேதிகளெல்லாம் சொல்லுகிறது. காக்கை எப்போதுமே ஒதுக்கப்பட்டவைதான். எனவே அவை விடுபட்ட பறவைகளில் ஒன்றாகிப்போகிறது. அதனால் தான் அந்தக் காக்கைகள் ஒன்று திரண்டு மூர்க்கமாக ஆண்டனா கம்பிகளையும், கான்க்ரீட் சுவர்களையும் கொத்திக் குதறுகிறது. இது போலப் படிமமான பல இடங்கள் வாசிப்பினுடாக வந்து நம்மை யோசிக்க வைக்கிறது.

    தேனீர்க்கடையில் அமர்ந்து, அல்லது நின்று, பொழுது கடத்துகிறவர்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் கைக்கும் உதட்டுக்கும் இடையில் பயணமாகும் அந்த சுடு திரவத்தின் இனிப்பில் உலகத்தின் கசப்பைத் துடைக்கிற முயற்சி நடப்பதை அவதானிக்கமுடியும். அதனால் தானே கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் தேனீர்க்கடைகள் அதிகமாக வியாபித்திருக்கிறது. கசப்பைக்கடக்க வருகிற மனிதர்களை எதிர்பார்த்தபடி, அங்கே 24 மணிநேரமும் தேனீர்க் கொதிகலன்கள் கொதித்துக்கொண்டே இருக்கிறது. விமலனின் எழுத்துக்கள் அதிலிருந்து கிளம்பும் ஆவியைப்போல அலை அலையாய் வாழ்க்கையின் அடித்தளத்தை அர்த்தத்தோடு விவரிக்கிறது. பெண்ணின் மனம் ஆழம் என்பதெல்லாம் மாய்மாலம், எட்டிப்பார்க்கவே தயங்குகிற ஆண் மனதுதான் குரூரமான ஆழம். விமலனின் கண்ணில் படுகிற பெண்கள், சோகக்கவிதையாய் பிணவறையில் கிடக்கிறவள், அவள் மீது போர்த்தப்பட்ட சந்தேகங்கள், வார்த்தை கொண்டு விரட்டுகிற கனத்த சரீரத்துக்கிழவி, அழுத்தமான நினைவுகளை வெள்ளை ஆடைகொண்டு போர்த்தியபடி உலவும் அம்மா, காய்ந்து கிடக்கும் கரிசல் தரிசை செருப்பில்லாத காலோடு கடந்துபோகிறவள், சிறைக்குபோன கணவனோடு சிதைந்து போகிற நம்பிக்கை, அதை எதிர்கொள்கிற கந்தனின் மனைவி, அடுப்பங்கரையிலும், குளியலறையிலும் வியர்வையோடு ஈர்க்கிற மனைவியின் பிம்பம், அதன் பின்னால் நிழலாடுகிற காதல். இப்படி ரக ரகமான பெண்களின் அருகில் போய் உறையாடுகிறது. விமலனின் படைப்புகள். ஒரு ஆண், பெண் மனதோடு பேசுவது கடினம், ஆனால் அதற்கான முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. விமலனின் கதைப் பரப்பெங்கும் அந்த முயற்சி நடக்கிறது.

    யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. அன்றாடம் நம்மோடு பயணிக்கிற, நமக்குப் பிடிக்காமல் போனாலும், நமது மூஞ்சைச்சுற்றி வட்டமிடுகிற கொசுக்களின் ரீங்காரத்தைப்போல உரத்துக்கேட்கிற விளம்பர வரிகளை வம்புக்கு இழுக்கிற வரிகள் நம்மையும் சேர்த்து உரையாடலுக்குள் இழுத்துக்கொள்கிறது.

    எழுத்துக்கு பிரச்சாரம் தேவையா என்னும் கலாச்சாரச் சண்டையில் விமலனின் எழுத்துக்கள் மிகத்துள்ளியமாக பிரச்சாரத்தின் பக்கமே நிற்கிறது. அது அடிமக்களின், அதாவது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே, ஒதுக்கப்பட்டவர்களுக்கும் மேலே இருக்கிறவர்களைப் பற்றிய பிரச்சாரம். எல்லோரும் கஷ்டப்படுகிற தொழிலாளி பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு வயோதிக சுமைத் தொழிலாளியின் அந்திம காலம் பற்றிப்பேசுகிறான். இப்படிச் சில கதைகள் நம்மை அதிர வைக்கிறது, சில கதைகள் வாசகனோடு உரையாடிக்கொண்டே கூட வருகிறது. சில கதைகள் படிமங் கலந்து வந்து கண்ணாமூச்சி காட்டுகிறது. காமம் குரோதம் நிறைந்த குடிகாரார்கள் அஞ்சு தலை நாகமாக, சந்தேகக்கணவன் சாக்கடையாக, வந்து அடிவாங்குகிறார்கள். இப்படி இந்தப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் படுகிற அவலங்கள் அனைத்தையும் மொத்தமாகப் படம்பிடிக்கிற ஆர்வத்தோடு கிளம்பியருக்கிற எழுத்து, அவனது மனசைப் போலவே மென்மையானதும் விசாலமானது மாகிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் அறிவொளி நாடகக்கலைஞனாக, பின்னர் தொழிற்சங்க பிரதிநிதியாக, எல்லாற்றிலும் தனது செய்நேர்த்தியை உறுதிசெய்கிற விமலன், தன் கதைகளின் மூலமாக அகம் புறம் இரண்டையும் இன்னொரு தளத்திற்கு எடுத்துக்கொண்டு போகிறான்.

    வாழ்த்துக்கள்.

    எஸ். காமராஜ்,

    4/140 குயில் தோப்பு,

    என்.ஜி.ஒ. காலணி,

    சாத்தூர், 626203

    என்னுரை

    நகரத்திலே பிறந்து, வளர்ந்து, படித்த நான் குடும்பச்சூழல் காரணமாக பள்ளியிறுதியைக் கூட எட்டித் தொடாமல் கிராமத்தில் தஞ்சம் புக வேண்டியவனாகிப் போகிறேன்.

    அதுவரை நகரத்து வாசனையை மட்டுமே நுகர்ந்து வளர்ந்த என்னை பெரிய பேராலி கிராமம் தன் மார்பில் தாங்கி ஏற்றுக் கொள்கிறது.

    ஒரு கிராமத்தில் மனிதன் இருப்பதற்கும், ஒரு மனிதனை கிராமம் வளர்ப்பதற்கும் வெகுவாகவே வித்தியாசமிருப்பதை என்னின் அந்த வளரிளம் பருவத்திலேதான் நன்றாக உணர்கிறேன்.

    மழையின் நனைந்து வந்த கோழிக்குஞ்சாய் திக்கிற்று நின்ற என்னை அரவணைத்து தலை துவட்டி கிராமங்களின் தோட்டம், காடு, வயல்வெளிகள் என பசுமை நிறைந்த மண்வாசனையும், மண் சார்ந்து வாழ்க்கை நடத்தும் மனிதர்களையும் எனது சித்தப்பா அறிமுகம் செய்திலிருந்து பிள்ளையார் சுழியிடுகிறது எனது வாழ்பனுபவம்.

    நல்லதண்ணிக்கிணறு, உப்புத்தண்ணிக்கிணறு, ஊரின் பெரிய கண்மாய், அய்யனார் கோவில், பெருமாள் கோவில், பொன்னழகு டீக்கடை, மொழு, மொழு டீக்கடை மாட்டுத் தொழுவம், ஆடு, மாடு, கடலைச் செடி, மிளகாய்ச் செடி, மோட்டார்த் தோட்டம் என நகர்கிற வாழ்வின் நகர்தலின் ஊடாக மண்ணின் ஈரமும், மனிதர்களின் ஈரமனதும், அவர்களது வாழ்வும் சேர்ந்தே அறிமுகமாகிறது.

    அகன்று பிரிந்த ஊரின் மந்தை அங்கு குறுக்கும் நெடுக்குமாய் நிறைந்து நின்ற மாட்டு வண்டிகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள், அதன் சாணவாசம், கோமிய வாசம் இவற்றுடன் ஒன்றாகக் கலந்திருந்த எனது உழைப்பு இவை தவிர எனக்கு அந்த வயதில் வெறெதுவும் பரிச்சயம் இல்லை.

    ஒரு சினிமா, நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, கல்யாணம், சடங்கு, விசேஷ வீடு, அங்கு வந்து போகும் உறவினர்கள் என எதுவும் அறியாதவனாய் இடுப்பு பட்டியில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும், தோளில் நூல் துண்டுமாய் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என உழைப்பின் நுனியை மட்டுமே பற்றி அந்த கிராமம் தாண்டாமல் ஊர் உறவுகள், உலக நடப்புகள் இத்தியாதி, இத்தியாதி என எதுவும் தெரியாமல் காட்டுச் செடியாய் திரிந்த என்னை காலம் பெயர்த்துக் கொண்டு வந்து (எனது சகோதரியின் மேன்மையான தயவால்) அரசு வேலையின் அமர்த்தி விட்டுச் செல்கிறது.

    அதன் பின்பு ஏற்பட்டபரிச்சயங்கள் என்னை வேறோர் உலகிற்கு அறிமுகம் செய்கிறது. அந்த உலகம் இலக்கிய அறிமுகத்தை என்னில் விதையூன்றி விடுகிறது. அதன்பின் கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் எழுத்து என இருந்த என்னை பாண்டின் கிராம வங்கி ஊழியர் சங்கமும், அறிவொளி இயக்கப் பணிகளும், அறிவியல் இயக்க நாடக மேடைகளும், தமுஎச.வும் சமூகமும் பட்டை தீட்டுகின்றன. அப்படியான பட்டை தீட்டுதல் பணிகளுக்கு ஊடாக வளர்ந்த இந்த எழுத்துக்கள் தான் உங்கள் கையில் சிறுகதைத் தொகுப்பாக விரிந்து இருக்கிறது.

    இக்கணத்தில் இச்சிறுகதை தொகுப்பு மலர என்னை உருவாக்கிய என் கிராமத்து மண்ணின் மனிதர்கள் முதல் நான் பங்கு வசித்து பாடம் கற்றுக் கொண்ட பல இயக்கங்கள் வரைக்குமாய் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ள நேரத்தில் எனது எழுத்துக்களை மதித்து அவற்றை வெளியிட்ட செம்மலர் கணையாழி, புதுவிசை, குங்குமம், வண்ணக்கதிர் ஆகிய பத்திரிக்கைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இத்தொகுப்பு மிகச்சிறந்த முறையில் வெளிவர உதவிய வம்சி பதிப்பகத்தாருக்கும் தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உயிரூட்டிய எனது உயிர்த்தோழர் திரு. காமராஜ் அவர்களுக்கும், அட்டையை மிகச் சிறப்பாக வடிவமைத்த திரு. மாரீஸ் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ்.கே.வி. மூர்த்தி

    1/1866 ஜக்கதேவி நகர்

    பாண்டியன் நகர்

    விருதுநகர் – 626001

    செல் : 9486321112

    கதை வரிசை

    1. சுழல்

    2. ஒத்தப்பனை

    3. விருசல்

    4. உப்பாங்காத்து

    5. சனாதனங்கள்

    6. சிதைவு

    7. நீர்குமிழி

    8. காக்காச் சோறு

    9. உள்கூடு

    10. வேணற்காடு

    11. அழிக்கெடங்கு

    12. இடக்கரடக்கல்

    13. சுடரினுள்ளே

    14. வாய்க்கரிசி

    15. கிழிசல்

    16. கருப்பு - வெள்ளை

    17. வண்ணத்துப் பூச்சி

    1. சுழல்

    எதையும் விட வலியதாய் ஒரு விதவைத் தாயின் கண்ணீர்!

    பேசிக் கொண்டிருக்கும் போது மள மளவென கண்களிலிருந்து இறங்கி சொட்டும் கண்ணீர்த்துளிகள் எதைச் சொல்கிறது அந்த நேரத்தில்? என்கிற கேள்வியை விடுத்து நிறைய சொல்லவும், யோசிக்கவும் வைக்கிறது என்பதே அந்த நேரத்தையே நிதர்சனமாக!

    அவள் வரும் போதே அப்படித்தான் வருகிறாள் முழு டென்சனும், படபடப்புமாய்!

    காலிங் பெல் சப்தம் இல்லை, ஒரு கூப்பிடல் இல்லை வீட்டினுள் தானே இருக்கிறோம் என திறந்து வைத்திருந்த கதவை முழுமையாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைகிறாள் அப்பொழுது தான் கவனித்தாக எழுந்து நின்று வாம்மா என்கிறேன்!

    அப்படி ஒன்றும் அடிக்கடி எங்களது வீட்டிற்கு வருகிறவளோ, அல்லது எங்களோடு அடிக்கடி தொலைபேசியில் கதைப்பவளோ இல்லை.

    ஏதாவது விஷேச வீடு, கல்யாணம், காது குத்து... இப்படியாக அவளை பார்த்துக் கொண்டால் உண்டு. எங்களுக்குத் தெரிந்து அவளை நாங்கள் கோயிலில் பார்த்த ஞாபகமோ, கேள்விப்படலோகூட இல்லை.

    போகிற வருகிற இடங்களில் பார்க்கும் போது விடமாட்டாள் லேசில் எப்டியிருக்கீங்க என்பதில் ஆரம்பித்து பக்கத்து வீடு சொந்தம் பந்தம் சமீபத்தில் சொந்தங்களில் நடந்த திருமணம், இறப்பு, குழந்தைப் பேறு, சடங்கு வீடு, உடல் நலம் தனது வேலை, சம்பளம் டி. ஏ. நான் வேலை பார்க்கும் ஊரின் தன்மை என நிறையவேப் பேசி நிறுத்துவாள்! அவளது பேச்சின் முடிப்பு இப்படித்தான் இருக்கும்.

    என்ன முன்ன மாதிரி ஆள பார்க்க முடியல வெளியில் என!

    பார்த்த

    Enjoying the preview?
    Page 1 of 1