Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorgathiley Idhu Mudivaanathu
Sorgathiley Idhu Mudivaanathu
Sorgathiley Idhu Mudivaanathu
Ebook128 pages43 minutes

Sorgathiley Idhu Mudivaanathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'சொர்க்கத்திலே இது முடிவானது' மென்மையான காதல் கலந்த குடும்பக் கதையான நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். இந்த நாவலின் பிண்ணனியான பசுமையான ரம்மியமான காட்சிகள் உங்கள் மனதை சொக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580102601219
Sorgathiley Idhu Mudivaanathu

Read more from Lakshmi Praba

Related to Sorgathiley Idhu Mudivaanathu

Related ebooks

Reviews for Sorgathiley Idhu Mudivaanathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorgathiley Idhu Mudivaanathu - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    சொர்கத்திலே இது முடிவானது

    Sorgathiley Idhu Mudivaanathu

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    பகவின் மடி மூய்ச்சியடிக்கும் பாலைப்போல இளங்காலை கதிரவன் ஒளியை பூமியில் பொழிய ஆரம்பித்திருந்தது. வெம்மை மிகாத பால் ஒளி நெடிய ரப்பர் மரங்களின் ஊடாய் வெளிச்சம் வழிந்த அழகை ரசித்தபடி நடந்தாள் நந்திதா. டிராவல் பேக்கை சுமந்தபடி நிதானமாய் மலைப் பாதையில் நடந்து கொண்டிருந்தாள். எத்தனை முறை பார்த்தாலும் சலித்துப்போகாத நெடுங்குண்டம் எஸ்டேட்டின்இயற்கை அழகில் லயித்துப் போயிருந்தாள்.

    ஏற்றமான மலைப்பாதையில் இருபது நிமிடங்கள் நடந்தால் தான், வீட்டிற்குபோகமுடியும். இந்தஎஸ்டேட்டில்பெரும்பாலும்.அனைவரும் தெரிந்தவர்கள் தான். இவள் பஸ் ஸ்டாப்பில் இறங்கியதுமே... தற்செயலாய் உரம் ஏற்றிச் செல்லும் டெம்போ கடந்து சென்றது. "சரக்கென்று பிரேக் போட்டுநிறுத்திய அந்த வயதானடிரைவர்தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்.

    அட நம்ம நந்திதா தானே? வர்றியாம்மா? வா... முன் பக்கத்துல ஏறிக்கோதாயீ...

    வேணாம் ஐயா! நான் காலார நடந்துக்கிட்டே இயற்கை வனப்பை ரசிக்கணும்னு பிரியப்படறேன். சாரி. கோவிச்சுக்காதீங்க ஐயா...!

    அப்படியா? சரி உன் இஷ்டம் இப்போ எல்லாம் முன்னே மாதிரி இல்ல தாயீ...! காட்டு யானைங்க சிறுத்தை புலிங்கன்னு... வன விலங்குகளோடநடமாட்டம் ஜாஸ்தியா இருக்குதாயீ.. அதுக்குத்தான் பார்த்தேன்

    இதோ... கொஞ்சதூரம் தானே? அதுக்குள்ளே எனக்கு ஒண்ணும் ஆயிடாது. நீங்க போங்க ஐயா

    முறுவலித்தாள் நந்திதா.

    முத்துப்பல் வரிசை பளிரென மின்னியது. அவளது அழகு பன்மடங்காகி விட்டது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது நிஜம் அரை மனதுடன் பத்திரமா வாதாயீ! என்றார் டிரைவர்.

    தேயிலைத் தோட்டத்து தொழிலாளிகள் வேலைக்கு வரத் தொடங்கிட்டாங்க... ஆங்காங்கே ஜனநடமாட்டம் தெரியுது பாருங்க ஐயா! நீங்க பயப்படாம கிளம்புங்க ஐயா!

    படிச்ச பொண்ணு. அதான் பயமில்லாம பேசுறே! உன்னாட்டம் படிச்சவங்க ரொம்பப் பேரு பயந்து சாவாங்க தெரியுமா?

    கிராமத்துவாசிகளுக்கே உரிய குணம். நீட்டி முழக்கி வளவள வென்று வெள்ளந்தியாய் பேசும் சுபாவம் அதை உள்ளூரரசித்தபடி... புன்முறுவல் பூத்தாள்.

    பயந்து என்ன ஆகப் போகுது? ஆறிலும் சாவு... நூறிலும் சாவு அச்சம் என்பது மடமைன்னு கவிஞர்பாடிவச்சிருக்காரே? அஞ்சாமை திராவிட உடமைன்னு நினைக்கிறவள் நான்!

    சரி தான். காட்டு யானை எதிர்லே வந்து நின்னாக்க என்ன பண்ணுவியாம்?

    அந்த மாதிரி த்ரில்லான சம்பவம் நடந்தா, ரொம்பவும் சந்தோஷப்படுவேன்

    அட... நீ என்னதாயீ விவரம் தெரியாம பேசிட்டிருக்கே? யானை வந்தாக்கா, அதுவும் ஒத்தை யானை வந்தாக்கா துவம்சம் பண்ணிப் போடும் தாயீ 

    பண்ணட்டும். கஜேந்திர மோட்சம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணுமே? ஏற்கனவேஒரு வாட்டிசிறுத்தையைநான்கிட்டத்துவ பார்த்திருக்கேன். சரிங்க ஐயா! நீங்க கிளம்புங்க. நேரமாகுதே?

    பேச்சுக்குமுற்றுப்புள்ளிவைக்கும்தினுசில்டிராவல்பேக்கைதோளில் தொங்க விட்டபடி நடக்க ஆரம்பித்தாள்.

    காசியோட பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தான் ஒருவாட்டி வன விலங்கை நேர்ல பார்த்தும் கூட, இந்த பொண்ணு பயப்படலையே?

    தனக்குள் முணுமுணுத்தபடி டெம்போவை ஒட்டிக் கொண்டு சென்று விட்டார். சிறுத்தையை நேரில் பார்த்த அந்த நூதன அனுபவம் அவளது இதழ்கடையில் புன்முறுவலை அழகாய்தவழவிட்டது. அதை நினைத்துப் பார்த்தபோதே, நந்திதாவின் மலர் முகம் குங்குமப்பூவாட் சிவந்து போனது.

    வாட்ட சாட்டமாய் உடைத்த கோதுமையின் நிறத்தில் இருந்த அந்த இளைஞனின் உருவம்... மனக்கண்ணில் வந்து வந்து போனது.

    யாரு போறது? நம்மநந்திதாவா? என்று குரல் வந்ததும் நினைவை விட்டு நிகழ் காலத்திற்கு இறங்கினாள். இடது பக்கத்தில் திரும்பிட் பார்த்தாள்.

    உயரே தெரிந்த தேயிலை தோட்டத்து சரிவை அண்ணாந்து பார்த்தாள்.

    தேயிலைக் குத்துச்செடிகளுக்கு இடையில் நின்றபடி இலைகளை லாவகமாய் கிள்ளியெடுத்துக் கொண்டிருந்த நடுத்தரவயது பெண்மணி கையை அசைத்தாள்.

    நந்திதாவே தான்...நல்லாயிரக்கீங்களா அம்மா?

    ஆங்... நல்லாயிருக்கேன் தாயீ!

    அப்புறமா நிதானமா வர்றேன் நிற்காமல் நடையை எட்டிப் போட்டாள்.

    சாம்பிராணி வாசமாய் உள்ளுக்குள் காதல் தந்த நினைவு, சுகந்தமாய் கமன்று கொண்டிருந்தது. அந்தநினைவுதந்த சுகத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கு, அவளுக்கு மனம் இல்லை.

    காதல் வயப்படுவதற்கு முன்பிருந்தே, அவள் ஒருதனிமை விரும்பி! எஸ்டேட்டுக்கு வந்துவிட்டால், இயற்கையை அணுஅணுவாய்ரசிக்கப் பிரியப்படுவாள்.

    இயற்கை வனப்பை ரசிக்கச் சென்றாலும் சரி, கோவிலுக்கு சென்றாலும் சரி. அவள் எப்போதும் கூட்டத்தை விரும்பவே மாட்டாள்.

    எப்பேர்ப்பட்ட திருவிழாவாக இருந்தாலும், கூட்டத்தில் சென்று வேடிக்கை பார்ப்பதை அவள் கட்டோடு வெறுப்பவள்.

    பி.ஈ. என்ஜினியரிங் முடிப்பதற்கு முன்பே, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற காம்பஸ் இன்டர்வியூவில் இவள் தேர்வாகி, பணிநியமன உத்தரவைப் பெற்று விட்டிருந்தாள். படிப்பை முடித்த கையுடன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

    என்ன காரணம் என்று தெரியவில்லை.

    அப்பாகாசி இவளுக்கு, போன் செய்து அவசரமாய் நெடுங்குண்டம் எஸ்டேட்டுக்கு கிளம்பி வரச் சொன்னார்.

    அப்பா இப்பத்தான் வேலையில ஜாயின் பண்ணி இருக்கேன். லீவு போட்டா நல்லாவா இருக்கும்? என்ன காரணம்னு சொல்ல மாட்டேங்கிறீங்க? சரி... ஒருநாள் லீவு போட்டா போதுமில்ல?

    இல்ல... பத்தாது

    அப்ப... மூணு நாள்?

    ஊகூம்... போதாது...நிறைய நாள் லீவு போட்டுட்டு வந்துரு

    என்னப்பா விளையாடறீங்களா? இது பெரிய நிறுவனம் அப்பா இதுலே வேலை கிடைக்கிறது சாமானிய விஷயமில்லை

    "தோ பாரு நந்திதா இந்த வேலை போனாக்க, போகட்டும் விடு உன்

    Enjoying the preview?
    Page 1 of 1