Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum
Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum
Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum
Ebook155 pages41 minutes

Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பட்டிமன்றங்கள், ஐநூறுக்கும் மேற்ப்பட்ட வழக்காடு மன்றங்கள்கவியரங்கங்கள், கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் பங்கு வகித்துள்ளார். இவர் உலகத்தமிழ் மாநாடு, உலகத் திருக்குறள் மாநாடு, கம்பராமாயண மாநாடு போன்று பல மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை பதினேழு நூல்கள், இரண்டு வாணொலி நாடகங்கள், நான்கு மேடை நாடகங்கள் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள், தினமலர், தினகரன், கல்கி, தேவி போன்ற பல பிரபல இதழ்களில் வெளி வந்துள்ளன.

இலட்சியக் கவிஞர், குளிர்விக் கொண்டல், கவிதைக் கணல், கவிஞர் திலகம், கவிச்செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119202777
Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum

Read more from V.K. Kasthurinathan

Related to Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum

Related ebooks

Reviews for Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum - V.K. Kasthurinathan

    http://www.pustaka.co.in

    தனிமனித தியாகங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும்

    Thanimanitha Thiyagam Naattirkum Veettirkum

    Author:

    வீ. கே. கஸ்தூரிநாதன்

    V.K. Kasthurinathan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/v-k-kasthurinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தனிமனித தியாகங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும்

    தெய்வம்

    நின்றவள்

    மனிதம் காக்கும் மருந்து

    குடி கெடுக்கும் குடி

    அடையாளங்கள்

    திருக்குறள் படித்தால் போதும்

    சுரக்கட்டும் காந்தி நெறி

    உண்மைப் பொங்கல்

    பழையபேயை ஓட்டுவோம்

    கவின்மிகு இயற்கை

    எல்லாம் கடந்தவன் இறைவன்

    தேடரிய தெய்வம்

    தன்னலச் சேற்றைத் தள்ளி வைப்போம்

    திருக்குவளைச் சூரியன்

    தினம் இனிக்கும் தீபாவளி

    உயர்ந்த மலர்

    தீபாவளியில் தீமைகள் அழிய வேண்டும்

    சும்மா வரவில்லை சுதந்தரம்

    சிவனைப் போற்றுவோம்!

    சொர்க்கம் காட்டு

    கேள்விகளால் ஒரு வேள்வி

    நல்வழி காட்டுங்கள்!

    புதிய மரபுகள்

    வன்முறைக்கு முடிவு கட்டு…

    வெட்கம் ஆடவரே! வெட்கம்

    இதயத்தை ஏன் சுட்டாள்?

    உண்மையில்லார் உறவு வேண்டாம்!

    அவள்

    உழைப்பே உயர்வு

    வியப்பு!

    வாடாதே! தேடாதே!

    இந்தியப் பெண்ணே, திரண்டெழு!

    உலகைக் காக்கும் தொழிலாளி

    இதயத்தின் நினைவுக்கு வடிவுகொடு

    ஆர்ப்பாட்ட அரசியல்

    என்றைக்கும் ஆனந்தமே…

    கூத்திடுவோம்

    மனதில் நிலைத்த மாமுனிவர்

    பொன்னடியான் வாழ்க!

    முன்னேற்றப் படிகள்!

    பெண்களின் மனம்

    எய்ட்ஸ்

    அலையவிடாமல் விலங்கிடு

    இயேசுவே வாழ்க!

    முதல் தெய்வம்

    நாரணன் பிள்ளையைத் துதித்திடுவோம்

    வேதனையைச் சுடு!

    நல்லதும் கெட்டதும் நம் வசமே

    திசைகளை வெல்லட்டும்

    புல்லா? பூண்டா?

    தாயகம் காத்திடுவோம்

    தமிழருக்குத் தலை ஏன்?

    எண்ணிப் பார்

    உத்தமி சித்திரை உடன் வரட்டும்

    தீபம் ஏற்றிச் சபதம் ஏற்போம்!

    ஆசிரியர் தெய்வம்

    விழுதுகளாய் எழுக!

    தூய வாழ்வுக்குத் துணை நிற்கும் இராம காதை

    கவிஞர் எல்லாரும் கம்பனின் எச்சம்

    மலையில் வாழும் முருகன்

    நினைவு

    சுதந்திர விளக்கு

    மரியவள் மகனாய் மன்னவன் பிறந்தான்

    சிறப்புத்தாய்

    காற்றடித்த பலூன் தானே வாழ்வு?

    முக்காலம் அறிந்து முழங்கிய கம்பன்

    சரித்திரம் படைப்போம் வாரீர்!

    உழைப்பே உயர்ந்த செல்வம்

    கம்பன் கவிதை காலத்தை வெல்லும்

    பொங்கல் வந்தாள்

    காலம் திரும்பாது

    கல்விக்கு வயதில்லை

    பொது உண்மை

    மகுடம் சூடுங்கள்

    பெருகட்டும் சமத்துவ வெள்ளம்

    வங்கத்துக் கடல் நீரை வடிக்கும் ஆற்றல் வர வேண்டும்

    சத்தியமாய் வாழ்கிறான் எங்கும்

    நாட்டுக்கு உழைக்க வா!

    தொண்டு செய்வோம்

    பசியடங்கு வழி காண்போம்!

    தமிழ்ப் பொங்கல் வைப்போம்

    கன்னித்தமிழ் வாட்டம் போக்க கண்ணதாசன் வர வேண்டும்:

    எதிர்மறை நினைவுகள்

    வந்திருக்கும் சுதந்தரமே!

    இயற்கைத் தாயின் எழில்!

    கூக்குரல் இடுதல் நன்றோ!

    சின்னவளே தமிழ் மகளே நில்லு!

    பொய்மையாய் ஆனதிங்கே!

    உலகில் உயர்ந்த மொழி

    நன்றி காட்டும் பெருநாள்

    தமிழ்வாள் வீசு

    எங்க ஊர் பாட்டுக்காரன்

    என்ன விடுதலை! இந்த விடுதலை!!

    பெருந்தலைவர் காமராசர்

    தமிழன்னை தலை நிமிர்ந்தாள்

    வாழ்வில் உயருங்கள்

    மாண்புறு மனித நேயம்

    குவலயத்தை வாழ வைப்போம்!

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

    கவிச்சுடர் கவிதைப்பித்தன்

    "சொல்லுக சொல்லை; பிறிதோர்சொல் அச்சொல்லை

    வெல்லும்சொல் இன்மை அறிந்து"

    என்றார் திருவள்ளுவர்.

    ‘பிறரின் சொல்’ என்று கூறவில்லை. ‘பிறிதோர் சொல்’ என்றே குறிப்பிடுகின்றார். தன்னொரு சொல்லையே. தன்னுடைய இன்னொரு சொல் வெல்லாத அளவுக்கு வலிமை வாய்ந்த சொல்லாக ஒவ்வொரு சொல்லும் அமைந்திடல் வேண்டும் என்பதே வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.

    அத்தகு ‘தகுதி’ வாய்ந்த சொற்களைத் தாங்கிவரும் நூல்கள் அருகிக் குறுகிப்போய் வரும் இந்நாளில், குணக்குன்றாய்த் திகழும் குழிபிறைக்கவிஞர். வீ.கே. கஸ்தூரிநாதன் அவர்களின் செந்தமிழ் மணக்கின்ற நூலாய் தனிமனித தியாகங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் என்னும் இக்கவிதைநூல் திகழ்வது கண்டு உள்ளம் களிபேருவகையடைகின்றது.

    அக(ம்)நானூறு, புற(ம்)நானூறு சங்க இலக்கியத்திற்குக் கிடைத்தாற்போல் - நானுாறு அல்ல; நான் நூறு தருகின்றேன் என்று. தேர்ந்தெடுத்த ‘நூறு’ தலைப்புகளிலான தேன்கனிக் கவிதைகளைத் தொடுத்துத் தொகுத்து நாமெல்லாம் துய்ப்பதற்கு வழங்கியிருக்கின்றார் கவிஞர் பெருமகனார்.

    இப்போதெல்லாம் கவிஞர்கள் பெருகும் அளவுக்குக் ‘கவிதைகள்’ கிடைக்கவில்லையே என்ற கவலை ‘தமிழுக்கு’ உண்டு. அந்த மனக்கவலைக்கு மருந்தாய் விளங்குகின்றது இந்த மனிதநேயக் கவிதைநூல்.

    தேர்ந்தெடுத்த சொல்தேவை; சொல்லு கின்ற

    திறன்தேவை; செய்தியிலே தெளிவு தேவை!

    ஊர்ந்துவரும் எறும்பினைப்போல் ஒழுங்கு தேவை!

    உளத்துணர்வைப் பிடித்திழுக்கும் உணர்ச்சி தேவை!

    சார்ந்த ‘பொருள் நலம் தேவை; சமுதா யத்துச்

    சரிவுகளைச் சாடுகின்ற துணிச்சல் தேவை!

    ஓர்ந்தறியும் 'மதி’ தேவை; ‘கவிதை’ என்றால்

    உடலமைப்பும் உயிர்த்துடிப்பும் மிகவும் தேவை!

    என்று நான் குறிப்பிடுவதுண்டு. அத்தனைச் சிறப்புகளும் இவர்தம் ஒவ்வொரு கவிதையிலும் ஒளிவிடுகின்றன எனில், இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.

    அன்பு, அறம், கனிவு, கருணை போன்ற மாண்புறு பண்புகள் நிறைந்த மனிதநேயமும்; தாய்மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சமூக மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கான போர்க்குணமும், உண்மை, உழைப்பு, விடாமுயற்சி, இலட்சியம் ஆகியவையே மானுட வெற்றிக்கான மகத்தான அடித்தளம் என்பதில் அழுத்தமான நம்பிக்கையும்: நாட்டுக்குழைத்த உயர்தலைவர்கள் மீது இவர் வைத்துள்ள நன்மதிப்பும்; தமிழன்னைக்கு அணிகலன்கள் சூட்டி மகிழ்ந்த தலையாய கவிஞர் பெருமக்களின் எழுத்துகளில் இவர் கொண்ட ஈடுபாடும்; கவிஞனுக்கே உரிய அழகியல் உணர்வும் அகத்துறைக் குறும்பும் நூறு கவிதைகளாய் சாறுபிழிந்து வழங்கப்பட்டிருப்பதை இந்நூல் முழுதும் கண்டேன்; கொண்டேன்; உண்டேன்; கவிதைகளனைத்தும் செந்தேன்!

    கற்கண்டை உடைத்துப் போட்டால் எல்லாத் துண்டுகளும் இனிப்பது போல, இந்நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்புற அமைந்திருப்பது இந்நூலுக்கே ஒரு தனிச்சிறப்பாகும்.

    சமூகத்தைச் சீரழிக்கும் சாதியப் பூசலால், நாட்டளவில் மதவாதத்தால், உலகளவில் பயங்கரவாதத்தால் ‘மனிதத்தின் புனிதத்தையே’ மாய்த்துக் கொண்டிருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1