Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shimla Ramya
Shimla Ramya
Shimla Ramya
Ebook60 pages25 minutes

Shimla Ramya

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850471
Shimla Ramya

Read more from Rajesh Kumar

Related to Shimla Ramya

Related ebooks

Reviews for Shimla Ramya

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shimla Ramya - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    சிம்லா ரம்யா

    Shimla Ramya

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ரகுநாதன் பதினேழாவது தடவையாக, தன் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த ரம்யாவின் அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்துப் பார்த்தான். ஆபீஸின் உச்சகட்ட நேரம் அது.

    உடம்பு பூராவும் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

    ரம்யா போட்டோவில் நேர்பார்வை பார்த்து மனசை நொறுங்கடித்தாள். காமிராவை க்ளிக் செய்திருந்த நேரம், லேசாய் வலது பக்க உதட்டைச் சுழித்திருந்தாள். எனவே பார்வையில் ஏராளமாய் போதை உட்கார்ந்திருந்தது. ஒரு ஜெனரேட்டர் மிஷன் மாதிரி மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

    ரகுநாதன் ரம்யாவின் போட்டோவை பார்வையால் கழுவிய அதே நேரம்- அறையின் தள்ளு கதவுகளுக்கப்பால் ப்யூன் பரமசிவத்தின் தலைதெரிந்தது.

    நிமிர்ந்தான்.

    எரிச்சலாய் என்ன பரமசிவம்? என்று கேட்டான்.

    பரமசிவம் பவ்யமாய் உள்ளே நுழைந்து சொன்னான். உங்க சிநேகிதர் மோகன் வந்து காத்திட்டிருக்கார் ஸார்… உள்ளார வரச் சொல்லவா...?

    ஆர்வமானான் ரகுநாதன் மோகனா…? வரச் சொல்லு… வரச் சொல்லு… கிறுக்குப் பய நேரா உள்ளே வரவேண்டியது தானே… ஸேல்ஸ் ரெப் மாதிரி வெளியே உட்கார்ந்திட்டிருக் கறாரா!

    பரமசிவம் வெளியே போனான்.

    அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்தில் மோகன் உள்ளே வந்தான். நீலநிற ஹெல்மெட்டைக் கையில் குழந்தை மாதிரி வைத்திருந்தான். வெய்யிலில் வியர்த்துப் போய் தலை கலைந்திருந்தான். கண்களை கூலிங்கிளாஸ் கவ்வியிருந்தது. சராசரி உயரம். மாநிறம்.

    வாடா... பெரிய மனுஷா... வந்ததும் நேரா உள்ளே வர வேண்டியது தானே. பர்மிஷன் கேட்டுத்தான் வரணுமா…?

    ரகுநாதன் கேட்க - மோகன் சிரித்தான்.

    என்ன இருந்தாலும் இந்த கம்பெனிக்கு நீ ஜி.எம். வெளியே நீ எப்படியிருந்தாலும் உள்ளே வர்றப்ப உனக்கு நான் தந்த மரியாதையை தந்துதானே ஆகணும்…?

    சரி… உட்கார்... நல்ல வெய்யில்ல வந்திருக்கே… என்ன சாப்பிடறே…?

    எதுவேணுமின்னாலும் சொல்லு…

    ரகுநாதன் பஸ்ஸரை அழுத்தி - பரமசிவத்தை வர வழைத்து இரண்டு ரோஸ்மில்க்கை கொண்டு வரச் சொன்னான். பரமசிவம் போனதும் மோகனின் பக்கமாய் திரும்பினான்.

    "அப்புறம்... என்ன தொரை…

    Enjoying the preview?
    Page 1 of 1